The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
தமிழ் (Tamil language) தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
தடகள விளையாட்டுக்கள் (Athletics) எனப்படுவது தட கள மைதானத்தில் இடம்பெறும் ஓடுதல், எறிதல்,நடத்தல், தாண்டுதல் போன்ற செயற்திறன்களை உள்ளடக்கிய பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஆகும். பெரும்பாலான இவ்விளையாட்டுக்கள் மிக எளிமையானவை. விலையுயர்ந்த கருவிகளையோ கட்டமைப்புக்களையோ வேண்டுவதில்லை என்பதால் இவை மிகப் பரவலாக விளையாடப்படுகின்றன.
திருக்குறள், சுருக்கமாகக் குறள் (ஆங்கிலம்: Tirukkuṟaḷ), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், காமம் (அல்லது இன்பம்) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது.
வலைப்பந்து ஏழு பேர்கள் அடங்கிய இரு அணிகளுக்கிடையே ஆடப்படும் ஓர் பந்து விளையாட்டு ஆகும்.இது பெண்கள் கூடைப்பந்து விளையாட்டின் துவக்கநிலை பதிப்புகளிலிருந்து உருவானதால் கூடைப்பந்து விளையாட்டுடன் பல ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது. இங்கிலாந்தில் 1890களில் இது ஓர் முறையான விளையாட்டாக மேம்படுத்தப்பட்டது.அங்கிருந்து பல நாடுகளுக்குப் பரவியது.பொதுநலவாய நாடுகளில் பரவலாக விளையாடப்படும் இந்த விளையாட்டினை பெரும்பாலும் பெண்களே விளையாடுகின்றனர். செவ்வக வடிவ ஆடுகளம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இரு சிறு இறுதிப்பகுதிகளிலும் உயரமான இலக்குகூடை அமைந்துள்ளது.
மோகன்தாசு கரம்சந்த் காந்தி (ஆங்கிலம்: Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948) என்பவர் ஒரு இந்திய வழக்குறைஞரும், அன்னிய ஆட்சியை எதிர்த்த தேசியவாதியும், அரசியல் அறனாளரும் ஆவார். இவர் மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார்.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) கவிஞரும், எழுத்தாளரும், இதழாசிரியரும், விடுதலைப் போராட்ட வீரரும் சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
இந்திய சோதிடத்தில் பிரீதி என்பது, பஞ்சாங்க உறுப்புக்களுள் ஒன்றான "யோகம்" என்பதனுள் அடங்கும் 27 யோகங்களுள் இரண்டாவது ஆகும். இராசிச் சக்கரத்தின் தொடக்கப் புள்ளியில் இருந்து 13° 20' தொடக்கம் 26° 40' பிரீதி யோகத்துக்கு உரியது. சூரியன், சந்திரன் ஆகிய கோள்களின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை இந்தக் கோணத்தினூடாக அதிகரிப்பதற்கு எடுக்கும் நேரத்துக்குரிய யோகம் "பிரீதி" ஆகும்.
தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024
இந்தியாவின் 18 ஆவது மக்களவைக்கான தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 அன்று நடக்கிறது. தேர்தல் முடிவுகள் ஜுன் 4 அன்று வெளியிடப்படும்.
