The most-visited English Wikipedia articles, updated daily. Learn more...
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
உலக அளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6,000-இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின் தென் முனையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படும் இம்மாநிலமானது, பரப்பளவில் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாக மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது. உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பேசும் தமிழர் வாழும் பகுதியே தமிழ்நாடு என அழைக்கப்படுகிறது.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) கவிஞரும், எழுத்தாளரும், இதழாசிரியரும், விடுதலைப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியுமாவார். கவிதையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு "பாரதி" என்ற பட்டம் வழங்கப்பட்டது. நவீன தமிழ்க் கவிஞர்களின் முன்னோடியாகத் திகழ்ந்த இவர், தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
அயோத்தி தாசர் (C. Iyothee Thass, மே 20, 1845 –மே 5, 1914) தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்புப் போராளி, சமூக சேவகர், தமிழறிஞர் மற்றும் சித்த மருத்துவர் ஆவார். திராவிட இயக்கம் உருவாக வித்திட்ட முன்னோடிகளில் முதன்மையானவர். ஆதி திராவிட பின்புலத்தில் இருந்து வந்த இவர், 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆதிதிராவிட மக்களின் முன்னேற்றத்துக்காக அரசியல், சமயம், இலக்கியம் ஆகிய களங்களில் தீவிரமாகச் செயல்பட்டார்.
குரு பூர்ணிமா, (ஆனி-ஆடி) மாதத்தில் (சூன்-சூலை) வரும் ழுழுநிலவு (பௌர்ணமி) நாள் அன்று, சீடர்கள் (மாணவர்கள்) தங்களுக்கு கல்வி அறிவு புகட்டிய குருவை (ஆசிரியரை) போற்றும் முகமாக குரு வழிபாடு எனும் குரு பூஜை செய்வார்கள். இதனை துறவிகள், வியாசபூசை என்றும் வியாச பூர்ணிமா என்றும் அழைப்பர். இவ்வழிபாட்டை வேத வேதாந்தக் கல்வி பயின்றவர்கள் தங்களது குருமார்களை நினைவு கூறும் வகையில் ஆடி மாதத்தில் வரும் முதல் பௌர்ணமி அன்று சிறப்பாக குரு பூஜை செய்வது மரபு.
தனுஷ் (Dhanush, பிறப்பு: 28 சூலை 1983) என்பவர் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்படப் பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் 2002 ஆம் ஆண்டு முதல் திருடா திருடி (2003), சுள்ளான் (2004), புதுப்பேட்டை (2006), பொல்லாதவன் (2007), ஆடுகளம் (2011), 3 (2012), வேலையில்லா பட்டதாரி (2014), மாரி (2015), அசுரன் (2019) போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள, தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். ராஞ்சனா (2013) போன்ற இந்தித் திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
காதல் சுகமானது (Kadhal Sugamanathu) 2002 இல் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். பாலசேகரனின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தருண், சினேகா மற்றும் பலர் நடித்திருந்தனர். லவ் டுடே, பூமகள் ஊர்வலம், அற்புதம் போன்ற படங்களின் இசையமைப்பாளர் சிவா இப்படத்தின் பாடல்களுக்கு இசையமைத்தார்.
திருக்குறள் (Tirukkural), சுருக்கமாக குறள் (Kural), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று தொகுப்புகளைக் கொண்டது.
தமிழ்த்தாய் வாழ்த்து (Tamil Thaai Vaalthu) என்பது இந்திய மாநில அரசுகளுள் தமிழை ஆட்சி மொழியாய் கொண்டுள்ளவற்றில் பாடப்பெறும் வாழ்த்துப் பாடலாகும். இது தமிழ்த் தாயை வாழ்த்தி வணக்கம் செலுத்துவதாக அமையும். இப்பாடல் அரசு விழாக்கள், பள்ளிகளின் காலை இறைவணக்கக் கூட்டம் முதலான நிகழ்வுகளின் தொடக்கத்தில் பாடப்படுகிறது.
திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயில்
திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயில் என்பது திருவண்ணாமலை கிரிவலம் பாதையில் அமைந்துள்ள கோயிலாகும். இந்தக் கோவில் குபேரன் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது. இடுக்கு பிள்ளையார் கோயில் என அழைக்கப்பட்டாலும் விநாயகர் சிலை இக்கோயிலில் இல்லை.
