The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
பிரியங்கா தேசுபாண்டே (Priyanka Deshpande) (பிறப்பு: ஏப்ரல் 28, 1990) தமிழ்நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சித் தொகுப்பாளரும் நடிகையும் ஆவார். இந்தத் துறையில் அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய தொலைக்காட்சித் தொகுப்பாளர்களில் பிரியங்காவும் ஒருவர். ஊ சொல்றியா ஊகும் சொல்றியா, கலக்கப் போவது யாரு?, சூப்பர் சிங்கர் ஜூனியர், எயார்டல் சூப்பர் சிங்கர், தி வால் (தமிழ்), ஸ்டார்ட் மியூசிக், ஒல்லி பெல்லி, சூரிய வணக்கம், இசை அன்லைக்டு, அழகிய பெண்ணே, கிளிப்ஸ், ஜோடி நம்பர் ஒன், கிங்ஸ் ஆஃப் காமெடி ஜூனியர்ஸ் முதலிய பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியதற்காகப் பரவலாக அறியப்படுகிறார்.
பெரிய வியாழன் அல்லது புனித வியாழக்கிழமை (Holy Thursday, Maundy Thursday) என்பது கிறித்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் இறுதி நாள்களை நினைவுகூர்ந்து உயிர்ப்பு ஞாயிறுக்கு முன் வரும் வியாழன் அன்று கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும். இது பெரிய வாரம் அல்லது புனித வாரம் என்று அழைக்கப்படுகின்ற வாரத்தில் வருகின்ற வியாழக்கிழமை ஆகும். நற்செய்திகளில் கூறியுள்ளது போன்று, திருத்தூதர்களுடனான இயேசுவின் இறுதி இராவுணவு, மற்றும் கால்களைக் கழுவுதல் ஆகிய நிகழ்வுகளை கிறித்தவர்கள் இந்நாளில் நினைவுகூருகின்றனர்.
புனித வெள்ளி (Good Friday) என்பது கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும். இந்நாள் இயேசு உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்தைய வெள்ளிக்கிழமை நிகழும். இவ்விழா பெரிய வெள்ளி அல்லது ஆண்டவருடைய திருப்பாடுகளின் வெள்ளி என்றும் அழைக்கப்படுகிறது.
தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்களின் பட்டியல்
தமிழ்த் திரைப்படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர்களின் பெயர்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்தியத் திரைப்படங்களில், பாடல்களின் பங்கும், அப்பாடல்களை உருவாக்கும் இசையமைப்பாளர்களின் பங்கும் இன்றியமையாதது. இசையமைப்பாளர்களில் ஒருசிலர் சிறந்த பாடகராகவும், நடிகராகவும் விளங்குகின்றனர்.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கிலம்: Bhimrao Ramji Ambedkar; 14 ஏப்ரல் 1891– 6 திசம்பர் 1956) ஓர் இந்திய சட்ட வல்லுநர், பொருளாதார நிபுணர், சமூக சீர்திருத்தவாதியும் மற்றும் அரசியல் தலைவரும் ஆவார். இவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகப் பதவியேற்று, இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவிற்குத் தலைமை தாங்கினார். பட்டியல் இன மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கி தீண்டாமை ஒழியப் போராடினார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 142
இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 142ன் கீழ் இந்திய உச்ச நீதிமன்றம், தனது சிறப்பு அதிகார வரம்பைப் பயன்படுத்தி, எந்தவொரு காரணத்திற்காகவும் அல்லது அதன் முன் நிலுவையில் உள்ள வழக்கு விசயத்தில் முழுமையான நீதியை வழங்குவதற்குத் தேவையான ஆணையை அல்லது உத்தரவை பிறப்பிக்கலாம். நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட எந்தவொரு சட்டத்தின் விதிகளுக்கும் உட்பட்டு, இந்திய உச்ச நீதிமன்றம், ஒருவரின் இருப்பை பாதுகாக்கும் நோக்கத்திற்காக எந்த உத்தரவையும் பிறப்பிக்க மற்றும் அனைத்து அதிகாரங்களையும் கொண்டுள்ளது. இச்சட்டப் பிரிவு 142 என்பது இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு, இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள சிறப்பு அதிகாரம் ஆகும்.
