The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
கே. பாக்கியராஜ் (Bhagyaraj) என அழைக்கப்படும் கிருஷ்ணசுவாமி பாக்கியராஜ் (7 சனவரி 1953 – 27 சூன் 2026) இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளரும், நடிகரும், இசையமைப்பாளரும், எழுத்தாளரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் முதன்மையாகத் தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றியதோடு, பிற இந்திய மொழித் திரைப்படங்களையும் இயக்கி நடித்தார்.
காமராசர் (Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975), இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் அரசியல்வாதிகளில் ஒருவருமாவார். இவர் 13 ஏப்ரல் 1954 முதல் 2 அக்டோபர் 1963 வரை ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். 1964 முதல் 1967 வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார்.
மேலவளவு படுகொலைகள் என்பது மேலவளவு ஊராட்சித் தலைவர் முருகேசன் மற்றும் பட்டியலினத்தைச் சேர்ந்த மக்கள், 1997 ஆம் ஆண்டு சூன் 30 ,படுகொலை செய்யப்பட்டதைக் குறிக்கிறது. 1997ம் ஆண்டு, மதுரை மாவட்டம் மேலவளவு கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மற்றும் 6 பேர்கள் ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றதற்காக, 30 சூன் 1997 அன்று கொலை செய்யப்பட்டனர். கொலையாளிகளை கைது செய்ய வலியுறத்தி விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முதன் முதலாக மதுரையில் போராட்டம் நடைபெற்றது, பின்பு மேலூரில் போராட்டம் நடைபெற்றது.
தமிழ்த்தாய் வாழ்த்து (Tamil Thaai Vaalthu) என்பது இந்திய மாநில அரசுகளுள் தமிழை ஆட்சி மொழியாய் கொண்டுள்ளவற்றில் பாடப்பெறும் வாழ்த்துப் பாடலாகும். இது தமிழ்த் தாயை வாழ்த்தி வணக்கம் செலுத்துவதாக அமையும். இப்பாடல் அரசு விழாக்கள், பள்ளிகளின் காலை இறைவணக்கக் கூட்டம் முதலான நிகழ்வுகளின் தொடக்கத்தில் பாடப்படுகிறது.
திருக்குறள் (Tirukkural), சுருக்கமாக குறள் (Kural), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று தொகுப்புகளைக் கொண்டது.
திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்
திருவிடைமருதூர் மகாலிங்கேசுவரர் திருக்கோயில் (Thiruvidaimarudur Mahalingeswarar Temple), சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் காவிரி கரையில் அமைந்துள்ள 30-ஆவது சிவத்தலமாகும். மேலும் இது திருவாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தலங்களுள் ஒன்றாகும். இத்தலம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
உலக அளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6,000-இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
மயில்சாமி அண்ணாதுரை (Mayilsamy Annadurai)(பிறப்பு: சூலை 2, 1958; கோதவாடி - கிணத்துக்கடவு, பொள்ளாச்சி) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த அறிவியலாளர். தற்போது தேசிய கட்டுமான ஆராய்ச்சி மன்றத்தின் தலைவராகவும் , தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் துணைத்தலைவராகவும் உள்ளார். இந்தப் பொறுப்பை ஏற்கும் முன் இவர் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் இயக்குநராகப் பணிபுரிந்தார்.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) கவிஞரும், எழுத்தாளரும், இதழாசிரியரும், விடுதலைப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியுமாவார். கவிதையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு "பாரதி" என்ற பட்டம் வழங்கப்பட்டது. நவீன தமிழ்க் கவிஞர்களின் முன்னோடியாகத் திகழ்ந்த இவர், தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
2023 இசுரேல்-ஹமாஸ் போர் என்பது இசுரேலுக்கும் ஹமாஸ் தலைமையின் கீழ் இயங்கும் பாலத்தீனிய போராளிக் குழுக்களுக்கும் இடையே அக்டோபர் 7 அன்றிலிருந்து நடைபெற்றுவரும் போரைக் குறிக்கும். மேற்குக் கரையிலும், இசுரேல்-லெபனான் எல்லையிலும் நடக்கும் மோதல்களும் இந்தப் போர் நடவடிக்கைகளில் அடங்கும். அக்டோபர் 7 அன்று, ஹமாஸ் தலைமையின் கீழ் இயங்கும் பாலத்தீனிய போராளிக் குழுக்கள் காசாக் கரையிலிருந்து இசுரேல் மீது தாக்குதல் நடத்தியது.
