The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
ஆதவ் அர்ஜுனா ("Aadhav Arjuna") என்பவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும் தேர்தல் வியூக வகுப்பாளரும் விளையாட்டுத்துறை நிர்வாகியுமாவார். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளராகவுள்ளார்.திமுகவிற்குத் தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்தார். 2023-இல் திருச்சியில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டில் கலந்து கொண்டு அக்கட்சியில் இணைந்து துணைப் பொதுச்செயலாளரானார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026 (2026 Tamil Nadu Legislative Assembly election) தமிழ்நாடு சட்டமன்றத்தின் 234 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் ஆகும். 2026 ஏப்ரல் 23-ஆம் நாளன்று வாக்குப்பதிவு நடந்தது. மே 4 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும்.
நாம் தமிழர் கட்சி தமிழ்த் தேசிய, ஈழப் போராட்ட ஆதரவு உடைய, தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் செயல்படும் ஓர் அரசியல் கட்சியாகும். . இந்தக் கட்சி 2010 மே 18 அன்று சீமானால் தொடங்கப்பட்டது. தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் சி.பா.ஆதித்தனார் நடத்தி வந்த "நாம் தமிழர் இயக்கத்தின்" தொடர்ச்சியே சீமானால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி என அறியப்படுகிறது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021
தமிழ்நாட்டின் பதினாறாவது சட்டமன்றத் தேர்தல் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மொத்தமுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்ய 2021 ஏப்ரல் 6 அன்று சட்டமன்றப் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் 6-ஆவது முறையாகத் தமிழகத்தின் பழம்பெரும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று அக்கட்சியின் தலைவர் மு. க.
சென்னை (Chennai) தமிழ்நாட்டின் தலைநகரமும், இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும். இந்தியாவின் முதல் மாநகராட்சி 1688 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் தேதி நிறுவப்பட்டது இந்நகரம், 1996-ஆம் ஆண்டுக்கு முன்னர் மதராசு பட்டினம், மெட்ராஸ் (Madras) மற்றும் சென்னப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டு வந்தது. சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று.
ராகவ் சதா (Raghav Chadha) ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலிருந்து நாடாளுமன்றத்தின், மாநிலங்களவை உறுப்பினரானார். மேலும் இவர் தில்லி ஜல் வாரியத்தின் துணைத் தலைவராகவும், டெல்லியில் உள்ள இராஜிந்தர் நகர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியல்
தமிழ்நாட்டிலுள்ள, சட்டமன்றத் தொகுதிகள் மொத்தம் 234 ஆகும். சட்டமன்றத்தின் தலைமை அதிகாரி, சபாநாயகர் என்று அழைக்கப்படுகிறார். சட்டசபையின் காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும்.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
உலக அளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6,000-இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்
விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
வேலுப்பிள்ளை பிரபாகரன் (Velupillai Prabhakaran, 26 நவம்பர் 1954 – 17 மே அல்லது 18 மே 2009) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் ஆவார். 1972 இல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது அகவையில் பிரபாகரன் தொடங்கினார். 1975 இல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் இவர் அதிகமாக இயங்கி வந்த காலகட்டத்தில், யாழ்ப்பாண மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா படுகொலைக்கு காரணமாக இவர் குற்றஞ்சாட்டப்பட்டார்.
வைப்புத்தொகை (Deposit) என்பது ஒரு வேட்பாளர் தேர்தலில் போட்டியிட கட்டவேண்டிய முன்பணம். அரசாட்சி முறையில் போதிய ஆர்வமற்றவர்களும், பொழுதுபோக்காகப் போட்டியிட நினைப்பவர்களையும் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து ஓரளவு தடுக்கும் நோக்குடன் வைப்புத் தொகை வசூலிக்கப்படுகிறது. பல நாடுகளில் ஒரு வேட்பாளர் ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கை வாக்குகளைப் பெறத் தவறினால் அவரது வைப்புத் தொகை அவருக்குத் திருப்பி அளிக்கப்படாது.
