The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
ஆதவ் அர்ஜுனா ("Aadhav Arjuna") என்பவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும் தேர்தல் வியூக வகுப்பாளரும் விளையாட்டுத்துறை நிர்வாகியுமாவார். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளராகவுள்ளார். இவர் "அரைஸ் கேப்பிட்டல்" என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் 2021-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் 2023-ஆம் ஆண்டு முதல் இந்தியக் கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவராகவும் "வாய்ஸ் ஆப் காமன்ஸ்" என்ற அரசியல் வியூக நிறுவனத்தின் நிறுவனராகவும் உள்ளார்.
பெரிய வியாழன் அல்லது புனித வியாழக்கிழமை (Holy Thursday, Maundy Thursday) என்பது கிறித்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் இறுதி நாள்களை நினைவுகூர்ந்து உயிர்ப்பு ஞாயிறுக்கு முன் வரும் வியாழன் அன்று கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும். இது பெரிய வாரம் அல்லது புனித வாரம் என்று அழைக்கப்படுகின்ற வாரத்தில் வருகின்ற வியாழக்கிழமை ஆகும். நற்செய்திகளில் கூறியுள்ளது போன்று, திருத்தூதர்களுடனான இயேசுவின் இறுதி இராவுணவு, மற்றும் கால்களைக் கழுவுதல் ஆகிய நிகழ்வுகளை கிறித்தவர்கள் இந்நாளில் நினைவுகூருகின்றனர்.
புனித வெள்ளி (Good Friday) என்பது கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வோராண்டும் கொண்டாடுகின்ற ஒரு விழாவாகும். இந்நாள் இயேசு உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்தைய வெள்ளிக்கிழமை நிகழும். இவ்விழா பெரிய வெள்ளி அல்லது ஆண்டவருடைய திருப்பாடுகளின் வெள்ளி என்றும் அழைக்கப்படுகிறது.
திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்றத் தொகுதி
திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்றத் தொகுதி, தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026 (2026 Tamil Nadu Legislative Assembly election) தமிழ்நாடு சட்டமன்றத்தின் 234 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2026-ஆம் ஆண்டில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் ஆகும். இத்தேர்தல் 2026 ஏப்ரல் 23-ஆம் நாளன்று நடைபெறும் என்றும், வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் மே 4 அன்று வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தின் முதலமைச்சராக மு.
ராகவ் சதா (Raghav Chadha) ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலிருந்து நாடாளுமன்றத்தின், மாநிலங்களவை உறுப்பினரானார். மேலும் இவர் தில்லி ஜல் வாரியத்தின் துணைத் தலைவராகவும், டெல்லியில் உள்ள இராஜிந்தர் நகர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
உலகளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6000 இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
நற்கருணை ஆராதனை (Eucharistic adoration) என்பது கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம் மற்றும் லூதரனிய கிறிஸ்தவ பிரிவுகளில், இயேசுவின் திருவுடலாக மாறிய அப்பத்தை இறைமக்கள் ஆராதிக்கும் வழிபாடு ஆகும். திருப்பலியில் ஒப்புக்கொடுக்கப்படும் அப்பத்தில், இயேசு கிறிஸ்து தனது உடலோடும், இரத்தத்தோடும், ஆன்மாவோடும், இறைத்தன்மையோடும் பிரசன்னமாகிறார் என்பது கத்தோலிக்க நம்பிக்கை. எனவே, நற்கருணை ஆராதனை என்பது அப்பத்தில் பிரசன்னமாகி இருக்கும் இயேசுவை ஆராதிப்பது ஆகும்.
புன்னையாடி ஸ்ரீனிவாசப்பெருமாள் கோயில் (வனத்திருப்பதி)
புன்னையாடி ஸ்ரீனிவாசப்பெருமாள் கோவில் (வன திருப்பதி), தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம்,, ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம், கச்சினாவிளை ஊராட்சியில் உள்ள புன்னையாடி கிராமத்தில் அமைந்த ஸ்ரீனிவாசப்பெருமாள் கோயில் ஆகும். திருமாலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயில் மூலவர் ஸ்ரீநிவாசப் பெருமாள் என்ற ஆதிநாராயணன் மற்றும் தாயார் பத்மாவதி ஆவர். ஸ்ரீஆதிநாராயணன் (சிவனைத் தழுவிய பெருமாள்) கருவறையிலிருந்து பக்தர்களுக்கு நின்ற வடிவில் அருள்பாலிக்கிறார்..
