The most-visited English Wikipedia articles, updated daily. Learn more...
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
உலக அளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6,000-இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்துத் திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
மண்டாடி (Mandaadi / கடல் உலாவி) என்பது 2026-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சூரி, மகிமா நம்பியார் நடிப்பில் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் மீனவர்களின் வாழ்க்கைப் பின்னணியில் அமைந்துள்ளது. இத்திரைப்படம் 2026 கோடையில் வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
டோரதி (Dorothy) என்பது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் எழுத்து இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இதனை ஆஸ்கர் விருது பெற்ற குனீத் மோங்கா கபூர் தலைமையிலான சிக்யா எண்டர்டெயின்மெண்ட், அச்சின் ஜைன், ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் ஜோதி தேஷ்பாண்டே ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிசிகாந்த் ஆகியோர் இப்படத்தின் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்
திருவிடைமருதூர் மகாலிங்கேசுவரர் திருக்கோயில் (Thiruvidaimarudur Mahalingeswarar Temple), சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் காவிரி கரையில் அமைந்துள்ள 30-ஆவது சிவத்தலமாகும். மேலும் இது திருவாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தலங்களுள் ஒன்றாகும். இத்தலம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்.
நவநீதம் பிள்ளை (Navanethem Pillay, பிறப்பு: 23 செப்டம்பர் 1941) தென்னாப்பிரிக்கச் சட்ட அறிஞர் ஆவார்; இவர் 2008 முதல் 2014 வரை ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையராகப் பணியாற்றினார். இந்தியத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இவர், தென்னாப்பிரிக்க உயர் நீதிமன்றத்தின் முதல் வெள்ளையர் அல்லாத பெண் நீதிபதியாகத் திகழ்ந்தார். அத்துடன், இவர் அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், உருவாண்டாவிற்கான பன்னாட்டுக் குற்றவியல் தீர்ப்பாயத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
திருக்குறள் (Tirukkural), சுருக்கமாக குறள் (Kural), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று தொகுப்புகளைக் கொண்டது.
மேலதிக ஊடக சேவை அல்லது ஓடிடி தளம் (Over-the-top media service) என்பது இணைய வழி நேரடி நுகர்வோர் பார்வையாளருக்காக வழங்கப்படும் ஊடக ஓடை சேவையாகும். இது கம்பி வடத் தொலைக்காட்சி, புவிப்புறத் தொலைக்காட்சி, செய்மதித் தொலைக்காட்சி போன்றவற்றில் இருந்து வேறுபடுகின்றது. இந்த சேவையை பயன்படுத்தபடும் சந்தாதாரர்களிடமிருந்து மாதம் அல்லது வருட கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) கவிஞரும், எழுத்தாளரும், இதழாசிரியரும், விடுதலைப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியுமாவார். கவிதையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு "பாரதி" என்ற பட்டம் வழங்கப்பட்டது. நவீன தமிழ்க் கவிஞர்களின் முன்னோடியாகத் திகழ்ந்த இவர், தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2026
இப்பட்டியல் 2026 இல் வெளியிடப்பட்ட/திட்டமிடப்பட்டுள்ள இந்தியத் தமிழ்நாட்டுத் திரைப்படத் துறையினரால் தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களின் பட்டியலாகும்.
முத்தாரம்மன் கோவில், குலசேகரன்பட்டினம்
முத்தாரம்மன் கோவில் (Mutharamman Temple, Kulasekharapatnam) இந்திய நாட்டின் தமிழ்நாட்டிலுள்ள தூத்துக்குடி மாவட்டத்தின் திருச்செந்தூர் வட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினத்தின் கடற்கரையில் அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழமையான சக்தி தலமாகும். இக்கோயில் திருச்செந்தூரிலிருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது.
{{infobox person | name = இராமராஜன் | image = | birth_date = , 1960/10/08 (1960/10/08 -{{{month}}}-{{{day}}}) இராமராஜன் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர், அதிமுக-வின் தலைமை கழக பேச்சாளராக பொறுப்பு வகித்தார். இவர் 1998ல் திருச்செந்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.
