The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
அண்ணாமலை குப்புசாமி (Annamalai Kuppusamy) ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் காவல்துறை அதிகாரியும் ஆவார். இவர் தமிழ்நாட்டின் பாரதிய சனதா கட்சியின் மாநிலத் தலைவராக, தேசியத் தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டாவால் 8 சூலை 2021 இல் நியமிக்கப்பட்டார். 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் பாரதிய சனதா கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டார்.
தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின் தென் முனையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படும் இம்மாநிலமானது, பரப்பளவில் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாக மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது. உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பேசும் தமிழர் வாழும் பகுதியே தமிழ்நாடு என வழங்கப்படுகிறது.
தமிழ் (Tamil language) தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
திருக்குறள், சுருக்கமாகக் குறள் (ஆங்கிலம்: Tirukkuṟaḷ), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், காமம் (அல்லது இன்பம்) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) ஒரு கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். கவிதையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு "பாரதி" என்ற பட்டம் வழங்கப்பட்டது. நவீன தமிழ் கவிஞர்களின் முன்னோடியாக திகழ்ந்த இவர், சிறந்த தமிழ் இலக்கியவாதிகளில் ஒருவராக கருதப்படுகிறார்.
அன்னையர் நாள் (Mothers Day) என்பது ஒரு குடும்பம் அல்லது தனிநபரின் தாய், தாய்மை, தாய்வழி பிணைப்புகள் மற்றும் சமூகத்தில் தாய்மார்களின் தாக்கம் ஆகியவற்றைப் பெருமைப்படுத்தும் ஒரு கொண்டாட்டமாகும். இது உலகின் பல பகுதிகளில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது, பொதுவாக மார்ச் அல்லது மே மாதங்களில். இது தந்தையர் தினம், உடன்பிறந்தோர் தினம் மற்றும் தாத்தா பாட்டி தினம் போன்ற குடும்ப உறுப்பினர்களை பெருமைப்படுத்தும் அதே போன்ற கொண்டாட்டங்களை நிறைவு செய்கிறது.
அட்சய திருதியை (அல்லது அக்ஷய தீஜ்) என அறியப்படுவது இந்து மற்றும் சமணர்களின் புனித நாள் ஆகும். அது தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும்.முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாள் அட்சய திருதியை ஆகும். இந்து மதத்தில் குறிப்பிடப்படும் காக்கும் கடவுளான திருமாலால் ஆளப்படுவதாகும்.
பத்ம பூசண் (Padma Bhushan) என்பது இந்திய அரசால் வழங்கப்படும் ஒரு குடியியல் விருது (Civilian Award) ஆகும். இது முதன் முதலில் ஜனவரி 2, 1954 ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசுத் தலைவரால் ஏற்படுத்தப்பட்டது. இது இந்திய அரசால் வழங்கப்படும் விருதுகளில் பாரத ரத்னா, பத்ம விபூசண் ஆகிய உயரிய விருதுகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது உயர் விருதாகும்.
பாரதிதாசன் (Bharathidasan, 29 ஏப்ரல் 1891 – 21 ஏப்ரல் 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
உலகளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6000 இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) ஒரு இந்திய சட்ட வல்லுநர், பொருளாதார நிபுணர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் அரசியல் தலைவர் ஆவார். இவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்று பின்னர் இந்திய அரசியலமைப்பு வரைவு குழுவிற்கு தலைமை தாங்கினார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கி தீண்டாமை ஒழியப் போராடினார்.
