The most-visited English Wikipedia articles, updated daily. Learn more...
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110 என்பது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளில் ஒன்று ஆகும். அரசியலமைப்பு சட்டத்தின் 208-வது பிரிவு 1-வது உட்பிரிவின்படி இயற்றப் பெற்றவை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகள் ஆகும். இதில் மொத்தம் 23 அத்தியாயங்கள், 292 விதிகள் உள்ளன.
ஓணம் அல்லது ஆவணி திருவோணம் என்பது இந்தியாவின், தென்தமிழகத்திலும், கேரள மாநிலத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்க திருவிழா ஆகும். மகாபலி சக்கரவர்த்தியின் செருக்கினை அடக்கிட, திருமால் வாமனராக அவதரித்து, பலிச்சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டதாகவும்; அதற்கு மகாபலி சக்கரவர்த்தி இசைவளித்தவுடன், முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்த வாமனர், மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து, அவரை அழிக்க முற்படும் நேரம், மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுதோறும் தன்னுடைய மக்களைக் காண தமக்கு அருள் செய்ய வேண்டும் என்று கோரியதை ஏற்று வாமனர் அருள் புரிந்தார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மக்களைக் காணவரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நாளை ஓணம் எனும் திருவோணத் திருநாளாகவும் கொண்டாடுகின்றனர்.
சௌகார் ஜானகி (Sowcar Janaki, 12 திசம்பர் 1931 – 21 ஆகத்து 2026) என்று பரவலாக அறியப்பட்ட சங்கரமாஞ்சி ஜானகி இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தெலுங்கு, தமிழ், மலையாளம் கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் பணியாற்றியதற்காகப் பெயர் பெற்றவர். ஏழு தலைமுறைகளுக்கும் மேலான தமது கலைப்பயணத்தில், ஜானகி ஏறத்தாழ 400 திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
உலக அளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6,000-இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்துத் திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
திருக்குறள் (Tirukkural), சுருக்கமாக குறள் (Kural), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று தொகுப்புகளைக் கொண்டது.
மீலாதுன் நபி ( அல்லது மிலாத்-உன்-நபி, ஆங்: Mawlid, அரபி: مَوْلِدُ النَبِيِّ mawlidu n-nabiyyi, “நபிகளின் பிறந்தநாள்” அல்லது mawlid an-nabī, சிலநேரங்களில் ميلاد , மீலாத் )என்பது இசுலாமிய நாட்காட்டியில் மூன்றாவது மாதமான ரபி உல் அவ்வல் மாதத்தில் வருகின்ற முகமது நபி அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுவதாகும். மௌலித் என்ற வசனம் உலகின்,எகிப்து போன்ற சில இடங்களில் உள்ள வரலாற்றுப் புகழ்மிக்க சூபி பெரியோர்களின் பிறந்த தினத்தைக் குறிக்கவும் உபயோகிக்கப்படுகின்றது.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) கவிஞரும், எழுத்தாளரும், இதழாசிரியரும், விடுதலைப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியுமாவார். கவிதையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு "பாரதி" என்ற பட்டம் வழங்கப்பட்டது. நவீன தமிழ்க் கவிஞர்களின் முன்னோடியாகத் திகழ்ந்த இவர், தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
சவுக்கு சங்கர் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் விமர்சகரும், ஊடகவியலாளரும் ஆவார். அரசியல், சமூக மட்டத்தில் ஏற்படும் பல்வேறு நிகழ்வுகளைப் பொதுவெளிக்குக் கொண்டுவந்து விவாதப் பொருளாக்கியுள்ளார். சவுக்கு டாட் நெட், சவுக்கு ஆன்லைன் உள்ளிட்ட தளங்களை நடத்திப் பின்னர் சவுக்கு மீடியா என்கிற ஊடகத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார்.
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath & Sons) என்பது 2026 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் நாடகத் திரைப்படமாகும். வெங்கீ அட்லூரி எழுதி இயக்கிய இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் தயாரித்தன. இப்படத்தில் சூர்யா , மமிதா பைஜு ஆகியோருடன் ராதிகா சரத்குமார், ரவீணா டாண்டன், நாசர், ஹர்ஷா செமுடு, பவானி ஸ்ரீ , சுனில் ரெட்டி ஆகியோர் நடித்துள்ளனர்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (Chief Minister's Comprehensive Health Insurance Scheme) என்பது தமிழ்நாட்டில் குடும்ப அட்டைதாரர்களுக்குத் தமிழக அரசு வழங்கியுள்ள காப்பீட்டுத் திட்டமாகும். இதில் உயிருக்கு ஆபத்தான 51 நோய்களுக்கு, ரூபாய் ஐந்து இலட்சம் வரையிலான உயர் மருத்துவ சிகிச்சைகளை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாகப் பெற வகை செய்கிறது. 2020 ஜூன் முதல் கொரோனா சிகிச்சைக்கான செலவும் இக்காப்பீட்டில் சேர்க்கப்பட்டு, தனியார் மருத்துவமனைகளுக்கான கட்டண விவரங்கள் வெளியிடப்பட்டன.