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் (Muthuvel Karunanidhi Stalin, பிறப்பு: 1 மார்ச்சு, 1953) என்பவர் தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் ஆவார். இவர் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதியின் மூன்றாவது மகனும், துணை முதலமைச்சர் உதயநிதியின் தந்தையும் ஆவார்.
தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின் தென் முனையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படும் இம்மாநிலமானது, பரப்பளவில் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாக மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது. உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பேசும் தமிழர் வாழும் பகுதியே தமிழ்நாடு என அழைக்கப்படுகிறது.
திராவிட முன்னேற்றக் கழகம் (Dravida Munnetra Kazhagam, திமுக) என்பது ஓர் இந்திய அரசியல் கட்சி ஆகும். குறிப்பாக இக்கட்சி தமிழ்நாடு மாநிலத்திலும், புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்திலும் செயற்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக உள்ள திமுக, இந்திய அளவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்ற கூட்டமைப்பில் ஒரு கட்சியாக செயல்படுகிறது.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
வைபவ் சூர்யவன்சி (பிறப்பு 27 மார்ச் 2011) பீகார், ராஜஸ்தான் ராயல்சு அணிக்காக விளையாடும் ஓர் இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இடது கை மட்டையாளரான இவர், 2024-ஆம் ஆண்டு தனது 12 வயதில் ரஞ்சிக் கோப்பையில் பீகார் அணிக்காக முதல் தரப் போட்டிகளில் அறிமுகமானார். அதே ஆண்டின் பிற்பகுதியில், இந்தியன் பிரீமியர் லீக் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இளைய வீரர் ஆனார்.
திருக்குறள் (Tirukkural), சுருக்கமாக குறள் (Kural), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று தொகுப்புகளைக் கொண்டது.
ஆபாசத் திரைப்படம் அல்லது பாலியல் திரைப்படம் (Pornographic film) என்பது பாலியல் ரீதியான விசயங்களை முன்வைத்து பார்வையாளர்களை புணர்ச்சிப் பரவசநிலைக்கு தூண்டுவதற்காக உருவாக்கப்படும் ஒரு திரைப்பட வகை ஆகும். ஆபாசத் திரைப்படங்கள் பாலியல் கற்பனைகளை முன்வைக்கின்றன. பொதுவாக நிர்வாணம் மற்றும் பாலியல் பாலுறவு போன்ற சிற்றின்பத் தூண்டுதல்களை உள்ளடக்குகின்றன.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) கவிஞரும், எழுத்தாளரும், இதழாசிரியரும், விடுதலைப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியுமாவார். கவிதையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு "பாரதி" என்ற பட்டம் வழங்கப்பட்டது. நவீன தமிழ்க் கவிஞர்களின் முன்னோடியாகத் திகழ்ந்த இவர், தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
திரிஷா கிருஷ்ணன் இயற்பெயர் அனுராதிகா கிருஷ்ணரத்னம் (பிறப்பு - மே 4, 1983, சென்னை) தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட முன்னணி கதாநாயகி ஆவார். இவர் நடித்த சாமி, கில்லி போன்ற திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை. இவர் திரைக்கு வருவதற்கு முன்பு ஆரம்பகாலத்தில் சென்னை அழகியாக 1999ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழ் (Tamil language), தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், (List of chief ministers of Tamil Nadu) என்பது முழுமையான நிலையில், தமிழ்நாட்டின் 1920ஆம் ஆண்டு முதலான வரலாற்றிலிருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.
காமராசர் (Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975), இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் அரசியல்வாதிகளில் ஒருவருமாவார். இவர் 13 ஏப்ரல் 1954 முதல் 2 அக்டோபர் 1963 வரை ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். 1964 முதல் 1967 வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார்.
