The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
பாரதிராஜா (Bharathiraja, பிறப்பு: சூலை 17, 1941), ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர். தேனி-அல்லிநகரம் எனும் ஊரைச் சேர்ந்த இவர் அரங்கத்திற்குள் எடுக்கப்பட்டு வந்த தமிழ்த் திரைப்படங்களை வெளிப்புற படப்பிடிப்புப் பகுதிகளுக்கு கொண்டு சென்றவர் என்ற பெருமைக்கு உரியவர். பெரும்பாலும் உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளை படம் பிடிப்பவர்.
கருப்ப கவுண்டர் பழனிசாமி (Edappadi K. Palaniswami, பிறப்பு: மே 12, 1954) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் 7ஆவது முதலமைச்சராக பொறுப்பில் இருந்தவரும் ஆவார். 28 மார்ச் 2023 முதல் இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். பதினாறாவது தமிழ்நாடு சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் ஆவார்.
வராக் கடன் அல்லது அறவே வசூலிக்க முடியாத கடன் (Bad Debt) என்பது ஒரு நிதி நிறுவனம் வழங்கிய கடனை, அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுத்தும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் வசூலிக்க இயலாத கடன் ஆகும். கணக்கீகீடு அல்லது நிதியியலில் இது கடன் பெற்றவர்களிடமிருந்து நீண்டகாலமாக அறவிடமுடியாமல் போன கடன்களின் ஒரு பகுதியைக் குறிக்கும். அவ்வாறு வசூலிக்க இயலாத வராக் கடன் தொகைகளை கணக்கீட்டுப் பதிவின்போது தொடர்புடைய கடனாளியின் பேரேட்டுக்கணக்கு பதிவு அழிக்கப்படுவதுடன் அந்நிதி நிறுவனம் அக்கடனைத் தள்ளுபடி செய்து அவ்வாண்டின் வணிகத்தில் ஏற்பட்ட நட்டமாக நட்டக் கணக்கில் தாக்கல் செய்வர்.
மோகன்தாசு கரம்சந்த் காந்தி (ஆங்கிலம்: Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948) என்பவர் ஒரு இந்திய வழக்குரைஞரும், அன்னிய ஆட்சியை எதிர்த்த தேசியவாதியும், அரசியல் அறனாளரும் ஆவார். இவர் மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாகத் தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார்.
சுனிதா லின் "சுனி" வில்லியம்சு (Sunita Lyn "Suni" Williams) (பிறப்பு: செப்டம்பர் 19, 1965) அமெரிக்க ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனையும், ஓய்வுபெற்ற ஐக்கிய அமெரிக்கக் கடற்படை அதிகாரியும் ஆவார். இவர் விண்வெளியில் அதிக நேரம் பயணம் செய்த பெண் சாதனையாளர் ஆவார் (ஏழு முறை 50 மணி நேரம், 40 நிமிடங்கள்) இவர் அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு 14ஆம் விண்வெளிப் பயணத்திற்கு உறுப்பினராக்கப்பட்டார். பின்னர் 15ஆம் விண்வெளிப் பயணத்தில் இணைந்தார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (All India Anna Dravida Munnetra Kazhagam) (அஇஅதிமுக) என்பது தமிழ்நாடு மாநிலம் மற்றும் புதுச்சேரி ஒன்றியப் பகுதியில் உள்ள ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிரிந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ம. கோ.
தமிழ்நாடு சட்டப் பேரவை (Tamil Nadu Legislative Assembly) என்பது இந்தியாவின், 28 மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் அரசியல் திட்டம் சார்ந்த சட்டங்களை இயற்றும் அவையாகும். இது தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ளது. இதன் தோற்றம் மற்றும் வரலாற்றைப் பார்க்கும் பொழுது, இது 18 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாடு சென்னை மாகாணமாக இருந்த பொழுதிலிருந்தே இப்பேரவை செயல்பட்டுக் கொண்டிருந்தது.
