The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
அயோத்தி தாசர் (C. Iyothee Thass, மே 20, 1845 –மே 5, 1914) தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்புப் போராளி, சமூக சேவகர், தமிழறிஞர் மற்றும் சித்த மருத்துவர் ஆவார். திராவிட இயக்கம் உருவாக வித்திட்ட முன்னோடிகளில் முதன்மையானவர். ஆதி திராவிட பின்புலத்தில் இருந்து வந்த இவர், 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆதிதிராவிட மக்களின் முன்னேற்றத்துக்காக அரசியல், சமயம், இலக்கியம் ஆகிய களங்களில் தீவிரமாகச் செயல்பட்டார்.
காணிக்காரர் (Kanikaran) (சுருக்கமாக காணி என்ற பெயரால் அழைக்கப்படுகின்றனர்) எனப்படுவோர் தமிழக, கேரள மாநிலங்களின் தென்கோடியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் வாழுகின்ற பழங்குடியினர் ஆவர். இவர்கள் தமிழகத்தில் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் காணப்படுகின்றனர். இம்மக்கள் காணி, கணியன், காணிக்கர், வேலன்மார், மலையரசன் முதலிய பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றனர்.
இந்திய கடற்கரை பகுதிகளில் அமைந்துள்ள துறைமுகங்களை பெரும் துறைமுகங்கள் மற்றும் சிறிய துறைமுகங்கள் என்று இரண்டு பெரும்பிரிவுகளாக பிரிக்கலாம். இவற்றில் தமிழகத்தின் கடற்கரை பகுதியில் மூன்று பெரும் துறைமுகங்களும் 21 சிறிய துறைமுகங்களும் உள்ளன. இவைதவிர 2 துறைமுகங்கள் அமைப்பதற்கு அரசு பரிசீலித்து வருகிறது.
எக்ஸ் வீடியோஸ் (X Videos) என்பது 2018 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் கணினி வழி குற்றப் பரபரப்பூட்டும் நாடகத் திரைப்படமாகும். இப்படத்தில் சஜோ சுந்தர் இயக்குநராக அறிமுகமானார். உண்மை வாழ்வில் நடந்த மறைக்கப்பட்ட ஒளிப்படமி ஆபாச பட வழக்கு நிகழ்வுகளால் ஈர்க்கப்பட்ட இப்படம், இதுகுறித்த சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், இத்தகைய இழிவான செயல்களுக்கு எதிராகவும் எச்சரிக்கை விடுக்கிறது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் அல்லது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) என்பது தமிழ்நாட்டின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் உரிமைத் தொகையாக 1000 இந்திய ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் தமிழ்நாடு அரசுத் திட்டமாகும். இத்திட்டத்தை தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி நினைவாகப் பெயரிட்டுள்ளனர்.
ஆதவ் அர்ஜுனா ("Aadhav Arjuna") என்பவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும் தேர்தல் வியூக வகுப்பாளரும் விளையாட்டுத்துறை நிர்வாகியுமாவார். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளராகவுள்ளார்.திமுகவிற்குத் தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்தார். 2023-இல் திருச்சியில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டில் கலந்து கொண்டு அக்கட்சியில் இணைந்து துணைப் பொதுச்செயலாளரானார்.
வேலுப்பிள்ளை பிரபாகரன் (Velupillai Prabhakaran, 26 நவம்பர் 1954 – 17 மே அல்லது 18 மே 2009) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் ஆவார். 1972 இல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது அகவையில் பிரபாகரன் தொடங்கினார். 1975 இல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் இவர் அதிகமாக இயங்கி வந்த காலகட்டத்தில், யாழ்ப்பாண மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா படுகொலைக்கு காரணமாக இவர் குற்றஞ்சாட்டப்பட்டார்.
