The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
இறகுப்பந்து விளையாட்டினை பிரிட்டானிய இராணுவ வீரர்கள் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இங்கிலாந்தில் அறிமுகம் செய்தனர். இவ்விளையாட்டினை 1873 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் ப்யூபர்ட் பிரபுவின் கிராமப் பகுதியான “பாட்மிண்டன்” (Badminton) எனும் இடத்தில் ஆடப்பட்டதால் இந்த விளையாட்டை ஆங்கிலத்தில் “பாட்மிண்டன்” என்று அழைத்தனர். இது ஒரு மட்டைப் பந்தாட்ட (racquet sport) வகை விளையாட்டு.
கைப்பந்தாட்டம் (volleyball) என்பது ஓர் அணிக்கு ஆறு வீரர்கள் வீதம் உருவாக்கப்பட்ட இரண்டு அணி வீரர்கள் ஒரு வலையால் பிரிக்கப்பட்டு கைகளால் பந்தை அடித்து ஆடுகின்ற ஒரு குழு ஆட்டமாகும். ஒவ்வோர் அணியும் தங்கள் பகுதிக்கு அனுப்பப்பட்ட பந்தை அது தரையை தொடுவதற்கு முன் கைகளால் வாங்கி, தட்டி பின்னர் எதிர்ப்பக்கத்தினரின் பகுதியில் தரையைத் தொடும்படி அனுப்புகின்ற விளையாட்டு ஆகும். எதிர்ப்பக்கத்திற்கு பந்தை அனுப்ப ஒவ்வோர் அணியும் மூன்று தட்டுதல்கள் எடுத்துக் கொள்ளலாம்.
விரைவோட்டம் (sprint) அல்லது சுருக்கோட்டம் (குறுவிரையோட்டம்) என்பது அனைத்துலகிலும் நடைபெறும் ஓர் ஓட்டப்பந்தயம். இவ்வோட்டப்போட்டி ஒலிம்பிக்கில் மிகப்பலராலும் விரும்பிப் பார்க்கப்படும் ஒரு விளையாட்டு. இவ்வகை ஓட்டப்போட்டியில் ஏறத்தாழ 8-10 பேர் ஒரே நேரத்தில் புறப்பட்டு ஒரு குறிப்பிட்ட நீளம் கொண்ட தடகளத்தை கடக்க மிகவிரைந்து ஓடுவார்கள்.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) ஓர் கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். கவிதையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு "பாரதி" என்ற பட்டம் வழங்கப்பட்டது. நவீன தமிழ் கவிஞர்களின் முன்னோடியாகத் திகழ்ந்த இவர், தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
கால்பந்தாட்ட ஆடுகளம் (அல்லது கால்பந்து மைதானம் அல்லது சாக்கர் களம்) கால்பந்தாட்டம் விளையாடுவதற்கான புற்றரையாலான பரப்பு ஆகும். இதன் அளவுகளும் குறியிடுதல்களும் கால்பந்தாட்டச் சட்டங்களின் முதல் சட்டத்தால் வரையறுக்கப்படுகின்றன. ஆடுகளத்தில் இடப்படும் அனைத்துக் கோடுகளும் அவை வரையறுக்கும் பகுதியின் அங்கமாகின்றன.
மருத்துவ சோதனையில், ஒரு நோயானது நோயை உருவாக்கும் பண்பு கொண்ட வைரசு, பக்டீரியா, பூஞ்சை, புரோட்டோசோவா, மற்றும் பல்கல ஒட்டுண்ணிகள் போன்ற உயிரினங்களின் காரணமாக ஏற்படுகிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டால், அந்நோய் தொற்றுநோய் என அழைக்கப்படுகிறது. இந்நோய்க்காரணிகள் (pathogen) விலங்குகளிலும், தாவரங்களிலும் நோயை ஏற்படுத்தலாம். தொற்றுநோயானது ஒரு குறிப்பிட்ட இனத்துக்குள்ளேயோ அல்லது ஓர் இனத்திலிருந்து, வேறொரு இனத்துக்கோ கடத்தப்படலாம்.