சவுக்கு சங்கர் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் விமர்சகரும், ஊடகவியலாளரும் ஆவார். அரசியல், சமூக மட்டத்தில் ஏற்படும் பல்வேறு சம்பவங்களைப் பொதுவெளிக்குக் கொண்டுவந்து விவாதப் பொருளாக்கியுள்ளார். சவுக்கு டாட் நெட், சவுக்கு ஆன்லைன் உள்ளிட்ட தளங்களை நடத்திப் பின்னர் சவுக்கு மீடியா என்கிற ஊடகத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார்.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
உலகளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6000 இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) ஓர் கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். கவிதையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு "பாரதி" என்ற பட்டம் வழங்கப்பட்டது. நவீன தமிழ் கவிஞர்களின் முன்னோடியாகத் திகழ்ந்த இவர், தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
திருக்குறள் (Tirukkural), சுருக்கமாகக் குறள் (Kural), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், காமம் (அல்லது இன்பம்) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991
தமிழ்நாட்டின் பத்தாவது சட்டமன்றத் தேர்தல் 1991 ஆம் ஆண்டு சூன் மாதம் நடை பெற்றது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று, ஜெ. ஜெயலலிதா முதல் முறையாக தமிழகத்தின் முதல்வரானார்.
விளாதிமிர் விளாதிமீரவிச் பூட்டின் (Vladimir Vladimirovich Putin, உருசியம்: Влади́мир Влади́мирович Пу́тин, , பிறப்பு: அக்டோபர் 7, 1952) உருசியக் கூட்டமைப்பின் தற்போதையை அரசுத்தலைவர் ஆவார். டிசம்பர் 31, 1999 இல் போரிஸ் யெல்ட்சின் பதவி விலகியதை அடுத்து பதில் அதிபராக பதவிக்கு வந்தார். பின்னர் 2000 ஆம் ஆண்டில் நிகழ்ந்த அரசுத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அரசுத்தலைவரானார்.
தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின், தென் முனையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படும் இம்மாநிலமானது, பரப்பளவில் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாக மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது. உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பேசும் தமிழர் வாழும் பகுதியே தமிழ்நாடு என வழங்கப்படுகிறது.
அமரன் (Amaran) இராஜ்குமார் பெரியசாமி எழுத்து, இயக்கத்தில், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல், சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்தியா தயாரிப்பில், 31 அக்டோபர் 2024இல் வெளிவந்த தமிழ் அதிரடி போர்த் திரைப்படமாகும். இப்படத்தில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் வரதராஜனாகவும், சாய் பல்லவி, பவண் அரோரா, ராகுல் போஸ், லல்லு, அனுன் பாவ்ரா, அஜே நாக ராமன், மீர் சல்மான், கௌரவ் வெங்கடேசு, ஸ்ரீ குமார் ஆகியோரும் நடித்துள்ளனர். இது இராணுவ வீரர் முகுந்த் வரதராஜனை அடிப்படையாகக் கொண்ட சிவ் அரூர் மற்றும் இராகுல் சிங் எழுதிய இந்தியாஸ் மோஸ்ட் பியர்லெஸ் என்ற புத்தகத் தொடரின் தழுவலாகும்.
பிரதான் மந்திரி மாத்ரி வந்தனா யோஜனா
பிரதம மந்திரி அன்னை பாதுகாப்பு திட்டம், பிரதான் மந்திரி மாத்ரி வந்தனா யோஜனா (PMMVY), முன்பு இந்திரா காந்தி மாத்ரித்வா சஹ்யோக் யோஜனா என அறியப்பட்டது, இது இந்திய அரசாங்கத்தால் நடத்தப்படும் மகப்பேறு நன்மை திட்டமாகும். இது முதலில் 2010 இல் தொடங்கப்பட்டது மற்றும் 2017இல் மறுபெயரிடப்பட்டது. இத்திட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகிறது.
தமிழ்நாடு அமைச்சரவை (Tamil Nadu Council of Ministers), தமிழ் நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும் செயலாட்சியர்கள். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார்.
தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024
இந்தியாவின் 18 ஆவது மக்களவைக்கான தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 அன்று நடந்தது. இத்தேர்தல் முடிவுகள் இந்தியாவின் பிற பகுதிகளிலும் தேர்தல் முடிவுற்ற பின்னர் சூன் 4 அன்று வாக்கு எண்ணிக்கைக்குப் பின்னர் வெளியிடப்பட்டது.இதில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளையும் வென்றது.