காவல்துறை (Police) (பண்டைய கிரேக்க மொழி:πολιτεία) என்பது ஒரு மாகாணத்தில் சட்டத்தை செயல்படுத்தவும், சட்ட ஒழுங்கை காக்கவும், உடமைகளைப் பாதுகாக்கவும் அமைக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். இவற்றின் அதிகார வரம்பிற்கு ஏற்றார்போல குறிப்பிட்ட எல்லைகள் வரை செயல்படும். குற்றவியல் சட்டத்தை அமல்படுத்தல், குற்றவிசாரணை புரிதல், பொதுமக்களைப் பாதுகாத்தல், கூட்டத்தைக் கட்டுப்படுத்தல் போன்ற பணிகளும் இத்துறையால் செய்யப்படும்.
தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின் தென் முனையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படும் இம்மாநிலமானது, பரப்பளவில் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாக மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது. உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பேசும் தமிழர் வாழும் பகுதியே தமிழ்நாடு என அழைக்கப்படுகிறது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005
தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 (Right to Information Act, 2005) இந்திய நாடாளுமன்றத்தால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களிடமிருந்து மக்கள் உரிமையுடன் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக உருவாக்கப்பட்ட சட்டம் ஆகும். இச்சட்டம் 2004 திசம்பர் மாதம் , நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டு 2005 மே 11, அன்று, மக்கள் அவையிலும், 2005 மே 12, அன்று மாநில அவையிலும் நிறைவேற்றப்பட்டது. 2005 சூன், 15 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது.
தமிழ்நாட்டு துணை முதலமைச்சர்களின் பட்டியல்
தமிழக துணை முதலமைச்சர், ஒரு கட்டாயமற்ற மற்றும் தமிழக முதலமைச்சர் பதவிக்கு அடுத்த நிலையில் உள்ள பதவியாக மே 29, 2009 அன்று உருவாக்கப்பட்டது. தற்போதைய விஜய் தலைமையிலான ஆட்சியில், துணை முதலமைச்சர் பதவி யாருக்கும் வழங்கப்படவில்லை. இப்பதவி 2026 மே, 6 முதல் காலியாக உள்ளது.
2026-2031 தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்கள்
2026-2031 தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல் (2026-2031 Tamil Nadu Legislative Assembly By-Polls) என்பது 2026 ஏப்ரல் 23 அன்று நடைபெற்ற 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் முடிவு மே 4 அன்று வெளியானதைத் தொடர்ந்து நிகழ்வது ஆகும். இத்தேர்தலில், ச. சோசப் விசய் தலைமையிலான த.வெ.க.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026 (2026 Tamil Nadu Legislative Assembly election) தமிழ்நாடு சட்டமன்றத்தின் 234 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் ஆகும். 2026 ஏப்ரல் 23-ஆம் நாளன்று வாக்குப்பதிவு நடந்தது. மே 4 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின.
நானா படேகர் (Nana Patekar ) என்று அழைக்கப்படும் விசுவநாத் படேகர் (Vishwanath Patekar) (1 சனவரி 1951 – 8 அக்டோபர் 2026) என்பவர் இந்திய நடிகரும், திரைக்கதை ஆசிரியரும், இந்தியப் பிராந்திய இராணுவ முன்னாள் அதிகாரியுமாவார். முக்கியமாக இந்தி, மராத்தித் திரைப்படங்களில் பணியாற்றினார். இந்தியத் திரைப்படங்களில் சிறந்த நடிகர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
கார்லோ அகுடிஸ் (3 மே 1991 - 12 அக்டோபர் 2006) என்பவர் ஒரு இத்தாலிய கத்தோலிக்கர் ஆவார். உலகெங்கிலும் நடந்த நற்கருணை அற்புதங்களை தான் லுகேமியாவால் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் உருவாக்கிய ஒரு இணையதளத்தில் ஆவணப்படுத்தியதற்காக இவர் பெரிதும் அறியப்படுகின்றார். இவர் தனது வாழ்வில் நோயின் துன்பங்களுக்கு நடுவே காட்டிய மகிழ்ச்சிக்காகவும், கணினி திறன்களுக்காகவும், நற்கருணை மீதான ஆழ்ந்த பக்திக்காகவும் மிகவும் அறியப்படுகின்றார்.
