The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981), புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
காமராசர் (Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975), இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் அரசியல்வாதிகளில் ஒருவருமாவார். இவர் 13 ஏப்ரல் 1954 முதல் 2 அக்டோபர் 1963 வரை ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். 1964 முதல் 1967 வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார்.
தமிழ்நாடு அமைச்சரவை (Tamil Nadu Council of Ministers) என்பது தமிழ் நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு ஆகும். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார்.
திருக்குறள் (Tirukkural), சுருக்கமாக குறள் (Kural), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று தொகுப்புகளைக் கொண்டது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் அல்லது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) என்பது தமிழ்நாட்டின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் உரிமைத் தொகையாக 1000 இந்திய ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் தமிழ்நாடு அரசுத் திட்டமாகும். இத்திட்டத்தை தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி நினைவாகப் பெயரிட்டுள்ளனர்.
2026 பீஃபா உலகக்கோப்பை (2026 FIFA World Cup) என்பது பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பின் (பீஃபா) உறுப்பு சங்கங்களின் தேசிய அணிகளால் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் பன்னாட்டு ஆண்கள் கால்பந்து வாகையிம் 23-ஆவது பீஃபா உலகக் கோப்பைப் போட்டியாகும். இந்தப் போட்டி 2026 சூன் 11 முதல் சூலை 19 வரை நடைபெறும். ஐக்கிய அமெரிக்காவில் பதினொரு நகரங்களிலும், மெக்சிக்கோவில் மூன்று நகரங்களிலும், கனடாவில் இரண்டு நகரங்களிலுமாக மொத்தம் பதினாறு நகரங்களால் கூட்டாக நடத்தப்படுகிறது.
கோலி (Holi) அல்லது ஹோலி அல்லது அரங்கபஞ்சமி என்று அழைக்கப்படும் பண்டிகை இந்து மதத்தின் பிரபலமான இளவேனிற்காலப் பண்டிகையாகும். இந்தப் பண்டிகை இந்தியா, நேபாளம், வங்கதேசம், போன்ற நாடுகளிலும் சுரிநாம், கயானா, தென்னாப்பிரிக்கா, திரினிதாத், இங்கிலாந்து, மொரீசியசு மற்றும் பிஜி போன்ற இந்து மக்கள் பரவலாக வாழும் நாடுகளிலும் விரிவாகக் கொண்டாடப்படுகின்றது. இந்தியாவின் மேற்கு வங்காளம், வங்கதேசம் ஆகிய பகுதிகளில் தோல்யாத்திரை (தௌல் ஜாத்ரா) அல்லது வசந்த-உற்சவம் ("வசந்தகாலத் திருவிழா") என அழைக்கப்படுகின்றது.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
உலக அளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6,000-இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
தமிழ்நாடு சட்டப் பேரவை (Tamil Nadu Legislative Assembly) என்பது இந்தியாவின், 28 மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் அரசியல் திட்டம் சார்ந்த சட்டங்களை இயற்றும் அவையாகும். இது தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ளது. இதன் தோற்றம் மற்றும் வரலாற்றைப் பார்க்கும் பொழுது, இது 18 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாடு சென்னை மாகாணமாக இருந்த பொழுதிலிருந்தே இப்பேரவை செயல்பட்டுக் கொண்டிருந்தது.
எக்ஸ் வீடியோஸ் (X Videos) என்பது 2018 ஆம் ஆண்டில் வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கணினி வழிக் குற்றம் தொடர்பான பரபரப்பூட்டும் இந்நாடகத் திரைப்படத்தில் சஜோ சுந்தர் இயக்குநராக அறிமுகமானார். உண்மை வாழ்வில் நடந்த மறைக்கப்பட்ட ஒளிப்படமி ஆபாசப் பட வழக்கு நிகழ்வுகளால் ஈர்க்கப்பட்ட இப்படம், இதுகுறித்த சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், இத்தகைய இழிவான செயல்களுக்கு எதிராகவும் எச்சரிக்கை விடுக்கிறது.
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், (List of Chief Ministers of Tamil Nadu) என்பது முழுமையான நிலையில், தமிழ்நாட்டின் 1920ஆம் ஆண்டு முதலான வரலாற்றிலிருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.
தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின் தென் முனையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படும் இம்மாநிலமானது, பரப்பளவில் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாக மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது. உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பேசும் தமிழர் வாழும் பகுதியே தமிழ்நாடு என அழைக்கப்படுகிறது.
