The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
தடகள விளையாட்டுகள் (Athletics) எனப்படுவது தடகள மைதானத்தில் இடம்பெறும் ஓடுதல், எறிதல், நடத்தல், தாண்டுதல் போன்ற செயற்திறன்களை உள்ளடக்கிய பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஆகும். பெரும்பாலான இவ்விளையாட்டுகள் மிக எளிமையானவை. விலையுயர்ந்த கருவிகளையோ கட்டமைப்புக்களையோ வேண்டுவதில்லை என்பதால் இவை மிகப் பரவலாக விளையாடப்படுகின்றன.
சூரிய நமஸ்காரம் அல்லது சூரியனுக்கு வணக்கம் ( Sun Salutation) , என்பது பன்னிரண்டு இணைக்கப்பட்ட ஆசனங்களின் ஓட்ட வரிசையை உள்ளடக்கிய உடற்பயிற்சியையும் நிலைகளையும் குறிக்கும் ஒரு பயிற்சியாகும். ஆசன வரிசை முதன்முதலில் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் யோகாசனமாக பதிவு செய்யப்பட்டது. இதற்கு முன்பு இந்தியாவில் இதே போன்ற பயிற்சிகள் பயன்பாட்டில் இருந்தன.
கால்பந்தாட்ட ஆடுகளம் (அல்லது கால்பந்து மைதானம் அல்லது சாக்கர் களம்) கால்பந்தாட்டம் விளையாடுவதற்கான புற்றரையாலான பரப்பு ஆகும். இதன் அளவுகளும் குறியிடுதல்களும் கால்பந்தாட்டச் சட்டங்களின் முதல் சட்டத்தால் வரையறுக்கப்படுகின்றன. ஆடுகளத்தில் இடப்படும் அனைத்துக் கோடுகளும் அவை வரையறுக்கும் பகுதியின் அங்கமாகின்றன.
முதலுதவி என்பது ஒரு நோய் அல்லது காயத்திற்குக் கொடுக்கும் முதற்கட்டக் கவனிப்பாகும். முதல் உதவி என்பது உதவி மட்டுமல்ல உயிரை காக்கும் செயல் சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வரை இம்முதலுதவி ஒரு நோய்வாய்ப்பட்ட அல்லது காயப்பட்ட நபர்க்கு அளிக்கப்படும். இது மருத்துவத்துறையில் சிறப்புடைய நிபுணர் - அல்லாத எனினும் பயிற்சி பெற்ற ஒரு நபரால் அளிக்கப்படும்.
ஒலிம்பிக்கு விளையாட்டுகள் (Olympic Games அல்லது Olympics) என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் மாற்றி மாற்றி பல்வேறு விளையாட்டுகளுக்கு நடத்தப்படும் அனைத்துலகப் போட்டி ஆகும். இதில் ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கு பெறுகின்றனர். உலகின் முதன்மையான விளையாட்டுப் போட்டியாகக் கருதப்படும் ஒலிம்பிக்கில் 200 நாடுகளுக்கு மேல் கலந்து கொள்கின்றன.
தமிழ் (Tamil language) தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
விரைவோட்டம் (sprint) அல்லது சுருக்கோட்டம் (குறுவிரையோட்டம்) என்பது அனைத்துலகிலும் நடைபெறும் ஓர் ஓட்டப்பந்தயம். இவ்வோட்டப்போட்டி ஒலிம்பிக்கில் மிகப்பலராலும் விரும்பிப் பார்க்கப்படும் ஒரு விளையாட்டு. இவ்வகை ஓட்டப்போட்டியில் ஏறத்தாழ 8-10 பேர் ஒரே நேரத்தில் புறப்பட்டு ஒரு குறிப்பிட்ட நீளம் கொண்ட தடகளத்தை கடக்க மிகவிரைந்து ஓடுவார்கள்.
