The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026 (2026 Tamil Nadu Legislative Assembly election) தமிழ்நாடு சட்டமன்றத்தின் 234 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2026-ஆம் ஆண்டில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் ஆகும். இத்தேர்தல் 2026 ஏப்ரல் 23-ஆம் நாளன்று நடைபெறும் என்றும், வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் மே 4 அன்று வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தின் முதலமைச்சராக மு.
ஆதவ் அர்ஜுனா ("Aadhav Arjuna") என்பவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும் தேர்தல் வியூக வகுப்பாளரும் விளையாட்டுத்துறை நிர்வாகியுமாவார். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளராகவுள்ளார்.திமுகவிற்குத் தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்தார். 2023-இல் திருச்சியில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டில் கலந்து கொண்டு அக்கட்சியில் இணைந்து துணைப் பொதுச்செயலாளரானார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021
தமிழ்நாட்டின் பதினாறாவது சட்டமன்றத் தேர்தல் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மொத்தமுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்ய 2021 ஏப்ரல் 6 அன்று சட்டமன்றப் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் 6-ஆவது முறையாகத் தமிழகத்தின் பழம்பெரும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று அக்கட்சியின் தலைவர் மு. க.
நாம் தமிழர் கட்சி தமிழ்த் தேசிய, ஈழப் போராட்ட ஆதரவு உடைய, தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் செயல்படும் ஓர் அரசியல் கட்சியாகும். . இந்தக் கட்சி 2010 மே 18 அன்று சீமானால் தொடங்கப்பட்டது. தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் சி.பா.ஆதித்தனார் நடத்தி வந்த "நாம் தமிழர் இயக்கத்தின்" தொடர்ச்சியே சீமானால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி என அறியப்படுகிறது.
வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு
தேர்தல் வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு (exit poll) என்பது வாக்காளர்கள் வாக்கினைச் செலுத்திவிட்டு வாக்குச் சாவடிகளை விட்டு வெளியேவரும் போது நடத்தப்பெறும் கருத்துக்கணிப்பாகும். இதில் வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளனர் போன்ற கேள்விகளைக் கேட்கும் கருத்துக்கணிப்பைப் போலன்றி, உண்மையில் அவர்கள் யாருக்கு வாக்களித்தனர் என்பது குறித்து கேள்வி கேட்கப்படும். வாக்காளர்கள் வாக்களிக்கும் முன்பு நடத்தப்படும் கருத்துக்கணிப்பு போன்றே இக்கருத்துக்கணிப்பும் நடத்தப்படுகின்றது.
தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியல்
தமிழ்நாட்டிலுள்ள, சட்டமன்றத் தொகுதிகள் மொத்தம் 234 ஆகும். சட்டமன்றத்தின் தலைமை அதிகாரி, சபாநாயகர் என்று அழைக்கப்படுகிறார். சட்டசபையின் காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும்.
வைப்புத்தொகை (Deposit) என்பது ஒரு வேட்பாளர் தேர்தலில் போட்டியிட கட்டவேண்டிய முன்பணம். அரசாட்சி முறையில் போதிய ஆர்வமற்றவர்களும், பொழுதுபோக்காகப் போட்டியிட நினைப்பவர்களையும் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து ஓரளவு தடுக்கும் நோக்குடன் வைப்புத் தொகை வசூலிக்கப்படுகிறது. பல நாடுகளில் ஒரு வேட்பாளர் ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கை வாக்குகளைப் பெறத் தவறினால் அவரது வைப்புத் தொகை அவருக்குத் திருப்பி அளிக்கப்படாது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்
மின்ணணு வாக்குப்பதிவு இயந்திரம் (electronic voting machine) ஆரம்ப காலத்தில் காகித முறை வாக்கு செலுத்தும் முறைக்கு பதிலாக தேர்தல்களில் பயன்படுத்தபடும் நவீன முறையிலான மின்னணு வாக்கு இயந்திரம் முறையாகும். இவை தற்போது சில நாடுகளில் தேர்தல்களின் போது வாக்காளர்களின் வாக்கைப் பதிவு செய்ய நடைமுறையில் இருக்கும் கருவியாகும். பதிவான தகவல்களைச் சேமித்து வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை வெளிக்காட்டும் இயந்திரமாகும்.