மைக்கல் ஜோசஃப் ஜாக்சன் (Michael Joseph Jackson, ஆகத்து 29, 1958 - சூன் 25, 2009) ஓர் ஆபிரிக்க அமெரிக்க பாப் இசைப் பாடகர், நடன இயக்குநர், பாடல் ஆசிரியர், தொழில் தலைவர், மற்றும் வள்ளல் எனப் பல முகங்கள் கொண்டவர். புகழ்பெற்ற ஜாக்சன், இசைக் குடும்பத்தில் ஏழாம் பிள்ளை. 1964இல் இவரின் நான்கு உடன்பிறந்தவர்களுடன் சேர்ந்து ஜாக்சன் 5 என்ற இசைக்குழுவில் சேர்ந்தார்.
வைக்கம் போராட்டம் பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமி (இயற்பெயர்: ஈரோடு வெங்கட்டர் இராமசாமி , ஆங்கிலம்: E.V. Ramasamy, செப்டம்பர் 17, 1879 – திசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (All India Anna Dravida Munnetra Kazhagam) (அஇஅதிமுக) என்பது தமிழ்நாடு மாநிலம் மற்றும் புதுச்சேரி ஒன்றியப் பகுதியில் உள்ள ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிரிந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ம. கோ.
மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்
தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள். அந்த வரிசையில் மொத்தம் 274 சிவ ஸ்தலங்கள் உள்ளன. அவைகளில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும், மற்ற கோயில்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் சில மற்ற இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ளன.
திவ்ய தேசங்கள் (Divya Desam) என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும்.
தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்
தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம், பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெறும் வகையில், இந்திய அரசு, பட்டியல் சமூகத்தினருக்கு 44 சட்டமன்றத் தொகுதிகளையும்; பட்டியற் பழங்குடி மக்களுக்கு 2 சட்டமன்றத் தொகுதிகளையும் தனித்தொகுதிகளாக அறிவித்துள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016
பதினைந்தாவது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் (Legislative Assembly election) 2016 மே 16 இல் இடம்பெற்றது. 234 தொகுதிகளைக் கொண்ட தமிழக சட்டமன்றத்திற்கு இடம்பெற்ற இத்தேர்தலில் ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் பெரும் கட்சிகளோடு கூட்டணி அமைக்காமல் சிறிய கட்சிகளுடன் ஒரிரு தொகுதியில் தனது இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தனிபெரும்பான்மையோடு தொடர் வெற்றி பெற்று மீண்டும் ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024
இந்தியாவின் 18 ஆவது மக்களவைக்கான தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 அன்று நடந்தது. இத்தேர்தல் முடிவுகள் இந்தியாவின் பிற பகுதிகளிலும் தேர்தல் முடிவுற்ற பின்னர் சூன் 4 அன்று வாக்கு எண்ணிக்கைக்குப் பின்னர் வெளியிடப்பட்டது.இதில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளையும் வென்றது.
திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்
திருவிடைமருதூர் மகாலிங்கேசுவரர் திருக்கோயில் (Thiruvidaimarudur Mahalingeswarar Temple), சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் காவிரி கரையில் அமைந்துள்ள 30-ஆவது சிவத்தலமாகும். மேலும் இது திருவாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தலங்களுள் ஒன்றாகும். இத்தலம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்
சிறுவாபுரி பாலசுப்பிரமணியம் கோயில் (Siruvapuri Sri Balasubrahmanyam temple) தமிழ்நாட்டின் சென்னைக்கு அருகிலுள்ள் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சின்னம்பேடு பகுதியில் அமைந்துள்ளது.சிறுவாபுரி முருகன் கோவில் என்றும் அறியப்படும் இத்திருக்கோயில் 500 ஆண்டுகள் பழமையானதாகும். கிராம மக்கள் சேர்ந்து இக்கோயிலை கட்டியுள்ளனர். அரசாங்க பதிவுகளில் கோயிலின் அசல் பெயர் சின்னம்பேடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர் (Journlalist) என்பவர் பொதுவாக பத்திரிக்கையில் பணிபுரிபவர்களைக் குறிக்கும். தற்போது பத்திரிக்கை மட்டுமல்லாது, தொலைக்காட்சி, பண்பலை மற்றும் அனைத்து மக்கள் ஊடகங்களில் பணிபுரிபவர்களும், பத்திரிகையாளர் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர். இயக்குநர், செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள், ஒளிப்பதிவு உதவியாளர்கள் போன்றவர்களும் பத்திரிகையாளர்கள் என்றே அழைக்கப்படுகின்றனர்.