கச்சத்தீவு ஒப்பந்தம் (Katchatheevu Agreement) என்பது இந்திய-இலங்கை இடையே உள்ள பாக் நீரிணையில் அமைந்துள்ள, இந்தியாவுக்கு உரிமையான கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியது குறித்தான ஒப்பந்தமாகும். இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி மற்றும் இலங்கை பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்காவும் கையொப்பமிட்டு 8, சூலை 1974 ஆண்டு முதல் செயலுக்கு வந்தது கச்சத்தீவு ஒப்பந்தம்.1976-ஆம் ஆண்டு கச்சத்தீவு ஒப்பந்தம் என்பது ஆதம் பாலத்திற்குத் தெற்கே மன்னார் வளைகுடா பரப்பு மற்றும் வங்காள விரிகுடா பரப்பு ஆகியவற்றில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் உள்ள கடல் உரிமைகளையும், கடல் எல்லைகளையும் வரையறுத்துக் கொள்ளும் ஒப்பந்தமாகும். 1976-ஆம் ஆண்டு கச்சத்தீவு ஒப்பந்தப்படி, மன்னார் வளைகுடா பகுதியில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க உரிமையில்லை.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
உலகளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6000 இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
அங்கவை சங்கவை ஆகியோர் சங்க காலத்தில் வாழ்ந்த இரு சகோதரிகள் ஆவர். இவர்கள் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியமான புறநானூற்றில் கிடைக்கிறது.இவர்கள் "முல்லைக்குத் தேர் தந்த பாரி வள்ளலின் பெண்கள்தான் அங்கவை, சங்கவை. மாட மாளிகையில் வாழ்ந்த இவர்கள் தங்கள் தந்தையை இழந்து தவித்தபோது அடைக்கலம் தந்து மணமுடித்து வைத்தவர் வள்ளல் பாரியின் நண்பரான புலவர் கபிலர்" என்றும் கூறப்படுகிறது.
வளையப்பந்து (Tennikoit) என்பது பூப்பந்தைப் (Tennis) போன்ற ஒரு வகை விளையாட்டாகும் .இதற்கும் பூப்பந்து விளையாடுவதற்கு ஏற்ற ஆடுகளம்போல் ஆடுகளம் தேவை .வளையப்பந்து விளையாடுவதற்கு வட்டமான இரப்பர் வளையப்பந்து அடிப்படைத் தேவையாகும். இந்த விளையாட்டை விளையாடும் இரு விளையாட்டு வீரர்களை பிரிக்கும் வகையில் , ஒவ்வொருவரும் தனது பிடிப்பை மோதலின்றி பிடிக்க ஆடுகளத்தின் குறுக்கே வலை அமைக்கப்பட்டிருக்கும். வளையப்பந்து குறிப்பாக ஜெர்மனி, தென் ஆப்பிரிக்கா, பிரேசில், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் மிகவும் பிரபலமாக உள்ளது.
தினகரன் ஒரு தமிழ் நாளிதழ் ஆகும். இது சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் இருந்து பதிப்பிக்கப்படுகிறது. பல தென்னிந்திய மொழிகளில் ஒளிபரப்புச் சேவையை நடத்திவரும் சன் குழுமத்தினால் வெளியிடப்படும் இந்த நாளிதழ், ஏ.பி.சி என்னும் சுருக்கப் பெயரால் அழைக்கப்படும் ஆடிட் பீரோ ஆஃப் சர்க்குலேஷன் என்னும் நிறுவனத்தின் ஆய்வுகளின்படி, 2006 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் முதல் தினகரன், 9 இலட்சம் பிரதிகளுக்கும் மேல் நாள்தோறும் விற்பனையாவதாகத் தெரிகிறது.தினகரன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) முன்னாள் தலைவர்களில் ஒருவரும், தினத்தந்தியின் நிறுவனர் சி.
கைப்பந்தாட்டம் (volleyball) என்பது ஓர் அணிக்கு ஆறு வீரர்கள் வீதம் உருவாக்கப்பட்ட இரண்டு அணி வீரர்கள் ஒரு வலையால் பிரிக்கப்பட்டு கைகளால் பந்தை அடித்து ஆடுகின்ற ஒரு குழு ஆட்டமாகும். ஒவ்வோர் அணியும் தங்கள் பகுதிக்கு அனுப்பப்பட்ட பந்தை அது தரையை தொடுவதற்கு முன் கைகளால் வாங்கி, தட்டி பின்னர் எதிர்ப்பக்கத்தினரின் பகுதியில் தரையைத் தொடும்படி அனுப்புகின்ற விளையாட்டு ஆகும். எதிர்ப்பக்கத்திற்கு பந்தை அனுப்ப ஒவ்வோர் அணியும் மூன்று தட்டுதல்கள் எடுத்துக் கொள்ளலாம்.