பிள்ளைத்தமிழ் என்பது தமிழ் இலக்கியத்தில் வழங்கும் பிரபந்த நூல் வகைகளுள் ஒன்று. புலவர்கள் தாம் விரும்பிய தெய்வங்கள், சமயாசாரியர்கள், புலவர் பெருமக்கள், ஆதீனகர்த்தர், அரசர், உபகாரிகள், அவர் அவர்கட்கு உகந்தவர்கள், ஆகியோரைக் குழந்தையாக உருவகித்துக் கற்பனை பல அமையப் பாடப்படுவது பிள்ளைத்தமிழாகும். குழந்தையாகக் கொண்டது பாவனையே ஆகும்.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டுச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
யூடியூப் அல்லது வலையொளி (YouTube) என்பது ஓர் அமெரிக்க நாட்டு நிகழ்நிலைக் காணொளிப் பகிர்வு மற்றும் சமூக ஊடகத் தளமாகும். இது சாட் ஹர்லி, ஸ்டீவ் சென் மற்றும் ஜவேத் கரீம் ஆகியோரால் பிப்ரவரி 2005 இல் தொடங்கப்பட்டது. உலகம் முழுவதும் வலையொளிப் பயனர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு பில்லியன் மணிநேரக் காணொளிகளைக் காணுகிறார்கள்.
சவுக்கு சங்கர் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் விமர்சகரும், ஊடகவியலாளரும் ஆவார். அரசியல், சமூக மட்டத்தில் ஏற்படும் பல்வேறு சம்பவங்களைப் பொதுவெளிக்குக் கொண்டுவந்து விவாதப் பொருளாக்கியுள்ளார். சவுக்கு டாட் நெட், சவுக்கு ஆன்லைன் உள்ளிட்ட தளங்களை நடத்திப் பின்னர் சவுக்கு மீடியா என்கிற ஊடகத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார்.
கோயம்புத்தூர் (Coimbatore, சுருக்கமாக கோவை) தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள முக்கிய பெருநகரங்களில் ஒன்றாகும். இது மேற்கு தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டு, நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்நகரமானது மக்கள்தொகை அடிப்படையில் சென்னைக்குப் பிறகு தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய மற்றும் இந்தியாவின் பதினாறாவது பெரிய மாநகரம் ஆகும்.
கௌதம புத்தர் (Gautama Buddha) என்பவர் கி.மு 563க்கும், கி.மு 483க்கும் இடையில் வாழ்ந்தவர். இவரை அடிப்படையாகக் கொண்டு பௌத்த சமயம் உருவாக்கப்பட்டது. இவர் கிறித்து பிறப்பதற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பே வாழ்ந்திருக்கலாம் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்தக்கூடிய, ஒரு பழமையான பௌத்த வழிபாட்டுத் தலத்தை தாம் கண்டறிந்துள்ளதாக நேபாளத்தில் உள்ள அகழ்வாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை (C. N. Annadurai, 15 செப்டம்பர், 1909 – 03 பெப்ரவரி, 1969) ஓர் இந்திய அரசியல்வாதியும், மதராஸ் மாநிலத்தின் கடைசி முதல்வரும், தமிழகத்தின் முதலாவது முதலமைச்சருமாவார். இவர் அறிஞர் அண்ணா எனவும் பேரறிஞர் அண்ணா எனவும் அழைக்கப்படுகிறார். இவர் இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவரும், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார்.
காமராசர் (ஆங்கில மொழி: Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975) ஒரு இந்திய விடுதலை போராட்ட ஆர்வலர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் 13 ஏப்ரல் 1954 முதல் 2 அக்டோபர் 1963 வரை ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநில சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். இவர் 1964 முதல் 1967 வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக பணியாற்றினார்.
சாய் சுதர்ஷன் என்றும் அழைக்கப்படும் பரத்வாஜ் சாய் சுதர்சன் (பிறப்பு 15 அக்டோபர் 2001) ஒரு இந்தியத் துடுப்பாட்ட வீரர், தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் விளையாடியுள்ளார். அவர் உள்நாட்டுத் துடுப்பாட்டத்தில் தமிழகத்திற்காகவும், இந்தியன் பிரீமியர் லீக்கில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காகவும் விளையாடுகிறார். 2019/20 இல் பாளையம்பட்டி ராஜா கிண்ணப் போட்டிகளில், 52.92 சராசரியில் 635 ரன்களுடன் ஆழ்வார்பேட்டை துடுப்பாட்டக் கழகத்தின் முன்னணி ஆட்டக்காரராக இருந்தார்.
வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் (Thiruvarutprakasa Vallalār Chidambaram Ramalingam, 5 அக்டோபர் 1823 – 30 சனவரி 1874) இந்திய நாட்டில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தை சேர்ந்த ஓர் இந்து சமய ஆன்மீகவாதி ஆவார். "எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே" என்பதைக் குறிக்கும் வண்ணம், இவர் தோற்றுவித்த மார்க்கத்திற்கு "சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்க சங்கம்" என்று பெயரிட்டார். சைவ சமயத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்த வள்ளலாரை, பழமைவாதிகள் கடுமையாக எதிர்த்தனர்.
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்:பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
லெவொஃப்லோக்சசின் என்பது ஃப்ளோரோக்வினொலோன் மருந்து வகுப்பைச் சேர்ந்த செயற்கையான வேதியல் உணர்விகள் நோய்க்கிருமி கட்டுப்படுத்தி ஆகும். மேலும் இது தீவிர அல்லது உயிருக்கு-அச்சமூட்டும் பாக்டீரியக் கிருமித் தொற்றுகள் அல்லது மற்ற நோய்க்கிருமி கட்டுப்படுத்தி வகுப்புகளினால் கட்டுப்படுத்த முடியாதுள்ள பாக்டீரியக் கிருமித் தொற்றுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இது மிகவும் பொதுவான லெவாக்வின் மற்றும் டாவனிக் போன்ற பல்வேறு வணிகப் பெயர்களின் கீழ் விற்பனை செய்யப்படுகிறது.
2024 இந்தியாவின் பொதுத் தேர்தல் பதினெட்டாவது மக்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2024 ஏப்ரல் 19 முதல் 2024 சூன் 1 வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ள இத்தேர்தலின் முடிவுகள் 2024 சூன் 4 அன்று அறிவிக்கப்படும். ஏறத்தாழ 97 கோடி மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள இந்த தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப் பெரிய தேர்தல் நடப்பாகும்.
கருத்தரிப்பு என்பது, பாலூட்டிகளில், கருக்கட்டல் நிகழ்வின்போது உருவாகும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அடுத்த சந்ததிக்கான உயிரி, முளைய விருத்தி மூலம் முளையமாக விருத்தியடைந்து, பின்னர் முதிர்கரு நிலையில் குழந்தை பிறப்புவரை, பெண்களின் இனப்பெருக்க உறுப்பான கருப்பையில் பதிந்து, தாங்கிக் கொள்ளப்படும் நிலையாகும். இந்தக் கட்டுரையில் மனிதரில் நிகழும் கருத்தரிப்பே விரிவாக ஆராயப்படுகின்றது. மனிதரில், பருவமடைந்த ஆரோக்கியமான பெண்களுக்கு தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் சினை முட்டைகள் உற்பத்தியாகும்.
விட்டலர், விதோபர், அல்லது பாண்டுரங்கன், இந்து சமயத்தினரின் வைணவ சமயக் கடவுளான கிருஷ்ணர் ஆவார். மஹராஷ்டிர மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில், பந்தர்ப்பூர் எனும் பண்டரிபுரம் என்ற நகரத்தில் பாயும் சந்திரபாகா ஆற்றின் கரையில் புகழ்பெற்ற பண்டரிபுரம் விட்டலர் கோயிலிலின் மூலவர் பகவான் விட்டலர் ஆவார். மராத்திய மொழியில் விட்டலர் என்பதற்கு செங்கல் என்று பொருள்.
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் (Thirugnana Sambandar, தமிழில் அறிவுசேரர் என்று பொருள் தரும்), அல்லது சம்பந்தர், என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் முதலில் வைத்து எண்ணப்படும் நால்வருள் ஒருவராவார். இவருடைய வேறு பெயர்கள் சம்பந்தர், காழி வள்ளல் என்பதாகும்.
