The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
உலகளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6000 இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின், தென் முனையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படும் இம்மாநிலமானது, பரப்பளவில் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாக மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது. உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பேசும் தமிழர் வாழும் பகுதியே தமிழ்நாடு என அழைக்கப்படுகிறது.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) ஓர் கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். கவிதையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு "பாரதி" என்ற பட்டம் வழங்கப்பட்டது. நவீன தமிழ் கவிஞர்களின் முன்னோடியாகத் திகழ்ந்த இவர், தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
திருக்குறள் (Tirukkural), சுருக்கமாகக் குறள் (Kural), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், காமம் (அல்லது இன்பம்) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) என்பது தமிழ்நாட்டின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் உரிமைத் தொகையாக 1000 இந்திய ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் தமிழ்நாடு அரசுத் திட்டமாகும். இத்திட்டத்தை தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி நினைவாகப் பெயரிட்டுள்ளார்கள்.
உகத் போர் (Battle of Uhud, அரபி: غزوة أحد உஹத் யுத்தம்) முகம்மது நபியின் வாழ்க்கையில் இடம்பெற்ற இரண்டாவது போர் ஆகும். இது 625 மார்ச் 19 (இசுலாமிய நாட்காட்டியில் சவ்வால் 3) சனிக்கிழமை மதினா நகருக்கு வடக்கே அமைந்திருந்த உஹத் என்னும் மலையடிவாரத்தில் (இன்றைய அராபியாவின் வடமேற்கே), முகம்மது நபியின் தலைமையிலான மதினா முசுலிம்களுக்கும், அபு சுஃபியான் இப்னு ஆர்ப் தலைமையிலான மெக்கா நகர இறைமறுப்பாளர்களுக்கும் இடையில் இடம்பெற்றது. முகம்மது நபி பங்குபற்றிய முதல் போர் 624 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பத்ரு போர் ஆகும்.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்:பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற ஒரு சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான தமிழர் கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
தமிழ் (Tamil language) தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
அஜித் குமார், (Ajith Kumar, பிறப்பு மே 1, 1971) என்பவர் ஒரு தென்னிந்தியத் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவரது இரசிகர்கள் இவரை அல்டிமேட் ஸ்டார் என்றும் ஏகே என்றும் அழைக்கிறார்கள்.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கிலம்: Bhimrao Ramji Ambedkar; 14 ஏப்ரல் 1891– 6 திசம்பர் 1956) ஓர் இந்திய சட்ட வல்லுநர், பொருளாதார நிபுணர், சமூக சீர்திருத்தவாதியும் மற்றும் அரசியல் தலைவரும் ஆவார். இவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகப் பதவியேற்று, இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவிற்குத் தலைமை தாங்கினார். பட்டியல் இன மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கி தீண்டாமை ஒழியப் போராடினார்.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டுச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்
இந்தியக் குடியரசுத் தலைவர் என்பவர், இந்திய தேசத்தின் தலைவர் மற்றும் இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதியும் ஆவார். இந்திய ஜனாதிபதி நாட்டின் முதல் குடிமகன் எனக் குறிப்பிடப்படுகிறார். இந்திய அரசியலமைப்பின் வாயிலாக இந்த அதிகாரங்கள் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்ட போதிலும், இந்த நிலை பெரும்பாலும் மரபுசார்ந்த ஒன்றாகும்.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
செம்மொழி (Classical language) என்பது ஒரு மொழியின் இலக்கியப்பழமை அடிப்படையிலும் பிற பண்புத் தகுதிகளின் அடிப்படையிலும் செய்யப்படும் வகைப்பாடு ஆகும். செம்மொழியாக ஒரு மொழியைத் தேர்வு செய்ய அதன் இலக்கியப் படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும், அதன் தோன்றல் ஏனைய மொழிகளைச் சாராதிருத்தலும் வேண்டும்1 (ஜோர்ஜ் எல்.ஹார்ட்). உலகில் எத்தனையோ மொழிகள் பேசப்பட்டு வருகின்றன.