காமராசர் (Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975), இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், அரசியல்வாதிகளில் ஒருவருமாவார். இவர் 13 ஏப்ரல் 1954 முதல் 2 அக்டோபர் 1963 வரை ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். 1964 முதல் 1967 வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார்.
கட்டா குஸ்தி 2 என்பது 2026 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் மொழி, விளையாட்டு, நகைச்சுவை நாடகம் கலந்த செல்ல அய்யாவு அவர்கள் இயக்கிய திரைப்படமாகும். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மற்றும் ஐ.வி.ஒயி.என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் மூலம் ஐசரி கணேஷ், விஷ்ணு விஷால் மற்றும் இஷான் சக்சேனா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இத்திரைப்படம், கட்டா குஸ்தி (2022) படத்தின் தொடர்ச்சியாக, விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா இலட்சுமி சிறந்த நடிப்பில் கருணாஸ், முனீஷ்காந்த் ராமதாஸ் மற்றும் காளி வெங்கட் துணை வேடங்களில் நடிக்கின்றனர்.
நா.பார்த்தசாரதி (Na. Parthasarathy, டிசம்பர் 18, 1932 - டிசம்பர் 13, 1987) புகழ் பெற்ற தமிழ் நெடுங்கதை எழுத்தாளர் ஆவார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் அல்லது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) என்பது தமிழ்நாட்டின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் உரிமைத் தொகையாக 1000 இந்திய ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் தமிழ்நாடு அரசுத் திட்டமாகும். இத்திட்டத்தை தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி நினைவாகப் பெயரிட்டுள்ளனர்.
இசுலாம் (இஸ்லாம் , அரபு: الإسلام; al-'islām, Islam) என்பது ஓரிறைக் கொள்கையைக் கொண்ட ஓர் ஆபிரகாமிய மதமாகும். உலகம் முழுவதும் 1.907 பில்லியன் (190 கோடி மற்றும் எழுபது லட்சத்திற்கும் மேலான) மக்கள் இம்மதத்தைப் பின்பற்றுகிறார்கள். இது உலகின் மொத்த மக்கள் தொகையில் 24.9 சதவீதமாகும், அதாவது கிட்டத்தட்ட மனித சமுதாயத்தில் நான்கில் ஒருவர்.
கேரள மாநிலக் குலுக்கல் பரிசுச் சீட்டு
கேரள மாநில குலுக்கல் பரிசுச் சீட்டு (Kerala State Lotteries) என்பது கேரள அரசால் நடத்தப்படும் ஒரு குலுக்கல் பரிசுச் சீட்டுத் திட்டமாகும். 1967 ஆம் ஆண்டில் கேரள அரசின் குலுக்கல் பரிசுச் சீட்டுத் துறையின் கீழ் நிறுவப்பட்டது. இது போன்ற குலுக்கல் பரிசு வழங்குவது இந்தியாவில் முதல் முறையாகும்.
சாமந்தி (தொலைக்காட்சித் தொடர்)
சாமந்தி என்பது ஜீ தமிழில்யில் சூலை 20, 2026 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 11:30 மணிக்கு ஒளிபரப்பான குடும்பம் சார்ந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரில் வர்ஷினி அர்சா, காயத்ரி ராஜ், வசந்குமார் மற்றும் ராஜ்குமார் மானோகரன் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த தொடர் ஏப்ரல் 3, 2021 முதல் 414 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.
விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்
விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
தமிழ் (Tamil language), தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
சிவனின் 108 திருநாமங்கள் அல்லது சிவாஷ்டோத்தர சத நாமாவளி என்பது சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமானின் பெயர்களை கூறி போற்றும் தோத்திரப் பாடலாகும். இப்பாடல்களில் சிவபெருமானின் நூற்றியெட்டுப் பெயர்கள் கூறப்பெற்றுள்ளன. சமஸ்கிருதத்தில் நம என்றும், தமிழில் போற்றி என்றும் சிவபெருமானின் பெயருக்குப் பின் இணைத்து பாடப்பெறுகிறது.
மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்
தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள். அந்த வரிசையில் மொத்தம் 274 சிவ ஸ்தலங்கள் உள்ளன. அவைகளில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும், மற்ற கோயில்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் சில மற்ற இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ளன.
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், (List of Chief Ministers of Tamil Nadu) என்பது முழுமையான நிலையில், தமிழ்நாட்டின் 1920ஆம் ஆண்டு முதலான வரலாற்றிலிருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.
சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்
சிறுவாபுரி பாலசுப்பிரமணியம் கோயில் (Siruvapuri Sri Balasubrahmanyam temple) தமிழ்நாட்டின் சென்னைக்கு அருகிலுள்ள் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சின்னம்பேடு பகுதியில் அமைந்துள்ளது. சிறுவாபுரி முருகன் கோவில் என்றும் அறியப்படும் இத்திருக்கோயில் 500 ஆண்டுகள் பழமையானதாகும். கிராம மக்கள் சேர்ந்து இக்கோயிலை கட்டியுள்ளனர்.
சவுக்கு சங்கர் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் விமர்சகரும், ஊடகவியலாளரும் ஆவார். அரசியல், சமூக மட்டத்தில் ஏற்படும் பல்வேறு சம்பவங்களைப் பொதுவெளிக்குக் கொண்டுவந்து விவாதப் பொருளாக்கியுள்ளார். சவுக்கு டாட் நெட், சவுக்கு ஆன்லைன் உள்ளிட்ட தளங்களை நடத்திப் பின்னர் சவுக்கு மீடியா என்கிற ஊடகத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார்.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981), புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
சங்கரன்கோவில் (Sankarankovil), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தில் இருக்கும் ஒரு முதல் நிலை நகராட்சி ஆகும். தென்காசி மாவட்டத்தில் தென்காசிக்கு அடுத்தபடியாக மாவட்டத்தின் முக்கியமான நகரங்களில் ஒன்றாக சங்கரன்கோவில் உள்ளது. சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில் இங்கு பிரசித்தி பெற்றது.
இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்
குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப்பெயர் குறிக்கிறது.
மின் தடை (electrical resistance) என்பது, ஒரு மின்கடத்தியின் ஒரு புள்ளியில் இருந்து அதன் மறு புள்ளியை மின்னோட்டம் அடையும் போது இடையில் ஏற்படும் மின் சேதாரம் ஆகும். இவை மின் கடத்தியின் நீளம் அதன் பருமன் மற்றும் இந்த இரு புள்ளிகளுக்கும் இடையில் ஏற்படும் பிற மின் தடையி போன்றவற்றினால் ஏற்படும் மின் சேதாரத்தை (Ω) ஓமின் விதிப்படி ஓம் என்ற அலகில் அளக்கபடுகின்றன. உதாரணம்: மின்னழுத்தத்தின் அளவு, மின் கடத்தியின் நீளம் மற்றும் பருமன், இரண்டு புள்ளிக்கும் இடையில் ஏற்படும் மின் கடத்த கூடிய கம்பிகள் இணைப்பு, ஒழுங்கற்ற இணைப்பு, வெப்பம், மற்றும் ஈரலிப்பான மரங்கள் மின் கடத்தியில் உராய்வு போன்றவற்றினால் மின் சேதாரம் ஏற்படுகின்றன.
திவ்ய தேசங்கள் (Divya Desam) என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும்.
வாய்வழிப் பாலுறவு அல்லது வாய்வழிப் புணர்ச்சி (Oral sex) என்பது வாய், நாக்கு ஆகியவற்றைப் பயன்படுத்திப் பாலுறுப்புக்களைத் தூண்டும் பாலியற் செயற்பாடாகும். இது பாலுறவின் முன்போ அல்லது பின்போ பாலியற் செயற்பாடாகவோ அல்லது புணர்ச்சிப் பரவசநிலையை எய்துவதற்கான செயற்பாடாகவோ இருக்கலாம். பெண்குறியை நாவால் தூண்டல் என்பது பெண்ணுறுப்பில் செய்யப்படும் வாய்வழிப் புணர்ச்சி ஆகும், அதே வாய்வழிப் புணர்ச்சி என்பது ஆண்குறியில் செய்யப்படும் வாய்வழிப் புணர்ச்சி ஆகும்.