ஒலிம்பிக்கு விளையாட்டுகள் (Olympic Games அல்லது Olympics) என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் மாற்றி மாற்றி பல்வேறு விளையாட்டுகளுக்கு நடத்தப்படும் அனைத்துலகப் போட்டி ஆகும். இதில் ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கு பெறுகின்றனர். உலகின் முதன்மையான விளையாட்டுப் போட்டியாகக் கருதப்படும் ஒலிம்பிக்கில் 200 நாடுகளுக்கு மேல் கலந்து கொள்கின்றன.
திருக்குறள் (Tirukkural), சுருக்கமாகக் குறள் (Kural), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், காமம் (அல்லது இன்பம்) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது.
தமிழர் தாயகங்களான தமிழ்நாடும், தமிழீழமும் நீண்ட கடற்கரையைக் கொண்டவை. தமிழ்நாடு இந்தியாவின் 13% கடற்கரையையும், (1076 கி.மீ.) , தமிழீழம் இலங்கையின் 2/3 கடற்கரையையும் கொண்டுள்ளன. கடலில் உணவுக்காகவும், விற்பனைக்கும், மீன் பிடிப்பவர்களையும் அத்தொழிலுடன் நேரடி தொடர்புடைய பிற செயற்பாடுகளில் ஈடுபடும் தமிழர்களையும் தமிழ் மீனவர்கள் எனப்படுகிறது.
தமிழ் இலக்கியங்களில் யானைகளை ஆண், பெண், குட்டி, அறுபது வயதிற்கு மேலான யானை, போர் யானைகள் என்ற அடிப்படையில் மட்டும் அல்லாது இன்னும் பல்வேறுப் பிரிவுகளாக அவற்றைப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான பெயரிட்டு அழைத்து வந்துள்ளனர்.இதன் மூலம் பழந்தமிழர்களின் வாழ்வினில் யானைகள் எவ்வளவு பயன் ஆற்றின என்பதையும், தமிழர்கள் அந்த யானைகளை எவ்வளவு ஆழமாக உணர்ந்து அவற்றின் பிரிவுகளை வரையறுத்து வைத்து இருந்தார்கள் என்பதையும் அறியலாம்.
சூரிய நமஸ்காரம் அல்லது சூரியனுக்கு வணக்கம் ( Sun Salutation) , என்பது பன்னிரண்டு இணைக்கப்பட்ட ஆசனங்களின் ஓட்ட வரிசையை உள்ளடக்கிய உடற்பயிற்சியையும் நிலைகளையும் குறிக்கும் ஒரு பயிற்சியாகும். ஆசன வரிசை முதன்முதலில் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் யோகாசனமாக பதிவு செய்யப்பட்டது. இதற்கு முன்பு இந்தியாவில் இதே போன்ற பயிற்சிகள் பயன்பாட்டில் இருந்தன.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
உலகளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6000 இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
நயினார் நாகேந்திரன் (Nainar Nagendran, பிறப்பு: 16 அக்டோபர் 1968) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியும், பாரதிய ஜனதா கட்சியின் தற்போதைய மாநிலத் தலைவரும் ஆவார். இவர் 1960 அக்டோபர் 16 இல் திருநெல்வேலி மாவட்டம், பணகுடியில் பிறந்தார். தற்போது பாரதிய ஜனதா கட்சியிலும், இதற்கு முன்பு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும் இருந்தார்.
தடகள விளையாட்டுகள் (Athletics) எனப்படுவது தடகள மைதானத்தில் இடம்பெறும் ஓடுதல், எறிதல், நடத்தல், தாண்டுதல் போன்ற செயற்திறன்களை உள்ளடக்கிய பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஆகும். பெரும்பாலான இவ்விளையாட்டுகள் மிக எளிமையானவை. விலையுயர்ந்த கருவிகளையோ கட்டமைப்புக்களையோ வேண்டுவதில்லை என்பதால் இவை மிகப் பரவலாக விளையாடப்படுகின்றன.
