The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
அண்ணாமலை குப்புசாமி (Annamalai Kuppusamy) ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் காவல்துறை அதிகாரியும், தமிழ்நாட்டின் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவரும் ஆவார். இவர் தமிழக பாஜக தலைவராக, தேசியத் தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டாவால் 8 சூலை 2021 இல் நியமிக்கப்பட்டார். இந்தியப் பொதுத் தேர்தல் 2024 இல் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
தமிழ் (Tamil language) தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
மகாவீரர் ஜெயந்தி (Mahavir Jayanti), சமண சமயத்தின் 24-வதும், இறுதித் தீர்த்தங்கரருமான மகாவீரரின் பிறந்த நாள் விழாவைக் குறிப்பதாகும். மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் வரும் சைத்திர மாதம், திரியோதசி திதி அன்று மகாவீரரின் பிறந்த நாள், சமணர்களால் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மகாவீரர் பிறந்த நாளை இந்தியாவில் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அன்று இந்தியாவில் இறைச்சிக் கடைகளும், மதுக்கடைகளும் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளும் ஆணையிட்டுள்ளது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் (Meenakshi Temple) என்பது வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள, கோயில் நகரமான மதுரையின் மத்தியில், அமைந்துள்ள சிவன் ஆலயமாகும். இச்சிவ ஆலயத்தின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன். இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (சுருக்கமாக ஆர்சிபி என்று அழைக்கப்படுகிறது) என்பது கர்நாடகாவின் பெங்களூர் நகரை அடிப்படையாகக் கொண்ட உரிமைக்குழுத் துடுப்பாட்ட அணியாகும். இது 2008ஆம் ஆண்டு யுனைடெட் ஸ்பிரிட்ஸ் என்ற நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. அந்நிறுவனத்தின் பிரபல மதுபான வகையான ராயல் சேலஞ்ச் என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த அணிக்குப் பெயரிடப்பட்டது.
மகாவீரர் (இந்தி:महावीर), பொ.ஊ.மு. 599 – 527 என்று குறிப்பிடப்படுபவர் சைன சமயத்தின் மையக் கருத்துக்களை நிறுவிய வர்த்தமானர் என்ற இந்திய துறவியாகும். சமண சமய வழக்கில் அவர் 24வது மற்றும் கடைசி அருகன் ஆவார் சைன சமயப் புத்தகங்களில் இவர் வீரர், வீரப்பிரபு, சன்மதி, அதிவீரர் மற்றும் ஞானபுத்திரர் என்று அழைக்கப்படுகிறார்.
தமிழ் இலக்கியங்களில் யானைகளை ஆண், பெண், குட்டி, அறுபது வயதிற்கு மேலான யானை, போர் யானைகள் என்ற அடிப்படையில் மட்டும் அல்லாது இன்னும் பல்வேறுப் பிரிவுகளாக அவற்றைப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான பெயரிட்டு அழைத்து வந்துள்ளனர்.இதன் மூலம் பழந்தமிழர்களின் வாழ்வினில் யானைகள் எவ்வளவு பயன் ஆற்றின என்பதையும், தமிழர்கள் அந்த யானைகளை எவ்வளவு ஆழமாக உணர்ந்து அவற்றின் பிரிவுகளை வரையறுத்து வைத்து இருந்தார்கள் என்பதையும் அறியலாம்.
பாரதிதாசன் (Bharathidasan, 29 ஏப்ரல் 1891 – 21 ஏப்ரல் 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
உலகளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6000 இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
திருக்குறள், சுருக்கமாகக் குறள் (ஆங்கிலம்: Tirukkuṟaḷ), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், காமம் (அல்லது இன்பம்) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது.
நாம் தமிழர் கட்சி தமிழ்த் தேசிய, ஈழப் போராட்ட ஆதரவு உடைய, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் செயல்படும் ஓர் அரசியல் கட்சி ஆகும். . இந்தக் கட்சி மே மாதம் 18 ஆம் நாள் 2010 ஆம் ஆண்டில் சீமானால் தொடங்கப்பட்டது. தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் சி.பா.ஆதித்தனார் நடத்தி வந்த "நாம் தமிழர் இயக்கத்தின்" தொடர்ச்சியே சீமானால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி என அறியப்படுகிறது.
