The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
இலங்கை (Sri Lanka, சிங்களம்: ශ්රී ලංකා, சிறீலங்கா) இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் வாழும் ஒரு தீவு நாடு ஆகும். இதன் தற்போதைய அதிகாரபூர்வ பெயர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு ஆகும். 1972 க்கு முன் உலகம் முழுவதும் சிலோன் (Ceylon) என்ற பெயரால் அறியப்பட்டு வந்தது.
{{Infobox country | conventional_long_name = இங்கிலாந்து | common_name = இங்கிலாந்து | image_flag = Flag of England.svg | flag_alt = ஒரு வெள்ளை நிற பின்னணியில் சிவப்புச் சிலுவை | national_motto = | national_anthem = | image_map = England in the UK and Europe.svg | map_width = 250px | map_caption = | map_alt = Map of England within the British Isles and within Europe | capital = இலண்டன் | demonym = ஆங்கிலேயர் | latd=51 |latm=30 |lats=27.8 |latNS=N |longd=0 |longm=7 |longs=40.7 |longEW=W | largest_city = தலைநகரம் | official_languages = ஆங்கிலம் (நடைமுறைப்படி) | regional_languages = கோர்னீசு | ethnic_groups = | ethnic_groups_year = 2011 | area_rank = | government_type = அரசியல்சட்ட முடியாட்சியுடன் கூடிய நிலையான அரசியலமைப்பு உடைய நாடு | legislature = ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை | leader_title1 = அரசி | leader_name1 = இரண்டாம் எலிசபெத் | leader_title2 = பிரதமர் | leader_name2 = {{nowrap|[[தெரசா மே] எம்பி}} | area_magnitude = 1 E11 | area_sq_mi = 50,346 | area_km2 = 130,395 | percent_water = | population_estimate = | population_estimate_rank = | population_estimate_year = | population_census = 53,013,000 | population_census_year = 2011 | population_density_mi2 = auto | population_density_km2 = 407 | population_density_rank = | GDP_PPP = | GDP_PPP_rank = | GDP_PPP_year = | GDP_PPP_per_capita = | GDP_PPP_per_capita_rank = | GDP_nominal = $2.68 டிரிலியன் (௱௲௱௱௲) | GDP_nominal_rank = | GDP_nominal_year =2009 | GDP_nominal_per_capita = $50,566 | Gini_year = | Gini_change = | Gini = | Gini_ref = | Gini_rank = | HDI_year = | HDI_change = | HDI = | HDI_ref = | HDI_rank = | currency = பிரித்தானிய பவுண்டு | currency_code = GBP | time_zone = GMT | utc_offset = 0 | time_zone_DST = BST | DST_note = | utc_offset_DST = +1 | calling_code = 44 | date_format = dd/mm/yyyy (கி. பி) | drives_on = left | patron_saint = புனித ஜார்ஜ் | cctld = .uk }} இங்கிலாந்து ஐக்கிய இராச்சியத்திலுள்ள நான்கு நாடுகளுள் பெரியதாகும். மேற்கில் இது வேல்ஸ் நாட்டையும் வடக்கில் ஸ்காட்லாந்து நாட்டையும் நில எல்லைகளாகக் கொண்டுள்ளது.
தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, ரீயூனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்
இந்தியாவில் 29 மாநிலங்களும், டெல்லி தேசிய தலைநகரப் பகுதி உள்ளிட்ட 7 நடுவண் அரசின் ஆட்சிப்பகுதிகளும் உள்ளன. அனைத்து மாநிலங்களிலும் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் பாண்டிச்சேரி, டெல்லி தலைநகரப் பகுதி ஆகியவற்றிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் உள்ளன. ஏனைய ஒன்றியப் பகுதிகள் நடுவண் அரசினால் நியமிக்கப்படும் ஆளுனர்களைக் கொண்ட, குடியரசுத்தலைவரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளாகும்.
