The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
எக்ஸ் வீடியோஸ் (X Videos) என்பது 2018 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் கணினி வழி குற்றப் பரபரப்பூட்டும் நாடகத் திரைப்படமாகும். இப்படத்தில் சஜோ சுந்தர் இயக்குநராக அறிமுகமானார். உண்மை வாழ்வில் நடந்த மறைக்கப்பட்ட ஒளிப்படமி ஆபாச பட வழக்கு நிகழ்வுகளால் ஈர்க்கப்பட்ட இப்படம், இதுகுறித்த சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், இத்தகைய இழிவான செயல்களுக்கு எதிராகவும் எச்சரிக்கை விடுக்கிறது.
XXXX (நான்கு-எக்ஸ் என உச்சரிக்கப்படுகிறது) என்பது இன்றைய சப்பானிய நிறுவனமான கிரினின் ஒரு பிரிவாக உள்ள, குயின்ஸ்லாந்து மதுபானத் தயாரிப்பாளர்களான கேஸில்மெய்ன் பெர்கின்ஸ் நிறுவனத்தால், பிரிஸ்பேனின் மில்டனில் தயாரிக்கப்படும் ஓர் ஆஸ்திரேலியப் பீர் ஆகும். இது குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பரவலான பிரபலத்தைப் பெற்றுள்ளது. அங்கு மது அருந்தகங்களில் இது பொதுவாகக் குழாய் வழியாக வழங்கப்படுகிறது.
ரமேசுபாபு பிரக்ஞானந்தா (Rameshbabu "Pragg" Praggnanandhaa, பிறப்பு: 10 ஆகத்து 2005) இந்தியத் தமிழ் சதுரங்க பேராதன் (கிராண்ட்மாசுட்டர்) ஆவார். சென்னையில் பிறந்த சதுரங்க வீரரான இவர் அபிமன்யூ மிசுரா, செர்கே கரியாக்கின், குகேஷ், சவாகிர் சிந்தாரொவ் ஆகியோருக்குப் பின்னர் பேராதன் பட்டத்தை வென்ற ஐந்தாவது-வயதில் இளையவர் ஆவார். 2023 சதுரங்க உலகக் கோப்பையில் இரண்டாவதாக வந்தார்.
தமிழ்நாடு அமைச்சரவை (Tamil Nadu Council of Ministers) என்பது தமிழ் நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு ஆகும். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார்.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) கவிஞரும், எழுத்தாளரும், இதழாசிரியரும், விடுதலைப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியுமாவார். கவிதையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு "பாரதி" என்ற பட்டம் வழங்கப்பட்டது. நவீன தமிழ்க் கவிஞர்களின் முன்னோடியாகத் திகழ்ந்த இவர், தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்
இத்தனிமங்களின் பட்டியல், பெயர்வாரியாக அமைத்த பட்டியல். தனிமத்தின் வகையைப் பொருத்து நிறம் காட்டப்பட்டுள்ளது. தனிமங்களின் குறியெழுத்து, அணுவெண் அணுப் பொருண்மை, நிலையான மாற்றுரு, நெடுங்குழு எண், கிடைவரிசை எண் முதலிய குறிக்கபட்டுள்ளன.
இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்
செபி (SEBI) செபி என்றால் என்ன என்று பரவலாக அறியப்படும் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (Securities and Exchange Board of India) இந்தியாவில் பங்குச் சந்தைகள், நிதிச் சந்தைகள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் கட்டுப்பாட்டு அமைப்பு. மும்பை நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இவ்வமைப்பு 1988ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
சலீம் குமார் (Salim Kumar, 10 அக்டோபர் 1969 – 6 சூன் 2026) என்பவர் இந்திய நடிகரும், நகைச்சுவை நடிகரும், இயக்குநரும், மலையாளத் திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். பெரும்பாலும் நகைச்சுவைக் கதாபாத்திரங்களுக்குப் பெயர் பெற்ற சலீம் குமார், மலையாளத் திரைப்பட வரலாற்றில் சிறந்தவராகவும் மிக முக்கியமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவராகவராகவும் கருதப்படுகிறார். தனது பிற்கால வாழ்க்கையில், குணச்சித்திர வேடங்களில் நடிப்பதில் வெற்றி கண்டார்.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
ஆதவ் அர்ஜுனா ("Aadhav Arjuna") என்பவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும் தேர்தல் வியூக வகுப்பாளரும் விளையாட்டுத்துறை நிர்வாகியுமாவார். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளராகவுள்ளார்.திமுகவிற்குத் தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்தார். 2023-இல் திருச்சியில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டில் கலந்து கொண்டு அக்கட்சியில் இணைந்து துணைப் பொதுச்செயலாளரானார்.