வைப்புத்தொகை (Deposit) என்பது ஒரு வேட்பாளர் தேர்தலில் போட்டியிட கட்டவேண்டிய முன்பணம். அரசாட்சி முறையில் போதிய ஆர்வமற்றவர்களும், பொழுதுபோக்காக போட்டியிட நினைப்பவர்களையும் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து ஓரளவு தடுக்கும் நோக்குடன் வைப்புத் தொகை வசூலிக்கப்படுகிறது. பல நாடுகளில் ஒரு வேட்பாளர் ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கை வாக்குகளைப் பெறத் தவறினால் அவரது வைப்புத் தொகை அவருக்குத் திருப்பி அளிக்கப்படாது.
நாம் தமிழர் கட்சி தமிழ்த் தேசிய, ஈழப் போராட்ட ஆதரவு உடைய, தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் செயல்படும் ஓர் அரசியல் கட்சி ஆகும். . இந்தக் கட்சி 2010 மே 18 அன்று சீமானால் தொடங்கப்பட்டது. தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் சி.பா.ஆதித்தனார் நடத்தி வந்த "நாம் தமிழர் இயக்கத்தின்" தொடர்ச்சியே சீமானால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி என அறியப்படுகிறது.
தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்
தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம், பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெறும் வகையில், இந்திய அரசு, பட்டியல் சமூகத்தினருக்கு 44 சட்டமன்றத் தொகுதிகளையும்; பட்டியற் பழங்குடி மக்களுக்கு 2 சட்டமன்றத் தொகுதிகளையும் தனித்தொகுதிகளாக அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்
தமிழ்நாட்டிலுள்ள, சட்டமன்றத் தொகுதிகள் மொத்தம் 234 ஆகும். சட்டமன்றத்தின் தலைமை அதிகாரி, சபாநாயகர் என்று அழைக்கப்படுகிறார். சட்டசபையின் காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும்.
கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி
கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி என்பது தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதியாகும். இந்த சட்டமன்றத் தொகுதியானது கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியின் கீழ் அடங்குகிறது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021
தமிழ்நாட்டின் பதினாறாவது சட்டமன்றத் தேர்தல் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மொத்தமுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்ய 2021 ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் 6வது முறையாக தமிழகத்தின் பழம்பெரும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று அக்கட்சியின் தலைவர் மு. க.
துரைமுருகன் (Durai Murugan, பிறப்பு: சூலை 1, 1938) என்பவர் காட்பாடியார் என்று தமிழக அரசியல் வட்டாரங்களில் சுருக்கமாக அழைக்கப்படும். இவர் இந்திய அரசியல்வாதியும், தமிழக அமைச்சரும், வழக்குரைஞரும் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும் ஆவார். இவர் திமுகவின் மேடைப்பேச்சாளர், இலக்கியவாதியுமாவார்.
மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்
தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள். அந்த வரிசையில் மொத்தம் 274 சிவ ஸ்தலங்கள் உள்ளன. அவைகளில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும், மற்ற கோயில்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் சில மற்ற இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ளன.
தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின் தென் முனையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படும் இம்மாநிலமானது, பரப்பளவில் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாக மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது. உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பேசும் தமிழர் வாழும் பகுதியே தமிழ்நாடு என அழைக்கப்படுகிறது.
தமிழ் (Tamil language), தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
எத்திராஜுலு வஜ்ரவேல் எனப்படும் எ .வ .வேலு (E. V. Velu, பிறப்பு: மார்ச் 15, 1951) ஒரு தமிழக அரசியல்வாதியும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தமிழக அமைச்சரவையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராகப் பணியாற்றுகிறார். திராவிடக் கொள்கையில் பற்றுக் கொண்ட இவர், திருவண்ணாமலையில் அருணை மருத்துவக்கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரியை நடத்தி வருகிறார்.
திராவிட முன்னேற்றக் கழகம் (Dravida Munnetra Kazhagam, திமுக) என்பது ஓர் இந்திய அரசியல் கட்சி ஆகும். குறிப்பாக இக்கட்சி தமிழ்நாடு மாநிலத்திலும், புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்திலும் செயற்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக உள்ள திமுக, இந்திய அளவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்ற கூட்டமைப்பில் ஒரு கட்சியாக செயல்படுகிறது.