சர் வின்ஸ்டன் லியோநார்ட் ஸ்பென்சர் சர்ச்சில் (Sir Winston Leonard Spencer-Churchill) (நவம்பர் 30, 1874 - ஜனவரி 24, 1965) என்ற முழுப்பெயர் கொண்ட இவர், சிறப்புப் பட்டயப் பதவிப் பெயர்களான ஆங்கில அரசின் உயர்தளிச் சிறப்பு சின்னம் (Order of Garter-OG), காமன்வெல்த் சிறப்புத் தகை பட்டயம் (காமன்வெல்த்- மக்கள் அதிகாரம் செலுத்தும் அரசமைப்பு) (Order of Merit-OM), பிரித்தானிய-காமன்வெல்த் தனித்துவப் பட்டயம் (Order of Companions Honour-CH), இலண்டன் அரசனுக்குகந்த சமூகப் பட்டயம் (Royal Society -for the Improvement of Natural Knowledge-FRS), கனடா அரசியாரின் ஆலோசகர் (Queen's Privy Council for Canada-PC (Can)), ஆகிய பட்டயங்களையும் கொண்டுள்ளார். இவர் பிரித்தானிய அரசியல்வாதிகளில் மிக முக்கியமானவராவார். ஐக்கிய இராச்சியத்தின் 1940 முதல் 1945 வரை மீண்டும் 1951 முதல் 1955 வரை பிரதமராக பதவி வகித்த சர்ச்சில் இரண்டாம் உலகப்போரில் ஐக்கிய இராச்சியத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்தியவராக கருதப்படுகிறார்.
செயற்கை நுண்ணறிவு அல்லது செயற்கை அறிதிறன் ((Artificial intelligence)) (AI) மனிதனுக்கு இயந்திரத்திற்கும் இடையில் காணப்படும் வேறுபாடு என்னவென்றால் படைப்பாக்க திறன் ஆகும். இந்த படைப்பாக்க திறன் இயந்திரங்கள் மூலமும் சாத்தியப்படுமானால் அதுவே செயற்கை நுண்ணறிவு என அழைக்கப்படுகிறது. கணினி அறிவிகயலின் பரந்த கிளையாக செயற்கை நுண்ணறிவு காணப்படுகிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன தலைவர்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன தலைவர் (Chairman of the Indian Space Research Organisation) என்பவர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (ISRO) சட்டப்பூர்வ தலைவராக உள்ளார். இவர் இந்திய அரசாங்கத்தின் செயலாளராகவும், இந்தியப் பிரதமருக்கு நேரடியாகத் கருத்து தெரிவிக்கும் விண்வெளித் துறையின் (DoS) நிர்வாகியாகவும் உள்ளார். விண்வெளி ஆராய்ச்சிக்கான இந்தியத் தேசியக் குழு (INCOSPAR) 1962-ல் அணு சக்தித்துறையின் (DAE)கீழ் நிறுவப்பட்டது.
மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்
தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள். அந்த வரிசையில் மொத்தம் 274 சிவ ஸ்தலங்கள் உள்ளன. அவைகளில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும், மற்ற கோயில்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் சில மற்ற இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ளன.
2025 சிங்கப்பூர் பொதுத்தேர்தல்
2025 சிங்கப்பூர் நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் 3 மே 2025 (சனிக்கிழமை) அன்று நடைபெற உள்ளது. இத்தேர்தலில் சிங்கப்பூர் நாடாளுமன்றத்திற்கு 97 உறுப்பினர்கள் நேரடித் தேர்தல் மூலமும் மற்றும் தொகுதிகள் அல்லாத 12 உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்க உள்ளனர். சிங்கப்பூரில் பிரதம அமைச்சர் ஆட்சி அமைக்க 55 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
காமராசர் (ஆங்கிலம்: Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975) ஓர் இந்திய விடுதலைப் போராட்ட ஆர்வலரும், அரசியல்வாதியுமாவார். இவர் 13 ஏப்ரல் 1954 முதல் 2 அக்டோபர் 1963 வரை ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். இவர் 1964 முதல் 1967 வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் (Madurai Meenakshi Sundareswarar Temple) என்பது வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள, கோயில் நகரமான மதுரையின் மத்தியில், அமைந்துள்ள சிவன் ஆலயமாகும். இச்சிவ ஆலயத்தின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன். இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர்.
பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்
பட்டியல் இனத்தவர்கள் மற்றும் பட்டியல் பழங்குடிகள் இனத்தவர்கள் (Scheduled Castes & Scheduled Tribes) என்ற சமூகத்தவர்கள் கல்வி, பொருளாதாரம், சமூகம் மற்றும் அரசியல் தகுதிகளில் இந்திய துணை கண்டத்தில் வரலாற்று ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள். பிரித்தானிய இந்தியாவில், இவர்களை ஒடுக்கப்பட்ட மக்கள் (Depressed Class) என்று வகைப்படுத்தி, அவர்களது பொருளாதார மேம்பாட்டிற்கு பஞ்சமி நிலங்கள் ஒதுக்கப்பட்டன. மகாத்மா காந்தியும், அவர்பால் ஈர்க்கப்பட்ட என்.
ஸ்ரீ. ரங்கராஜன் (Sujatha, 3 மே 1935 – 27 பெப்ரவரி 2008) சுஜாதா எனும் புனைப்பெயரில் பரவலாக அறியப்படும் தமிழில் எழுதிய ஓர் இந்தியப் புதின எழுத்தாளர் திரைக்கதை எழுத்தாளர் ஆவார்.இவர் 100க்கும் மேற்பட்ட புதினங்கள், 250 சிறுகதைகள், 10 அறிவியல் நூல்கள், 10 மேடை நாடகங்கள் ,ஒரு சில கவிதைகளை எழுதியுள்ளார்.இவர் தமிழ் இலக்கியத்தில் பரவலாக அறியப்படும் எழுத்தாளர்களில் ஒருவராகவும், ஆனந்த விகடன், குமுதம் மற்றும் கல்கி போன்ற தமிழ் இதழ்களில் தொடர்ந்து பங்களிப்பாளராகவும் இருந்தார்.மேலும், குமுதத்தின் ஆசிரியராக சிறிது காலம் பணியாற்றினார். பல தமிழ் படங்களுக்கு திரைக்கதைகள், வசனங்களையும் எழுதியுள்ளார்.
மயங்கொலிச் சொற்கள் என்பன தமிழில் கிட்டத்தட்ட ஒன்றே போன்ற ஒலிப்பினைக் கொண்டவைகளாகவும், முற்றிலும் வேறுபட்ட பொருள் கொண்டவைகளாகவும் காணப்படும். இவ்வகையான சொற்கள் ஒலிப்பின் போது நுண்ணிய வேறுபாடுகளை மட்டுமே கொண்டிருப்பதால் எது சரி, எது தவறு என மயங்க வைப்பவைகளாக இருக்கும். அதனாலேயே இவை மயங்கொலிச் சொற்கள் என்றழைக்கப்படுகின்றன.
சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள் (Chandrashekarendra Saraswati Swamigal) (மே 20, 1894 –சனவரி 8, 1994) அல்லது காஞ்சி முனிவர் காஞ்சி காமகோடி பீடத்தின் 68-ஆவது பீடாதிபதியாவார். பரவலாக இவர் பரமாச்சாரியார், மகாசுவாமி மற்றும் மகா பெரியவாள் என அழைக்கப்பட்டார். தெய்வத்தின் குரல் எனும் பெயரில் இந்து மதத் தத்துவங்களைப் புத்தகமாக எழுதியுள்ளார்.
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் (Thirugnana Sambandar, தமிழில் அறிவுசேரர் என்று பொருள் தரும்), அல்லது சம்பந்தர், என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று (நாயன்மார்களில் முதலில் வைத்து எண்ணப்படும் நால்வருள் ஒருவராவார். இவருடைய வேறு பெயர்கள் சம்பந்தர், காழி வள்ளல், ஆளுடைய பிள்ளையார், பாலாராவயர், பரசமய கோளரி என்பனவாகும். இவர் பொ.ஊ.