கேரள மாநிலத்தின் பெரும் பகுதியும் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகள் திருவாங்கூர் சமசுதானத்தின் கீழ் மன்னராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது இந்து நாடாக இருந்தது. அந்த காலகட்டத்தில் சாதீயக் கொடுமைகளால் மக்கள் அதிக அடக்குமுறைக்கு ஆளாகினர்.
செயற்கை நுண்ணறிவு அல்லது செயற்கை அறிதிறன் ((Artificial intelligence)) (AI) - மனிதனுக்கும் இயந்திரத்திற்கும் இடையில் காணப்படும் வேறுபாடு என்னவென்றால் படைப்பாக்கத் திறன் ஆகும். இந்த படைப்பாக்கத் திறன் இயந்திரங்கள் மூலமும் சாத்தியப்படுமானால் அதுவே செயற்கை நுண்ணறிவு என அழைக்கப்படுகிறது. கணினி அறிவியலின் பரந்த கிளையாக, செயற்கை நுண்ணறிவு காணப்படுகிறது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் (Madurai Meenakshi Sundareswarar Temple) மதுரையின் நடுவே அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இச்சிவன் கோயிலின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன் ஆவர். இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர்.
இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்
குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப்பெயர் குறிக்கிறது.
முலை வரி அல்லது மார்பக வரி (Breast Tax) (மலையாளம்; തലക്കരം, முலைக்காரம் அல்லது முலை-காரம்) என்பது திருவிதாங்கூர் இராச்சியத்தில் (இன்றைய இந்தியாவின் கேரள மாநிலம்) இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும், தலித் இந்துக்கள் பொதுவாக தங்கள் மார்பகங்களை மறைக்கும் விதமாக ஆடை அணிய விரும்பும் பெண்களுக்கு 1924 வரை விதிக்கப்பட்ட வரியாகும். இதர பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கும் தலித் பெண்களுக்கும் மார்பகங்கள் வளரத் தொடங்கும்போது அரசாங்கத்திற்கு முலை வரியைச் செலுத்த வேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டனர். இதர பிற்படுத்தப்பட்ட ஆண்கள் தலை-காரம் என்று அழைக்கப்படும் இதேபோன்ற ஒரு வரியை தங்கள் தலைப்பாகைக்காக செலுத்த வேண்டும்.
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம் (International Union for Conservation of Nature - IUCN), உலகிலுள்ள இயற்கை வளத்தை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட ஒரு பன்னாட்டு அமைப்பாகும். இயற்கை மூலவளங்களைப் பாதுகாக்கும் நோக்கோடு செயற்பட்டு வரும் இவ்வமைப்பின் நோக்கம் உலகத்தில் தற்போது உருவாகியிருக்கும் சூழலியல் பிரச்சனைகளுக்கான நடைமுறைத் தீர்வுகளை உலகம் அறிந்து கொள்ளவும், அதனால் ஏற்பட்டிருக்கும் அபிவிருத்திக்கான சவால்களை உலகம் எதிர்கொள்ளவும் உதவுவதேயாகும். இவ்வமைப்பே சூழலியல் பாதுகாப்பு, நிரந்தர அபிவிருத்தியை முன்னிறுத்தி தொழிற்படுவதில் முன்னணியில் இருக்கின்றது.