காளிதாசன் (தேவநாகரி: कालिदास) சமஸ்கிருத இலக்கியத்தில் சிறந்து விளங்கிய இந்தியக் கவிஞர், நாடகாசிரியர். காளிதாசரைப் பற்றிய முழுமையான வரலாற்றுக்குறிப்புகள் அறியப்படவில்லை. ஆயினும், இவரது படைப்புகளான சாகுந்தலம், மேகதூதம், இரகுவம்சம், குமாரசம்பவம், மாளவிகாக்கினிமித்திரம், விக்கிரமோர்வசியம், ருது சம்ஹாரம் ஆகியவை இந்திய மொழி இலக்கியங்களில் முக்கிய இடம் வகிக்கிறது.
தசை மண்டலம் (Muscular system) என்பது எலும்பு, வாியற்ற தசை மற்றும் இதய தசை ஆகிய உறுப்புகள் சேர்ந்ததாகும். தசைமண்டலமானது, உடல் இயக்கத்திற்கும், உடல் அமைப்பிற்கும் மற்றும் இரத்த ஓட்டமானது உடல் முழுவதும் பாய்வதற்கும் பயன்படுகிறது. முதுகெலும்புடைய உயிாினங்களின் தசை மண்டலமானது நரம்பு மண்டலத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது; இருந்த போதிலும் சில தசைகள் தன்னிச்சையாக இயங்கக்கூடியதாக உள்ளது.
எண்சட்டம் அல்லது அபக்கசு (Abacus) என்பது, முக்கியமாக ஒரு சில ஆசிய நாடுகளில் எண்கணித செயற்பாடுகளில், பயன்படுத்தப்பட்ட ஒரு கணிப்பீட்டுக் கருவியாகும். தற்காலத்தில், இந்த எண்சட்ட கருவியானது மூங்கிலாலான செவ்வக வடிவ சட்டத்தில், குறுக்காக உள்ள இணைப்புகளில், மணிகளைக் கோர்த்து உருவாக்கப்படுகிறது. ஆனால், ஆரம்ப காலத்தில் இது மண், கல், மரம் அல்லது உலோகத்தில் ஏற்படுத்தப்படும் நீண்ட, குறுகிய பள்ளமான அமைப்புகளில், பயற்றம் விதைகள் அல்லது சிறிய கற்களை வைத்து நகர்த்துவதுபோல் அமைக்கப்பட்டிருந்தது.
தமிழ்நாடு அமைச்சரவை (Tamil Nadu Council of Ministers) என்பது தமிழ் நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு ஆகும். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார்.
முள்ளிவாய்க்கால் படுகொலை (Mullivaikkal massacre) என்பது இலங்கை நாட்டின், வட மாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்கே அமைந்த முள்ளிவாய்க்கால் என்ற கடற்கரைக் கிராமத்தில், ஈழப் போரின் இறுதிக் கட்டம் 2009-ஆம் ஆண்டில் நிறைவுற்றது. இறுதிப் போரின் போது ஒன்றுமறியாத நாற்பதாயிரம் தமிழர்கள், சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலை குறித்து ஐக்கிய நாடுகளின் சபை தலைமையில் பன்னாட்டு விசாரணை நடத்த உள்ளது.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
முள்ளிவாய்க்கால் நினைவு நாள் என்பது ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இறந்தவர்களை நினைவு கூரும் நாள் ஆகும். இது இலங்கைத் தமிழராலும், உலகத் தமிழராலும் ஆண்டு தோறும் மே 18 ஆம் நாள் நினைவு கூறப்படுகின்றது. 2009 ஆம் ஆண்டில் இந்நாளிலேயே இலங்கையின் வட-கிழக்குக் கரையில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் எனும் கிராமத்தில் ஈழப்போர் முடிவுற்றது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026 (2026 Tamil Nadu Legislative Assembly election) தமிழ்நாடு சட்டமன்றத்தின் 234 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் ஆகும். 2026 ஏப்ரல் 23-ஆம் நாளன்று வாக்குப்பதிவு நடந்தது. மே 4 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின.