ஆதவ் அர்ஜுனா (Aadhav Arjuna, பிறப்பு: ஏப்ரல் 12, 1982) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும், தேர்தல் வியூக வகுப்பாளரும் விளையாட்டுத்துறை நிர்வாகியுமாவார். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளராகவுள்ளார். திமுகவிற்குத் தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்தார்.
காமராசர் (Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975), இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், அரசியல்வாதிகளில் ஒருவருமாவார். இவர் 13 ஏப்ரல் 1954 முதல் 2 அக்டோபர் 1963 வரை ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். 1964 முதல் 1967 வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார்.
தமிழ்நாடு அமைச்சரவை (Tamil Nadu Council of Ministers) என்பது தமிழ்நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும், செயலாட்சியர்கள் அடங்கிய குழு ஆகும். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில், பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார்.
தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின் தென் முனையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படும் இம்மாநிலமானது, பரப்பளவில் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாக மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது. உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பேசும் தமிழர் வாழும் பகுதியே தமிழ்நாடு என அழைக்கப்படுகிறது.
முகம்மது நபி அல்லது முகம்மது (Muḥammad, அரபி: محمد, பிறப்பு பொ.ஊ. 570, இறப்பு 8 சூன் பொ.ஊ. 632 கணிப்பு), (அராபியப் பெயர்: அபூ அல்-காசிம் முகம்மது இப்னு அப்தல்லா இப்னு அப்தல்-முத்தலிப் இப்னு ஹாசிம் - 'Abū al-Qāsim Muḥammad ibn ʿAbd Allāh ibn ʿAbd al-Muṭṭalib ibn Hāshim, ابو القاسم محمد ابن عبد الله ابن عبد المطلب ابن هاشم) என்பவர் மக்கா நகரைச் சேர்ந்த அராபியர் ஆவர்.
தமிழ்நாடு சட்டப் பேரவை (Tamil Nadu Legislative Assembly) என்பது இந்தியாவின், 28 மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் அரசியல் திட்டம் சார்ந்த சட்டங்களை இயற்றும் அவையாகும். இது தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ளது. இதன் தோற்றம் மற்றும் வரலாற்றைப் பார்க்கும் பொழுது, இது 18 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாடு சென்னை மாகாணமாக இருந்த பொழுதிலிருந்தே இப்பேரவை செயல்பட்டுக் கொண்டிருந்தது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் அல்லது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) என்பது தமிழ்நாட்டின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் உரிமைத் தொகையாக 1000 இந்திய ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் தமிழ்நாடு அரசுத் திட்டமாகும். இத்திட்டத்தை தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி நினைவாகப் பெயரிட்டுள்ளனர்.
இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்
குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப்பெயர் குறிக்கிறது.
நா. மரிய வில்சன் (N. Marie Wilson) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி ஆவார். இவர் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில், சென்னை மாவட்டத்தில் உள்ள டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து, 2026-ஆம் ஆண்டு நடைபெற்ற, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விசயகாந்து (Vijayakanth, விஜயகாந்த்; இயற்பெயர்: விஜயராஜ், 25 ஆகத்து 1952 – 28 திசம்பர் 2023) ஒரு திரைப்பட நடிகரும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் கட்சியின் நிறுவனத் தலைவரும் ஆவார். இவர் 2006 முதல் 2016 வரை தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினராகவும், 2011ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். இவரது நான்கு தசாப்த திரை வாழ்க்கையில், இவர் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சிவனின் 108 திருநாமங்கள் அல்லது சிவாஷ்டோத்தர சத நாமாவளி என்பது சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமானின் பெயர்களை கூறி போற்றும் தோத்திரப் பாடலாகும். இப்பாடல்களில் சிவபெருமானின் நூற்றியெட்டுப் பெயர்கள் கூறப்பெற்றுள்ளன. சமஸ்கிருதத்தில் நம என்றும், தமிழில் போற்றி என்றும் சிவபெருமானின் பெயருக்குப் பின் இணைத்து பாடப்பெறுகிறது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026 (2026 Tamil Nadu Legislative Assembly election) தமிழ்நாடு சட்டமன்றத்தின் 234 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் ஆகும். 2026 ஏப்ரல் 23-ஆம் நாளன்று வாக்குப்பதிவு நடந்தது. மே 4 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின.
