The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026, (2026 Tamil Nadu Legislative Assembly election) என்பது தமிழ்நாடு சட்டமன்றத்தின் 234 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2026-ஆம் ஆண்டில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் ஆகும். இத்தேர்தல் 2026 ஏப்ரல் 23-ஆம் நாளன்று நடைபெறும் என்றும், வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் மே 4 அன்று வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தின் முதலமைச்சராக மு.
தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்
தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம், பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெறும் வகையில், இந்திய அரசு, பட்டியல் சமூகத்தினருக்கு 44 சட்டமன்ற தொகுதிகளையும்; பட்டியல் பழங்குடி மக்களுக்கு 2 சட்டமன்ற தொகுதிகளையும் தனித்தொகுதிகளாக அறிவித்துள்ளது.
துரந்தர் (Dhurandhar) (மொழிபெயர்ப்பு|உறுதியானவர்) என்பது 2025ஆம் ஆண்டின் இறுதியில் இந்தி மொழியில் வெளியான திரைப்படமாகும். இப்படத்தின் இயக்குநர், திரைக்கதை, இணை தயாரிப்பாளர் ஆதித்தியா தார் ஆவார். இத்திரைப்படம் இந்திய உளவாளி பாகிஸ்தானில் நடத்தும் உளவு வேலைகளை மையமாகக் கொண்ட மயிர்க்கூச்செறியும் அதிரடித் திரைப்படம் ஆகும்.
தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்
தமிழ்நாட்டிலுள்ள, சட்டமன்றத் தொகுதிகள் மொத்தம் 234 ஆகும். சட்டமன்றத்தின் தலைமை அதிகாரி, சபாநாயகர் என்று அழைக்கப்படுகிறார். சட்டசபையின் காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும்.
கோயம்புத்தூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி
கோயம்புத்தூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி (Coimbatore North Assembly constituency), தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இந்த சட்டமன்றத் தொகுதியானது கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021
தமிழ்நாட்டின் பதினாறாவது சட்டமன்றத் தேர்தல் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மொத்தமுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்ய 2021 ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் 6வது முறையாக தமிழகத்தின் பழம்பெரும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று அக்கட்சியின் தலைவர் மு. க.
மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதி
மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதி, தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், மதுரை மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி ஆகும். 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மதுரை தெற்கு தொகுதியில் 2,24,675 வாக்காளர்கள் இருந்தனர். இவர்களில் 1,13,990 பேர் பெண்கள்.
ஆதவ் அர்ஜுனா ("Aadhav Arjuna") என்பவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும் தேர்தல் வியூக வகுப்பாளரும் விளையாட்டுத்துறை நிர்வாகியுமாவார். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளராகவுள்ளார். இவர் "அரைஸ் கேப்பிட்டல்" என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் 2021-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் 2023-ஆம் ஆண்டு முதல் இந்தியக் கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவராகவும் "வாய்ஸ் ஆப் காமன்ஸ்" என்ற அரசியல் வியூக நிறுவனத்தின் நிறுவனராகவும் உள்ளார்.
ராகவ் சதா (Raghav Chadha) ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலிருந்து நாடாளுமன்றத்தின், மாநிலங்களவை உறுப்பினர் ஆவார். மேலும் இவர் தில்லி ஜல் வாரியத்தின் துணைத் தலைவராகவும், டெல்லியில் உள்ள ராஜிந்தர் நகர் சட்டமன்றத் தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதி
சேலம்-வடக்கு சட்டமன்றத் தொகுதி (Salem North Assembly constituency) சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இந்த சட்டமன்றத் தொகுதியானது சேலம் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது. 2021-இல் இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2.75 இலட்சம் ஆகும்.
சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதி
சேலம்-மேற்கு சேலம் மாநகரத்தில் அமைந்துள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இந்த சட்டமன்றத் தொகுதியானது சேலம் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது. இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
உலகளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6000 இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
அஜித் குமார் தோவல், (பிறப்பு 20 ஜனவரி 1945) இந்தியக் காவல் பணி(ஓய்வு) ஒரு முன்னாள் இந்திய புலனாய்வு மற்றும் சட்ட அமலாக்க அலுவலர் ஆவார். இந்தியாவின் 5 ஆவது மற்றும் தற்போதைய இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான இவர் 2014 மே 30 முதல் இப்பதவியில் உள்ளார்.. இவர் 2004-2005 இல் புலனாய்வுத் துறையின் இயக்குநராக இருந்தார்.
