The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) ஓர் கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். கவிதையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு "பாரதி" என்ற பட்டம் வழங்கப்பட்டது. நவீன தமிழ் கவிஞர்களின் முன்னோடியாகத் திகழ்ந்த இவர், தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
மேஜர் முகுந்த் வரதராஜன் ஏ.சி (Mukund Varadarajan), இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்தார். ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் நடந்த ஒரு மோதலில் மூன்று பயங்கரவாதிகளைக் கொன்றதற்காக, 2014 ஆம் ஆண்டில், இந்தியாவின் மிக உயர்ந்த அமைதிக்கால துணிச்சலான அசோகச் சக்கரம் விருது இவருக்கு மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டது.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) ஓர் இந்திய சட்ட வல்லுநர், பொருளாதார நிபுணர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் அரசியல் தலைவர் ஆவார். இவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகப் பதவியேற்று பின்னர் இந்திய அரசியலமைப்பு வரைவு குழுவிற்குத் தலைமை தாங்கினார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கி தீண்டாமை ஒழியப் போராடினார்.
திருக்குறள், சுருக்கமாகக் குறள் (Tirukkuṟaḷ), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், காமம் (அல்லது இன்பம்) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்:பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
அமலோற்பவ அன்னை (Our Lady of the Immaculate Conception) என்பது இயேசுவின் தாயாகிய மரியாவுக்கு அளிக்கப்படுகின்ற சிறப்புப் பெயரும், மரியா பிறப்புநிலைப் பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட்டார் என்னும் மறையுண்மையை (dogma) வெளிப்படுத்தும் போதனையும் ஆகும். இந்த மறையுண்மையைக் கத்தோலிக்க திருச்சபை அறிக்கையிடுகிறது. பிறப்புநிலைப் பாவம் (original sin) என்பது பழைய கத்தோலிக்க தமிழ் வழக்கில் "சென்மப் பாவம்" என்று அறியப்பட்டது.
இராசேந்திர சோழன் (Rajendra Chola) சோழர்களின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரும் தஞ்சை பெரிய கோவிலை கட்டியவருமான இராசராச சோழனின் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவருமாவார். விசயாலய சோழன் காலத்தில் தொடங்கிய சோழப் பேரரசு இராசேந்திரன் காலத்தில் அதன் பொற்காலத்தை அடைந்தது. சோழ மன்னர்களில் இராசேந்திரனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெருமை வாய்ந்தவர்.
அல்லு அர்ஜுன் (Allu Arjun) (பிறப்பு:8 ஏப்ரல் 1983) ஒரு தெலுங்குத் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளரும், விளம்பர நடிகரும், நடனக் கலைஞரும் இயக்குநருமாவார். இவர் ஆர்யா, தேசமுடுரு, சங்கர் தாதா சிந்தாபாத், ஆர்யா 2, வருடு, வேதம், ரேஸ் குர்ராம் உள்ளிட்ட 20இற்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இரண்டு முறை நந்தி விருதுகளைப் பெற்றவர்.
அமரன் (Amaran) இராஜ்குமார் பெரியசாமி எழுத்து, இயக்கத்தில், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல், சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்தியா தயாரிப்பில், 31 அக்டோபர் 2024இல் வெளிவந்த தமிழ் அதிரடி போர்த் திரைப்படமாகும். இப்படத்தில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் வரதராஜனாகவும், சாய் பல்லவி, பவண் அரோரா, ராகுல் போஸ், லல்லு, அனுன் பாவ்ரா, அஜே நாக ராமன், மீர் சல்மான், கௌரவ் வெங்கடேசு, ஸ்ரீ குமார் ஆகியோரும் நடித்துள்ளனர். இது இராணுவ வீரர் முகுந்த் வரதராஜனை அடிப்படையாகக் கொண்ட சிவ் அரூர் மற்றும் இராகுல் சிங் எழுதிய இந்தியாஸ் மோஸ்ட் பியர்லெஸ் என்ற புத்தகத் தொடரின் தழுவலாகும்.