மணலூர் செல்லாண்டியம்மன் கோயில்
மணலூர் செல்லாண்டியம்மன் கோயில் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், மணலூர் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும். இக்கோவில் அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்த சந்நிதியை குலதெய்வமாக வழிபடுபவர்கள், கண்ணந்தை குலம் மற்றும் கண்ணன் குலத்தை சார்ந்தவர்கள்.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
உலகளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6000 இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
நற்கருணை ஆராதனை (Eucharistic adoration) என்பது கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம் மற்றும் லூதரனிய கிறிஸ்தவ பிரிவுகளில், இயேசுவின் திருவுடலாக மாறிய அப்பத்தை இறைமக்கள் ஆராதிக்கும் வழிபாடு ஆகும். திருப்பலியில் ஒப்புக்கொடுக்கப்படும் அப்பத்தில், இயேசு கிறிஸ்து தனது உடலோடும், இரத்தத்தோடும், ஆன்மாவோடும், இறைத்தன்மையோடும் பிரசன்னமாகிறார் என்பது கத்தோலிக்க நம்பிக்கை. எனவே, நற்கருணை ஆராதனை என்பது அப்பத்தில் பிரசன்னமாகி இருக்கும் இயேசுவை ஆராதிப்பது ஆகும்.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) ஓர் கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். கவிதையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு "பாரதி" என்ற பட்டம் வழங்கப்பட்டது. நவீன தமிழ் கவிஞர்களின் முன்னோடியாகத் திகழ்ந்த இவர், தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
திருக்குறள் (Tirukkural), சுருக்கமாகக் குறள் (Kural), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், காமம் (அல்லது இன்பம்) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது.
தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின், தென் முனையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படும் இம்மாநிலமானது, பரப்பளவில் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாக மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது. உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பேசும் தமிழர் வாழும் பகுதியே தமிழ்நாடு என வழங்கப்படுகிறது.
குட் பேட் அக்லி (தமிழ்: நல்லது கெட்டது அசிங்கமானது) ஓர் அதிரடித் தமிழ்த் திரைப்படமாகும். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா கிருஷ்ணன், பிரபு, பிரசன்னா, அர்ஜூன் தாஸ், சுனில் வர்மா, யோகி பாபு, சைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் 2023-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, 10 ஏப்ரல் 2025 அன்று வெளியானது.
பிரெஞ்சுப் புரட்சி (French Revolution, பிரெஞ்சு: Révolution française; 1789–1799) பிரான்சு மற்றும் பிற ஐரோப்பியப் பகுதிகளில் பண்பாடு மற்றும் அரசியல் களங்களில் நிகழ்ந்த பெரும் மாற்றங்களைக் குறிக்கிறது. இதன் விளைவாகப் பிரான்சில் பல நூற்றாண்டுகளாக நீடித்திருந்த முழு மன்னராட்சி முறை வீழ்ந்தது. நிலமானிய, நிலப்பிரபுத்துவ, கிறித்தவ திருச்சபை அதிகார முறைமைகளின் ஆதிக்கம் சரிந்து, பிரெஞ்சு சமூகத்தில் மாபெரும் மாற்றங்கள் ஏற்பட்டன.
தமிழ் (Tamil language) தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்
குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப் பெயர் குறிக்கிறது.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டுச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
செயற்கை நுண்ணறிவு அல்லது செயற்கை அறிதிறன் ((Artificial intelligence)) (AI) மனிதனுக்கு இயந்திரத்திற்கும் இடையில் காணப்படும் வேறுபாடு என்னவென்றால் படைப்பாக்க திறன் ஆகும். இந்த படைப்பாக்க திறன் இயந்திரங்கள் மூலமும் சாத்தியப்படுமானால் அதுவே செயற்கை நுண்ணறிவு என அழைக்கப்படுகிறது. கணினி அறிவிகயலின் பரந்த கிளையாக செயற்கை நுண்ணறிவு காணப்படுகிறது.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்:பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற ஒரு சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான தமிழர் கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்
பட்டியல் இனத்தவர்கள் மற்றும் பட்டியல் பழங்குடிகள் இனத்தவர்கள் (Scheduled Castes & Scheduled Tribes) என்ற சமூகத்தவர்கள் கல்வி, பொருளாதாரம், சமூகம் மற்றும் அரசியல் தகுதிகளில் இந்திய துணை கண்டத்தில் வரலாற்று ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள். பிரித்தானிய இந்தியாவில், இவர்களை ஒடுக்கப்பட்ட மக்கள் (Depressed Class) என்று வகைப்படுத்தி, அவர்களது பொருளாதார மேம்பாட்டிற்கு பஞ்சமி நிலங்கள் ஒதுக்கப்பட்டன. மகாத்மா காந்தியும், அவர்பால் ஈர்க்கப்பட்ட என்.
