The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026
தமிழ்நாடு சட்டமன்றத்தின் 234 உறுப்பினர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக அடுத்த தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல்-மே 2026 இல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தமிழகத்தின் முதலமைச்சராக மு. க.
தாவீது பாண்டியன் (David Pandian), 18 மே 1932 - 26 பெப்ரவரி 2021) இந்திய இடதுசாரி அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய பொதுவுடமைக் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் முன்னாள் செயலாளரும் ஆவார். இவர் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார். இவர் 1989, 1991 தேர்தல்களில் வடசென்னைத் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு - இந்திய ஐக்கிய பொதுவுடைமைக் கட்சிக் கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்களவை உறுப்பினரானார்.
விஜய் தேவரகொண்டா (9 மே 1989) (Vijay Deverakonda) தெலுங்கு சினிமாவில் பெயர் பெற்ற ஒரு இந்திய திரைப்பட நடிகர். விஜய் தேவரகொண்டா 2011 ஆம் ஆண்டில் ரவி பாபுவின் காதல் நகைச்சுவை திரைப்படமான நுவ்விலா (2011) மூலம் அறிமுகமானார் , ஆனால் அவர் யெவடே சுப்பிரமணியம் (2015) படத்தில் துணை வேடத்தில் நடித்ததன் மூலம் அங்கீகாரம் பெற்றார் . விஜய் 2016 பிளாக்பஸ்டர் காதல் நகைச்சுவை படமான பெல்லி சூப்புலுவில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து தெலுங்கில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது மற்றும் சிறந்த படத்திற்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு என விருது பெற்றார் .
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் அல்லது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) என்பது தமிழ்நாட்டின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் உரிமைத் தொகையாக 1000 இந்திய ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் தமிழ்நாடு அரசுத் திட்டமாகும். இத்திட்டத்தை தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி நினைவாகப் பெயரிட்டுள்ளனர்.
ஆதவ் அர்ஜுனா ("Aadhav Arjuna") என்பவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும் தேர்தல் வியூக வகுப்பாளரும் விளையாட்டுத்துறை நிர்வாகியுமாவார். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளராகவுள்ளார். இவர் "அரைஸ் கேப்பிட்டல்" என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் 2021ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் 2023ஆம் ஆண்டு முதல் இந்தியக் கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவராகவும் "வாய்ஸ் ஆப் காமன்ஸ்" என்ற அரசியல் வியூக நிறுவனத்தின் நிறுவனராகவும் உள்ளார்.
இந்தியப் பொதுவுடமைக் கட்சி அல்லது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (Communist Party of India) ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். இக்கட்சி எப்பொழுது தொடங்கப்பட்டது என்பது குறித்து இந்தியக் கம்யூனிச இயக்கத்தில் இரு வேறு கருத்துகள் உள்ளன. திசம்பர் 26, 1925-ஐ தன் நிறுவன நாளாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிடுகிறது.
தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின் தென் முனையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படும் இம்மாநிலமானது, பரப்பளவில் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாக மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது. உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பேசும் தமிழர் வாழும் பகுதியே தமிழ்நாடு என அழைக்கப்படுகிறது.
தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்
இப்பட்டியல் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் அதிகபட்சமாக நடித்த குறிப்பிடத்தக்க நடிகைகளின் பட்டியல் ஆகும். தமிழ்த் திரையுலகில் 10 & 10 ஆண்டுகளுக்கு இரசிகர்களால் கொண்டாடப்பட்ட முன்னணி நடிகைகளின் புகைப்படங்கள் கீழ்வருமாறு உள்ளது.
விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்
விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
திருக்குறள் (Tirukkural), சுருக்கமாக குறள் (Kural), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று தொகுப்புகளைக் கொண்டது.