சினேகன் (Snehan) தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும், நடிகருமாவார்..2018 ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டார். விவசாயக் குடும்பத்தில் எட்டாவது மகனாகப் பிறந்த இவருக்கு 6 மூத்த சகோதரர்களும் ஒரு மூத்த சகோதரியும் உள்ளனர்.
தடா பெரியசாமி (பிறப்பு: 5 செப்டம்பர், 1962) தமிழக அரசியல்வாதி மற்றும் பட்டியலின மக்கள் செயற்பாட்டாளர் ஆவார். பஞ்சமி நிலம் மீட்புப்பணிக்காக மண்ணுரிமை மீட்பு இயக்கம் என்ற அமைப்பையும், நந்தனார் சேவாசிரம அறக்கட்டளையையும் நடத்தி வருகிறார். 21 அக்டோபர் 2024 முதல், அதிமுகவின் எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளராக இருந்து வருகிறார்.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டுச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
ஆதவ் அர்ஜுனா ("Aadhav Arjuna") என்பவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும் தேர்தல் வியூக வகுப்பாளரும் விளையாட்டுத்துறை நிர்வாகியுமாவார். இவர் "அரைஸ் கேப்பிட்டல்" என்ற நிறுவத்தின் நிர்வாக இயக்குநராகவும் 2021ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் 2023ஆம் ஆண்டு முதல் இந்தியக் கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவராகவும் "வாய்ஸ் ஆப் காமன்ஸ்" என்ற அரசியல் வியூக நிறுவனத்தின் நிறுவனராகவும் உள்ளார். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக இருந்து, 2024 திசம்பரில் கட்சியிலிருந்து விலகினார்.
பாரதிதாசன் (Bharathidasan, 29 ஏப்ரல் 1891 – 21 ஏப்ரல் 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
சாய் சுதர்ஷன் என்றும் அழைக்கப்படும் பரத்வாஜ் சாய் சுதர்சன் (பிறப்பு 15 அக்டோபர் 2001) ஒரு இந்தியத் துடுப்பாட்ட வீரர், தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் விளையாடியுள்ளார். அவர் உள்நாட்டுத் துடுப்பாட்டத்தில் தமிழகத்திற்காகவும், இந்தியன் பிரீமியர் லீக்கில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காகவும் விளையாடுகிறார். 2019/20 இல் பாளையம்பட்டி ராஜா கிண்ணப் போட்டிகளில், 52.92 சராசரியில் 635 ரன்களுடன் ஆழ்வார்பேட்டை துடுப்பாட்டக் கழகத்தின் முன்னணி ஆட்டக்காரராக இருந்தார்.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்:பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற ஒரு சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான தமிழர் கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
பிரான்சிசுகோ யோசு டி கோயா ஒய் லூசியெண்டசு சுருக்கமாக பிரான்சிசுகோ கோயா (Francisco Goya,) என்றழைக்கப்படுகிறார். மார்ச் 30, 1746 - ஏப்ரல் 16, 1828 வரையிலான காலத்தில் இவர் எசுபானியாவின் கலை இலக்கிய அறிவுசார் இலக்கியத்தின் ஓவியராகவும், அச்சு மூலம் ஓவியத்தை உருவாக்கும் அச்சோவியராகவும் இருந்தார். இவர் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்த மிக முக்கியமான எசுப்பானியக் கலைஞராகக் கருதப்படுகிறார், மேலும், வாழ்க்கை முழுவதும் ஒரு வர்ணனையாளராகவும் வரலாற்றாளராகவும் நீண்ட காலத்திற்கு இருந்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர்
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு நடைபெறும் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு அடுத்த நிலையில் அதிகத் தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி பிரதான எதிர்க்கட்சி என்கிற தகுதியைப் பெறுகிறது. இத்தகுதியைப் பெற அந்தக் கட்சி குறைந்தது 24 தொகுதிகளிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். பிரதான எதிர்க்கட்சியின் பேரவைக்குழுத் தலைவர் தமிழ்நாடு சட்டப்பேரவையினால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் என்று அழைக்கப்படுகிறார்.