கைப்பந்தாட்டம் (volleyball) என்பது ஓர் அணிக்கு ஆறு வீரர்கள் வீதம் உருவாக்கப்பட்ட இரண்டு அணி வீரர்கள் ஒரு வலையால் பிரிக்கப்பட்டு கைகளால் பந்தை அடித்து ஆடுகின்ற ஒரு குழு ஆட்டமாகும். ஒவ்வோர் அணியும் தங்கள் பகுதிக்கு அனுப்பப்பட்ட பந்தை அது தரையை தொடுவதற்கு முன் கைகளால் வாங்கி, தட்டி பின்னர் எதிர்ப்பக்கத்தினரின் பகுதியில் தரையைத் தொடும்படி அனுப்புகின்ற விளையாட்டு ஆகும். எதிர்ப்பக்கத்திற்கு பந்தை அனுப்ப ஒவ்வோர் அணியும் மூன்று தட்டுதல்கள் எடுத்துக் கொள்ளலாம்.
வலைப்பந்து ஏழு பேர்கள் அடங்கிய இரு அணிகளுக்கிடையே ஆடப்படும் ஓர் பந்து விளையாட்டு ஆகும்.இது பெண்கள் கூடைப்பந்து விளையாட்டின் துவக்கநிலை பதிப்புகளிலிருந்து உருவானதால் கூடைப்பந்து விளையாட்டுடன் பல ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது. இங்கிலாந்தில் 1890களில் இது ஓர் முறையான விளையாட்டாக மேம்படுத்தப்பட்டது.அங்கிருந்து பல நாடுகளுக்குப் பரவியது.பொதுநலவாய நாடுகளில் பரவலாக விளையாடப்படும் இந்த விளையாட்டினை பெரும்பாலும் பெண்களே விளையாடுகின்றனர். செவ்வக வடிவ ஆடுகளம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இரு சிறு இறுதிப்பகுதிகளிலும் உயரமான இலக்குகூடை அமைந்துள்ளது.
கால்பந்து என்பது ஒரேமாதிரியான பலகுழு விளையாட்டுக்களின் பெயர், அவை அனைத்தும் பந்தை கால்களைக்கொண்டு உதைத்து கோலைப் பெற (வெவ்வேறு கோணங்களில்) முயற்சிக்கும் செயலில் ஈடுபடுகின்றன. சங்கக் கால்பந்து என்பது உலக அளவில் இந்த விளையாட்டுக்களில் மிகவும் பிரபலமானது, மேலும் பொதுவாக வெறும் "கால்பந்து" அல்லது "சாக்கர்" என்று அறியப்படுகின்றது. இருப்பினும் கால்பந்து என்ற வார்த்தை கால்பந்து வடிவத்தில் உள்ள அனைத்து விளையாட்டிற்கும் பொருந்துகின்றது, இது உலகத்தின் ஒவ்வொரு குறிப்பிட்ட பகுதியிலும் மிகவும் பிரபலமானது.
வளையப்பந்து (Tennikoit) என்பது பூப்பந்தைப் (Tennis) போன்ற ஒரு வகை விளையாட்டாகும் .இதற்கும் பூப்பந்து விளையாடுவதற்கு ஏற்ற ஆடுகளம்போல் ஆடுகளம் தேவை .வளையப்பந்து விளையாடுவதற்கு வட்டமான இரப்பர் வளையப்பந்து அடிப்படைத் தேவையாகும். இந்த விளையாட்டை விளையாடும் இரு விளையாட்டு வீரர்களைப் பிரிக்கும் வகையில், ஒவ்வொருவரும் தனது பிடிப்பை மோதலின்றி பிடிக்க ஆடுகளத்தின் குறுக்கே வலை அமைக்கப்பட்டிருக்கும். வளையப்பந்து குறிப்பாக ஜெர்மனி, தென் ஆப்பிரிக்கா, பிரேசில், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் மிகவும் பிரபலமாக உள்ளது.
பொதுவாக கால்பந்து அல்லது சங்க கால்பந்து (association football) என்பது, பதினொரு வீரர்கள் கொண்ட இரண்டு அணிகளுக்கு இடையில் ஒரு கோள வடிவப் பந்தினைக் கொண்டு விளையாடப்படும் ஒரு அணி விளையாட்டு ஆகும். சங்கக் கால்பந்து என்பது உலகெங்கிலும் மிகப் பிரபலமாக இருக்கும் காற்பந்து விளையாட்டு வகையாகும். இது உலகிலேயே மிகவும் பிரபலமான விளையாட்டாகக் கருதப்படுகிறது.
