The most-visited English Wikipedia articles, updated daily. Learn more...
டோரதி (Dorothy) என்பது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் எழுத்து இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இதனை ஆஸ்கர் விருது பெற்ற குனீத் மோங்கா கபூர் தலைமையிலான சிக்யா எண்டர்டெயின்மெண்ட், அச்சின் ஜைன், ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் ஜோதி தேஷ்பாண்டே ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிசிகாந்த் ஆகியோர் இப்படத்தின் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மோகன்தாசு கரம்சந்த் காந்தி (ஆங்கிலம்: Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948) என்பவர் ஒரு இந்திய வழக்குரைஞரும், அன்னிய ஆட்சியை எதிர்த்த தேசியவாதியும், அரசியல் அறனாளரும் ஆவார். இவர் மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாகத் தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார்.
2026-2031 தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்கள்
2026-2031 தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல் (2026-2031 Tamil Nadu Legislative Assembly By-Polls) என்பது 2026 ஏப்ரல் 23 அன்று நடைபெற்ற 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் முதன்மையான சில மாற்றங்கள் நிகழ்ந்தன. இத்தேர்தலில், ச. சோசப் விசய் தலைமையிலான த.வெ.க.
காமராசர் (Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975), இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், அரசியல்வாதிகளில் ஒருவருமாவார். இவர் 13 ஏப்ரல் 1954 முதல் 2 அக்டோபர் 1963 வரை ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். 1964 முதல் 1967 வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார்.
கிராம சபை கூட்டம், இந்தியக் குடியரசு நாள் (26, சனவரி), தொழிலாளர் நாள் (1, மே), இந்திய விடுதலை நாள், (15, ஆகஸ்டு) காந்தி ஜெயந்தி (2, அக்டோபர்), உலக நீர் நாள் (மார்ச் 22) மற்றும் உள்ளாட்சி நாள் (நவம்பர் 1) ஆகிய ஆறு சிறப்பு நாட்களின் போது, தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கூட்டப்படுகிறது. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 3 படி கிராம சபை கூட்டத்திற்குதலைவர் வராத நிலையில் துணை தலைவரும், தலைவர் துணை தலைவர் இருவரும் வராத நிலையில், அக்கூட்டத்திற்கு வந்துள்ள உறுபினர்களால் விருப்பத்தேர்வு படி கூட்டத்தில் உள்ள உறுப்பினர் ஒருவர் தலைமை வகித்தல் வேண்டும். அரசு, குறிந்துரைக்கபடகூடிய பிற துறை அலுவலர்கள், அரசின் அறிவிக்கை வாயிலாக, இக்கிராமசபையில் கலந்துகொள்ள வேண்டும்.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2026
இப்பட்டியல் 2026 இல் வெளியிடப்பட்ட/திட்டமிடப்பட்டுள்ள இந்தியத் தமிழ்நாட்டுத் திரைப்படத் துறையினரால் தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களின் பட்டியலாகும்.
வித்யா ராம்ராஜ் (பிறப்பு 20 செப்டம்பர் 1998) தமிழ்நாட்டின் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஒரு இந்திய தடகள வீராங்கனை ஆவார். இவர் 100 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் தடை ஓட்டம் மற்றும் 400 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்கிறார். 2026 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தடகளம் 4x400 மீட்டர் மகளிர் தொடர் ஓட்டத்தில் தங்கமும் 4x400 கலப்புப் பிரிவில் வெள்ளியும் 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலமும் வென்றார்.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
உலக அளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6,000-இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்துத் திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
திருக்குறள் (Tirukkural), சுருக்கமாக குறள் (Kural), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று தொகுப்புகளைக் கொண்டது.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) கவிஞரும், எழுத்தாளரும், இதழாசிரியரும், விடுதலைப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியுமாவார். கவிதையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு "பாரதி" என்ற பட்டம் வழங்கப்பட்டது. நவீன தமிழ்க் கவிஞர்களின் முன்னோடியாகத் திகழ்ந்த இவர், தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்: பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தமிழ்நாட்டில், தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற ஒரு சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான தமிழர் கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியக் கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின் தென் முனையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படும் இம்மாநிலமானது, பரப்பளவில் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாக மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது. உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பேசும் தமிழர் வாழும் பகுதியே தமிழ்நாடு என அழைக்கப்படுகிறது.
