The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
ஆயுள் தண்டனை (Life imprisonment, life sentence, life-long incarceration அல்லது life incarceration) ஓர் தீவிரமான குற்றம் புரிந்த குற்றவாளி தனது மீதமுள்ள வாழ்நாள் முழுமையையும் சிறையில் இருக்குமாறுத் தரப்படும் குற்றவியல் தண்டனையாகும். கொலை, தேசத்துரோகம், போதைமருந்து கடத்துதல், பிறருக்கு ஊறு விளைவிக்குமாறு நிகழ்த்திய திருட்டு போன்ற குற்றங்களுக்காக இந்தத் தண்டனை வழங்கப்படுகிறது. இந்தத் தண்டனை அனைத்து நாடுகளிலும் கொடுக்கப்படுவது இல்லை.
அழகர் கோயில் (ஆங்கிலம்: Alagar Koil) என்ற 'திருமாலிருஞ்சோலை' என்று ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற (பாடப்பெற்ற) அழகர் பெருமாள் கோயில் மதுரை மாநகரின் மையத்திலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள அழகர் மலை ஆகிய திருமால் கோவிலாகும். 108 வைணவ திவ்யதேச திருப்பதிகளுள் அதிகமாகப் பாடல்கள் (129) பெற்ற மூன்றாம் திவ்யதேசம் ஆகும்.
டூரிஸ்ட் ஃபேமிலி (Tourist Family) என்பது 2025ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் மொழி நகைச்சுவைத் திரைப்படமாகும். அபிசன் ஜீவிந்த் எழுதி இயக்கிய முதல் படம் இதுவாகும். மில்லியன் டாலர் இசுடுடியோசும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்டு நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் சசிக்குமார், சிம்ரன், மிதுன் ஜெய் சங்கர், கமலேசு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
திருக்குறள் (Tirukkural), சுருக்கமாகக் குறள் (Kural), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், காமம் (அல்லது இன்பம்) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
உலகளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6000 இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) ஓர் கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். கவிதையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு "பாரதி" என்ற பட்டம் வழங்கப்பட்டது. நவீன தமிழ் கவிஞர்களின் முன்னோடியாகத் திகழ்ந்த இவர், தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
பாக்கித்தான் (ஆங்கிலம்: Pakistan, Urdu: پاکستان) என்பது தெற்காசியாவில் உள்ள ஒரு நாடாகும். இது அதிகாரப்பூர்வமாக பாக்கித்தான் இசுலாமியக் குடியரசு (ஆங்கிலம்: Islamic Republic of Pakistan, Urdu: اسلامی جمہوریۂ پاکستان) என்று அழைக்கப்படுகிறது. 24.15 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையுடன் உலகின் மிக அதிக மக்கள் தொகையுடைய ஐந்தாவது நாடாக இந்நாடு திகழ்கிறது.
தமிழ் (Tamil language) தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின், தென் முனையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படும் இம்மாநிலமானது, பரப்பளவில் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாக மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது. உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பேசும் தமிழர் வாழும் பகுதியே தமிழ்நாடு என அழைக்கப்படுகிறது.
அன்புமணி ராமதாஸ் (Anbumani Ramadoss, பிறப்பு: 9 அக்டோபர் 1968) ஒரு தமிழக அரசியல்வாதியும், மருத்துவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்தலைவரும் ஆவார். இவரின் தந்தையார் மருத்துவர் ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், தற்போதைய தலைவரும் ஆவார். 2004-இல் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய நடுவண் அரசில் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சராகப் பணியாற்றினார்.
கள்ளழகர் கோயில் என்பது தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள மதுரை மாவட்டத்தில் உள்ள அழகர் கோவில் என்னும் கிராமத்தில் உள்ள பெருமாள் (விஷ்ணு) கோயிலாகும். திராவிடக் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட இந்த கோவில், பொ.ஊ. 6-9-ஆம் நூற்றாண்டுகளில் ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தத்தில் போற்றிப் பாடப்பட்டுள்ளது.
இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814
இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814 (Indian Airlines Flight 814) பொதுவாக ஐ.சி 814 (IC 814) என்று அழைக்கப்படும். இது நேபாளுக்கும் இந்தியாவிற்கும் இடையே செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஆகும். இந்த விமானம் 1999 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தியதி வெள்ளிக் கிழமை 178 பயணிகள் மற்றும் 15 விமான ஊழியர்களுடன் கடத்தப்பட்டது.
