The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
தமிழ் (Tamil language) தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024
இந்தியாவின் 18 ஆவது மக்களவைக்கான தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 அன்று நடக்கிறது. தேர்தல் முடிவுகள் ஜுன் 4 அன்று வெளியிடப்படும்.
அண்ணாமலை குப்புசாமி (Aṇṇāmalai kuppusāmy) ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் காவல்துறை அதிகாரியும், தமிழ்நாட்டின் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவரும் ஆவார். இவர் தமிழக பாஜக தலைவராக, தேசியத் தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டாவால் 8 சூலை 2021 அன்று நியமிக்கப்பட்டார். இந்தியப் பொதுத் தேர்தல் 2024-ல் கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
திருக்குறள், சுருக்கமாகக் குறள் (ஆங்கிலம்: Tirukkuṟaḷ), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், காமம் (அல்லது இன்பம்) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் என்பது இந்திய கிரிக்கெட் வாரியத்தால் தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரின் ஹைதராபாத் உரிமைக்குழுவின் பெயராகும். அணியின் தலைவராக சோஃப்த் ஆப்ரிக்கா நாட்டின் எய்டன் மார்க்ரம் மற்றும் அணியின் பயிற்றுவிப்பாளராக பிரைன் லாரா ஆகியோர் செயல்படுகின்றனர்.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) கவிஞரும், எழுத்தாளரும், இதழாசிரியரும், விடுதலைப் போராட்ட வீரரும் சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
இந்திய சோதிடத்தில் பிரீதி என்பது, பஞ்சாங்க உறுப்புக்களுள் ஒன்றான "யோகம்" என்பதனுள் அடங்கும் 27 யோகங்களுள் இரண்டாவது ஆகும். இராசிச் சக்கரத்தின் தொடக்கப் புள்ளியில் இருந்து 13° 20' தொடக்கம் 26° 40' பிரீதி யோகத்துக்கு உரியது. சூரியன், சந்திரன் ஆகிய கோள்களின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை இந்தக் கோணத்தினூடாக அதிகரிப்பதற்கு எடுக்கும் நேரத்துக்குரிய யோகம் "பிரீதி" ஆகும்.
உயிரியியலிலும், சூழ்நிலையியல் அல்லது இயற்கை அறிவியலிலும் (ecology), ஓர் உயிரினம் என்பது நிலம், நீர், காற்றில் காணப்படும் உயிர் வாழும் பண்புடைய அனைத்து வகை நுண்ணுயிர்கள், தாவரங்கள், பூச்சிகள், விலங்குகள் போன்றவற்றைக் குறிக்கும். வாழும் உயிர்த்தொகுதிகளனைத்தும் உயிரினங்களாகும். இதுவரை 'உயிர்' என்ற சொல்லுக்கான முறையான வரைவிலக்கணம் வழங்கப்படவில்லை.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
உலகளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6000 இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
தினகரன் ஒரு தமிழ் நாளிதழ் ஆகும். இது சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் இருந்து பதிப்பிக்கப்படுகிறது. பல தென்னிந்திய மொழிகளில் ஒளிபரப்புச் சேவையை நடத்திவரும் சன் குழுமத்தினால் வெளியிடப்படும் இந்த நாளிதழ், ஏ.பி.சி என்னும் சுருக்கப் பெயரால் அழைக்கப்படும் ஆடிட் பீரோ ஆஃப் சர்க்குலேஷன் என்னும் நிறுவனத்தின் ஆய்வுகளின்படி, 2006 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் முதல் தினகரன், 9 இலட்சம் பிரதிகளுக்கும் மேல் நாள்தோறும் விற்பனையாவதாகத் தெரிகிறது.தினகரன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) முன்னாள் தலைவர்களில் ஒருவரும், தினத்தந்தியின் நிறுவனர் சி.
மோகன்தாசு கரம்சந்த் காந்தி (ஆங்கிலம்: Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948) என்பவர் ஒரு இந்திய வழக்குறைஞரும், அன்னிய ஆட்சியை எதிர்த்த தேசியவாதியும், அரசியல் அறனாளரும் ஆவார். இவர் மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார்.
