The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
தியாகத் திருநாள் ( அரபு: عيد الأضحى ஈத் அல்-அழ்ஹா) அல்லது ஹஜ் பெருநாள், உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இறைத் தூதர் இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் இசுலாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் மாதம் 10 ஆம் நாள் இது கொண்டாடப்படுகின்றது. வசதியுள்ள முஸ்லிம்கள், 'ஹஜ்' செய்வது என்பது, இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஐந்தாவது கடமையாகும்..
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் அல்லது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) என்பது தமிழ்நாட்டின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் உரிமைத் தொகையாக 1000 இந்திய ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் தமிழ்நாடு அரசுத் திட்டமாகும். இத்திட்டத்தை தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி நினைவாகப் பெயரிட்டுள்ளனர்.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) ஓர் கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். கவிதையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு "பாரதி" என்ற பட்டம் வழங்கப்பட்டது. நவீன தமிழ் கவிஞர்களின் முன்னோடியாகத் திகழ்ந்த இவர், தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
உலகளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6000 இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
தமிழ் (Tamil language) தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
திருக்குறள் (Tirukkural), சுருக்கமாகக் குறள் (Kural), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், காமம் (அல்லது இன்பம்) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
வேடன் என்ற மேடைப் பெயரால் நன்கு அறியப்படும் ஹிரந்தாஸ் முரளி, கேரளத்தைச் சேர்ந்த ஒரு இந்திய ராப்பிசைப் பாடகரும், பாடலாசிரியரும் ஆவார். 2020 ஆம் ஆண்டில் இவர் "வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்" என்ற தனது முதல் இசைக் காணொளி மூலம் முக்கியத்துவம் பெற்றார். இது ஒடுக்குமுறை குறித்த துணிச்சலான வருணனைக்காக பரவலாக கவனம் பெற்றது.
தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின், தென் முனையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படும் இம்மாநிலமானது, பரப்பளவில் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாக மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது. உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பேசும் தமிழர் வாழும் பகுதியே தமிழ்நாடு என அழைக்கப்படுகிறது.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2024
2024 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. 7/ஜி அக்கரன் அஞ்சாமை அதர்மக் கதைகள் அதோமுகம் அந்த நாள் அந்தகன் அப்பு ஆறாம் வகுப்பு அமரன் அமிகோ கேரேஜ் அய்யய்யோ அயலான் அரணம் அரண்மனை 4 அரிமாபட்டி சக்திவேல் அலங்கு ஆந்தை ஆப்ரேசன் லைலா ஆரகன் ஆராய்ச்சி ஆர்கே வெள்ளிமேகம் ஆர்யமாலா ஆலகாலம் ஆலன் இங்கு நான் தான் கிங்கு இங்கு மிருகங்கள் வாழும் இடம் இ-மெயில் இடி மின்னல் காதல் இது உனக்குத் தேவையா இந்தியன் 2 இரவின் கண்கள் இரவினில் ஆட்டம் பார் இரு மனசு இருளில் இராவணன் இப்படிக்கு காதல் இனி ஒரு காதல் செய்வோம் உணர்வுகள் தொடர்கதை உதிர் @ பூமரக் காத்து உயிர் தமிழுக்கு எங்க வீட்டுல பார்ட்டி எட்டும் வரை எட்டு எப்புரா எப்போதும் ராஜா எமகாதகன் எமக்குத் தொழில் ரொமான்சு எஸ்கே 23 எலக்சன் ஏழு கடல் ஏழு மலை ஐயப்பன் துணையிருப்பான் ஒயிட் ரோஸ் ஒரு தவறு செய்தால் ஒரு நொடி ஒரே பேச்சு ஒரே முடிவு ஒற்றைப் பனைமரம் ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ் கங்குவா கடமை கடைசி உலகப் போர் கருடன் கருப்பர் நகரம் கருப்புப் பெட்டி கழுமரம் கவுண்டம் பாளையம் கள்வன் கன்னி காட்ஸ்பாட் காடுவெட்டி காதலிக்க நேரமில்லை கார்டியன் காழ் கியூ ஜி பகுதி 1 கிரிமினல் கிளாஸ்மேட்ஸ் குரங்கு பெடல் குப்பன் கும்பாரி கெச். எம்.
