The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
காமராசர் (ஆங்கில மொழி: Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975) ஓர் இந்திய விடுதலை போராட்ட ஆர்வலர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் 13 ஏப்ரல் 1954 முதல் 2 அக்டோபர் 1963 வரை ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். இவர் 1964 முதல் 1967 வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார்.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) ஓர் கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். கவிதையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு "பாரதி" என்ற பட்டம் வழங்கப்பட்டது. நவீன தமிழ் கவிஞர்களின் முன்னோடியாகத் திகழ்ந்த இவர், தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
பாரதிதாசன் (Bharathidasan, 29 ஏப்ரல் 1891 – 21 ஏப்ரல் 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
தமிழ் (Tamil language) தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
மணிமேகலை ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்களுள் ஒன்று. இக்காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார்.மணிமேகலை காப்பியத்தில் அடி இணையும், அதன் வழிபாடும், வேறு கடவுள்களின் வழிபாடும் இருக்கும் நிலையில், அஃது ஒரு மகாயான காப்பியமாகவே இருக்கமுடியும். மேலும், மகாயான பௌத்தமானது இல்லறத்தையும், துறவறத்தையும் வலியுறுத்தும் நிலையிலும், சிலப்பதிகாரமானது இல்லறத்தையும், மணிமேகலை காப்பியம் துறவறத்தையும் வலியுறுத்துவதாலும், இவை இரட்டைக் காப்பியங்கள் ஆகும்.
வைணவ சமயத்தின் முதன்மைத் தெய்வமாகிய திருமாலைப் போற்றித் தமிழ்ச் செய்யுட்களால் பாடியவர்கள் ஆழ்வார்கள் ஆவர். தென்மொழியாம் தமிழ் மொழியில் வைணவ இலக்கியங்களை வளர்த்தவர்கள் பரம்பரையில், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (அல்லது) ஆழ்வார் அருளிச்செயல் என்னும் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள பாடல்களைப் பாடிய ஆழ்வார்கள் 12 பேர். அவர்களுள், இறைவனை இறைவனாகக் காணாது, இறைவனோடு உறவுமுறையில் வாழ்ந்ததால் ஆண்டாளையும், இறைவனைப் பாடாது ஆசானைப் பாடினார் என்பதால் மதுரகவியாழ்வாரையும் வேறு வரிசையில் தொகுத்து, ஆழ்வார்கள் பதின்மர் 10 பேர் மட்டுமே எனக் காட்டுவாரும் உண்டு.
திருக்குறள், சுருக்கமாகக் குறள் (ஆங்கிலம்: Tirukkuṟaḷ), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், காமம் (அல்லது இன்பம்) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது.
சுட்டெழுத்து என்பது ஒரு குறிப்பிட்ட பொருளையோ மனிதரையோ சுட்டிக் காட்டும் பொருளில் வரும் எழுத்தாகும். உயிரெழுத்துகளில் 'அ', 'இ', உ' என்ற மூன்று எழுத்துகளும் சுட்டெழுத்துகள் ஆகும். அ என்ற எழுத்து கண் தோன்றாத சேய்மையையும், இ என்ற எழுத்து அண்மையையும் உ என்ற எழுத்து சேய்மைக்கும், அண்மைக்கும் இடைப்பட்டுக் கண்ணுக்குத் தெரியும் நிலத்தையும் சுட்டுவன.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
உலகளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6000 இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
தக்காணப் பீடபூமி (Deccan Plateau) (தக்காண மேட்டுநிலம்; தக்காணம், தக்ஷிணம் = தெற்கு, தென்னிந்தியா) என்பது மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர், கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர், மற்றும் விந்திய மலைத்தொடர் ஆகிய மூன்று மலைத்தொடர்களுக்கு நடுவில் முக்கோணவடிவில் உள்ளதாகும். தென்னிந்தியாவின் பெரும்பகுதி தக்காண பீடபூமியை சேர்ந்தது. இதன் பரப்பளவு 7 இலட்சம் சதுர கிலோமீட்டர்.
தமிழ் இலக்கணத்தில் வழக்கு என்பது மக்களின் பேச்சு வழக்கிலும், இலக்கிய வழக்கிலும் சொற்கள் வழங்கப்படும் முறை அல்லது பயன்படுத்தப்படும் முறை ஆகும். நம் முன்னோர்கள் எந்தப் பொருளை எந்தச் சொல்லால் வழங்கி வந்தனரோ நாமும் அவ்வாறே வழங்கி வருவதைக் குறிக்கும். வழக்கு என்பது மரபு அல்லது பழக்கம் என்ற பொருளிலும் கையாளப்படுகிறது.