நாம் தமிழர் கட்சி தமிழ்த் தேசிய, ஈழப் போராட்ட ஆதரவு உடைய, தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் செயல்படும் ஓர் அரசியல் கட்சி ஆகும். . இந்தக் கட்சி 2010 மே 18 அன்று சீமானால் தொடங்கப்பட்டது. தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் சி.பா.ஆதித்தனார் நடத்தி வந்த "நாம் தமிழர் இயக்கத்தின்" தொடர்ச்சியே சீமானால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி என அறியப்படுகிறது.
நெல்லை சதிவழக்கு அல்லது திருநெல்வேலி சதிவழக்கு (Tirunelveli District Communist Conspiracy Case) என்பது மேலாட்சி இந்தியாவில் சென்னை மாகாண அரசால், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி உறுப்பினர்கள் மீது தொடுக்கப்பட்ட ஒரு வழக்காகும். இந்த வழக்கில் தற்போதைய திருநெல்வேலி மாவட்டம், தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த இந்தியப் பொதுவுடைமைக் கட்சி தோழர்கள் கைது செய்யபட்டு, சித்தரவதை செய்யபட்டனர். இதில் இரா.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
உலகளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6000 இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021
தமிழ்நாட்டின் பதினாறாவது சட்டமன்றத் தேர்தல் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மொத்தமுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்ய 2021 ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் 6வது முறையாக தமிழகத்தின் பழம்பெரும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று அக்கட்சியின் தலைவர் மு. க.
வேலுப்பிள்ளை பிரபாகரன் (Velupillai Prabhakaran, 26 நவம்பர் 1954 – 17 மே அல்லது 18 மே 2009) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் ஆவார். 1972 இல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது அகவையில் பிரபாகரன் தொடங்கினார். 1975 இல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் இவர் அதிகமாக இயங்கி வந்த காலகட்டத்தில், யாழ்ப்பாண மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா படுகொலைக்கு காரணமாக இவர் குற்றஞ்சாட்டப்பட்டார்.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) கவிஞரும், எழுத்தாளரும், இதழாசிரியரும், விடுதலைப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியுமாவார். கவிதையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு "பாரதி" என்ற பட்டம் வழங்கப்பட்டது. நவீன தமிழ்க் கவிஞர்களின் முன்னோடியாகத் திகழ்ந்த இவர், தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
செயற்கை நுண்ணறிவு அல்லது செயற்கை அறிதிறன் ((Artificial intelligence)) (AI) - மனிதனுக்கும் இயந்திரத்திற்கும் இடையில் காணப்படும் வேறுபாடு என்னவென்றால் படைப்பாக்கத் திறன் ஆகும். இந்த படைப்பாக்கத் திறன் இயந்திரங்கள் மூலமும் சாத்தியப்படுமானால் அதுவே செயற்கை நுண்ணறிவு என அழைக்கப்படுகிறது. கணினி அறிவியலின் பரந்த கிளையாக, செயற்கை நுண்ணறிவு காணப்படுகிறது.
சர் சந்திரசேகர வெங்கட ராமன் (Chandrasekhara Venkata Raman) (நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர் ஆவார். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார்.
தமிழ் (Tamil language), தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
பாளையக்காரர் (Palaiyakkarar) தமிழகத்தில் விஜயநகரப் பேரரசின் ஆட்சி நடைபெற்றபோது, 1529-இற்கும், 1564-இற்கும் இடையில் மதுரை மண்டலத்தை நிர்வகித்தவர் விசுவநாத நாயக்கர். இவரால் தனது மாகாணங்களில் அதிகாரங்களைப் பெற விரும்பிய சிறுகுடித் தலைவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் அவரது அமைச்சர் அரியநாத முதலியாருடன் கலந்தாலோசித்து, ஆந்திராவை ஆண்ட காக்கத்தியர் இராச்சியத்தில் நடைமுறையில் இருந்த பாளையக்கார முறையை 1529-இல் ஏற்படுத்தினார்.