துரந்தர் (Dhurandhar) (மொழிபெயர்ப்பு|உறுதியானவர்) என்பது 2025ஆம் ஆண்டின் இறுதியில் இந்தி மொழியில் வெளியான திரைப்படமாகும். இப்படத்தின் இயக்குநர், திரைக்கதை, இணை தயாரிப்பாளர் ஆதித்தியா தார் ஆவார். இத்திரைப்படம் இந்திய உளவாளி பாகிஸ்தானில் நடத்தும் உளவு வேலைகளை மையமாகக் கொண்ட மயிர்க்கூச்செறியும் அதிரடித் திரைப்படம் ஆகும்.
திருக்குறள் (Tirukkural), சுருக்கமாக குறள் (Kural), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று தொகுப்புகளைக் கொண்டது.
செயற்கை நுண்ணறிவு அல்லது செயற்கை அறிதிறன் ((Artificial intelligence)) (AI) - மனிதனுக்கும் இயந்திரத்திற்கும் இடையில் காணப்படும் வேறுபாடு என்னவென்றால் படைப்பாக்கத் திறன் ஆகும். இந்த படைப்பாக்கத் திறன் இயந்திரங்கள் மூலமும் சாத்தியப்படுமானால் அதுவே செயற்கை நுண்ணறிவு என அழைக்கப்படுகிறது. கணினி அறிவியலின் பரந்த கிளையாக, செயற்கை நுண்ணறிவு காணப்படுகிறது.
திருச்சிராப்பள்ளி (கிழக்கு) வட்டம்
திருச்சிராப்பள்ளி (கிழக்கு) வட்டம் , தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக திருச்சிராப்பள்ளி இருக்கிறது. இந்த வட்டத்தின் கீழ் 11 வருவாய் கிராமங்கள் உள்ளன.
இந்திய செஞ்சிலுவைச் சங்கம் (Indian Red Cross Society, IRCS) என்பது இந்தியாவில் வாழும் மனித வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் ஒரு தன்னார்வ மனிதாபிமான அமைப்பு. இது சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை இயக்கத்தின் ஒரு பகுதியாகும், எனவே சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைப் பகிர்ந்து கொள்கிறது. பேரழிவுகள்/அவசர காலங்களில் நிவாரணம் அளிப்பது, பாதிக்கப்படக்கூடிய மக்கள், சமூகங்களின் ஆரோக்கியம், பராமரிப்பு ஆகியவற்றை ஊக்குவிப்பதே இச்சங்கத்தின் நோக்கம்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (All India Anna Dravida Munnetra Kazhagam) (அஇஅதிமுக) என்பது தமிழ்நாடு மாநிலம் மற்றும் புதுச்சேரி ஒன்றியப் பகுதியில் உள்ள ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிரிந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ம. கோ.
வேலுப்பிள்ளை பிரபாகரன் (Velupillai Prabhakaran, 26 நவம்பர் 1954 – 17 மே அல்லது 18 மே 2009) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் ஆவார். 1972 இல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது அகவையில் பிரபாகரன் தொடங்கினார். 1975 இல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் இவர் அதிகமாக இயங்கி வந்த காலகட்டத்தில், யாழ்ப்பாண மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா படுகொலைக்கு காரணமாக இவர் குற்றஞ்சாட்டப்பட்டார்.
ஆபாசத் திரைப்படம் அல்லது பாலியல் திரைப்படம் (Pornographic film) என்பது பாலியல் ரீதியான விசயங்களை முன்வைத்து பார்வையாளர்களை புணர்ச்சிப் பரவசநிலைக்கு தூண்டுவதற்காக உருவாக்கப்படும் ஒரு திரைப்பட வகை ஆகும். ஆபாசத் திரைப்படங்கள் பாலியல் கற்பனைகளை முன்வைக்கின்றன. பொதுவாக நிர்வாணம் மற்றும் பாலியல் பாலுறவு போன்ற சிற்றின்பத் தூண்டுதல்களை உள்ளடக்குகின்றன.
விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்
விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்
சிறுவாபுரி பாலசுப்பிரமணியம் கோயில் (Siruvapuri Sri Balasubrahmanyam temple) தமிழ்நாட்டின் சென்னைக்கு அருகிலுள்ள் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சின்னம்பேடு பகுதியில் அமைந்துள்ளது.சிறுவாபுரி முருகன் கோவில் என்றும் அறியப்படும் இத்திருக்கோயில் 500 ஆண்டுகள் பழமையானதாகும். கிராம மக்கள் சேர்ந்து இக்கோயிலை கட்டியுள்ளனர். அரசாங்க பதிவுகளில் கோயிலின் அசல் பெயர் சின்னம்பேடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், (List of chief ministers of Tamil Nadu) என்பது முழுமையான நிலையில், தமிழ்நாட்டின் 1920ஆம் ஆண்டு முதலான வரலாற்றிலிருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.
திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்றத் தொகுதி
திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்றத் தொகுதி, தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது திருச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.
இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்
குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப்பெயர் குறிக்கிறது.
மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதி
மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதி என்பது தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.
பாரதிராஜா (Bharathiraja, பிறப்பு: சூலை 17, 1941), தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். தேனி-அல்லிநகரம் எனும் ஊரைச் சேர்ந்த இவர் அரங்கத்திற்குள் எடுக்கப்பட்டு வந்த தமிழ்த் திரைப்படங்களை வெளிப்புறப் படப்பிடிப்புப் பகுதிகளுக்குக் கொண்டு சென்றவர் என்ற பெருமைக்கு உரியவர். பெரும்பாலும் உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளைப் படம் பிடிப்பவர்.
தமிழ்நாடு சட்டப் பேரவை (Tamil Nadu Legislative Assembly) என்பது இந்தியாவின், 28 மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் அரசியல் திட்டம் சார்ந்த சட்டங்களை இயற்றும் அவையாகும். இது தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ளது. இதன் தோற்றம் மற்றும் வரலாற்றைப் பார்க்கும் பொழுது, இது 18 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாடு சென்னை மாகாணமாக இருந்த பொழுதிலிருந்தே இப்பேரவை செயல்பட்டுக் கொண்டிருந்தது.
தி. வேல்முருகன் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும் தற்போதைய தமிழக சட்டமன்ற உறுப்பினருமாவார். இவர் தனது ஆரம்ப காலத்தில் சார்ந்திருந்த பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2001 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பிலும் 2006 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பிலும் இரண்டு முறையும் தொடர் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார்.
உயிர்ப்பு ஞாயிறு (Easter), ஆண்டவரின் உயிர்ப்புப் பெருவிழா அல்லது ஆண்டவரின் பாஸ்கா என்பது இயேசு கிறிஸ்து கி.பி. சுமார் 33 ஆம் ஆண்டில் சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் சாவில் இருந்து உயிர்த்ததைக் குறிக்கும் விதமாக கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் பெருவிழா ஆகும். இது ஒவ்வொரு ஆண்டும் 40 நாட்கள் தவக்காலத்தின் முடிவில் வருகிறது.
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் (Muthuvel Karunanidhi Stalin, பிறப்பு: 1 மார்ச்சு, 1953) என்பவர் தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் ஆவார். இவர் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதியின் மூன்றாவது மகனும், துணை முதலமைச்சர் உதயநிதியின் தந்தையும் ஆவார்.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி (Chepauk-Thiruvallikeni Assembly constituency), தமிழ்நாட்டிலுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. இதன் தொகுதி எண் 19. இது சென்னை மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
அருஞ்சுனை காத்த அய்யனார் கோயில்
அருஞ்சுனை காத்த ஐயனார் கோயில் (Melaputhukudi Arunjunai Katha Ayyanar Thirukovil) இந்தியாவின் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே மேலப்புதுக்குடியில் அமைந்துள்ள ஓர் ஐயனார் கோயிலாகும்.
