The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026 (2026 Tamil Nadu Legislative Assembly election) தமிழ்நாடு சட்டமன்றத்தின் 234 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் ஆகும். 2026 ஏப்ரல் 23-ஆம் நாளன்று வாக்குப்பதிவு நடந்தது. மே 4 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும்.
நாம் தமிழர் கட்சி தமிழ்த் தேசிய, ஈழப் போராட்ட ஆதரவு உடைய, தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் செயல்படும் ஓர் அரசியல் கட்சியாகும். . இந்தக் கட்சி 2010 மே 18 அன்று சீமானால் தொடங்கப்பட்டது. தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் சி.பா.ஆதித்தனார் நடத்தி வந்த "நாம் தமிழர் இயக்கத்தின்" தொடர்ச்சியே சீமானால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி என அறியப்படுகிறது.
ஆதவ் அர்ஜுனா ("Aadhav Arjuna") என்பவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும் தேர்தல் வியூக வகுப்பாளரும் விளையாட்டுத்துறை நிர்வாகியுமாவார். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளராகவுள்ளார்.திமுகவிற்குத் தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்தார். 2023-இல் திருச்சியில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டில் கலந்து கொண்டு அக்கட்சியில் இணைந்து துணைப் பொதுச்செயலாளரானார்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் அல்லது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) என்பது தமிழ்நாட்டின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் உரிமைத் தொகையாக 1000 இந்திய ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் தமிழ்நாடு அரசுத் திட்டமாகும். இத்திட்டத்தை தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி நினைவாகப் பெயரிட்டுள்ளனர்.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
உலக அளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6,000-இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
துரைமுருகன் (Durai Murugan, பிறப்பு: சூலை 1, 1938) என்பவர் காட்பாடியார் என்று தமிழக அரசியல் வட்டாரங்களில் சுருக்கமாக அழைக்கப்படும். இவர் இந்திய அரசியல்வாதியும், தமிழக அமைச்சரும், வழக்குரைஞரும் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும் ஆவார். இவர் திமுகவின் மேடைப்பேச்சாளர், இலக்கியவாதியுமாவார்.
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 2026
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 2026 (2026 Puducherry Legislative Assembly election) என்பது 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் 9 அன்று புதுச்சேரியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலாகும். வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் 2026 மே 4 அன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலுப்பிள்ளை பிரபாகரன் (Velupillai Prabhakaran, 26 நவம்பர் 1954 – 17 மே அல்லது 18 மே 2009) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் ஆவார். 1972 இல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது அகவையில் பிரபாகரன் தொடங்கினார். 1975 இல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் இவர் அதிகமாக இயங்கி வந்த காலகட்டத்தில், யாழ்ப்பாண மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா படுகொலைக்கு காரணமாக இவர் குற்றஞ்சாட்டப்பட்டார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியல்
தமிழ்நாட்டிலுள்ள, சட்டமன்றத் தொகுதிகள் மொத்தம் 234 ஆகும். சட்டமன்றத்தின் தலைமை அதிகாரி, சபாநாயகர் என்று அழைக்கப்படுகிறார். சட்டசபையின் காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021
தமிழ்நாட்டின் பதினாறாவது சட்டமன்றத் தேர்தல் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மொத்தமுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்ய 2021 ஏப்ரல் 6 அன்று சட்டமன்றப் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் 6-ஆவது முறையாகத் தமிழகத்தின் பழம்பெரும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று அக்கட்சியின் தலைவர் மு. க.
விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்
விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
தமிழ் (Tamil language), தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், (List of chief ministers of Tamil Nadu) என்பது முழுமையான நிலையில், தமிழ்நாட்டின் 1920ஆம் ஆண்டு முதலான வரலாற்றிலிருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.
மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்
தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள். அந்த வரிசையில் மொத்தம் 274 சிவ ஸ்தலங்கள் உள்ளன. அவைகளில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும், மற்ற கோயில்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் சில மற்ற இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ளன.
தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின் தென் முனையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படும் இம்மாநிலமானது, பரப்பளவில் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாக மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது. உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பேசும் தமிழர் வாழும் பகுதியே தமிழ்நாடு என அழைக்கப்படுகிறது.
திராவிட முன்னேற்றக் கழகம் (Dravida Munnetra Kazhagam, திமுக) என்பது ஓர் இந்திய அரசியல் கட்சி ஆகும். குறிப்பாக இக்கட்சி தமிழ்நாடு மாநிலத்திலும், புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்திலும் செயற்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக உள்ள திமுக, இந்திய அளவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்ற கூட்டமைப்பில் ஒரு கட்சியாக செயல்படுகிறது.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
செயற்கை நுண்ணறிவு அல்லது செயற்கை அறிதிறன் ((Artificial intelligence)) (AI) - மனிதனுக்கும் இயந்திரத்திற்கும் இடையில் காணப்படும் வேறுபாடு என்னவென்றால் படைப்பாக்கத் திறன் ஆகும். இந்த படைப்பாக்கத் திறன் இயந்திரங்கள் மூலமும் சாத்தியப்படுமானால் அதுவே செயற்கை நுண்ணறிவு என அழைக்கப்படுகிறது. கணினி அறிவியலின் பரந்த கிளையாக, செயற்கை நுண்ணறிவு காணப்படுகிறது.
வைப்புத்தொகை (Deposit) என்பது ஒரு வேட்பாளர் தேர்தலில் போட்டியிட கட்டவேண்டிய முன்பணம். அரசாட்சி முறையில் போதிய ஆர்வமற்றவர்களும், பொழுதுபோக்காகப் போட்டியிட நினைப்பவர்களையும் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து ஓரளவு தடுக்கும் நோக்குடன் வைப்புத் தொகை வசூலிக்கப்படுகிறது. பல நாடுகளில் ஒரு வேட்பாளர் ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கை வாக்குகளைப் பெறத் தவறினால் அவரது வைப்புத் தொகை அவருக்குத் திருப்பி அளிக்கப்படாது.
திரிஷா கிருஷ்ணன் இயற்பெயர் அனுராதிகா கிருஷ்ணரத்னம் (பிறப்பு - மே 4, 1983, சென்னை) தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட முன்னணி கதாநாயகி ஆவார். இவர் நடித்த சாமி, கில்லி போன்ற திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை. இவர் திரைக்கு வருவதற்கு முன்பு ஆரம்பகாலத்தில் சென்னை அழகியாக 1999ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
குமரேசன் முத்துக்குமார் (K. Muthukumar)(இறப்பு: சனவரி 29, 2009, அகவை 28) ஈழத்தமிழர்களின் படுகொலைக்கு இந்திய அரசு துணை போவதாக, கண்டித்து தனக்குத்தானே தீயிட்டு உயிரைப் போக்கிக்கொண்டவர் ஆவார். இவர் சென்னையில் பெண்ணே நீ இதழில் பத்திரிகையாளராக வேலை செய்து வந்தவர். அதற்கு முன்னர் உதவி இயக்குநராகவும் வேலை செய்தவர்.
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் (Muthuvel Karunanidhi Stalin, பிறப்பு: 1 மார்ச்சு, 1953) என்பவர் தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் ஆவார். இவர் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதியின் மூன்றாவது மகனும், துணை முதலமைச்சர் உதயநிதியின் தந்தையும் ஆவார்.
ராமகிருஷ்ணா சேகர் கோஷ் (Ramakrishna Shekhar Ghosh பிறப்பு: ஆகத்து 28,1997) மஹாராட்டிரா, நாசிக்கைச் சேர்ந்த இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். வலது கை மித விரைவு வீச்சாளரும் மட்டையாளருமான இவர், உள்ளூர்ப் போட்டிகளில் மகாராட்டிர மாநில அணியினைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். 2025 இந்தியன் பிரீமியர் லீக்கிற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
திருக்குறள் (Tirukkural), சுருக்கமாக குறள் (Kural), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று தொகுப்புகளைக் கொண்டது.