குன்னம் சட்டமன்றத் தொகுதி (Kunnam Assembly constituency), தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், பெரம்பலூர் மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இந்த தொகுதி உருவாக்கப்பட்ட பின்னர் இதுவரை 3 சட்டமன்ற தேர்தல்களை சந்தித்துள்ளது. குன்னம் தொகுதி உருவாக்கப்படுவதற்கு முன்பு 1967-ஆம் ஆண்டு முதல் வரகூர் சட்டமன்றத் தொகுதியாக இதன் பகுதிகள் இருந்தது.
நாம் தமிழர் கட்சி தமிழ்த் தேசிய, ஈழப் போராட்ட ஆதரவு உடைய, தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் செயல்படும் ஓர் அரசியல் கட்சி ஆகும். . இந்தக் கட்சி 2010 மே 18 அன்று சீமானால் தொடங்கப்பட்டது. தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் சி.பா.ஆதித்தனார் நடத்தி வந்த "நாம் தமிழர் இயக்கத்தின்" தொடர்ச்சியே சீமானால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி என அறியப்படுகிறது.
தாவூத் இப்ராகிம் (Urdu: داؤد ابراہیم) டி-கம்பெனி என்ற மும்பையில் அமைந்த குற்றவாளி அமைப்பின் தலைவர் ஆவார்.இன்டர்போலின் குற்றவாளிகளின் பட்டியலில் கடுமையாகத் தேடப்படுவர்களில் ஒருவராக உள்ளார். 1993 மும்பை குண்டுவெடிப்புகளை இவர் திட்டமிட்டு ஒழுங்குபடுத்தி அதற்கு நிதியுதவி செய்துள்ளார். 2003இல் அமெரிக்க அரசு இவரை "உலகத் தீவிரவாதி" என்று குறித்து இவரின் பணம், சொத்துகளை தடை செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகளுக்கு கோரிக்கை செய்துள்ளது.
மோகன்தாசு கரம்சந்த் காந்தி (ஆங்கிலம்: Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948) என்பவர் ஒரு இந்திய வழக்குரைஞரும், அன்னிய ஆட்சியை எதிர்த்த தேசியவாதியும், அரசியல் அறனாளரும் ஆவார். இவர் மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாகத் தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார்.
செயற்கை நுண்ணறிவு அல்லது செயற்கை அறிதிறன் ((Artificial intelligence)) (AI) - மனிதனுக்கும் இயந்திரத்திற்கும் இடையில் காணப்படும் வேறுபாடு என்னவென்றால் படைப்பாக்கத் திறன் ஆகும். இந்த படைப்பாக்கத் திறன் இயந்திரங்கள் மூலமும் சாத்தியப்படுமானால் அதுவே செயற்கை நுண்ணறிவு என அழைக்கப்படுகிறது. கணினி அறிவியலின் பரந்த கிளையாக, செயற்கை நுண்ணறிவு காணப்படுகிறது.
திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி
திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி, தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், திருப்பூர் மாவட்டத்தின், புதிதாக உருவாக்கப்பட்ட, ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின் தென் முனையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படும் இம்மாநிலமானது, பரப்பளவில் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாக மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது. உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பேசும் தமிழர் வாழும் பகுதியே தமிழ்நாடு என அழைக்கப்படுகிறது.
திருக்குறள் (Tirukkural), சுருக்கமாக குறள் (Kural), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று தொகுப்புகளைக் கொண்டது.
வைப்புத்தொகை (Deposit) என்பது ஒரு வேட்பாளர் தேர்தலில் போட்டியிட கட்டவேண்டிய முன்பணம். அரசாட்சி முறையில் போதிய ஆர்வமற்றவர்களும், பொழுதுபோக்காக போட்டியிட நினைப்பவர்களையும் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து ஓரளவு தடுக்கும் நோக்குடன் வைப்புத் தொகை வசூலிக்கப்படுகிறது. பல நாடுகளில் ஒரு வேட்பாளர் ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கை வாக்குகளைப் பெறத் தவறினால் அவரது வைப்புத் தொகை அவருக்குத் திருப்பி அளிக்கப்படாது.
இந்திய சோதிடத்தில் பிரீதி என்பது, பஞ்சாங்க உறுப்புக்களுள் ஒன்றான "யோகம்" என்பதனுள் அடங்கும் 27 யோகங்களுள் இரண்டாவது ஆகும். இராசிச் சக்கரத்தின் தொடக்கப் புள்ளியில் இருந்து 13° 20' தொடக்கம் 26° 40' பிரீதி யோகத்துக்கு உரியது. சூரியன், சந்திரன் ஆகிய கோள்களின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை இந்தக் கோணத்தினூடாக அதிகரிப்பதற்கு எடுக்கும் நேரத்துக்குரிய யோகம் "பிரீதி" ஆகும்.
குண்டடம் கொங்கு வடுகநாத சுவாமி கோயில்
குண்டடம் கொங்கு வடுகநாத சுவாமி கோயில் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்தில் உள்ள குண்டடம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.