தமிழ் (Tamil language), தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் அல்லது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) என்பது தமிழ்நாட்டின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் உரிமைத் தொகையாக 1000 இந்திய ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் தமிழ்நாடு அரசுத் திட்டமாகும். இத்திட்டத்தை தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி நினைவாகப் பெயரிட்டுள்ளனர்.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
உலக அளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6,000-இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
திருக்குறள் (Tirukkural), சுருக்கமாக குறள் (Kural), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று தொகுப்புகளைக் கொண்டது.
ஒரு மெய் எழுத்துடன் ஓர் உயிர் எழுத்து சேர்ந்து பிறக்கக்கூடிய எழுத்து உயிர்மெய் எழுத்து ஆகும். எடுத்துக்காட்டு: 'க்' என்னும் மெய்யும் 'அ' என்னும் உயிரும் சேர்வதால் 'க' என்னும் உயிர்மெய் பிறக்கின்றது. இவ்வாறு பன்னிரண்டு உயிர் எழுத்துக்களும் பதினெட்டு மெய் எழுத்துக்களுடன் சேர்வதால் (18 X 12) 216 உயிர் மெய் எழுத்துக்கள் பிறக்கின்றன.
வகுப்பறை என்பது பாடசாலைகள் போன்ற கல்வி நிறுவனங்களில், கற்றல் மற்றும் கற்பித்தல் ஆகிய செயல்கள் நடைபெறும் அறைகளைக் குறிக்கும். மாணவர்கள் கல்வி கற்பதற்கான சூழ்நிலையை உருவாக்குவதே வகுப்பறை அமைப்பின் முக்கிய நோக்கமாகும். பொதுவாக, உகந்த தளவாடப் பரவமைப்புக்கான (layout) இடவசதி, சிறந்த உள்ளக ஒலிப் பண்பு, ஆசிரியர் கற்பிப்பதைத் தெளிவாகப் பார்க்கக்கூடிய வடிவமைப்பு, பொருத்தமான ஒளியமைப்பு என்பன வகுப்பறைகளில் இருக்கவேண்டிய சில முக்கிய அம்சங்களாகும்.
தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின் தென் முனையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படும் இம்மாநிலமானது, பரப்பளவில் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாக மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது. உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பேசும் தமிழர் வாழும் பகுதியே தமிழ்நாடு என அழைக்கப்படுகிறது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026 (2026 Tamil Nadu Legislative Assembly election) தமிழ்நாடு சட்டமன்றத்தின் 234 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் ஆகும். 2026 ஏப்ரல் 23-ஆம் நாளன்று வாக்குப்பதிவு நடந்தது. மே 4 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின.
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், (List of Chief Ministers of Tamil Nadu) என்பது முழுமையான நிலையில், தமிழ்நாட்டின் 1920ஆம் ஆண்டு முதலான வரலாற்றிலிருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.
சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்
சிறுவாபுரி பாலசுப்பிரமணியம் கோயில் (Siruvapuri Sri Balasubrahmanyam temple) தமிழ்நாட்டின் சென்னைக்கு அருகிலுள்ள் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சின்னம்பேடு பகுதியில் அமைந்துள்ளது.சிறுவாபுரி முருகன் கோவில் என்றும் அறியப்படும் இத்திருக்கோயில் 500 ஆண்டுகள் பழமையானதாகும். கிராம மக்கள் சேர்ந்து இக்கோயிலை கட்டியுள்ளனர். அரசாங்க பதிவுகளில் கோயிலின் அசல் பெயர் சின்னம்பேடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தனிம அட்டவணை என்பது வேதியியற் தனிமங்களின் அணு எண், எதிர்மின்னி அமைப்பு, மற்றும் மீண்டும் மீண்டும் வரும் வேதியற் பண்புகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தனிமங்களின் அட்டவணை மூலமான காட்சிப்படுத்தலாகும். தனிமங்கள் அணு எண்ணுக்கமைய (நேர்மின்னிகளின் எண்ணிக்கை) ஏறுவரிசையில் அடுக்கப்பட்டிருக்கும். 1869 இல் திமீத்ரி மெண்டெலீவ் என்ற ரஷ்ய நாட்டு அறிஞர் இந்த அட்டவணையைக் கண்டுபிடித்தார்.