கள்ளழகர் கோயில் என்பது தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள மதுரை மாவட்டத்தில் உள்ள அழகர் கோவில் என்னும் கிராமத்தில் உள்ள பெருமாள் (விஷ்ணு) கோயிலாகும். திராவிடக் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட இந்த கோவில், பொ.ஊ. 6-9-ஆம் நூற்றாண்டுகளில் ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தத்தில் போற்றிப் பாடப்பட்டுள்ளது.
தினகரன் ஒரு தமிழ் நாளிதழ் ஆகும். இது சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் இருந்து பதிப்பிக்கப்படுகிறது. பல தென்னிந்திய மொழிகளில் ஒளிபரப்புச் சேவையை நடத்திவரும் சன் குழுமத்தினால் வெளியிடப்படும் இந்த நாளிதழ், ஏ.பி.சி என்னும் சுருக்கப் பெயரால் அழைக்கப்படும் ஆடிட் பீரோ ஆஃப் சர்க்குலேஷன் என்னும் நிறுவனத்தின் ஆய்வுகளின்படி, 2006 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் முதல் தினகரன், 9 இலட்சம் பிரதிகளுக்கும் மேல் நாள்தோறும் விற்பனையாவதாகத் தெரிகிறது.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) கவிஞரும், எழுத்தாளரும், இதழாசிரியரும், விடுதலைப் போராட்ட வீரரும் சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
மரபுச்சொற்கள் மரபு ரீதியாக வழங்கிவரும் சொற்களைக் குறிக்கும். மரபு என்பது நம் முன்னோர் ஒரு பொருளை எச்சொல்லால் வழங்கினரோ அவ்வாறே வழங்குவது ஆகும். உதாரணமாக, பறவைகள், விலங்குகள் முதலான உயிரினங்களின் ஒலிகளையும் அவை ஒலிக்கும் முறைகளையும் இவ்வாறு கூற வேண்டுமென, முன்னோர் கூறிய மரபினைத் தொன்றுதொட்டுப் பின்பற்றி வருகின்றனர்.
அம்மைக்கட்டு நோய் அல்லது கூகைக்கட்டு அல்லது பொன்னுக்கு வீங்கி மம்ப்ஸ் வைரசினால் ஏற்படும் ஒருவகை நோய் ஆகும். அறிவியல் நூல்களில் இது மம்ப்ஸ் என்றும் குறிப்பிடப்படுகிறது.நோய் முற்தடுப்பு முறைகள் அறியப்படாத காலங்களில் இந்நோய் உலகளாவி பொதுவான சிறுவர்களைத் தாக்கும் நோயாக இருந்து வந்தது. தற்போது தடுப்பூசி கண்டறியப்பட்ட போதிலும் பல வளர்முக நாடுகளில் இந்நோய் காணப்படுகின்றது.
அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)
அழகர் ஆற்றில் இறங்குதல் அல்லது கள்ளழகர் ஆற்றில் இறங்குதல் என்பது தமிழ்நாட்டின் பழைமை வாய்ந்த மதுரை மாநகரில் சித்திரை மாதத்தில் கொண்டாடப்படும் சைவ வைணவ ஒற்றுமைத் திருவிழாகும். இது மதுரை மாநகரில் வீற்றிருக்கும் அன்னை மீனாட்சியின் திருக்கல்யாணத் திருவிழாவுடன் இணைத்துக் கொண்டாடப் பெறுகிறது. தமிழ்நாட்டில் பொதுவாக தமிழில் முதல் மாதமான சித்திரை மாதப் பிறப்பை சித்திரைத் திருவிழாவாகக் கொண்டாடுகின்றனர்.
வாசுகி (சமக்கிருதம்: वासुकि) என்பது இந்து தொன்மவியல் படி தேவலோகத்தில் வாழ்கின்ற ஓர் பாம்பாகும். இது நாகர்களின் அரசன் என்றும், இதனது தலையில் நாகமணி (பாம்பின் ஆபரணம்) என்ற ரத்தினம் இருப்பதாகவும் புராணங்களில் விவரிக்கப்படுகிறது. வாசுகி காசியபர் மற்றும் கத்ரு தம்பதியரின் மகனாகவும், பாற்கடலில் திருமால் பள்ளிக் கொள்ளும் பஞ்சணையாக இருக்கும் ஆதிசேசனின் சகோதரனாகவும் அறியப்படுகிறான்.