அரிக்கமேடு என்னுமிடம், தென் இந்தியாவின் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் அருகிலுள்ள தொல்பொருளாய்வு சார்ந்த இடமாகும்.சோழர் காலத்தில் அரிக்கமேடு ஒரு மீனவ கிராமமாக இருந்தது. இங்கிருந்து உரோம் நகருடன் வாணிபம் நடை பெற்றது என்று அகழ்வாராய்ச்சி தெரிவிக்கின்றது. புதுச்சேரிக்குத் தெற்கே ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் அரியாங்குப்பம் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
நெருக்கடி நிலை - அவசரகால பிரகடனம் (Indian Emergency - 25 ஜூன் 1975 – 21 மார்ச் 1977) இந்தியாவில் 21- மாத காலத்திற்கு இந்த நிலை இந்தியக் குடியரசுத் தலைவர்பக்ருதின் அலி அகமது வால், அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் ஆலோசனை மற்றும் அறிவுறித்தலின் பேரில் இந்திய அரசியலமைப்பு விதி 352ன் படி பிரகடனப் படுத்தப்பட்டது. இது இந்திரா காந்தியின் செல்வாக்கை உயர்த்துவதற்காகவும், அவருக்கு எதிரான நிலையை மக்கள் எடுக்காத நிலையை உருவாக்குவதற்காகவும், நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் தேர்தலை சந்திக்க விரும்பாததால் தேர்தலை தள்ளிப்போடும் நோக்கத்திலும், மக்களின் அடிப்படை குடியுரிமை உரிமைகளை பறிக்கும் விதத்திலும், அமல்படுத்தபட்டதாக கூறப்படுகின்றது. இந்தியக் குடியரசு வரலாற்றில் இக்காலம் சர்ச்சை மிகுந்த காலமாக வர்ணிக்கப்படுகின்றது.
தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின் தென் முனையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படும் இம்மாநிலமானது, பரப்பளவில் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாக மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது. உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பேசும் தமிழர் வாழும் பகுதியே தமிழ்நாடு என வழங்கப்படுகிறது.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டுச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது.
பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவும் உண்டு. அறம், பொருள், இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்களில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன. உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற பிரிவின் கீழ் வருவன.
பழையகற்காலம் என்பது, மனித தொழில்நுட்ப வளர்ச்சிக் கால கட்டமான கற்காலத்தின் முதல் பகுதியாகும். இது சுமார் 2,000,000 ஆண்டுகளுக்குமுன், மனித மூதாதையர்களான ஹோமோ ஹெபிலிஸ் (Homo habilis) போன்ற ஹொமினிட்டுகள் (hominids) கற்கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்கியதுடன் ஆரம்பமானது. இது, இடைக்கற்காலத்துடன் அல்லது முன்னதாகவே புதியகற்கால வளர்ச்சி இடம்பெற்ற சில பகுதிகளில், எபிபலியோலிதிக் முடிவுற்றது.
விளம்பரம் (advertising) என்பது தகுதியுள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் பிராண்டுகளை அல்லது ஒரு குறிப்பிட்ட வகை தயாரிப்புகள் அல்லது சேவைகளை அதிக அளவில் வாங்க உண்டாக்கப்பட்ட தொடர்பு சாதனம். 19ஆம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒட்டுமொத்த உற்பத்தி அதிகமானதைத் தொடர்ந்து நவீன விளம்பரங்கள் முன்னேற்றமடைந்தன. வடிவமைக்கப்பட்ட மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட "வடிவம்" மூலம் அந்தக் குறிப்பிட்ட சாதனங்கள், சேவைகளின் கொள்முதலை அதிகப்படுத்தும் வகையில் நிறைய விளம்பரங்கள் வடிவமைக்கப்படுகின்றன.
அடி (யாப்பிலக்கணம், சீர் எண்ணிக்கை)
அடி என்பது செய்யுள் உறுப்புகள் ஆறனுள் ஐந்தாவதாக அமைந்த ஒன்று ஆகும். ‘எழுத்து அசை, சீர், பந்தம், அடி, தொடை’ என்று அமிதசாகரரால் வைப்பு முறை சொல்லப்படுகின்றது. தமிழ்ப் பாக்களின் இலக்கணத்தைக் கூறும் யாப்பியல் நூல்கள், பாக்களின் உறுப்புகளாக, எழுத்து, அசை, சீர், அடி என்பவற்றைக் குறிப்பிடுகின்றன.