வன்னி அரசு (Vanni Arasu) இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் சமூகநீதித் துறை அமைச்சராகவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராகவும் உள்ளார். இவர் 2026-ஆம் ஆண்டு தமிழகச் சட்டசபைக்கான தேர்தலில் திண்டிவனம் தொகுதியிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்
விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
சவுக்கு சங்கர் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் விமர்சகரும், ஊடகவியலாளரும் ஆவார். அரசியல், சமூக மட்டத்தில் ஏற்படும் பல்வேறு சம்பவங்களைப் பொதுவெளிக்குக் கொண்டுவந்து விவாதப் பொருளாக்கியுள்ளார். சவுக்கு டாட் நெட், சவுக்கு ஆன்லைன் உள்ளிட்ட தளங்களை நடத்திப் பின்னர் சவுக்கு மீடியா என்கிற ஊடகத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார்.
இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்
குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப்பெயர் குறிக்கிறது.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
தமிழ்த்தாய் வாழ்த்து (Tamil Thaai Vaalthu) என்பது இந்திய மாநில அரசுகளுள் தமிழை ஆட்சி மொழியாய் கொண்டுள்ளவற்றில் பாடப்பெறும் வாழ்த்துப் பாடலாகும். இது தமிழ்த் தாயை வாழ்த்தி வணக்கம் செலுத்துவதாக அமையும். இப்பாடல் அரசு விழாக்கள், பள்ளிகளின் காலை இறைவணக்கக் கூட்டம் முதலான நிகழ்வுகளின் தொடக்கத்தில் பாடப்படுகிறது.
கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981), புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
பத்துப்பாட்டு (Ten Idylls) என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது.
நாம் தமிழர் கட்சி தமிழ்த் தேசிய, ஈழப் போராட்ட ஆதரவு உடைய, தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் செயல்படும் ஓர் அரசியல் கட்சியாகும். . இந்தக் கட்சி 2010 மே 18 அன்று சீமானால் தொடங்கப்பட்டது. தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் சி.பா.ஆதித்தனார் நடத்தி வந்த "நாம் தமிழர் இயக்கத்தின்" தொடர்ச்சியே சீமானால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி என அறியப்படுகிறது.
சிவனின் 108 திருநாமங்கள் அல்லது சிவாஷ்டோத்தர சத நாமாவளி என்பது சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமானின் பெயர்களை கூறி போற்றும் தோத்திரப் பாடலாகும். இப்பாடல்களில் சிவபெருமானின் நூற்றியெட்டுப் பெயர்கள் கூறப்பெற்றுள்ளன. சமஸ்கிருதத்தில் நம என்றும், தமிழில் போற்றி என்றும் சிவபெருமானின் பெயருக்குப் பின் இணைத்து பாடப்பெறுகிறது.
முருகன் (Murugan) அல்லது கார்த்திகேயன் (Kartikeya) என்பவர் இந்து கடவுளர்களான சிவன்- பார்வதி தம்பதிக்கு மகனாவார். முருகன் இந்திய துணைக்கண்டத்தில் பண்டைய காலம் தொட்டு வணங்கப்படும் ஒரு முக்கிய தெய்வமாக இருந்து வருகிறார். இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார்.