சித்திரா பௌர்ணமி எனப்படுவது சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தன்று சைவ மக்களால் கொண்டாடப்படும் ஒரு விரத நாளாகும். இந்த விழாவை எம லோகத்தில் பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திர குப்த நாயனாருக்காக கொண்டாடுகிறார்கள். அவர் தங்களின் பாவக் கணக்குகளைக் குறைத்து நற்கணக்குகளை அதிகமாக்குவார் என்பது நம்பிக்கையாகும்.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டுச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்:பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற ஒரு சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான தமிழர் கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
வன்னியர் (Vanniyar) அல்லது வன்னிய குல சத்திரியர் (Vanniya Kula Kshatriya's) எனப்படுவோர் தமிழகத்தில் குறிப்பாக வடதமிழகத்தில் (காவேரி ஆற்றின் வடக்கு பகுதிகளில்) அடர்த்தியாகவும், மற்ற பகுதிகளில் குறிப்பிட்ட அளவிலும் வாழுகின்ற ஒரு மிகப்பெரிய தமிழ் சாதியினர் ஆவர். இவர்கள் புதுச்சேரி, தெற்கு கருநாடகம் மற்றும் தெற்கு ஆந்திரா போன்ற பகுதிகளிலும் வாழ்கின்றனர். இவர்கள் தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு பட்டியலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ளனர்.
மங்கலதேவி கோவில் அல்லது மங்களா தேவி கண்ணகி கோயில் தேனி மாவட்டம், தமிழ் நாட்டில் உள்ளது. இக்கோயில் தமிழ்நாட்டின் கூடலூர் வனப்பகுதியில் பளியங்குடி எனுமிடத்திலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவிலும், கேரளத்தின் இடுக்கி மாவட்டத்திலுள்ள குமுளி என்ற ஊரிலிருந்து சுமார் 14 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இது கடல் மட்ட அளவில் இருந்து சுமார் 5000 மீட்டர் உயரத்தில் உள்ளது.
இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்
குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப் பெயர் குறிக்கிறது.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) என்பது தமிழ்நாட்டின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் உரிமைத் தொகையாக 1000 இந்திய ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் தமிழ்நாடு அரசுத் திட்டமாகும். இத்திட்டத்தை தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி நினைவாகப் பெயரிட்டுள்ளார்கள்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் (Madurai Meenakshi Sundareswarar Temple) மதுரையின் நடுவே அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இச்சிவன் கோயிலின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன் ஆவர். இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர்.
திருநங்கை என அழைக்கப்படும் மாற்றுப்பலினத்தவரின் வாழ்க்கையில் மிக முக்கியமான தருணம் அல்லது நிகழ்வாக அமைகின்ற ஒரு விழாவே கூத்தாண்டவர் திருவிழா ஆகும். திருநங்கைகளின் உணர்வோடு இணைந்த ஒரு சமுதாயச் சடங்காக இவ்விழா நடத்தப்படுகிறது. இந்த திருவிழா ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தன்று கொண்டாடப்படுகிறது.
காமராசர் (Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975) ஓர் இந்திய விடுதலைப் போராட்ட ஆர்வலரும், அரசியல்வாதியுமாவார். இவர் 13 ஏப்ரல் 1954 முதல் 2 அக்டோபர் 1963 வரை ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். இவர் 1964 முதல் 1967 வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார்.
செயற்கை நுண்ணறிவு அல்லது செயற்கை அறிதிறன் ((Artificial intelligence)) (AI) மனிதனுக்கு இயந்திரத்திற்கும் இடையில் காணப்படும் வேறுபாடு என்னவென்றால் படைப்பாக்க திறன் ஆகும். இந்த படைப்பாக்க திறன் இயந்திரங்கள் மூலமும் சாத்தியப்படுமானால் அதுவே செயற்கை நுண்ணறிவு என அழைக்கப்படுகிறது. கணினி அறிவிகயலின் பரந்த கிளையாக செயற்கை நுண்ணறிவு காணப்படுகிறது.