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது.
இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்
குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப் பெயர் குறிக்கிறது.
கலித்தொகை சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது நூலாகும். பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூலான கலித்தொகையில் ஓசை இனிமையும், தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் சிறப்பான அமைப்புகளால் அமைந்த கலிப்பாவினால் சிவனைப் பற்றிய கடவுள் வாழ்த்துப் பாடல் ஒன்று உட்பட பாடப்பட்ட 150 பாடல்கள் உள்ளன. அப்பாடல்களை அடி எல்லை நோக்கில் ஆராயும் போது குறைந்த அடி எல்லையாக 11 அடிகள் கொண்ட பாடல்களும் உயர்ந்த அடி எல்லையாக 80 அடிகள் கொண்ட பாடல்களும் காணப்படுகின்றன.
தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024
இந்தியாவின் 18 ஆவது மக்களவைக்கான தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 அன்று நடக்கிறது. தேர்தல் முடிவுகள் ஜுன் 4 அன்று வெளியிடப்படும்.
பிரதோசம் (Pradosha) என்பது சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும். இப்பிரதோச காலத்தில் நிகழும் வழிபாடு பிரதோச வழிபாடு எனவும், பிரதோச தினத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் பிரதோச விரதம் எனவும் அழைக்கப்படுகின்றது. பிரதோசத்திற்காக கூறப்படும் புராணக் கதையில் செல்வத்திற்காக அசுரர்களும், தேவர்களும் பாற்கடலைக் கடையும் பொழுது ஆலகாலம் எனும் விசம் வெளிப்பட்டது.
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட் (Tamilnad Mercantile Bank Limited) தூத்துக்குடி, தமிழ்நாடு, இந்தியா தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனம் ஆகும். டிஎம்பி (தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி), 1921ல் தமிழக நாடார் சமுகத்தினரால் நாடார் வங்கி என வியாபார நிதி சேவைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் 1962ம் ஆண்டு பரந்துபட்ட வணிக மேம்பாட்டிற்காக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி என பெயர் மாற்றப்பட்டது.
காற்று (wind) என்பது வளிமங்கள் (gas) பெருமளவில் ஓரிடத்தில் இருந்து இன்னோரிடத்துக்கு நகரும் நிலையைக் குறிக்கும். புவியைப் பொறுத்தவரை, வளிமண்டலத்தில் (atmosphere)வளிமம் பெருமளவில் நகரும்போது காற்று எனப்படுகிறது. விண்வெளியில் சூரியனில் இருந்து வளிமங்கள் அல்லது மின்னேற்றம் (electric charge) அடைந்த துகள்கள் வெளியேறி வெளிக்குள் செல்வது சூரியக் காற்று (solar wind) எனவும், கோள்களில் (planet) இருந்து நிறை குறைந்த வளிமத் தனிமங்களின் வெளியேற்றம் கோட்காற்று (planetary wind) எனவும் அழைக்கப்படுகின்றன.
இந்திய மக்களவைத் தொகுதிகள் (Lok Sabha Contituencies of India) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்களை மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்க ஏதுவாக வரையறுக்கப்பட்ட பகுதிகளாகும். இந்தியாவில் மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. தற்போது 543 தொகுதிகள் உள்ளன, அதிகபட்ச இடங்கள் 550 வரை நிரப்பப்படும் (பிரிவு 331-க்கு பிறகு 2 இடங்கள் ஆங்கிலோ இந்தியனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனால் 104 வது அரசியலமைப்பு திருத்தத்தின்படி 331 வது பிரிவு சன்சாத் மூலம் செல்லாது, இந்த திருத்தத்திற்கு முன் அதிகபட்ச இடங்கள் 552 ஆக இருக்கும்) இந்திய அரசியலமைப்பில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள மக்களவையின் அதிகபட்ச அளவு 552 உறுப்பினர்களாகும், இதில் 28 மாநிலங்களின் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களும், 8 ஒன்றியப் பகுதி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் 19 உறுப்பினர்களும் அவர்களது மக்கள்தொகையின் அடிப்படையில் உள்ளனர்.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
மீனாட்சி அம்மை பாண்டிய மன்னன் மலையத்துவஜன் - காஞ்சனமாலை இணையர் வேள்வி செய்து பெற்ற மகளும், சுந்தரேஸ்வரரின் மனைவியும் ஆவார். இவர் தடாதகை பிராட்டி எனவும் அறியப்படுகிறார். மீனாட்சி பிறப்பில் மூன்று மார்பகங்களுடன் பிறந்ததாகவும்; தன்னை மணம் முடிப்பவரை பார்த்தவுடன் நடுவில் இருக்கும் மூன்றாவது மார்பகம் மறைந்து போகும் என்ற நிலையில், கயிலை மலையில் சிவன் மீனாட்சியை கண்டவுடன் மூன்றாவது மார்பகம் மறைந்தது என திருவிளையாடல் புராணம் கூறுகிறது.