. அம்மா உணவகம் (ஆங்கிலம்: Amma Unavagam) என்பது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை,சென்னை மாநகராட்சி மற்றும் தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகள் மூலமாக இயங்கும் மலிவு விலை உணவகத்திற்கு இடப்பட்டுள்ள பெயராகும். இது சென்னையின் அனைத்து பகுதிகளிலும் வாழும் ஏழை எளிய மக்கள், அன்றாட கூலி வேலை செய்பவர்கள், ஓட்டுநர்கள், பாரம் தூக்குபவர்கள் என குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்கள் பயன்பெறும் வகையில் திறக்கப்பட்டுள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்து (Tamil Thaai Vaalthu) என்பது இந்திய மாநில அரசுகளுள் தமிழை ஆட்சி மொழியாய் கொண்டுள்ளவற்றில் பாடப்பெறும் வாழ்த்துப் பாடலாகும். இது தமிழ்த் தாயை வாழ்த்தி வணக்கம் செலுத்துவதாக அமையும். இப்பாடல் அரசு விழாக்கள், பள்ளிகளின் காலை இறைவணக்கக் கூட்டம் முதலான நிகழ்வுகளின் தொடக்கத்தில் பாடப்படுகிறது.
சனாதன தர்மம் (Sanatan Dharma) அல்லது "நிலையான தத்துவஞானம்/இசைவு/நம்பிக்கை" என்பதே பல ஆயிரம் ஆண்டுகளாக இந்து வாழ்வியல் முறையை குறித்துவந்த பெயராகும் சனாதனம் என்பது வெறும் மதம் அல்ல; அது ஒரு பரந்த வாழ்வியல் மரபாகும். “சனாதன தர்மம்” அதில் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. இந்துக்களைப் பொறுத்தவரை, இது, மனிதனால் உருவாக்கப்பட்டவற்றைக் கடந்து, தனிமனித விருப்பு வெறுப்புக்களைக் குறியாது, தூய உணர்வுபூர்வமான அறிவியலைக் குறிக்கும் சில ஆன்மீகக் கொள்கைகள் என்றும் நிலையானவையாக இருக்கின்றன என்ற எண்ணத்தைப் பற்றிப் பேசுகின்றது.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
உலக அளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6,000-இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின் தென் முனையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படும் இம்மாநிலமானது, பரப்பளவில் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாக மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது. உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பேசும் தமிழர் வாழும் பகுதியே தமிழ்நாடு என அழைக்கப்படுகிறது.
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், (List of Chief Ministers of Tamil Nadu) என்பது முழுமையான நிலையில், தமிழ்நாட்டின் 1920ஆம் ஆண்டு முதலான வரலாற்றிலிருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.
தொலைநோக்கி (இலங்கை வழக்கு: தொலைக்காட்டி) தொலைவில் இருக்கும் பொருட்களைத் தெளிவாகப்பார்க்கப் பயன்படும் கருவி ஆகும். குறிப்பாக வானியல் பொருட்களையும் நிகழ்வுகளையும் நோக்க/அவதானிக்க இது உதவுகிறது. கருவி ஒன்றில் பயன்படுத்தப்படுவதற்கான உருப்பெருக்கும் வில்லையொன்றை பயன்படுத்தும் முதல் ஒளியியல் ஆய்வு, ஈராக்கியரான இபின் அல்-ஹேதம் என்பவரால் எழுதப்பட்ட ஒளியியல் நூல் என்னும் நூலில் காணப்படுகின்றது.
ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)
ஓடி விளையாடு பாப்பா என்பது பாரதியார் எழுதிய பரந்து அறிமுகமான ஒரு குழந்தைகள் பாட்டு. இப் பாடலின் பல பகுதிகள் இலங்கை, இந்தியாவிலும் பிற நாடுகளிலும் பாட நூல்களில் இடம்பெற்றுள்ளன. இந்தப் பாடல் குறித்து பாரதியாரின் மகள் இப் பாடலை ‘என் தந்தை எனக்காக நான் செய்ய வேண்டியதற்கெல்லாம் அட்டவணையாகப் பாடிக் கொடுத்தார்’ என்று கூறியுள்ளார்.
சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்
சிறுவாபுரி பாலசுப்பிரமணியம் கோயில் (Siruvapuri Sri Balasubrahmanyam temple) தமிழ்நாட்டின் சென்னைக்கு அருகிலுள்ள் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சின்னம்பேடு பகுதியில் அமைந்துள்ளது.சிறுவாபுரி முருகன் கோவில் என்றும் அறியப்படும் இத்திருக்கோயில் 500 ஆண்டுகள் பழமையானதாகும். கிராம மக்கள் சேர்ந்து இக்கோயிலை கட்டியுள்ளனர். அரசாங்க பதிவுகளில் கோயிலின் அசல் பெயர் சின்னம்பேடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈழப் போர் அல்லது இலங்கை உள்நாட்டுப் போர் (Sri Lankan Civil War) என்பது இலங்கை இனப்பிரச்சினை காரணமாக, தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட்ட இலங்கைத் தமிழ்ப் போராளிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறைப் போராட்டங்களையும், போர்களையும் முதன்மையாகக் குறிக்கின்றது. இப்போரானது சிங்களவருக்கும், தமிழருக்கும் இடையில் பல விடயங்கள் தொடர்பாக நிலவிவரும் பாரிய கருத்து முரண்பாடுகளின் மூலத்தைக் கொண்டதாகும். 23 யூலை 1983 முதல் 26 ஆண்டுகள் நடைபெற்ற இப்போர் 2009 இல் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதுடன் முடிவுக்கு வந்தது.
பரமக்குடி கலவரம் - 2011 (ஆங்கிலம்: Paramakudi riots) தமிழ்நாடு மாநிலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியில் 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி நடந்த நிகழ்வு ஆகும். தேவேந்திர குள வேளாளர் என்ற சமுதாய மக்களின் வழிகாட்டிகளில் ஒருவரான இம்மானுவேல் சேகரன் என்பவரின் 54 வது நினைவு நாள் கொண்டாட்டத்தின் போது இப்போதைய தலைவர்களில் ஒருவரும் தமமுக என்ற கட்சியின் தலைவருமான ஜான் பாண்டியன் என்பவரை காவல் துறை கைது செய்ததால் இந்தக் கலவரம் ஏற்பட்டது.
வன்னி அரசு (Vanni Arasu) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக உள்ளார். இவர் 2026ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் திண்டிவனம் தொகுதியிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) கவிஞரும், எழுத்தாளரும், இதழாசிரியரும், விடுதலைப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியுமாவார். கவிதையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு "பாரதி" என்ற பட்டம் வழங்கப்பட்டது. நவீன தமிழ்க் கவிஞர்களின் முன்னோடியாகத் திகழ்ந்த இவர், தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் (Liberation Tigers of Tamil Eelam, LTTE) சுருக்கமாக விடுதலைப் புலிகள் அல்லது த.வி.பு என்பது இலங்கையில் தமிழருக்கு ஏற்பட்ட இனவேற்றுமைகளுக்கு எதிராக இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிப் போராடிய போராட்ட அமைப்பு ஆகும். விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆவார். அவரால் இவ்வியக்கம் 1976 இல் உருவாக்கப்பட்டது.
நாம் தமிழர் கட்சி தமிழ்த் தேசிய, ஈழப் போராட்ட ஆதரவு உடைய, தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் செயல்படும் ஓர் அரசியல் கட்சியாகும். . இந்தக் கட்சி 2010 மே 18 அன்று சீமானால் தொடங்கப்பட்டது. தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் சி.பா.ஆதித்தனார் நடத்தி வந்த "நாம் தமிழர் இயக்கத்தின்" தொடர்ச்சியே சீமானால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி என அறியப்படுகிறது.
விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்
விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழர் இனப்படுகொலை அல்லது ஈழத்தமிழர் இனப்படுகொலை என்பது பெரும்பான்மை பேரினவாத சிங்கள அரசு கலவரங்களை ஏற்படுத்தியும், வானூர்திகளில் இருந்து கண்மூடித்தனமாக குண்டு வீசியும், எறிகணைகளை வீசியும், நேரடியாகச் சுட்டும், சித்திரவதை செய்தும் ஈழத்தமிழர்களை படுகொலை செய்யும் இனவழிப்பைக் குறிக்கும். குறிப்பாக தமிழர்களின் நியாயமான பிரச்சினைகளுக்கு எவ்வித நடைமுறைத் தீர்வுகளையும் முன்வைக்காது, பொது மக்களைப் பொருட்படுத்தாது மேற்கொண்டுவரும் போரில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கொல்லப்படுதலைக் குறிக்கிறது. 2009 போரில் மட்டும் சுமார் 20,000 மக்கள் கொல்லப்பட்டனர் என்று ஐக்கிய இராச்சிய ரைம்சு பத்திரிகை கூறுகிறது.
சன் தொலைக்காட்சி என்பது இந்தியாவின் தலைசிறந்த ஒளிபரப்பாளர்களுள் ஒன்றாகவும், தமிழில் முன்னோடி பொழுதுபோக்குத் தொலைக்காட்சியாகவும் உள்ளது. இது சென்னையைச் சேர்ந்த ஊடக நிறுவனமான சன் குழுமத்தின் சன் டிவி நெட்வொர்க்கின் முதன்மை அலைவரிசையாகும். இந்த அலைவரிசை கலாநிதி மாறன் என்பவரால் 14 ஏப்ரல் 1992 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி (Chakravarti Rajagopalachari, 10 திசம்பர் 1878 – 25 திசம்பர் 1972) இந்திய வழக்கறிஞர், விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் சுருக்கமாக ராஜாஜி என்றும் மூதறிஞர் ராஜாஜி என்றும் அழைக்கப்பட்டவர், சி.ஆர் என்று அறியப்பட்டவர். இந்தியாவின் கடைசித் தலைமை ஆளுநராகப் பணியாற்றியவர்.
தமிழ் (Tamil language), தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
திருக்குறள் (Tirukkural), சுருக்கமாக குறள் (Kural), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று தொகுப்புகளைக் கொண்டது.
சவுக்கு சங்கர் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் விமர்சகரும், ஊடகவியலாளரும் ஆவார். அரசியல், சமூக மட்டத்தில் ஏற்படும் பல்வேறு சம்பவங்களைப் பொதுவெளிக்குக் கொண்டுவந்து விவாதப் பொருளாக்கியுள்ளார். சவுக்கு டாட் நெட், சவுக்கு ஆன்லைன் உள்ளிட்ட தளங்களை நடத்திப் பின்னர் சவுக்கு மீடியா என்கிற ஊடகத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார்.
பொன்மகள் வந்தாள் (2020 திரைப்படம்)
பொன்மகள் வந்தாள் (Ponmagal Vandhal) 2020ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 27 ஆம் தேதியன்று வெளியான இந்திய தமிழ் மொழி நாடகத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை சூரியா தயாரிப்பில் ஜே.ஜே.பிரெட்ரிக் எழுதி இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் ஜோதிகா, ஆர் பார்த்திபன், கே பாக்யராஜ், தியாகராஜன், பாண்டியராஜன் பிரதாப் போதென் ஆகியோர் முன்னணி கதைப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சாட் (அல்லது தசாத், அரபு:تشاد; பிரெஞ்சு: Tchad), நடு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக வடக்கே லிபியாவும், கிழக்கே சூடானும், தெற்கே மத்திய ஆபிரிக்கக் குடியரசும், தென்மேற்கே கமரூன் மற்றும் நைஜீரியாவும், மேற்கே நைஜரும் அமைந்துள்ளன. இங்கு பொதுவாக பாலைவனக் காலநிலை நிலவுவதால் இந்நாடு "ஆபிரிக்காவின் இறந்த இதயம்" (Dead Heart of Africa) என அழைக்கப்படுகிறது.
இலங்கை (Sri Lanka), வரலாற்றுரீதியாக சிலோன் (Ceylon), அதிகாரபூர்வமாக இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு (Democratic Socialist Republic of Sri Lanka), என்பது தெற்காசியாவில் உள்ள ஒரு தீவு நாடு ஆகும். இது இந்தியப் பெருங்கடலில், வங்காள விரிகுடாவின் தென்மேற்கே, மன்னார் வளைகுடா, பாக்கு நீரிணை ஆகியவற்றால் இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தீவு தென்மேற்கில் மாலைத்தீவுகளுடனும், வடமேற்கே இந்தியாவுடனும் கடல் எல்லையைக் கொண்டுள்ளது.