ஆப்கானித்தான் (ஆங்கிலம்: Afghanistan), அதிகாரப்பூர்வமாக ஆப்கானித்தான் இசுலாமிய அமீரகம் (ஆங்கிலம்: Islamic Emirate of Afghanistan), என்பது ஒரு நிலம்சூழ் நாடாகும். நடு மற்றும் தெற்கு ஆசியா இணையும் இடத்தில் இது அமைவிடத்தைப் பெற்றுள்ளது. இந்நாட்டுக்குக் கிழக்கு மற்றும் தெற்கே பாக்கித்தானும், மேற்கே ஈரானும், வடமேற்கே துருக்மெனிஸ்தானும், வடக்கே உசுப்பெக்கிசுத்தானும், வடகிழக்கே தஜிகிஸ்தானும், வடகிழக்கு மற்றும் கிழக்கே சீனாவும் எல்லைகளாக உள்ளன.
{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/கோனோகார்பஸ்|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} கோனோகார்பஸ் என்பது கோப்ரிடசீஸ் குடும்பத்தைச் சேர்ந்த வெப்பமண்டலப் பகுதிகளில் வளரும் இரண்டு இனங்களைக் கொண்ட ஒரு பூக்கும் தாவரப் பேரினமாகும். இந்த பேரினத் தாவரத்தில் ஒரு இனமானது அலையாத்தி பகுதியிலும் மற்றொன்றானது தென் செங்கடல் பகுதிகளிலும் வளர்கின்றன. ஒன்று முதல் இருபது மீட்டர் உயர அடந்த புதராக வளரக்கூடியது.
தமிழ்நாடு அமைச்சரவை (Tamil Nadu Council of Ministers) என்பது தமிழ்நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும், செயலாட்சியர்கள் அடங்கிய குழு ஆகும். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில், பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார்.
எக்ஸ் வீடியோஸ் (X Videos) என்பது 2018 ஆம் ஆண்டில் வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கணினி வழிக் குற்றம் தொடர்பான பரபரப்பூட்டும் இந்நாடகத் திரைப்படத்தில் சஜோ சுந்தர் இயக்குநராக அறிமுகமானார். உண்மை வாழ்வில் நடந்த மறைக்கப்பட்ட ஒளிப்படமி ஆபாசப் பட வழக்கு நிகழ்வுகளால் ஈர்க்கப்பட்ட இப்படம், இதுகுறித்த சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், இத்தகைய இழிவான செயல்களுக்கு எதிராகவும் எச்சரிக்கை விடுக்கிறது.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்: பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தமிழ்நாட்டில், தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற ஒரு சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான தமிழர் கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியக் கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
2027 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு
2027 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, இந்திய அரசு 16-ஆவது மக்கள்தொகைக் கணக்கெடுப்பை 1 அக்டோபர் 2026 மற்றும் 1 மார்ச் 2027 ஆகிய நாட்களில் துவக்க இருப்பதற்கான அரசாணையை 16 சூன் 2025 அன்று வெளியிட்டுள்ளது.2027-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் சிறப்பம்சம் சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்வதாகும். இதற்கு முன்னர் 1931-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் போது சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. 1941-ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் சாதி வாரி தரவுகள் எடுக்கப்பட்டாலும், அவை வெளியிடப்படவில்லை.
சாலை (road) என்பது நிலத்தின்மீது உள்ள இரு இடங்களை இணைக்கும் வழி அல்லது வழித்தடத்தினைக் குறிக்கின்றது. வாகனங்கள் செல்வது, மக்கள் நடப்பது என்ற வகைகளில் இதன் மீது போக்குவரத்து நடைபெறும். சாலைகளை அவை அமைக்கப்படும் விதங்களைப் பொறுத்து தார் சாலை, மண் சாலை எனவும்; அவற்றின் பயன்பாடு கருதி நெடுஞ் சாலை, பிரதான சாலை, இணைப்புச் சாலை, புறவழிச் சாலை எனவும் சில வகைகளாகப் பிரிக்கலாம்.
அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி சன்னதி
அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி சன்னதி,தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், மேலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அழகர்கோவில் ஊராட்சியில் அமைந்த அழகர் கோவில் வாசலிலில் உள்ள இராஜ கோபுரத்தின் கதவுகளில் அமைந்துள்ளது. அழகர் கோவிலின் காவல் தெய்வம் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி ஆவார். உருவம் இல்லாத கருப்பண்ணசாமியை ஆண்டிற்கு ஒரு ஒரு முறை மட்டும் ஆடி மாத பௌர்ணமி அன்று திறக்கப்படும்.
முருகன் (Murugan) அல்லது கார்த்திகேயன் (Kartikeya) என்பவர் இந்து கடவுளர்களான சிவன்- பார்வதி தம்பதிக்கு மகனாவார். முருகன் இந்திய துணைக்கண்டத்தில் பண்டைய காலம் தொட்டு வணங்கப்படும் ஒரு முக்கிய தெய்வமாக இருந்து வருகிறார். இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார்.
தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்
இப்பட்டியல் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் அதிகபட்சமாக நடித்த குறிப்பிடத்தக்க நடிகைகளின் பட்டியல் ஆகும். தமிழ்த் திரையுலகில் 10 & 10 ஆண்டுகளுக்கு இரசிகர்களால் கொண்டாடப்பட்ட முன்னணி நடிகைகளின் புகைப்படங்கள் கீழ்வருமாறு உள்ளது.
சுகன்ய சம்ரிதி திட்டம் (Sukanya Samriddhi Accounts) என்பது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதியன்று துவங்கப்பட்டது. இது பெண் குழந்தைகளின் உயர் கல்வி, திருமணம் போன்ற எதிர்கால திட்டங்களுக்கான சேமிப்புத் திட்டமாகும். இந்திய அரசின் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கான ஒரு சேமிப்பு திட்டமாக உருவாக்கப்பட்டது.
திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்
திருவிடைமருதூர் மகாலிங்கேசுவரர் திருக்கோயில் (Thiruvidaimarudur Mahalingeswarar Temple), சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் காவிரி கரையில் அமைந்துள்ள 30-ஆவது சிவத்தலமாகும். மேலும் இது திருவாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தலங்களுள் ஒன்றாகும். இத்தலம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்.
வியாசர் (Vyasa) மகா புராணங்கள் என்று அழைக்கப்பெறும் பதினெண் புராணங்களையும் எழுதியவராகவும், இதிகாசமான மகா பாரதத்தினை எழுதியவராகவும் அறியப்பெறுகிறார். இவர் வேதங்களை தொகுத்து வழங்கியதால் வேத வியாசர் என்றும் அழைக்கப்பெறுகிறார். பராசரர் - மச்சகந்தி இணையருக்கு கங்கை ஆற்றில் அமைந்த ஒரு தீவுத்திட்டில், கருத்தமேனியுடன் பிறந்ததால், கிருஷ்ண த்வைபாயனர் என்ற பெயராயிற்று.
உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில்
உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில் (Uthirakosamangai Temple) என்பது தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும். இங்கு மங்களேசுவரி உடனுறை மங்களேசுவரர் அருள்பாலிக்கிறார். இத்தலம் திருவாசகம் பாடல் பெற்ற தலம் எனும் பெருமைக்குரியது.
'வள்ளலார்' இராமலிங்க அடிகளார் (ஆங்கிலம்: Thiruvarutprakasa Vallalār Chidambaram Ramalingam, 5 அக்டோபர் 1823 – 30 சனவரி 1874) இந்திய நாட்டில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சைவ சமய ஆன்மீகவாதி ஆவார். "எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே" என்பதைக் குறிக்கும் வண்ணம், இவர் தோற்றுவித்த மார்க்கத்திற்கு "சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்க சங்கம்" என்று பெயரிட்டார். சைவ சமயத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்த வள்ளலாரைப் பழமைவாதிகள் கடுமையாக எதிர்த்தனர்.
உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள்
உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள் (World Nature Conservation Day) ஒவ்வோர் ஆண்டும் சூலை 28 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. உலகிலுள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் 1948ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. உலகத்தில் ஏற்பட்டிருக்கும் சூழல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், அதனால் ஏற்படும் சவால்களை உலகம் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.