The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
பொங்கல் (Pongal) என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் அறுவடைப் பண்டிகை ஆகும். இந்த விழா தென்னிந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.
மேலும் தகவல்களுக்கு: இராவணன் (பக்கவழி நெறிப்படுத்தல்) இராவணன் வால்மீகி முனிவர் எழுதிய இராமாயணம் எனும் காவியம் கூறும் இலங்கையை ஆண்ட அசுர குல மன்னர் ஆவார். இராவணனுக்கு தசக்கிரீவன், இலங்கேஸ்வரன், இராவணேஸ்வரன், திரிலோக அதிபதி என்று பல பெயர்கள் உண்டு. பத்து முகங்களை உடையமையினால் தசமுகன் என்றும் அறியப்படுகிறார்.
திருக்குறள் (ஆங்கில மொழி: Tirukkural), சுருக்கமாகக் குறள் (Kural), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், காமம் (அல்லது இன்பம்) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) ஓர் கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். கவிதையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு "பாரதி" என்ற பட்டம் வழங்கப்பட்டது. நவீன தமிழ் கவிஞர்களின் முன்னோடியாகத் திகழ்ந்த இவர், தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) ஓர் இந்திய சட்ட வல்லுநர், பொருளாதார நிபுணர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் அரசியல் தலைவரும் ஆவார். இவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகப் பதவியேற்று இந்திய அரசியலமைப்பு வரைவு குழுவிற்குத் தலைமை தாங்கினார். பட்டியல் இன மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கி தீண்டாமை ஒழியப் போராடினார்.
கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்
குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப் பெயர் குறிக்கிறது.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்:பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
வடமொழிச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள்
வடமொழிச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள் என்ற இக்கட்டுரையில் நாம் அன்றாடம் தமிழ்ச் சொற்கள் போலவே பயன் படுத்தும் சில வடமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் பட்டியலிட்டுத் தரப்பட்டுள்ளன.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
உலகளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6000 இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
இந்திய செயற்கைக்கோள்களின் பட்டியல்
1975ல் முதல் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியதில் இருந்து இதுவரை ஐம்பதிற்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை இந்தியா ஏவியுள்ளது. இந்திய, அமெரிக்க, உருசிய, ஐரோப்பிய ராக்கெட்டுகளின் மூலமும் அமெரிக்க விண்வெளி ஓடத்தின் துணைக்கொண்டும் இவை செலுத்தப்பட்டுள்ளன. இந்திய செயற்கைக்கோளின் பொறுப்பாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் உள்ளது.
மோகன்தாசு கரம்சந்த் காந்தி (ஆங்கிலம்: Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948) என்பவர் ஒரு இந்திய வழக்குறைஞரும், அன்னிய ஆட்சியை எதிர்த்த தேசியவாதியும், அரசியல் அறனாளரும் ஆவார். இவர் மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார்.
தமிழ் (Tamil language) தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
பிக் பாஸ் தமிழ் பருவம் 8 (Bigg Boss Tamil Season 8) என்பது 06 அக்டோபர் 2024 முதல் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ்உண்மைநிலை விளையாட்டு நிகழ்ச்சியின் எட்டாவது பருவம் ஆகும். இந்நிகழ்ச்சி ஸ்டார் விஜய் தொலைக்காட்சியிலும், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் மேலதிக ஊடக சேவை மூலமாகவும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. எண்டெமால் ஷைன் இந்தியா (தற்போது பனிஜெய் என்டர்டெய்ன்மென்ட்) நிறுவனத்தின் தயாரிப்பில் ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியின் 7 பருவங்களை முன்னனி நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.
தேம்பாவணி (Thembavani) என்னும் நூல் இயேசு கிறிஸ்துவின் வளர்ப்பு தந்தையான புனித யோசேப்பு மீது இயற்றப்பட்ட முதற் பெரும் செய்யுள் வகை நூலாகும். இந்நூல் இத்தாலிய நாட்டவரான வீரமாமுனிவர் அவர்கள் தமிழில் திறம்பட ஆக்கிய நூல் எனப் புகழப்படுகிறது. கிறிஸ்தவ சமயத்தின் சுருக்கமென்றே இந்நூலை அறிஞர்கள் மதிப்பிடுகின்றனர்.