ஒரு உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள் என்பது மற்ற மூலக்கூறுகளின் உயிர் வளியேற்றத்தை தாமதிக்கச்செய்கின்ற அல்லது தடுக்கின்ற திறனுள்ள மூலக்கூறு ஆகும். உயிர் வளியேற்றம் என்பது எதிர்மின்னிகளை (எலக்ட்ரான்) ஒரு கருப்பொருளிலிருந்து உயிர் வளியேற்றத் துணைப்பொருளுக்கு மாற்றச்செய்யும் ஒரு வேதியியல் எதிர்வினை. உயிர் வளியேற்ற எதிர்வினைகள் உயிரணுக்களைச் சேதப்படுத்துகின்ற தொடர் விளைவுகளைத் தொடங்கி வைக்கின்ற தனி உறுப்புகளை உருவாக்கக் கூடியவை.
பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாகக் கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் காப்பிய தலைவராகக் கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலை சேக்கிழார் விவரிக்கிறார்.
கார்லசு புச்திமோன் (Carles Puigdemont i Casamajó; பிறப்பு: 29 திசம்பர் 1962) எசுப்பானியாவின் காத்தலோனியா தன்னாட்சிப் பகுதியின் தலைவர் ஆவார். 2017-ஆம் ஆண்டில் காத்தலோனியா தன்னாட்சிப் பிரதேசத்திற்கு நடைபெற்ற தேர்தலில் கார்லசு புச்திமோனின் அரசியல் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இவர் காத்தலோனியா தன்னாட்சிப் பிரதேசத்தை தனி நாடாகக் கோரும் போராட்ட இயக்கத்தின் தலைவரும் ஆவார்.
புற்றுநோய் (cancer) என்பதுக் கேடுதரும் உடற்கட்டிகளால் ஏற்படும் பல நோய்களின் பொதுவான ஒரு பெயர் ஆகும். இயல்புக்கு மாறாகக் கட்டுப்பாடற்று உயிரணுக்கள் பிரிந்து பெருகுவதால் இழையங்களில் ஏற்படும் மிகைப்பெருக்கம், அருகிலுள்ள இழையங்களினூடாக ஊடுருவி, ஏனைய உடற்பகுதிகளுக்கும் பரவும் ஆற்றலைக் கொண்டிருப்பின் அவை கேடுதரும் கட்டிகள் அல்லது புற்று நோய் எனப்படும். இவை உடலில் இருக்கும் இடத்தைப் பொறுத்து என்ன நோய் என்று பெயரிடப்படுகின்றது.
மணிமேகலை ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்களுள் ஒன்று. இக்காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார்.மணிமேகலை காப்பியத்தில் அடி இணையும், அதன் வழிபாடும், வேறு கடவுள்களின் வழிபாடும் இருக்கும் நிலையில், அஃது ஒரு மகாயான காப்பியமாகவே இருக்கமுடியும். மேலும், மகாயான பௌத்தமானது இல்லறத்தையும், துறவறத்தையும் வலியுறுத்தும் நிலையிலும், சிலப்பதிகாரமானது இல்லறத்தையும், மணிமேகலை காப்பியம் துறவறத்தையும் வலியுறுத்துவதாலும், இவை இரட்டைக் காப்பியங்கள் ஆகும்.