மைக்கல் ஜோசஃப் ஜாக்சன் (Michael Joseph Jackson, ஆகத்து 29, 1958 - சூன் 25, 2009) ஓர் ஆபிரிக்க அமெரிக்க பாப் இசைப் பாடகர், நடன இயக்குநர், பாடல் ஆசிரியர், தொழில் தலைவர், மற்றும் வள்ளல் எனப் பல முகங்கள் கொண்டவர். புகழ்பெற்ற ஜாக்சன், இசைக் குடும்பத்தில் ஏழாம் பிள்ளை. 1964இல் இவரின் நான்கு உடன்பிறந்தவர்களுடன் சேர்ந்து ஜாக்சன் 5 என்ற இசைக்குழுவில் சேர்ந்தார்.
அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)
அழகர் ஆற்றில் இறங்குதல் அல்லது கள்ளழகர் ஆற்றில் இறங்குதல் என்பது தமிழ்நாட்டின் பழைமை வாய்ந்த மதுரை மாநகரில் சித்திரை மாதத்தில் கொண்டாடப்படும் சைவ வைணவ ஒற்றுமைத் திருவிழாகும். இது மதுரை மாநகரில் வீற்றிருக்கும் அன்னை மீனாட்சியின் திருக்கல்யாணத் திருவிழாவுடன் இணைத்துக் கொண்டாடப் பெறுகிறது. தமிழ்நாட்டில் பொதுவாக தமிழில் முதல் மாதமான சித்திரை மாதப் பிறப்பை சித்திரைத் திருவிழாவாகக் கொண்டாடுகின்றனர்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (All India Anna Dravida Munnetra Kazhagam) (அஇஅதிமுக) என்பது தமிழ்நாடு மாநிலம் மற்றும் புதுச்சேரி ஒன்றியப் பகுதியில் உள்ள ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிரிந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ம. கோ.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் (Madurai Meenakshi Sundareswarar Temple) மதுரையின் நடுவே அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இச்சிவன் கோயிலின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன் ஆவர். இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர்.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) கவிஞரும், எழுத்தாளரும், இதழாசிரியரும், விடுதலைப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியுமாவார். கவிதையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு "பாரதி" என்ற பட்டம் வழங்கப்பட்டது. நவீன தமிழ்க் கவிஞர்களின் முன்னோடியாகத் திகழ்ந்த இவர், தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
ஆபாசத் திரைப்படம் அல்லது பாலியல் திரைப்படம் (Pornographic film) என்பது பாலியல் ரீதியான விசயங்களை முன்வைத்து பார்வையாளர்களை புணர்ச்சிப் பரவசநிலைக்கு தூண்டுவதற்காக உருவாக்கப்படும் ஒரு திரைப்பட வகை ஆகும். ஆபாசத் திரைப்படங்கள் பாலியல் கற்பனைகளை முன்வைக்கின்றன. பொதுவாக நிர்வாணம் மற்றும் பாலியல் பாலுறவு போன்ற சிற்றின்பத் தூண்டுதல்களை உள்ளடக்குகின்றன.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016
பதினைந்தாவது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் (Legislative Assembly election) 2016 மே 16 இல் இடம்பெற்றது. 234 தொகுதிகளைக் கொண்ட தமிழக சட்டமன்றத்திற்கு இடம்பெற்ற இத்தேர்தலில் ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் பெரும் கட்சிகளோடு கூட்டணி அமைக்காமல் சிறிய கட்சிகளுடன் ஒரிரு தொகுதியில் தனது இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தனிபெரும்பான்மையோடு தொடர் வெற்றி பெற்று மீண்டும் ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்
இப்பட்டியல் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் அதிகபட்சமாக நடித்த குறிப்பிடத்தக்க நடிகைகளின் பட்டியல் ஆகும். தமிழ்த் திரையுலகில் 10 & 10 ஆண்டுகளுக்கு இரசிகர்களால் கொண்டாடப்பட்ட முன்னணி நடிகைகளின் புகைப்படங்கள் கீழ்வருமாறு உள்ளது.
திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்
திருவிடைமருதூர் மகாலிங்கேசுவரர் திருக்கோயில் (Thiruvidaimarudur Mahalingeswarar Temple), சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் காவிரி கரையில் அமைந்துள்ள 30-ஆவது சிவத்தலமாகும். மேலும் இது திருவாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தலங்களுள் ஒன்றாகும். இத்தலம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்:பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற ஒரு சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான தமிழர் கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
சிவனின் 108 திருநாமங்கள் அல்லது சிவாஷ்டோத்தர சத நாமாவளி என்பது சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமானின் பெயர்களை கூறி போற்றும் தோத்திரப் பாடலாகும். இப்பாடல்களில் சிவபெருமானின் நூற்றியெட்டுப் பெயர்கள் கூறப்பெற்றுள்ளன. சமஸ்கிருதத்தில் நம என்றும், தமிழில் போற்றி என்றும் சிவபெருமானின் பெயருக்குப் பின் இணைத்து பாடப்பெறுகிறது.
திவ்ய தேசங்கள் (Divya Desam) என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும்.
இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்
குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப்பெயர் குறிக்கிறது.
சே குவேரா (Che Guevara) என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்தோ கெவாரா தெ லா செர்னா (Ernesto Guevara de la Serna) (14 ஜுன் 1928 – 9 அக்டோபர் 1967) அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபெற்ற போராளி எனப்பல முகங்களைக் கொண்டவர்.
விஜய் தொலைக்காட்சி (ஸ்டார் விஜய்) என்பது தமிழ் மொழியில் இயங்கும் 24 மணி நேர பொழுதுபோக்குக் கட்டணத் தொலைக்காட்சிச் சேவை ஆகும். இந்த அலைவரிசை நவம்பர் 24, 1994 ஆம் ஆண்டு முதல் சென்னையில் கிண்டியைத் தலைமையகமாகக் கொண்டு உலகளவில் இயங்கி வருகின்றது. இந்த அலைவரிசை ஏசியாநெட் ஸ்டார் கம்யூனிகேசன்சு நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும்.
சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்
சிறுவாபுரி பாலசுப்பிரமணியம் கோயில் (Siruvapuri Sri Balasubrahmanyam temple) தமிழ்நாட்டின் சென்னைக்கு அருகிலுள்ள் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சின்னம்பேடு பகுதியில் அமைந்துள்ளது.சிறுவாபுரி முருகன் கோவில் என்றும் அறியப்படும் இத்திருக்கோயில் 500 ஆண்டுகள் பழமையானதாகும். கிராம மக்கள் சேர்ந்து இக்கோயிலை கட்டியுள்ளனர். அரசாங்க பதிவுகளில் கோயிலின் அசல் பெயர் சின்னம்பேடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வைக்கம் போராட்டம் பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமி (இயற்பெயர்: ஈரோடு வெங்கட்டர் இராமசாமி , ஆங்கிலம்: E.V. Ramasamy, செப்டம்பர் 17, 1879 – திசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர்.
காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை (C. N. Annadurai, 15 செப்டம்பர், 1909 – 03 பெப்ரவரி, 1969) ஓர் இந்திய அரசியல்வாதியும், மதராஸ் மாநிலத்தின் கடைசி முதல்வரும், தமிழகத்தின் முதலாவது முதலமைச்சருமாவார். இவர் அறிஞர் அண்ணா எனவும் பேரறிஞர் அண்ணா எனவும் அழைக்கப்படுகிறார். இவர் இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவரும், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார்.
சிறுதானியம் (Millet) என்பது வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, சோளம் ஆகிய உருவில் சிறியதாக உள்ள தானிய வகைகளைக் குறிக்கும். சிறுதானியங்கள் பழந்தமிழர் உணவில் பெரும் பங்கு வகித்தது என்பதை பல்வேறு சங்க இலக்கியங்கள் வாயிலாக அறியமுடிகிறது. மேலும் திருக்குறளில் பல்வேறு பாக்களில் பனை என்பதற்கு எதிர்பதமாய் தினை பயன்படுத்தப்பட்டுள்ளது.