சுற்றுச்சூழல் மாசுபாடு அல்லது சூழல் மாசடைதல் (Pollution) என்பது மனித செயல்கள் மூலம் உருவாகும் மாசுகளால், சூழலின் ஆதாரங்களாகிய காற்று, நீர், மண் வளங்களும், அங்கு வாழும் உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாகி, அதனால் சூழல் சமநிலை சீரற்றுப் போகும் நிலையைக் குறிக்கும். சூழலுக்கும் அங்கே வாழுகின்ற உயிரினங்களுக்கும் கேடு விளைவிக்கக் கூடியவையின் சேர்க்கையினால் சூழற் சமநிலை பாதிக்கப்படும். சூழல் மாசினால் அச்சூழ்மண்டலத்தில் வாழும் தாவரங்களும், விலங்குகளும் பல்வேறு வகையான பாதிப்புகளுக்கு உள்ளாகின்றன.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் என்பது தமிழ் மொழியில் வெளிவந்த அனைத்துத் திரைப்படங்களையும் அகர வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்
குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப் பெயர் குறிக்கிறது.
ஜோய் ஆலுக்காஸ் (Joy Alukkas) (பிறப்பு: அக்டோபர் 29, 1956) கேரளாவைச் சேர்ந்த ஓர் இந்தியத் தொழிலதிபர் ஆவார். இந்தியா மட்டுமல்லாமல் ஆசியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் குறிப்பிடத்தக்கவராகத் திகழ்கிறார். இவர் ஜோயாலுக்காஸ் தங்கநகை நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ளார், இந்நிறுவனம் 1987-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு, 11 நாடுகளில் 160 கிளைகளைக் கொண்டுள்ளது.
திவ்ய தேசங்கள் (Divya Desam) என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும்.
ஜெகத்குரு ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி (Jagadguru Sri Satya Chandrashekarendra Saraswati Swami) என்பவர் காஞ்சி சங்கர மடத்தின் 70-ஆவது பீடாதிபதியான விஜயேந்திர சரஸ்வதியால் சந்நியாச தீட்சை, காஷாய தீட்சை மற்றும் மந்திர தீட்சை, கமண்டலம், தண்டம் வழங்கப்பெற்று காஞ்சி சங்கர மடத்தின் 71-ஆவது பீடாதிபதியாக 30 ஏப்ரல் 2025 அட்சயதிருதியை நன்னாள் அன்று பொறுப்பேற்றார்.
ஆதவ் அர்ஜுனா ("Aadhav Arjuna") என்பவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும் தேர்தல் வியூக வகுப்பாளரும் விளையாட்டுத்துறை நிர்வாகியுமாவார். இவர் "அரைஸ் கேப்பிட்டல்" என்ற நிறுவத்தின் நிர்வாக இயக்குநராகவும் 2021ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் 2023ஆம் ஆண்டு முதல் இந்தியக் கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவராகவும் "வாய்ஸ் ஆப் காமன்ஸ்" என்ற அரசியல் வியூக நிறுவனத்தின் நிறுவனராகவும் உள்ளார். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக இருந்து, 2024 திசம்பரில் கட்சியிலிருந்து விலகினார்.
பத்துப்பாட்டு (Ten Idylls) என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது.
மனித உரிமை (Human rights) என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கப் பெறவேண்டிய மற்றும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும். மனிதன் என்றாலே அவன் இவைகளால் வாழ முடியாது என கருதப்படும் அடிப்படையான தேவைகளை உள்ளடக்கிய உரிமைகள் இதில் சாரும். இந்த உரிமைகளை "மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளாக"மனித உரிமைகள் என்றால் என்ன?கருதப்படுகின்றன.
பூமி, அதன் கூட்டமைவு, கட்டமைப்பு, இயற்பியல் இயல்புகள், வரலாறு, மற்றும் அதனை உருவாக்கிய வழிமுறைகள் என்பவை தொடர்பான அறிவியலும், அவை பற்றிய ஆய்வும் நிலவியல் எனப்படும். இது புவி அறிவியலில் ஒரு பிரிவாகும். நிலவியல் அறிவானது, புவியியல், நிலநெய், நிலக்கரி மற்றும், இரும்பு, செம்பு, உரேனியம் போன்ற உலோகங்கள் ஆகிய இயற்கை வளங்கள் இருக்கும் இடங்களை அடையாளம் காண உதவுகின்றது.