பாரதிதாசன் (Bharathidasan, 29 ஏப்ரல் 1891 – 21 ஏப்ரல் 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின் தென் முனையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படும் இம்மாநிலமானது, பரப்பளவில் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாக மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது. உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பேசும் தமிழர் வாழும் பகுதியே தமிழ்நாடு என வழங்கப்படுகிறது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (Dalit Panthers or Viduthalai Siruthikal katchi) தமிழ்நாட்டு மாநில அரசியல் கட்சி ஆகும். இது தமிழ்நாடு மட்டும் அல்லாமல் பாண்டிச்சேரி, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற பல்வேறு மாநிலங்களிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆனது பரவி காணப்படுகிறது. இது 1972 ஆம் ஆண்டு மகாராட்டிர மாநிலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சி இயக்கமான அன்றைய தமிழக தலைவராக இருந்த மதுரையை சார்ந்த மலைச்சாமி அவர்களை படுகொலை செய்யப்பட்ட பிறகு அப்போது மதுரையில் தடயவியல் துறையில் பணியாற்றிக்கொண்டிருந்த திருமாவளவன் மதுரையில் நடந்த மலைச்சாமி அவர்களின் நினைவேந்தல் கூட்டத்தின் முடிவில் ஒருமித்த தலைவராக திருமாவளவன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழ் (Tamil language) தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
காமராசர் (ஆங்கில மொழி: Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975) ஓர் இந்திய விடுதலைப் போராட்ட ஆர்வலர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் 13 ஏப்ரல் 1954 முதல் 2 அக்டோபர் 1963 வரை ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். இவர் 1964 முதல் 1967 வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார்.
ஜமீன் ஊத்துக்குளி (ஆங்கிலம்:Zamin Uthukuli), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். காளிங்கராயன் அணை கட்டிய காளிங்கராயக் கவுண்டர் (இயற்பெயர் லிங்கைய கவுண்டர்) என்பவரே இந்த நாட்டின் முதல் மன்னர் ஆவார். இப்பேரூராட்சியில் தென்னை விவசாயம் மற்றும் தென்னை நார் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது.
இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்
குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப் பெயர் குறிக்கிறது.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
உலகளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6000 இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
புஷ்பா: தி ரைஸ் (Pushpa: The Rise) என்பது இயக்குநர் சுகுமார் எழுதி இயக்கி, தெலுங்கு மொழியில் வெளியான அதிரடி பரபரப்புத் திரைப்படமாகும்.. இந்தப் படத்தில், அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்க பகத் பாசில் (தெலுங்கில் அறிமுகமாகிறார்), ராஷ்மிகா மந்தண்ணா ஆகியோரும் உடன் நடித்துள்ளனர். திரைப்படத்தின் இரண்டு பாகங்களில் முதல் பாகம், ஆந்திரப் பிரதேசத்தின இராயலசீமை பகுதியின் சேசாசலம் மலைப்பகுதியில் செஞ்சந்தன மரக்கடத்தலை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
வாழை (Vaazhai) 2024இல் மாரி செல்வராஜ் எழுத்து, இணை தயாரிப்பு, இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். குழந்தைகள் தொடர்பான இந்நாடகத் திரைப்படத்தை டிசுனி + ஆட்சுடார், நவ்வி சுடுடியோசு, பாஃர்மர்சு மாசுடர் பிளான் புரொடக்சன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தில் அறிமுக நடிகர்கள் பொன்வேல் எம்., ராகுல் ஆர்., கலையரசன், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் (Thirugnana Sambandar, தமிழில் அறிவுசேரர் என்று பொருள் தரும்), அல்லது சம்பந்தர், என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று (நாயன்மார்களில் முதலில் வைத்து எண்ணப்படும் நால்வருள் ஒருவராவார். இவருடைய வேறு பெயர்கள் சம்பந்தர், காழி வள்ளல், ஆளுடைய பிள்ளையார், பாலாராவயர், பரசமய கோளரி என்பனவாகும். இவர் பொ.ஊ.