சிக்கந்தர் ராசா பட் ( Punjabi: سکندر رضا ; பிறப்பு 24 ஏப்ரல் 1986) பாகிஸ்தானில் பிறந்த சிம்பாப்வே துடுப்பாட்ட வீரர் ஆவார். ஒரு வலது கை மட்டையாளரான அவர் வலது கை உட்சுழல் பந்துவீச்சாளராகவும் விளங்குகிறார். அவர் மே 2013 இல் சிம்பாப்வேக்காக சர்வதேச அரங்கில் அறிமுகமானார் சியால்கோட்டில் பிறந்த ராசா, 2002இல் தனது குடும்பத்துடன் சிம்பாப்வேக்குக் குடிபெயர்ந்தார்.
தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்
தமிழ்நாட்டிலுள்ள, சட்டமன்றத் தொகுதிகள் மொத்தம் 234 ஆகும். சட்டமன்றத்தின் தலைமை அதிகாரி, சபாநாயகர் என்று அழைக்கப்படுகிறார். சட்டசபையின் காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும்.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (All India Anna Dravida Munnetra Kazhagam) (அஇஅதிமுக) என்பது தமிழ்நாடு மாநிலம் மற்றும் புதுச்சேரி ஒன்றியப் பகுதியில் உள்ள ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிரிந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ம. கோ.
வாச்சாத்தி வன்முறை என்பது தமிழ்நாட்டில் நிகழ்ந்த ஒரு வன்முறை நிகழ்வாகும். 1992 சூன் 20-22, தேதிகளில் வாச்சாத்திக் கிராமத்தில் தமிழ்நாட்டுக் காவல்துறையினராலும், வனத்துறையினராலும், வருவாய்த்துறையினராலும், அக்கிராம மக்கள் மீது நடத்திய வன்முறை/வன்கொடுமைத் தாக்குதல் நிகழ்வே வாச்சாத்தி வன்முறை எனப்படுகின்றது.
இராதிகா சரத்குமார் (Raadhika Sarathkumar, பிறப்பு: ஆகத்து 21, 1962) தென்னிந்திய திரைப்பட நடிகை மற்றும் தொலைக்காட்சி நடிகை, தயாரிப்பாளர் , அரசியல்வாதி ஆவார். ராடன் மீடியா (Radaan Media Works (I) Limited) என்ற நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். இதன் மூலம் பல தமிழ்த் திரைப்படங்கள், தென்னிந்தியத் தொலைக்காட்சித் தொடர்கள் தயாரிக்கிறார்.
காமராசர் (Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975), இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் அரசியல்வாதிகளில் ஒருவருமாவார். இவர் 13 ஏப்ரல் 1954 முதல் 2 அக்டோபர் 1963 வரை ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். 1964 முதல் 1967 வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார்.
மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்
தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள். அந்த வரிசையில் மொத்தம் 274 சிவ ஸ்தலங்கள் உள்ளன. அவைகளில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும், மற்ற கோயில்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் சில மற்ற இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ளன.
திராவிட முன்னேற்றக் கழகம் (Dravida Munnetra Kazhagam, திமுக) என்பது ஓர் இந்திய அரசியல் கட்சி ஆகும். குறிப்பாக இக்கட்சி தமிழ்நாடு மாநிலத்திலும், புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்திலும் செயற்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக உள்ள திமுக, இந்திய அளவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்ற கூட்டமைப்பில் ஒரு கட்சியாக செயல்படுகிறது.
பெண் (woman) என்னும் சொல் பல பொருள்களில் பயன்படுகின்றது. பால் பகுப்பில் பெண் பால் எல்லா உயிரினங்களினதும் பெண்." பாலாரை வயது வேறுபாடின்றிக் குறிக்கப் பயன்படுகின்றது. ஆங்கிலத்தில் "பெண்" என்ற உச்சரிப்பு கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் விம்பானா, 'wīfmann என்றும் பின்னர் வும்மான (wīmmann to wumman) என்றும் சொல்லிருந்து மருவி விம்மனுக்கும், இறுதியாக உச்சரிப்புடைய விம்மன் என்று மாறியது (பெண்ணுக்கும்) அது பழைய ஆங்கிலத்தில், விபெய்ன் "பெண் மனிதனை" குறிக்கிறது,என்றும் கருத்து உண்டு.
இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்
குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப்பெயர் குறிக்கிறது.
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், (List of chief ministers of Tamil Nadu) என்பது முழுமையான நிலையில், தமிழ்நாட்டின் 1920ஆம் ஆண்டு முதலான வரலாற்றிலிருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்:பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற ஒரு சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான தமிழர் கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்து (Tamil Thaai Vaalthu) என்பது இந்திய மாநில அரசுகளுள் தமிழை ஆட்சி மொழியாய் கொண்டுள்ளவற்றில் பாடப்பெறும் வாழ்த்துப் பாடலாகும். இது தமிழ்த் தாயை வாழ்த்தி வணக்கம் செலுத்துவதாக அமையும். இப்பாடல் அரசு விழாக்கள், பள்ளிகளின் காலை இறைவணக்கக் கூட்டம் முதலான நிகழ்வுகளின் தொடக்கத்தில் பாடப்படுகிறது.
இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்
இந்தியக் குடியரசுத் தலைவர் என்பவர், இந்திய தேசத்தின் தலைவர் மற்றும் இந்தியாவின் முப்படைகளின் தலைமைத் தளபதியும் ஆவார். இந்திய குடியரசுத் தலைவர் நாட்டின் முதல் குடிமகன் எனக் குறிப்பிடப்படுகிறார். இந்திய அரசியலமைப்பின் வாயிலாக இந்த அதிகாரங்கள் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்ட போதிலும், இந்த நிலை பெரும்பாலும் மரபுசார்ந்த ஒன்றாகும்.
தேசிய அறிவியல் நாள் (National Science Day) இந்தியாவில் பெப்ரவரி 28 ஆம் நாளில் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. தேசத்தலைவர்கள் மற்றும் தியாகிகளைக் கொண்டாடுவது போல அறிவியல் மேதைகளும் போற்றப்பட வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் 1987 - ஆம் ஆண்டு இந்தத் தேசிய அறிவியல் நாள் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டு இந்நாள் கொண்டாடப்படுகிறது.
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் (Muthuvel Karunanidhi Stalin, பிறப்பு: 1 மார்ச்சு, 1953) என்பவர் தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் ஆவார். இவர் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதியின் மூன்றாவது மகனும், துணை முதலமைச்சர் உதயநிதியின் தந்தையும் ஆவார்.
வைக்கம் போராட்டம் பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமி (இயற்பெயர்: ஈரோடு வெங்கட்டர் இராமசாமி , ஆங்கிலம்: E.V. Ramasamy, செப்டம்பர் 17, 1879 – திசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர்.
அம்பேத் ராஜன் (Ambeth Rajan, பிறப்பு 9 பெப்ரவரி 1956, மயிலாடுதுறை, மயிலாடுதுறை மாவட்டம், (தமிழ்நாடு)) என்பவர் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியும், இந்திய நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையிவில் உத்தரப் பிரதேசத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சுகன்ய சம்ரிதி திட்டம் (Sukanya Samriddhi Accounts) என்பது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதியன்று துவங்கப்பட்டது. இது பெண் குழந்தைகளின் உயர் கல்வி, திருமணம் போன்ற எதிர்கால திட்டங்களுக்கான சேமிப்புத் திட்டமாகும். இந்திய அரசின் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கான ஒரு சேமிப்பு திட்டமாக உருவாக்கப்பட்டது.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
திவ்ய தேசங்கள் (Divya Desam) என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும்.
திருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில்
திருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில் (ஆங்கிலம்: Sri Sowmya Narayana Perumal Thirukovil) தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டத்தின், திருப்பத்தூர் வருவாய் வட்டத்தில் திருகோஷ்டியூர் தலத்தில் அமைந்த 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. மூலவர் பெயர் சௌமிய நாராயணன்; தாயார் மகாலட்சுமி.
ராகவ் சதா (Raghav Chadha) ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலிருந்து நாடாளுமன்றத்தின், மாநிலங்களவை உறுப்பினர் ஆவார். மேலும் இவர் தில்லி ஜல் வாரியத்தின் துணைத் தலைவராகவும், டெல்லியில் உள்ள ராஜிந்தர் நகர் சட்டமன்றத் தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
மாசி மகம் என்பது மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும். அன்றைய தினம் கடலாடும் விழா என்று கொண்டாடப்படுகிறது. பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் மாய்ந்தழுந்தும் ஆன்மாவானது இறைவனது அருட்கடலாகிய இன்பவெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச் செய்யும் நன்நாளே மாசிமகக் கடலாடு தீர்த்தமாகும்.
காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை (C. N. Annadurai, 15 செப்டம்பர், 1909 – 03 பெப்ரவரி, 1969) ஓர் இந்திய அரசியல்வாதியும், மதராஸ் மாநிலத்தின் கடைசி முதல்வரும், தமிழகத்தின் முதலாவது முதலமைச்சருமாவார். இவர் அறிஞர் அண்ணா எனவும் பேரறிஞர் அண்ணா எனவும் அழைக்கப்படுகிறார். இவர் இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவரும், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார்.
சென்னை (Chennai) தமிழ்நாட்டின் தலைநகரமும், இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும். இந்தியாவின் முதல் மாநகராட்சி 1688 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் தேதி நிறுவப்பட்டது இந்நகரம், 1996-ஆம் ஆண்டுக்கு முன்னர் மதராசு பட்டினம், மெட்ராஸ் (Madras) மற்றும் சென்னப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டு வந்தது. சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று.
இசுரேல் (Israel, எபிரேயம்: יִשְׂרָאֵל; யிஸ்ராஎல்; அரபி: إِسْرَائِيل, யிஸ்ராஎல், அலுவலக ரீதியாக இசுரேல் நாடு; [மெதிநாத் யிஸ்ராஎல்](எபிரேயம்), [தவுலத் இஸ்ராஇல்](அரபு)) என்பது மேற்காசியாவின் தெற்கு லெவண்ட் பகுதியில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இந்நாடு வடக்கே லெபனான், வட கிழக்கே சிரியா, கிழக்கே யோர்தான், தென்மேற்கே எகிப்து மற்றும் மேற்கே நடுநிலக் கடல் ஆகியவற்றுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளது. கிழக்கே மேற்குக் கரையின் பாலத்தீன நிலப்பரப்புகளும், தென்மேற்கே காசாக்கரை மற்றும் வடகிழக்கே சிரியாவின் கோலான் குன்றுகள் ஆகிய பகுதிகளை இந்நாடு ஆக்கிரமித்துள்ளது.
ஆபாசத் திரைப்படம் அல்லது பாலியல் திரைப்படம் (Pornographic film) என்பது பாலியல் ரீதியான விசயங்களை முன்வைத்து பார்வையாளர்களை புணர்ச்சிப் பரவசநிலைக்கு தூண்டுவதற்காக உருவாக்கப்படும் ஒரு திரைப்பட வகை ஆகும். ஆபாசத் திரைப்படங்கள் பாலியல் கற்பனைகளை முன்வைக்கின்றன. பொதுவாக நிர்வாணம் மற்றும் பாலியல் பாலுறவு போன்ற சிற்றின்பத் தூண்டுதல்களை உள்ளடக்குகின்றன.