இந்திய அரசு (Government of India, இந்தி: भारत सरकार, பாரத் சர்கார்) இந்திய நாட்டின் மத்திய அரசு இந்திய அரசியல் சட்டப்படி அமைக்கப்பெற்றது. அதுமட்டுமில்லாமல் கூட்டாட்சித் தத்துவத்தின்படி, குடியரசு இந்தியாவில் அடங்கிய 28 மாநிலங்களையும் மற்றும் 8 ஆட்சிப்பகுதிகளையும் தன் ஆளுமையில் ஒன்றிணைக்கின்றது. இதன் செயல் மையமாக இந்தியத் தலைநகர் புது தில்லி விளங்குகின்றது.
அன்புமணி ராமதாஸ் (Anbumani Ramadoss, பிறப்பு: 9 அக்டோபர் 1968) ஒரு தமிழக அரசியல்வாதியும், மருத்துவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும் ஆவார். இவரின் தந்தையார் மருத்துவர் ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ஆவார். 2004-இல் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய நடுவண் அரசில் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சராகப் பணியாற்றினார்.
யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja; பிறப்பு: ஆகத்து 31, 1979) தமிழ்த் திரைப்பட இசைக்கலைஞர், பின்னணிப் பாடகர், பாடல் ஆசிரியர் ஆவார். பெரும்பான்மையாகத் தமிழ்ப் படங்களில் பணியாற்றுகிறார். பல்துறை இசையமைப்பாளராகக் கருதப்படும் இவர், குறிப்பாக மேற்கத்திய இசையைப் பயன்படுத்தியதற்காக அறியப்படுபவர் , மேலும் தமிழ்த் திரைப்படம் மற்றும் இசைத் துறையில் ஹிப் ஹாப் இசையை அறிமுகப்படுத்தியவர்.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) கவிஞரும், எழுத்தாளரும், இதழாசிரியரும், விடுதலைப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியுமாவார். கவிதையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு "பாரதி" என்ற பட்டம் வழங்கப்பட்டது. நவீன தமிழ்க் கவிஞர்களின் முன்னோடியாகத் திகழ்ந்த இவர், தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
தமிழ் (Tamil language), தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
இந்திய சோதிடத்தில் பிரீதி என்பது, பஞ்சாங்க உறுப்புக்களுள் ஒன்றான "யோகம்" என்பதனுள் அடங்கும் 27 யோகங்களுள் இரண்டாவது ஆகும். இராசிச் சக்கரத்தின் தொடக்கப் புள்ளியில் இருந்து 13° 20' தொடக்கம் 26° 40' பிரீதி யோகத்துக்கு உரியது. சூரியன், சந்திரன் ஆகிய கோள்களின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை இந்தக் கோணத்தினூடாக அதிகரிப்பதற்கு எடுக்கும் நேரத்துக்குரிய யோகம் "பிரீதி" ஆகும்.
தமிழ்த்தாய் வாழ்த்து (Tamil Thaai Vaalthu) என்பது இந்திய மாநில அரசுகளுள் தமிழை ஆட்சி மொழியாய் கொண்டுள்ளவற்றில் பாடப்பெறும் வாழ்த்துப் பாடலாகும். இது தமிழ்த் தாயை வாழ்த்தி வணக்கம் செலுத்துவதாக அமையும். இப்பாடல் அரசு விழாக்கள், பள்ளிகளின் காலை இறைவணக்கக் கூட்டம் முதலான நிகழ்வுகளின் தொடக்கத்தில் பாடப்படுகிறது.
திரிஷா கிருஷ்ணன் இயற்பெயர் அனுராதிகா கிருஷ்ணரத்னம் (பிறப்பு - மே 4, 1983, சென்னை) தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட முன்னணி கதாநாயகி ஆவார். இவர் நடித்த சாமி, கில்லி போன்ற திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை. இவர் திரைக்கு வருவதற்கு முன்பு ஆரம்பகாலத்தில் சென்னை அழகியாக 1999ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்
குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப்பெயர் குறிக்கிறது.
சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்
சிறுவாபுரி பாலசுப்பிரமணியம் கோயில் (Siruvapuri Sri Balasubrahmanyam temple) தமிழ்நாட்டின் சென்னைக்கு அருகிலுள்ள் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சின்னம்பேடு பகுதியில் அமைந்துள்ளது.சிறுவாபுரி முருகன் கோவில் என்றும் அறியப்படும் இத்திருக்கோயில் 500 ஆண்டுகள் பழமையானதாகும். கிராம மக்கள் சேர்ந்து இக்கோயிலை கட்டியுள்ளனர். அரசாங்க பதிவுகளில் கோயிலின் அசல் பெயர் சின்னம்பேடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்
விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026 (2026 Tamil Nadu Legislative Assembly election) தமிழ்நாடு சட்டமன்றத்தின் 234 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் ஆகும். 2026 ஏப்ரல் 23-ஆம் நாளன்று வாக்குப்பதிவு நடந்தது. மே 4 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின.
மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்
தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள். அந்த வரிசையில் மொத்தம் 274 சிவ ஸ்தலங்கள் உள்ளன. அவைகளில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும், மற்ற கோயில்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் சில மற்ற இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ளன.
சுவாசிகா (Swasika) இவர் ஓர் இந்திய நடிகையாவார். இவர் பெரும்பாலும் மலையாளத் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் தொடர்களிலும் ஒரு சில தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் வசந்தி (2021), குமாரி (2022), விவேகானந்தன் விரலானு (2024) மற்றும் லப்பர் பந்து (2024) ஆகிய படங்களில் நடித்ததற்காக நன்கு அறியப்பட்டவர்.
வன்னி அரசு (Vanni Arasu) இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் சமூகநீதித் துறை அமைச்சராகவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராகவும் உள்ளார். இவர் 2026-ஆம் ஆண்டு தமிழகச் சட்டசபைக்கான தேர்தலில் திண்டிவனம் தொகுதியிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
வாக்காளர் அடையாள அட்டை (Voter ID), இந்தியத் தேர்தல் ஆணையத்தால், 18 வயது எய்திய இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்படுவதாகும். தேர்தல்களில் வாக்கு அளிப்பதற்கும், கடவுச் சீட்டு, அலைபேசி இணைப்பு போன்றவைகள் பெறுவதற்கும், வாக்காளர் அடையாள அட்டையை ஒரு அரசு ஆவணமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.. வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை எனில் பொதுத் தேர்தல்களில் வாக்களிக்க இயலாது.
திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்
திருக்காளத்தி (Srikalahasti Temple) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பாடல் பெற்ற தலம் ஆகும். இது காளகத்தீசுவரர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. சம்பந்தரால் பாடப் பெற்ற இத்தலம், கண்ணப்பர் தொண்டாற்றிப் பேறு பெற்ற தலம் எனக் கருதப்படுகிறது.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
லியோ ஆண்ரசு "லியோ" மெசி (Lionel Andrés "Leo" Messi எசுப்பானிய ஒலிப்பு: [ljoˈnel anˈdɾes ˈmesi] பிறப்பு 24 சூன் 1987) ஓர் அர்கெந்தீன தொழில்முறைக் கால்பந்து வீரர் ஆவார். இவர், மேஜர் லீக் சாக்கர் கிளப் இன்டர் மியாமி மற்றும் அர்ஜென்டினாவின் தேசிய அணி ஆகிய இரண்டிற்கும் முன்கள வீரராகவும் தலைவராகவும் உள்ளார். எட்டு பலோன் டி 'ஓர் விருதுகளையும், ஆறு ஐரோப்பிய தங்கக் காலணியினையும் வென்றுள்ளார், மேலும் பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பின் சிறந்த வீரருக்கான விருதினை இவர் மூன்று முறை பெற்றுள்ளார்.
சுற்றுலா (tourism) என்பது தமது வழக்கமாக வாழும் இருப்பிடங்களை விட்டு வேற்று இடங்களைக் கண்டு களிக்க பயணித்தலே ஆகும். உலக சுற்றுலா அமைப்பின் சொற்பொருள் விளக்கத்தின்படி ஒரு பயணத்தை சுற்றுலா என வகைப்படுத்த ஒருவர் தமது "வழக்கமான சுற்றுச்சூழலைவிட்டு வேற்று இடத்திற்கு ஒய்வு, அலுவல் மற்ற ஏனைய நோக்குடன் மேற்கொள்ளும் பயணம் ஒரு வருட காலகட்டத்திற்குள் அமைய வேண்டும். மேலும், அப்பயணத்தின் மூலம் பயணி பயணிக்கப்பட்ட இடத்திலிருந்து ஊதியம் பெறக் கூடாது".