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், (List of chief ministers of Tamil Nadu) என்பது முழுமையான நிலையில், தமிழ்நாட்டின் 1920ஆம் ஆண்டு முதலான வரலாற்றிலிருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.
விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்
விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
இந்திய அரசின் ஐந்தாண்டுத் திட்டங்கள் (Five-Year Plans of India) என்பது 1947-2017 வரையில் இந்தியப் பொருளாதாரமானது திட்டமிடலை அடிப்படையாகக் கொண்டே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது ஐந்தாண்டுத் திட்டங்களாகப் பகுக்கப்பட்டு திட்டக் குழு (இந்தியா) (1947-2014) மற்றும் நிதி ஆயோக் (2014-2017) மூலம் வடிவமைக்கப்பட்டும், செயல்படுத்தப்பட்டும், மேற்பார்வையிடப்பட்டும் வந்தது. நரேந்திர மோதி தலைமையிலான ஆட்சி 2014 இல் அமைந்தவுடன் இந்திய ஐந்தாண்டு திட்டங்கள் - திட்ட கமிசன் கலைத்து விட்டு புதிய அமைப்பாக நிதி ஆயோக் உருவாக்கப்பட்டது.
மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni), சுருக்கமாக எம் எஸ் தோனி என்று (பிறப்பு: சூலை 7, 1981) அறியப்படும் இவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் சர்வதேசத் துடுப்பாட்ட வீரரும் முன்னாள் தலைவரும் ஆவார். இவர் 2007 முதல் 2016 ஆம் ஆண்டு வரை வரையிட்ட நிறைவுப் போட்டிகளுக்கும், 2008 முதல் 2014ஆம் ஆண்டு வரை தேர்வுப் போட்டிகளிலும் இந்திய அணியின் தலைவராக இருந்தார். இவரின் தலைமையில் 2007 ஐசிசி உலக இருபது20 2007-08 பொதுநலவய போட்டித் தொடர், 2010 மற்றும் 2016 ஆசியக் கோப்பை, 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை மற்றும் 2013 ஐசிசி வாகையாளர் வெற்றிக்கிண்ணம் ஆகிய கோப்பைகளை இந்திய அணி வென்றுள்ளது.
உறையூர் (Uraiyur) தமிழ்நாட்டில் உள்ள திருச்சிராப்பள்ளி (திருச்சி) மாநகரின் ஒரு பகுதியாகும். காவேரியாற்றின் தென்கரையில், திருச்சிராப்பள்ளி கோட்டை இரயில் நிலையச் சந்திப்புக்கு மேற்கில் அமைந்துள்ளது. திருச்சிராப்பள்ளி முக்கிய இரயில் நிலையச் சந்திப்பிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலும், திருச்சிராப்பள்ளி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது.
விராட் கோலி (Virat Kohli, , பிறப்பு: நவம்பர் 5, 1988) ஓர் இந்தியத் துடுப்பாட்டவீரர் ஆவார். இந்திய அணியின்,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளின் முன்னாள் தலைவருமாவார்.வலது கை மட்டையாளரான இவர் சர்வதேச சிறந்த துடுப்பாட வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். புது தில்லியில் பிறந்த இவர் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் 2006 ஆம் ஆண்டில் விளையாடுவதற்கு முன்பாக தில்லி அணிக்காக விளையாடினார்.
'வள்ளலார்' இராமலிங்க அடிகளார் (ஆங்கிலம்: Thiruvarutprakasa Vallalār Chidambaram Ramalingam, 5 அக்டோபர் 1823 – 30 சனவரி 1874) இந்திய நாட்டில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தை சேர்ந்த ஓர் சைவ சமய ஆன்மீகவாதி ஆவார். "எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே" என்பதைக் குறிக்கும் வண்ணம், இவர் தோற்றுவித்த மார்க்கத்திற்கு "சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்க சங்கம்" என்று பெயரிட்டார். சைவ சமயத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்த வள்ளலாரை, பழமைவாதிகள் கடுமையாக எதிர்த்தனர்.