வானியல் (Astronomy) என்பது விண்பொருட்கள் (அதாவது இயற்கைத் துணைக்கோள்கள், கோள்கள், விண்மீன்கள், விண்முகில்கள் மற்றும் விண்மீன் பேரடைகள்) பற்றியும், அவற்றின் இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் படிப்படியான வளர்ச்சி பற்றியும், மற்றும் பூமிக்கும் அதன் காற்று மண்டலத்துக்கும் வெளியே நடைபெறும் நிகழ்வுகளை (உ-ம்: மீயொளிர் விண்மீன் வெடிப்பு, காமா கதிர் வெடிப்பு, விண்-நுண்ணலை-பின்புலம் (Cosmic microwave background) போன்றவற்றை) அவதானிப்பதிலும், விளக்குவதிலும் ஈடுபட்டுள்ள ஒரு அறிவியலாகும். வானியலுடன் தொடர்புடைய, ஆனாலும் முற்றிலும் தனித்துவமான துறையான அண்டவியல் என்பது அண்டத்தைப் பற்றி முழுமையாக ஆய்வதாகும். வானியல் என்பது வரலாற்றில் மிகவும் பழமையான அறிவியல் துறைகளில் ஒன்றாகும்.
அறுபது ஆண்டுகள் (Samvatsara, ஆண்டு வட்டம் அல்லது சம்வத்சரம்) பெரும்பாலான இந்திய நாட்காட்டிகளில் காலக்கணிப்பில் பயன்படும் ஒரு சுற்றுவட்டம் ஆகும். இதில் அறுபது ஆண்டுகளுக்கும் பஞ்சாங்கங்களில் தனித்தனிப் பெயர்கள் குறிப்பிடப்படுவதுடன், அறுபதாண்டுகளுக்கு ஒருமுறை இப்பட்டியல் மீள்வதாகவும் சொல்லப்படுகின்றது. சமகாலத்தில் தமிழ் நாட்காட்டியிலும் கன்னடர் - தெலுங்கர் பயன்படுத்தும் உகாதி நாட்காட்டியிலும் இது பரவலாகப் பயன்படுகின்றது.
உயிர்ப்பு ஞாயிறு (Easter), ஆண்டவரின் உயிர்ப்புப் பெருவிழா அல்லது பாஸ்கா என்பது இயேசு கிறிஸ்து கி.பி. சுமார் 33ம் ஆண்டில் சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் சாவில் இருந்து உயிர்த்ததைக் குறிக்கும் விதமாக கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் ஒரு திருவிழா ஆகும். இது ஒவ்வொரு ஆண்டும் 40 நாட்கள் தவக்காலத்தின் முடிவில் வருகிறது.
அப்பர் திருநாவுக்கரசு நாயனார் பொ.ஊ. ஏழாம் நூற்றாண்டு தொடக்கத்தில், தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவரும், சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் ஆவார். இவரைத் தேவார மூவருள் இரண்டாமவர் என்றும், இறைவனிடம் பக்தி செலுத்துதலில், தொண்டை அடிப்படையாகக் கொண்டவர் என்றும் புகழ்கின்றனர்.
பத்துப்பாட்டு (Ten Idylls) என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது.
இஸ்லாமிய சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட சமயப் பணிகளுக்கும் அறப்பணிகளுக்கும் சொத்துகளைக் கொடையளிப்பதே வக்பு ஆகும். தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையோர் நலத்துறையின் கீழ் தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்படுகிறது. இஸ்லாமியரின் சமய, சமூக, பொருளாதாரப் பணிகளுக்கு வக்பு அமைப்புகள் உதவி வருகின்றன.
மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்
தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள். அந்த வரிசையில் மொத்தம் 274 சிவ ஸ்தலங்கள் உள்ளன. அவைகளில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும், மற்ற கோயில்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் சில மற்ற இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ளன.
அஜித் குமார், (Ajith Kumar, பிறப்பு மே 1, 1971) தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவரது இரசிகர்கள் இவரை அல்டிமேட் ஸ்டார் என்றும் AK என்றும் அழைக்கிறார்கள்.
இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்
இந்தியக் குடியரசுத் தலைவர் என்பவர், இந்திய தேசத்தின் தலைவர் மற்றும் இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதியும் ஆவார். இந்திய ஜனாதிபதி நாட்டின் முதல் குடிமகன் எனக் குறிப்பிடப்படுகிறார். இந்திய அரசியலமைப்பின் வாயிலாக இந்த அதிகாரங்கள் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்ட போதிலும், இந்த நிலை பெரும்பாலும் மரபுசார்ந்த ஒன்றாகும்.
அறிவியல் தமிழ் தமிழ் மொழியில் இடம்பெறும் அறிவியல் கல்வி, ஆய்வுகள், தகவல் பரிமாற்றம், பிற அறிவியல் புலமைசார் செயற்பாடுகளை முதன்மையாகக் குறிக்கின்றது. இங்கு அறிவியல் தமிழ் மொழியையும், தமிழ் மொழியில் இடம்பெறும் அறிவியல் தொடர்பான செயற்பாடுகளையும் ஒருங்கே சுட்டுகின்றது. தமிழ் மொழியில், தமிழர் இடையே அறிவியல் செயற்பாடுகள் தொன்று தொட்டு பல காலகட்டங்களில் சிறப்புற்று இருந்தாலும் அறிவியல் தமிழ் இக்காலத்தில் மேற்கே செம்மை பெற்ற அறிவியல் அணுகுமுறைகளை உள்வாங்கி தமிழில், தமிழ்ச்சூழலில் மேற்கொள்ளப்படும் அறிவியல் செயற்பாடுகளை சிறப்பாக குறிக்கின்றது.
விக்ரம் (17 ஏப்ரல் 1966) என்பவர் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர் மற்றும் குரல் நடிகர் ஆவார். இவர் 1990 ஆம் ஆண்டு முதல் சேது (1999), விண்ணுக்கும் மண்ணுக்கும் (2001), சாமி (2003), பிதாமகன் (2003), ஐ (2015) போன்ற தமிழ் மொழி திரைப்படங்களிலும், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களிலும் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். இவர் தமிழ்த் திரைப்படத் துறையில் பணி புரிந்த வரையில் 7 பிலிம்பேர் விருதுகள் பெற்றுள்ளார்.
முருகன் (Murugan) அல்லது கார்த்திகேயன் (Kartikeya) என்பவர் இந்து கடவுளான சிவன்- பார்வதி தம்பதிக்கு மகனாவார். முருகன் இந்திய துணைக்கண்டத்தில் பண்டைய காலம் தொட்டு வணங்கப்படும் ஒரு முக்கிய தெய்வமாக இருந்து வருகிறார். இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார்.
பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவும் உண்டு. அறம், பொருள், இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்களில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன. உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற பிரிவின் கீழ் வருவன.
செக்ஸ் டேப் என்பது 2014 இல் வெளிவந்த அமெரிக்க நாட்டு பாலியல் நகைச்சுவை திரைப்படமாகும். இத்திரைப்படத்தை ஜேக் கஸ்டான் என்பவர் இயக்க, கேமரன் டியாஸ், ஜசோன் செகெல், ரோப் லோவே, ரோப் கோர்ட்றி, ஜேக் பிளாக் ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தை கொலம்பியா பிக்சர்ஸ் தயாரித்து 2014 சூலை 18 அன்று வெளியிடப்பட்டு ஆரம்ப வார இறுதியில் $14.6 மில்லியன் டாலரும், உலகளவில் $126.1 மில்லியன் டாலரும் வசூலித்தது.
காமராசர் (ஆங்கிலம்: Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975) ஓர் இந்திய விடுதலைப் போராட்ட ஆர்வலரும், அரசியல்வாதியுமாவார். இவர் 13 ஏப்ரல் 1954 முதல் 2 அக்டோபர் 1963 வரை ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். இவர் 1964 முதல் 1967 வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) என்பது தமிழ்நாட்டின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் உரிமைத் தொகையாக 1000 இந்திய ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் தமிழ்நாடு அரசுத் திட்டமாகும். இத்திட்டத்தை தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி நினைவாகப் பெயரிட்டுள்ளார்கள்.
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (Pradhan Mantri Kisan Samman Nidhi) என்பது இந்திய அரசாங்கத்தின் ஒரு திட்டமாகும். இதில் அனைத்து சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கும் குறைந்தபட்ச வருமான ஆதரவாக ஆண்டுக்கு, ₹6,000 (2020 இல் நிகர மதிப்பு ₹6,000 or ஐஅ$70) நிதி உதவி அளிக்கப்படும். இந்த திட்டத்தை 2019 பிப்ரவரி முதல் நாள் இந்தியாவின் இடைக்கால இடைக்கால நிதியறிக்கையின் போது பியுஷ் கோயல் அறிவித்தார்.
விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்
விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
பூமி, அதன் கூட்டமைவு, கட்டமைப்பு, இயற்பியல் இயல்புகள், வரலாறு, மற்றும் அதனை உருவாக்கிய வழிமுறைகள் என்பவை தொடர்பான அறிவியலும், அவை பற்றிய ஆய்வும் நிலவியல் எனப்படும். இது புவி அறிவியலில் ஒரு பிரிவாகும். நிலவியல் அறிவானது, புவியியல், நிலநெய், நிலக்கரி மற்றும், இரும்பு, செம்பு, உரேனியம் போன்ற உலோகங்கள் ஆகிய இயற்கை வளங்கள் இருக்கும் இடங்களை அடையாளம் காண உதவுகின்றது.
தேனி மாவட்டம் (Theni district) என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் தேனி ஆகும். தேனி மாவட்டம் தமிழக அரசின் வருவாய்த்துறை அரசு ஆணை எண் 679, நாள் சூலை 25, 1996 இன் மூலம் மதுரை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு தேனியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது.
இயேசுவின் இறுதி இராவுணவு (Last Supper) என்பது கிறித்தவ நம்பிக்கைப்படி இயேசு கிறிஸ்து எருசலேம் சென்று துன்பங்கள் அனுபவித்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்துறந்ததற்கு முன்னால் தம் சீடர்களோடு சேர்ந்து இறுதியாக உணவு அருந்திய நிகழ்ச்சியைக் குறிக்கும். இயேசு அருந்திய இறுதி இராவுணவை நினைவுகூர்ந்து கிறித்தவர்கள் ஆண்டுதோறும் புனித வியாழன் விழாவைக் கொண்டாடுகின்றனர். மேலும், கிறித்தவர் ஆண்டு முழுவதும் கொண்டாடுகின்ற நற்கருணை, திருப்பலி நிகழ்ச்சிகளுக்கு விவிலிய அடிப்படை இந்நிகழ்ச்சியில் உள்ளது.
கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
சத்திரபதி சம்பாஜி (Sambhaji) (1657 – 1689), மராத்தியப் பேரரசர் சிவாஜி – சாயிபாய் இணையரின் மூத்த மகன் ஆவார். 9 ஆண்டுகள் மராத்தியப் பேரரசை ஆண்ட இவரை தில்லி முகலாயர்கள் சிறை பிடித்து, சித்திரவதை செய்து கொன்றனர். இவருக்குப் பின்னர் மராத்தியப் பேரரசராக இவரது ஒன்று விட்ட தம்பி இராஜாராமும், பின் சம்பாஜியின் மகன் சாகுஜியும் அரியணை ஏறினர்.
தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்
தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சாதிகளையும் பட்டியலிட்டுள்ளது. இவை முறையே; பட்டியல் பழங்குடியினர் (36) பட்டியல் சாதிகள் (76) பிற்படுத்தப்பட்ட சாதிகள் (136) பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் (இஸ்லாமியர்)(7) மிகவும் பிற்பட்ட சாதிகள் (41) சீர்மரபினர் (68) முற்பட்ட சாதிகள் (79) என்று 7 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் இருக்கும் முற்பட்ட வகுப்பினர், அனைத்து வகுப்பினரும் பங்கேற்கும் பொதுப்பிரிவுகளின் மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மட்டுமே இடம் பெற இயலும்.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2025
இப்பட்டியல் 2025 இல் வெளியிடப்பட்ட/திட்டமிடப்பட்டுள்ள இந்தியத் தமிழ்நாட்டுத் திரைப்படத் துறையினரால் தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களின் பட்டியலாகும்.
காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை (C. N. Annadurai, 15 செப்டம்பர், 1909 – 03 பெப்ரவரி, 1969) ஓர் இந்திய அரசியல்வாதியும், மதராஸ் மாநிலத்தின் கடைசி முதல்வரும், தமிழகத்தின் முதலாவது முதலமைச்சருமாவார். இவர் அறிஞர் அண்ணா எனவும் பேரறிஞர் அண்ணா எனவும் அழைக்கப்படுகிறார். இவர் இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவரும், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார்.