லெட் செப்பெலின் ஒரு ஆங்கில ராக் இசைக்குழு, இது 1968 ஆம் ஆண்டில் ஜிம்மி பேஜ் (கிட்டார்), ராபர்ட் பிளாண்ட் (வோகல், ஹார்மோனிகா), ஜான் பால் ஜோன்சு (பாஸ் கிட்டார், கீபோர்ட், மான்டோலின்) மற்றும் ஜான் போன்ஹாம் (டிரம்ஸ்) ஆகியோரால் உருவாக்கப்பட்டது. தங்களுடைய கனமான கிட்டார்-ஒருங்கிணைந்த ஒலியுடன், லெட் செப்பெலின் ஹெவி மெட்டல் மற்றும் ஹார்ட் ராக் இசையின் முன்னோர்கள் என்று பொதுவாக குறிப்பிடப்படுகிறார்கள், என்றாலும் இசைக்குழுவின் தனித்தன்மையிலான பாணி பல்வேறு மூலங்களிலிருந்து பெறப்பட்டு ஏதாவது ஒரு பாணியில் விஞ்சி நிற்கிறது. ப்ளூஸ் மற்றும் ஃபோக் பாணிகளின் இடையீடு செய்த அவர்களின் ராக் உட்செலுத்துதலில் உள்சேர்க்கப்பட்டுள்ளவை ராக்கெபில்லி, ரெக்கெ, சோல், ஃபங்க், மேலும் கண்ட்ரியும் கூட இதில் அடங்கும்.
முகியல்தீன் முகம்மது (Muhi al-Din Muhammad) (அண். 1618 – 3 மார்ச்சு 1707) என்பவர் ஆறாவது முகலாயப் பேரரசர் ஆவார். இவர் பொதுவாக ஔரங்கசீப் (பாரசீக உச்சரிப்பு: அவ்ரங்செப், பொருள். அரியணையின் ஆபரணம்) என்ற பெயராலும், இவரது பட்டப் பெயரான முதலாம் ஆலம்கீர் (பொருள். உலகத் துரந்தரர்) என்ற பெயராலும் அறியப்படுகிறார். இவர் 1658 முதல் 1707ஆம் ஆண்டில் தான் இறக்கும் வரை ஆட்சி புரிந்தார்.
மாதம்பட்டி ரங்கராஜ் (Madhampatty Rangaraj) என்பவர் இந்திய சமையல் கலைஞர், நடிகர் மற்றும் மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். இந்நிறுவனம் தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் உணவுத் தொடர்பான சேவையைச் செய்கிறது. இவர் மெஹந்தி சர்க்கஸ் (2019) மூலம் நடிகராக அறிமுகமானார், பின்னர் த்ரில்லர் திரைப்படமான பென்குயின் (2020) திரைப்படத்தில் நடித்தார்.
மடோனா (இயற்பெயர் மடோனா லூயிஸெ சிக்கோன் ; ஆகஸ்டு 16, 1958) ஒரு அமெரிக்க இசைக் கலைஞர், நடிகை, மற்றும் தொழிலதிபர் ஆவார். மிச்சிகன், பே சிட்டியில் பிறந்து, மிச்சிகன் ரோசெஸ்டர் ஹில்ஸில் வளர்ந்த இவர், நவீன நடனத் துறைக்காக 1977 ஆம் ஆண்டில் நியூயார்க் நகருக்கு இடம்பெயர்ந்தார். பிரேக்ஃபாஸ்ட் கிளப் மற்றும் எம்மி ஆகிய பாப் இசைக் குழுக்களின் ஒரு உறுப்பினராக இருந்தபின், தனது சொந்த தலைப்புடனான மடோனா என்னும் அறிமுக ஆல்பத்தை 1983 ஆம் ஆண்டில் சைர் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்திற்காக செய்தார்.
கார்கில் போர் (ஆங்கிலம்: Kargil War) அல்லது கார்கில் பிரச்சனை, 1999இல் மே முதல் ஜூலை வரை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில், நடந்த போராகும். இந்த போர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கார்கில் நகரின் அருகில் உள்ள டைகர் மலையில் நடந்தது. கார்கிலை மீட்க இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையான விஜய் நடவடிக்கை என்ற பெயரிலும் இது வழங்கப்படுகிறது.