இந்திய சோதிடத்தில் பிரீதி என்பது, பஞ்சாங்க உறுப்புக்களுள் ஒன்றான "யோகம்" என்பதனுள் அடங்கும் 27 யோகங்களுள் இரண்டாவது ஆகும். இராசிச் சக்கரத்தின் தொடக்கப் புள்ளியில் இருந்து 13° 20' தொடக்கம் 26° 40' பிரீதி யோகத்துக்கு உரியது. சூரியன், சந்திரன் ஆகிய கோள்களின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை இந்தக் கோணத்தினூடாக அதிகரிப்பதற்கு எடுக்கும் நேரத்துக்குரிய யோகம் "பிரீதி" ஆகும்.
இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்
இந்தியக் குடியரசுத் தலைவர் என்பவர், இந்திய தேசத்தின் தலைவர் மற்றும் இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதியும் ஆவார். இந்திய ஜனாதிபதி நாட்டின் முதல் குடிமகன் எனக் குறிப்பிடப்படுகிறார். இந்திய அரசியலமைப்பின் வாயிலாக இந்த அதிகாரங்கள் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்ட போதிலும், இந்த நிலை பெரும்பாலும் மரபுசார்ந்த ஒன்றாகும்.
கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
பிறழ்சாட்சி (Hostile witness) என்பது ஒரு தரப்புக்கு சாட்சி சொல்ல வந்து அதற்கு மாறாக சாட்சியம் அளிக்கின்றவரைக் குறிப்பிடுவதாகும். இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 161ன் கீழ் குற்ற வழக்குகளில் காவல் துறை அதிகாரி அல்லது அரசு கூறும் பொறுப்பான அதிகாரி வாக்குமூலம் அளிப்பதைப் பதிவு செய்வர். இவர்களை அரசுத் தரப்புச் சாட்சிகள் என்பர்.
தூய பாத்திமா அன்னை என்ற பெயர், போர்ச்சுக்கல் நாட்டின் பாத்திமா நகரில் 1917 மே 13 முதல் 1917 அக்டோபர் 13 வரை லூசியா சான்டோஸ், ஜெசிந்தா மார்த்தோ, பிரான்சிஸ்கோ மார்த்தோ என்ற மூன்று சிறாருக்கு அன்னை மரியா அளித்த காட்சியின் அடிப்படையில் அவருக்கு வழங்கப்படுகின்ற பெயராகும். இந்த உலகின் பல்வேறு இடங்களில் மரியன்னை அளித்த காட்சிகளில் சிறப்பு வாய்ந்ததாக பாத்திமா நகர் காட்சியும் விளங்குகிறது. இரண்டாம் உலகப் போர், ரஷ்ய நாட்டின் மனமாற்றம் ஆகியவை பற்றி பாத்திமா அன்னை வழங்கிய முன்னறிவிப்புகள் அப்படியே பலித்ததால், பாத்திமா காட்சி மிகவும் பிரபலம் அடைந்தது.
மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்
தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள். அந்த வரிசையில் மொத்தம் 274 சிவ ஸ்தலங்கள் உள்ளன. அவைகளில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும், மற்ற கோயில்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் சில மற்ற இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ளன.
விராட் கோலி (Virat Kohli, , பிறப்பு: நவம்பர் 5, 1988) ஓர் இந்தியத் துடுப்பாட்டவீரர் ஆவார். இந்திய அணியின்,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளின் முன்னாள் தலைவருமாவார்.வலது கை மட்டையாளரான இவர் சர்வதேச சிறந்த துடுப்பாட வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். புது தில்லியில் பிறந்த இவர் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் 2006 ஆம் ஆண்டில் விளையாடுவதற்கு முன்பாக தில்லி அணிக்காக விளையாடினார்.
கொல்லா (golla) எனப்படுவோர் இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கருநாடகம் மற்றும் தெலுங்கானா பகுதிகளில், மேய்ச்சல் தொழில் செய்து வந்த இனக்குழுவினர் ஆவார். இவர்கள் யாதவ நாயுடு மற்றும் நாயக்கர் என்றும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் விஜயநகர ஆட்சியின் காலத்தில் ஆந்திராவில் இருந்து தமிழ்நாடு வந்தனர்.
உரிச்சொல் என்பது, ஒன்றுக்கு ஒன்று உரிமை உடையதாகத் திகழும் சொல். ஒரு சொல்லானது பல பொருள்களுக்கு உரிமை பூண்டு நிற்கும்போதும், பல சொற்கள் ஒரு பொருளுக்கு உரிமை பூண்டு நிற்கும்போதும் உரிச்சொல் நிலையினைப் பெறுகிறது. இது பெயர்ச்சொல்லாகவோ, வினைச்சொல்லாகவோ, பெயருக்கு அடைமொழியாகவோ, வினைக்கு அடைமொழியாகவோ, பெயருக்கும் வினைக்கும் பொதுவானதாகவோ இருக்கும்.
அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)
அழகர் ஆற்றில் இறங்குதல் அல்லது கள்ளழகர் ஆற்றில் இறங்குதல் என்பது தமிழ்நாட்டின் பழைமை வாய்ந்த மதுரை மாநகரில் சித்திரை மாதத்தில் கொண்டாடப்படும் சைவ வைணவ ஒற்றுமைத் திருவிழாகும். இது மதுரை மாநகரில் வீற்றிருக்கும் அன்னை மீனாட்சியின் திருக்கல்யாணத் திருவிழாவுடன் இணைத்துக் கொண்டாடப் பெறுகிறது. தமிழ்நாட்டில் பொதுவாக தமிழில் முதல் மாதமான சித்திரை மாதப் பிறப்பை சித்திரைத் திருவிழாவாகக் கொண்டாடுகின்றனர்.
பத்துப்பாட்டு (Ten Idylls) என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது.
'வள்ளலார்' இராமலிங்க அடிகளார் (ஆங்கிலம்: Thiruvarutprakasa Vallalār Chidambaram Ramalingam, 5 அக்டோபர் 1823 – 30 சனவரி 1874) இந்திய நாட்டில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தை சேர்ந்த ஓர் சைவ சமய ஆன்மீகவாதி ஆவார். "எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே" என்பதைக் குறிக்கும் வண்ணம், இவர் தோற்றுவித்த மார்க்கத்திற்கு "சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்க சங்கம்" என்று பெயரிட்டார். சைவ சமயத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்த வள்ளலாரை, பழமைவாதிகள் கடுமையாக எதிர்த்தனர்.
பாட்டாளி மக்கள் கட்சி (Pattali Makkal Katchi, பா.ம.க) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். இக்கட்சியை 1989களில், மருத்துவர் ராமதாஸ் தொடங்கினார். வன்னியர் சமூக மக்களின் முன்னேற்றத்திற்காக தொடங்கப்பட்ட வன்னியர் சங்கமானது, பின்னாளில் பாட்டாளி மக்கள் கட்சி என்னும் அரசியல் கட்சியாக மாறியது.
திவ்ய தேசங்கள் (Divya Desam) என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும்.
மணிமேகலை ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்களுள் ஒன்று. இக்காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார்.மணிமேகலை காப்பியத்தில் அடி இணையும், அதன் வழிபாடும், வேறு கடவுள்களின் வழிபாடும் இருக்கும் நிலையில், அஃது ஒரு மகாயான காப்பியமாகவே இருக்கமுடியும். மேலும், மகாயான பௌத்தமானது இல்லறத்தையும், துறவறத்தையும் வலியுறுத்தும் நிலையிலும், சிலப்பதிகாரமானது இல்லறத்தையும், மணிமேகலை காப்பியம் துறவறத்தையும் வலியுறுத்துவதாலும், இவை இரட்டைக் காப்பியங்கள் ஆகும்.
சிங்கப்பூர் (Singapore) அல்லது சிங்கப்பூர் குடியரசு (Republic of Singapore; சீனம்: 新加坡共和国, Xīnjīapō Gònghéguó; மலாய்: Republik Singapura) என்பது தென்கிழக்காசியாவில் அமைந்துள்ள ஒரு தீவு நாடும், நகர அரசும் ஆகும். இதன் நிலப்பரப்பு ஒரு முதன்மைத் தீவு, 63 தீவுகள் அல்லது திட்டுக்கள், ஒரு வெளிப்புறத் திட்டு ஆகியவற்றை உள்ளடக்கியது. சிங்கப்பூர் நிலநடுக் கோட்டுக்கு வடக்கே ஏறத்தாழ ஒரு அகலக்கோட்டுப்பாகையில் (137 கிலோமீட்டர்கள் அல்லது 85 மைல்கள்) அமைந்துள்ளது.