கேரளா மாநில குலுக்கல் பரிசுச் சீட்டு
கேரள மாநில குலுக்கல் பரிசுச் சீட்டு (Kerala State Lotteries) என்பது கேரள அரசால் நடத்தப்படும் ஒரு குலுக்கல் பரிசுச் சீட்டுத் திட்டமாகும். 1967 ஆம் ஆண்டில் கேரள அரசின் குலுக்கல் பரிசுச் சீட்டுத் துறையின் கீழ் நிறுவப்பட்டது. இது போன்ற குலுக்கல் பரிசு வழங்குவது இந்தியாவில் முதல் முறையாகும்.
இளையராஜா (Ilaiyaraaja, பிறப்பு: 2 சூன் 1943), இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர் ஆவார். இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976-இல் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
முருகன் (Murugan) அல்லது கார்த்திகேயன் (Kartikeya) என்பவர் இந்து கடவுளர்களான சிவன்- பார்வதி தம்பதிக்கு மகனாவார். முருகன் இந்திய துணைக்கண்டத்தில் பண்டைய காலம் தொட்டு வணங்கப்படும் ஒரு முக்கிய தெய்வமாக இருந்து வருகிறார். இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார்.
ஆதவ் அர்ஜுனா ("Aadhav Arjuna") என்பவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும் தேர்தல் வியூக வகுப்பாளரும் விளையாட்டுத்துறை நிர்வாகியுமாவார். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளராகவுள்ளார்.திமுகவிற்குத் தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்தார். 2023-இல் திருச்சியில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டில் கலந்து கொண்டு அக்கட்சியில் இணைந்து துணைப் பொதுச்செயலாளரானார்.
மாமன்னர் மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் ஆங்கிலேயரை எதிர்த்து தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டத்தை தொடங்கியவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்கள்.
சவுக்கு சங்கர் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் விமர்சகரும், ஊடகவியலாளரும் ஆவார். அரசியல், சமூக மட்டத்தில் ஏற்படும் பல்வேறு சம்பவங்களைப் பொதுவெளிக்குக் கொண்டுவந்து விவாதப் பொருளாக்கியுள்ளார். சவுக்கு டாட் நெட், சவுக்கு ஆன்லைன் உள்ளிட்ட தளங்களை நடத்திப் பின்னர் சவுக்கு மீடியா என்கிற ஊடகத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார்.
கொன்றை வேந்தன் ஔவையார் இயற்றிய ஒரு கொன்றை மரத்தின் மலரை விரும்பி அணியும் கடவுள் சிவன். அவரது புதல்வர்களுள் ஒருவராகிய முருகனைப் போற்றி இந்நூல் பாடப்பட்டுள்ளது. இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல்: இதில் குறிப்பிடப்படும் “கொன்றை வேந்தன் செல்வன்” கொன்றை மாலை அணிந்த சிவன் என்னும் கடவுளின் மகனாகிய விநாயகர்.
த்ரிஷ்யம் 2: தி ரெஸ்யூஷன், அல்லது த்ரிஷ்யம் 2 என்பது ஜீது ஜோசப் எழுதி இயக்கிய மற்றும் ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனம் மூலம் ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்த 2021 இந்திய மலையாள- மொழி நாடக திரில்லர் படம். இது ஜீது ஜோசப் இயக்கிய திரிஷ்யம் 2013 இல் வெளிவந்த திரிஷ்யம் திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். இப்படத்தில் மோகன்லால், மீனா, அன்சிபா அசன் மற்றும் எஸ்தர் அனில் ஆகியோர் நடித்துள்ளனர்.
பாரதிராஜா (Bharathiraja, 17 சூலை 1941 – 10 சூன் 2026) தமிழ்த் திரைப்படங்களில் முதன்மையாகப் பணியாற்றிய இந்தியத் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், திரைக்கதை ஆசிரியரும் நடிகருமாவார். 1977-ஆம் ஆண்டில் 'பதினாறு வயதினிலே' திரைப்படத்தில் அறிமுகமான இவர், கிராமத்து வாழ்க்கையைத் தனது படங்களில் மிகவும் உண்மையாகவும் உணர்வுபூர்வமாகவும் காட்டியதற்காகப் புகழ்பெற்றவர். மக்கள் இவரை 'இயக்குநர் இமயம்' என்று அன்பாக அழைத்தனர்.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்: பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தமிழ்நாட்டில், தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற ஒரு சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான தமிழர் கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியக் கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
திவ்ய தேசங்கள் (Divya Desam) என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும்.
திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்
திருவிடைமருதூர் மகாலிங்கேசுவரர் திருக்கோயில் (Thiruvidaimarudur Mahalingeswarar Temple), சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் காவிரி கரையில் அமைந்துள்ள 30-ஆவது சிவத்தலமாகும். மேலும் இது திருவாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தலங்களுள் ஒன்றாகும். இத்தலம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்.
தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்
இப்பட்டியல் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் அதிகபட்சமாக நடித்த குறிப்பிடத்தக்க நடிகைகளின் பட்டியல் ஆகும். தமிழ்த் திரையுலகில் 10 & 10 ஆண்டுகளுக்கு இரசிகர்களால் கொண்டாடப்பட்ட முன்னணி நடிகைகளின் புகைப்படங்கள் கீழ்வருமாறு உள்ளது.
முத்து வடுகநாதர் (? - 25 சூன், 1772) என்பவர் சிவகங்கை சமஸ்தானம் ஆண்ட இரண்டாம் மன்னர் ஆவார். இளம் வயதில் இருந்தே பல போர்க்களில் பங்கேற்று உடம்பெல்லாம் விழுப்புண் பெற்று வடு ஆனதால் முத்துவடு என்ற பெயர் பெற்றார்.1749-இல் இவரின் தந்தையான சசிவர்ணத் தேவர் இறந்தவுடன் இவர் சிவகங்கைச் சீமையின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார்.
மேஜர் முகுந்த் வரதராஜன் ஏ.சி (Mukund Varadarajan), இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்தார். ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் நடந்த ஒரு மோதலில் மூன்று பயங்கரவாதிகளைக் கொன்றதற்காக, 2014 ஆம் ஆண்டில், இந்தியாவின் மிக உயர்ந்த அமைதிக்கால துணிச்சலான அசோகச் சக்கர விருது இவருக்கு மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டது.
பகாவ் (மலாய்: Bahau; ஆங்கிலம்: Bahau; சீனம்: 巴豪); என்பது தீபகற்ப மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின், செம்போல் மாவட்டத்தில் (Jempol District) அமைந்து உள்ள ஒரு நகரம். தவிர அந்த மாவட்டத்தின் மிக முக்கியமான நகரமும் ஆகும். இந்தப் பகாவ் நகரத்தின் பெயர் சீனச் சொற்றொடரில் இருந்து பெறப்பட்டு இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (Chief Minister's Comprehensive Health Insurance Scheme) என்பது தமிழ்நாட்டில் குடும்ப அட்டைதாரர்களுக்குத் தமிழக அரசு வழங்கியுள்ள காப்பீட்டுத் திட்டமாகும். இதில் உயிருக்கு ஆபத்தான 51 நோய்களுக்கு, ரூபாய் ஐந்து இலட்சம் வரையிலான உயர் மருத்துவ சிகிச்சைகளை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாகப் பெற வகை செய்கிறது. 2020 ஜூன் முதல் கொரோனா சிகிச்சைக்கான செலவும் இக்காப்பீட்டில் சேர்க்கப்பட்டு, தனியார் மருத்துவமனைகளுக்கான கட்டண விவரங்கள் வெளியிடப்பட்டன.
தெய்வத்திருமகள் (2011 திரைப்படம்)
தெய்வத்திருமகள் (Deiva Thirumagal) என்பது 2011ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இதை இயக்குநர் விஜயால் எழுதி இயக்க, எம். சிந்தாமணி மற்றும் ரோனி ஸ்க்ரூவாலா ஆகியோரால் தயாரிக்கப்பட்டது.
விக்கிப்பீடியா (Wikipedia; () wik-ih-PEE-dee-ə அல்லது () wik-ee-PEE-dee-ə) என்பது, வணிக நோக்கற்ற விக்கிமீடியா நிறுவனத்தின் உதவியுடன் நடத்தப்படும், கூட்டாகத் தொகுக்கப்படும், பன்மொழி, கட்டற்ற இணையக் கலைக்களஞ்சியமாகும். தமிழ் விக்கிப்பீடியாவின் 1,84,941 கட்டுரைகளுடன் சேர்த்து இதன் மொத்தக் கட்டுரைகளான 24 மில்லியன் கட்டுரைகளும் உலகெங்கிலுமுள்ள தன்னார்வலர்களால் கூட்டாக எழுதப்படுகின்றன. பெரும்பாலும் இதன் எல்லாக் கட்டுரைகளும், இதனைப் பயன்படுத்தும் எவராலும், தொகுக்கப்படக் கூடுவன.