துன் டாக்டர் மகாதீர் பின் முகமது (Mahathir bin Mohamad; பிறப்பு: 10 சூலை 1925) மலேசிய அரசியல்வாதியும், எழுத்தாளரும் மருத்துவரும் ஆவார். இவர் 1981 முதல் 2003 வரையும், மீண்டும் 2018 முதல் 2020 வரையும் மலேசியாவின் பிரதமராகப் பணியாற்றினார். இவர் மொத்தம் 24 ஆண்டுகள் பதவியில் இருந்து நாட்டின் மிக நீண்ட காலம் பிரதமராக இருந்து சாதனை படைத்தார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (All India Anna Dravida Munnetra Kazhagam) (அஇஅதிமுக) என்பது தமிழ்நாடு மாநிலம் மற்றும் புதுச்சேரி ஒன்றியப் பகுதியில் உள்ள ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிரிந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ம. கோ.
தி. வேல்முருகன் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும் தற்போதைய தமிழக சட்டமன்ற உறுப்பினருமாவார். இவர் தனது ஆரம்ப காலத்தில் சார்ந்திருந்த பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2001 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பிலும் 2006 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பிலும் இரண்டு முறையும் தொடர் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார்.
மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி
மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி, தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், (Madathukulam Assembly constituency) திருப்பூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்றத் தொகுதி
திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்றத் தொகுதி, தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது திருச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஒரு அரசியல் கட்சியாகும். இக்கட்சி தேவேந்திர குல வேளாளர் மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து, அவர்களின் ஆதரவை நாடிச் செயல்படுகின்றது. இக்கட்சியின் தலைவர் பெ.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (Dalit Panthers அல்லது Viduthalai Siruthikal katchi) தமிழ்நாடு மாநிலம் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஓர் அரசியல் கட்சி ஆகும். இது தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற பல்வேறு மாநிலங்களிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆனது பரவி காணப்படுகிறது. இது 1972 ஆம் ஆண்டு மகாராட்டிர மாநிலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சி இயக்கமான, அன்றைய தமிழக தலைவராக இருந்த மதுரையை சார்ந்த மலைச்சாமி அவர்களை படுகொலை செய்யப்பட்ட பிறகு, அப்போது மதுரையில் தடயவியல் துறையில் பணியாற்றிக்கொண்டிருந்த திருமாவளவன் மதுரையில் நடந்த மலைச்சாமி அவர்களின் நினைவேந்தல் கூட்டத்தின் முடிவில் ஒருமித்த தலைவராக திருமாவளவன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி
ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி, தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், திண்டுக்கல் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.
தமிழ் (Tamil language), தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதி
காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதி (Kattumannarkoil Assembly constituency), தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், கடலூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
எறும்பு (Ant) குழுவாக வாழும் ஆறுகால்கள் கொண்ட ஒரு பூச்சியினமாகும். இவை வியப்பூட்டும் வகையில் குஒழுக்கம்சிற்றினங்கள்சமூகறினங்கள்சமூகசமூக]] ஒழுக்கம்) கொண்ட வாழ்வைக் கொண்டுள்ளன. ஒரு குறிப்பிட்ட குமுகத்தில் (சமூகத்தில்) அல்லது குழுவில் உள்ள எறும்புகள் தமக்கிடையே செய்திகளைப் பரிமாறிக் கொள்ள வேதிப்பொருள்களைப் பயன்படுத்துகின்றன (chemical communication).
திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி
திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி (Thiruporur Assembly constituency) என்பது தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இதன் தொகுதி எண் 33. திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.
தமிழ்நாடு சட்டப் பேரவை (Tamil Nadu Legislative Assembly) என்பது இந்தியாவின், 28 மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் அரசியல் திட்டம் சார்ந்த சட்டங்களை இயற்றும் அவையாகும். இது தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ளது. இதன் தோற்றம் மற்றும் வரலாற்றைப் பார்க்கும் பொழுது, இது 18 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாடு சென்னை மாகாணமாக இருந்த பொழுதிலிருந்தே இப்பேரவை செயல்பட்டுக் கொண்டிருந்தது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016
பதினைந்தாவது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் (Legislative Assembly election) 2016 மே 16 இல் இடம்பெற்றது. 234 தொகுதிகளைக் கொண்ட தமிழக சட்டமன்றத்திற்கு இடம்பெற்ற இத்தேர்தலில் ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் பெரும் கட்சிகளோடு கூட்டணி அமைக்காமல் சிறிய கட்சிகளுடன் ஒரிரு தொகுதியில் தனது இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தனிபெரும்பான்மையோடு தொடர் வெற்றி பெற்று மீண்டும் ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
பாட்டாளி மக்கள் கட்சி (Pattali Makkal Katchi, பா.ம.க) என்பது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். இக்கட்சியை 1989களில், மருத்துவர் ராமதாஸ் தொடங்கினார். வன்னியர் சமூக மக்களின் முன்னேற்றத்திற்காக தொடங்கப்பட்ட வன்னியர் சங்கமானது, பின்னாளில் பாட்டாளி மக்கள் கட்சி என்னும் அரசியல் கட்சியாக மாறியது.