சைன் டாம் சாக்கோ (Shine Tom Chacko) (பிறப்பு செப்டம்பர் 15,1983) ஓர் இந்திய நடிகரும் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் பணிபுரிந்த முன்னாள் உதவி இயக்குநரும் ஆவார். இயக்குநர் கமலின் உதவியாளராக சுமார் 9 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, கடமா படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கினார். ஈ அதுத காலத்து, அத்தியாயம், ஆனையும் ரசூலும், மசாலா ரிபப்ளிக், ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் (தமிழ்) உள்ளிட்ட பல படங்களில் துணை வேடங்களில் நடித்தார்.
காமராசர் (Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975), இந்திய விடுதலைப் போராட்ட ஆர்வலரும், அரசியல்வாதிகளில் ஒருவருமாவார். இவர் 13 ஏப்ரல் 1954 முதல் 2 அக்டோபர் 1963 வரை ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். இவர் 1964 முதல் 1967 வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார்.
தமிழ்த்தாய் வாழ்த்து (Tamil Thaai Vaalthu) என்பது இந்திய மாநில அரசுகளுள் தமிழை ஆட்சி மொழியாய் கொண்டுள்ளவற்றில் பாடப்பெறும் வாழ்த்துப் பாடலாகும். இது தமிழ்த் தாயை வாழ்த்தி வணக்கம் செலுத்துவதாக அமையும். இப்பாடல் அரசு விழாக்கள், பள்ளிகளின் காலை இறைவணக்கக் கூட்டம் முதலான நிகழ்வுகளின் தொடக்கத்தில் பாடப்படுகிறது.
பரமசிவன் பாத்திமா (Paramasivan Fathima) இசக்கி கார்வண்ணன் இலட்சுமி கிரியேஷன்சு நிறுவனத்தின் பேரில் எழுதி, இயக்கி, தயாரித்து வெளியிட இருக்கும் தமிழ் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் எம். எசு.பாசுகர், மனோஜ் குமார், சிறீரஞ்சனி, அதிரா, அருள்தாஸ், கூல் சுரேஷ், காதல் சுகுமார்,உள்ளிட்டப் பலர் துணை வேடங்களில் நடிக்க விமலும் சாயாதேவியும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2025
இப்பட்டியல் 2025 இல் வெளியிடப்பட்ட/திட்டமிடப்பட்டுள்ள இந்தியத் தமிழ்நாட்டுத் திரைப்படத் துறையினரால் தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களின் பட்டியலாகும்.
கர்நாடக முதலமைச்சர்களின் பட்டியல்
கருநாடக முதலமைச்சர், இந்திய மாநிலமான கருநாடகத்தின் அரசுத் தலைவர் ஆவார். இவர் ஐந்து ஆண்டு காலம் பதவியில் இருப்பார்.
கிருஷ்ணரின் சிறப்புப் பெயர்களின் பட்டியல் இந்துக்களின் கடவுளான கிருஷ்ணரின் பல்வேறு சிறப்புப் பெயர்களையும், பட்டப் பெயர்களையும், பாகவதம், விஷ்ணு புராணம், அரி வம்சம் போன்ற புராணங்களிலும் மற்றும் மகாபாரத இதிகாசத்திலும் பல்வேறு இடங்களில் குறிக்கிறது. கிருஷ்ணரின் வானுலக இருப்பிடமாக கோலோகம் என பாகவதம் குறிக்கிறது. கிருஷ்ணரின் குழந்தைப் பருவத்திலும், பதின்ம வயதிலும் அருளிய லீலைகளால் செந்தமிழில் கண்ணன் என்றும் சமஸ்கிருதம் கிருஷ்ணன், அவதார நிலைப்பாட்டில் கோபாலன், மதனகோபாலன், மதனசேகரன், ராஜகோபாலன், வேணுகோபாலன், ஸ்ரீதரன், முரளிதரன், கேசவன், கோவர்தனன், இராதா கிருஷ்ணன், போன்ற சிறப்புப் பெயர்களாலும்; கிருஷ்ணன் பெரியவனாக வளர்ந்த பின்னர் எண்மரை மனைவிகளாக அடைந்து, பாண்டவர்களின் நண்பராகி, குருச்சேத்திரப் போரில் அருச்சுனனின் தேரை ஓட்டியதால் பார்த்தசாரதி என்றும், அருச்சுனனுக்கு பகவத் கீதையையும்; உத்தவருக்கு உத்தவ கீதையையும் அருளியதால் கிருஷ்ணர், கீதாச்சாரியன் என்றும் ஜெகத் குரு என்றும் பெயர் பெற்றவர்.