பூமி, அதன் கூட்டமைவு, கட்டமைப்பு, இயற்பியல் இயல்புகள், வரலாறு, மற்றும் அதனை உருவாக்கிய வழிமுறைகள் என்பவை தொடர்பான அறிவியலும், அவை பற்றிய ஆய்வும் நிலவியல் எனப்படும். இது புவி அறிவியலில் ஒரு பிரிவாகும். நிலவியல் அறிவானது, புவியியல், நிலநெய், நிலக்கரி மற்றும், இரும்பு, செம்பு, உரேனியம் போன்ற உலோகங்கள் ஆகிய இயற்கை வளங்கள் இருக்கும் இடங்களை அடையாளம் காண உதவுகின்றது.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கிலம்: Bhimrao Ramji Ambedkar; 14 ஏப்ரல் 1891– 6 திசம்பர் 1956) ஓர் இந்திய சட்ட வல்லுநர், பொருளாதார நிபுணர், சமூக சீர்திருத்தவாதியும் மற்றும் அரசியல் தலைவரும் ஆவார். இவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகப் பதவியேற்று, இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவிற்குத் தலைமை தாங்கினார். பட்டியல் இன மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கி தீண்டாமை ஒழியப் போராடினார்.
செயற்கை நுண்ணறிவு அல்லது செயற்கை அறிதிறன் ((Artificial intelligence)) (AI) மனிதனுக்கு இயந்திரத்திற்கும் இடையில் காணப்படும் வேறுபாடு என்னவென்றால் படைப்பாக்க திறன் ஆகும். இந்த படைப்பாக்க திறன் இயந்திரங்கள் மூலமும் சாத்தியப்படுமானால் அதுவே செயற்கை நுண்ணறிவு என அழைக்கப்படுகிறது. கணினி அறிவிகயலின் பரந்த கிளையாக செயற்கை நுண்ணறிவு காணப்படுகிறது.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டுச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
பிரியங்கா தேசுபாண்டே (Priyanka Deshpande, பிறப்பு: ஏப்ரல் 28, 1990) தமிழ்நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சித் தொகுப்பாளரும் நடிகையும் ஆவார். இந்தத் துறையில் அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய தொலைக்காட்சித் தொகுப்பாளர்களில் பிரியங்காவும் ஒருவர். ஊ சொல்றியா ஊகும் சொல்றியா, கலக்கப் போவது யாரு?, சூப்பர் சிங்கர் ஜூனியர், எயார்டல் சூப்பர் சிங்கர், தி வால் (தமிழ்), ஸ்டார்ட் மியூசிக், ஒல்லி பெல்லி, சூரிய வணக்கம், இசை அன்லைக்டு, அழகிய பெண்ணே, கிளிப்ஸ், ஜோடி நம்பர் ஒன், கிங்ஸ் ஆஃப் காமெடி ஜூனியர்ஸ் முதலிய பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியதற்காகப் பரவலாக அறியப்படுகிறார்.
தமிழ் (Tamil language) தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்
குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப் பெயர் குறிக்கிறது.
தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின், தென் முனையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படும் இம்மாநிலமானது, பரப்பளவில் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாக மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது. உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பேசும் தமிழர் வாழும் பகுதியே தமிழ்நாடு என வழங்கப்படுகிறது.
பத்துப்பாட்டு (Ten Idylls) என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது.
நீர்நிலை (body of water) என்பது எல்லா வகையான நீரின் தொகுப்புகளையும் குறிக்கும். பொதுவாக இது புவிப்பரப்பின் மீது காணப்படும். நீர்நிலை என்ற சொல் சமுத்திரங்கள், கடல்கள், ஆறுகள், நீரோடைகள், சுனைகள், மடுக்கள் போன்ற இயற்கையான நீர்நிலைகளையும், ஏரிகள், குளங்கள், அணைகள் போன்ற மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட நீர்நிலைகளையும் குறிக்கும்.