நீரஜா பனோட் (Neerja Bhanot, 7 செப்டம்பர் 1963 முதல் 5 செப்டம்பர் 1986) என்பவர் பான் அம் விமான நிறுவனத்தின் விமான பணிப்பெண் ஆவார். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பான் அம் 73 என்ற விமானத்தில் இருந்து பயணிகளைக் காப்பாற்றிய பொழுது தீவரவாதிகளால் சுடப்பட்டு உயிரிழந்தார். இந்தியாவின் குடிமக்களின் வீரதீர செயல்களுக்கு வழங்கப்படும் உயரிய அசோகச் சக்கர விருது இவருக்கு வழங்கப்பட்டது.
மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்
தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள். அந்த வரிசையில் மொத்தம் 274 சிவ ஸ்தலங்கள் உள்ளன. அவைகளில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும், மற்ற கோயில்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் சில மற்ற இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ளன.
திவ்ய தேசங்கள் (Divya Desam) என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும்.
உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில்
உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில் (Uthirakosamangai Temple) என்பது தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும். இங்கு மங்களேசுவரி உடனுறை மங்களேசுவரர் அருள்பாலிக்கிறார். இத்தலம் திருவாசகம் பாடல் பெற்ற தலம் எனும் பெருமைக்குரியது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026 (2026 Tamil Nadu Legislative Assembly election) தமிழ்நாடு சட்டமன்றத்தின் 234 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் ஆகும். 2026 ஏப்ரல் 23-ஆம் நாளன்று வாக்குப்பதிவு நடந்தது. மே 4 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின.
திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்
திருவிடைமருதூர் மகாலிங்கேசுவரர் திருக்கோயில் (Thiruvidaimarudur Mahalingeswarar Temple), சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் காவிரி கரையில் அமைந்துள்ள 30-ஆவது சிவத்தலமாகும். மேலும் இது திருவாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தலங்களுள் ஒன்றாகும். இத்தலம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்.
தமிழ் (Tamil language), தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
தமிழ் ராக்கர்ஸ், தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களை சட்டத்திற்குப் புறம்பாக இணையத்தில் பகிரும், ஒரு இணையத்தளம் ஆகும். இது பிட்டொரென்ட் வகையை சேர்ந்ததாகும். இது தனக்கென ஒரு வழங்கி ஒன்றை வைத்துகொள்ளாமல், பயனர்களின் கணணிகளை வழங்கி (Peer to Peer) ஆக மாற்றி பயன்படுத்தும்.
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath & Sons) என்பது 2026 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் நாடகத் திரைப்படமாகும். வெங்கீ அட்லூரி எழுதி இயக்கிய இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் தயாரித்தன. இப்படத்தில் சூர்யா , மமிதா பைஜு ஆகியோருடன் ராதிகா சரத்குமார், ரவீணா டாண்டன், நாசர், ஹர்ஷா செமுடு, பவானி ஸ்ரீ , சுனில் ரெட்டி ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்
குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப்பெயர் குறிக்கிறது.
'வள்ளலார்' இராமலிங்க அடிகளார் (ஆங்கிலம்: Thiruvarutprakasa Vallalār Chidambaram Ramalingam, 5 அக்டோபர் 1823 – 30 சனவரி 1874) இந்திய நாட்டில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சைவ சமய ஆன்மீகவாதி ஆவார். "எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே" என்பதைக் குறிக்கும் வண்ணம், இவர் தோற்றுவித்த மார்க்கத்திற்கு "சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்க சங்கம்" என்று பெயரிட்டார். சைவ சமயத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்த வள்ளலாரைப் பழமைவாதிகள் கடுமையாக எதிர்த்தனர்.
ஆதவ் அர்ஜுனா (Aadhav Arjuna, பிறப்பு: ஏப்ரல் 12, 1982) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும், தேர்தல் வியூக வகுப்பாளரும் விளையாட்டுத்துறை நிர்வாகியுமாவார். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளராகவுள்ளார். திமுகவிற்குத் தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்தார்.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், (List of Chief Ministers of Tamil Nadu) என்பது முழுமையான நிலையில், தமிழ்நாட்டின் 1920ஆம் ஆண்டு முதலான வரலாற்றிலிருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.
எக்ஸ் வீடியோஸ் (X Videos) என்பது 2018 ஆம் ஆண்டில் வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கணினி வழிக் குற்றம் தொடர்பான பரபரப்பூட்டும் இந்நாடகத் திரைப்படத்தில் சஜோ சுந்தர் இயக்குநராக அறிமுகமானார். உண்மை வாழ்வில் நடந்த மறைக்கப்பட்ட ஒளிப்படமி ஆபாசப் பட வழக்கு நிகழ்வுகளால் ஈர்க்கப்பட்ட இப்படம், இதுகுறித்த சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், இத்தகைய இழிவான செயல்களுக்கு எதிராகவும் எச்சரிக்கை விடுக்கிறது.