திருக்குறள் எனக் குறிப்பிடப்படுவது புகழ்பெற்ற தமிழ் மொழி இலக்கியமாகும். உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது. இதனை இயற்றியவர் கிமு மூன்றாம் நூற்றாண்டுக்கும் கி.மு ஒன்றாம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராக இன்றைய ஆய்வாளர்களால் கருதப்படும் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர் ஆவார்.
தென்னாப்பிரிக்காவின் குடியரசு என்பது ஆப்பிரிக்காவின் தென்முனையில் அட்லாண்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களின்2,798 kilometres (1,739 mi) கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள நாடாகும். வடக்கில் நமீபியா, போட்சுவானா மற்றும் ஜிம்பாப்வே நாடுகளும்; கிழக்கில் மொசாம்பிக் மற்றும் சுவாசிலாந்து நாடுகளும் அமைந்துள்ளன; அதேசமயம் முற்றிலும் தென்னாப்பிரிக்க நாட்டால் சூழப்பட்ட சுதந்திர நாடான லெசோத்தோ நடுவில் அமைந்துள்ளது. தற்கால மனிதர்கள் தென் ஆப்பிரிக்காவிற்கு குடியேறி 1,00,000 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது.
சிவன் (Śiva) என்பவர் இந்துப் பிரிவான சைவசமயத்தின் முழுமுதற் கடவுள் ஆவார். சைவநம்பிக்கையின் படி, மும்மூர்த்திகளையும், முழுப் புடவியையும் ஆக்கிக் காப்பவரும், பேரூழியில் அனைத்தையும் அழிப்பவரும் சிவனே. ஏனைய இந்துப் பிரிவுகளில், மும்மூர்த்திகளில் அழிக்கும் கடவுளான ருத்திரன் இவரின் அம்சமாக கருதப்படுகிறார்.இவரது இடப்புறத்திலிருந்து திருமாலும்,வலப்புறத்திலிருந்து பிரம்மனும் தோன்றினார்கள் என்று வேதவியாசர் கூறுகின்றார்.
கொழுப்பு அமிலம் (Fatty acid) என்பது நிறைவுற்ற அல்லது நிறைவுறாத, நீளமான, கிளைக்காத, கொழுப்பார்ந்த பின் தொடரியைக் கொண்ட கார்பாக்சிலிக் அமிலமாகும். இயற்கையில் காணப்படும் கொழுப்பு அமிலங்கள் இரட்டைப் படை எண்ணிக்கையில் (நாலு முதல் இருபத்தியெட்டு வரை) கார்பன் அணுக்களைத் தொடரியாகக் கொண்டிருக்கும். சாதரணமாக கொழுப்பு அமிலங்கள், டிரைகிளிசரைடு மற்றும் பாஸ்போகொழுமியத்திலிருந்து வருவிக்கப்பட்டவையாகும்.
நெட்டாண்டு என்பது பருவ மற்றும் வானவியல் ஆண்டுடன் நாட்காட்டியை ஒருமுகப்படுத்தும் நோக்கில் கூடுதலாக ஒரு நாளையோ கிழமையையோ மாதத்தையோ கொண்ட ஆண்டாகும். எடுத்துக்காட்டாக பிப்ரவரி மாதத்தில் 28 நாட்களுக்குப் பதில் 29 நாட்கள் வரும் ஆண்டை குறிப்பிடலாம். பருவங்களும் வானவியல் நிகழ்வுகளும் சரியாக ஒரே நாள் இடைவெளியில் நடைபெறுவதில்லை.