இராசீவ் காந்தி (Rajiv Gandhi) (ஆகத்து 20, 1944 - மே 21, 1991), இவரது தாயாரான பிரதமர் இந்திரா காந்தி 1984, அக்டோபர் 31 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டதன் பின் இந்தியப் பிரதமரானவர். இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்தும், அரசியல் மீது ஆர்வமில்லாது, விமான ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். தாயார் இந்திரா காந்தியால் வாரிசாக வளர்க்கப்பட்டு வந்தவரெனக் கருதப்பட்ட இவரது தம்பியான சஞ்சய் காந்தி, விமான விபத்தொன்றில் காலமான பின்னர், மிகுந்த தயக்கத்துடன் வற்புறுத்தலுக்கு இணங்கி அரசியலுக்கு வந்தார்.
அறந்தாங்கி நிஷா (இயற்பெயர்: நிஷா: பிறப்பு 12 அக்டோபர் 1983) இந்தியாவின் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கியை சேர்ந்த திரைப்பட நகைச்சுவை நடிகையும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருமாவார், பெரும்பாலும் தமிழ்த் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துள்ள இவர்,, மாரி 2 (2018), ஆண் தேவதை மற்றும் திருச்சிற்றம்பலம் (2022) போன்ற படங்களில் சிறப்பாக தன்னுடைய நடிப்பை வெளிக்காட்டியதற்காக பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டுள்ளார். நகைச்சுவை நடிகையாக, மேடை பேச்சாளாராக, தொகுப்பாளராக என எண்ணூற்றுக்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ள இவரை, சின்னத்திரை நயன்தாரா என்று அன்புடன் பொதுமக்களும் சக கலைஞர்களும் அழைத்துவருகிறார்கள் . கலக்க போவது யாரு (2015), சகலை vs ரகளை (2018), கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் (2018), ராமர் வீடு (2019), திரு அண்ட் திருமதி சின்னத்திரை (சீசன் 1) (2019) குக் வித் கோமாளி (2019-2020), பிக் பாஸ் (சீசன் 4) (2020), பிக் பாஸ் ஜோடிகள்(சீசன் 1) (2021), நகைச்சுவை ராஜா கலக்கல் ராணி (2021), ஸ்டார் கிட்ஸ் (2021), பாரதி கண்ணம்மா (2021), திரு மற்றும் திருமதி சின்னத்திரை (சீசன் 4) (2022) மற்றும் விஜய் சபை (2022) போன்ற பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பாளராக நிஷா, பங்கெடுத்துள்ளார்.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்: பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற ஒரு சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான தமிழர் கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியக் கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
வளர்ந்துவரும் இந்தியாவிற்கான பிரதான் மந்திரி பள்ளிகள் திட்டம் (PM SHRI அல்லது பரவலாக பிஎம் ஸ்ரீ திட்டம் என்பது பள்ளிகளில் கல்வித் தரம், உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக இந்திய அரசாங்கத்தால் செப்டம்பர் 7, 2022 அன்று தொடங்கப்பட்ட திட்டமாகும். இவை, தேசிய கல்விக் கொள்கை 2020 செயல்படுத்தப்படுவதை வெளிப்படுத்தும் முன்மாதிரியான பள்ளிகளாகும்.
ஜெய் (Jai, பிறப்பு: ஏப்ரல் 6, 1986) ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர். இவர் பாடகர் தேவாவின் தம்பி சம்பத்தின் மகன் ஆவார். ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில், அவர் இசுலாம் மார்க்கத்தை ஏற்றதாகவும், ஏழு ஆண்டுகளாக அதை பின்பற்றி வருகிறார் என்றும், எதிர்காலத்தில் தனது பெயரை அஜீஷ் ஜெய் என்று மாற்ற நினைப்பதாகவும் கூறினார்.