தவமாய் தவமிருந்து (English: Thavamaai Thavamirundhu), 2005ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். மிக நீளமான தமிழ் திரைப்படம் என்றும் நான்காவது மிக நீளமான இந்திய திரைப்படம் என்றும் இப்படம் சிறப்புக்குரியதாகிறது. தந்தை - மகன் பிணைப்பு, குடும்ப உறவுகளின் சிறப்பை இப்படம் வலியுறுத்துவதாக பலரும் கருதுகின்றனர்.
செக்கச்சிவந்த வானம் (Sekka Sivantha Vaanam) என்பது 2018 ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் காற்று வெளியிடை படத்திற்குப் பிறகு இயக்குநர் மணிரத்னம் தமிழில் இயக்கியுள்ள திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் சிம்பு, அர்விந்த் சுவாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ் ராஜ், ஜோதிகா, அதிதி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்:பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற ஒரு சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான தமிழர் கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்
இந்தியக் குடியரசுத் தலைவர் என்பவர், இந்திய தேசத்தின் தலைவர் மற்றும் இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதியும் ஆவார். இந்திய ஜனாதிபதி நாட்டின் முதல் குடிமகன் எனக் குறிப்பிடப்படுகிறார். இந்திய அரசியலமைப்பின் வாயிலாக இந்த அதிகாரங்கள் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்ட போதிலும், இந்த நிலை பெரும்பாலும் மரபுசார்ந்த ஒன்றாகும்.
இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்
குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப் பெயர் குறிக்கிறது.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
இளையராஜா (Ilaiyaraaja, பிறப்பு: 2 சூன் 1943), இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர் ஆவார். இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 1000 இற்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
முருகன் (Murugan) அல்லது கார்த்திகேயன் (Kartikeya) என்பவர் இந்து கடவுளான சிவன்- பார்வதி தம்பதிக்கு மகனாவார். முருகன் இந்திய துணைக்கண்டத்தில் பண்டைய காலம் தொட்டு வணங்கப்படும் ஒரு முக்கிய தெய்வமாக இருந்து வருகிறார். இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார்.
மயங்கொலிச் சொற்கள் என்பன தமிழில் கிட்டத்தட்ட ஒன்றே போன்ற ஒலிப்பினைக் கொண்டவைகளாகவும், முற்றிலும் வேறுபட்ட பொருள் கொண்டவைகளாகவும் காணப்படும். இவ்வகையான சொற்கள் ஒலிப்பின் போது நுண்ணிய வேறுபாடுகளை மட்டுமே கொண்டிருப்பதால் எது சரி, எது தவறு என மயங்க வைப்பவைகளாக இருக்கும். அதனாலேயே இவை மயங்கொலிச் சொற்கள் என்றழைக்கப்படுகின்றன.
உலக சுற்றுச்சூழல் நாள் (World Environment Day, WED) ஐக்கிய நாடுகள் அவையால் ஆண்டுதோறும் சூன் 5 ஆம் நாள் புவிக்கோளையும் அதன் இயற்கையையும் காப்பாற்றத் தேவைப்படும் சுற்றுச்சூழல் செயல்பாட்டைப் பற்றிய நேரடியான உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தக் கொண்டாடப்படுகிறது. இது ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபையால் 1972 ஆம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இச் சபையின் சார்பில் இந்நாளின் கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP) செயற்படுகின்றது.
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், (List of chief ministers of Tamil Nadu) என்பது முழுமையான நிலையில், தமிழ்நாட்டின் 1920ஆம் ஆண்டு முதலான வரலாற்றிலிருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.