காதலிக்க நேரமில்லை (2025 திரைப்படம்)
காதலிக்க நேரமில்லை (Kadhalikka Neramillai) என்பது 2025 இல் கிருத்திகா உதயநிதியின் எழுத்து, இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். காதல் நகைச்சுவை தொடர்பான இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் தயாரித்தார். இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின், தென் முனையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படும் இம்மாநிலமானது, பரப்பளவில் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாக மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது. உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பேசும் தமிழர் வாழும் பகுதியே தமிழ்நாடு என வழங்கப்படுகிறது.
காமராசர் (ஆங்கில மொழி: Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975) ஓர் இந்திய விடுதலைப் போராட்ட ஆர்வலர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் 13 ஏப்ரல் 1954 முதல் 2 அக்டோபர் 1963 வரை ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். இவர் 1964 முதல் 1967 வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார்.
அசித்து குமார், (Ajith Kumar, பிறப்பு மே 1, 1971) தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவரது இரசிகர்கள் இவரை அல்டிமேட் ஸ்டார் என்றும் AK என்றும் அழைக்கிறார்கள்.
சைஃப் அலி கான் (இந்தி: सैफ़ अली ख़ान, வங்காள மொழி: সাইফ আলি খান, உருது: سیف علی خان ஒலிப்பு [sɛf əli xɑn] இந்தியாவில் புது டெல்லியில் 16 ஆகஸ்ட் 1970 அன்று பிறந்தார்) பாலிவுட் திரைப்படங்களில் நடிக்கும் இந்திய நடிகர் ஆவார். இவர் பட்டாடி நவாப்பான மன்சூர் அலிகான் பட்டாடி மற்றும் நடிகை சர்மிளா தாகூரின் மகனாவார். இவருக்கு நடிகை சாபா அலிகான் மற்றும் சோஹா அலிகான் ஆகிய இரண்டு சகோதரிகள் உள்ளனர்.
கேல் ரத்னா விருது (அதிகாரப்பூர்வமாக: மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது) என்பது இந்திய விளையாட்டுத் துறையில் சாதனை படைத்தோருக்கு வழங்கப்படும் உயரிய விருதாகும். மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவாக ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது என்ற பெயரில் வழங்கப்பட்டு வந்த இந்த விருது நரேந்திர மோடி அரசால் 2021 ஆம் ஆண்டு மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்தி மொழியில் கேல் ரத்னா என்பது விளையாட்டில் இரத்தினக்கல் போன்றவர் என பொருள்படும்.
திவ்ய தேசங்கள் (ஆங்கில மொழி: Divya Desam) என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும்.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
திருஉத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயில் அல்லது உத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயில் (Uthirakosamangai Temple) என்பது தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இங்கு மங்களேசுவரி சமேத மங்களேசுவரர் சிவன் கோவில் எனும் பிரபலமான இந்து கோவில் உள்ளது. ஐந்தரை அடி உயரம் - முழுவதும் விலை மதிப்பிட முடியாத மரகதத் திருமேனி.
இந்திய சோதிடத்தில் பிரீதி என்பது, பஞ்சாங்க உறுப்புக்களுள் ஒன்றான "யோகம்" என்பதனுள் அடங்கும் 27 யோகங்களுள் இரண்டாவது ஆகும். இராசிச் சக்கரத்தின் தொடக்கப் புள்ளியில் இருந்து 13° 20' தொடக்கம் 26° 40' பிரீதி யோகத்துக்கு உரியது. சூரியன், சந்திரன் ஆகிய கோள்களின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை இந்தக் கோணத்தினூடாக அதிகரிப்பதற்கு எடுக்கும் நேரத்துக்குரிய யோகம் "பிரீதி" ஆகும்.