வல்லினம் மிகும் இடங்கள் என்பது தமிழ் மொழியில் அடுத்தடுத்து இரண்டு சொற்கள் வரும்போது முதல் சொல்லின் (நிலைமொழி) இறுதியில் ஒரு வல்லின எழுத்துச் சேர்வதைக் குறிக்கும். ஒரு நிலைமொழியோடு வருமொழி க, ச, த, ப வருக்க எழுத்துகளில் தொடங்குஞ் சொல்லாக அமையும்பொழுது அவ்வல்லொற்று சிலவிடங்களில் மிகுந்தும் சிலவிடங்களில் மிகாமலும் வரும். இவற்றையறிந்து பயன்படுத்தாமையைச் சந்திப்பிழையெனக் கூறுவர்.
பிக் பாஸ் தமிழ் பருவம் 8 (Bigg Boss Tamil Season 8) என்பது 06 அக்டோபர் 2024 முதல் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ்உண்மைநிலை விளையாட்டு நிகழ்ச்சியின் எட்டாவது பருவம் ஆகும். இந்நிகழ்ச்சி ஸ்டார் விஜய் தொலைக்காட்சியிலும், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் மேலதிக ஊடக சேவை மூலமாகவும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. எண்டெமால் ஷைன் இந்தியா (தற்போது பனிஜெய் என்டர்டெய்ன்மென்ட்) நிறுவனத்தின் தயாரிப்பில் ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியின் 7 பருவங்களை முன்னனி நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.
அப்பர் திருநாவுக்கரசு நாயனார் பொ.ஊ. ஏழாம் நூற்றாண்டு தொடக்கத்தில், தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவரும், சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் ஆவார். இவரைத் தேவார மூவருள் இரண்டாமவர் என்றும், இறைவனிடம் பக்தி செலுத்துதலில், தொண்டை அடிப்படையாகக் கொண்டவர் என்றும் புகழ்கின்றனர்.
தமிழ்நாடு அமைச்சரவை (Tamil Nadu Council of Ministers), தமிழ் நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும் செயலாட்சியர்கள். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார்.
திவ்ய தேசங்கள் (Divya Desam) என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும்.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டுச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
பொங்கல் (Pongal) என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் அறுவடைப் பண்டிகை ஆகும். இந்த விழா தென்னிந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.
தமிழிலக்கணத்தில், உவமையணி என்பது ஒரு புலவர் தான் பிறருக்குக் கூறக் கருதிய பொருளை அவருக்கு நன்கு தெரிந்த ஒன்றைக் காட்டி விளக்குவது ஆகும். ஒரு பொருளை இன்னொரு பொருளுடன் ஒப்பிட்டு அழகுபடுத்திக் கூறுவதாம். புலவர் தாம்சொல்ல எடுத்துக் கொண்ட பொருளை வேறு ஒரு பொருளுடனோ பல பொருளுடனோ அப்பொருளின் பண்பு,தொழில், பயன் என்பவற்றைக் காரணமாகக் கொண்டு இயைபுபடுத்தி இரு பொருள்களுக்கும் இடையே உள்ள ஒப்புமை புலப்படும்படி பாடுவது உவமை அணியாகும்.
செயற்கை நுண்ணறிவு அல்லது செயற்கை அறிதிறன் ((Artificial intelligence)) (AI) மனிதனுக்கு இயந்திரத்திற்கும் இடையில் காணப்படும் வேறுபாடு என்னவென்றால் படைப்பாக்க திறன் ஆகும் . இந்த படைப்பாக்க திறன் இயந்திரங்கள் மூலமும் சாத்தியப்படுமானால் அதுவே செயற்கை நுண்ணறிவு என அழைக்கப்படுகிறது.கணினி அறிவிகயலின் பரந்த கிளையாக செயற்கை நுண்ணறிவு காணப்படுகிறது. பொதுவாக மனித நுண்ணறிவு தேவைப்படும் பணிகளைச் செய்யும் திறன் கொண்ட இயந்திரங்களை உருவாக்க செயற்கை நுண்ணறிவின் பங்கு பெருமளவில் தேவைப்படுகிறது.இச் செயற்கை நுண்ணறிவு திட்டமிடல் சிந்தித்தல் எண்ணங்களை கற்றுக் கொள்ளுதல் என பல்வேறு நுண்ணறிவு திறங்களை உள்ளடக்கியுள்ளது.