ஓய்வூதியம் (pension) என்பது, அரசுத்துறையில் வயது முதிர்வு காலம்வரை நிறைவளிக்கத்தக்க வகையில் பணிபுரிந்து தங்கள் பணியை நிறைவு செய்த ஊழியர்களுக்கு ஓவ்வொரு மாதமும் அரசாங்கம் வழங்கும் தொகை ஆகும். அரச ஊழியர் ஒருவர் பணியிலிருந்து ஓய்வுபெறும் காரணம், சட்டரீதியான விதிகளின் கீழ் ஓய்வுபெறுதல் மற்றும் அவருடைய மொத்த பணிக்காலம், ஆகிய தன்மைகளின் அடிப்படையில் பல்வேறு வகையான ஓய்வூதிய வகைகளை ஓய்வூதிய விதிகள் அளிக்கின்றன. இந்தியாவில் அரசு ஊழியர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவன ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், உள்ளாட்சி நிறுவனங்களின் ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள், வயது மூப்பின் காரணமாக ஓய்வு/விருப்ப ஓய்வு/கட்டாய ஓய்வு/கொடிய நோயால் நிரந்தரமாக பணி செய்ய இயலாமை காரணமாக ஓய்வு பெறும்போது, அவர்களது பொருளாதார நலனை ஈடுகட்டும் வகையில் அவர்களுக்கு அரசு மாதாமாதம் ஒருதொகையை ஓய்வூதியமாக வழங்குகிறது..
மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்
தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள். அந்த வரிசையில் மொத்தம் 274 சிவ ஸ்தலங்கள் உள்ளன. அவைகளில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும், மற்ற கோயில்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் சில மற்ற இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ளன.
பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்
இத்தனிமங்களின் பட்டியல், பெயர்வாரியாக அமைத்த பட்டியல். தனிமத்தின் வகையைப் பொருத்து நிறம் காட்டப்பட்டுள்ளது. தனிமங்களின் குறியெழுத்து, அணுவெண் அணுப் பொருண்மை, நிலையான மாற்றுரு, நெடுங்குழு எண், கிடைவரிசை எண் முதலிய குறிக்கபட்டுள்ளன.
எலான் மசுக் (Elon Reeve Musk, பிறப்பு: சூன் 28, 1971) தென் ஆப்பிரிக்காவில் பிறந்த கனேடிய, அமெரிக்கத் தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர், முதலீட்டாளர் ஆவார். இவர்ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் செயல் அதிகாரியாகவும், தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகவும், டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கட்டுமான தலைவராகவும், முதன்மை செயல் அதிகாரியாகவும் உள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX), பேபால் (PayPal) டெஸ்லா மோட்டார்ஸ், ஜிப்2 ஆகிய நிறுவனங்களின் ஆரம்பகால முதலீட்டாளர் ஆவார்.
இளவரசன்-திவ்யா கலப்புத் திருமண சர்ச்சை
இளவரசன்-திவ்யா திருமணச் சிக்கல் என்பது தருமபுரி மாவட்டம் நத்தம் காலனியைச் சேர்ந்த தலித் இளைஞர் இளவரசனும் செல்லன் கொட்டாயில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த திவ்யாவும் காதலித்துத் திருமணம் செய்ததை அடுத்து உருவான சிக்கல்களைக் குறிக்கும். திவ்யாவின் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி இத்திருமணம் நடைபெற்றது. நவம்பர் 7ந் தேதி இரு வீட்டாரின் உறவினர்களும் தொப்பூரில் சந்தித்து பேசியபோது திவ்யா திவ்யாவின் அம்மாவுடன் செல்ல மறுத்து விடுகிறார்.