இராமர் (Rama) இந்து இதிகாசங்களின்படி, இந்துக் கடவுள் விஷ்ணுவின் ஏழாவது அவதாரம் மற்றும் இச்வாகு குல அயோத்தியின் அரசர் தசரதனின் நான்கு மகன்களில் மூத்தவர். மற்றவர்கள் இலக்குவன், பரதன், சத்துருகனன் ஆவர். பொதுவாக இராமர் 12,00,000 ஆண்டுகளுக்கு முன்னர் திரேதா யுகத்தில் பிறந்தார் என்று குறிப்பிடப்படுகின்றார்.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2024
2024 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. 7/ஜி அக்கரன் அஞ்சாமை அதர்மக் கதைகள் அதோமுகம் அந்த நாள் அந்தகன் அப்பு ஆறாம் வகுப்பு அமரன் அமிகோ கேரேஜ் அய்யய்யோ அயலான் அரணம் அரண்மனை 4 அரிமாபட்டி சக்திவேல் அலங்கு ஆந்தை ஆப்ரேசன் லைலா ஆரகன் ஆராய்ச்சி ஆர்கே வெள்ளிமேகம் ஆர்யமாலா ஆலகாலம் ஆலன் இங்கு நான் தான் கிங்கு இங்கு மிருகங்கள் வாழும் இடம் இ-மெயில் இடி மின்னல் காதல் இது உனக்குத் தேவையா இந்தியன் 2 இரவின் கண்கள் இரவினில் ஆட்டம் பார் இரு மனசு இருளில் இராவணன் இப்படிக்கு காதல் இனி ஒரு காதல் செய்வோம் உணர்வுகள் தொடர்கதை உதிர் @ பூமரக் காத்து உயிர் தமிழுக்கு எங்க வீட்டுல பார்ட்டி எட்டும் வரை எட்டு எப்புரா எப்போதும் ராஜா எமகாதகன் எமக்குத் தொழில் ரொமான்சு எஸ்கே 23 எலக்சன் ஏழு கடல் ஏழு மலை ஐயப்பன் துணையிருப்பான் ஒயிட் ரோஸ் ஒரு தவறு செய்தால் ஒரு நொடி ஒரே பேச்சு ஒரே முடிவு ஒற்றைப் பனைமரம் ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ் கங்குவா கடமை கடைசி உலகப் போர் கருடன் கருப்பர் நகரம் கருப்புப் பெட்டி கழுமரம் கவுண்டம் பாளையம் கள்வன் கன்னி காட்ஸ்பாட் காடுவெட்டி காதலிக்க நேரமில்லை கார்டியன் காழ் கியூ ஜி பகுதி 1 கிரிமினல் கிளாஸ்மேட்ஸ் குரங்கு பெடல் குப்பன் கும்பாரி கெச். எம்.
அகத்தியர் (Agastya) என்பவர் தமிழி என்ற தமிழ் சித்தர்களில் முதன்மையானவராகவும், சப்த ரிஷிகளில் ஒருவராகவும் அறியப்படுகிறார். சிவபெருமானின் திருமணத்தினைக் காண அனைவரும் வடதிசைக்கு வந்தமையால், இவர் தென்திசைக்குப் பயணப்பட்டு அதைச் சமன்செய்ததாகவும், சிவசக்தி திருமணத்தினைத் தமிழகத்திலிருந்து கண்டவராகவும், தமிழைச் சிவபெருமானிடமிருந்து கற்று உணர்ந்து மற்றவருக்கும் போதித்த ஆசானும் ஆவார். இவரே அகத்தியம் எனும் தமிழ் மொழிக்கான முதல் இலக்கண நூலை இயம்பியவர் எனப்படுகிறார்.
அமெரிக்க ஐக்கிய நாடுகள் (United States of America/USA/US) அல்லது அமெரிக்கா (America) என்பது முதன்மையாக வட அமெரிக்கக் கண்டத்தில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இது 50 மாநிலங்களையும், ஒரு கூட்டமைப்பு மாவட்டத்தையும், ஐந்து முதன்மையான ஒன்றிணைக்கப்படாத நிலப்பரப்புகளையும் மற்றும் ஒன்பது சிறிய வெளிப்புறத் தீவுகளையும் உள்ளடக்கியுள்ளது. தொல்குடி அமெரிக்கர்களுக்காக ஒதுக்கப்பட்ட 326 பகுதிகளையும் இது உள்ளடக்கியுள்ளது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அஇஅதிமுக) என்பது தமிழ்நாடு மாநிலம் மற்றும் புதுச்சேரி ஒன்றியப் பகுதியில் உள்ள ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிரிந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ம. கோ.