தமிழ் (Tamil language) தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (English: Bhimrao Ramji Ambedkar; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) ஓர் இந்திய சட்ட வல்லுநர், பொருளாதார நிபுணர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் அரசியல் தலைவரும் ஆவார். இவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகப் பதவியேற்று இந்திய அரசியலமைப்பு வரைவு குழுவிற்குத் தலைமை தாங்கினார். பட்டியல் இன மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கி தீண்டாமை ஒழியப் போராடினார்.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் என்பது தமிழ் மொழியில் வெளிவந்த அனைத்துத் திரைப்படங்களையும் அகர வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை (C. N. Annadurai, 15 செப்டம்பர், 1909 – 03 பெப்ரவரி, 1969) ஓர் இந்திய அரசியல்வாதியும், மதராஸ் மாநிலத்தின் கடைசி முதல்வரும், தமிழகத்தின் முதலாவது முதலமைச்சருமாவார். இவர் அறிஞர் அண்ணா எனவும் பேரறிஞர் அண்ணா எனவும் அழைக்கப்படுகிறார். இவர் இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவரும், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார்.
முகம்மது நபி அல்லது முகம்மது (Muḥammad, Arabic: محمد, பிறப்பு பொ.ஊ. 570, இறப்பு 8 சூன் பொ.ஊ. 632 கணிப்பு), அராபியப் பெயர்: அபூ அல்-காசிம் முகம்மது இப்னு அப்தல்லா இப்னு அப்தல்-முத்தலிப் இப்னு ஹாசிம் (Abū al-Qāsim Muḥammad ibn ʿAbd Allāh ibn ʿAbd al-Muṭṭalib ibn Hāshim, ابو القاسم محمد ابن عبد الله ابن عبد المطلب ابن هاشم) என்பவர் மக்கா நகரைச் சேர்ந்த அராபியர் ஆவர்.
மிக்-23 அல்லது மிகோயன்-குருவிச் மிக்-23 தரைத்தாக்குதல் விமானமாகும். இது ஆரம்பத்தில் மிகோயன் குருவிச் விமானம் கட்டும் நிறுவனத்தால் சோவியத் வான்படைக்காக வடிவமைக்கப்பட்டது. இதுவே முதலில் கீழே தரையில் உள்ள இலக்கைப் காணக்கூடிய ராடாரை கொண்டதும் பார்வை எல்லைக்கு அப்பால் உள்ள இலக்குகளை தாக்க கூடிய எறிகணைகளைக் கொண்டதுமான முதல் விமானமாகும்.
வெண்ணந்தூர் (ஆங்கிலம்:Vennandur) :இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இராசிபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இங்குள்ளது. இங்கு வெண்ணந்தூர் ஏரி உள்ளது.வெண்ணந்தூர் பேரூராட்சி பிரதான தொழிலாக நெசவுத்தொழில் உள்ளது.
செவ்வாய்க்கிழமை(மங்களவாரம்) என்பது 2023 ஆம் ஆண்டு அஜய் பூபதி எழுதி இயக்கிய இந்திய தெலுங்கு மொழி உளவியல், இயற்கைக்கு அப்பாற்பட்ட திகில் படமாகும். இது ஐந்து இந்திய மொழிகளில் 17 நவம்பர் 2023 அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. கன்னடத்தில் மங்களவாரம் என்றும், இந்தியில் மங்களவார் என்றும், தமிழில் செவ்வாய்கிழமை என்றும், மலையாளத்தில் சோவ்வாழ்ச்ச என்றும் வெளியிடப்பட்டது.
காமராசர் (English: Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975) ஓர் இந்திய விடுதலைப் போராட்ட ஆர்வலரும், அரசியல்வாதியுமாவார். இவர் 13 ஏப்ரல் 1954 முதல் 2 அக்டோபர் 1963 வரை ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். இவர் 1964 முதல் 1967 வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார்.