காமராசர் (Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975), இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் அரசியல்வாதிகளில் ஒருவருமாவார். இவர் 13 ஏப்ரல் 1954 முதல் 2 அக்டோபர் 1963 வரை ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். 1964 முதல் 1967 வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார்.
கீழ்வைத்தியனான்குப்பம் சட்டமன்றத் தொகுதி
கீழ்வைத்தியனான்குப்பம் , வேலூர் மாவட்டத்தின் புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இதன் தொகுதி எண் 45. இது 2011 முதல் பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்ட தனி தொகுதியாகும்.
வேலுப்பிள்ளை பிரபாகரன் (Velupillai Prabhakaran, 26 நவம்பர் 1954 – 17 மே அல்லது 18 மே 2009) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் ஆவார். 1972 இல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது அகவையில் பிரபாகரன் தொடங்கினார். 1975 இல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் இவர் அதிகமாக இயங்கி வந்த காலகட்டத்தில், யாழ்ப்பாண மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா படுகொலைக்கு காரணமாக இவர் குற்றஞ்சாட்டப்பட்டார்.
மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்
தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள். அந்த வரிசையில் மொத்தம் 274 சிவ ஸ்தலங்கள் உள்ளன. அவைகளில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும், மற்ற கோயில்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் சில மற்ற இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ளன.
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி (Tiruppattur Assembly constituency), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 50. இது திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியுள் அடங்கியுள்ளது.
மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதி
மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதி என்பது தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.
குருத்து ஞாயிறு (Palm Sunday) அல்லது குருத்தோலை ஞாயிறு என்பது இயேசு கிறிஸ்து எருசலேம் நகருக்குள் வெற்றி ஆர்ப்பரிப்போடு நுழைந்த நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து கிறித்தவர்கள் ஆண்டுதோறும் அனுசரிக்கின்றனர். பாடுகளின் குருத்து ஞாயிறு என்றும் அழைக்கப்படுகிறது. இது இயேசு இறந்து உயிர்த்தெழுந்த ஞாயிறு (ஈஸ்டர்) க்கு முந்திய ஞாயிறு வரும்.
கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி
கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி என்பது தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதியாகும். இந்த சட்டமன்றத் தொகுதியானது கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியின் கீழ் அடங்குகிறது.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) கவிஞரும், எழுத்தாளரும், இதழாசிரியரும், விடுதலைப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியுமாவார். கவிதையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு "பாரதி" என்ற பட்டம் வழங்கப்பட்டது. நவீன தமிழ்க் கவிஞர்களின் முன்னோடியாகத் திகழ்ந்த இவர், தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்:பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற ஒரு சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான தமிழர் கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
பத்துப்பாட்டு (Ten Idylls) என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது.
ஓர்முசு நீரிணை (Straits of Hormuz, ஹோர்முஸ் நீரிணை) தென்கிழக்கில் ஓமான் குடாவையும், தென்மேற்கில் பாரசீகக் குடாவையும் கொண்டு அமைந்துள்ள ஒரு குறுகலான கடற் பரப்பாகும். இதன் வடக்கில் ஈரானும், தெற்கில் ஐக்கிய அரபு அமீரகமும், ஓமானின் ஒரு பகுதியான முசாந்தமும் அமைந்துள்ளன. ஹோர்முஸ் நீரிணையில் ஹோர்முஸ் தீவும் அமைந்துள்ளது.
ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதி
ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதி, தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், ஈரோடு மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
திராவிட முன்னேற்றக் கழகம் (Dravida Munnetra Kazhagam, திமுக) என்பது ஓர் இந்திய அரசியல் கட்சி ஆகும். குறிப்பாக இக்கட்சி தமிழ்நாடு மாநிலத்திலும், புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்திலும் செயற்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக உள்ள திமுக, இந்திய அளவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்ற கூட்டமைப்பில் ஒரு கட்சியாக செயல்படுகிறது.
உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி
உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி. இதன் தொகுதி எண் 36. இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி
புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி (Pudukkottai Assembly constituency), தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், (List of chief ministers of Tamil Nadu) என்பது முழுமையான நிலையில், தமிழ்நாட்டின் 1920ஆம் ஆண்டு முதலான வரலாற்றிலிருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.