முருகன் (Murugan) அல்லது கார்த்திகேயன் (Kartikeya) என்பவர் இந்து கடவுளர்களான சிவன்- பார்வதி தம்பதிக்கு மகனாவார். முருகன் இந்திய துணைக்கண்டத்தில் பண்டைய காலம் தொட்டு வணங்கப்படும் ஒரு முக்கிய தெய்வமாக இருந்து வருகிறார். இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார்.
வாச்சாத்தி வன்முறை என்பது தமிழ்நாட்டில் நிகழ்ந்த ஒரு வன்முறை நிகழ்வாகும். 1992 சூன் 20-22, தேதிகளில் வாச்சாத்திக் கிராமத்தில் தமிழ்நாட்டுக் காவல்துறையினராலும், வனத்துறையினராலும், வருவாய்த்துறையினராலும், அக்கிராம மக்கள் மீது நடத்திய வன்முறை/வன்கொடுமைத் தாக்குதல் நிகழ்வே வாச்சாத்தி வன்முறை எனப்படுகின்றது.
இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்
குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப்பெயர் குறிக்கிறது.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
ஆபாசத் திரைப்படம் அல்லது பாலியல் திரைப்படம் (Pornographic film) என்பது பாலியல் ரீதியான விசயங்களை முன்வைத்து பார்வையாளர்களை புணர்ச்சிப் பரவசநிலைக்கு தூண்டுவதற்காக உருவாக்கப்படும் ஒரு திரைப்பட வகை ஆகும். ஆபாசத் திரைப்படங்கள் பாலியல் கற்பனைகளை முன்வைக்கின்றன. பொதுவாக நிர்வாணம் மற்றும் பாலியல் பாலுறவு போன்ற சிற்றின்பத் தூண்டுதல்களை உள்ளடக்குகின்றன.
மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்
தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள். அந்த வரிசையில் மொத்தம் 274 சிவ ஸ்தலங்கள் உள்ளன. அவைகளில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும், மற்ற கோயில்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் சில மற்ற இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ளன.
சே குவேரா (Che Guevara) என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்தோ கெவாரா தெ லா செர்னா (Ernesto Guevara de la Serna) (14 ஜுன் 1928 – 9 அக்டோபர் 1967) அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபெற்ற போராளி எனப்பல முகங்களைக் கொண்டவர்.
தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்
இப்பட்டியல் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் அதிகபட்சமாக நடித்த குறிப்பிடத்தக்க நடிகைகளின் பட்டியல் ஆகும். தமிழ்த் திரையுலகில் 10 & 10 ஆண்டுகளுக்கு இரசிகர்களால் கொண்டாடப்பட்ட முன்னணி நடிகைகளின் புகைப்படங்கள் கீழ்வருமாறு உள்ளது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (All India Anna Dravida Munnetra Kazhagam) (அஇஅதிமுக) என்பது தமிழ்நாடு மாநிலம் மற்றும் புதுச்சேரி ஒன்றியப் பகுதியில் உள்ள ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிரிந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ம. கோ.
ஜமீன் ஆத்தூர் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் கரூரில் ஈசநத்தத்திற்கு அருகிலுள்ள ஒரு சிறிய கிராமமாகும். இது கரூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாகும் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தின் கிராமங்களால் சூழப்பட்டுள்ளது. இந்தக் கிராமத்தில் அதிக அளவு முருங்கை உற்பத்தி செய்யப்படுகிறது, அதில் பெரும்பகுதி ஏற்றுமதி செய்யப்படுகிறது.
திரிஷா கிருஷ்ணன் இயற்பெயர் அனுராதிகா கிருஷ்ணரத்னம் (பிறப்பு - மே 4, 1983, சென்னை) தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட முன்னணி கதாநாயகி ஆவார். இவர் நடித்த சாமி, கில்லி போன்ற திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை. இவர் திரைக்கு வருவதற்கு முன்பு ஆரம்பகாலத்தில் சென்னை அழகியாக 1999ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.