சூரியக் குடும்பம் (Solar System) அல்லது சூரியத் தொகுதி என்பது சூரியனையும் சூரியனின் ஈர்ப்புவிசையின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து பருப்பொருட்களையும் உள்ளடக்கிய ஒரு தொகுதி ஆகும். இச் சூரியத்தொகுதி கதிரவனைச் சுற்றி வரும் எட்டு கோள்களையும், இக்கோள்களின் 162 (இதுவரை தெரிந்த கணக்கெடுப்பின்படி) துணைக்கோள்களையும், சிந்து குறுங்கோள்களையும், அக்குறுங்கோள்களின் துணைக்கோள்களையும் மற்றும் ஆயிரக்கணக்கான பிற வான்பொருட்களையும் உள்ளடக்கியது. வால்வெள்ளி, எரிகற்கள், விண்கற்கள் மற்றும் நாள்மீன்களுக்கு இடையே உள்ள விண்துகள்கள் போன்றவையும் சூரியத் தொகுதியில் காணப்படுகின்றன.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921), ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை (C. N. Annadurai, 15 செப்டம்பர், 1909 - 3 பெப்ரவரி, 1969) இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் ஆறாவது முதலமைச்சருமாவார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். இந்தியா குடியரசானபிறகு ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவர் என்ற பெருமையுடன், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவர் என்ற பெருமையும் கொண்டவர்.
பேரூராட்சி இந்தியாவில் முதன்முறையாக தமிழ்நாட்டில்தான் நகராட்சிகளுக்கும் ஊராட்சிகளுக்கும் இடைப்பட்ட நிலையில் அமைப்பு நிறுவப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் நகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் குறிப்பிட்ட வருவாயுடைய ஊர்களை பேரூராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த பேரூராட்சிகளுக்கு அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்படுகின்றன.
தைப்பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழர்களால் தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.
பாபா சாகேப் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கிலம்:Bhimrao Ramji Ambedkar, பிறப்பு:14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு (environmental protection) என்பது சுற்றசூழலை தனிமனிதனோ, அமைப்போ, அல்லது அரசாங்கமோ இயற்கை சூழலுக்காகவும், மனிதனின் நன்மைக்காகவும் பாதுகாக்கும் ஒரு பழக்கமாகும். மக்கள்தொகையினாலும் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் சுற்று சூழல் சில நேரங்களில் நிரந்தரமாக பாதிக்கப்படுகிறது. இதை உணர்ந்த அரசாங்கங்கள் சுற்றுச்சூழல் சீரழிவிற்கு காரணமான செயல்களைக் கட்டுப்படுத்தி நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளன.
அன்னை தெரேசா (Mother Teresa, ஆகத்து 26, 1910 - செப்டம்பர் 5, 1997), அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவரும் இந்தியக் குடியுரிமை பெற்ற உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியும் ஆவார். இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும். 1950 ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார்.
ஜான்சி ராணி... ஒரு வீரப்பெண்ணின் கதை
ஜான்சி ராணி... ஒரு வீரப்பெண்ணின் கதை (Jhansi Rani, இந்தி: एक वीर स्त्री की कहानी... झाँसी की रानी, மராத்தி: झाशीची राणी, தெலுங்கு: ఝాన్సీ లక్ష్మీబాయి) என்பது ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட இந்தி மொழியிலமைந்த சான்சி கி இராணி தொலைக்காட்சி நாடகத் தொடரின் தமிழாக்கம் ஆகும்.
கணிதம் (Mathematics) என்பது வணிகத்தில், எண்களுக்கு இடையான தொடர்பை அறிவதில், நிலத்தை அளப்பதில், அண்டவியல் நிகழ்வுகளை வருவதுரைப்பதில் மனிதனுக்கு இருந்த கணித்தலின் தேவைகள் காரணமாக எழுந்த ஓர் அறிவியல் பிரிவாகும். இந்த நான்கு தேவைகளும் பின்வரும் நான்கு பெரிய கணிதப் பிரிவுகளைப் பிரதிபடுத்துகின்றன: அளவு (quantity) - எண்கணிதம் அமைப்பு (structure) - இயற்கணிதம் பரவெளி (space) - வடிவவியல் மாற்றம் (change) - பகுவியல் (analysis) - நுண்கணிதம் பல்வேறு கணிதவியலாளர்களுக்கும் இடையே கணிதத்தின் சரியான வீச்சையும் வரையறையையும் குறித்து பல்வேறு கருத்துக்கள் உள்ளன. கணிதவியலாளர் தோரணங்களைத் தேடுகின்றனர்; கண்டுபிடித்த தோரணங்களைப் பயன்படுத்தி புதிய கணிப்புகளை உருவாக்குகின்றனர்.