முகம்மது நபி அல்லது முகம்மது (Muḥammad, அரபு மொழி: محمد, பிறப்பு பொ.ஊ. 570, இறப்பு 8 சூன் பொ.ஊ. 632 கணிப்பு), அராபியப் பெயர்: அபூ அல்-காசிம் முகம்மது இப்னு அப்தல்லா இப்னு அப்தல்-முத்தலிப் இப்னு ஹாசிம் (Abū al-Qāsim Muḥammad ibn ʿAbd Allāh ibn ʿAbd al-Muṭṭalib ibn Hāshim, ابو القاسم محمد ابن عبد الله ابن عبد المطلب ابن هاشم) என்பவர் மக்கா நகரைச் சேர்ந்தவர்.
பாரதிதாசன் (Bharathidasan, 29 ஏப்ரல் 1891 – 21 ஏப்ரல் 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
காந்திய பொருளாதாரம் கிராமத்தை அடிப்படை அலகாகக் கொண்டது. தன் நிறைவு, சுய சார்பு, கூட்டுச் செயற்பாடு, பொது நலம், சமத்துவம் ஆகியவற்றை முன்நிறுத்துகின்றது. சுற்றுசூழல் சார்ந்த, கைத்தொழில் சார்ந்த பொருளாதார அமைப்பையும் வலியுறுத்துகின்றது.காந்திய பொருளாதார முறை தொழில் நுட்பத்துக்கு எதிரானது என்ற ஒரு விமர்சனம் உண்டு.
கூடைப்பந்தாட்ட விதிகள் என்பது கூடைப்பந்து ஆட்டத்தை நிர்வகிக்கும் விதிகள், ஒழுங்கு முறைகள், அலுவல்முறை, உபகரணம் மற்றும் நடைமுறைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும். தேசிய கூடைப்பந்தாட்டக் கழகம் உள்ளிட்ட பெரும்பாலான கழகங்கள் அவர்களது சொந்த விதிகளை நிர்வகித்து வருகின்றனர். மேலும் சர்வதேச கூடைப்பந்தாட்டக் கூட்டமைப்பின் (International Basketball Federation) (ஃபிபா) தொழில்நுட்ப ஆணைக்குழு சர்வதேச ஆட்டத்திற்கான விதிகளை நிர்ணயித்திருக்கிறது.
குர்ஆன் அல்லது திருக்குர்ஆன் (அரபு: القرآن அல்-குர்-ஆன்) இசுலாமியர்களின் புனித நூல் ஆகும். இது முகம்மது நபிக்கு, ஜிப்ரயீல் என்ற வானவர் மூலமாக இறைவனால் சிறுகச் சிறுக சொல்லப்பட்ட அறிவுரைகள், சட்ட திட்டங்கள், தொன்மங்கள், செய்திகளின் தொகுப்பு என்பது இசுலாமியர்களின் நம்பிக்கை. இசுலாமிய சட்ட முறைமையான சரியத் சட்டத்தின் அடிப்படையாகவும் குரான் விளங்குகின்றது.
நாம் தமிழர் கட்சி தமிழ்த் தேசிய, ஈழப் போராட்ட ஆதரவு உடைய, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் செயல்படும் ஓர் அரசியல் கட்சி ஆகும். . இந்தக் கட்சி மே மாதம் 18 ஆம் நாள் 2010 ஆம் ஆண்டில் சீமானால் தொடங்கப்பட்டது. தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் சி.பா.ஆதித்தனார் நடத்தி வந்த "நாம் தமிழர் இயக்கத்தின்" தொடர்ச்சியே சீமானால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி என அறியப்படுகிறது.
அம்மைக்கட்டு நோய் அல்லது கூகைக்கட்டு அல்லது பொன்னுக்கு வீங்கி மம்ப்ஸ் வைரசினால் ஏற்படும் ஒருவகை நோய் ஆகும். அறிவியல் நூல்களில் இது மம்ப்ஸ் என்றும் குறிப்பிடப்படுகிறது.நோய் முற்தடுப்பு முறைகள் அறியப்படாத காலங்களில் இந்நோய் உலகளாவி பொதுவான சிறுவர்களைத் தாக்கும் நோயாக இருந்து வந்தது. தற்போது தடுப்பூசி கண்டறியப்பட்ட போதிலும் பல வளர்முக நாடுகளில் இந்நோய் காணப்படுகின்றது.