தமிழ்த்தாய் வாழ்த்து (Tamil Thaai Vaalthu) என்பது இந்திய மாநில அரசுகளுள் தமிழை ஆட்சி மொழியாய் கொண்டுள்ளவற்றில் பாடப்பெறும் வாழ்த்துப் பாடலாகும். இது தமிழ்த் தாயை வாழ்த்தி வணக்கம் செலுத்துவதாக அமையும். இப்பாடல் அரசு விழாக்கள், பள்ளிகளின் காலை இறைவணக்கக் கூட்டம் முதலான நிகழ்வுகளின் தொடக்கத்தில் பாடப்படுகிறது.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) ஓர் இந்திய சட்ட வல்லுநர், பொருளாதார நிபுணர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் அரசியல் தலைவர் ஆவார். இவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகப் பதவியேற்று பின்னர் இந்திய அரசியலமைப்பு வரைவு குழுவிற்குத் தலைமை தாங்கினார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கி தீண்டாமை ஒழியப் போராடினார்.
தமிழக வரலாற்றைக் கணிப்பதற்கும் நிறுவுவதற்கும் கல்வெட்டியல் துறைக்கு அடுத்து நாணயவியல் துறையின் பங்கு கூடுதலானது. அதிலும் சங்க காலம் தொட்டு வழங்கி வந்த மூவேந்தர் முத்திரைக் காசுகளும், பெருவழுதி நாணயம், செழியன் காசு போன்ற பாண்டியர் மன்னர்களின் காசுகளும் பெரும்பங்காற்றுவன. மூவேந்தர், குறுநில மன்னர்கள் போன்றோர் வெளியிட்ட நாணயங்கள் மூலம் தமிழக வரலாற்றையும் பொருளாதாரத்தையும், மற்ற மாநில மன்னர்களின் நாணயங்கள் தமிழகத்தில் கிடைத்ததைக் கொண்டு இந்தியப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் அறியலாம்.
மரபுச்சொற்கள் மரபு ரீதியாக வழங்கிவரும் சொற்களைக் குறிக்கும். மரபு என்பது நம் முன்னோர் ஒரு பொருளை எச்சொல்லால் வழங்கினரோ அவ்வாறே வழங்குவது ஆகும். உதாரணமாக, பறவைகள், விலங்குகள் முதலான உயிரினங்களின் ஒலிகளையும் அவை ஒலிக்கும் முறைகளையும் இவ்வாறு கூற வேண்டுமென, முன்னோர் கூறிய மரபினைத் தொன்றுதொட்டுப் பின்பற்றி வருகின்றனர்.
கார்லசு புச்திமோன் (Carles Puigdemont i Casamajó; பிறப்பு: 29 திசம்பர் 1962) எசுப்பானியாவின் காத்தலோனியா தன்னாட்சிப் பகுதியின் தலைவர் ஆவார். 2017-ஆம் ஆண்டில் காத்தலோனியா தன்னாட்சிப் பிரதேசத்திற்கு நடைபெற்ற தேர்தலில் கார்லசு புச்திமோனின் அரசியல் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இவர் காத்தலோனியா தன்னாட்சிப் பிரதேசத்தை தனி நாடாகக் கோரும் போராட்ட இயக்கத்தின் தலைவரும் ஆவார்.
ஒற்றைப் பதிவு கணக்கியல் முறை அல்லது ஒற்றைப் பதிவு முறை (Single Entry System or Single Entry bookkeeping) என்பது நிதித் தகவல்களைப் பராமரிக்கப் பயன்படுத்தப் பெறும் கணக்கியல் முறையாகும். இது பரிவர்த்தனையைப் பதிவு செய்வதற்கான முழுமையற்ற முறை என அழைக்கப்படுகிறது. பெரும்பாலான வணிகங்கள் இரட்டைப் பதிவுமுறையைப் பயன்படுத்தி அனைத்து பரிவர்த்தனைகளின் பதிவையும் பராமரிக்கின்றன.
தமிழ்நாடு அமைச்சரவை (Tamil Nadu Council of Ministers), தமிழ் நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும் செயலாட்சியர்கள். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார்.