இளையராஜா (Ilaiyaraaja, பிறப்பு: 2 சூன் 1943) இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர் ஆவார். இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 1000 இற்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
சிவன் (Śiva) இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர். சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர். இவர் தனது ஒரு பகுதியிலிருந்து அன்னை பராசக்தியை உருவாக்கினாரெனவும், பின்னர் இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்டசராசரங்களை உருவாக்கினார்களென்றும், தனது உடுக்கையிலிருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார் எனவும் கருதப்படுகிறது.
கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2024
2024 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. 7/ஜி அக்கரன் அஞ்சாமை அதர்மக் கதைகள் அதோமுகம் அந்தகன் அமரன் அமிகோ கேரேஜ் அய்யய்யோ அயலான் அரணம் அரண்மனை 4 அரிமாபட்டி சக்திவேல் ஆந்தை ஆப்ரேசன் லைலா ஆராய்ச்சி ஆர்கே வெள்ளிமேகம் ஆலகாலம் இங்கு நான் தான் கிங்கு இங்கு மிருகங்கள் வாழும் இடம் இ-மெயில் இடி மின்னல் காதல் இந்தியன் 2 இரவின் கண்கள் இருளில் இராவணன் இப்படிக்கு காதல் இனி ஒரு காதல் செய்வோம் உணர்வுகள் தொடர்கதை உதிர் @ பூமரக் காத்து உயிர் தமிழுக்கு எங்க வீட்டுல பார்ட்டி எட்டும் வரை எட்டு எப்புரா எப்போதும் ராஜா எமகாதகன் எஸ்கே 23 எலக்சன் ஏழு கடல் ஏழு மலை ஒயிட் ரோஸ் ஒரு தவறு செய்தால் ஒரு நொடி கங்குவா கடமை கருடன் கருப்பர் நகரம் கழுமரம் கவுண்டம் பாளையம் கள்வன் கன்னி காட்ஸ்பாட் காடுவெட்டி காதலிக்க நேரமில்லை கார்டியன் காழ் கியூ ஜி பகுதி 1 கிரிமினல் கிளாஸ்மேட்ஸ் குரங்கு பெடல் கும்பாரி கேப்டன் மில்லர் கொஞ்சம் பேசினால் என்ன கொட்டுக்காளி கொலை தூரம் கோட் கோழிப்பண்ணை செல்லதுரை சட்டம் என் கையில் சத்தமின்றி முத்தம் தா சாமானியன் சாலா சிக்லெட்ஸ் சிங்கப்பூர் சலூன் சிங்கப்பெண்ணே சிட்டு 2020 சிறகன் சூரியனும் சூரியகாந்தியும் செவப்பி சைரன் டபுள் டக்கர் டிமான்டி காலணி 2 டியர் டிரைன் டிராகன் டீன்சு தக் லைஃப் தங்கலான் த. நா தி அக்காலி தி பாய்ஸ் தி பூரூஃப் திமில் துருவ நட்சத்திரம் தூக்குதுரை தேவில் தோழர் சேகுவேரா நண்பன் ஒருவன் வந்த பிறகு நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே நானும் ஒரு அழகி நியதி நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நினைவெல்லாம் நீயடா நின்னு விளையாடு நெவர் எஸ்கேப் நேற்று இந்த நேரம் பகலறியான் படிக்காத பக்கங்கள் பயமறியா பிரம்மை பர்த்மார்க் பாம்பாட்டம் பார்க் பி2 பி.
செக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)
செக்ஸ் இஸ் சீரோ 2002 இல் வெளிவந்த தென் கொரியத் திரைப்படமாகும். இதனை யோன் ஜி-க்யூன் எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் இம் சேங்-ஜங், ஹா ஜி-வோன் மற்றும் சோய் வோன்-யூங் ஆகியோர் நடித்திருந்தனர்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் (Madurai Meenakshi Sundareswarar Temple) என்பது வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள, கோயில் நகரமான மதுரையின் மத்தியில், அமைந்துள்ள சிவன் ஆலயமாகும். இச்சிவ ஆலயத்தின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன். இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர்.