அம்மைக்கட்டு நோய் அல்லது கூகைக்கட்டு அல்லது பொன்னுக்கு வீங்கி மம்ப்ஸ் வைரசினால் ஏற்படும் ஒருவகை நோய் ஆகும். அறிவியல் நூல்களில் இது மம்ப்ஸ் என்றும் குறிப்பிடப்படுகிறது.நோய் முற்தடுப்பு முறைகள் அறியப்படாத காலங்களில் இந்நோய் உலகளாவி பொதுவான சிறுவர்களைத் தாக்கும் நோயாக இருந்து வந்தது. தற்போது தடுப்பூசி கண்டறியப்பட்ட போதிலும் பல வளர்முக நாடுகளில் இந்நோய் காணப்படுகின்றது.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபாசாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.
பாரதிதாசன் (Bharathidasan, 29 ஏப்ரல் 1891 – 21 ஏப்ரல் 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
குர்ஆன் அல்லது திருக்குர்ஆன் (அரபு: القرآن அல்-குர்-ஆன்) இசுலாமியர்களின் புனித நூல் ஆகும். இது முகம்மது நபிக்கு, ஜிப்ரயீல் என்ற வானவர் மூலமாக இறைவனால் சிறுகச் சிறுக சொல்லப்பட்ட அறிவுரைகள், சட்ட திட்டங்கள், தொன்மங்கள், செய்திகளின் தொகுப்பு என்பது இசுலாமியர்களின் நம்பிக்கை. இசுலாமிய சட்ட முறைமையான சரியத் சட்டத்தின் அடிப்படையாகவும் குரான் விளங்குகின்றது.
நாம் தமிழர் கட்சி தமிழ்த் தேசிய, ஈழப் போராட்ட ஆதரவு உடைய, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் செயல்படும் ஓர் அரசியல் கட்சி ஆகும். . இந்தக் கட்சி மே மாதம் 18 ஆம் நாள் 2010 ஆம் ஆண்டில் சீமானால் தொடங்கப்பட்டது. தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் சி.பா.ஆதித்தனார் நடத்தி வந்த "நாம் தமிழர் இயக்கத்தின்" தொடர்ச்சியே சீமானால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி என அறியப்படுகிறது.
முகம்மது நபி அல்லது முகம்மது (Muḥammad, அரபு மொழி: محمد, பிறப்பு பொ.ஊ. 570, இறப்பு 8 சூன் பொ.ஊ. 632 கணிப்பு), அராபியப் பெயர்: அபூ அல்-காசிம் முகம்மது இப்னு அப்தல்லா இப்னு அப்தல்-முத்தலிப் இப்னு ஹாசிம் (Abū al-Qāsim Muḥammad ibn ʿAbd Allāh ibn ʿAbd al-Muṭṭalib ibn Hāshim, ابو القاسم محمد ابن عبد الله ابن عبد المطلب ابن هاشم) என்பவர் மக்கா நகரைச் சேர்ந்தவர்.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டுச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது.
இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்
குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப் பெயர் குறிக்கிறது.
பறம்பு மலை 10°14'38.44"N சங்க காலத்தில் முல்லைக்குத் தேரீந்த வள்ளல் பாரி வாழ்ந்த மலையாகும். இம்மலை கபிலர் முதலான புலவர்களால் பாடப்பெற்ற புகழுடையதாகும். சங்க காலத்தில் பறம்பு மலை எனவும், பின்னர் திருநெலக்குன்றம் எனவும் சமய இலக்கியங்களில் திருக்கொடுங்குன்றம் எனவும், பெயர் பெற்ற இம்மலை தற்போது பிரான்மலை எனவும் வழங்கப்படுகிறது.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்:பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
இந்திய மக்களவைத் தொகுதிகள் (Lok Sabha Contituencies of India) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்களை மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்க ஏதுவாக வரையறுக்கப்பட்ட பகுதிகளாகும். இந்தியாவில் மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. தற்போது 543 தொகுதிகள் உள்ளன, அதிகபட்ச இடங்கள் 550 வரை நிரப்பப்படும் (பிரிவு 331-க்கு பிறகு 2 இடங்கள் ஆங்கிலோ இந்தியனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனால் 104 வது அரசியலமைப்பு திருத்தத்தின்படி 331 வது பிரிவு சன்சாத் மூலம் செல்லாது, இந்த திருத்தத்திற்கு முன் அதிகபட்ச இடங்கள் 552 ஆக இருக்கும்) இந்திய அரசியலமைப்பில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள மக்களவையின் அதிகபட்ச அளவு 552 உறுப்பினர்களாகும், இதில் 28 மாநிலங்களின் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களும், 8 ஒன்றியப் பகுதி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் 19 உறுப்பினர்களும் அவர்களது மக்கள்தொகையின் அடிப்படையில் உள்ளனர்.