அப்பூதி அடிகள் என்பவர் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார்.சைவ சமயத்தில் சிவபெருமானும், அடியாரும் ஒருவரே என்பதை விளக்க அப்பூதி அடிகள் வரலாறு கூறப்படுகிறது. அப்பூதி அடிகள் திருநாவுக்கரசர் எனும் சைவரை வணங்கியே வீடுபேரு அடைந்தார் என்று எடுத்துரைக்கப்படுகிறது. திருநாவுக்கரசரின் சிவத்தொண்டினை அறிந்த அப்பூதியடிகள் திருநாவுக்கரசர் பெயரால் மக்களுக்கு அன்னம் படைத்தல், சத்திரம் அமைத்தல், நீர் கொடுத்தல் போன்ற பணிகளைச் செய்துவந்தார்.
கணினி () என்பது எண் முதலான தரவுகளை உட்கொண்டு, முறைப்படி கோத்த ஆணைக் கோவைகளைச் செயற்படுத்தும் ஒரு கருவி. ஒரு பணியைச் செய்ய, அதனைப் பல கூறாகப் பகுத்து, எதன் பின் எதனைச் செய்ய வேண்டும் என்று எண்ணி, கணினியுள் இடுவதற்காகத் lp தொகுக்கப்பட்ட ஆணைக் கோவை அல்லது கட்டளைக் கோவையானது, செய்நிரல் எனப்படும். கணினியில் இப்படி செய்நிரல்களைச் சேமித்து வைத்து பணி செய்ய இயக்குவது தனிச் சிறப்பாகும்.
காப்பியம் என்பது இலக்கிய வடிவங்களில் ஒன்று. இதனைப் பெருங்காப்பியம் என்றும், சிறுகாப்பியம் என்றும் பகுத்துக் காட்டினர் அறம், பொருள், இன்பம், வீடு என்பனவற்றோடு ஓர் ஒப்பிலாத் தலைவனையும் தலைவியையும் கொண்டு இயற்றப்படுவது பெருங்காப்பியமாகும். வாய்மொழி இலக்கியம், தன்னுணர்ச்சிப் பாடல்கள், கதைபொதி பாடல்கள் என்று இது விரிந்து வளர்கிறது.
தமிழகத்தில் சங்ககாலத்தில் பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையில் நிலவிய கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்ட நூல்களை பதினெண் மேற்கணக்கு நூல்கள் எனவும் பதினெண் கீழ்கணக்கு நூல்கள் எனவும் மொழி ஆய்வாளர்கள் பிற்காலத்தில் வகைப்படுத்தினர். குறைந்த அடிகளுடைய நூல்கள் கீழ்க்கணக்கு நூல்கள் என்றும் நிறைந்த அடிகளைக் கொண்டவை மேற்கணக்கு நூல்கள் எனவும் வகைபடுத்தப்பட்டன. மேற்கணக்குப் பகுப்பில் 18 நூல்களும், கீழ்க்கணக்குப் பகுப்பில் 18 நூல்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்
குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப் பெயர் குறிக்கிறது.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110 என்பது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளில் ஒன்று ஆகும். அரசியலமைப்பு சட்டத்தின் 208-வது பிரிவு 1-வது உட்பிரிவின்படி இயற்றப் பெற்றவை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகள் ஆகும். இதில் மொத்தம் 23 அத்தியாயங்கள், 292 விதிகள் உள்ளன.
தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்
தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சாதிகளையும் பட்டியலிட்டுள்ளது. இவை முறையே; பட்டியல் பழங்குடியினர் (36) பட்டியல் சாதிகள் (76) பிற்படுத்தப்பட்ட சாதிகள் (136) பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் (இஸ்லாமியர்)(7) மிகவும் பிற்பட்ட சாதிகள் (41) சீர்மரபினர் (68) முற்பட்ட சாதிகள் (79) என்று 7 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் இருக்கும் முற்பட்ட வகுப்பினர், அனைத்து வகுப்பினரும் பங்கேற்கும் பொதுப்பிரிவுகளின் மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மட்டுமே இடம் பெற இயலும்.
பண்டைத் தமிழகத்தின் பொருளியல் நிலை
பண்டைத் தமிழகத்தின் பொருளியல் நிலை என்பது கி.மு. 200 முதல் கி.பி. 200 வரையிலான காலத்தில் தமிழக நிலப்பகுதியில் அமைந்திருந்த பொருளியல் நிலையையும் கூறிகளையும் குறிக்கும்.