கலை (, Art) எனப்படுவது "நுட்பமான தன்மை மற்றும் திறமையை உள்ளடக்கியது". மனித நடத்தையினாலும் தம் கற்பனை வளத்தினாலும், கலை நுட்பத் திறமையுடன் கூடிய பொருட்கள் (அ) நிகழ்வுகளைப் புணைந்து காட்சிப்படுத்தல் (அ) அரங்கேற்றல் (அ) கைவினை கலைநயம் படைத்தல் ஆகும். இதன் மூலம் பண்பாடு, வரலாறு, அழகியல், போன்றவை பாரட்டுதலுக்காகவும், ரசிக்கும் படியாகவும் காட்சிப்படுத்தப்பட்டு உளவெழுச்சியில் விளைவுகளை ஏற்படுத்தும் நோக்கமுடையதாகும்.
ஹர்சத் மேத்தா (Harshad Mehta) மும்பைப் பங்குச் சந்தையின் தரகர் ஆவார். இவர் மும்பைச் பங்குச் சந்தையின் பங்குகளை வாங்கி விற்றதில், 1992-இல் 27 பெரும் பொருளாதார ஊழல் வழக்குகளில் 4,999 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் சிக்கி பம்பாய் உயர் நீதிமன்றம் மற்றும் இந்திய உச்ச நீதிமன்றத்தால் சிறை தண்டனை பெற்றவர். சிறைவாசியாக இருக்கும் போது தனது 47-வது அகவையில் 2001-இல் சிறையில் இறந்தவர்.
கல்வி (Education) என்பது குழந்தைகளை, உடல் மற்றும் மன வளர்ச்சியில் அறிவு, நல்லொழுக்கம் ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும். கல்வியாளர்கள் கூற்றின்படி, இளைய தலைமுறையை முறையாக வழி நடத்துவதிலும், சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்வி என்பது ஒரு சமூக நிறுவனம்.
குமரிக்கண்டம் (Kumari Kandam) என்பது இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள இந்தியாவின் தெற்கே இருந்ததாகவும் பின்னா் இழந்ததாகவும் கருதப்படும் ஒரு புனைவுக் கண்டத்தைக் குறிக்கிறது. இது பண்டைய தமிழர் நாகரிகத்துடன் தொடர்புடைய ஒரு முக்கியமான நிலப்பகுதியாகவும் கருதப்படுகிறது. குமரிக்கண்டம், குமரி நாடு என்ற வேறு பெயர்களாலும் இப்பகுதி அழைக்கப்பட்டது.
கங்கை அமரன் (ஆங்கில மொழி: Gangai Amaran) தமிழ்த் திரைப்பட உலகில் ஓர் இசை அமைப்பாளராகவும், பாடலாசிரியராகவும், திரைக்கதை ஆசிரியராகவும், நடிகராகவும், திரைப்பட இயக்குனராகவும் பன்முகத் திறமை காட்டியவர். பல தொலைக்காட்சி இசைத் தொடர்களிலும் புகழ்பெற்றவர். புகழ்பெற்ற இசை அமைப்பாளர் இளையராஜாவின் தம்பியும், நடிகர்கள் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி அமரன் ஆகியோரின் தந்தையும் ஆவார்.
வைணவ சமயத்தின் முதன்மைத் தெய்வமாகிய திருமாலைப் போற்றித் தமிழ்ச் செய்யுட்களால் பாடியவர்கள் ஆழ்வார்கள் ஆவர். தென்மொழியாம் தமிழ் மொழியில் வைணவ இலக்கியங்களை வளர்த்தவர்கள் பரம்பரையில், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (அல்லது) ஆழ்வார் அருளிச்செயல் என்னும் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள பாடல்களைப் பாடிய ஆழ்வார்கள் 12 பேர். அவர்களுள், இறைவனை இறைவனாகக் காணாது, இறைவனோடு உறவுமுறையில் வாழ்ந்ததால் ஆண்டாளையும், இறைவனைப் பாடாது ஆசானைப் பாடினார் என்பதால் மதுரகவியாழ்வாரையும் வேறு வரிசையில் தொகுத்து, ஆழ்வார்கள் பதின்மர் 10 பேர் மட்டுமே எனக் காட்டுவாரும் உண்டு.