திவ்ய தேசங்கள் (Divya Desam) என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும்.
சிவனின் 108 திருநாமங்கள் அல்லது சிவாஷ்டோத்தர சத நாமாவளி என்பது சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமானின் பெயர்களை கூறி போற்றும் தோத்திரப் பாடலாகும். இப்பாடல்களில் சிவபெருமானின் நூற்றியெட்டுப் பெயர்கள் கூறப்பெற்றுள்ளன. சமஸ்கிருதத்தில் நம என்றும், தமிழில் போற்றி என்றும் சிவபெருமானின் பெயருக்குப் பின் இணைத்து பாடப்பெறுகிறது.
தமிழ் (Tamil language), தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
பிரம்மச்சாரிணி (Brahmacharini; சமசுகிருதம்: ब्रह्मचारिणी) என்பர் தனது குருவுடன் மற்ற மாணவர்களுடன் ஆசிரமத்தில் வசிக்கும் அர்ப்பணிப்புள்ள மாணவியைக் குறிக்கிறது. மகாதேவியின் நவதுர்க்கை வடிவங்களில் இரண்டாவது அம்சமாக இவர் இருக்கிறார். மேலும் நவராத்திரியின் இரண்டாம் நாளில் (நவதுர்க்கையின் ஒன்பது தெய்வீக இரவுகள்) வழிபடப்படுகிறாள்.
சுகன்ய சம்ரிதி திட்டம் (Sukanya Samriddhi Accounts) என்பது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதியன்று துவங்கப்பட்டது. இது பெண் குழந்தைகளின் உயர் கல்வி, திருமணம் போன்ற எதிர்கால திட்டங்களுக்கான சேமிப்புத் திட்டமாகும். இந்திய அரசின் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கான ஒரு சேமிப்பு திட்டமாக உருவாக்கப்பட்டது.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்: பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தமிழ்நாட்டில், தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற ஒரு சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான தமிழர் கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியக் கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
மோகன்தாசு கரம்சந்த் காந்தி (ஆங்கிலம்: Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948) என்பவர் ஒரு இந்திய வழக்குரைஞரும், அன்னிய ஆட்சியை எதிர்த்த தேசியவாதியும், அரசியல் அறனாளரும் ஆவார். இவர் மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாகத் தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார்.
பரம் வீர் சக்கரம் விருது பெற்றவர்கள்
இந்திய இராணுவத்தினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான பரம் வீர் சக்கரம், 1999-ஆம் ஆண்டு முடிய 21 இந்திய இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது. 14 பேருக்கு இந்த விருது வீரர்கள் இறந்த பிறகு வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 20 விருதுகள் இந்தியத் தரைப்படை வீரர்களும், ஒர் விருது இந்திய வான்படை வீரரும் பெற்றுள்ளார்.
தமிழ்நாடு அமைச்சரவை (Tamil Nadu Council of Ministers) என்பது தமிழ்நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும், செயலாட்சியர்கள் அடங்கிய குழு ஆகும். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில், பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார்.
காமராசர் (Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975), இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், அரசியல்வாதிகளில் ஒருவருமாவார். இவர் 13 ஏப்ரல் 1954 முதல் 2 அக்டோபர் 1963 வரை ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். 1964 முதல் 1967 வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (Chief Minister's Comprehensive Health Insurance Scheme) என்பது தமிழ்நாட்டில் குடும்ப அட்டைதாரர்களுக்குத் தமிழக அரசு வழங்கியுள்ள காப்பீட்டுத் திட்டமாகும். இதில் உயிருக்கு ஆபத்தான 51 நோய்களுக்கு, ரூபாய் ஐந்து இலட்சம் வரையிலான உயர் மருத்துவ சிகிச்சைகளை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாகப் பெற வகை செய்கிறது. 2020 ஜூன் முதல் கொரோனா சிகிச்சைக்கான செலவும் இக்காப்பீட்டில் சேர்க்கப்பட்டு, தனியார் மருத்துவமனைகளுக்கான கட்டண விவரங்கள் வெளியிடப்பட்டன.