மாணிக்கம் தாகூர் (Manicka Tagore) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2009 2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், விருதுநகர் தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2014 ஆம் ஆண்டு தேர்தலில், இதே விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார்.
விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்
விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
சீசெல்சு (Seychelles, () சே-செல்ஸ்-'; பிரெஞ்சு: [sɛʃɛl]), அதிகாரபூர்வமாக சீசெல்சு குடியரசு (Republic of Seychelles) என்பது ஒரு தீவுக்கூட்டமும், இந்தியப் பெருங்கடலில் உள்ள 115 தீவுகளைக் கொண்ட ஒரு தீவு நாடும் ஆகும். இதன் தலைநகர் விக்டோரியா. சீசெல்சு கிழக்கு ஆப்பிரிக்க பெரும்பரப்பில் இருந்து 1,500 கி.மீ.
தமிழ்நாடு அமைச்சரவை (Tamil Nadu Council of Ministers) என்பது தமிழ் நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு ஆகும். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார்.
சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்
சிறுவாபுரி பாலசுப்பிரமணியம் கோயில் (Siruvapuri Sri Balasubrahmanyam temple) தமிழ்நாட்டின் சென்னைக்கு அருகிலுள்ள் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சின்னம்பேடு பகுதியில் அமைந்துள்ளது.சிறுவாபுரி முருகன் கோவில் என்றும் அறியப்படும் இத்திருக்கோயில் 500 ஆண்டுகள் பழமையானதாகும். கிராம மக்கள் சேர்ந்து இக்கோயிலை கட்டியுள்ளனர். அரசாங்க பதிவுகளில் கோயிலின் அசல் பெயர் சின்னம்பேடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய சோதிடத்தில் பிரீதி என்பது, பஞ்சாங்க உறுப்புக்களுள் ஒன்றான "யோகம்" என்பதனுள் அடங்கும் 27 யோகங்களுள் இரண்டாவது ஆகும். இராசிச் சக்கரத்தின் தொடக்கப் புள்ளியில் இருந்து 13° 20' தொடக்கம் 26° 40' பிரீதி யோகத்துக்கு உரியது. சூரியன், சந்திரன் ஆகிய கோள்களின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை இந்தக் கோணத்தினூடாக அதிகரிப்பதற்கு எடுக்கும் நேரத்துக்குரிய யோகம் "பிரீதி" ஆகும்.
முருகன் (Murugan) அல்லது கார்த்திகேயன் (Kartikeya) என்பவர் இந்து கடவுளர்களான சிவன்- பார்வதி தம்பதிக்கு மகனாவார். முருகன் இந்திய துணைக்கண்டத்தில் பண்டைய காலம் தொட்டு வணங்கப்படும் ஒரு முக்கிய தெய்வமாக இருந்து வருகிறார். இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார்.
தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின் தென் முனையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படும் இம்மாநிலமானது, பரப்பளவில் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாக மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது. உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பேசும் தமிழர் வாழும் பகுதியே தமிழ்நாடு என அழைக்கப்படுகிறது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026 (2026 Tamil Nadu Legislative Assembly election) தமிழ்நாடு சட்டமன்றத்தின் 234 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் ஆகும். 2026 ஏப்ரல் 23-ஆம் நாளன்று வாக்குப்பதிவு நடந்தது. மே 4 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின.
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், (List of Chief Ministers of Tamil Nadu) என்பது முழுமையான நிலையில், தமிழ்நாட்டின் 1920ஆம் ஆண்டு முதலான வரலாற்றிலிருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.
திவ்ய தேசங்கள் (Divya Desam) என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும்.