திசாநாயக்க முதியான்சிலாகே அனுர குமார திசாநாயக்க (Dissanayaka Mudiyanselage Anura Kumara Dissanayaka, பிறப்பு : நவம்பர் 24, 1968) இலங்கை அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் அன்றைய அரசுத்தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அமைச்சரவையில் 1984 முதல் 1995 வரை வேளாண்மை, கால்நடைத்துறை, காணி, நீர்வளத்துறை அமைச்சராக இருந்தவர். 2014 பெப்ரவரி 2 இல் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் 7வது தேசிய மாநாட்டில் இவர் அக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
உலகளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6000 இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
மருத்துவ சோதனையில், ஒரு நோயானது நோயை உருவாக்கும் பண்பு கொண்ட வைரசு, பக்டீரியா, பூஞ்சை, புரோட்டோசோவா, மற்றும் பல்கல ஒட்டுண்ணிகள் போன்ற உயிரினங்களின் காரணமாக ஏற்படுகிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டால், அந்நோய் தொற்றுநோய் என அழைக்கப்படுகிறது. இந்நோய்க்காரணிகள் (pathogen) விலங்குகளிலும், தாவரங்களிலும் நோயை ஏற்படுத்தலாம். தொற்றுநோயானது ஒரு குறிப்பிட்ட இனத்துக்குள்ளேயோ அல்லது ஓர் இனத்திலிருந்து, வேறொரு இனத்துக்கோ கடத்தப்படலாம்.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) ஓர் கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். கவிதையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு "பாரதி" என்ற பட்டம் வழங்கப்பட்டது. நவீன தமிழ் கவிஞர்களின் முன்னோடியாகத் திகழ்ந்த இவர், தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2024
2024 இலங்கை அரசுத்தலைவர் தேர்தல் (2024 Sri Lankan presidential election) இலங்கையில் 2024 செப்டம்பர் 21 அன்று நடைபெறும். வாக்காளர்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஒரு அரசுத்தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள். நடப்பு அரசுத்தலைவர் ரணில் விக்கிரமசிங்க சுயேச்சை வேட்பாளராக மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார்.
திருக்குறள், சுருக்கமாகக் குறள் (Tirukkuṟaḷ), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், காமம் (அல்லது இன்பம்) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது.
திவ்ய தேசங்கள் (Divya Desam) என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும்.
நீளம் தாண்டுதல் (இலங்கை வழக்கு: நீளப்பாய்ச்சல் அல்லது நீளம் பாய்தல்) என்பது ஒரு தடகள விளையாட்டு ஆகும். இதில் விளையாட்டு வீரர் ஒருவர் ஓடி வந்து ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து தனது உடல்வலு, வேகம் ஆகியவற்றைப் பயன்படுத்தி நீண்ட தூரத்தைத் தாண்டிப் பாய முயற்சிப்பார். பாய்வதற்கான இடத்தில் செவ்வக வடிவிலான ஒரு குழி வெட்டப்பட்டு அதில் மணல் நிரப்பப்பட்டிருக்கும்.
தடகளப் போட்டிகள் என்பது விளையாட்டின் வகைகளில், ஓடுதல், குதித்தல் மற்றும் வீசுதல் ஆகியவற்றின் திறன்களில் நிறுவப்பட்ட போட்டிகளை உள்ளடக்கியது ஆகும். விளையாட்டு நடைபெறும் இடம், ஓடும் பாதை மற்றும் வீசுவதற்கான புல் களம் மற்றும் சில குதித்தல் நிகழ்வுகள் ஆகியவற்றிலிருந்து இந்தப் பெயர் பெறப்பட்டது. தடகளம் என்பது தனித்திறன் விளையாட்டுப் போட்டி என்ற குடையின் வகைப்படுத்தப்பட்டுள்ளது, இதில் சாலை ஓட்டம், நாடுகளுக்கிடையிலான ஓட்டம் மற்றும் பந்தய நடைப்பயிற்சி ஆகியவை அடங்கும்.