சிங்கப்பூர் (Singapore) அல்லது சிங்கப்பூர் குடியரசு (Republic of Singapore; சீனம்: 新加坡共和国, Xīnjīapō Gònghéguó; மலாய்: Republik Singapura) என்பது தென்கிழக்காசியாவில் அமைந்துள்ள ஒரு தீவு நாடும், நகர அரசும் ஆகும். இதன் நிலப்பரப்பு ஒரு முதன்மைத் தீவு, 63 தீவுகள் அல்லது திட்டுக்கள், ஒரு வெளிப்புறத் திட்டு ஆகியவற்றை உள்ளடக்கியது. சிங்கப்பூர் நிலநடுக் கோட்டுக்கு வடக்கே ஏறத்தாழ ஒரு அகலக்கோட்டுப்பாகையில் (137 கிலோமீட்டர்கள் அல்லது 85 மைல்கள்) அமைந்துள்ளது.
இலங்கை (Sri Lanka), வரலாற்றுரீதியாக சிலோன் (Ceylon), அதிகாரபூர்வமாக இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு (Democratic Socialist Republic of Sri Lanka), என்பது தெற்காசியாவில் உள்ள ஒரு தீவு நாடு ஆகும். இது இந்தியப் பெருங்கடலில், வங்காள விரிகுடாவின் தென்மேற்கே, மன்னார் வளைகுடா, பாக்கு நீரிணை ஆகியவற்றால் இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தீவு தென்மேற்கில் மாலைத்தீவுகளுடனும், வடமேற்கே இந்தியாவுடனும் கடல் எல்லையைக் கொண்டுள்ளது.
இந்திய தேசிய காங்கிரசு (Indian National Congress; சுருக்கமாக இதேகா பொதுவாக காங்கிரசு கட்சி இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். 1885–இல் தொடங்கப்பட்ட காங்கிரஸ் ஒரு சமரச இயக்கமாக ஆரம்பிக்கப்பட்டு பின்னாளில் இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் ஒரு போராட்ட இயக்கமாக செயல்பட்டு இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்று கொடுத்த போராட்ட இயக்கமாக இருந்தது. அதன் பிறகு மகாத்மா காந்தி அவர்கள் இவ்வியக்கத்தை இந்திய சுதந்திரத்திற்கு பிறகு நியாயமாக கலைத்துவிடலாம் என்று கூறிய போதும் கூட காங்கிரஸ் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜவஹர்லால் நேரு தலையீட்டால் இந்திய சுதந்திரத்திற்கு பிறகு அரசியல் கட்சியாக மாற்றப்பட்டு பல தேர்தல்களை சந்தித்து வெற்றி பெற்ற போதிலும் சுதந்திர இந்தியாவில் 1947க்கு பிறகு 54 வருடமும் 7 பிரதமர்களையும் ஆள வைத்தது மட்டுமல்லாமல் காங்கிரஸ் கூட்டணி ஆதரவில் 58 வருடங்களும் 4 பிரதமர்களை ஆள வைத்து இந்தியாவை அதிக காலம் ஆண்ட ஒரே பெருமைக்குரிய அரசியல் கட்சியாக காங்கிரஸ் கட்சி திகழ்ந்து வருகிறது.
தமிழ்த்தாய் வாழ்த்து (Tamil Thaai Vaalthu) என்பது இந்திய மாநில அரசுகளுள் தமிழை ஆட்சி மொழியாய் கொண்டுள்ளவற்றில் பாடப்பெறும் வாழ்த்துப் பாடலாகும். இது தமிழ்த் தாயை வாழ்த்தி வணக்கம் செலுத்துவதாக அமையும். இப்பாடல் அரசு விழாக்கள், பள்ளிகளின் காலை இறைவணக்கக் கூட்டம் முதலான நிகழ்வுகளின் தொடக்கத்தில் பாடப்படுகிறது.