இயற்கை வளங்கள் (natural resources), அல்லது பொருளாதார ரீதியில் நிலம் மற்றும் மூலப்பொருள் அல்லது கச்சாப் பொருட்கள் எனப்படுபவை ஒப்பிட்டளவில் மனிதத் தலையீடுகளின்றித் தன் இயல்பு நிலையில் சூழல் தொகுதிகளில் காணப்படும் பொருட்கள் ஆகும். இயற்கை வளங்கள் சுற்றுச்சூழலிலிருந்து தருவிக்கப்படுபவை. இவற்றில் பெரும்பான்மையானவை நம் வாழ்க்கைக்கு அத்தியாவசியமானவையாகவும் தேவைகளுக்குப் பயன்படக்கூடியவைகளாகவும் அமைகின்றன.
தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் (Local government bodies in Tamil Nadu) என்பது இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தின் ஊர்களை அந்த ஊரின் மக்கள் தொகை மற்றும் வருவாய்க்கு ஏற்பப் பிரிக்கப்பட்ட உள்ளாட்சிப் பிரிவுகளைக் குறிக்கும். இந்திய அரசியலைப்புச் சட்டம் பகுதி IV-இல் உள்ளாட்சி அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு அதிகாரங்கள், பொறுப்புகள் வழங்கப்பட்டன. தமிழகத்தில் ஊராட்சிகள் சட்டம் - 1994 இயற்றப்பட்டு, 1994 ஏப்ரல் 22-ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது.
ஆப்பிள் நிறுவனம் (முந்தையப்பெயர்: ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனம்) ஒரு அமெரிக்கக் கணினி மற்றும் நுகர்வோர் இலத்திரனியல் கருவிகள் நிறுவனமாகும். இந்த நிறுவனமானது 1976 ஆம் வருடம் ஏப்ரல் முதலாம் நாள் குபெர்டினோ, கலிபோர்னியாவில் துவங்கப்பட்டது. கணினி மட்டுமின்றி ஐப்பாடு, ஐஃபோன் போன்ற நுகர்வோர் இலத்திரனியல் கருவிகள் மற்றும் மாக் ஓ.எசு பணிசெயல் முறைமை, ஃபைனல் கட் ப்ரோ, ஐடியுன்ஸ், ஐலைஃப் போன்ற மென்பொருளையும் உருவாக்குகிறது இந்த நிறுவனம்.
தமிழகப் பேரூராட்சிகள், தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், சென்னை மாவட்டம் தவிர்த்த, 37 மாவட்டங்களில் 488 பேரூராட்சிகள் உள்ளது. தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டம் குறைந்த அளவில் 2 பேரூராட்சிகளையும், கன்னியாகுமரி மாவட்டம் அதிக அளவில் 51 பேரூராட்சிகளையும் கொண்டுள்ளது. இப்பேரூராட்சிகளை மாநில அளவில் நிர்வகிக்க, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் பேரூராட்சிகள் இயக்ககம் சென்னையில் செயல்படுகிறது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) என்பது தென்னிந்தியாவின், தமிழ்நாட்டின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் உரிமைத் தொகையாக 1000 ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் தமிழ்நாடு அரசு திட்டமாகும். இத்திட்டம் தமிழக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி நினைவாக பெயரிடப்பட்டது.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் , 2012
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 (போக்சோ சட்டம்), (The Protection of Children from Sexual Offenses (POCSO) Act, 2012) என்பது , இந்தியாவில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டமாகும். இதனைச் சுருக்கமாக போக்சோ சட்டம் அல்லது போக்ஸோ சட்டம் என அழைக்கப்படுகிறது. இச்சட்டம் , மாநிலங்களவையில் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 10ம்தேதியும், மக்களவையில் மே மாதம் 22ம் தேதியும் நிறைவேற்றப்பட்ட சட்டமாகும்.இதற்கான விதிமுறைகளும் உருவாக்கப்பட்டு, நவம்பர் 14ம் தேதி அரசிதழ் அறிவிக்கை வெளியிடப்பட்டது.