தமிழிலக்கணத்தில், உவமையணி என்பது ஒரு புலவர் தான் பிறருக்குக் கூறக் கருதிய பொருளை அவருக்கு நன்கு தெரிந்த ஒன்றைக் காட்டி விளக்குவது ஆகும். ஒரு பொருளை இன்னொரு பொருளுடன் ஒப்பிட்டு அழகுபடுத்திக் கூறுவதாம். புலவர் தாம்சொல்ல எடுத்துக் கொண்ட பொருளை வேறு ஒரு பொருளுடனோ பல பொருளுடனோ அப்பொருளின் பண்பு,தொழில், பயன் என்பவற்றைக் காரணமாகக் கொண்டு இயைபுபடுத்தி இரு பொருள்களுக்கும் இடையே உள்ள ஒப்புமை புலப்படும்படி பாடுவது உவமை அணியாகும்.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கிலம்: Bhimrao Ramji Ambedkar; 14 ஏப்ரல் 1891– 6 திசம்பர் 1956) ஓர் இந்திய சட்ட வல்லுநர், பொருளாதார நிபுணர், சமூக சீர்திருத்தவாதியும் மற்றும் அரசியல் தலைவரும் ஆவார். இவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகப் பதவியேற்று, இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவிற்குத் தலைமை தாங்கினார். பட்டியல் இன மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கி தீண்டாமை ஒழியப் போராடினார்.
முகம்மது நபி அல்லது முகம்மது (Muḥammad, அரபி: محمد, பிறப்பு பொ.ஊ. 570, இறப்பு 8 சூன் பொ.ஊ. 632 கணிப்பு), அராபியப் பெயர்: அபூ அல்-காசிம் முகம்மது இப்னு அப்தல்லா இப்னு அப்தல்-முத்தலிப் இப்னு ஹாசிம் (Abū al-Qāsim Muḥammad ibn ʿAbd Allāh ibn ʿAbd al-Muṭṭalib ibn Hāshim, ابو القاسم محمد ابن عبد الله ابن عبد المطلب ابن هاشم) என்பவர் மக்கா நகரைச் சேர்ந்த அராபியர் ஆவர்.
பெரியபுராணம் (Periya Puranam) அல்லது திருத்தொண்டர் புராணம் (Tiruththontarpuranam) என்பது சேக்கிழார் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாகக் கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் காப்பிய தலைவராகக் கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் சேக்கிழார் விவரிக்கிறார்.
இலங்கை (Sri Lanka), வரலாற்றுரீதியாக சிலோன் (Ceylon), அதிகாரபூர்வமாக இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு (Democratic Socialist Republic of Sri Lanka), என்பது தெற்காசியாவில் உள்ள ஒரு தீவு நாடு ஆகும். இது இந்தியப் பெருங்கடலில், வங்காள விரிகுடாவின் தென்மேற்கே, மன்னார் வளைகுடா, பாக்கு நீரிணை ஆகியவற்றால் இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தீவு தென்மேற்கில் மாலைத்தீவுகளுடனும், வடமேற்கே இந்தியாவுடனும் கடல் எல்லையைக் கொண்டுள்ளது.
முருகன் (Murugan) அல்லது கார்த்திகேயன் (Kartikeya) என்பவர் இந்து கடவுளான சிவன்- பார்வதி தம்பதிக்கு மகனாவார். முருகன் இந்திய துணைக்கண்டத்தில் பண்டைய காலம் தொட்டு வணங்கப்படும் ஒரு முக்கிய தெய்வமாக இருந்து வருகிறார். இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார்.
விசயநகரப் பேரரசு (ஆங்கிலம்: Vijayanagara empire, (; கருநடா இராச்சியம் என்றும் இது அழைக்கப்படுகிறது) என்பது பெரும்பாலான தென்னிந்தியாவை ஆண்ட ஒரு பிந்தைய நடுக்கால இந்துப் பேரரசு ஆகும். சந்திர குலத்தின் யது பிரிவைச் சேர்ந்த முதலாம் அரிஅரர் மற்றும் முதலாம் புக்கா ராயன் ஆகிய சங்கம மரபின் சகோதரர்களால் இப்பேரரசானது 1336ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 13ஆம் நூற்றாண்டின் முசுலிம் படையெடுப்புகளிலிருந்து காத்துக் கொள்வதற்காக தெற்கத்திய சக்திகளால் நடத்தப்பட்ட முயற்சிகளின் ஓர் உச்ச நிலையாக இப்பேரரசு அதன் முதன்மை நிலைக்கு வளர்ச்சியடைந்தது.
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், (List of chief ministers of Tamil Nadu) என்பது முழுமையான நிலையில், தமிழ்நாட்டின் 1920ஆம் ஆண்டு முதலான வரலாற்றிலிருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.