தமிழ் மாதங்கள் சித்திரை முதல் பங்குனி முடிய பன்னிரண்டு ஆகும். உண்மையில் இவை, இந்தியாவில் மட்டுமின்றி இந்தியாவுக்கு வெளியிலும் பல ஆசிய நாடுகளிலும் கூட இன்றும் சமயம் மற்றும் மரபு சார்ந்த தேவைகளுக்காகப் புழக்கத்திலுள்ள இந்துக் காலக் கணிப்பு முறையை அடிப்படையாகக் கொண்டதே. இந்துக் காலக் கணிப்பு முறை இன்று புழக்கத்திலுள்ள பகுதிகளிலெல்லாம் ஒரே விதமாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை.
தமிழ்ஒளி (இயற்பெயர்: விசயரங்கம், 21 செப்டம்பர் 1924 – 29 மார்ச்சு 1965) ஒரு தமிழ்க் கவிஞர் ஆவார். பாரதியாரின் வழித் தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கி கவிதைகளைப் படைத்தவர். கவிதைகள் மட்டுமல்லாது கதைகள், கட்டுரைகள், இலக்கியத் திறனாய்வுகள், மேடை நாடகங்கள், குழந்தைப் பாடல்கள் எனப் பல இயற்றியவர்.
தமிழ்ப் புத்தாண்டு (Puthandu அல்லது Tamil New year) தமிழர் புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர். ஒரு தமிழ் ஆண்டு என்பது வானியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் அளவிடப்பட்ட காலத்தைக் கொண்ட காலப்பகுதியாகும்.
பள்ளிக்கூடம், பள்ளி அல்லது பாடசாலை (school) என்பது ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் கீழ் மாணவர்களுக்கு கல்வி வழங்குவதனை நோக்கமாகக் கொண்டு, போதுமான கற்றல் இடம், கற்பித்தல் சூழலுடன் கூடிய கல்வி நிறுவனம் மற்றும் கட்டிடங்களைக் குறிப்பதாகும். பெரும்பான்மையான நாடுகளில் முறையான கல்வி முறைகள் உள்ளன, இது சில இடங்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியாரின் கல்விக் கூடங்களின் மூலம் மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.
அகிம்சை, அல்லது அஹிம்சை () (சமக்கிருதம்: अहिंसा, ஆங்கிலம்: Ahimsa, பாளி: ‘காயப்படுத்தாமை' அல்லது ‘இரக்க உணர்வு' என்று பொருள்படும்) இந்திய சமயங்களில் ஒரு முக்கிய ஒழுக்கத்தைக் குறிக்கிறது.“ஹிம்சை” என்பது ‘காயம்’ அல்லது ‘தீங்கு’ ஆகும். ‘அஹிம்சை’ இதற்கு எதிா்மாறான பொருள் கொண்டது. அதாவது "காயம் ஏற்படுத்தாதீா்கள்", “தீங்கு செய்யாதீா்கள்” என்பது பொருள்.
ஒரு மெய் எழுத்துடன் ஓர் உயிர் எழுத்து சேர்ந்து பிறக்கக்கூடிய எழுத்து உயிர்மெய் எழுத்து ஆகும். எடுத்துக்காட்டு: 'க்' என்னும் மெய்யும் 'அ' என்னும் உயிரும் சேர்வதால் 'க' என்னும் உயிர்மெய் பிறக்கின்றது. இவ்வாறு பன்னிரண்டு உயிர் எழுத்துக்களும் பதினெட்டு மெய் எழுத்துக்களுடன் சேர்வதால் (18 X 12) 216 உயிர் மெய் எழுத்துக்கள் பிறக்கின்றன.
இந்திய தேசிய காங்கிரசு (Indian National Congress; சுருக்கமாக இதேகா பொதுவாக காங்கிரசு கட்சி இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். 1885–இல் தொடங்கப்பட்ட இக்கட்சி இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றது. இக்கட்சியின் அமைப்புகளில் 15 மில்லியன் இந்திய மக்களும் ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து நாடு முழுவதும் நடந்த போராட்டங்களில் 70 மில்லியன் மக்களும் பங்கெடுத்தனர்.