டூரிஸ்ட் ஃபேமிலி (Tourist Family) என்பது 2025ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் மொழி நகைச்சுவைத் திரைப்படமாகும். அபிசன் ஜீவிந்த் எழுதி இயக்கிய முதல் படம் இதுவாகும். மில்லியன் டாலர் இசுடுடியோசும் எம்ஆர்பி எண்டர்டெயின்மெண்டு நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் சசிக்குமார், சிம்ரன், மிதுன் ஜெய் சங்கர், கமலேசு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்
சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில் (Swamimalai Swaminathaswamy Temple) முருகனின் ஆறுபடை வீடுகளில், நான்காம் படை வீடாகத் திகழ்கின்றது. இது தமிழ்நாடு மாநிலத்தில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திற்கு வடகிழக்கில் 6 கி.மீ தொலைவில் காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மீனாட்சி சுந்தரேசுவரர் எழுந்தருளியுள்ளதால் சுந்தரேசுவரசுவாமி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
அங்கன்வாடி (Anganwadi) என்பது இந்திய அரசால் நடத்தப்படும் தாய் சேய் நல மையம் ஆகும். இங்கு பிறந்தது முதல் ஆறு வயது வரை உள்ள குழந்தைகளுக்கான சேவைகள் வழங்கப்படுகின்றன. 1975 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுச் சேவைகள் திட்டத்தின் (ICDS) கீழ் குழந்தைகள் பசியால் வாடி நலமற்றவர்களாக மாறுவதைத் தடுக்கவும் அவர்களிடையே பெருமளவில் காணப்படும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்கவும் இம் மையங்கள் துவங்கப்பட்டன.
செனாப் தொடருந்து பாலம் (ஆங்கிலம் : Chenab Rail Bridge) என்பது இந்தியாவின், சம்மு காசுமீர் மாநிலத்தில் உள்ள செனாப் நதியின் மீது குறுக்காக அமைக்கப்படும் இருப்புப் பாதை பாலம் ஆகும். செனாப் பாலத்தின் நீளம் 17 வளைவுகளுடன், 1,315 மீட்டர் இருக்கும், அவற்றில் செனாப் ஆற்றின் குறுக்கே உள்ள பிரதான வளைவின் பரப்பளவு 467 மீட்டர் ஆகும். இதன் கம்பீரமான வளைவுகள் நிறைவடைவதால், ஆற்றின் படுக்கைக்கு மேலே 359 மீட்டர் உயரமும், பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தை விட 30 மீட்டர் உயரமும் உயரும் சின்னமான செனாப் வளைவு பாலத்தின் கட்டுமானம் மற்றொரு மைல் கல்லை எட்டும்.
வைரமுத்து (Vairamuthu, பிறப்பு:13 சூலை 1953) ஒரு புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார். நிழல்கள் (1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலைப் பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் 2009 சனவரி மாதம் வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார்.
கன்னடம் (ಕನ್ನಡ , க1ந்நட3, Kannada) தென்னிந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 36 மில்லியன் மக்களால் பேசப்படும் ஒரு திராவிட மொழியாகும். பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில், இது திராவிட மொழிகளுள் மூன்றாவது பெரிய மொழியாகும். மேலும் தமிழுக்கு அடுத்தப்படியாக மிகப் பழமையான இலக்கியங்களைக் கொண்டுள்ள திராவிடமொழி கன்னடமே.
சுகன்ய சம்ரிதி திட்டம் (Sukanya Samriddhi Accounts) என்பது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதியன்று துவங்கப்பட்டது. இது பெண் குழந்தைகளின் உயர் கல்வி, திருமணம் போன்ற எதிர்கால திட்டங்களுக்கான சேமிப்புத் திட்டமாகும். இந்திய அரசின் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கான ஒரு சேமிப்பு திட்டமாக உருவாக்கப்பட்டது.
மகுவா மொயித்திரா (ஆங்கிலம்: Mahua Moitra, பிறப்பு: 5 மே 1975) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் மேற்கு வங்காளத்தின் கிருஷ்ணநகரில் இருந்து பதினேழாவது மக்களவைக்கு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சி வேட்பாளராக 2019இல் நடநத இந்திய பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கிலம்: Bhimrao Ramji Ambedkar; 14 ஏப்ரல் 1891– 6 திசம்பர் 1956) ஓர் இந்திய சட்ட வல்லுநர், பொருளாதார நிபுணர், சமூக சீர்திருத்தவாதியும் மற்றும் அரசியல் தலைவரும் ஆவார். இவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகப் பதவியேற்று, இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவிற்குத் தலைமை தாங்கினார். பட்டியல் இன மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கி தீண்டாமை ஒழியப் போராடினார்.