அனுமன் சாலிசா (ஆங்கிலம்: Hanuman Chalisa; இந்தி: हनुमान चालीसा "அனுமன் மீது பாடப்பட்ட நாற்பது பாடல்கள்") என்பது இறைவன் அனுமன் மீது பாடப்பட்ட பக்திப் பாடல் ஆகும். துளசிதாசரால் அவாதி மொழியில் இந்தப் பாடல் எழுதப்பட்டுள்ளது, மேலும் அவரால் பாடப்பட்ட ராமசரிதமனசாவை விட இதுவே சிறந்த இந்து உரையாகும். பிரம்மச்சாரி தெய்வமான அனுமனின் அருள்பெற வேண்டி கோடிக்கணக்கானவர்களால் இச்சாலிசா பாடப்படுகிறது.
சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்
சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில் (Swamimalai Swaminathaswamy Temple) முருகனின் ஆறுபடை வீடுகளில், நான்காம் படை வீடாகத் திகழ்கின்றது. இது தமிழ்நாடு மாநிலத்தில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திற்கு வடகிழக்கில் 6 கி.மீ தொலைவில் காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மீனாட்சி சுந்தரேசுவரர் எழுந்தருளியுள்ளதால் சுந்தரேசுவரசுவாமி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
நைனாமலை வரதராஜப் பெருமாள் கோயில்
நைனாமலை வரதராஜ பெருமாள் கோயில் என்பது கொங்கு நாட்டில் உள்ள வைணவத் தலங்களில் புகழ் பெற்றதாகும். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியில் நைனாமலை என்னும் ஊரில் செங்குத்து வடிவிலான மலை மீது வாசம் செய்யும் பெருமாள் இப்பகுதியில் புகழ் பெற்றவர்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் (Madurai Meenakshi Sundareswarar Temple) மதுரையின் நடுவே அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இச்சிவன் கோயிலின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன் ஆவர். இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர்.
நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose, சனவரி 23, 1897 – இறந்ததாகக் கருதப்படும் நாள் ஆகத்து 18, 1945) இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர். இவர் 1945 ஆகத்து 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாகவும், அல்லது உருசியாவிற்குச் சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு துறவியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985 இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன.
கார்த்திக் சுப்புராஜ் (Karthik Subbaraj) தமிழ்த் திரைப்பட இயக்குனராவார். தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் பிறந்த இவர், தனது பள்ளிப் படிப்பை மதுரை எஸ்.பி.ஒ.ஏ பதின்ம மேல்நிலைப் பள்ளியிலும், திருப்பரங்குன்றம் தியாகராசர் பொறியியல் கல்லூரியில் பொறியியலும் முடித்தார். 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் நாள் வெளிவந்த பீட்சா திரைப்படத்தின் மூலம் திரைப்பட இயக்குனரானார்.
சிவனின் 108 திருநாமங்கள் அல்லது சிவாஷ்டோத்தர சத நாமாவளி என்பது சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமானின் பெயர்களை கூறி போற்றும் தோத்திரப் பாடலாகும். இப்பாடல்களில் சிவபெருமானின் நூற்றியெட்டுப் பெயர்கள் கூறப்பெற்றுள்ளன. சமஸ்கிருதத்தில் நம என்றும், தமிழில் போற்றி என்றும் சிவபெருமானின் பெயருக்குப் பின் இணைத்து பாடப்பெறுகிறது.
தமிழ்நாடு அமைச்சரவை (Tamil Nadu Council of Ministers) என்பது தமிழ்நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும், செயலாட்சியர்கள் அடங்கிய குழு ஆகும். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில், பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார்.
நிவின் பாலி (Nivin Pauly; மலையாளம்: നിവിൻ പോളി, பிறப்பு: அக்டோபர் 11, 1984) ஒரு இந்திய திரைப்பட நடிகர். இவர் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப், சப்டேர்ஸ், நேரம், அருகில் ஒராள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.பிரேமம்(2015) மலையாளத் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மலையாளத்தின் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக உருவாகி உள்ளார்.பெங்களுர் டேசு மற்றும் 1983 திரைப்படங்களுக்காக 2015 ஆண்டின் கேரள மாநில சிறந்த நடிகருக்கான விருது பெற்றுள்ளார்.