கனடா (Canada) வட அமெரிக்க கண்டத்தில் உள்ள உலகின் இரண்டாவது பெரிய நாடு ஆகும். வடக்கே வட முனையும், கிழக்கே அட்லாண்டிக் பெருங்கடலும், தெற்கே அமெரிக்க ஒன்றியமும், மேற்கே பசிபிக் பெருங்கடலும், அமெரிக்க ஒன்றிய நாடுகளின் அலாஸ்கா மாநிலமும் எல்லைகளாக அமைகின்றன. கனடா பத்து மாகாணங்களையும் மூன்று ஆட்சி நிலப்பகுதிகளையும் கொண்ட கூட்டமைப்பு ஆகும்.
சுற்றுச்சூழல் மாசுபாடு (சூழல் மாசடைதல்) என்பது மனித செயல்கள் மூலம் உருவாகும் மாசுகளால், சூழலின் ஆதாரங்களாகிய காற்று, நீர், மண் வளங்களும், அங்கு வாழும் உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாகி, அதனால் சூழல் சமநிலை சீரற்றுப் போகும் நிலையைக் குறிக்கும். சூழலுக்கும் அங்கே வாழுகின்ற உயிரினங்களுக்கும் கேடு விளைவிக்கக்கூடியவையின் சேர்க்கையினால் சூழற் சமநிலை பாதிக்கப்படும். சூழல் மாசினால் அச்சூழ்மண்டலத்தில் வாழும் தாவரங்களும், விலங்குகளும் பல்வேறு வகையான பாதிப்புகளுக்கு உண்டாகிறது.
சொல் (ஒருசொல், ஒன்று அல்லது பல பொருள், நிகண்டு வழி)
ஒரு சொல்லானது இன்னின்ன பொருளைத் தரும் என முதன்முதலில் தோன்றிய திவாகர நிகண்டு சொற்பொருள் இங்குத் தொகுக்கப்பட்டு அகர வரிசையில் தரப்படுகின்றன. இத்தொகுப்பில் 343 சொற்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நூலுக்குச் சேந்தன் திவாகம் என்னும் பெயரும் உண்டு.
மதுரை (ஆங்கிலம்: Madurai) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு தொன்மையான நகரம் ஆகும். மதுரை மாவட்டத்தின் தலைநகராக இருக்கும் மதுரை, மக்கள் தொகை அடிப்படையிலும், நகர்ப்புற பரவல் அடிப்படையிலும்,மற்றும் தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய நகரமாகும் பத்து இலட்சத்துக்கு மேல் மக்கட்டொகை கொண்ட இந்திய மாநகரங்களின் பட்டியல்|31 ஆவதுமான பெரிய நகரம்]] ஆகும். வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள மதுரை நகரம் இங்கு அமைந்துள்ள மீனாட்சியம்மன் கோவிலுக்காக அதிகம் அறியப்படுகிறது.
மோகன்தாசு கரம்சந்த் காந்தி (ஆங்கிலம்:Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 - ஜனவரி 30, 1948), மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.