கதிரவ அமைப்பு (Solar System) அல்லது சூரிய மண்டலம் அல்லது சூரியக் குடும்பம் என்பது கதிரவனுக்கும் அதைச் சுற்றி வரும் பொருட்ளுக்கும் இடையே உள்ள ஈர்ப்புவிசைப் பிணைப்பால் உருவான ஓர் அமைப்பாகும். இது கதிரவனைச் சுற்றி வரும் எட்டு கோள்களையும், ஐந்து குறுங்கோள்களையும் உள்ளடக்கியது ஆகும் என்று உலகளாவிய வானியல் ஒன்றியம் வரையறுத்துள்ளது. இந்த அமைப்பில் கதிரவனை நேரடியாகச் சுற்றி வரும் பெரிய அளவு கொண்ட கோள்களும் சிறிய அளவு கொண்ட குறுங்கோள் மற்றும் சிறு கதிரவ அமைப்புப் பொருட்கள் போன்றவையும், கதிரவனை மறைமுகமாகச் சுற்றி வரும் துணைக்கோள்களும் அடங்கும்.
நான்கு அடிகளுக்கு மேல் அமைந்த வெண்பா பஃறொடை வெண்பா எனப்படுகின்றது. இவ்வெண்பா வகையின் அடிகளில் ஒரே வகையான எதுகையோ (ஒரு விகற்பம்) அல்லது பலவகை எதுகைகளோ (பல விகற்பம்) வரலாம். பஃறொடை வெண்பா அதிகபட்சம் 12 அடிகள் மட்டுமே கொண்டிருக்கும் என்றும் அதற்கு மேற்படின் அது கலிவெண்பா எனப்படும் என்பதும் சிலரது கருத்து.
தரவுகள் (Data)என்பன பயனுடையதாகக் கருதப்படும் குறிப்புகளாகும். அவை எண்களாகவோ, வெப்பநிலை, ஒலி, ஒளி, அழுத்தம், உயரம் முதலான அளவீடுகளாகவோ, சொற்களாகவோ அல்லது பிற பயனுடைய குறிப்புகளாகவோ இருக்கலாம். ஏதொன்றையும் பற்றி ஆய்வு செய்ய வேண்டும், அலச வேண்டும் எனில் அடிப்படையாகத் தரப்பட வேண்டிய குறிப்புகளாக அல்லது செய்திகளாக இருப்பதால் இவைகள் தரவுகள் எனப்படுகின்றன.
செயற்கை நுண்ணறிவு அல்லது செயற்கை அறிதிறன் ((Artificial intelligence)) (AI) மனிதனுக்கு இயந்திரத்திற்கும் இடையில் காணப்படும் வேறுபாடு என்னவென்றால் படைப்பாக்க திறன் ஆகும் . இந்த படைப்பாக்க திறன் இயந்திரங்கள் மூலமும் சாத்தியப்படுமானால் அதுவே செயற்கை நுண்ணறிவு என அழைக்கப்படுகிறது.கணினி அறிவிகயலின் பரந்த கிளையாக செயற்கை நுண்ணறிவு காணப்படுகிறது. பொதுவாக மனித நுண்ணறிவு தேவைப்படும் பணிகளைச் செய்யும் திறன் கொண்ட இயந்திரங்களை உருவாக்க செயற்கை நுண்ணறிவின் பங்கு பெருமளவில் தேவைப்படுகிறது.இச் செயற்கை நுண்ணறிவு திட்டமிடல் சிந்தித்தல் எண்ணங்களை கற்றுக் கொள்ளுதல் என பல்வேறு நுண்ணறிவு திறங்களை உள்ளடக்கியுள்ளது.
தமிழ்நாட்டின் புவியியல் அமைப்பு
தமிழ்நாடு 130,058 ச.கி.மீ பரப்பளவு கொண்டது.(50,216 sq mi) பரப்பளவில் பெரிய இந்திய மாநிலங்களுள் தமிழ்நாடு பதினொன்றாம் இடத்தில் உள்ளது. மேற்கே கேரளா மாநிலத்துடனும், வடமேற்கில் கர்நாடகா மாநிலத்துடனும் வடக்கில் ஆந்திரப்பிரதேசத்துடனும் தனது எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இதன் கிழக்கு எல்லையாக வங்காள விரிகுடாவும் தெற்கே இந்தியப் பெருங்கடலும் எல்லையாக உள்ளது.