பசு சிறுநீர் (Cow Urine) என்பது பசுக்களில் வளர்சிதை மாற்றத்தினால் வெளியாகும் ஒரு உபபொருள் ஆகும். இதனை இந்தியா, மியான்மர், நேபாளம் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகள் பயன்படுத்துகின்றனர். பசு சிறுநீர் மற்றும் மாட்டுச் சாணம் உரங்களாகப் பயன்படுத்தப்பட்ட போதிலும், ஒரு சில நோய்கள் மற்றும் புற்றுநோயைக் குணப்படுத்துவது குறித்த பசு ஆதரவாளர்களின் கூற்றுகளுக்கு அறிவியல் ஆய்வுகள் ஆதரவாக இல்லை.
தமிழ் (Tamil language), தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்
குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப்பெயர் குறிக்கிறது.
கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981), புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் அல்லது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) என்பது தமிழ்நாட்டின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் உரிமைத் தொகையாக 1000 இந்திய ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் தமிழ்நாடு அரசுத் திட்டமாகும். இத்திட்டத்தை தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி நினைவாகப் பெயரிட்டுள்ளனர்.
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில்
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் இலங்கையின் வடபகுதியில் மாவிட்டபுரத்தில் அமைந்துள்ள ஒரு பழமை வாய்ந்த முருகன் கோவில் ஆகும். இலங்கையில் காணப்படும் சைவ சமய திருத்தலங்களில் மிகவும் பழமையும் தொன்மையும் வாய்ந்த தலமாக மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் காணப்படுகிறது. மருதப்பிரவீகவல்லி எனும் குதிரை முகமுடைய சோழ இளவரசி முருகப்பெருமானை வழிபட்டு, முருகன் அருளால் குதிரை முகம் நீங்கி மகா பேரழகு பெற்றதாக வரலாறு கூறுகிறது.
டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்
டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் என்பது தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். 1996 நவம்பர் 14 இல் உருவானது. இந்தியாவின் முதலாவது சட்டப் பல்கலைக்கழகம் இதுவாகும்.
பாரதிராஜா (Bharathiraja, 17 சூலை 1941 – 10 சூன் 2026) தமிழ்த் திரைப்படங்களில் முதன்மையாகப் பணியாற்றிய இந்தியத் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், திரைக்கதை ஆசிரியரும் நடிகருமாவார். 1977-ஆம் ஆண்டில் 'பதினாறு வயதினிலே' திரைப்படத்தில் அறிமுகமான இவர், கிராமத்து வாழ்க்கையைத் தனது படங்களில் மிகவும் உண்மையாகவும் உணர்வுபூர்வமாகவும் காட்டியதற்காகப் புகழ்பெற்றவர். மக்கள் இவரை 'இயக்குநர் இமயம்' என்று அன்பாக அழைத்தனர்.
கேரளா மாநில குலுக்கல் பரிசுச் சீட்டு
கேரள மாநில குலுக்கல் பரிசுச் சீட்டு (Kerala State Lotteries) என்பது கேரள அரசால் நடத்தப்படும் ஒரு குலுக்கல் பரிசுச் சீட்டுத் திட்டமாகும். 1967 ஆம் ஆண்டில் கேரள அரசின் குலுக்கல் பரிசுச் சீட்டுத் துறையின் கீழ் நிறுவப்பட்டது. இது போன்ற குலுக்கல் பரிசு வழங்குவது இந்தியாவில் முதல் முறையாகும்.
நயன்தாரா (Nayanthara, பிறப்பு: நவம்பர் 18, 1984; இயற்பெயர் - டயானா மரியா குரியன்), தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். 2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். இவர் பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார், இதனால் இவர் தமிழ் சினிமாவில் 2010 களில் தொடங்கி இன்று வரை பெண் சூப்பர் ஸ்டார் என்று கருதப்படுகிறார்.
மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்
தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள். அந்த வரிசையில் மொத்தம் 274 சிவ ஸ்தலங்கள் உள்ளன. அவைகளில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும், மற்ற கோயில்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் சில மற்ற இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ளன.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
ஐ. மாயாண்டி பாரதி (1917 - 24 பெப்ரவரி 2015) இந்திய விடுதலைப் போராட்ட வீரர், பொதுவுடைமைப் போராளி, இதழாளர், எழுத்தாளர், நகைச்சுவைப் பேச்சாளர், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் சமிதியின் தலைவர் என்று பல பரிமாணம் கொண்டவர். இந்திய விடுதலைக்கு முன்னும் பின்னும் 13 ஆண்டுகள் சிறையில் தனது வாழ்க்கையைக் கழித்த இவர், தனது 70 ஆண்டுகாலப் பொதுவாழ்வில் தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஊர்களுக்குச் சென்று பொதுக்கூட்டங்கள், திருமண விழாக்கள் உள்ளிட்ட பல்வேறு கூட்டங்களின் வழியாகப் பொதுவுடமைக் கருத்துகளைப் பரப்பி வந்தவர்.