செலின் மேரி கிளாடெட் டியான் (),, சிசி, ஓக்யு (பிறப்பு மார்ச் 30, 1968) ஒரு கனடிய பாடகர், பாடல் எழுத்தாளர், நடிகை மற்றும் தொழில்முனைவாளர் ஆவார். கியூபெக், சார்ல்மனேயில் உள்ள பெரிய, ஏழைக்குடும்பத்தில் பிறந்த டியான் அவருடைய மேலாளரும் வருங்கால கணவருமான ரெனே ஆன்ஜெலில் அவருடைய முதல் இசைப்பதிவிற்காக தன்னுடைய வீட்டை அடமானம் வைத்த பின்னர் அவர் பிரெஞ்சு பேசும் உலகில் ஒரு இளம் நட்சத்திரமாக உருவானார். 1990 ஆம் ஆண்டில் அவர் யுனிசன் என்ற ஆங்கிலோபோன் ஆல்பத்தை வெளியிட்டு வட அமெரிக்காவிலும் உலகின் ஆங்கிலப் பேசும் பகுதிகளிலும் தான் ஒரு திறமைமிக்க பாப் கலைஞர் என்பதை நிறுவினார்.
வாய்வழிப் பாலுறவு அல்லது வாய்வழிப் புணர்ச்சி (Oral sex) என்பது வாய், நாக்கு ஆகியவற்றைப் பயன்படுத்திப் பாலுறுப்புக்களைத் தூண்டும் பாலியற் செயற்பாடாகும். இது பாலுறவின் முன்போ அல்லது பின்போ பாலியற் செயற்பாடாகவோ அல்லது புணர்ச்சிப் பரவசநிலையை எய்துவதற்கான செயற்பாடாகவோ இருக்கலாம். பெண்குறியை நாவால் தூண்டல் என்பது பெண்ணுறுப்பில் செய்யப்படும் வாய்வழிப் புணர்ச்சி ஆகும், அதே வாய்வழிப் புணர்ச்சி என்பது ஆண்குறியில் செய்யப்படும் வாய்வழிப் புணர்ச்சி ஆகும்.
சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்
சிறுவாபுரி பாலசுப்பிரமணியம் கோயில் (Siruvapuri Sri Balasubrahmanyam temple) தமிழ்நாட்டின் சென்னைக்கு அருகிலுள்ள் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சின்னம்பேடு பகுதியில் அமைந்துள்ளது. சிறுவாபுரி முருகன் கோவில் என்றும் அறியப்படும் இத்திருக்கோயில் 500 ஆண்டுகள் பழமையானதாகும். கிராம மக்கள் சேர்ந்து இக்கோயிலை கட்டியுள்ளனர்.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
அகவிலைப்படி (Dearness allowance) என்பது இந்தியா, வங்கதேசம் மற்றும் பாக்கித்தானில் உள்ள அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் பணவீக்கத்தினை ஈடுகட்ட கொடுக்கப்படும் படிகளின் கணக்கீடு ஆகும். பணவீக்கத்தின் பாதிப்பைக் குறைக்க, அகவிலைப்படியானது, இந்தியக் குடிமகனின் அடிப்படைச் சம்பளத்தின் சதவீதமாகக் கணக்கிடப்படுகிறது. இந்திய குடிமக்கள் அடிப்படைச் சம்பளம் அல்லது ஓய்வூதியத்தைப் பெறலாம்.
கிராம சபை அல்லது கிராம ஊராட்சியின் பொதுக்குழு, தமிழ்நாடு அரசு 1994-ஆம் ஆண்டில் இயற்றிய பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் படி கிராம ஊராட்சி மன்றம் அமைக்கப்பட்டது. ஒரு மாநிலத்தின் சட்டமன்றம், கிராம சபைக்கு அதிகாரங்களைப் பயன்படுத்த அனுமதி வழங்கலாம் என இந்திய அரசியலமைப்பு சடடப் பிரிவு 243 ஜி குறிப்பிடுகிறது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் செயல்படும் கிராம ஊராட்சியின் வாக்காளர் பட்டியல் உள்ளவர்கள் அனைவரும் கிராம சபையின் உறுப்பினர்கள் ஆவார்.
மனித ஆண்குறி என்பது உடலின் வெளிப்புறத்தில் காணப்படும் ஒரு ஆணின் உடல் உறுப்பு ஆகும். இது சிறுநீர் கழிப்பதற்கும் உடலுறவு கொள்வதற்கும் பயன்படுகிறது. ஆண்குறியின் முக்கிய பாலியல் செயல்பாடு - பெண்ணின் யோனிக்குள் செலுத்தப்பட்டு தொடர்ச்சியான பாலுறவு தூண்டுதல் மூலமாக கர்ப்பத்தை ஏற்படுத்தக்கூடிய விந்துவை வழங்குவதாகும்.
