The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
ஆதவ் அர்ஜுனா ("Aadhav Arjuna") என்பவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும் தேர்தல் வியூக வகுப்பாளரும் விளையாட்டுத்துறை நிர்வாகியுமாவார். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளராகவுள்ளார். இவர் "அரைஸ் கேப்பிட்டல்" என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் 2021ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் 2023ஆம் ஆண்டு முதல் இந்தியக் கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவராகவும் "வாய்ஸ் ஆப் காமன்ஸ்" என்ற அரசியல் வியூக நிறுவனத்தின் நிறுவனராகவும் உள்ளார்.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கிலம்: Bhimrao Ramji Ambedkar; 14 ஏப்ரல் 1891– 6 திசம்பர் 1956) ஓர் இந்திய சட்ட வல்லுநர், பொருளாதார நிபுணர், சமூக சீர்திருத்தவாதியும் மற்றும் அரசியல் தலைவரும் ஆவார். இவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகப் பதவியேற்று, இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவிற்குத் தலைமை தாங்கினார். பட்டியல் இன மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கி தீண்டாமை ஒழியப் போராடினார்.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) கவிஞரும், எழுத்தாளரும், இதழாசிரியரும், விடுதலைப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியுமாவார். கவிதையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு "பாரதி" என்ற பட்டம் வழங்கப்பட்டது. நவீன தமிழ்க் கவிஞர்களின் முன்னோடியாகத் திகழ்ந்த இவர், தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
வேலுப்பிள்ளை பிரபாகரன் (Velupillai Prabhakaran, 26 நவம்பர் 1954 – 17 மே அல்லது 18 மே 2009) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் ஆவார். 1972 இல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது அகவையில் பிரபாகரன் தொடங்கினார். 1975 இல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் இவர் அதிகமாக இயங்கி வந்த காலகட்டத்தில், யாழ்ப்பாண மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா படுகொலைக்கு காரணமாக இவர் குற்றஞ்சாட்டப்பட்டார்.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
உலகளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6000 இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
ஸ்ரீ சுப்பிரமணியக் கடவுள் சேத்திரக் கோவை பிள்ளைத்தமிழ்
ஸ்ரீ சுப்பிரமணியக்கடவுள் சேத்திரக் கோவை பிள்ளைத்தமிழ் என்ற இந்நூல்பிள்ளைத்தமிழ் என்ற சிற்றிலக்கிய வகையைச் சார்ந்த நூலாகும். இதன் ஆசிரியர் சிதம்பர முனிவர் ஆவார். காலம் 19 ஆம் நூற்றாண்டு.
திருக்குறள் (Tirukkural), சுருக்கமாக குறள் (Kural), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று தொகுப்புகளைக் கொண்டது.
வாச்சாத்தி வன்முறை என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் நிகழ்ந்த ஒரு வன்முறைச் சம்பவம். சூன் 20-22, 1992 தேதிகளில் வாச்சாத்தி கிராமத்தில் தமிழ்நாட்டுக் காவல்துறையினர், வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் அக்கிராம மக்கள் மீது நடத்திய வன்முறை/வன்கொடுமைத் தாக்குதல்களே நிகழ்வே வாச்சாத்தி வன்முறை எனப்படுகின்றது.
தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின் தென் முனையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படும் இம்மாநிலமானது, பரப்பளவில் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாக மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது. உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பேசும் தமிழர் வாழும் பகுதியே தமிழ்நாடு என அழைக்கப்படுகிறது.
தமிழ் (Tamil language), தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்
விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் அல்லது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) என்பது தமிழ்நாட்டின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் உரிமைத் தொகையாக 1000 இந்திய ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் தமிழ்நாடு அரசுத் திட்டமாகும். இத்திட்டத்தை தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி நினைவாகப் பெயரிட்டுள்ளனர்.