கோலி (Holi) அல்லது ஹோலி அல்லது அரங்கபஞ்சமி என்று அழைக்கப்படும் பண்டிகை இந்து மதத்தின் பிரபலமான இளவேனிற்காலப் பண்டிகையாகும். இந்தப் பண்டிகை இந்தியா, நேபாளம், வங்கதேசம், போன்ற நாடுகளிலும் சுரிநாம், கயானா, தென்னாப்பிரிக்கா, திரினிதாத், இங்கிலாந்து, மொரீசியசு மற்றும் பிஜி போன்ற இந்து மக்கள் பரவலாக வாழும் நாடுகளிலும் விரிவாகக் கொண்டாடப்படுகின்றது. இந்தியாவின் மேற்கு வங்காளம், வங்கதேசம் ஆகிய பகுதிகளில் தோல்யாத்திரை (தௌல் ஜாத்ரா) அல்லது வசந்த-உற்சவம் ("வசந்தகாலத் திருவிழா") என அழைக்கப்படுகின்றது.
பெரியபுராணம் (Periya Puranam) அல்லது திருத்தொண்டர் புராணம் (Tiruththontarpuranam) என்பது சேக்கிழார் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாகக் கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் காப்பிய தலைவராகக் கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் சேக்கிழார் விவரிக்கிறார்.
பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவும் உண்டு. அறம், பொருள், இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்களில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன. உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற பிரிவின் கீழ் வருவன.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MNREGA)) அல்லது என்பது இந்திய அரசு கொண்டுவந்த வேலை உறுதியளிப்புத் திட்டம் ஆகும். இச் சட்டம் 25.05.2005 முதல் அமலாக்கப்பட்டது. முதலில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட இது 2009 காந்தியடிகள் பிறந்த நாளன்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என்று பெயர் மாற்றப்பட்டது.
தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்
இப்பட்டியல் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் அதிகபட்சமாக நடித்த குறிப்பிடத்தக்க நடிகைகளின் பட்டியல் ஆகும். தமிழ்த் திரையுலகில் 10 & 10 ஆண்டுகளுக்கு இரசிகர்களால் கொண்டாடப்பட்ட முன்னணி நடிகைகளின் புகைப்படங்கள் கீழ்வருமாறு உள்ளது.
சிவனின் 108 திருநாமங்கள் அல்லது சிவாஷ்டோத்தர சத நாமாவளி என்பது சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமானின் பெயர்களை கூறி போற்றும் தோத்திரப் பாடலாகும். இப்பாடல்களில் சிவபெருமானின் நூற்றியெட்டுப் பெயர்கள் கூறப்பெற்றுள்ளன. சமஸ்கிருதத்தில் நம என்றும், தமிழில் போற்றி என்றும் சிவபெருமானின் பெயருக்குப் பின் இணைத்து பாடப்பெறுகிறது.
2026 பீஃபா உலகக்கோப்பை (2026 FIFA World Cup) என்பது பன்னாட்டுக் கால்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பின் (பீஃபா) உறுப்பு சங்கங்களின் தேசிய அணிகளால் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் பன்னாட்டு ஆண்கள் கால்பந்து வாகையும், 23-ஆவது பீஃபா உலகக் கோப்பைப் போட்டியுமாகும். இப் போட்டிகள் 2026 சூன் 11 முதல் சூலை 19 வரை நடைபெறும். ஐக்கிய அமெரிக்காவில் பதினொரு நகரங்களிலும், மெக்சிக்கோவில் மூன்று நகரங்களிலும், கனடாவில் இரண்டு நகரங்களிலுமாக மொத்தம் பதினாறு நகரங்களால் கூட்டாக நடத்தப்படுகிறது.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்: பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தமிழ்நாட்டில், தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற ஒரு சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான தமிழர் கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியக் கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.