இம்மையிலும் நன்மை தருவார் கோயில்
இம்மையிலும் நன்மை தருவார் கோயில், மதுரை நகரின் மையப் பகுதியில், தெற்கு மாசி வீதி - மேலமாசி வீதி சந்திப்பில் அமைந்துள்ளது. கிழக்கு பார்த்த நிலையில் அமைந்த லிங்கத்திற்கு கீழ்புறத்தில் சிவனும் பார்வதியும் இலிங்கத்திற்கு பூஜை செய்யுமாறு மேற்கு நோக்கி காட்சியளிக்கின்றனர். இத்தலம் பூலோக கைலாயம் என வழங்கப்படுகிறது.
கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981), புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
திருக்கோடிக்காவல் கோடீசுவரர் கோயில்
கோடீசுவரர் கோயில் என்பது திருஞானசம்பந்தர், சுந்தரர், திருநாவுக்கரசர் ஆகியோரால், தமிழ்நாடு மாநிலத்தின் தேவாரம் பாடல் பெற்ற ஒரு சிவத்தலமாகும். இவ்வூரானது வேத்ரவனம் என்று புராணகாலத்தில் அழைக்கப்பட்டுள்ளது. இத்தலம் பெரிய கோயில் என்று வழங்கப்படுகிறது.
கலியுக வரதராச பெருமாள் கோவில் (Kaliyuga Varadaraja Perumal Temple) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் அரியலூர் மாவட்டத்தில், அரியலூரிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கல்லங்குறிச்சி என்ற ஊரில் அமைந்துள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும். இக்கோவிலை கல்லங்குறிச்சி பெருமாள் கோயில் என்றும் அழைக்கின்றனர். விசயநகரப் பேரரசின் நாயக்க மன்னர்கள் காலத்தை சேர்ந்த பழமை வாய்ந்த இத்திருத்தலத்தில் ஆண்டுதோறும் இராமநவமி அன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து 10 நாட்கள் பெருவிழா நடைபெறுகிறது.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் என்பது தமிழ் மொழியில் வெளிவந்த அனைத்துத் திரைப்படங்களையும் அகர வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோயில்
தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோயில் (தலைமலை நல்லேந்திர வரதராஜ பெருமாள்)என்பது தமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளி - நாமக்கல் மாவட்டங்களின் இடையே உள்ள தலைமலையில் உள்ள ஒரு பெருமாள் கோயிலாகும்.
வல்லக்கோட்டை முருகன் கோயில் இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்பெரும்புதூரிலிருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்து சமய முருகன் கோயிலாகும். 1200 ஆண்டுகள் தொன்மையானதாக கருதப்படும் இக்கோயிலின் மூலவர் (முருகன்) திருவுருவம் ஏழு அடி உயரம் உள்ளது; இந்தியாவில் அமைந்துள்ள முருகன் திருவுருவச்சிலைகளில் இதுவே உயரமானதாகும்.
வா. சத்தியபாமா (பிறப்பு: 22 மார்ச், 1972) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராகத் திருப்பூர் தொகுதியில் இருந்து, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் (Veerapandiya Kattabomman, 3 சனவரி 1760 - 16 அக்டோபர் 1799), தமிழகத்தில், ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்காரர் ஆவார். இவர் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர் இனத்தில் பிறந்தவர். இவருடைய முன்னோர்கள் முகமதியர்களின் படையெடுப்புக்குப்பின்பு கம்பிளி ராஜ்ஜியம் இழந்து விஜயநகரம் உருவாக்கினர்.
வேலுப்பிள்ளை பிரபாகரன் (Velupillai Prabhakaran, 26 நவம்பர் 1954 – 17 மே அல்லது 18 மே 2009) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் ஆவார். 1972 இல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது அகவையில் பிரபாகரன் தொடங்கினார். 1975 இல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் இவர் அதிகமாக இயங்கி வந்த காலகட்டத்தில், யாழ்ப்பாண மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா படுகொலைக்கு காரணமாக இவர் குற்றஞ்சாட்டப்பட்டார்.
திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்
திருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோயில் (Srirangam Ranganathaswamy Temple) 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம். சோழ நாட்டு திருப்பதிகளில் முதன்மை தலமாகவும், திருவரங்கம் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுகிறது. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்ட தீவில், சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையான மிகப் பெரிய அரங்கநாத பெருமாள் கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) என்னும் ஊர், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும்.
ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்
திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார்கோயில் (Avudaiyarkoil), இந்திய மாநிலமான தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆவுடையார்கோயில் வட்டத்தில், திருப்பெருந்துறை ஊரில் அமைந்த தேவார பாடல் பெற்ற சோழ நாடு காவிரி தென்கரையில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தலமாகும்.