இலங்கை (Sri Lanka), வரலாற்றுரீதியாக சிலோன் (Ceylon), அதிகாரபூர்வமாக இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு (Democratic Socialist Republic of Sri Lanka), என்பது தெற்காசியாவில் உள்ள ஒரு தீவு நாடு ஆகும். இது இந்தியப் பெருங்கடலில், வங்காள விரிகுடாவின் தென்மேற்கே, மன்னார் வளைகுடா, பாக்கு நீரிணை ஆகியவற்றால் இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தீவு தென்மேற்கில் மாலைத்தீவுகளுடனும், வடமேற்கே இந்தியாவுடனும் கடல் எல்லையைக் கொண்டுள்ளது.
சிறுவாபுரி பாலசுப்பிரமணியம் கோயில் (Siruvapuri Sri Balasubrahmanyam temple) தமிழ்நாட்டின் சென்னைக்கு அருகிலுள்ள் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சின்னம்பேடு பகுதியில் அமைந்துள்ளது.சிறுவாபுரி முருகன் கோவில் என்றும் அறியப்படும் இத்திருக்கோயில் 500 ஆண்டுகள் பழமையானதாகும். கிராம மக்கள் சேர்ந்து இக்கோயிலை கட்டியுள்ளனர். அரசாங்க பதிவுகளில் கோயிலின் அசல் பெயர் சின்னம்பேடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இட்லி கடை (Idly Kadai) இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் தனுஷ், நித்யா மேனன் முக்கியமான பாத்திரங்களிலும், அருண் விஜய், சாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ், சத்யராஜ், பார்த்திபன், சமுத்திரக்கனி, ராஜ்கிரண் முதலியோர் துணைப் பாத்திரங்களிலும் நடித்தனர். இப்படம் செப்டம்பர் 24, 2024இல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
சேதுபதிகள் என்பவர்கள் இந்தியாவின், தமிழ்நாட்டின் இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மறவர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் குலத்தினர். கி.பி.12 ஆம் நூற்றாண்டில் வரலாற்றில் இடத்தைப் பெற்று பின்னர் மதுரை நாயக்க மன்னர் ஆட்சியில் சீரழிவு எய்தி மீண்டும் கி.பி.17 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் வரலாற்று ஏடுகளில் காணப்படுகின்றனர். இவர்கள் மறவர் நாடு என்றும் அழைக்கப்படும் இராமநாத இராச்சியத்தை ஆண்ட தன்னாட்சி மன்னர்களாகக் கருதப்படுகின்றனர்.
கைசிக ஏகாதசி, கைசிகம் என்பது ஒருவகைப் பண் ஆகும். வராக அவதாரத்தின்போது பூமாதேவிக்கு வராகப் பெருமாள் (திருமால்) இதை அருளியதாக வராக புராணம் கூறுகிறது. வைகுண்ட ஏகாதசி முன்னர் வரும், கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி அன்று பாணர் குலதிலகம் நம்பாடுவார் கைசிகப் பண் இசையில் பாடியதால் இந்த ஏகாதசியை கைசிக ஏகாதசி என்றும் அழைப்பர்,.
திருவருகைக் காலம் (Advent) என்பது மேலைக் கிறித்தவ திருச்சபைகளில் (Western Christian churches) கடைப்பிடிக்கப்படுகின்ற திருவழிபாட்டுக் காலங்களுள் ஒன்றாகும். இயேசு கிறிஸ்துவின் பிறப்பு விழாவை எதிர்நோக்கிக் காத்திருந்து, அதற்காகத் தயாரிக்கும் காலமாகத் திருவருகைக் காலம் உள்ளது. இலத்தீன் மொழியில் adventus (பொருள்: "வருகை") என்று அழைக்கப்படுகின்ற இக்காலம் பழைய கிறித்தவ வழக்கில் "ஆகமன காலம்" என்றும் அறியப்பட்டது.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்:பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற ஒரு சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான தமிழர் கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
காமராசர் (Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975), இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் அரசியல்வாதிகளில் ஒருவருமாவார். இவர் 13 ஏப்ரல் 1954 முதல் 2 அக்டோபர் 1963 வரை ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். 1964 முதல் 1967 வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார்.
தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்
தமிழ்நாட்டிலுள்ள, சட்டமன்றத் தொகுதிகள் மொத்தம் 234 ஆகும். சட்டமன்றத்தின் தலைமை அதிகாரி, சபாநாயகர் என்று அழைக்கப்படுகிறார். சட்டசபையின் காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும்.
கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில்
கும்பேசுவரர் கோயில் (Kumbakonam Adi Kumbeswarar Temple) தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் அமைந்துள்ளது. இது சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் மகாமகம் இத்தலத்தில் சிறப்பாக நடைபெறுகிறது.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்
தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள். அந்த வரிசையில் மொத்தம் 274 சிவ ஸ்தலங்கள் உள்ளன. அவைகளில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும், மற்ற கோயில்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் சில மற்ற இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ளன.
பட்டிமன்றம் ராஜா (Pattimandram Raja) என்று பிரபலமாக அறியப்படும் சிம்சன் ராஜா என்பவர் தமிழ்நாடு மாநிலம், மதுரையைச் சேர்ந்த ஓர் தமிழ்த் திரைப்பட நடிகர், நகைச்சுவை மற்றும் பட்டிமன்றப் பேச்சாளராவார். சன் தொலைக்காட்சியில் நாள்தோறும் காலை ஒளிபரப்பப்படும் வாங்க பேசலாம் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் உள்ளார். சிவாஜி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைத்துறைக்கு அறிமுகமான இவர் மதுரை யுணைட்டட் வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.
எருமைவெட்டிபாளையம் வரமுக்தீஸ்வரர் கோயில்
எருமைவெட்டிபாளையம் வரமுக்தீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டம், எருமைவெட்டிபாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.
தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்
இப்பட்டியல் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் அதிகபட்சமாக நடித்த குறிப்பிடத்தக்க நடிகைகளின் பட்டியல் ஆகும். தமிழ்த் திரையுலகில் 10 & 10 ஆண்டுகளுக்கு இரசிகர்களால் கொண்டாடப்பட்ட முன்னணி நடிகைகளின் புகைப்படங்கள் கீழ்வருமாறு உள்ளது.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2025
இப்பட்டியல் 2025 இல் வெளியிடப்பட்ட/திட்டமிடப்பட்டுள்ள இந்தியத் தமிழ்நாட்டுத் திரைப்படத் துறையினரால் தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களின் பட்டியலாகும்.
விஜய் தொலைக்காட்சி (ஸ்டார் விஜய்) என்பது தமிழ் மொழியில் இயங்கும் 24 மணி நேர பொழுதுபோக்குக் கட்டணத் தொலைக்காட்சிச் சேவை ஆகும். இந்த அலைவரிசை நவம்பர் 24, 1994 ஆம் ஆண்டு முதல் சென்னையில் கிண்டியைத் தலைமையகமாகக் கொண்டு உலகளவில் இயங்கி வருகின்றது. இந்த அலைவரிசை ஏசியாநெட் ஸ்டார் கம்யூனிகேசன்சு நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும்.
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், (List of chief ministers of Tamil Nadu) என்பது முழுமையான நிலையில், தமிழ்நாட்டின் 1920ஆம் ஆண்டு முதலான வரலாற்றிலிருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.
புயல் (Storm) என்பது ஒரு பருப்பொருளின் அமைதி குலைந்த நிலையை, குறிப்பாக அப்பொருளின் மேற்பரப்பு பாதிக்கப்பட்ட நிலையைக் குறிக்கிறது. அதிலும் வலிமையாக காற்றின் ஆற்றலைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது. மின்னல், இடிமழை, பனிப்பொழிவு, கனமழை, ஆலங்கட்டிமழை, பனிப்புயல், பலமான மழைக்காற்று, கடும் உறைபனி, புழுதிப்புயல், மணற்புயல், வெப்பமண்டலச் சூறாவளி, அல்லது வளிமண்டலத்தின் ஊடாக பொருட்களை தூக்கி வீசுவது, இத்யாதி போன்ற குறிப்பிடத்தக்க இடையூறுகள் மூலம் காற்று என்ற பருப்பொருளின் அமைதிக் குலைவு சுட்டிக்காட்டப்படுகிறது.