தனிமங்களின் எண் பட்டியல் என்பது தனிமங்களின் அணு எண் அடிப்படையில் வரிசைப் படுத்தப்பட்ட ஒரு வேதியியல் பொருட் பட்டியல். தனிமத்தைன் வகைக்கு ஏற்றார்போல நிறவேறுபாடு காட்டப்பட்டுள்ளது. இப்பட்டியலில் தனிமத்தின் அணு எண், தனிமத்தின் குறியெழுத்து, தனிமம் சேர்ந்த நெடுங்குழு, கிடைவரிசை, அணுப் பொருண்மை, நிலையான் மாறுரு, அடர்த்தி, உருகுநிலை, கொதிநிலை, கண்டுபிடித்தோர் பெயர் அகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்
இந்தியாவில் 28 மாநிலங்களும், தில்லி தேசிய தலைநகரப் பகுதி உள்ளிட்ட 8 நடுவண் அரசின் ஆட்சிப்பகுதிகளும் உள்ளன. அனைத்து மாநிலங்களிலும் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் பாண்டிச்சேரி, சம்மு காசுமீர், தில்லி தலைநகரப் பகுதி ஆகியவற்றிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் உள்ளன. ஏனைய ஒன்றியப் பகுதிகள் இந்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர்களைக் கொண்ட, குடியரசுத் தலைவரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளாகும்.
கேரளா மாநில குலுக்கல் பரிசுச் சீட்டு
கேரள மாநில குலுக்கல் பரிசுச் சீட்டு (Kerala State Lotteries) என்பது கேரள அரசால் நடத்தப்படும் ஒரு குலுக்கல் பரிசுச் சீட்டுத் திட்டமாகும். 1967 ஆம் ஆண்டில் கேரள அரசின் குலுக்கல் பரிசுச் சீட்டுத் துறையின் கீழ் நிறுவப்பட்டது. இது போன்ற குலுக்கல் பரிசு வழங்குவது இந்தியாவில் முதல் முறையாகும்.
தாவூத் இப்ராகிம் (உருது: داؤد ابراہیم) டி-கம்பெனி என்ற மும்பையில் அமைந்த குற்றவாளி அமைப்பின் தலைவர் ஆவார்.இன்டர்போலின் குற்றவாளிகளின் பட்டியலில் கடுமையாகத் தேடப்படுவர்களில் ஒருவராக உள்ளார். 1993 மும்பை குண்டுவெடிப்புகளை இவர் திட்டமிட்டு ஒழுங்குபடுத்தி அதற்கு நிதியுதவி செய்துள்ளார். 2003இல் அமெரிக்க அரசு இவரை "உலகத் தீவிரவாதி" என்று குறித்து இவரின் பணம், சொத்துகளை தடை செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகளுக்கு கோரிக்கை செய்துள்ளது.
இளையராஜா (Ilaiyaraaja, பிறப்பு: 2 சூன் 1943), இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர் ஆவார். இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976-இல் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
ஆபாசத் திரைப்படம் அல்லது பாலியல் திரைப்படம் (Pornographic film) என்பது பாலியல் ரீதியான விசயங்களை முன்வைத்து பார்வையாளர்களை புணர்ச்சிப் பரவசநிலைக்கு தூண்டுவதற்காக உருவாக்கப்படும் ஒரு திரைப்பட வகை ஆகும். ஆபாசத் திரைப்படங்கள் பாலியல் கற்பனைகளை முன்வைக்கின்றன. பொதுவாக நிர்வாணம் மற்றும் பாலியல் பாலுறவு போன்ற சிற்றின்பத் தூண்டுதல்களை உள்ளடக்குகின்றன.
திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்
திருவிடைமருதூர் மகாலிங்கேசுவரர் திருக்கோயில் (Thiruvidaimarudur Mahalingeswarar Temple), சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் காவிரி கரையில் அமைந்துள்ள 30-ஆவது சிவத்தலமாகும். மேலும் இது திருவாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தலங்களுள் ஒன்றாகும். இத்தலம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்.
பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவும் உண்டு. அறம், பொருள், இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்களில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன. உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற பிரிவின் கீழ் வருவன.