கேரள மாநிலக் குலுக்கல் பரிசுச் சீட்டு
கேரள மாநில குலுக்கல் பரிசுச் சீட்டு (Kerala State Lotteries) என்பது கேரள அரசால் நடத்தப்படும் ஒரு குலுக்கல் பரிசுச் சீட்டுத் திட்டமாகும். 1967 ஆம் ஆண்டில் கேரள அரசின் குலுக்கல் பரிசுச் சீட்டுத் துறையின் கீழ் நிறுவப்பட்டது. இது போன்ற குலுக்கல் பரிசு வழங்குவது இந்தியாவில் முதல் முறையாகும்.
மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்
தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள். அந்த வரிசையில் மொத்தம் 274 சிவ ஸ்தலங்கள் உள்ளன. அவைகளில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும், மற்ற கோயில்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் சில மற்ற இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ளன.
திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்
திருவிடைமருதூர் மகாலிங்கேசுவரர் திருக்கோயில் (Thiruvidaimarudur Mahalingeswarar Temple), சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் காவிரி கரையில் அமைந்துள்ள 30-ஆவது சிவத்தலமாகும். மேலும் இது திருவாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தலங்களுள் ஒன்றாகும். இத்தலம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்.
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் (Muthuvel Karunanidhi Stalin, பிறப்பு: 1 மார்ச்சு, 1953) என்பவர் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் ஆவார். இவர் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதியின் மூன்றாவது மகனும், முன்னாள் துணை முதலமைச்சர் உதயநிதியின் தந்தையும் ஆவார்.
மனித ஆண்குறி என்பது உடலின் வெளிப்புறத்தில் காணப்படும் ஒரு ஆணின் உடல் உறுப்பு ஆகும். இது சிறுநீர் கழிப்பதற்கும் உடலுறவு கொள்வதற்கும் பயன்படுகிறது. ஆண்குறியின் முக்கிய பாலியல் செயல்பாடு - பெண்ணின் யோனிக்குள் செலுத்தப்பட்டு தொடர்ச்சியான பாலுறவு தூண்டுதல் மூலமாக கர்ப்பத்தை ஏற்படுத்தக்கூடிய விந்துவை வழங்குவதாகும்.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2026
இப்பட்டியல் 2026 இல் வெளியிடப்பட்ட/திட்டமிடப்பட்டுள்ள இந்தியத் தமிழ்நாட்டுத் திரைப்படத் துறையினரால் தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களின் பட்டியலாகும்.
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், (List of Chief Ministers of Tamil Nadu) என்பது முழுமையான நிலையில், தமிழ்நாட்டின் 1920ஆம் ஆண்டு முதலான வரலாற்றிலிருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.
கர்நாடகப் போர்கள் (Carnatic Wars) என்பன 18ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் நடைபெற்ற மூன்று போர்களாகும். இந்திய ஆட்சியாளர்களின் போர்களில் பிரித்தானிய மற்றும் பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனங்கள் தலையிட்டு மோதிக் கொண்டன. இப்போர்களின் முடிவில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் தென்னிந்தியாவில் பலம் பொருந்தி ஆதிக்க சக்தியாக உருப்பெற்றது.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
பரந்தூர் கிராமம், தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பரந்தூர் ஊராட்சியில் அமைந்துள்ளது. பரந்தூருக்கு வடகிழக்கே ,8.5 கிலோ மீட்டர் தொலைவில் ஏகனாபுரம் மற்றும் திருமால்பூர் தொடருந்து நிலையத்திலிருந்து வடமேற்கே 10 கிலோ மீட்டர் தொலைவிலும், காஞ்சிபுரத்திற்கு வடக்கே 35 கிலோ மீட்டர் தொலைவிலும், வாலாஜாபாத்திற்கு வடக்கே 29 கிலோ மீட்டர் தொலைவிலும், சிறீபெரும்புதூருக்கு மேற்கே 30 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்மேற்கே 65 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இதன் அஞ்சல் சுட்டு எண் 631 553 மற்றும் அஞ்சலகம் இடையர்பாக்கத்தில் உள்ளது.
விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்
விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் (electoral roll) என்பது ஒரு குறிப்பிட்ட அதிகார வரம்பில், குறிப்பிட்ட தேர்தல்களுக்கு வாக்களிக்க உரிமை கொண்ட நபர்களைப் பட்டியலிடும் தொகுப்பாகும். இந்தப் பட்டியல் வழக்கமாக தேர்தல் மாவட்டங்களால் பிரிக்கப்பட்டு, வாக்குச் சாவடிகளில் தேர்தல் அதிகாரிகளுக்கு உதவுவதனை முதன்மையாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. பெரும்பாலாக நிரந்தர வாக்காளர் பட்டியல்களைப் பராமரிக்கின்றன, அவை தொடர்ச்சியாகவோ அல்லது அவ்வப்போது புதுப்பிக்கப்படுகின்றன (பிரான்சு போன்ற நாடுகள் ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படுகின்றன), சில அதிகார வரம்புகளில் ஒவ்வொரு தேர்தலுக்கும் முன் புதிய வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்படுகிறது.