"பாவலரேறு" பெருஞ்சித்திரனார் (10 மார்ச் 1933 – 11 சூன் 1995) தமிழ்நாட்டைச் சேர்ந்த தனித்தமிழ் அறிஞர், புலவர், இதழாளர் மற்றும் பெரியாரிய, பொதுவுடைமை, தமிழ்த் தேசியச் செயல்பாட்டாளர் ஆவார். தன் ஐம்பதாண்டு கால எழுத்துப்பணியில் கொய்யாக்கனி (1956), கனிச்சாறு உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட படைப்புகளை இயற்றினார். "மொழிஞாயிறு" என அறியப்படும் ஞா.தேவநேயப் பாவாணருடன் இணைந்து தென்மொழி இதழைத் தொடங்கி நடத்தினார்.
அப்பர் திருநாவுக்கரசு நாயனார் பொ.ஊ. ஏழாம் நூற்றாண்டு தொடக்கத்தில், தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவரும், சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் ஆவார். இவரைத் தேவார மூவருள் இரண்டாமவர் என்றும், இறைவனிடம் பக்தி செலுத்துதலில், தொண்டை அடிப்படையாகக் கொண்டவர் என்றும் புகழ்கின்றனர்.
திருத்தந்தை, பாப்பிறை, பாப்பரசர் அல்லது போப்பாண்டவர் (Pope) என்பது கத்தோலிக்க திருச்சபையின் இவ்வுலகத் தலைவரைக் குறிக்கும் பெயர் ஆகும். கிரேக்கத்தில் πάππας (Pappas) என்றும் இலத்தீனில் Papa என்றும் வழங்கும் சொல் "தந்தை" என்று பொருள்படும். இவர் உரோமையின் ஆயர், உரோமைத் தலைமைக்குரு, புனித பேதுருவின் வழிவந்தவர் போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகிறார்.
வலைப்பந்து ஏழு பேர்கள் அடங்கிய இரு அணிகளுக்கிடையே ஆடப்படும் ஓர் பந்து விளையாட்டு ஆகும்.இது பெண்கள் கூடைப்பந்து விளையாட்டின் துவக்கநிலை பதிப்புகளிலிருந்து உருவானதால் கூடைப்பந்து விளையாட்டுடன் பல ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது. இங்கிலாந்தில் 1890களில் இது ஓர் முறையான விளையாட்டாக மேம்படுத்தப்பட்டது.அங்கிருந்து பல நாடுகளுக்குப் பரவியது.பொதுநலவாய நாடுகளில் பரவலாக விளையாடப்படும் இந்த விளையாட்டினை பெரும்பாலும் பெண்களே விளையாடுகின்றனர். செவ்வக வடிவ ஆடுகளம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இரு சிறு இறுதிப்பகுதிகளிலும் உயரமான இலக்குகூடை அமைந்துள்ளது.
ட்டிக்கு பயன்படுத்தப்படும் பந்தே உள்ளரங்க கையுந்துபந்து போட்டிக்கும், கடற்கரை கையுந்துபந்து போட்டிக்கும், இதே போன்று சற்று மாறுபாடு கொண்டு ஆடப்படும் கையுந்துபந்து போட்டிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. கையுந்துபந்து ஏறக்குறைய 18 செவ்வக வடிவமுடைய செயற்கை அல்லது உண்மையான தோல்களைக் கொண்டு வட்டவடிவமாக உருவாக்கப்பட்டுள்ளது.கையுந்துபந்து உருவாக்கப்படும்பொழுது மூன்று பகுதிகளாக பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் ஆறு செவ்வக வடிவ செயற்கை அல்லது உண்மையான தோலுடன் காற்று நிரப்ப்ப்படும் ஒரு இரப்பர் பை கொண்ட வட்ட வடிவமாக ஓட்டப்படுகிறது. 2008-ல் அகில உலக கையுந்துபந்து கழகம் உள்ளரங்க கையுந்துபந்து போட்டிகளில் விளையாட ஏதுவாக மென்மையாக தொடுவதற்கும், பந்து முறையாகப் பறப்பதற்கும், எட்டு பேனல்கள் கொண்ட கைபந்தை ஏற்றுக்கொண்டது.
காமராசர் (ஆங்கிலம்: Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975) ஓர் இந்திய விடுதலைப் போராட்ட ஆர்வலரும், அரசியல்வாதியுமாவார். இவர் 13 ஏப்ரல் 1954 முதல் 2 அக்டோபர் 1963 வரை ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். இவர் 1964 முதல் 1967 வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார்.