தமிழ் மாதங்கள் சித்திரை முதல் பங்குனி முடிய பன்னிரண்டு ஆகும். உண்மையில் இவை, இந்தியாவில் மட்டுமின்றி இந்தியாவுக்கு வெளியிலும் பல ஆசிய நாடுகளிலும் கூட இன்றும் சமயம் மற்றும் மரபு சார்ந்த தேவைகளுக்காகப் புழக்கத்திலுள்ள இந்துக் காலக் கணிப்பு முறையை அடிப்படையாகக் கொண்டதே. இந்துக் காலக் கணிப்பு முறை இன்று புழக்கத்திலுள்ள பகுதிகளிலெல்லாம் ஒரே விதமாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபாசாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.
இந்தியாவில் பாலினப் பாகுபாடு (Gender inequality in India) என்பது இந்தியாவில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நலவாழ்வு, கல்வி, பொருளியல், அரசியல் சார்ந்த சமனின்மையைக் குறிக்கிறது. இந்தக் காரணிகளின் அடிப்படையிலும் ஒட்டுமொத்த நிலைமையைப் பொறுத்தும் பல்வேறு பன்னாட்டுப் பாலினச் சுட்டிகள் இந்தியாவை பல்வேறு தரவரிசைகளில் பாகுபடுத்துகின்றன. மேலும் இந்தச் சுட்டிகள் ஏற்கப்படாமல் கருத்துமோதலில் உள்ளன.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) என்பது இந்தியாவில் விளையாடப்படும் தொழில்முறை இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடர் ஆகும், இது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் அல்லது ஏப்ரல்-மே மாதங்களில் இந்தியாவின் வெவ்வேறு நகரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பத்து அணிகளால் விளையாடப்படுகின்றது. இத்தொடர் 2008ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியத்தால் (பிசிசிஐ) துவங்கப்பட்டதாகும். ஐபிஎல் தொடர், ஐசிசியின் எதிர்காலச் சுற்றுப்பயண திட்டத்தில் தனி விதிவிலக்கைப் பெற்றுள்ளது, அதன்படி ஏப்ரல்-மே மாதங்களில் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் எதுவும் நடத்தப்படுவதில்லை.
இந்திய செஞ்சிலுவைச் சங்கம் (Indian Red Cross Society, IRCS) என்பது இந்தியாவில் வாழும் மனித வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் ஒரு தன்னார்வ மனிதாபிமான அமைப்பு. இது சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை இயக்கத்தின் ஒரு பகுதியாகும், எனவே சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைப் பகிர்ந்து கொள்கிறது. பேரழிவுகள்/அவசர காலங்களில் நிவாரணம் அளிப்பது, பாதிக்கப்படக்கூடிய மக்கள், சமூகங்களின் ஆரோக்கியம், பராமரிப்பு ஆகியவற்றை ஊக்குவிப்பதே இச்சங்கத்தின் நோக்கம்.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்:பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் (Thiruvarutprakasa Vallalār Chidambaram Ramalingam, 5 அக்டோபர் 1823 – 30 சனவரி 1874) இந்தியாவைச் சேர்ந்த ஓர் இந்து சமய ஆன்மீகவாதி ஆவார். "எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே" என்பதைக் குறிக்கும் வண்ணம், இவர் தோற்றுவித்த மார்க்கத்திற்கு "சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்க சங்கம்" என்று பெயரிட்டார். சைவ சமயத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்த வள்ளலாரை, பழமைவாதிகள் கடுமையாக எதிர்த்தனர்.
பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவும் உண்டு. அறம், பொருள், இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்களில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன. உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற பிரிவின் கீழ் வருவன.
பாலினப் பயில்வுகள் (Gender studies) என்பது பாலின அடையாளத்தையும் பாலின உருவகிப்பையும் பயிலும் பலதுறையிடைப் புலமாகும். இது மகளிர் பயில்வுகள், ஆடவர் பயில்வுகள், பெண்ணியம், பாலினம், பாலின அரசியல், விதிர்நிலைப் பயில்வுகள் ஆகியவற்றை உள்ளடக்கும். சிலவேளைகளில், பாலினப் பயில்வுகள் மாந்த இனப் பாலுணர்வுப் பயில்வுடன் இணைந்தே பயிலப்படுகிறது.
அயலி (Ayali) என்பது 2023 ஆம் ஆண்டு இந்தியத் தமிழ் மொழியில் வெளியாகியுள்ள குடும்ப இணையத் தொலைக்காட்சித் தொடராகும். இத்தொடரை ஜீ5 தொலைக்காட்சி அலைவரிசைக்காக முத்துக்குமார் எழுதி இயக்கியுள்ளார். இந்தத் தொடரின் முக்கிய கதாபாத்திரங்களில் அபி நட்சத்திரா, அனுமோல், மதன், லிங்கா மற்றும் சிங்கம்புலி ஆகியோர் நடித்துள்ளனர்.
கார்லசு புச்திமோன் (Carles Puigdemont i Casamajó; பிறப்பு: 29 திசம்பர் 1962) எசுப்பானியாவின் காத்தலோனியா தன்னாட்சிப் பகுதியின் தலைவர் ஆவார். 2017-ஆம் ஆண்டில் காத்தலோனியா தன்னாட்சிப் பிரதேசத்திற்கு நடைபெற்ற தேர்தலில் கார்லசு புச்திமோனின் அரசியல் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இவர் காத்தலோனியா தன்னாட்சிப் பிரதேசத்தை தனி நாடாகக் கோரும் போராட்ட இயக்கத்தின் தலைவரும் ஆவார்.
பிள்ளைத்தமிழ் என்பது தமிழ் இலக்கியத்தில் வழங்கும் பிரபந்த நூல் வகைகளுள் ஒன்று. புலவர்கள் தாம் விரும்பிய தெய்வங்கள், சமயாசாரியர்கள், புலவர் பெருமக்கள், ஆதீனகர்த்தர், அரசர், உபகாரிகள், அவர் அவர்கட்கு உகந்தவர்கள், ஆகியோரைக் குழந்தையாக உருவகித்துக் கற்பனை பல அமையப் பாடப்படுவது பிள்ளைத்தமிழாகும். குழந்தையாகக் கொண்டது பாவனையே ஆகும்.
சிவனின் 108 திருநாமங்கள் அல்லது சிவாஷ்டோத்தர சத நாமாவளி என்பது சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமானின் பெயர்களை கூறி போற்றும் தோத்திரப் பாடலாகும். இப்பாடல்களில் சிவபெருமானின் நூற்றியெட்டுப் பெயர்கள் கூறப்பெற்றுள்ளன. சமஸ்கிருதத்தில் நம என்றும், தமிழில் போற்றி என்றும் சிவபெருமானின் பெயருக்குப் பின் இணைத்து பாடப்பெறுகிறது.
ரவிசீனிவாசன் சாய் கிஷோர் (Ravisrinivaasan Sai Kishore, பிறப்பு: நவம்பர் 6, 1996) என்பவர் தமிழ்நாட்டுத் துடுப்பாட்ட வீரர் ஆவார். 12 மார்ச் 2017 அன்று 2016–17 விஜய் ஹசாரே கோப்பையில் தமிழ்நாடு அணிக்காக பட்டியல் அ போட்டிகளில் அறிமுகமானார். 14 அக்டோபர் 2017 அன்று 2017–18 ரஞ்சிக் கோப்பை தொடரில் தமிழ்நாடு அணிக்காக முதல் தரப் போட்டிகளில் அறிமுகமானார்.