தமிழகத் தேர்தல்களில் வாக்குப்பதிவு புள்ளிவிவரம்
தமிழ்நாட்டில் நடந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் குறித்த புள்ளிவிவரம் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம் (Dravida Munnetra Kazhagam, திமுக) என்பது ஓர் இந்திய அரசியல் கட்சி ஆகும். குறிப்பாக இக்கட்சி தமிழ்நாடு மாநிலத்திலும், புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்திலும் செயற்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக உள்ள திமுக, இந்திய அளவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்ற கூட்டமைப்பில் ஒரு கட்சியாக செயல்படுகிறது.
கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி
கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி என்பது தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதியாகும். இந்த சட்டமன்றத் தொகுதியானது கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியின் கீழ் அடங்குகிறது.
வேலுப்பிள்ளை பிரபாகரன் (Velupillai Prabhakaran, 26 நவம்பர் 1954 – 17 மே அல்லது 18 மே 2009) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் ஆவார். 1972 இல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது அகவையில் பிரபாகரன் தொடங்கினார். 1975 இல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் இவர் அதிகமாக இயங்கி வந்த காலகட்டத்தில், யாழ்ப்பாண மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா படுகொலைக்கு காரணமாக இவர் குற்றஞ்சாட்டப்பட்டார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011
தமிழ்நாட்டின் பதினான்காவது சட்டமன்றத் தேர்தல் 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று நடைபெற்றது. ஐந்தாண்டுகளாக ஆட்சியில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி தோல்வியடைந்தது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஜெ.
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் (Muthuvel Karunanidhi Stalin, பிறப்பு: 1 மார்ச்சு, 1953) என்பவர் தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் ஆவார். இவர் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதியின் மூன்றாவது மகனும், துணை முதலமைச்சர் உதயநிதியின் தந்தையும் ஆவார்.
தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்
தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம், பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெறும் வகையில், இந்திய அரசு, பட்டியல் சமூகத்தினருக்கு 44 சட்டமன்றத் தொகுதிகளையும்; பட்டியற் பழங்குடி மக்களுக்கு 2 சட்டமன்றத் தொகுதிகளையும் தனித்தொகுதிகளாக அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024
இந்தியாவின் 18 ஆவது மக்களவைக்கான தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 அன்று நடந்தது. இத்தேர்தல் முடிவுகள் இந்தியாவின் பிற பகுதிகளிலும் தேர்தல் முடிவுற்ற பின்னர் சூன் 4 அன்று வாக்கு எண்ணிக்கைக்குப் பின்னர் வெளியிடப்பட்டது.இதில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளையும் வென்றது.
தமிழ்நாடு சட்டப் பேரவை (Tamil Nadu Legislative Assembly) என்பது இந்தியாவின், 28 மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் அரசியல் திட்டம் சார்ந்த சட்டங்களை இயற்றும் அவையாகும். இது தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ளது. இதன் தோற்றம் மற்றும் வரலாற்றைப் பார்க்கும் பொழுது, இது 18 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாடு சென்னை மாகாணமாக இருந்த பொழுதிலிருந்தே இப்பேரவை செயல்பட்டுக் கொண்டிருந்தது.