கபடி அல்லது சடுகுடு அல்லது பலிஞ்சடுகுடு என்று அழைக்கப்படும் விளையாட்டு தமிழ்குடிகளால் பல காலமாக, விளையாடப்படும் தமிழர் விளையாட்டுகளுக்குள் ஒன்று. சல்லிக்கட்டிற்கு (ஏறு தழுவுதல்) தயாராகும் முன் தமிழர்கள் செய்யும் பயிற்சியே கபடி என்ற பெயரால் பல காலமாக விளையாடப்பட்டு வருகிறது. கபடி என்ற பெயரும் தமிழ்ப்பெயராக இருக்கும் என்று கூறப்படுகிறது.
முகம்மது நபி அல்லது முகம்மது (Muḥammad, அரபு மொழி: محمد, பிறப்பு பொ.ஊ. 570, இறப்பு 8 சூன் பொ.ஊ. 632 கணிப்பு), அராபியப் பெயர்: அபூ அல்-காசிம் முகம்மது இப்னு அப்தல்லா இப்னு அப்தல்-முத்தலிப் இப்னு ஹாசிம் (Abū al-Qāsim Muḥammad ibn ʿAbd Allāh ibn ʿAbd al-Muṭṭalib ibn Hāshim, ابو القاسم محمد ابن عبد الله ابن عبد المطلب ابن هاشم) என்பவர் மக்கா நகரைச் சேர்ந்த அராபியர் ஆவர்.
பாரதிதாசன் (Bharathidasan, 29 ஏப்ரல் 1891 – 21 ஏப்ரல் 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
பரத நாட்டியம் தென்னிந்தியாவுக்குரிய, சிறப்பாகத் தமிழ்நாட்டுக்குரிய நடனமாகும். இது மிகத் தொன்மை வாய்ந்ததும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரபலமானதுமாகும். இக்கலையை நாட்டிய சாஸ்திரம், பரத முனிவர் ஆகியவற்றுடன் தொடர்பு படுத்துதல் என்பவை எல்லாம் பரத நாட்டியத்தை சமசுகிருதமயமாக்க நடந்த ஏற்பாடுகள் என்ற கருத்து உள்ளது.
ட்டிக்கு பயன்படுத்தப்படும் பந்தே உள்ளரங்க கையுந்துபந்து போட்டிக்கும், கடற்கரை கையுந்துபந்து போட்டிக்கும், இதே போன்று சற்று மாறுபாடு கொண்டு ஆடப்படும் கையுந்துபந்து போட்டிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. கையுந்துபந்து ஏறக்குறைய 18 செவ்வக வடிவமுடைய செயற்கை அல்லது உண்மையான தோல்களைக் கொண்டு வட்டவடிவமாக உருவாக்கப்பட்டுள்ளது.கையுந்துபந்து உருவாக்கப்படும்பொழுது மூன்று பகுதிகளாக பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் ஆறு செவ்வக வடிவ செயற்கை அல்லது உண்மையான தோலுடன் காற்று நிரப்ப்ப்படும் ஒரு இரப்பர் பை கொண்ட வட்ட வடிவமாக ஓட்டப்படுகிறது. 2008-ல் அகில உலக கையுந்துபந்து கழகம் உள்ளரங்க கையுந்துபந்து போட்டிகளில் விளையாட ஏதுவாக மென்மையாக தொடுவதற்கும், பந்து முறையாகப் பறப்பதற்கும், எட்டு பேனல்கள் கொண்ட கைபந்தை ஏற்றுக்கொண்டது.
துரோணாச்சார்யா விருது (Dronacharya Award) 1985ஆம் ஆண்டு இந்திய அரசினால் தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் வீரர்களின் முழு விளையாட்டுத் திறனை வெளிக்கொணரும் சிறந்த விளையாட்டு பயிற்றுனர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் நிறுவப்பட்டது. இவ்விருது பெற்றவருக்கு தொன்மவியலில் போர்க்கலைகளில் கற்று தேர்ந்து சிறப்பான ஆசானாக கருதப்படும் துரோணரின் வெண்கலச்சிலையோடு, இந்திய ரூபாய்கள் 300,000 மற்றும் பாராட்டுச் சுருள் கொடுக்கப்படுகிறது.
இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்
குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப் பெயர் குறிக்கிறது.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்:பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
மும்முறை தாண்டுதல் (இலங்கை வழக்கு: முப்பாய்ச்சல்) (triple jump அல்லது hop, step and jump அல்லது hop, skip and jump) நீளம் தாண்டுதலைப் போன்ற ஓர் தடகள போட்டியாகும். இதில் போட்டியாளர் களத்தில் ஓடிவந்து தாவிக்குதித்து (hop), மேலெழுந்து (step), பின்னர் நீளத் தாண்டி (jump) மணல் பள்ளத்தில் விழுவார். மும்முறை தாண்டுதல் தொன்ம ஒலிம்பிக் போட்டிகளில் இடம் பெற்றிருந்தது; 1896ஆம் ஆண்டு தொடங்கிய தற்கால தற்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் துவக்கத்திலிருந்தே இதுவும் ஒன்றாக விளங்குகிறது.
தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின் தென் முனையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படும் இம்மாநிலமானது, பரப்பளவில் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாக மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது. உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பேசும் தமிழர் வாழும் பகுதியே தமிழ்நாடு என வழங்கப்படுகிறது.
மணிமேகலை ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்களுள் ஒன்று. இக்காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார்.மணிமேகலை காப்பியத்தில் அடி இணையும், அதன் வழிபாடும், வேறு கடவுள்களின் வழிபாடும் இருக்கும் நிலையில், அஃது ஒரு மகாயான காப்பியமாகவே இருக்கமுடியும். மேலும், மகாயான பௌத்தமானது இல்லறத்தையும், துறவறத்தையும் வலியுறுத்தும் நிலையிலும், சிலப்பதிகாரமானது இல்லறத்தையும், மணிமேகலை காப்பியம் துறவறத்தையும் வலியுறுத்துவதாலும், இவை இரட்டைக் காப்பியங்கள் ஆகும்.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
அழகு (Beauty) , விலங்கு பொருள், நபர் அல்லது இடம் இவற்றின் பண்பு சார்ந்த இன்பம் அல்லது திருப்தியை அளிக்கும் ஒரு புலனுணர்வு அனுபவம் ஆகும். அழகியல், கலாச்சாரம், சமூக உளவியல் மற்றும் சமூகவியல் ஆகியவற்றின் பகுதியாக அழகு ஆய்வு செய்யப்படுகிறது. ஒரு "சிறந்த அழகு" என்பது போற்றப்படக்கூடிய ஒரு பொருளைக் குறிக்கின்றது, அல்லது ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்தில் அழியாத தன்மை கொண்ட மிகச்சரியான அம்சங்களைக் கருத்தில் கொண்டுள்ளதாக அமைகிறது.
வாழை (Vaazhai) 2024இல் மாரி செல்வராஜ் எழுத்து, இணை தயாரிப்பு, இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். குழந்தைகள் தொடர்பான இந்நாடகத் திரைப்படத்தை டிசுனி + ஆட்சுடார், நவ்வி சுடுடியோசு, பாஃர்மர்சு மாசுடர் பிளான் புரொடக்சன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தில் அறிமுக நடிகர்கள் பொன்வேல் எம்., ராகுல் ஆர்., கலையரசன், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
அளவிடும் கருவிகள் (measuring instrument) என்பது இயற்பியல் அளவை அளக்கும் கருவி ஆகும். இயல் அறிவியல் புலங்களிலும், தர உறுதிப்பாட்டிலும், பொறியியலிலும், நிலவும் புற உலகப் பொருட்கள் அல்லது நிகழ்வுகளின் இயல் அளவுகளை அளந்து ஓப்பிடும் செயலே அளத்தல் எனப்படுகிறது. இதற்கு நிறிவிய செந்தரப் பொருட்களும் நிகழ்வுகளும் அலகுகளாகப் பயன்படுகினறன.