ஆந்திரப் பிரதேசம் பழைய ஆந்திரப் பிரதேச மாநிலத்திலிருந்து 2 சூன் 2014-ஆம் ஆண்டில் தெலுங்கானா பகுதி பிரிக்கப்பட்டபின், இராயலசீமை மற்றும் கடற்கரை ஆந்திரா பகுதிகளை உள்ளடக்கியதே தற்போதைய ஆந்திரப் பிரதேசம் ஆகும். ஆந்திரப் பிரதேசத்தின் புதிய தலைநகராக அமராவதி நகரை அமைக்க, 22 அக்டோபர் 2015 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியால் கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்தியாவின் தென்மாநிலங்களுள் ஒன்று.
திரைப்படம் (Film) அல்லது நகரும் படம் (Motion Picture) என்பது படிமங்களின் வரிசைகள் திரையில் நகரும் போது ஃபை தோற்றப்பாட்டின் படி ஒரு உண்மையான நாடகக் காட்சி நடைபெறுவது போன்ற ஒரு தோற்றம் செய்யக்கூடிய திரைப்படலம் ஆகும். திரைப்படத்தை நகரும் ஒளிப்படக் கருவி மூலம் ஒளிப்படத்தின் காட்சியை பதிவு செய்வதன் மூலமோ, இயக்கமூட்டல் தொழினுட்பத்தினால் வரைபடங்கள் அல்லது உருவ மாதிரிகளை ஒளிப்பதிவு செய்வதன் மூலமோ, சிஜிஐ மற்றும் கணினி இயக்கமூட்டல் மூலமோ, இவைகளில் பலவற்றை ஒன்றாக பயன்படுத்துவதன் மூலமோ, விசுவல் எவக்ட்ஸ் மூலமோ உருவாக்குகின்றனர். திரைப்படத்தின் ஒரு திடமான பொருள் என்னவென்றால் அது எண்ணங்கள், கதைகள், உணர்வுகள், அழகு அல்லது வெளி ஆகியவற்றை ஒரு உணர்ச்சி பெருக்குடன் பதிவு செய்யப்பட்ட காட்சிப்படமாக தரும் ஒரு கலை ஆகும்.
தேவநேயப் பாவாணர் ( Devaneya Pavanar ) (பெப்ரவரி 7, 1902- சனவரி 15, 1981) மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் இருந்து சிறப்பாக உழைத்தார்.
பால் என்பது பாலூட்டி வகையைச் சேர்ந்த குட்டியீன்ற தாயின் (பெண் விலங்கின்) பால் சுரப்பிகளில் சுரக்கும் ஒரு சத்துள்ள திரவமாகும். இத்திரவம் பாலூட்டி விலங்குகளின் குட்டிகளுக்கு ஆரம்ப காலத்தில் ஊட்டச்சத்துக்கள் மிகுந்த உணவாக பயன்படுகிறது. குட்டிகள் மற்ற உணவுகளை செரிக்கும் திறன் பெறும் வரை தாயின் பாலே முதன்மை உணவாகும்.
யாழ்ப்பாணம் (Jaffna, சிங்களம்: යාපනය) என்பது இலங்கைத் தீவின் வடமுனையிலுள்ள யாழ்ப்பாண மாவட்டத்தின் தலைநகராகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மேற்குப் பகுதியில் யாழ்ப்பாண நீரேரியைப் பார்த்தபடி அமைந்துள்ளது. இலங்கையின் தலைநகரான கொழும்பிலிருந்து 396 கிமீ தூரத்தில் அமைந்துள்ள இந்நகரம், 88,138 மக்கட்தொகையினைக் கொண்டு 12வது பெரிய நகரமாக விளங்குகிறது.
கணினி என்பது எண் முதலான தரவுகளை உட்கொண்டு, முறைப்படி கோத்த ஆணைக் கோவைகளைச் செயற்படுத்தும் ஒரு கருவி. ஒரு பணியைச் செய்ய, அதனைப் பல கூறாகப் பகுத்து, எதன் பின் எதனைச் செய்ய வேண்டும் என்று எண்ணி, கணினியுள் இடுவதற்காகத் தொகுக்கப்பட்ட ஆணைக் கோவை அல்லது கட்டளைக் கோவையானது, செய்நிரல் எனப்படும். கணினியில் இப்படி செய்நிரல்களைச் சேமித்து வைத்து பணி செய்ய இயக்குவது தனிச் சிறப்பாகும்.