தபால் வாக்களிப்பு (Postal voting) , தபால் வாக்கு அல்லது அஞ்சல் வாக்கு என்பது, தேர்தலில் வாக்காளர்கள் ஒரு வாக்குச் சாவடியில் நேரில் அல்லது மின்னணு வாக்கு முறை மூலம் வாக்களிக்கும் வழக்கமான முறைக்குப் பதிலாக தபால் மூலமாக தங்களது வாக்கினைப் பதிவு செய்வதனைக் குறிப்பதாகும். வழக்கமாக, திட்டமிடப்பட்ட தேர்தல் நாளுக்கு முன்பே தபால் வாக்குகள் திருப்பி அனுப்பப்பட வேண்டும். இருப்பினும், சில அதிகாரப்பூர்வ அனுமதிகளுடன் வாக்குச் சாவடியில் வாக்களிக்கவோ வாக்குச் சீட்டை நேரில் பதிவுசெய்யவோ அனுமதிக்கலாம்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (All India Anna Dravida Munnetra Kazhagam) (அஇஅதிமுக) என்பது தமிழ்நாடு மாநிலம் மற்றும் புதுச்சேரி ஒன்றியப் பகுதியில் உள்ள ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிரிந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ம. கோ.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
உலக அளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6,000-இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016
பதினைந்தாவது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் (Legislative Assembly election) 2016 மே 16 இல் இடம்பெற்றது. 234 தொகுதிகளைக் கொண்ட தமிழக சட்டமன்றத்திற்கு இடம்பெற்ற இத்தேர்தலில் ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் பெரும் கட்சிகளோடு கூட்டணி அமைக்காமல் சிறிய கட்சிகளுடன் ஒரிரு தொகுதியில் தனது இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தனிபெரும்பான்மையோடு தொடர் வெற்றி பெற்று மீண்டும் ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், (List of chief ministers of Tamil Nadu) என்பது முழுமையான நிலையில், தமிழ்நாட்டின் 1920ஆம் ஆண்டு முதலான வரலாற்றிலிருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.
தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின் தென் முனையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படும் இம்மாநிலமானது, பரப்பளவில் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாக மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது. உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பேசும் தமிழர் வாழும் பகுதியே தமிழ்நாடு என அழைக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்
தமிழ்நாட்டில் பல கட்சி அமைப்பு உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் தேசிய அளவிலான மற்றும் மாநில அளவிலான அரசியல் கட்சிகளுக்கு புறநிலை அளவுகோல்களின் அடிப்படையில் அங்கீகாரம் அளிக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியானது ஒதுக்கப்பட்ட கட்சி சின்னம், அரசு நடத்தும் தொலைக்காட்சி மற்றும் வானொலியில் இலவச ஒளிபரப்பு நேரம், தேர்தல் தேதிகளை அமைப்பதில் ஆலோசனை, தேர்தல் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை அமைப்பதில் உள்ளீடு போன்ற சலுகைகளை அனுபவிக்கிறது.
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 2026
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 2026 (2026 Puducherry Legislative Assembly election) என்பது 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் 9 அன்று புதுச்சேரியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலாகும். வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் 2026 மே 4 அன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்றத் தொகுதி
திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்றத் தொகுதி, தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
திரிஷா கிருஷ்ணன் இயற்பெயர் அனுராதிகா கிருஷ்ணரத்னம் (பிறப்பு - மே 4, 1983, சென்னை) தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட முன்னணி கதாநாயகி ஆவார். இவர் நடித்த சாமி, கில்லி போன்ற திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை. இவர் திரைக்கு வருவதற்கு முன்பு ஆரம்பகாலத்தில் சென்னை அழகியாக 1999ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி
சோளிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி (Sholinganallur Assembly constituency) என்பது தமிழ்நாட்டின் 234 தொகுதிகளில் ஒன்றாகும். இதன் தொகுதி எண் 27. இது செங்கல்பட்டு மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
துரைமுருகன் (Durai Murugan, பிறப்பு: சூலை 1, 1938) என்பவர் காட்பாடியார் என்று தமிழக அரசியல் வட்டாரங்களில் சுருக்கமாக அழைக்கப்படும். இவர் இந்திய அரசியல்வாதியும், தமிழக அமைச்சரும், வழக்குரைஞரும் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும் ஆவார். இவர் திமுகவின் மேடைப்பேச்சாளர், இலக்கியவாதியுமாவார்.