இலங்கையின் தேர்தல் மாவட்டங்கள்
இலங்கையின் தேர்தல் மாவட்டங்கள் (Electoral districts in Sri Lanka) என்பது இலங்கையின் 1978 அரசியலமைப்பின் படி இலங்கை நாடாளுமன்றத்திற்கு விகிதாசார அடிப்படையில் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நோக்கங்களுக்காக மட்டும் அமைக்கப்பட்ட அலகுகள் ஆகும். இதனடிப்படையில் 22 தேர்தல் மாவட்டங்கள் அமைக்கப்பட்டன. இவை 160 வாக்கெடுப்புப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்
தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள். அந்த வரிசையில் மொத்தம் 274 சிவ ஸ்தலங்கள் உள்ளன. அவைகளில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும், மற்ற கோயில்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் சில மற்ற இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ளன.
ஓம் நமோ நாராயணாய (சமசுகிருதம்: ॐ नमो नारायणाय, (பொருள்:பரம்பொருளான நாராயணனை வணங்குகிறேன்) இந்து சமயத்தில் ஓம் நமோ நாராயணா எனும் எட்டெழுத்து மந்திரம் வைணவர்களால் சிறப்பாக போற்றப்படுகிறது. திருபாற்கடலில் யோக நித்திரையில் இருக்கும் விஷ்ணுவின் வடிவமான, காக்கும் கடவுள் நாராயணணை நோக்கி அழைக்கப்படும் ஒரு வேண்டுகோள்.
தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்
தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சாதிகளையும் பட்டியலிட்டுள்ளது. இவை முறையே; பட்டியல் பழங்குடியினர் (36) பட்டியல் சாதிகள் (76) பிற்படுத்தப்பட்ட சாதிகள் (136) பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் (இஸ்லாமியர்)(7) மிகவும் பிற்பட்ட சாதிகள் (41) சீர்மரபினர் (68) முற்பட்ட சாதிகள் (79) என்று 7 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் இருக்கும் முற்பட்ட வகுப்பினர், அனைத்து வகுப்பினரும் பங்கேற்கும் பொதுப்பிரிவுகளின் மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மட்டுமே இடம் பெற இயலும்.
காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை (C. N. Annadurai, 15 செப்டம்பர், 1909 – 03 பெப்ரவரி, 1969) ஓர் இந்திய அரசியல்வாதியும், மதராஸ் மாநிலத்தின் கடைசி முதல்வரும், தமிழகத்தின் முதலாவது முதலமைச்சருமாவார். இவர் அறிஞர் அண்ணா எனவும் பேரறிஞர் அண்ணா எனவும் அழைக்கப்படுகிறார். இவர் இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவரும், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார்.
இலங்கை () (Sri Lanka, சிங்களம்: ශ්රී ලංකා, சிறிலங்கா) இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் வாழும் ஒரு தீவு நாடு ஆகும். இதன் தற்போதைய அதிகாரபூர்வ பெயர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு ஆகும். 1972 க்கு முன் உலகம் முழுவதும் சிலோன் (Ceylon) என்ற பெயரால் அறியப்பட்டு வந்தது.
இறகுப்பந்து விளையாட்டினை பிரிட்டானிய இராணுவ வீரர்கள் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இங்கிலாந்தில் அறிமுகம் செய்தனர். இவ்விளையாட்டினை 1873 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் ப்யூபர்ட் பிரபுவின் கிராமப் பகுதியான “பாட்மிண்டன்” (Badminton) எனும் இடத்தில் ஆடப்பட்டதால் இந்த விளையாட்டை ஆங்கிலத்தில் “பாட்மிண்டன்” என்று அழைத்தனர். இது ஒரு மட்டைப் பந்தாட்ட (racquet sport) வகை விளையாட்டு.
மோகன்தாசு கரம்சந்த் காந்தி (ஆங்கிலம்: Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948) என்பவர் ஒரு இந்திய வழக்குறைஞரும், அன்னிய ஆட்சியை எதிர்த்த தேசியவாதியும், அரசியல் அறனாளரும் ஆவார். இவர் மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார்.