இறகுப்பந்து விளையாட்டினை பிரிட்டானிய இராணுவ வீரர்கள் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இங்கிலாந்தில் அறிமுகம் செய்தனர். இவ்விளையாட்டினை 1873 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் ப்யூபர்ட் பிரபுவின் கிராமப் பகுதியான “பாட்மிண்டன்” (Badminton) எனும் இடத்தில் ஆடப்பட்டதால் இந்த விளையாட்டை ஆங்கிலத்தில் “பாட்மிண்டன்” என்று அழைத்தனர். இது ஒரு மட்டைப் பந்தாட்ட (racquet sport) வகை விளையாட்டு.
மருத்துவ சோதனையில், ஒரு நோயானது நோயை உருவாக்கும் பண்பு கொண்ட வைரசு, பக்டீரியா, பூஞ்சை, புரோட்டோசோவா, மற்றும் பல்கல ஒட்டுண்ணிகள் போன்ற உயிரினங்களின் காரணமாக ஏற்படுகிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டால், அந்நோய் தொற்றுநோய் என அழைக்கப்படுகிறது. இந்நோய்க்காரணிகள் (pathogen) விலங்குகளிலும், தாவரங்களிலும் நோயை ஏற்படுத்தலாம். தொற்றுநோயானது ஒரு குறிப்பிட்ட இனத்துக்குள்ளேயோ அல்லது ஓர் இனத்திலிருந்து, வேறொரு இனத்துக்கோ கடத்தப்படலாம்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (சுருக்கமாக ஆர்சிபி என்று அழைக்கப்படுகிறது) என்பது கர்நாடகாவின் பெங்களூர் நகரை அடிப்படையாகக் கொண்ட உரிமைக்குழுத் துடுப்பாட்ட அணியாகும். இது 2008ஆம் ஆண்டு யுனைடெட் ஸ்பிரிட்ஸ் என்ற நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. அந்நிறுவனத்தின் பிரபல மதுபான வகையான ராயல் சேலஞ்ச் என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த அணிக்குப் பெயரிடப்பட்டது.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபாசாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது.
இந்திய மக்களவைத் தொகுதிகள் (Lok Sabha Contituencies of India) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்களை மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்க ஏதுவாக வரையறுக்கப்பட்ட பகுதிகளாகும். இந்தியாவில் மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. தற்போது 543 தொகுதிகள் உள்ளன, அதிகபட்ச இடங்கள் 550 வரை நிரப்பப்படும் (பிரிவு 331-க்கு பிறகு 2 இடங்கள் ஆங்கிலோ இந்தியனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனால் 104 வது அரசியலமைப்பு திருத்தத்தின்படி 331 வது பிரிவு சன்சாத் மூலம் செல்லாது, இந்த திருத்தத்திற்கு முன் அதிகபட்ச இடங்கள் 552 ஆக இருக்கும்) இந்திய அரசியலமைப்பில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள மக்களவையின் அதிகபட்ச அளவு 552 உறுப்பினர்களாகும், இதில் 28 மாநிலங்களின் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களும், 8 ஒன்றியப் பகுதி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் 19 உறுப்பினர்களும் அவர்களது மக்கள்தொகையின் அடிப்படையில் உள்ளனர்.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
கலித்தொகை சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது நூலாகும். பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூலான கலித்தொகையில் ஓசை இனிமையும், தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் சிறப்பான அமைப்புகளால் அமைந்த கலிப்பாவினால் சிவனைப் பற்றிய கடவுள் வாழ்த்துப் பாடல் ஒன்று உட்பட பாடப்பட்ட 150 பாடல்கள் உள்ளன. அப்பாடல்களை அடி எல்லை நோக்கில் ஆராயும் போது குறைந்த அடி எல்லையாக 11 அடிகள் கொண்ட பாடல்களும் உயர்ந்த அடி எல்லையாக 80 அடிகள் கொண்ட பாடல்களும் காணப்படுகின்றன.
