The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
தமிழ் (Tamil language) தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
திருக்குறள், சுருக்கமாகக் குறள் (ஆங்கிலம்: Tirukkuṟaḷ), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், காமம் (அல்லது இன்பம்) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது.
அண்ணாமலை குப்புசாமி (Annamalai Kuppusamy) ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் காவல்துறை அதிகாரியும், தமிழ்நாட்டின் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவரும் ஆவார். இவர் தமிழக பாஜக தலைவராக, தேசியத் தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டாவால் 8 சூலை 2021 இல் நியமிக்கப்பட்டார். இந்தியப் பொதுத் தேர்தல் 2024 இல் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) கவிஞரும், எழுத்தாளரும், இதழாசிரியரும், விடுதலைப் போராட்ட வீரரும் சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
மாதம்பட்டி ரங்கராஜ் (Madhampatty Rangaraj) என்பவர் இந்திய சமையல் கலைஞர், நடிகர் மற்றும் மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். இந்நிறுவனம் தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் உணவுத் தொடர்பான சேவையைச் செய்கிறது. இவர் மெஹந்தி சர்க்கஸ் (2019) மூலம் நடிகராக அறிமுகமானார், பின்னர் த்ரில்லர் திரைப்படமான பென்குயின் (2020) திரைப்படத்தில் நடித்தார்.
ரத்னம் ( Rathnam ) என்பது இயக்குநர் ஹரி எழுதி இயக்கிய இந்திய தமிழ் மொழி அதிரடித் திரைப்படமாகும். இதை ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ், ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் இன்வெனியோ ஆரிஜின் ஆகியவற்றின் கீழ் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் அலங்கார் பாண்டியன் இணைந்து தயாரிக்கிறார்கள். விஷால் படத்தின் தலைப்பு வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர், ராமச்சந்திர ராஜு, சமுத்திரக்கனி, கௌதம் மேனன் மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர்.
பாரதிதாசன் (Bharathidasan, 29 ஏப்ரல் 1891 – 21 ஏப்ரல் 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
உலகளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6000 இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
தினகரன் ஒரு தமிழ் நாளிதழ் ஆகும். இது சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் இருந்து பதிப்பிக்கப்படுகிறது. பல தென்னிந்திய மொழிகளில் ஒளிபரப்புச் சேவையை நடத்திவரும் சன் குழுமத்தினால் வெளியிடப்படும் இந்த நாளிதழ், ஏ.பி.சி என்னும் சுருக்கப் பெயரால் அழைக்கப்படும் ஆடிட் பீரோ ஆஃப் சர்க்குலேஷன் என்னும் நிறுவனத்தின் ஆய்வுகளின்படி, 2006 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் முதல் தினகரன், 9 இலட்சம் பிரதிகளுக்கும் மேல் நாள்தோறும் விற்பனையாவதாகத் தெரிகிறது.
இந்திய சோதிடத்தில் பிரீதி என்பது, பஞ்சாங்க உறுப்புக்களுள் ஒன்றான "யோகம்" என்பதனுள் அடங்கும் 27 யோகங்களுள் இரண்டாவது ஆகும். இராசிச் சக்கரத்தின் தொடக்கப் புள்ளியில் இருந்து 13° 20' தொடக்கம் 26° 40' பிரீதி யோகத்துக்கு உரியது. சூரியன், சந்திரன் ஆகிய கோள்களின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை இந்தக் கோணத்தினூடாக அதிகரிப்பதற்கு எடுக்கும் நேரத்துக்குரிய யோகம் "பிரீதி" ஆகும்.
இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்
குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப் பெயர் குறிக்கிறது.
அம்மைக்கட்டு நோய் அல்லது கூகைக்கட்டு அல்லது பொன்னுக்கு வீங்கி மம்ப்ஸ் வைரசினால் ஏற்படும் ஒருவகை நோய் ஆகும். அறிவியல் நூல்களில் இது மம்ப்ஸ் என்றும் குறிப்பிடப்படுகிறது.நோய் முற்தடுப்பு முறைகள் அறியப்படாத காலங்களில் இந்நோய் உலகளாவி பொதுவான சிறுவர்களைத் தாக்கும் நோயாக இருந்து வந்தது. தற்போது தடுப்பூசி கண்டறியப்பட்ட போதிலும் பல வளர்முக நாடுகளில் இந்நோய் காணப்படுகின்றது.
மணிமுத்தாறு நெல்லை (திருநெல்வேலி) மாவட்டத்தில் உள்ள ஒரு ஆறு மற்றும் அணைக்கட்டு ஆகும். இயற்கையாகவே மணிமுத்தாறு தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறாக இருப்பதாலும் அணைக்கட்டு அதன் குறுக்கே கட்டப்பட்டிருப்பதாலும் மேற்கண்டவாறு வழங்கப்படுகிறது. இது மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடங்கி கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரம் அருகே தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
அட்சய திருதியை (அல்லது அக்ஷய தீஜ்) என அறியப்படுவது இந்து மற்றும் சமணர்களின் புனித நாள் ஆகும். அது தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும்.முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாள் அட்சய திருதியை ஆகும். இந்து மதத்தில் குறிப்பிடப்படும் காக்கும் கடவுளான திருமாலால் ஆளப்படுவதாகும்.