பிளவுபட்ட மனநோய் (Schizophrenia) என்பது கிரேக்க வேர்களான ஸ்கிஜெயின் ,(σχίζειν, "பிளப்பது") மற்றும் ஃப்ரென், ஃப்ரென்- (φρήν, φρεν-; "மனம்") ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட ஸ்கிசோஃப்ரினியா மெய்யான புறவுலகை உணர்ந்தறிவது ஒலிப்பு: /ˌskɪtsɵˈfrɛniə/ அல்லது skɪtsɵˈfriːniə அதை எடுத்துச் சொல்வது ஆகியவற்றில் ஏற்படும் பிறழ்வு மன நோய்க்கான உளவியல் நோய் கண்டறிதலாகும். உணர்ந்தறிவதில் உண்டாகும் பிறழ்வானது, பார்வை, கேட்கும் திறன், சுவை, நுகர்தல் மற்றும் தொடு உணர்ச்சி ஆகிய ஐந்து புலன்களையும் பாதிக்கலாம். ஆனால், பொதுவாக இது ஒலி கேட்பது போன்ற மனப்பிரமைகள், திரிபுணர்வுப் பிணி (paranoid), பயங்கரமான மருட்சி (delusion) அல்லது ஒழுங்கின்மையான பேச்சு மற்றும் சிந்தனை இவற்றுடன் குறிப்பிடும்படியான சமூக மற்றும் பணி நிமித்தமான செயல்திறன் திரிதல் ஆகியவற்றுடன் வெளிப்படுகிறது.
இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்
குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப் பெயர் குறிக்கிறது.
தரவு பகுப்பாய்வு (Data analysis) என்பது பயனுள்ள தகவல்களைக் கண்டுபிடிப்பதையும் , முடிவுகளைத் தெரிவிப்பதையும் , முடிவெடுப்பதையும் ஆதரவளிப்பதயும் நோக்கமாகக் கொண்டு தரவைச் சீர்படுத்துதல், படிமமாக்குதல் முறைகளை ஆய்வு செய்யும் செயல்முறையாகும். தரவு பகுப்பாய்வு பல கூறுகளையும் அணுகுமுறைகளையும் கொண்டுள்ளது. இது பல்வேறு தொழில்நுட்பங்களைப் பல்வேறு பெயர்களில் உள்ளடக்கியது.
அம்மைக்கட்டு நோய் அல்லது கூகைக்கட்டு அல்லது பொன்னுக்கு வீங்கி மம்ப்ஸ் வைரசினால் ஏற்படும் ஒருவகை நோய் ஆகும். அறிவியல் நூல்களில் இது மம்ப்ஸ் என்றும் குறிப்பிடப்படுகிறது.நோய் முற்தடுப்பு முறைகள் அறியப்படாத காலங்களில் இந்நோய் உலகளாவி பொதுவான சிறுவர்களைத் தாக்கும் நோயாக இருந்து வந்தது. தற்போது தடுப்பூசி கண்டறியப்பட்ட போதிலும் பல வளர்முக நாடுகளில் இந்நோய் காணப்படுகின்றது.
பேரரசர் அக்பர் (Akbar the Great, பாரசீக மொழி: اکبر اعظم, பாரசீக உச்சரிப்பு: அக்பர்-இ-ஆசம், பொருள்: மகா அக்பர்) என அழைக்கப்படும் அபூல் பாத் சலாலுத்தீன் முகம்மது அக்பர் (Abu'l-Fath Jalal-ud-din Muhammad Akbar, 25 அக்டோபர் 1542 – 27 அக்டோபர் 1605), என்பவர் மூன்றாவது முகலாயப் பேரரசர் ஆவார். இவர் 1556 முதல் 1605 வரை ஆட்சி புரிந்தார். இவர் தன் தந்தை உமாயூனுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission- TNPSC) என்பது தமிழக அரசுப் பணிக்குத் தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பெற்ற ஒரு அரசு சார்ந்த அமைப்பு ஆகும். இது இந்தியாவில் மாநில அளவில் உருவாக்கப்பெற்ற முதல் தேர்வாணையமாகும். 1929இல் சென்னை மாகாண சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பெற்ற ஒரு சட்டத்தின் மூலம் ஒரு தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்களை கொண்டு உருவாக்கப்பெற்றது.