கபடி அல்லது சடுகுடு அல்லது பலிஞ்சடுகுடு என்று அழைக்கப்படும் விளையாட்டு தமிழ்குடிகளால் பல காலமாக, விளையாடப்படும் தமிழர் விளையாட்டுகளுக்குள் ஒன்று. சல்லிக்கட்டிற்கு (ஏறு தழுவுதல்) தயாராகும் முன் தமிழர்கள் செய்யும் பயிற்சியே கபடி என்ற பெயரால் பல காலமாக விளையாடப்பட்டு வருகிறது. கபடி என்ற பெயரும் தமிழ்ப்பெயராக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்
குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப் பெயர் குறிக்கிறது.
பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவும் உண்டு. அறம், பொருள், இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்களில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன. உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற பிரிவின் கீழ் வருவன.
ஜாகுவார் (Jaguar)(பேந்தீரா ஒன்கா) என்பது அமெரிக்காக்களைக் தாயகமாகக் கொண்ட பெரும்பூனை இனமாகும். இது சிங்கம் மற்றும் புலிக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரும்பூனை இனமாக உள்ளது. இதன் தற்போதைய வாழ்விடமானது மத்திய அமெரிக்காவில் பெரும்பான்மையாக மெக்சிகோவிலிருந்து பராகுவேவிற்குத் தெற்குப் பகுதி மற்றும் வடக்கு அர்ஜென்டினா வரையிலும் உள்ளது.
ஒலிம்பிக்கு விளையாட்டுகள் (Olympic Games அல்லது Olympics) என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் மாற்றி மாற்றி பல்வேறு விளையாட்டுகளுக்கு நடத்தப்படும் அனைத்துலகப் போட்டி ஆகும். இதில் ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கு பெறுகின்றனர். உலகின் முதன்மையான விளையாட்டுப் போட்டியாகக் கருதப்படும் ஒலிம்பிக்கில் 200 நாடுகளுக்கு மேல் கலந்து கொள்கின்றன.
தமிழ் மாதங்கள் சித்திரை முதல் பங்குனி முடிய பன்னிரண்டு ஆகும். உண்மையில் இவை, இந்தியாவில் மட்டுமின்றி இந்தியாவுக்கு வெளியிலும் பல ஆசிய நாடுகளிலும் கூட இன்றும் சமயம் மற்றும் மரபு சார்ந்த தேவைகளுக்காகப் புழக்கத்திலுள்ள இந்துக் காலக் கணிப்பு முறையை அடிப்படையாகக் கொண்டதே. இந்துக் காலக் கணிப்பு முறை இன்று புழக்கத்திலுள்ள பகுதிகளிலெல்லாம் ஒரே விதமாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை.
நீளம் தாண்டுதல் (இலங்கை வழக்கு: நீளப்பாய்ச்சல் அல்லது நீளம் பாய்தல்) என்பது ஒரு தடகள விளையாட்டு ஆகும். இதில் விளையாட்டு வீரர் ஒருவர் ஓடி வந்து ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து தனது உடல்வலு, வேகம் ஆகியவற்றைப் பயன்படுத்தி நீண்ட தூரத்தைத் தாண்டிப் பாய முயற்சிப்பார். பாய்வதற்கான இடத்தில் செவ்வக வடிவிலான ஒரு குழி வெட்டப்பட்டு அதில் மணல் நிரப்பப்பட்டிருக்கும்.
தைவான் அல்லது தாய்வான் (Taiwan), அதிகாரபூர்வமாக சீனக் குடியரசு (Republic of China), கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு தீவு நாடாகும். முன்னர் முழுச் சீனாவினதும் அரசாக இருந்து சீன உள்நாட்டு யுத்தம் காரணமாக சீனப் பெருநிலப்பரப்பின் ஆட்சியை சீன மக்கள் குடியரசிடம் இழந்தது. 1940 களின் பிறகு சீன குடியரசு, தாய்வான் அத்துடன் பெங்க்ஹு, கின்மேன், மாட்சு உட்பட சில தீவுக்கூட்டங்களை மட்டுமே ஆட்சி செய்து வருகிறது.