பிள்ளைத்தமிழ் என்பது தமிழ் இலக்கியத்தில் வழங்கும் பிரபந்த நூல் வகைகளுள் ஒன்று. புலவர்கள் தாம் விரும்பிய தெய்வங்கள், சமயாசாரியர்கள், புலவர் பெருமக்கள், ஆதீனகர்த்தர், அரசர், உபகாரிகள், அவர் அவர்கட்கு உகந்தவர்கள், ஆகியோரைக் குழந்தையாக உருவகித்துக் கற்பனை பல அமையப் பாடப்படுவது பிள்ளைத்தமிழாகும். குழந்தையாகக் கொண்டது பாவனையே ஆகும்.
மணிமேகலை ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்களுள் ஒன்று. இக்காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார்.மணிமேகலை காப்பியத்தில் அடி இணையும், அதன் வழிபாடும், வேறு கடவுள்களின் வழிபாடும் இருக்கும் நிலையில், அஃது ஒரு மகாயான காப்பியமாகவே இருக்கமுடியும். மேலும், மகாயான பௌத்தமானது இல்லறத்தையும், துறவறத்தையும் வலியுறுத்தும் நிலையிலும், சிலப்பதிகாரமானது இல்லறத்தையும், மணிமேகலை காப்பியம் துறவறத்தையும் வலியுறுத்துவதாலும், இவை இரட்டைக் காப்பியங்கள் ஆகும்.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்:பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission- TNPSC) என்பது தமிழக அரசுப் பணிக்குத் தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பெற்ற ஒரு அரசு சார்ந்த அமைப்பு ஆகும். இது இந்தியாவில் மாநில அளவில் உருவாக்கப்பெற்ற முதல் தேர்வாணையமாகும். 1929இல் சென்னை மாகாண சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பெற்ற ஒரு சட்டத்தின் மூலம் ஒரு தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்களை கொண்டு உருவாக்கப்பெற்றது.
அப்பர் திருநாவுக்கரசு நாயனார் பொ.ஊ. ஏழாம் நூற்றாண்டு தொடக்கத்தில், தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவரும், சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் ஆவார். இவரைத் தேவார மூவருள் இரண்டாமவர் என்றும், இறைவனிடம் பக்தி செலுத்துதலில், தொண்டை அடிப்படையாகக் கொண்டவர் என்றும் புகழ்கின்றனர்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் (Kings XI Punjab) என்பது பஞ்சாப்பின் மொகாலி நகரை அடிப்படையாகக் கொண்ட உரிமைக்குழுத் துடுப்பாட்ட அணியாகும். இது 14 ஆவது ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ்(Punjab Kings) எனும் பெயரிற்கு மாற்றம் செய்யப்பட்டது. 2008இல் நிறுவப்பட்ட இந்த உரிமைக்குழுவின் இணை உரிமையாளர்களாக பிரீத்தி சிந்தா, நெஸ் வாடியா, மொகித் பர்மன், கரண் பால் ஆகியோர் உள்ளனர்.
கலித்தொகை சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது நூலாகும். பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூலான கலித்தொகையில் ஓசை இனிமையும், தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் சிறப்பான அமைப்புகளால் அமைந்த கலிப்பாவினால் சிவனைப் பற்றிய கடவுள் வாழ்த்துப் பாடல் ஒன்று உட்பட பாடப்பட்ட 150 பாடல்கள் உள்ளன. அப்பாடல்களை அடி எல்லை நோக்கில் ஆராயும் போது குறைந்த அடி எல்லையாக 11 அடிகள் கொண்ட பாடல்களும் உயர்ந்த அடி எல்லையாக 80 அடிகள் கொண்ட பாடல்களும் காணப்படுகின்றன.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபாசாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.
சூரியநெல்லி வன்புணர்வு வழக்கு 1996இல் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தின் சூரியநெல்லி சிற்றூரைச் சேர்ந்த 16 வயது சிறுமி தொடர்ந்து 40 நாட்களாக 42 ஆடவர்களால் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட வழக்கினைக் குறிக்கிறது. இந்த 40 நாட்களில் கேரளாவின் பல பகுதிகளுக்கும் அச்சிறுமி கொண்டு செல்லப்பட்டு வன்புணரப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் மிகவும் அறியப்பட்ட, பெரும் பதவிகளில் இருப்பவர்களாவர்.
மெஹந்தி சர்க்கஸ் (Mehandi Circus) என்பது 2019 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் - மொழி அதிரடி காதல் நாடகத் திரைப்படமாகும். ராஜு முருகன் எழுதிய இதனை இவருடைய மூத்த சகோதரரான சரவண ராஜேந்திரன் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் புதுமுகம் மாதம்பட்டி ரங்கராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும், சுவேதா திரிபாதி தமிழ்த் திரையுலகில் அறிமுக கதாநாயகியாகவும், விக்னேஷ்காந்த், வேல ராமமூர்த்தி ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருந்தனர்.