காமராசர் (ஆங்கில மொழி: Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975) ஓர் இந்திய விடுதலைப் போராட்ட ஆர்வலர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் 13 ஏப்ரல் 1954 முதல் 2 அக்டோபர் 1963 வரை ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். இவர் 1964 முதல் 1967 வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார்.
கருத்தரிப்பு என்பது, பாலூட்டிகளில், கருக்கட்டல் நிகழ்வின்போது உருவாகும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அடுத்த சந்ததிக்கான உயிரி, முளைய விருத்தி மூலம் முளையமாக விருத்தியடைந்து, பின்னர் முதிர்கரு நிலையில் குழந்தை பிறப்புவரை, பெண்களின் இனப்பெருக்க உறுப்பான கருப்பையில் பதிந்து, தாங்கிக் கொள்ளப்படும் நிலையாகும். இந்தக் கட்டுரையில் மனிதரில் நிகழும் கருத்தரிப்பே விரிவாக ஆராயப்படுகின்றது. மனிதரில், பருவமடைந்த ஆரோக்கியமான பெண்களுக்கு தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் சினை முட்டைகள் உற்பத்தியாகும்.
ஒரு கிடாயின் கருணை மனு (Oru Kidayin Karunai Manu) 2017 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். சுரேஷ் சங்கையா எழுதி இயக்கிய இந்தத் திரைப்படத்தில் விதார்த் , ரவீனா ரவி ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தனர். எராசு இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்த இந்தத் திரைப்படம் விமர்சகர்களிடம் சிறந்த படம் என்ற பாராட்டுகளைப் பெற்றது.
திராவிட முன்னேற்றக் கழகம் (Dravida Munnetra Kazhagam, திமுக) என்பது ஓர் இந்திய அரசியல் கட்சி ஆகும். குறிப்பாக இக்கட்சி தமிழ்நாடு மாநிலத்திலும், புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்திலும் செயற்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக உள்ள திமுக, இந்திய அளவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்ற கூட்டமைப்பில் ஒரு கட்சியாக செயல்படுகிறது.
பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவும் உண்டு. அறம், பொருள், இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்களில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன. உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற பிரிவின் கீழ் வருவன.
தமிழ்த்தாய் வாழ்த்து (Tamil Thaai Vaalthu) என்பது இந்திய மாநில அரசுகளுள் தமிழை ஆட்சி மொழியாய் கொண்டுள்ளவற்றில் பாடப்பெறும் வாழ்த்துப் பாடலாகும். இது தமிழ்த் தாயை வாழ்த்தி வணக்கம் செலுத்துவதாக அமையும். இப்பாடல் அரசு விழாக்கள், பள்ளிகளின் காலை இறைவணக்கக் கூட்டம் முதலான நிகழ்வுகளின் தொடக்கத்தில் பாடப்படுகிறது.
கல்வி (Education) என்பது குழந்தைகளை, உடல் மற்றும் மன வளர்ச்சியில் அறிவு, நல்லொழுக்கம் ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும். கல்வியாளர்கள் கூற்றின்படி, இளைய தலைமுறையை முறையாக வழி நடத்துவதிலும், சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்வி என்பது ஒரு சமூக நிறுவனம்.
அருச்சுனா விருது 1961ஆம் ஆண்டு இந்திய அரசினால் தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் சிறந்த சாதனைகளைப் படைக்கும் வீரர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் நிறுவப்பட்டது. இவ்விருது பெற்றோருக்கு தொன்மவியலில் வில்விளையாட்டில் சிறப்பாக கருதப்படும் அருச்சுனனின் வெங்கலச்சிலையோடு, இந்திய ரூபாய்கள் 15,00,000 மற்றும் பாராட்டுச் சுருள் கொடுக்கப்படுகிறது. 1991 ஆம் ஆண்டு கேல் ரத்னா விருதுகள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்புவரை அருச்சுனா விருதே விளையாட்டு துறையில் இந்தியாவின் உயரிய விருதாக போற்றப்பட்டது.