ஐசக் நியூட்டன் (டிசம்பர் 25, 1642 – மார்ச் 20, 1727), ஒரு ஆங்கிலக் கணிதவியலாளரும், அறிவியலாளரும், தத்துவஞானியும் ஆவார். அறிவியல், கணிதம், இயந்திரவியல் துறைகளிலும், ஈர்ப்பு விசை பற்றியும் பெரிதும் ஆய்வுகள் மேற்கொண்டவர் நியூட்டன். இது நாள் வரை வாழ்ந்த அறிவியலாளர்களுள் மிகவும் செல்வாக்கு உள்ளவர்களுள் ஒருவராகவும், அறிவியல் புரட்சியில் முக்கியமான ஒருவராகவும் இவர் இருந்தார்.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
கபடி அல்லது சடுகுடுஅல்லது பலிஞ்சடுகுடு என்று அழைக்கப்படும் விளையாட்டு தமிழ்குடிகளால் பல காலமாக, விளையாடப்படும் தமிழர் விளையாட்டுகளுக்குள் ஒன்று. ஜல்லிக்கட்டிற்கு(ஏறு தழுவுதல்) தயாராகும் முன் தமிழர்கள் செய்யும் பயிற்சியே கபடி என்ற பெயரால் பல காலமாக விளையாடப்பட்டு வருகிறது. கபடி என்ற பெயரும் தமிழ்ப்பெயராக இருக்கும் என்று கூறப்படுகிறது.
பெறப்பட்ட நோய்த்தடுப்பாற்றல் குறைபாடுகளின் நோய்க்கூட்டறிகுறி அல்லது பெறப்பட்ட மனித நோய் எதிர்ப்புத் திறன் குறைபாட்டு நோய்க்கூட்டறிகுறி (Acquired immune deficiency syndrome) என்பது எச்.ஐ.வி எனப்படும் மனிதனின் நோய் எதிர்ப்பாற்றல் குறைப்பு செய்யும் திறன் கொண்ட தீ நுண்மத்தால் (வைரசால்) ஏற்படுகிற ஒரு நோயாகும்,. இந்த நோயானது மனிதர்களின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையின் செயற்படுதிறன் வலுவற்றதாகும் நிலையை படிப்படியாகத் தீவிரமடையச் செய்து, வாய்ப்பை எதிர் நோக்கியிருக்கும் தொற்றுநோய்களாலும், கட்டிகளாலும் மனிதர்களை இலகுவில் பாதிப்படையக் கூடியவர்களாகச் செய்கிறது. எச்.ஐ.வி தொற்றுக்குட்பட்ட இரத்தம், விந்து, யோனித் திரவம், முன்விந்துத் திரவம், தாய்ப்பால் போன்ற உடல் திரவங்களைக் கொண்ட உடலில் உள்ள சீதச்சவ்வு அல்லது இரத்த ஓட்டத்துடன் ஏற்படும் நேரடித் தொடர்பினால் இந்த வைரசானது ஒருவரிலிருந்து வேறொருவருக்குத் தொற்றுகின்றது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என்பது வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள கோயில் நகரமான மதுரையின் மத்தியில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன். இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர்.
ஐக்கிய இராச்சியம் (United Kingdom, பெரிய பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம்), மேற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடாகும். அது பொதுநலவாய நாடுகள், ஜி8, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ ஆகியவற்றின் ஓர் அங்கமாகும். பொதுவாக ஐக்கிய இராச்சியம் என்றோ UK அல்லது பிரித்தானியா (Britain) என்றோ (தவறுதலாக) பெரிய பிரித்தானியா என்றோ அழைக்கப்படும் ஐக்கிய இராச்சியமானது மொத்தமாக நான்கு பாகங்களைக் கொண்டது.