தமிழ் இலக்கியத்தில் சிற்றிலக்கியம் என்பது தெய்வங்களையும், தமிழ்ப் பெரியோர்களையும் குழந்தையாகக் கருதி, அவர்களைப் புகழ்ந்து பாடுவதாகும். சிற்றிலக்கியத்தின் இலக்கணம்: சிற்றிலக்கியம் பாடல் எண்ணிக்கை அல்லது அடிகளின் எண்ணிக்கை அளவில் சுருங்கியதாக அமைவது. அகப்பொருள், அல்லது புறப்பொருளில் ஏதேனும் ஒரு துறையைப் பற்றியதாக அமையும்.
மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்
தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள். அந்த வரிசையில் மொத்தம் 274 சிவ ஸ்தலங்கள் உள்ளன. அவைகளில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும், மற்ற கோயில்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் சில மற்ற இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ளன.
உலகப் பெருங்கடல்கள் நாள் (World Oceans Day) எனும் இந்நாளை ஆண்டுதோறும் உலக நாடுகள் முழுவதும் சூன் 8 ஆம் நாளன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிகழ்வை, 1992 ஆம் ஆண்டில் பிரேசிலின், இரியோ டி செனீரோ நகரில் இடம்பெற்ற பூமி உச்சி மாநாட்டில், முதன் முறையாக கனடா இந்நிகழ்வுக்கான கோரிக்கையை முன்வைத்ததை அடுத்து, இது அதிகாரபூர்வமற்ற வகையில் உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வந்தது. பின்னாளில், ஐக்கிய நாடுகள் அவை 2008 ஆம் ஆண்டில் இந்நிகழ்வை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து அறிக்கை வெளியிட்டது.
தமிழ் ராக்கர்ஸ், தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களை சட்டத்திற்குப் புறம்பாக இணையத்தில் பகிரும், ஒரு இணையத்தளம் ஆகும். இது பிட்டொரென்ட் வகையை சேர்ந்ததாகும். இது தனக்கென ஒரு வழங்கி ஒன்றை வைத்துகொள்ளாமல், பயனர்களின் கணணிகளை வழங்கி (Peer to Peer) ஆக மாற்றி பயன்படுத்தும்.
காமராசர் (Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975), இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் அரசியல்வாதிகளில் ஒருவருமாவார். இவர் 13 ஏப்ரல் 1954 முதல் 2 அக்டோபர் 1963 வரை ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். 1964 முதல் 1967 வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார்.
சுகன்யா (Sukanya பிறப்பு: 25 நவம்பர் 1972) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் 90களில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்த முன்னணி பெரிய நடிகையாவார். இவரை 90களில் வட இந்திய நடிகையான மீனாட்சி சேஷாத்ரியின் முகசாயலில் இருந்ததால் இவரை தென்னிந்திய மீனாட்சி சேஷாத்ரி என்று சுகன்யாவை தமிழ் திரைப்பட ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
சுந்தர புருஷன் (1996 திரைப்படம்)
சுந்தர புருஷன் (Sundara Purushan) 1996 ஆம் ஆண்டு லிவிங்ஸ்டன் மற்றும் ரம்பா நடிப்பில் வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படம். கட்டாயப்படுத்தித் திருமணங்கள் செய்யும் வழக்கத்தைச் சாடும் கதைக்களம் ஆகும் லிவிங்ஸ்டன் கதை மற்றும் திரைக்கதை எழுதி உள்ளார். ஒளிப்பதிவாளர் ஆர்தர்.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்: பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற ஒரு சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான தமிழர் கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியக் கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
வெளிச்சம் தொலைக்காட்சி (Velicham TV) என்பது இந்தியாவின் தமிழ்நாடு, சென்னையை மையமாகக் கொண்ட தமிழ் தொலைக்காட்சி அலைவரிசையாகும். இது 14 ஏப்ரல் 2016 அன்று தொடங்கப்பட்டது. தொடக்க விழாவில் தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ, இந்தியப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர்கள் முத்தரசன், ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
வைசாலி இரமேசுபாபு (Vaishali Rameshbabu, பிறப்பு: 21 சூன் 2001) இந்திய சதுரங்க பேராதன் (கிராண்ட்மாசுடர்) ஆவார். வைசாலியும் இவரது தம்பி பிரக்ஞானந்தாவும் பேராதன் பட்டத்தைப் பெற்ற முதல் உடன்பிறப்புகள் ஆவர். அத்துடன், உலக சதுரங்க வாகைக்கான வேட்பாளர் போட்டி ஒன்றுக்குத் தகுதி பெற்ற முதல் உடன்பிறப்புகளும் இவர்களே.