'வள்ளலார்' இராமலிங்க அடிகளார் (ஆங்கிலம்: Thiruvarutprakasa Vallalār Chidambaram Ramalingam, 5 அக்டோபர் 1823 – 30 சனவரி 1874) இந்திய நாட்டில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சைவ சமய ஆன்மீகவாதி ஆவார். "எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே" என்பதைக் குறிக்கும் வண்ணம், இவர் தோற்றுவித்த மார்க்கத்திற்கு "சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்க சங்கம்" என்று பெயரிட்டார். சைவ சமயத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்த வள்ளலாரைப் பழமைவாதிகள் கடுமையாக எதிர்த்தனர்.
கண்டன் சங்கரலிங்கனார் (Sankaralinganar, 1895 - 13 அக்டோபர் 1956) என்பவர் விடுதலைப் போராட்ட வீரரும், மதராசு மாநிலம் (மெட்ராஸ் ஸ்டேட்) என்று அழைக்கப்பட்ட பகுதிக்கு ”தமிழ்நாடு” என்று பெயர் வைக்கச் சொல்லி உண்ணாவிரதமிருந்து உயிர்விட்ட ஒரு போராளியும் ஆவார். 76 நாட்கள் தனது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டி தனது வீட்டின் முன், உண்ணாவிரதமிருந்து உயிர் விட்டவர். இவர் விருதுநகரை அடுத்த மண்மலைமேடு ஊரைச் சேர்ந்தவர்.
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், (List of Chief Ministers of Tamil Nadu) என்பது முழுமையான நிலையில், தமிழ்நாட்டின் 1920ஆம் ஆண்டு முதலான வரலாற்றிலிருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.
கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981), புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்
குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப்பெயர் குறிக்கிறது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் அல்லது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) என்பது தமிழ்நாட்டின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் உரிமைத் தொகையாக 1000 இந்திய ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் தமிழ்நாடு அரசுத் திட்டமாகும். இத்திட்டத்தை தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி நினைவாகப் பெயரிட்டுள்ளனர்.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்
தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள். அந்த வரிசையில் மொத்தம் 274 சிவ ஸ்தலங்கள் உள்ளன. அவைகளில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும், மற்ற கோயில்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் சில மற்ற இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ளன.
முத்துராமலிங்கத் தேவர் (Muthuramalingam Thevar, அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 30, 1963) ஆன்மிகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்குத் தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலைசிறந்தப் பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாளை அரசு விழாவாகத் தமிழக அரசு பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றது.
சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்
சிறுவாபுரி பாலசுப்பிரமணியம் கோயில் (Siruvapuri Sri Balasubrahmanyam temple) தமிழ்நாட்டின் சென்னைக்கு அருகிலுள்ள் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சின்னம்பேடு பகுதியில் அமைந்துள்ளது. சிறுவாபுரி முருகன் கோவில் என்றும் அறியப்படும் இத்திருக்கோயில் 500 ஆண்டுகள் பழமையானதாகும். கிராம மக்கள் சேர்ந்து இக்கோயிலை கட்டியுள்ளனர்.
வாய்வழிப் பாலுறவு அல்லது வாய்வழிப் புணர்ச்சி (Oral sex) என்பது வாய், நாக்கு ஆகியவற்றைப் பயன்படுத்திப் பாலுறுப்புக்களைத் தூண்டும் பாலியற் செயற்பாடாகும். இது பாலுறவின் முன்போ அல்லது பின்போ பாலியற் செயற்பாடாகவோ அல்லது புணர்ச்சிப் பரவசநிலையை எய்துவதற்கான செயற்பாடாகவோ இருக்கலாம். பெண்குறியை நாவால் தூண்டல் என்பது பெண்ணுறுப்பில் செய்யப்படும் வாய்வழிப் புணர்ச்சி ஆகும், அதே வாய்வழிப் புணர்ச்சி என்பது ஆண்குறியில் செய்யப்படும் வாய்வழிப் புணர்ச்சி ஆகும்.