காச நோய் (Tuberculosis, டியூபர்க்குலோசிசு) என்பது மைக்கோபாக்டீரியா (mycobacteria) என்னும் நுண் கோலுயிரியின் தாக்குதலால் மாந்தர்களுக்கு ஏற்படும் கடும் தொற்றுநோய். இதனால் நோயுற்றவர் இறக்கவும் நேரிடும். இந்நோய் முக்கியமாக மைக்கோபாக்டீரியம் டியூபர்க்குலோசிசு (Mycobacterium tuberculosis) என்னும் நுண்ணுயிரியால் ஏற்படுகின்றது.
ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்
ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் என்பது இரு நாட்டு துடுப்பாட்ட அணிகளுக்கிடையே மட்டுப்படுத்தப்பட்ட பந்துப் பரிமாற்றங்கள் கொண்டதாக விளையாடப்படும் துடுப்பாட்ட வகையாகும். இது "மட்டுப்படுத்தப்பட்ட ஒருநாள் பன்னாட்டுப் போட்டி" எனவும் அழைக்கப்படுவதுண்டு. காலநிலை கோளாறு காரணமாக போட்டிகள் தடைப்பட்டு போட்டி ஒரே நாளில் முடிவுறாமல் போகும் சந்தர்ப்பங்களைத் தவிர்ப்பதற்காக ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளின் போது மேலதிக நாள் ஒதுக்கப்படுவது உண்டு.
அறிவியல் (Science) என்பது "அறிவு" எனப் பொருள்படும் scientia எனும் இலத்தீனச் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும். அறிவியல் என்பது புடவி பற்றிய நிறுவமுடிந்த விளக்கங்கள் முன்கணிப்புகளின் வடிவத்தில் அறிவை ஒருங்கமைத்து உருவாக்கும் முறையான நிறுவனம் ஆகும். நிகழ்நிலை அறிவியல் இயற்கை அறிவியல், சமூக அறிவியல், முறைசார் அறிவியல் என மூன்றாகப் பகுக்கப்படுகிறது.
மிளகு (பைப்பர் நிக்ரம் Piper nigrum) என்பது 'பைப்பரேசியே' என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த , பூத்து காய்த்து படர்ந்து வளரும் கொடி வகையினைச் சார்ந்த தாவரமாகும். இதில் மிளகு மற்றும் வால் மிளகு என இரு வகை உண்டு. 'மிளகு' என இத்தாவரத்தின் பெயரிலே குறிக்கப்படும் இதன் சிறுகனிகள், உலர வைக்கப்பட்டு நறுமணப் பொருளாகவும், மருந்தாகவும், உணவின் சுவைகூட்டும் பொருளாகவும் உலகமெங்கும் பயன்படுத்தப்படுகிறது.
டிரைகிளிசரைடு (triglyceride) [TG; டிரையசைல்கிளிசரால்; TAG; டிரையசைல்கிளிசரைடு) எனப்படும் மணமியம் கிளிசரால் மற்றும் மூன்று கொழுப்பு அமிலங்களிலிருந்து வருவிக்கப்பட்டதாகும். பல்வேறு டிரைகிளிசரைடுகள் எண்ணெய் மூலத்தைப் பொருத்து நிறைவுறாக் கொழுப்பாகவோ அல்லது நிறைவுற்ற கொழுப்பாகவோ உள்ளன. நிறைவுறாக் கொழுப்புகள் குறைந்த உருகுநிலையைக் கொண்டவை.
உழவுத் தொழில் அல்லது விவசாயம் அல்லது கமம் என்பது உணவுக்காகவும் ஏனைய பயன்பாடுகளுக்காகவும் சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும், கால்நடை வளர்ப்பையும் குறிக்கும். வேளாண்மை ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் ஆகும். இத்தொழிலில் மனிதன் இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருள்களைச் சேகரித்துப் பயன்படுத்திக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவ்வியற்கையோடு ஒன்றிணைந்து பணியாற்றி உணவுப் பொருட்களை உற்பத்தி செய்துகொள்கிறான்.