பொதுவாக கால்பந்து அல்லது சங்க கால்பந்து (association football) என்பது, பதினொரு வீரர்கள் கொண்ட இரண்டு அணிகளுக்கு இடையில் ஒரு கோள வடிவப் பந்தினைக் கொண்டு விளையாடப்படும் ஒரு அணி விளையாட்டு ஆகும். சங்கக் கால்பந்து என்பது உலகெங்கிலும் மிகப் பிரபலமாக இருக்கும் காற்பந்து விளையாட்டு வகையாகும். இது உலகிலேயே மிகவும் பிரபலமான விளையாட்டாகக் கருதப்படுகிறது.
பிள்ளைத்தமிழ் என்பது தமிழ் இலக்கியத்தில் வழங்கும் பிரபந்த நூல் வகைகளுள் ஒன்று. புலவர்கள் தாம் விரும்பிய தெய்வங்கள், சமயாசாரியர்கள், புலவர் பெருமக்கள், ஆதீனகர்த்தர், அரசர், உபகாரிகள், அவர் அவர்கட்கு உகந்தவர்கள், ஆகியோரைக் குழந்தையாக உருவகித்துக் கற்பனை பல அமையப் பாடப்படுவது பிள்ளைத்தமிழாகும். குழந்தையாகக் கொண்டது பாவனையே ஆகும்.
தடகளப் போட்டிகள் என்பது விளையாட்டின் வகைகளில், ஓடுதல், குதித்தல் மற்றும் வீசுதல் ஆகியவற்றின் திறன்களில் நிறுவப்பட்ட போட்டிகளை உள்ளடக்கியது ஆகும். விளையாட்டு நடைபெறும் இடம், ஓடும் பாதை மற்றும் வீசுவதற்கான புல் களம் மற்றும் சில குதித்தல் நிகழ்வுகள் ஆகியவற்றிலிருந்து இந்தப் பெயர் பெறப்பட்டது. தடகளம் என்பது தனித்திறன் விளையாட்டுப் போட்டி என்ற குடையின் வகைப்படுத்தப்பட்டுள்ளது, இதில் சாலை ஓட்டம், நாடுகளுக்கிடையிலான ஓட்டம் மற்றும் பந்தய நடைப்பயிற்சி ஆகியவை அடங்கும்.
எக்மோ அல்லது பிரித்தேற்ற சவ்வு ஆக்சிசனேற்றம் (Extracorporeal membrane oxygenation|ECMO) எனப்படுவது ஒரு வகை வெளிப்புற உயிர் சுவாச ஆதரவு முறை. இதன் மூலம், இதயம் மற்றும் நுரையீரல்களில் தேவையான அளவிலான ஆக்சிஜன் வாயுக்களை பரிமாறுதல் (அ) சீரான இரத்த ஓட்டத்தை (perfusion) வழங்க இயலாத நிலைக்குள்ளான நோயாளிகளுக்கு நீடித்த இதய மற்றும் சுவாச ஆதரவை தற்காலிகமாக வழங்குவதுமாகும். தீவிர மூச்சுத் திணறலாலும், மாரடைப்பாலும் பாதிக்கப்பட்டவர்களின் நுரையீரல்கள் மற்றும் இதயம் முழுமையாக செயல்படாதபோது, எக்மோ கருவியின் உதவி மூலம் பாதிக்கப்பட்டவரின் இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, பிராணவாயு நுரையீரலுக்கு அனுப்பப்படும்.