திராவிட முன்னேற்றக் கழகம் (Dravida Munnetra Kazhagam, திமுக) என்பது ஓர் இந்திய அரசியல் கட்சி ஆகும். குறிப்பாக இக்கட்சி தமிழ்நாடு மாநிலத்திலும், புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்திலும் செயற்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக உள்ள திமுக, இந்திய அளவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்ற கூட்டமைப்பில் ஒரு கட்சியாக செயல்படுகிறது.
இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்
குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப் பெயர் குறிக்கிறது.
காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை (C. N. Annadurai, 15 செப்டம்பர், 1909 – 03 பெப்ரவரி, 1969) ஓர் இந்திய அரசியல்வாதியும், மதராஸ் மாநிலத்தின் கடைசி முதல்வரும், தமிழகத்தின் முதலாவது முதலமைச்சருமாவார். இவர் அறிஞர் அண்ணா எனவும் பேரறிஞர் அண்ணா எனவும் அழைக்கப்படுகிறார். இவர் இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவரும், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (All India Anna Dravida Munnetra Kazhagam) (அஇஅதிமுக) என்பது தமிழ்நாடு மாநிலம் மற்றும் புதுச்சேரி ஒன்றியப் பகுதியில் உள்ள ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிரிந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ம. கோ.
திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில்
ஆதிபுரீசுவரர் கோயில் என்பது தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்தில் திருவொற்றியூரில் அமைந்துள்ள ஒரு சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் ஆதிபுரீசுவர்; தாயார் திரிபுரசுந்தரி. இத்தலத்தின் தலவிருட்சமாக அத்தி மரமும், மகிழ மரமும் உள்ளன.
திவ்ய தேசங்கள் (Divya Desam) என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும்.
இராமநாதபுரம் சமஸ்தானம் அல்லது ராம நாடு (Ramnad Estate) என்பது, இந்தியாவின் தமிழ்நாட்டின், இராமநாதபுர மாவட்டத்தை உள்ளடக்கிய பகுதிகளாகும். சேது என்னும் கடல் பகுதியை காக்கும் பொறுப்பில் இருந்த, மன்னர்கள் தங்கள் பெயருக்குப் பின் சேதுபதி எனும் பட்டத்தை இட்டுக் கொள்வார்கள். சேது எனில் சேது சமுத்திரம் என்னும் கடல் பகுதி, பதி எனில் காவலர் எனப்பொருள்படும்.
திருவண்ணாமலை பெரிய தேர் திருவிழா
திருவண்ணாமலை பெரிய தேர் திருவிழா திருவண்ணமலையில் நடைபெறும் திருவிழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பு வாய்ந்தது. அத்திருவிழா 17 நாட்கள் நடைபெறும். ஏழாவது நாள் பஞ்சரத மகாத்தேரோட்டம் நடைபெறும் திருவிழா பெரிய தேர் திருவிழா ஆகும்.
கார்ல் என்ரிச் மார்க்சு (Karl Heinrich Marx) சுருக்கமாக கார்ல் மார்க்சு (5 மே 1818 – 14 மார்ச்சு 1883) செருமானிய மெய்யியலாளரும், பொருளாதார அறிஞரும், வரலாற்றாசிரியரும், சமூகவியலாளரும், அரசியல் கோட்பாட்டாளரும், பத்திரிகையாளரும், அரசியல் பொருளாதாரத் திறனாய்வாளரும், சோசலிசப் புரட்சியாளரும் ஆவார். 1848 ஆம் ஆண்டில் இவர் வெளியிட்ட பொதுவுடைமை அறிக்கை துண்டுப் பிரசுரம், நான்கு-பாகங்களில் மூலதனம் (1867–1883) ஆகியவை இவரது மிகவும் பிரபலமான தலைப்புகள் ஆகும். மார்க்சின் அரசியல் மற்றும் மெய்யியல் சிந்தனைகள் அடுத்தடுத்த அறிவார்ந்த, பொருளாதார மற்றும் அரசியல் வரலாற்றில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்
இந்திய விடுதலைப்போராட்டத்தில் தமிழர்கள் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தனர். 1857-ல் நடந்த சிப்பாய் கலகம் முதல் இந்திய விடுதலைப் போர் எனக் குறிப்பிடப்படுகிறது. எனினும் தென்னிந்தியாவில் அதற்கு முன்னரே பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்துக்கு எதிராகப் பல போர்களும் கிளர்ச்சிகளும் நடைபெற்றன.