'வள்ளலார்' இராமலிங்க அடிகளார் (ஆங்கில மொழி: Thiruvarutprakasa Vallalār Chidambaram Ramalingam, 5 அக்டோபர் 1823 – 30 சனவரி 1874) இந்திய நாட்டில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தை சேர்ந்த ஓர் சைவ சமய ஆன்மீகவாதி ஆவார். "எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே" என்பதைக் குறிக்கும் வண்ணம், இவர் தோற்றுவித்த மார்க்கத்திற்கு "சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்க சங்கம்" என்று பெயரிட்டார். சைவ சமயத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்த வள்ளலாரை, பழமைவாதிகள் கடுமையாக எதிர்த்தனர்.
ஆழ்வார்கள் (Alvars) இந்து சமய தெய்வமாகிய திருமாலைப் போற்றித் தமிழ்ச் செய்யுட்களால் பாடியவர்கள் ஆவர். தென்மொழியாம் தமிழ் மொழியில் வைணவ இலக்கியங்களை வளர்த்தவர்கள் பரம்பரையில், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (அல்லது) ஆழ்வார் அருளிச்செயல் என்னும் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள பாடல்களைப் பாடிய ஆழ்வார்கள் 12 பேர். அவர்களுள், இறைவனை இறைவனாகக் காணாது, இறைவனோடு உறவுமுறையில் வாழ்ந்ததால் ஆண்டாளையும், இறைவனைப் பாடாது ஆசானைப் பாடினார் என்பதால் மதுரகவியாழ்வாரையும் வேறு வரிசையில் தொகுத்து, ஆழ்வார்கள் பதின்மர் 10 பேர் மட்டுமே எனக் காட்டுவாரும் உண்டு.
பாரதிதாசன் (Bharathidasan, 29 ஏப்ரல் 1891 – 21 ஏப்ரல் 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்
சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில் (Swamimalai Swaminathaswamy Temple) முருகனின் ஆறுபடை வீடுகளில், நான்காம் படை வீடாகத் திகழ்கின்றது. இது தமிழ்நாடு மாநிலத்தில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திற்கு வடகிழக்கில் 6 கி.மீ தொலைவில் காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மீனாட்சி சுந்தரேசுவரர் எழுந்தருளியுள்ளதால் சுந்தரேசுவரசுவாமி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்
தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள். அந்த வரிசையில் மொத்தம் 274 சிவ ஸ்தலங்கள் உள்ளன. அவைகளில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும், மற்ற கோயில்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் சில மற்ற இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ளன.
கடையெழு வள்ளல்கள் என்போர் சங்க காலத் தமிழகத்தில் வாழ்ந்த வள்ளல்களின் தொகுப்பில் கடைசியாக வரும் ஏழு வள்ளல்கள் ஆவர். சிறுபாணாற்றுப் படையைப் பாடிய நல்லூர் நத்தத்தனார், ஏழு வள்ளல்கள் பற்றியும் அவர்களின் கொடைமடச் செயல்கள் பற்றியும் கூறியுள்ளார். கொடைமடச் செயல்கள் என்றால், பகுத்தறியாது மடமையோடு கொடையளித்த செயல்கள் என்று கூறலாம்.
வாழை (Vaazhai) 2024இல் மாரி செல்வராஜ் எழுத்து, இணை தயாரிப்பு, இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். குழந்தைகள் தொடர்பான இந்நாடகத் திரைப்படத்தை டிசுனி + ஆட்சுடார், நவ்வி சுடுடியோசு, பாஃர்மர்சு மாசுடர் பிளான் புரொடக்சன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தில் அறிமுக நடிகர்கள் பொன்வேல் எம்., ராகுல் ஆர்., கலையரசன், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
பிள்ளைத்தமிழ் என்பது தமிழ் இலக்கியத்தில் வழங்கும் பிரபந்த நூல் வகைகளுள் ஒன்று. புலவர்கள் தாம் விரும்பிய தெய்வங்கள், சமயாசாரியர்கள், புலவர் பெருமக்கள், ஆதீனகர்த்தர், அரசர், உபகாரிகள், அவர் அவர்கட்கு உகந்தவர்கள், ஆகியோரைக் குழந்தையாக உருவகித்துக் கற்பனை பல அமையப் பாடப்படுவது பிள்ளைத்தமிழாகும். குழந்தையாகக் கொண்டது பாவனையே ஆகும்.