சாவர்க்கர் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பங்குகொண்ட ஒரு குறிப்பிடத்தகுந்தவர். இவரை இவருடைய பற்றாளர்கள் மற்றும் இந்து கொள்கையாளர்கள் "வீர் சாவர்க்கர்" என்றழைக்கின்றனர். இவர் ஆங்கிலேயரால் 50 ஆண்டுகள் சிறைத் தண்டனையைப் பெற்று இருந்தாலும்மன்னிப்பு கடிதம் எழுதிய பின்னர் 12 ஆண்டுகளின் பின் 1924 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார்.
முருகன் (Murugan) அல்லது கார்த்திகேயன் (Kartikeya) என்பவர் இந்து கடவுளர்களான சிவன்- பார்வதி தம்பதிக்கு மகனாவார். முருகன் இந்திய துணைக்கண்டத்தில் பண்டைய காலம் தொட்டு வணங்கப்படும் ஒரு முக்கிய தெய்வமாக இருந்து வருகிறார். இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார்.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கிலம்: Bhimrao Ramji Ambedkar; 14 ஏப்ரல் 1891– 6 திசம்பர் 1956) இந்தியச் சட்ட வல்லுநரும், பொருளாதார நிபுணரும், சமூக சீர்திருத்தவாதியும், அரசியல் தலைவரும் ஆவார். இவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகப் பதவியேற்று, இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவிற்குத் தலைமை தாங்கினார். பட்டியல் இன மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கி தீண்டாமை ஒழியப் போராடினார்.
பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்
பட்டியல் இனத்தவர்கள் மற்றும் பட்டியல் பழங்குடிகள் இனத்தவர்கள் (Scheduled Castes & Scheduled Tribes) என்ற சமூகத்தவர்கள் கல்வி, பொருளாதாரம், சமூகம் மற்றும் அரசியல் தகுதிகளில் இந்திய துணை கண்டத்தில் வரலாற்று ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள். பிரித்தானிய இந்தியாவில், இவர்களை ஒடுக்கப்பட்ட மக்கள் (Depressed Class) என்று வகைப்படுத்தி, அவர்களது பொருளாதார மேம்பாட்டிற்கு பஞ்சமி நிலங்கள் ஒதுக்கப்பட்டன. மகாத்மா காந்தியும், அவர்பால் ஈர்க்கப்பட்ட என்.
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) (English : Communist Party of India (Marxist)) இந்தியாவிலுள்ள ஒரு இடதுசாரி பொதுவுடமைக் கட்சி ஆகும். இக்கட்சி கேரளம், மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் பலமான ஆதரவை பெற்றுள்ளது. இது இடது பொதுவுடைமைக் கட்சி என்றும் சி.பி.எம் என்றும் அழைக்கப்படுகிறது.
விவிலிய சிலுவைப் பாதை (Scriptural Way of the Cross) என்பது இயேசு துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் உயிர்துறந்த நிகழ்வை, முற்றிலுமாக விவிலியத் தகவல்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தியானித்து இறைவேண்டல் செய்யும் கிறித்தவ பக்தி முயற்சி ஆகும். இது மரபு வழி வருகின்ற சிலுவைப் பாதையிலிருந்து சற்றே மாறுபட்டதாகும்.
கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981), புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டுப் பட்டியல்
தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சாதிகளையும் பட்டியலிட்டுள்ளது. இவை முறையே; பட்டியல் பழங்குடியினர் (36) பட்டியல் சாதிகள் (76) பிற்படுத்தப்பட்ட சாதிகள் (136) பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் (இஸ்லாமியர்) (7) மிகவும் பிற்பட்ட சாதிகள் (41) சீர்மரபினர் (68) முற்பட்ட சாதிகள் (79) என்று 7 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் இருக்கும் முற்பட்ட வகுப்பினர், அனைத்து வகுப்பினரும் பங்கேற்கும் பொதுப்பிரிவுகளின் மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மட்டுமே இடம் பெற இயலும்.