69 என்பது இரு நபர்கள் தங்களின் பிறப்புறுப்புகள் அடுத்தவரின் வாயை நோக்கி இருக்குமாறு வைத்து உடலுறவு கொள்ளும் நிலையாகும். இந்த முறையில் இருவரும் தங்களை பரஸ்பரபரமாக எண் 6 மற்றும் 9 போல தங்களை தலைகீழாக்கிக் கொண்டு செயல்படுவதால் இந்த முறையை 69 என்று அழைக்கின்றார்கள். இந்த நிலையில் எந்த பாலினத்தவரும் இணைந்து செயல்பட முடிகிறது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011
தமிழ்நாட்டின் பதினான்காவது சட்டமன்றத் தேர்தல் 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று நடைபெற்றது. ஐந்தாண்டுகளாக ஆட்சியில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி தோல்வியடைந்தது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஜெ.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்:பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற ஒரு சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான தமிழர் கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
தமிழ்நாடு சட்டப் பேரவை (Tamil Nadu Legislative Assembly) என்பது இந்தியாவின், 28 மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் அரசியல் திட்டம் சார்ந்த சட்டங்களை இயற்றும் அவையாகும். இது தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ளது. இதன் தோற்றம் மற்றும் வரலாற்றைப் பார்க்கும் பொழுது, இது 18 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாடு சென்னை மாகாணமாக இருந்த பொழுதிலிருந்தே இப்பேரவை செயல்பட்டுக் கொண்டிருந்தது.
கேரளா மாநில குலுக்கல் பரிசுச் சீட்டு
கேரள மாநில குலுக்கல் பரிசுச் சீட்டு (Kerala State Lotteries) என்பது கேரள அரசால் நடத்தப்படும் ஒரு குலுக்கல் பரிசுச் சீட்டுத் திட்டமாகும். 1967 ஆம் ஆண்டில் கேரள அரசின் குலுக்கல் பரிசுச் சீட்டுத் துறையின் கீழ் நிறுவப்பட்டது. இது போன்ற குலுக்கல் பரிசு வழங்குவது இந்தியாவில் முதல் முறையாகும்.
துரைமுருகன் (Durai Murugan, பிறப்பு: சூலை 1, 1938) என்பவர் காட்பாடியார் என்று தமிழக அரசியல் வட்டாரங்களில் சுருக்கமாக அழைக்கப்படும். இவர் இந்திய அரசியல்வாதியும், தமிழக அமைச்சரும், வழக்குரைஞரும் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும் ஆவார். இவர் திமுகவின் மேடைப்பேச்சாளர், இலக்கியவாதியுமாவார்.
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 2026
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 2026 (2026 Puducherry Legislative Assembly election) என்பது 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் 9 அன்று புதுச்சேரியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலாகும். வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் 2026 மே 4 அன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரப்சிம்ரன் சிங் (பிறப்பு: ஆகஸ்ட் 10, 2000) ஒரு இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார், அவர் உள்நாட்டு துடுப்பாட்டத்தில் பஞ்சாப் அணிக்காகவும் இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) பஞ்சாப் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடுகிறார். 7 டிசம்பர் 2018 அன்று 2018 வளர்ந்து வரும் அணிகள் ஆசியக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் வளர்ந்து வரும் அணிக்கு எதிராக இந்தியா வளர்ந்து வரும் அணிக்காக பட்டியல் அ போட்டிகளில் அறிமுகமானார் அதே மாதத்தின் பிற்பகுதியில், 2019 இந்தியன் பிரீமியர் லீக்கிற்கான வீரர்கள் ஏலத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார். அவர் 21 பிப்ரவரி 2019 அன்று 2018-19 சையத் முஷ்டாக் அலி கோப்பையில் பஞ்சாப் அணிக்காக இருபது20 போட்டிகளில் அறிமுகமானார் 2020 ஐபிஎல் ஏலத்தில், 2020 இந்தியன் பிரீமியர் லீக்கிற்கு முன்னதாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் மீண்டும் வாங்கப்பட்டார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி மே 8, 2006 அன்று தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தல், 2006 நடைபெற்றது. இத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி மொத்த இடங்களான 234 தொகுதிகளில் 163 இடங்களில் வெற்றி பெற்றது. திமுகவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் அதன் கூட்டணி கட்சிகளின் பேராதரவுடன் திமுக அரசு மே 13-ம் தேதி மு.