பிறப்பொலியியலில் (articulatory phonetics), மெய்யொலி (Consonant) என்பது, பேச்சு மொழியின் ஒரு ஒலிவகை ஆகும். நெஞ்சிலிருந்து வரும் காற்று வாய்ப்பகுதியில் தற்காலிகமாகத் தடைப்பட்டு வெளியேறும்போது மெய்யொலிகள் உருவாகின்றன. மெய்யொலிகள், அடைப்பொலி, மூக்கொலி, உரசொலி, மருங்கொலி, ஆடொலி, வருடொலி, தொடரொலி எனப் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்
இப்பட்டியல் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் அதிகபட்சமாக நடித்த குறிப்பிடத்தக்க நடிகைகளின் பட்டியல் ஆகும். தமிழ்த் திரையுலகில் 10 & 10 ஆண்டுகளுக்கு இரசிகர்களால் கொண்டாடப்பட்ட முன்னணி நடிகைகளின் புகைப்படங்கள் கீழ்வருமாறு உள்ளது.
தமிழ்நாடு ஆளுநர்களின் பட்டியல்
தமிழக ஆளுநர் -தமிழக ஆளுநர்களின் பட்டியல் தென்னிந்தியாவின் மாநிலமான, தமிழ்நாடு மாநிலத்தில், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பெற்ற ஆளுநர் தமிழகத்தின் அரசயலமைப்புத் தலைவராக அவரின் பிரதிநிதியாக செயல்படுபவர். இவரே மாநிலத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பவர். தமிழகத்தைப் பொறுத்தவரை ஆளுநர்கள் 1946ல் இருந்தே நியமனம் செய்யப்பட்டவர்களாகவும், தற்காலிகப் பொறுப்புகளுடனும் பதவி வகித்து வந்துள்ளனர்.
தெய்வத்திருமகள் (2011 திரைப்படம்)
தெய்வத்திருமகள் (Deiva Thirumagal) என்பது 2011ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இதை இயக்குநர் விஜயால் எழுதி இயக்க, எம். சிந்தாமணி மற்றும் ரோனி ஸ்க்ரூவாலா ஆகியோரால் தயாரிக்கப்பட்டது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (All India Anna Dravida Munnetra Kazhagam) (அஇஅதிமுக) என்பது தமிழ்நாடு மாநிலம் மற்றும் புதுச்சேரி ஒன்றியப் பகுதியில் உள்ள ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிரிந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ம. கோ.
கொட்டியூர் கோயில் (Kottiyoor Temple) என்பது கேரளத்தில் உள்ள ஒரு முக்கிய சிவன் கோயிலாகும். பழங்காலத்தில் இருந்து இக்கோயிலுக்கு பொதுவான பெயராக வடக்கேசுவரம் கோயில் என்று இருந்தது. ஆனால் உள்ளூர்வாசிகளில் சிலர் கொட்டியூர் கிராமத்திற்கு அருகிலுள்ள ஆற்றின் கரையில் இருப்பதால் கோயிலை இக்கரைக் கொட்டியூர் என்று அழைக்கின்றனர்: காரணம் ஆற்றின் மறுபுறம் உள்ள சன்னதியிலிருந்து இதை வேறுபடுத்துவதற்காக இவ்வாறு அழைக்கின்றனர்.
69 (69 (sex position)) என்பது இரு நபர்கள் தங்களின் பிறப்புறுப்புகள் அடுத்தவரின் வாயை நோக்கி இருக்குமாறு வைத்து உடலுறவு கொள்ளும் நிலையாகும். இந்த முறையில் இருவரும் தங்களை பரஸ்பரபரமாக எண் 6 மற்றும் 9 போல தங்களை தலைகீழாக்கிக் கொண்டு செயல்படுவதால் இந்த முறையை 69 என்று அழைக்கின்றார்கள். இந்த நிலையில் எந்த பாலினத்தவரும் இணைந்து செயல்பட முடிகிறது.
திவ்ய தேசங்கள் (Divya Desam) என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும்.