யூடியூப் அல்லது வலையொளி (YouTube) என்பது ஓர் அமெரிக்க நாட்டு நிகழ்நிலைக் காணொளிப் பகிர்வு மற்றும் சமூக ஊடகத் தளமாகும். இது சாட் ஹர்லி, ஸ்டீவ் சென் மற்றும் ஜவேத் கரீம் ஆகியோரால் பிப்ரவரி 2005 இல் தொடங்கப்பட்டது. உலகம் முழுவதும் வலையொளிப் பயனர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு பில்லியன் மணிநேரக் காணொளிகளைக் காணுகிறார்கள்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் (Meenakshi Temple) என்பது வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள, கோயில் நகரமான மதுரையின் மத்தியில், அமைந்துள்ள சிவன் ஆலயமாகும். இச்சிவ ஆலயத்தின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன். இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர்.
இந்து சமயம் (ஆங்கிலம்: Hinduism) இந்திய துணைக்கண்டத்தில் தோன்றிய, காலத்தால் மிகவும் தொன்மையான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்றெனக் கருதப்படுகிறது. ஏறக்குறைய 950 மில்லியன் இந்துக்களைக் கொண்டு உலகின் மூன்றாவது பெரிய சமயமாக இருக்கின்றது. பெரும்பாலான இந்துக்கள் இந்தியாவிலும், நேபாளத்திலும் வசிக்கின்றார்கள்.
தமிழ் இலக்கியங்களில் யானைகளை ஆண், பெண், குட்டி, அறுபது வயதிற்கு மேலான யானை, போர் யானைகள் என்ற அடிப்படையில் மட்டும் அல்லாது இன்னும் பல்வேறுப் பிரிவுகளாக அவற்றைப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான பெயரிட்டு அழைத்து வந்துள்ளனர்.இதன் மூலம் பழந்தமிழர்களின் வாழ்வினில் யானைகள் எவ்வளவு பயன் ஆற்றின என்பதையும், தமிழர்கள் அந்த யானைகளை எவ்வளவு ஆழமாக உணர்ந்து அவற்றின் பிரிவுகளை வரையறுத்து வைத்து இருந்தார்கள் என்பதையும் அறியலாம்.
கார்லசு புச்திமோன் (Carles Puigdemont i Casamajó; பிறப்பு: 29 திசம்பர் 1962) எசுப்பானியாவின் காத்தலோனியா தன்னாட்சிப் பகுதியின் தலைவர் ஆவார். 2017-ஆம் ஆண்டில் காத்தலோனியா தன்னாட்சிப் பிரதேசத்திற்கு நடைபெற்ற தேர்தலில் கார்லசு புச்திமோனின் அரசியல் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இவர் காத்தலோனியா தன்னாட்சிப் பிரதேசத்தை தனி நாடாகக் கோரும் போராட்ட இயக்கத்தின் தலைவரும் ஆவார்.
தமிழ் மாதங்கள் சித்திரை முதல் பங்குனி முடிய பன்னிரண்டு ஆகும். உண்மையில் இவை, இந்தியாவில் மட்டுமின்றி இந்தியாவுக்கு வெளியிலும் பல ஆசிய நாடுகளிலும் கூட இன்றும் சமயம் மற்றும் மரபு சார்ந்த தேவைகளுக்காகப் புழக்கத்திலுள்ள இந்துக் காலக் கணிப்பு முறையை அடிப்படையாகக் கொண்டதே. இந்துக் காலக் கணிப்பு முறை இன்று புழக்கத்திலுள்ள பகுதிகளிலெல்லாம் ஒரே விதமாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை.
கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் (Ispade Rajavum Idhaya Raniyum ) என்பது ரஞ்சித் ஜெயக்கொடி எழுதி இயக்கிய 2019 ஆம் ஆண்டு இந்தியத் தமிழ் மொழி காதல் பரபரப்பூட்டும் படம் ஆகும். இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் ஷில்பா மஞ்சுநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மா கா பா ஆனந்த், பாலா சரவணன், சுரேஷ், பொன்வன்னன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.
இலங்கை () (Sri Lanka, சிங்களம்: ශ්රී ලංකා, சிறிலங்கா) இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் வாழும் ஒரு தீவு நாடு ஆகும். இதன் தற்போதைய அதிகாரபூர்வ பெயர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு ஆகும். 1972 க்கு முன் உலகம் முழுவதும் சிலோன் (Ceylon) என்ற பெயரால் அறியப்பட்டு வந்தது.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டுச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்
விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. இப்பட்டியல் முழுமையானதல்ல.
சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்
சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில் (Swamimalai Swaminathaswamy Temple) முருகனின் ஆறுபடை வீடுகளில், நான்காம் படை வீடாகத் திகழ்கின்றது. இது தமிழ்நாடு மாநிலத்தில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திற்கு வடகிழக்கில் 6 கி.மீ தொலைவில் காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மீனாட்சி சுந்தரேசுவரர் எழுந்தருளியுள்ளதால் சுந்தரேசுவரசுவாமி கோயில் என்றும் இக்கோயிலை அழைப்பர்.