மங்கலதேவி கோவில் அல்லது மங்களா தேவி கண்ணகி கோயில் தேனி மாவட்டம், தமிழ் நாட்டில் உள்ளது. இக்கோயில் தமிழ்நாட்டின் கூடலூர் வனப்பகுதியில் பளியங்குடி எனுமிடத்திலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவிலும், கேரளத்தின் இடுக்கி மாவட்டத்திலுள்ள குமுளி என்ற ஊரிலிருந்து சுமார் 14 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இது கடல் மட்ட அளவில் இருந்து சுமார் 5000 மீட்டர் உயரத்தில் உள்ளது.
கொன்றால் பாவம் (Kondraal Paavam) என்பது 2023 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் குற்றவியல் பரபரப்பூட்டும் திரைப்படம் ஆகும். தயாள் பத்மநாபன் எழுதி இயக்கிய இப்படத்தை ஐன்ஃபாக் ஸ்டுடியோஸ் பதாகையின் கீழ் பிரதாப் கிருஷ்ணா, மனோஜ் குமார் ஆகியோர் தயாரித்தனர். இதில் வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், ஈஸ்வரி ராவ், சார்லி ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர் இப்படம் 10 மார்ச் 2023 அன்று வெளியானது.
இராஜாசிங் கிறிஸ்டோபர் பால் கனகராஜ் (R C Paul Kanagaraj), சென்னை வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவரும், பிரபல குற்றவியல் வழக்கறிஞரும் ஆவார். இவர் சூன் 2020-இல் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு வழக்கறிஞர்கள் அணியின் தலைவராக உள்ளார்.
கேரளா மாநில குலுக்கல் பரிசுச் சீட்டு
கேரள மாநில குலுக்கல் பரிசுச் சீட்டு (Kerala State Lotteries) என்பது கேரள அரசால் நடத்தப்படும் ஒரு குலுக்கல் பரிசுச் சீட்டுத் திட்டமாகும். 1967 ஆம் ஆண்டில் கேரள அரசின் குலுக்கல் பரிசுச் சீட்டுத் துறையின் கீழ் நிறுவப்பட்டது. இது போன்ற குலுக்கல் பரிசு வழங்குவது இந்தியாவில் முதல் முறையாகும்.
குத்துச்சண்டை ஒரு சண்டை விளையாட்டு. ஒரே எடைத்தரத்தில் உள்ள இரு வீரர்கள் கைமுட்டியுறை, மற்றும் சில பாதுகாப்பு அணிகலங்கள் அணிந்து கை முட்டிகளால் மட்டும் சண்டை செய்வதே குத்துச்சண்டை ஆகும். ஒருவர் அடித்துத் தனது எதிரியை வீழ்த்திவிட்டால், விழுந்தவர் நடுவர் 10 எண்ணுவதற்குள் எழும்பாவிட்டால் வீழ்த்தியவர் வெற்றி பெறுவார்.
தமிழ்நாடு சட்டப் பேரவை (Tamil Nadu Legislative Assembly) என்பது இந்தியாவின், 28 மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் அரசியல் திட்டம் சார்ந்த சட்டங்களை இயற்றும் அவையாகும். இது தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ளது. இதன் தோற்றம் மற்றும் வரலாற்றைப் பார்க்கும் பொழுது, இது 18 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாடு சென்னை மாகாணமாக இருந்த பொழுதிலிருந்தே இப்பேரவை செயல்பட்டுக் கொண்டிருந்தது.