சிம்பாப்வே முன்னர் ரொடீசியக் குடியரசு என அறியப்பட்ட சிம்பாப்வே குடியரசானது ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென்பகுதியில் உள்ள ஒரு நாடாகும். சிம்பாப்வேயின் தெற்கில் தென் ஆப்பிரிக்காவும் மேற்கில் போட்சுவானாவும் கிழக்கில் மொசாம்பிக்கும் வடக்கில் சாம்பியாவும் உள்ளன. சிம்பாப்வே என்ற பெயரானது கல் வீடு எனப் பொருள்படும் "ட்சிம்பா ட்சிமாப்வே" என்ற சோனா மொழிப் பதத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகும்.
இராணி இலட்சுமிபாய் அல்லது சான்சி இராணி (Rani Lakshmibai, மராத்தி-झाशीची राणी, நவம்பர் 19, 1835–சூன் 17, 1858) வடமத்திய இந்தியாவின் சான்சி நாட்டின் இராணி. 1857 இந்தியக் கிளர்ச்சியில் பெரும்பங்காற்றி இந்தியாவில் பிரித்தானியரின் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தோர்களின் முன்னோடியாகக் கணிக்கப்படுகின்றவர்.
சீனா (China) என்று பொதுவாக அழைக்கப்படும் சீன மக்கள் குடியரசு கிழக்காசியாவிலுள்ள நாடாகும். ஆசியாவிலேயே பரப்பளவில் மிகப்பெரிய நாடான சீனா உலகில் ரஷ்யா, கனடா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாகப் பரப்பளவின்படி மூன்றாவது பெரிய நாடாகும். 1,306,313,812 மக்கள் வாழும் சீனா, உலகில் சனத்தொகை கூடிய நாடுகளில் முதலிடம் வகிக்கிறது.
பெண்என்னும் சொல் பல பொருள்களில் பயன்படுகின்றது. பால் பகுப்பில் பெண் பால் எல்லா உயிரினங்களினதும் பெண் ." பாலாரை வயது வேறுபாடின்றிக் குறிக்கப் பயன்படுகின்றது. ஆங்கிலத்தில் "பெண்" என்ற உச்சரிப்பு கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் விம்பானா ,'wīfmannஎன்றும் பின்னர் வும்மான (wīmmann to wumman, )என்றும் சொல்லிருந்து மருவி விம்மனுக்கும், இறுதியாக உச்சரிப்புடைய விம்மன் என்ற மாறியது (பெண்ணுக்கும்) அது பழைய ஆங்கிலத்தில், விபெய்ன் "பெண் மனிதனை" குறிக்கிறது,என்றும் கருத்து உண்டு.
தமிழ்நாட்டில் காணப்படும் பறவைகளின் பட்டியல்
தமிழ் நாட்டில் 300க்கும் மேற்பட்ட வகை பறவைகள் பார்க்கலாம்.
தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் என்றும் தஞ்சைப் பெரிய கோயில் ("Big temple") அல்லது தஞ்சைப் பெருவுடையார் கோயில் ("Peruvudayar Temple") என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியக் கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
இந்தி (Hindi, இந்தி: हिन्दी, நவீன தரநிலை இந்தி: मानक हिन्दी) அல்லது ஹிந்தி இந்தியாவின் வட மாநிலங்களில் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழியாகும். வடமொழியை அடிப்படையாகக் கொண்ட இம்மொழியில், உருது, பாரசீக, மற்றும் அரேபிய மொழிகளின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்தி இந்தியாவின் அரசு ஏற்புப் பெற்ற 22 மொழிகளுள் ஒன்று.