துரை சந்திரசேகரன் (Durai Chandrasekaran) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக திருவையாறு சட்டமன்றத் தொகுதியில் 1989 சட்டமன்றத் தேர்தல், 1996 சட்டமன்றத் தேர்தல், 2006 சட்டமன்றத் தேர்தல், 2016 சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல் ஆகிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு ஐந்து முறை வெற்றி பெற்றுள்ளார். துரை சந்திரசேகரன் 1991 சட்டமன்றத் தேர்தலில் தனக்கு எதிராக போட்டியிட்ட அதிமுகவை சார்ந்த பி.
திவ்ய தேசங்கள் (Divya Desam) என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும்.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்: பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தமிழ்நாட்டில், தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற ஒரு சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான தமிழர் கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியக் கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
சரக்குக் கப்பல் என்பது ஒரு துறைமுகத்தில் இருந்து இன்னொரு துறைமுகத்துக்குச் சரக்கு, மற்றும் பல்வேறு பொருட்களைக் காவிச் செல்லும் கப்பலாகும். பெருமளவிலான அனைத்துலக வணிகம் கப்பலூடாகவே நடைபெறுவதன் காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான சரக்குக் கப்பல்கள் உலகின் கடல்கள் மற்றும் பெருங்கடல்களில் பயணம் செய்கின்றன. சரக்குக் கப்பல்கள் பொதுவாக அவற்றின் தேவைக்கேற்ப விசேடமாக வடிவமைப்புச் செய்யப்படுகின்றன.
கரீனா கபூர் ( பிறப்பு செப்டம்பர் 21, 1980), பெபோ என்று அறியப்படும் இவர் ஓர் இந்திய நடிகையாவார். இவருடைய பெற்றோர், தந்தை ரந்திர் கபூர் மற்றும் தாயார் பபிதா, இவருடைய முத்த சகோதரி கரிஸ்மா போன்றோர் திரைப்படங்களில் நடித்தவர்கள் ஆவார்கள்.2000 ஆண்டில் அவர் முதன்முதலாக ரெப்யுஜீ என்ற திரைப்படத்தில் தோன்றினார். இப்படத்தில் நடித்ததால் பிலிம்பேரின் சிறந்த அறிமுக நடிகைக்கான விருது கிடைத்தது.
வாய்வழிப் பாலுறவு அல்லது வாய்வழிப் புணர்ச்சி (Oral sex) என்பது வாய், நாக்கு ஆகியவற்றைப் பயன்படுத்திப் பாலுறுப்புக்களைத் தூண்டும் பாலியற் செயற்பாடாகும். இது பாலுறவின் முன்போ அல்லது பின்போ பாலியற் செயற்பாடாகவோ அல்லது புணர்ச்சிப் பரவசநிலையை எய்துவதற்கான செயற்பாடாகவோ இருக்கலாம். பெண்குறியை நாவால் தூண்டல் என்பது பெண்ணுறுப்பில் செய்யப்படும் வாய்வழிப் புணர்ச்சி ஆகும், அதே வாய்வழிப் புணர்ச்சி என்பது ஆண்குறியில் செய்யப்படும் வாய்வழிப் புணர்ச்சி ஆகும்.
தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்
இப்பட்டியல் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் அதிகபட்சமாக நடித்த குறிப்பிடத்தக்க நடிகைகளின் பட்டியல் ஆகும். தமிழ்த் திரையுலகில் 10 & 10 ஆண்டுகளுக்கு இரசிகர்களால் கொண்டாடப்பட்ட முன்னணி நடிகைகளின் புகைப்படங்கள் கீழ்வருமாறு உள்ளது.
அன்னை தெரேசா (Mother Teresa, 26 ஆகத்து 1910 – 5 செப்டம்பர் 1997), அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவரும் இந்தியக் குடியுரிமை பெற்ற உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியும் ஆவார். இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும். 1950 ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார்.
சென்னை (Chennai) தமிழ்நாட்டின் தலைநகரமும், இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும். இந்தியாவின் முதல் மாநகராட்சி 1688 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் தேதி நிறுவப்பட்டது இந்நகரம், 1996-ஆம் ஆண்டுக்கு முன்னர் மதராசப்பட்டினம், மெட்ராஸ் (Madras) மற்றும் மாதரசன்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டு வந்தது. சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று.