யூடியூப் அல்லது வலையொளி (YouTube) என்பது ஓர் அமெரிக்க நாட்டு நிகழ்நிலைக் காணொளிப் பகிர்வு மற்றும் சமூக ஊடகத் தளமாகும். இது சாட் ஹர்லி, ஸ்டீவ் சென் மற்றும் ஜவேத் கரீம் ஆகியோரால் பிப்ரவரி 2005 இல் தொடங்கப்பட்டது. உலகம் முழுவதும் வலையொளிப் பயனர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு பில்லியன் மணிநேரக் காணொளிகளைக் காணுகிறார்கள்.
ஸ்ரீலீலா (Sreeleela; பிறப்பு: சூன் 14, 2001) என்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு அமெரிக்க நடிகை ஆவார். இவர் முக்கியமாக கன்னடம், தெலுங்கு திரைப்படங்களில் தோன்றுகிறார். இவர் 2019 இல் 'கிஸ்' என்கிற கன்னடமொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், சிறந்த பெண் நடிகைக்கான விருதை தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளில் வென்றார்.
மனித உரிமை என்பது, ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கப் பெறவேண்டிய மற்றும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும். மனிதன் என்றாலே அவன் இவைகளால் வாழ முடியாது என கருதப்படும் அடிப்படையான தேவைகளை உள்ளடக்கிய உரிமைகள் இதில் சாரும். இந்த உரிமைகளை "மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளாக"மனித உரிமைகள் என்றால் என்ன?கருதப்படுகின்றன.
பிறப்பொலியியலில் (articulatory phonetics), மெய்யொலி (Consonant) என்பது, பேச்சு மொழியின் ஒரு ஒலிவகை ஆகும். நெஞ்சிலிருந்து வரும் காற்று வாய்ப்பகுதியில் தற்காலிகமாகத் தடைப்பட்டு வெளியேறும்போது மெய்யொலிகள் உருவாகின்றன. மெய்யொலிகள், அடைப்பொலி, மூக்கொலி, உரசொலி, மருங்கொலி, ஆடொலி, வருடொலி, தொடரொலிஎனப் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)
சில்லுனு ஒரு காதல் (Chillunu Oru Kadhal) 2006ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சூர்யா, ஜோதிகா, பூமிகா சௌலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவும் உண்டு. அறம், பொருள், இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்களில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன. உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற பிரிவின் கீழ் வருவன.
சர்வோதயக் கல்வி, வார்தா கல்வி, ஆதாரக் கல்வி, புதிய கல்வி (Nai Talim (இந்தி: नई तालीम, உருது: نئی تعلیم) என்பது அறிவு மற்றும் வேலை ஆகியவை தனித்தனியானவை அல்ல என்று குறிப்பிடுகின்ற ஒரு கொள்கை ஆகும். காந்தியடிகள் இந்தக் கல்விமுறையை ஊக்குவித்தார்.இந்த சொற்றொடர் 'அனைவருக்கும் அடிப்படை கல்வி' என மொழிபெயர்க்கப்படுகிறது. இருப்பினும், இது பல பொருள்களைக் கொண்டதாக உள்ளது.
தமிழிசை சௌந்தரராஜன் (Tamilisai Soundararajan, பிறப்பு: சூன் 2, 1961) ஓர் இந்திய அரசியல்வாதியும், தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநரும் ஆவார். 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி 16 இல் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராகக் கூடுதல் பொறுப்பேற்று அப்பதவியில் இருக்கிறார்.இவர் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகவும் பதவி வகித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தனின் மகளான இவரும், இவரது கணவர் சௌந்தரராஜன் தொழில்முறை மருத்துவர்கள்.
மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni), சுருக்கமாக எம் எஸ் தோனி என்று (பிறப்பு: 7 சூலை, 1981) அறியப்படும் இவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் சர்வதேசத் துடுப்பாட்ட வீரரும் முன்னாள் தலைவரும் ஆவார். இவர் 2007 முதல் 2016 ஆம் ஆண்டு வரை வரையிட்ட நிறைவுப் போட்டிகளுக்கும் , 2008 முதல் 2014ஆம் ஆண்டு வரை தேர்வுப் போட்டிகளிலும் இந்திய அணியின் தலைவராக இருந்தார். இவரின் தலைமையில் 2007 ஐசிசி உலக இருபது20 2007-08 பொதுநலவய போட்டித் தொடர், 2010மற்றும் 2016 ஆசியக் கோப்பை, 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை மற்றும் 2013 ஐசிசி வாகையாளர் ஆகிய கோப்பைகளை இந்திய அணி வென்றுள்ளது.