சஞ்சு விஸ்வநாத் சாம்சன் (Sanju Viswanath Samson, பிறப்பு: 11 நவம்பர் 1994) என்பவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் வீரரும் குச்சக் காப்பாளரும் ஆவார். இவர் சூலை 19, 2015 இல் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் அறிமுகமானார். இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
தமிழ் ராக்கர்ஸ், தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களை சட்டத்திற்குப் புறம்பாக இணையத்தில் பகிரும், ஒரு இணையத்தளம் ஆகும். இது பிட்டொரென்ட் வகையை சேர்ந்ததாகும். இது தனக்கென ஒரு வழங்கி ஒன்றை வைத்துகொள்ளாமல், பயனர்களின் கணணிகளை வழங்கி (Peer to Peer) ஆக மாற்றி பயன்படுத்தும்.
மனித ஆண்குறி என்பது உடலின் வெளிப்புறத்தில் காணப்படும் ஒரு ஆணின் உடல் உறுப்பு ஆகும். இது சிறுநீர் கழிப்பதற்கும் உடலுறவு கொள்வதற்கும் பயன்படுகிறது. ஆண்குறியின் முக்கிய பாலியல் செயல்பாடு - பெண்ணின் யோனிக்குள் செலுத்தப்பட்டு தொடர்ச்சியான பாலுறவு தூண்டுதல் மூலமாக கர்ப்பத்தை ஏற்படுத்தக்கூடிய விந்துவை வழங்குவதாகும்.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2025
இப்பட்டியல் 2025 இல் வெளியிடப்பட்ட/திட்டமிடப்பட்டுள்ள இந்தியத் தமிழ்நாட்டுத் திரைப்படத் துறையினரால் தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களின் பட்டியலாகும்.
கல்வகுன்ட்ல சந்திரசேகர் ராவ் (Kalvakuntla Chandrashekar Rao) (பிறப்பு: பிப்ரவரி 17, 1954) சுருக்கமாக கேசியார், தெலுங்கானாவின் முன்னாள் முதலமைச்சரும், பாரத் இராட்டிர சமிதி என்ற கட்சியின் நிறுவனத்தலைவரும் ஆவார்.மைய அரசில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராகப் பணி புரிந்தவர்.இந்திய நாடாளுமன்றத்தில் 15வது மக்களவை உறுப்பினர்.ஆந்திராவின் மகபூப்நகர் மாவட்டத்தில் கரீம்நகர் நாடாளுமன்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டபின் தமது கட்சியைத் துவக்கினார்.2004ஆம் ஆண்டு காங்கிரசுடன் கூட்டணி அமைத்து 5 மக்களவைத் தொகுதிகளில் தமது கட்சிக்கு வெற்றி பெற்றுத் தந்தார். பின்னர் மைய அரசில் பங்கேற்று அமைச்சராகப் பணி புரிந்தார்.
தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்
தமிழ்நாட்டில் பல கட்சி அமைப்பு உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் தேசிய அளவிலான மற்றும் மாநில அளவிலான அரசியல் கட்சிகளுக்கு புறநிலை அளவுகோல்களின் அடிப்படையில் அங்கீகாரம் அளிக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியானது ஒதுக்கப்பட்ட கட்சி சின்னம், அரசு நடத்தும் தொலைக்காட்சி மற்றும் வானொலியில் இலவச ஒளிபரப்பு நேரம், தேர்தல் தேதிகளை அமைப்பதில் ஆலோசனை, தேர்தல் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை அமைப்பதில் உள்ளீடு போன்ற சலுகைகளை அனுபவிக்கிறது.