குட் பேட் அக்லி (Good Bad Ugly) ஓர் அதிரடித் தமிழ்த் திரைப்படமாகும். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா கிருஷ்ணன், பிரபு, பிரசன்னா, அர்ஜூன் தாஸ், சுனில் வர்மா, யோகி பாபு, சைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் 2023-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, 10 ஏப்ரல் 2025 அன்று வெளியானது.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni), சுருக்கமாக எம் எஸ் தோனி என்று (பிறப்பு: சூலை 7, 1981) அறியப்படும் இவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் சர்வதேசத் துடுப்பாட்ட வீரரும் முன்னாள் தலைவரும் ஆவார். இவர் 2007 முதல் 2016 ஆம் ஆண்டு வரை வரையிட்ட நிறைவுப் போட்டிகளுக்கும், 2008 முதல் 2014ஆம் ஆண்டு வரை தேர்வுப் போட்டிகளிலும் இந்திய அணியின் தலைவராக இருந்தார். இவரின் தலைமையில் 2007 ஐசிசி உலக இருபது20 2007-08 பொதுநலவய போட்டித் தொடர், 2010 மற்றும் 2016 ஆசியக் கோப்பை, 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை மற்றும் 2013 ஐசிசி வாகையாளர் வெற்றிக்கிண்ணம் ஆகிய கோப்பைகளை இந்திய அணி வென்றுள்ளது.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்:பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற ஒரு சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான தமிழர் கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 142
இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 142ன் கீழ் இந்திய உச்ச நீதிமன்றம், தனது சிறப்பு அதிகார வரம்பைப் பயன்படுத்தி, எந்தவொரு காரணத்திற்காகவும் அல்லது அதன் முன் நிலுவையில் உள்ள வழக்கு விசயத்தில் முழுமையான நீதியை வழங்குவதற்குத் தேவையான ஆணையை அல்லது உத்தரவை பிறப்பிக்கலாம். நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட எந்தவொரு சட்டத்தின் விதிகளுக்கும் உட்பட்டு, இந்திய உச்ச நீதிமன்றம், ஒருவரின் இருப்பை பாதுகாக்கும் நோக்கத்திற்காக எந்த உத்தரவையும் பிறப்பிக்க மற்றும் அனைத்து அதிகாரங்களையும் கொண்டுள்ளது. இச்சட்டப் பிரிவு 142 என்பது இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு, இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள சிறப்பு அதிகாரம் ஆகும்.
பாட்ஷா (Baashha) என்பது 1995 இல் சுரேஷ் கிருஷ்ணாவின் எழுத்து, இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கொள்ளையர்கள் பற்றிய அதிரடி தொடர்பான இத்திரைப்படத்தில் இரசினிகாந்து, நக்மா, ரகுவரன் ஆகியோர் நடித்திருந்தனர். சனகராஜ், தேவன், சசி குமார், விஜயகுமார், ஆனந்தராஜ், சரண்ராஜ், கிட்டி, சத்தியப்பிரியா, செண்பகா, யுவராணி ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருந்தனர்.
கலித்தொகை (Kalittokai) சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது நூலாகும். பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூலான கலித்தொகையில் ஓசை இனிமையும், தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் சிறப்பான அமைப்புகளால் அமைந்த கலிப்பாவினால் சிவனைப் பற்றிய கடவுள் வாழ்த்துப் பாடல் ஒன்று உட்பட பாடப்பட்ட 150 பாடல்கள் உள்ளன. அப்பாடல்களை அடி எல்லை நோக்கில் ஆராயும் போது குறைந்த அடி எல்லையாக 11 அடிகள் கொண்ட பாடல்களும் உயர்ந்த அடி எல்லையாக 80 அடிகள் கொண்ட பாடல்களும் காணப்படுகின்றன.
அட்சய திருதியை (அல்லது அக்ஷய தீஜ்) என அறியப்படுவது இந்து மற்றும் சமணர்களின் புனித நாள் ஆகும். அது தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும்.முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாள் அட்சய திருதியை ஆகும். இந்து மதத்தில் குறிப்பிடப்படும் காக்கும் கடவுளான திருமாலால் ஆளப்படுவதாகும்.
கடையெழு வள்ளல்கள் என்போர் சங்க காலத் தமிழகத்தில் வாழ்ந்த வள்ளல்களின் தொகுப்பில் கடைசியாக வரும் ஏழு வள்ளல்கள் ஆவர். சிறுபாணாற்றுப் படையைப் பாடிய நல்லூர் நத்தத்தனார், ஏழு வள்ளல்கள் பற்றியும் அவர்களின் கொடைமடச் செயல்கள் பற்றியும் கூறியுள்ளார். கொடைமடச் செயல்கள் என்றால், பகுத்தறியாது மடமையோடு கொடையளித்த செயல்கள் என்று கூறலாம்.