வீரபாண்டிய கட்டபொம்மன் (Veerapandiya Kattabomman, 3 சனவரி 1760 - 16 அக்டோபர் 1799), தமிழகத்தில், ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்காரர் ஆவார். இவர் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர் இனத்தில் பிறந்தவர். இவருடைய முன்னோர்கள் முகமதியர்களின் படையெடுப்புக்குப்பின்பு கம்பிளி ராஜ்ஜியம் இழந்து விஜயநகரம் உருவாக்கினர்.
ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்
திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார்கோயில் (Avudaiyarkoil) இந்திய மாநிலமான தமிழ் நாடு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆவுடையார்கோயில் வட்டத்தில், திருப்பெருந்துறை ஊரில் அமைந்த தேவார பாடல் பெற்ற சோழ நாடு காவிரி தென்கரையில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும்.. திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தலமாகும்.
மோகன்தாசு கரம்சந்த் காந்தி (ஆங்கிலம்: Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948) என்பவர் ஒரு இந்திய வழக்குரைஞரும், அன்னிய ஆட்சியை எதிர்த்த தேசியவாதியும், அரசியல் அறனாளரும் ஆவார். இவர் மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாகத் தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் (Madurai Meenakshi Sundareswarar Temple) மதுரையின் நடுவே அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இச்சிவன் கோயிலின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன் ஆவர். இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர்.
சவுக்கு சங்கர் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் விமர்சகரும், ஊடகவியலாளரும் ஆவார். அரசியல், சமூக மட்டத்தில் ஏற்படும் பல்வேறு சம்பவங்களைப் பொதுவெளிக்குக் கொண்டுவந்து விவாதப் பொருளாக்கியுள்ளார். சவுக்கு டாட் நெட், சவுக்கு ஆன்லைன் உள்ளிட்ட தளங்களை நடத்திப் பின்னர் சவுக்கு மீடியா என்கிற ஊடகத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார்.
சிவனின் 108 திருநாமங்கள் அல்லது சிவாஷ்டோத்தர சத நாமாவளி என்பது சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமானின் பெயர்களை கூறி போற்றும் தோத்திரப் பாடலாகும். இப்பாடல்களில் சிவபெருமானின் நூற்றியெட்டுப் பெயர்கள் கூறப்பெற்றுள்ளன. சமஸ்கிருதத்தில் நம என்றும், தமிழில் போற்றி என்றும் சிவபெருமானின் பெயருக்குப் பின் இணைத்து பாடப்பெறுகிறது.
கார்த்திகை விளக்கீடு(கார்த்திகைத் தீபம், தீபம்; ஆங்கிலம்:Kārtthigai Vilakkēdu) என்பது கார்த்திகைத் திங்கள் முழுநிலவு நாளும் கார்த்திகை நாண்மீனும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர் தமது இல்லங்களிலும் கோவில்களிலும் பிரகாசமான விளக்குகளை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு விளக்கீட்டுத் திருநாள் ஆகும்.
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் (Muthuvel Karunanidhi Stalin, பிறப்பு: 1 மார்ச்சு, 1953) என்பவர் தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் ஆவார். இவர் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதியின் மூன்றாவது மகனும், துணை முதலமைச்சர் உதயநிதியின் தந்தையும் ஆவார்.