கார்த்திக் சுப்புராஜ் (Karthik Subbaraj) தமிழ்த் திரைப்பட இயக்குனராவார். தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் பிறந்த இவர், தனது பள்ளிப் படிப்பை மதுரை எஸ்.பி.ஒ.ஏ பதின்ம மேல்நிலைப் பள்ளியிலும், திருப்பரங்குன்றம் தியாகராசர் பொறியியல் கல்லூரியில் பொறியியலும் முடித்தார். 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் நாள் வெளிவந்த பீட்சா திரைப்படத்தின் மூலம் திரைப்பட இயக்குனரானார்.
நீதிபதி கோபால் வல்லவ் பட்டநாயக் (Justice Gopal Ballav Pattanaik) (பிறப்பு 19 டிசம்பர் 1937) ஓர் இந்திய வழக்கறிஞர் ஆவார். பின்னர் ஒடிசா உயர் நீதிமன்ற அமர்வின் நிரந்தர நீதிபதியாகவும், பாட்னா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் 19 ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர், இந்திய உச்ச நீதிமன்றத்தின் 32வது தலைமை நீதிபதியானார்.
எக்ஸ் வீடியோஸ் (X Videos) என்பது 2018 ஆம் ஆண்டில் வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கணினி வழிக் குற்றம் தொடர்பான பரபரப்பூட்டும் இந்நாடகத் திரைப்படத்தில் சஜோ சுந்தர் இயக்குநராக அறிமுகமானார். உண்மை வாழ்வில் நடந்த மறைக்கப்பட்ட ஒளிப்படமி ஆபாசப் பட வழக்கு நிகழ்வுகளால் ஈர்க்கப்பட்ட இப்படம், இதுகுறித்த சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், இத்தகைய இழிவான செயல்களுக்கு எதிராகவும் எச்சரிக்கை விடுக்கிறது.
மேஜர் இராமசாமி பரமேஸ்வரன் (Ramaswamy Parameswaran), பரம் வீர் சக்கரம் (13 செப்டம்பர் 1946, மும்பை – 25 நவம்பர் 1987) இந்தியாவின் மும்பை நகரத்தில் 1946-இல் பிறந்த பரமேஸ்வரனின் தந்தை பெயர் இராமசாமி ஆகும். இவர் இந்திய அரசு நடத்தும் இராணுவ அதிகாரிகளுக்கான நுழைவுத் தேர்வில் (Short Service Commission) வென்று, 16 ஜனவரி 1972 அன்று இந்திய இராணுவத்தின் மகர் ரெஜிமெண்டின் 15-வது பட்டாலியனில் இராணுவ அதிகாரியாக பணியில் சேர்ந்தார். ஈழப் போரின் போது இந்திய அமைதி காக்கும் படை இணைந்த பரமேஸ்வரன் பவான் நடவடிக்கையின் பல வீரதீர சாகசங்கள் செய்து, 25 நவம்பர் 1987 அன்று வீரமரணம் அடைந்தார்.
வித்யா ராம்ராஜ் (பிறப்பு 20 செப்டம்பர் 1998) தமிழ்நாட்டின் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஒரு இந்திய தடகள வீராங்கனை ஆவார். இவர் 100 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் தடை ஓட்டம் மற்றும் 400 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்கிறார். 2026 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தடகளம் 4x400 மீட்டர் மகளிர் தொடர் ஓட்டத்தில் தங்கமும் 4x400 கலப்புப் பிரிவில் வெள்ளியும் 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலமும் வென்றார்.
அமைதிப் பெருங்கடல் அல்லது பசிபிக் பெருங்கடல் (Pacific Ocean) உலகின் மிகப் பெரிய நீர்த் தொகுதியாகும். இதற்கு போர்த்துகேய நிலந்தேடு ஆய்வாளரான பெர்டினென்ட் மகலன் என்பவரால் "அமைதியான கடல்" என்ற பொருளில் இப்பெயர் வழங்கப்பட்டது.16.52 கோடி சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ள இப்பெருங்கடல் உலகப் பரப்பில் மூன்றில் ஒரு பகுதியைச் சூழ்ந்து கொண்டுள்ளது. இது பூமியின் அனைத்துக் கண்டங்களின் கூட்டு நிலப்பரப்பை விட மிகப் பெரியதாகும்.