கபடி அல்லது சடுகுடு அல்லது பலிஞ்சடுகுடு என்று அழைக்கப்படும் விளையாட்டு தமிழ்குடிகளால் பல காலமாக, விளையாடப்படும் தமிழர் விளையாட்டுகளுக்குள் ஒன்று. சல்லிக்கட்டிற்கு (ஏறு தழுவுதல்) தயாராகும் முன் தமிழர்கள் செய்யும் பயிற்சியே கபடி என்ற பெயரால் பல காலமாக விளையாடப்பட்டு வருகிறது. கபடி என்ற பெயரும் தமிழ்ப்பெயராக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்திய உச்ச நீதிமன்றம் (Supreme Court of India) இந்திய அரசியல் சட்டப்பிரிவு அத்தியாயம் 4, பிரிவு 5-இன் கீழ் இந்தியாவின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட நீதிமன்றமாகவும் கீழ்நீதிமன்றங்களின், உயர்நீதிமன்றங்களின் தீர்ப்புக்கு மேல் முறையீடு செய்யும் நீதிமன்றமாகவும் செயல்படுகின்றது. இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதி விசாரணைக்கு உட்பட்ட அதிகாரங்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதிகள் 124 முதல் 147-இன் கீழ் எழுதப்பட்டுள்ளன. இஃது ஒரு மேல்முறையீட்டு நீதிமன்றமாகையால், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மணிமேகலை ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்களுள் ஒன்று. இக்காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார்.மணிமேகலை காப்பியத்தில் அடி இணையும், அதன் வழிபாடும், வேறு கடவுள்களின் வழிபாடும் இருக்கும் நிலையில், அஃது ஒரு மகாயான காப்பியமாகவே இருக்கமுடியும். மேலும், மகாயான பௌத்தமானது இல்லறத்தையும், துறவறத்தையும் வலியுறுத்தும் நிலையிலும், சிலப்பதிகாரமானது இல்லறத்தையும், மணிமேகலை காப்பியம் துறவறத்தையும் வலியுறுத்துவதாலும், இவை இரட்டைக் காப்பியங்கள் ஆகும்.
தமிழர் தொழினுட்பம் என்பது தமிழர் பங்களித்து பயன்படுத்தும் பல் துறை சார் தொழில்நுட்பங்களைக் குறிக்கும். 16 ம் நூற்றாண்டு அறிவியல் புரட்சி வரைக்கும் தமிழர் தொழினுட்பம் ஏனைய நாகரிகங்களுக்கு இணையான வளர்ச்சியைக் கொண்டிருந்தது. வேளாண்மை, கட்டிடக்கலை, இசைக்கருவிகள், மருத்துவம், கப்பற்கலை, போர்க்கலை என பல துறைகளில் தமிழர் தொழினுட்பம் சிறந்து இருந்தது.
சே குவேரா (Che Guevara) என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்தோ கெவாரா தெ லா செர்னா (Ernesto Guevara de la Serna) (14 சூன் 1928 – 9 அக்டோபர் 1967) அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபெற்ற போராளி எனப்பல முகங்களைக் கொண்டவர்.
எறிபந்தாட்டம் ஆடு௧ளம் (handball) 7 பேர் ஒரு அணிக்கு என பந்தை கைகளால் கையாண்டு ஆடப்படும் ஒரு விளையாட்டு ஆகும். காற்பந்தாட்டம் போன்று பந்தை ஒரு இலக்கு கம்பத்துக்குள் இடவேண்டும், ஆனால் கால்களால் அல்லாமல் கைகளால் பந்தை கையாடி பந்தை இலக்கு கம்பத்துக்குள் போட வேண்டும். ஒருவர் பந்தை 3 வினாடிகளுக்கு மேல் கையில் வைத்திருக்க முடியாது.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் என்பது தமிழ் மொழியில் வெளிவந்த அனைத்துத் திரைப்படங்களையும் அகர வரிசையில் பட்டியலிட முனைகின்றது.