கோலி (Holi) அல்லது ஹோலி அல்லது அரங்கபஞ்சமி என்று அழைக்கப்படும் பண்டிகை இந்து மதத்தின் பிரபலமான இளவேனிற்காலப் பண்டிகையாகும். இந்தப் பண்டிகை இந்தியா, நேபாளம், வங்கதேசம், போன்ற நாடுகளிலும் சுரிநாம், கயானா, தென்னாப்பிரிக்கா, திரினிதாத், இங்கிலாந்து, மொரீசியசு மற்றும் பிஜி போன்ற இந்து மக்கள் பரவலாக வாழும் நாடுகளிலும் விரிவாகக் கொண்டாடப்படுகின்றது. இந்தியாவின் மேற்கு வங்காளம், வங்கதேசம் ஆகிய பகுதிகளில் தோல்யாத்திரை (தௌல் ஜாத்ரா) அல்லது வசந்த-உற்சவம் ("வசந்தகாலத் திருவிழா") என அழைக்கப்படுகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகள் (Liberation Tigers of Tamil Eelam, LTTE) சுருக்கமாக விடுதலைப் புலிகள் அல்லது த.வி.பு என்பது இலங்கையில் தமிழருக்கு ஏற்பட்ட இனவேற்றுமைகளுக்கு எதிராக இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிப் போராடிய போராட்ட அமைப்பு ஆகும். விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆவார். அவரால் இவ்வியக்கம் 1976 இல் உருவாக்கப்பட்டது.
ஸ்ரீ. ரங்கராஜன் (Sujatha, 3 மே 1935 – 27 பெப்ரவரி 2008) சுஜாதா எனும் புனைப்பெயரில் பரவலாக அறியப்படும் தமிழில் எழுதிய ஓர் இந்தியப் புதின எழுத்தாளர் திரைக்கதை எழுத்தாளர் ஆவார்.இவர் 100க்கும் மேற்பட்ட புதினங்கள், 250 சிறுகதைகள், 10 அறிவியல் நூல்கள், 10 மேடை நாடகங்கள் ,ஒரு சில கவிதைகளை எழுதியுள்ளார்.இவர் தமிழ் இலக்கியத்தில் பரவலாக அறியப்படும் எழுத்தாளர்களில் ஒருவராகவும், ஆனந்த விகடன், குமுதம் மற்றும் கல்கி போன்ற தமிழ் இதழ்களில் தொடர்ந்து பங்களிப்பாளராகவும் இருந்தார்.மேலும், குமுதத்தின் ஆசிரியராக சிறிது காலம் பணியாற்றினார். பல தமிழ் படங்களுக்கு திரைக்கதைகள், வசனங்களையும் எழுதியுள்ளார்.
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம் (International Union for Conservation of Nature - IUCN), உலகிலுள்ள இயற்கை வளத்தை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட ஒரு பன்னாட்டு அமைப்பாகும். இயற்கை மூலவளங்களைப் பாதுகாக்கும் நோக்கோடு செயற்பட்டு வரும் இவ்வமைப்பின் நோக்கம் உலகத்தில் தற்போது உருவாகியிருக்கும் சூழலியல் பிரச்சனைகளுக்கான நடைமுறைத் தீர்வுகளை உலகம் அறிந்து கொள்ளவும், அதனால் ஏற்பட்டிருக்கும் அபிவிருத்திக்கான சவால்களை உலகம் எதிர்கொள்ளவும் உதவுவதேயாகும். இவ்வமைப்பே சூழலியல் பாதுகாப்பு, நிரந்தர அபிவிருத்தியை முன்னிறுத்தி தொழிற்படுவதில் முன்னணியில் இருக்கின்றது.
'வள்ளலார்' இராமலிங்க அடிகளார் (ஆங்கிலம்: Thiruvarutprakasa Vallalār Chidambaram Ramalingam, 5 அக்டோபர் 1823 – 30 சனவரி 1874) இந்திய நாட்டில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சைவ சமய ஆன்மீகவாதி ஆவார். "எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே" என்பதைக் குறிக்கும் வண்ணம், இவர் தோற்றுவித்த மார்க்கத்திற்கு "சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்க சங்கம்" என்று பெயரிட்டார். சைவ சமயத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்த வள்ளலாரைப் பழமைவாதிகள் கடுமையாக எதிர்த்தனர்.