செயற்கை நுண்ணறிவு அல்லது செயற்கை அறிதிறன் ((Artificial intelligence)) (AI) - மனிதனுக்கும் இயந்திரத்திற்கும் இடையில் காணப்படும் வேறுபாடு என்னவென்றால் படைப்பாக்கத் திறன் ஆகும். இந்த படைப்பாக்கத் திறன் இயந்திரங்கள் மூலமும் சாத்தியப்படுமானால் அதுவே செயற்கை நுண்ணறிவு என அழைக்கப்படுகிறது. கணினி அறிவியலின் பரந்த கிளையாக, செயற்கை நுண்ணறிவு காணப்படுகிறது.
தமிழ் மாதங்கள் சித்திரை முதல் பங்குனி முடிய பன்னிரண்டு ஆகும். உண்மையில் இவை, இந்தியாவில் மட்டுமின்றி இந்தியாவுக்கு வெளியிலும் பல ஆசிய நாடுகளிலும் கூட இன்றும் சமயம் மற்றும் மரபு சார்ந்த தேவைகளுக்காகப் புழக்கத்திலுள்ள இந்துக் காலக் கணிப்பு முறையை அடிப்படையாகக் கொண்டதே. இந்துக் காலக் கணிப்பு முறை இன்று புழக்கத்திலுள்ள பகுதிகளிலெல்லாம் ஒரே விதமாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை.
தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளின் நிர்வாக வசதிகளுக்காக தமிழ்நாட்டின் 38 வருவாய் மாவட்டங்களில் 120 கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இக்கல்வி மாவட்ட அலுவலகங்களில் மாவட்டக் கல்வி அலுவலர் தலைமையின் கீழ் அலுவலகம் ஒன்று இயங்குகிறது. இந்த அலுவலகத்தின் மூலம் மாவட்டக் கல்வி அலுவலக எல்லைக்குள் உள்ள உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் செயல்பாடுகளைக் கவனித்தல், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வுகள் நடத்துதல், பொதுத் தேர்வுகளின் மதிப்பெண் பட்டியல்களை வழங்குதல் போன்ற பணிகள் செயல்படுத்தப்படுகின்றன.
விஜய் விட்டல் மல்லையா (Vijay Vittal Mallya) (பிறப்பு 18 டிசம்பர் 1955) ஒரு இந்திய தொழிலதிபரும், முன்னாள் அரசியல்வாதியும், இந்தியாவிலிருந்து தப்பியோடியவரும் ஆவார். இந்தியாவில் நிதிக் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்காக இங்கிலாந்தில் இருந்து இவரைத் திரும்பவும் இந்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் பல வங்கிகளில் சுமார் ரூ.9,000 கோடியை கடனாக பெற்று ஏய்ப்பு செய்ததாக இவர் மீது அமலாக்க இயக்குனரகம் மற்றும் நடுவண் புலனாய்வுச் செயலகம் வழக்கு பதிவு செய்துள்ளது.
திவ்ய தேசங்கள் (Divya Desam) என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும்.
நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் அல்லது நிக்கோலசு கோப்பர்னிக்கசு (; Niklas Koppernigk; போலிய: Mikołaj Kopernik; German: Nikolaus Kopernikus; பிப்ரவரி 19, 1473 - மே 24, 1543) ஒரு வானியலாளரும், கணிதவியலாளரும், பொருளியலாளருமாவார். கதிரவனை மையமாகக் கொண்ட புரட்சிகரமான கொள்கையை வகுத்துத் தந்து வானியலில் புதிய ஒரு வளர்ச்சிக்கு வித்திட்டவர். 15ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நிலவியிருந்த பூமியை மையமாகக் கொண்டே பிற கோள்கள் இயங்குகின்றன என்ற கொள்கையை மாற்றிக் கதிரவனை மையமாகக் கொண்டே கோள்கள் இயங்குகின்றன என உலகிற்குக் காட்டியவர்.