தேர்தல் மை என்பது தேர்தல்களில் மோசடியான வாக்குகளை தடுப்புவதற்காக, வாக்காளர்களின் விரலில் (பொதுவாக ஆள்காட்டி விரலில்) பூசப்படும் மை. இந்த மை சில வாரங்களாக நகங்களிலிருந்து அழியாமல் இருக்கும். தரப்படுத்தப்பட்ட அடையாளங்காட்டுதல் முறைமைகள் இல்லாத நாடுகளில் தேர்தல் மோசடியை தடுப்பதற்காக தேர்தல் மை ஒரு திறமான முறையாக அறியப்படுகிறது.
நோட்டா (None of the Above - NOTA;) அனைவருக்கும் எதிரான வாக்கு என்று பொருள். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் மக்கள் அனைவருக்குமான உரிமையே இந்த நோட்டா பொத்தான் என்பதாகும். எந்த ஒரு வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாத எந்த ஒரு இந்தியரும் இந்தப் பொத்தானை அழுத்துவதின் மூலம் அந்தத் தொகுதியில் நிற்கும் வேட்பாளரை தான் வெறுக்கிறேன் என்று அர்த்தம் கொள்ளப்படும்.
முகேஷ் சௌத்ரி (Mukesh Choudhary)(பிறப்பு: ஜூலை 6, 1996) என்பவர் இந்திய துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் 9 நவம்பர் 2017 அன்று 2017-18 ரஞ்சி டிராபியில் மகாராஷ்டிராவுக்காகத் தனது முதல்-தரத் துடுப்பாட்ட போட்டிகளில் அறிமுகமானார். இவர் 2019-20 விஜய் ஹசாரே கோப்பைக்கானப் போட்டியில் மகாராட்டிராவுக்காக 7 அக்டோபர் 2019 அன்று தனது பட்டியல் அ துடுப்பாட்டத்தில் அறிமுகமானார்.
திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி
திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி (Thiruporur Assembly constituency) என்பது தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இதன் தொகுதி எண் 33. திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.
திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி
திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி (Tirunelveli Assembly constituency) என்பது தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுள் ஒன்றாகும். இது திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம் (International Union for Conservation of Nature - IUCN), உலகிலுள்ள இயற்கை வளத்தை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட ஒரு பன்னாட்டு அமைப்பாகும். இயற்கை மூலவளங்களைப் பாதுகாக்கும் நோக்கோடு செயற்பட்டு வரும் இவ்வமைப்பின் நோக்கம் உலகத்தில் தற்போது உருவாகியிருக்கும் சூழலியல் பிரச்சனைகளுக்கான நடைமுறைத் தீர்வுகளை உலகம் அறிந்து கொள்ளவும், அதனால் ஏற்பட்டிருக்கும் அபிவிருத்திக்கான சவால்களை உலகம் எதிர்கொள்ளவும் உதவுவதேயாகும். இவ்வமைப்பே சூழலியல் பாதுகாப்பு, நிரந்தர அபிவிருத்தியை முன்னிறுத்தி தொழிற்படுவதில் முன்னணியில் இருக்கின்றது.
மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதி
மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதி என்பது தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.
மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதி
மதுரை - கிழக்கு சட்டமன்றத் தொகுதி என்பது தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.
விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்
விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி
திருப்பரங்குன்றம் (சட்டமன்றத் தொகுதி) என்பது மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இது விருதுநகர் மக்களவைத் தொகுதியினைச் சார்ந்தது. இது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
காமராசர் (Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975), இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் அரசியல்வாதிகளில் ஒருவருமாவார். இவர் 13 ஏப்ரல் 1954 முதல் 2 அக்டோபர் 1963 வரை ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். 1964 முதல் 1967 வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார்.
சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதி
சேலம்-மேற்கு சேலம் மாநகரத்தில் அமைந்துள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இந்த சட்டமன்றத் தொகுதியானது சேலம் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது. இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி
செயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி (Jayankondam Assembly constituency), தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், அரியலூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
கேரளச் சட்டமன்றத் தேர்தல், 2026
கேரள சட்டமன்றத் தேர்தல், 2026 (2026 Kerala Legislative Assembly election) என்பது இந்திய மாநிலமான கேரளத்தின் கேரள சட்டப்பேரவை 140 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக ஏப்ரல் 2026 9இல் நடைபெறும் தேர்தலாகும்.
அஜித் குமார், (Ajith Kumar, பிறப்பு மே 1, 1971) என்பவர் ஒரு தென்னிந்தியத் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவரது இரசிகர்கள் இவரை அல்டிமேட் ஸ்டார் என்றும் ஏகே என்றும் அழைக்கிறார்கள்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி மே 8, 2006 அன்று தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தல், 2006 நடைபெற்றது. இத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி மொத்த இடங்களான 234 தொகுதிகளில் 163 இடங்களில் வெற்றி பெற்றது. திமுகவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் அதன் கூட்டணி கட்சிகளின் பேராதரவுடன் திமுக அரசு மே 13-ம் தேதி மு.
இந்தியத் தேர்தல் ஆணையம் இந்தியத் தேர்தல்களின் போது அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்கள் கடைபிடிக்க வேண்டிய மாதிரி வழிகாட்டு நெறிகள் குறித்து தனது இணையதளத்தில் வழங்கியுள்ளது.இந்த வழிகாட்டு நெறிகளை அனைத்து அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் பின்பற்ற வேண்டும். மீறினால் தேர்தல் ஆணைய பார்வையாளர்களால் அரசியல் கட்சி மற்றும் வேட்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். முடிந்தால் நடைபெற வேண்டிய குறிப்பிட்ட தொகுதியின் தேர்தல் ரத்து செய்ய வேண்டியதிருக்கும்.
சஞ்சு விஸ்வநாத் சாம்சன் (Sanju Viswanath Samson, பிறப்பு: 11 நவம்பர் 1994) என்பவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் வீரரும் குச்சக் காப்பாளரும் ஆவார். இவர் சூலை 19, 2015 இல் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் அறிமுகமானார். இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
அன்புமணி ராமதாஸ் (Anbumani Ramadoss, பிறப்பு: 9 அக்டோபர் 1968) ஒரு தமிழக அரசியல்வாதியும், மருத்துவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும் ஆவார். இவரின் தந்தையார் மருத்துவர் ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ஆவார். 2004-இல் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய நடுவண் அரசில் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சராகப் பணியாற்றினார்.
குன்னம் சட்டமன்றத் தொகுதி (Kunnam Assembly constituency), தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், பெரம்பலூர் மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இந்த தொகுதி உருவாக்கப்பட்ட பின்னர் இதுவரை 3 சட்டமன்ற தேர்தல்களை சந்தித்துள்ளது. குன்னம் தொகுதி உருவாக்கப்படுவதற்கு முன்பு 1967-ஆம் ஆண்டு முதல் வரகூர் சட்டமன்றத் தொகுதியாக இதன் பகுதிகள் இருந்தது.
தமிழ் (Tamil language), தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
மேட்டூர் சட்டமன்றத் தொகுதி (Mettur Assembly constituency), தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். 2021-இல் இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2.86 இலட்சம். இத்தொகுதியில் வன்னியர்களும், பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் பரவலாக உள்ளனர்.
முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி
முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி (Mudukulathur Assembly constituency), தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், இராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இத்தொகுதியில் முக்குலத்தோர், தேவேந்திர குல வேளாளர், யாதவர், முஸ்லிம்கள், மற்றும் கிறிஸ்தவர்கள் குறிப்பிடும்படியாக பரவலாக உள்ளனர்.