இயேசுவின் இறுதி இராவுணவு (Last Supper) என்பது கிறித்தவ நம்பிக்கைப்படி இயேசு கிறிஸ்து எருசலேம் சென்று துன்பங்கள் அனுபவித்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்துறந்ததற்கு முன்னால் தம் சீடர்களோடு சேர்ந்து இறுதியாக உணவு அருந்திய நிகழ்ச்சியைக் குறிக்கும். இயேசு அருந்திய இறுதி இராவுணவை நினைவுகூர்ந்து கிறித்தவர்கள் ஆண்டுதோறும் புனித வியாழன் விழாவைக் கொண்டாடுகின்றனர். மேலும், கிறித்தவர் ஆண்டு முழுவதும் கொண்டாடுகின்ற நற்கருணை, திருப்பலி நிகழ்ச்சிகளுக்கு விவிலிய அடிப்படை இந்நிகழ்ச்சியில் உள்ளது.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
முருகன் (Murugan) அல்லது கார்த்திகேயன் (Kartikeya) என்பவர் இந்து கடவுளர்களான சிவன்- பார்வதி தம்பதிக்கு மகனாவார். முருகன் இந்திய துணைக்கண்டத்தில் பண்டைய காலம் தொட்டு வணங்கப்படும் ஒரு முக்கிய தெய்வமாக இருந்து வருகிறார். இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார்.
அனுமன் ஜெயந்தி என்பது இந்துக் கடவுளும் இராமாயணக் கதாப்பாத்திரமுமான அனுமன் பிறந்தநாளைக் கொண்டாடும் விழாவாகும். தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் மட்டும் அனுமன் ஜெயந்தி மார்கழி மாதம், அமாவாசையும் மூலநட்சத்திரமும் கூடிவரும் நாளன்று கொண்டாடப்படுகிறது. ஆனால், பெரும்பாலான பிற மாநிலங்களில் சைத்ர மாதம் வளர்பிறையில் வரும் தசமி திதியன்று அனுமன் ஜெயந்தியைக் கொண்டாடுகிறார்கள்.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) கவிஞரும், எழுத்தாளரும், இதழாசிரியரும், விடுதலைப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியுமாவார். கவிதையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு "பாரதி" என்ற பட்டம் வழங்கப்பட்டது. நவீன தமிழ்க் கவிஞர்களின் முன்னோடியாகத் திகழ்ந்த இவர், தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
சிலுவைப் பாதை (Stations of the Cross) என்பது இயேசு கிறிஸ்து தம் மண்ணக வாழ்வின் இறுதி நாள்களில் துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் உயிர்துறந்த நிகழ்வுகளை நினைவு கூர்கின்ற வழிபாட்டுச் செயல் ஆகும். இந்த வழிபாட்டுச் செயல் கத்தோலிக்கக் கிறித்தவரிடையே பரவலாக உள்ளது. லூத்தரன் மற்றும் ஆங்கிலிக்கன் சபையாரிடையே இப்பழக்கம் அதிகமாக இல்லை.
நன்னிலம் சட்டமன்றத் தொகுதி (Nannilam Assembly constituency), தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், திருவாரூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 71 ஆயிரத்து 466 வாக்காளர்கள் இருந்தனர். இதில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 35 ஆயிரத்து 283 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 36 ஆயிரத்து 159 பேரும், இதர வாக்காளர்கள் 24 பேரும் இருந்தனர்.
சிவனின் 108 திருநாமங்கள் அல்லது சிவாஷ்டோத்தர சத நாமாவளி என்பது சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமானின் பெயர்களை கூறி போற்றும் தோத்திரப் பாடலாகும். இப்பாடல்களில் சிவபெருமானின் நூற்றியெட்டுப் பெயர்கள் கூறப்பெற்றுள்ளன. சமஸ்கிருதத்தில் நம என்றும், தமிழில் போற்றி என்றும் சிவபெருமானின் பெயருக்குப் பின் இணைத்து பாடப்பெறுகிறது.
திவ்ய தேசங்கள் (Divya Desam) என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும்.
கோயம்புத்தூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி
கோயம்புத்தூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி (Coimbatore North Assembly constituency), தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இந்த சட்டமன்றத் தொகுதியானது கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.
முத்தையா முரளிதரன் (Muttiah Muralitharan, பிறப்பு: ஏப்ரல் 17, 1972, கண்டி) பொதுவாக முரளி என்றும் அழைக்கப்படுகிறார். இலங்கையின் மலையகத் தமிழரான இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஆவார். 2002 ஆம் ஆண்டில் விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பானது இவரை தேர்வுத் துடுப்பாட்ட வரலாற்றில் மிகச்சிறந்த பந்து வீச்சாளர் எனக் குறிப்பிடுகிறது.