எறிபந்தாட்டம் ஆடு௧ளம் (hand ball) 7 பேர் ஒரு அணிக்கு என பந்தை கைகளால் கையாண்டு ஆடப்படும் ஒரு விளையாட்டு ஆகும். காற்பந்தாட்டம் போன்று பந்தை ஒரு இலக்கு கம்பத்துக்குள் இடவேண்டும், ஆனால் கால்களால் அல்லாமல் கைகளால் பந்தை கையாடி பந்தை இலக்கு கம்பத்துக்குள் போட வேண்டும். ஒருவர் பந்தை 3 வினாடிகளுக்கு மேல் கையில் வைத்திருக்க முடியாது.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டுச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
பறம்பு மலை 10°14'38.44"N சங்க காலத்தில் முல்லைக்குத் தேரீந்த வள்ளல் பாரி வாழ்ந்த மலையாகும். இம்மலை கபிலர் முதலான புலவர்களால் பாடப்பெற்ற புகழுடையதாகும். சங்க காலத்தில் பறம்பு மலை எனவும், பின்னர் திருநெலக்குன்றம் எனவும் சமய இலக்கியங்களில் திருக்கொடுங்குன்றம் எனவும், பெயர் பெற்ற இம்மலை தற்போது பிரான்மலை எனவும் வழங்கப்படுகிறது.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்:பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
12ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு உருவானபோது, விஜயநகரப் பேரரசர்கள் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளுக்கு தளபதிகளை அரசப் பிரதிநிதிகளாய் அமர்த்தி ஆட்சி செய்தனர். தொடக்க காலத்தில் இப்பகுதிகள் விஜயநகரப் பேரரசுக்கு அடங்கியிருந்தன விஜயநகரப் பேரரசு பலமிழந்தபோது, தங்கள் ஆட்சிப்பகுதிகளில் தங்களைப் பலப்படுத்திக்கொண்டு பேரரசிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டனர். செஞ்சி, காளஹஸ்தி, தஞ்சாவூர், மதுரைஆகிய நகரங்களை தலைநகராக் கொன்டு நாயக்கர் ஆட்சி ஏற்பட்டது.
மணிமேகலை ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்களுள் ஒன்று. இக்காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார்.மணிமேகலை காப்பியத்தில் அடி இணையும், அதன் வழிபாடும், வேறு கடவுள்களின் வழிபாடும் இருக்கும் நிலையில், அஃது ஒரு மகாயான காப்பியமாகவே இருக்கமுடியும். மேலும், மகாயான பௌத்தமானது இல்லறத்தையும், துறவறத்தையும் வலியுறுத்தும் நிலையிலும், சிலப்பதிகாரமானது இல்லறத்தையும், மணிமேகலை காப்பியம் துறவறத்தையும் வலியுறுத்துவதாலும், இவை இரட்டைக் காப்பியங்கள் ஆகும்.
கால்பந்து என்பது ஒரேமாதிரியான பலகுழு விளையாட்டுக்களின் பெயர், அவை அனைத்தும் பந்தை கால்களைக்கொண்டு உதைத்து கோலைப் பெற (வெவ்வேறு கோணங்களில்) முயற்சிக்கும் செயலில் ஈடுபடுகின்றன. சங்கக் கால்பந்து என்பது உலக அளவில் இந்த விளையாட்டுக்களில் மிகவும் பிரபலமானது, மேலும் பொதுவாக வெறும் "கால்பந்து" அல்லது "சாக்கர்" என்று அறியப்படுகின்றது. இருப்பினும் கால்பந்து என்ற வார்த்தை கால்பந்து வடிவத்தில் உள்ள அனைத்து விளையாட்டிற்கும் பொருந்துகின்றது, இது உலகத்தின் ஒவ்வொரு குறிப்பிட்ட பகுதியிலும் மிகவும் பிரபலமானது.
முகம்மது நபியின் மதீனா வாழ்க்கை
முகம்மது நபியின் மதீனா வாழ்க்கை இசுலாமிய இறைத்தூதர் முகம்மது நபி மக்கா நகரிலிருந்து மதீனா நகருக்கு ஹிஜ்ரத் செய்து சென்றபின் 622 இல் இருந்து தொடங்கியது.