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், (List of chief ministers of Tamil Nadu) என்பது முழுமையான நிலையில், தமிழ்நாட்டின் 1920ஆம் ஆண்டு முதலான வரலாற்றிலிருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டுச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
செக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)
செக்ஸ் இஸ் சீரோ 2002 இல் வெளிவந்த தென் கொரியத் திரைப்படமாகும். இதனை யோன் ஜி-க்யூன் எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் இம் சேங்-ஜங், ஹா ஜி-வோன் மற்றும் சோய் வோன்-யூங் ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்
இந்தியக் குடியரசுத் தலைவர் என்பவர், இந்திய தேசத்தின் தலைவர் மற்றும் இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதியும் ஆவார். இந்திய ஜனாதிபதி நாட்டின் முதல் குடிமகன் எனக் குறிப்பிடப்படுகிறார். இந்திய அரசியலமைப்பின் வாயிலாக இந்த அதிகாரங்கள் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்ட போதிலும், இந்த நிலை பெரும்பாலும் மரபுசார்ந்த ஒன்றாகும்.
திருநெல்வேலி அல்லது நெல்லை (, Tirunelveli), என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். "திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' எனச் சம்பந்தரும், "தண் பொருநைப் புனல்நாடு' எனச் சேக்கிழாரும், "பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி' என்று கம்பரும் பாடிய பூமி, திருநெல்வேலி ஆகும். இவ்வூர் அல்வாவிற்கு பெயர் பெற்றது.
திருஅண்ணாமலையார் கோயில் (Annamalaiyar Temple) என்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் (Arunachalesvara Temple) என்றும் அறியப்படும் தலம் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தலமாகும்.
கண்ணகி, தமிழில் எழுந்த ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தின் தலைவி ஆவாள். கற்பிற் சிறந்தவளாகக் காட்டப்பட்டுள்ள இவள், எவ்வித ஆராய்வுமின்றிப் பொய்க் குற்றச்சாட்டின் மீது கொலைத் தண்டனைக்கு உட்பட்ட தனது கணவனின் குற்றமற்ற தன்மையைப் பாண்டிய அரசன் நெடுஞ்செழியனிடம் வாதித்து நிரூபித்தாள். தன் பிழை கண்டு வேதனையடைந்த பாண்டியனும், அவரது மனைவியான கோப்பெருந்தேவியும் அவ்விடத்திலேயே உயிர் துறந்தனர்.
தமிழ் மாதங்கள் சித்திரை முதல் பங்குனி முடிய பன்னிரண்டு ஆகும். உண்மையில் இவை, இந்தியாவில் மட்டுமின்றி இந்தியாவுக்கு வெளியிலும் பல ஆசிய நாடுகளிலும் கூட இன்றும் சமயம் மற்றும் மரபு சார்ந்த தேவைகளுக்காகப் புழக்கத்திலுள்ள இந்துக் காலக் கணிப்பு முறையை அடிப்படையாகக் கொண்டதே. இந்துக் காலக் கணிப்பு முறை இன்று புழக்கத்திலுள்ள பகுதிகளிலெல்லாம் ஒரே விதமாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை.
தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்
இப்பட்டியல் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்த குறிப்பிடத்தக்க நடிகைகளின் பட்டியல் ஆகும்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் (Madurai Meenakshi Sundareswarar Temple) என்பது வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள, கோயில் நகரமான மதுரையின் மத்தியில், அமைந்துள்ள சிவன் ஆலயமாகும். இச்சிவ ஆலயத்தின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன். இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர்.