சுற்றுச் சூழல் பாதுகாப்பு (environmental protection) என்பது சுற்றுச் சூழலை தனிமனிதனோ, அமைப்போ, அல்லது அரசாங்கமோ இயற்கை சூழலுக்காகவும், மனிதனின் நன்மைக்காகவும் பாதுகாக்கும் ஒரு பழக்கமாகும். மக்கள்தொகை பெருக்கத்தினாலும் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் சுற்றுச்சூழல் சில நேரங்களில் நிரந்தரமாக பாதிக்கப்படுகிறது. இதை உணர்ந்த அரசாங்கங்கள் சுற்றுச் சூழல் சீரழிவிற்குக் காரணமான செயல்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளன.
தமிழ்நாட்டில், மாநகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் அதிக வருவாயுடைய ஊர்களை 148 நகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த நகராட்சிகளுக்கு அரசு அதிகாரிகள் நகராட்சி ஆணையாளர்களாக, அரசின் மூலம் நியமிக்கப்படுகின்றனர். இந்த நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் இருந்து நகர்மன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர்.
விசயகாந்து (Vijayakanth, விஜயகாந்த்; இயற்பெயர்: விஜயராஜ், 25 ஆகத்து 1952 – 28 திசம்பர் 2023) ஒரு திரைப்பட நடிகரும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் கட்சியின் நிறுவனத் தலைவரும் ஆவார். இவர் 2006 முதல் 2016 வரை தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினராகவும், 2011ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். இவரது நான்கு தசாப்த திரை வாழ்க்கையில் இவர் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சிலந்திகள் அல்லது எட்டுக்கால் பூச்சிகள் என்பன எட்டுக்கால்களை உடைய, சவைக்கும் வாய்ப்பகுதிகள் இல்லாத, இருபகுதியான உடல்பிரிவுகள் உடைய, காற்றை உள்வாங்கி மூச்சுவிடும் கணுக்காலி வகைப் பூச்சிகள். இவை தம் உடலில் உள்ள சுரப்பியில் இருந்து மெல்லிய நூல் போன்ற இழை ஆக்குவது இதன் சிறப்பியல்பு ஆகும். இந்த சிலந்திநூலை நூலாம்படை என்றும், சிலந்தியை நூலாம்பூச்சி என்றும் கூறுவர்.
செயற்கை நுண்ணறிவு அல்லது செயற்கை அறிதிறன் ((Artificial intelligence)) (AI) மனிதனுக்கு இயந்திரத்திற்கும் இடையில் காணப்படும் வேறுபாடு என்னவென்றால் படைப்பாக்க திறன் ஆகும் . இந்த படைப்பாக்க திறன் இயந்திரங்கள் மூலமும் சாத்தியப்படுமானால் அதுவே செயற்கை நுண்ணறிவு என அழைக்கப்படுகிறது.கணினி அறிவிகயலின் பரந்த கிளையாக செயற்கை நுண்ணறிவு காணப்படுகிறது. பொதுவாக மனித நுண்ணறிவு தேவைப்படும் பணிகளைச் செய்யும் திறன் கொண்ட இயந்திரங்களை உருவாக்க செயற்கை நுண்ணறிவின் பங்கு பெருமளவில் தேவைப்படுகிறது.இச் செயற்கை நுண்ணறிவு திட்டமிடல் சிந்தித்தல் எண்ணங்களை கற்றுக் கொள்ளுதல் என பல்வேறு நுண்ணறிவு திறங்களை உள்ளடக்கியுள்ளது.
எல் தோர்னிங்-இசுமிட் (Helle Thorning-Schmidt, டேனிய பலுக்கல்: ; பிறப்பு 14 திசம்பர் 1966) ஓர் டேனிசு அரசியல்வாதியும் தற்போதைய டேனிசு சமூக சனநாயகவாதக் கட்சியின் தலைவரும் ஆவார். 2005ஆம் ஆண்டு டேனிசு நாடாளுமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு கட்சித்தலைவராக மோகென் லிக்கெடோஃப்ட்டிற்கு மாற்றாக பதவியேற்றார். 2007ஆம் ஆண்டு பொதுத்தேர்தல்களில் தனது கட்சிக்கு பெரும்பான்மை பெற இயலவில்லை.
இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்
குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப் பெயர் குறிக்கிறது.