The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக அல்லது அண்ணா திமுக) என்பது தென்னிந்தியாவின் தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் செயல்படும் அரசியல் கட்சி ஆகும். இது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முக்கிய அரசியல் கட்சியாகவும் இந்தியப் பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாகவும் விளங்குகிறது. இக்கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிட்டு எம்.ஜி.
இலங்கை (Sri Lanka, சிங்களம்: ශ්රී ලංකා, சிறீலங்கா) இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் வாழும் ஒரு தீவு நாடு ஆகும். இதன் தற்போதைய அதிகாரபூர்வ பெயர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு ஆகும். 1972 க்கு முன் உலகம் முழுவதும் சிலோன் (Ceylon) என்ற பெயரால் அறியப்பட்டு வந்தது.
{{Infobox country | conventional_long_name = இங்கிலாந்து | common_name = இங்கிலாந்து | image_flag = Flag of England.svg | flag_alt = ஒரு வெள்ளை நிற பின்னணியில் சிவப்புச் சிலுவை | national_motto = | national_anthem = | image_map = England in the UK and Europe.svg | map_width = 250px | map_caption = | map_alt = Map of England within the British Isles and within Europe | capital = இலண்டன் | demonym = ஆங்கிலேயர் | latd=51 |latm=30 |lats=27.8 |latNS=N |longd=0 |longm=7 |longs=40.7 |longEW=W | largest_city = தலைநகரம் | official_languages = ஆங்கிலம் (நடைமுறைப்படி) | regional_languages = கோர்னீசு | ethnic_groups = | ethnic_groups_year = 2011 | area_rank = | government_type = அரசியல்சட்ட முடியாட்சியுடன் கூடிய நிலையான அரசியலமைப்பு உடைய நாடு | legislature = ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை | leader_title1 = அரசி | leader_name1 = இரண்டாம் எலிசபெத் | leader_title2 = பிரதமர் | leader_name2 = {{nowrap|[[தெரசா மே] எம்பி}} | area_magnitude = 1 E11 | area_sq_mi = 50,346 | area_km2 = 130,395 | percent_water = | population_estimate = | population_estimate_rank = | population_estimate_year = | population_census = 53,013,000 | population_census_year = 2011 | population_density_mi2 = auto | population_density_km2 = 407 | population_density_rank = | GDP_PPP = | GDP_PPP_rank = | GDP_PPP_year = | GDP_PPP_per_capita = | GDP_PPP_per_capita_rank = | GDP_nominal = $2.68 டிரிலியன் (௱௲௱௱௲) | GDP_nominal_rank = | GDP_nominal_year =2009 | GDP_nominal_per_capita = $50,566 | Gini_year = | Gini_change = | Gini = | Gini_ref = | Gini_rank = | HDI_year = | HDI_change = | HDI = | HDI_ref = | HDI_rank = | currency = பிரித்தானிய பவுண்டு | currency_code = GBP | time_zone = GMT | utc_offset = 0 | time_zone_DST = BST | DST_note = | utc_offset_DST = +1 | calling_code = 44 | date_format = dd/mm/yyyy (கி. பி) | drives_on = left | patron_saint = புனித ஜார்ஜ் | cctld = .uk }} இங்கிலாந்து ஐக்கிய இராச்சியத்திலுள்ள நான்கு நாடுகளுள் பெரியதாகும். மேற்கில் இது வேல்ஸ் நாட்டையும் வடக்கில் ஸ்காட்லாந்து நாட்டையும் நில எல்லைகளாகக் கொண்டுள்ளது.
தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, ரீயூனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை (C. N. Annadurai, 15 செப்டம்பர், 1909 - 3 பெப்ரவரி, 1969) இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் ஆறாவது முதலமைச்சருமாவார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். இந்தியா குடியரசானபிறகு ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவர் என்ற பெருமையுடன், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவர் என்ற பெருமையும் கொண்டவர்.
தமிழக ஊராட்சி மன்றங்கள் தமிழ்நாட்டில் 500 நபர்களும் அதற்கும் அதிகமான மக்கள் தொகையுடைய ஊர்களை ஊராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த கிராம ஊராட்சிகளுக்கு அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. இந்த வார்டுகளில் வாக்காளர்களாக உள்ள மக்களால் ஊராட்சி மன்றத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
கொழுப்பு அமிலம் (Fatty acid) என்பது நிறைவுற்ற அல்லது நிறைவுறாத, நீளமான, கிளைக்காத, கொழுப்பார்ந்த பின் தொடரியைக் கொண்ட கார்பாக்சிலிக் அமிலமாகும். இயற்கையில் காணப்படும் கொழுப்பு அமிலங்கள் இரட்டைப் படை எண்ணிக்கையில் (நாலு முதல் இருபத்தியெட்டு வரை) கார்பன் அணுக்களைத் தொடரியாகக் கொண்டிருக்கும். சாதரணமாக கொழுப்பு அமிலங்கள், டிரைகிளிசரைடு மற்றும் பாஸ்போகொழுமியத்திலிருந்து வருவிக்கப்பட்டவையாகும்.
சிவன் (Śiva) என்பவர் இந்துப் பிரிவான சைவசமயத்தின் முழுமுதற் கடவுள் ஆவார். சைவநம்பிக்கையின் படி, மும்மூர்த்திகளையும், முழுப் புடவியையும் ஆக்கிக் காப்பவரும், பேரூழியில் அனைத்தையும் அழிப்பவரும் சிவனே. ஏனைய இந்துப் பிரிவுகளில், மும்மூர்த்திகளில் அழிக்கும் கடவுளான ருத்திரன் இவரின் அம்சமாக கருதப்படுகிறார்.இவரது இடப்புறத்திலிருந்து திருமாலும்,வலப்புறத்திலிருந்து பிரம்மனும் தோன்றினார்கள் என்று வேதவியாசர் கூறுகின்றார்.
பஞ்சாயத்து ஒன்றியம் அல்லது ஊராட்சி ஒன்றியம் (Panchayat Union or Block Development Office), இந்தியாவில், தமிழ்நாட்டில், 1994ம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி சட்டத்தின் படி வட்டார அளவில் ஊராட்சி ஒன்றியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 385 பஞ்சாயத்து ஒன்றியங்கள் உள்ளது. அவற்றுள் நீலகிரி மாவட்டம் குறைந்த பட்சமாக நான்கு பஞ்சாயத்து ஒன்றியங்களும், விழுப்புரம் மாவட்டம் அதிக பட்சமாக 22 பஞ்சாயத்து ஒன்றியங்களையும் கொண்டுள்ளது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என்பது வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள கோயில் நகரமான மதுரையின் மத்தியில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன். இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர்.
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011
15 வது இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வீட்டை பட்டியலிடுதல், மக்கள் தொகை கணக்கெடுப்பு என இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது. முதற்கட்டமான வீட்டை பட்டியலிடுதலில், அனைத்து கட்டிடங்களை பற்றிய தகவல்கள் சேகரிப்பு ஏப்ரல் 1, 2010 அன்று தொடங்கியது. தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கானத் தகவல்களும் இந்த முதற்கட்டப் பணியின்போது சேகரிக்கப்பட்டன.
திருக்குறள் எனக் குறிப்பிடப்படுவது புகழ்பெற்ற தமிழ் மொழி இலக்கியமாகும். உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது. இதனை இயற்றியவர் கிமு மூன்றாம் நூற்றாண்டுக்கும் கி.மு ஒன்றாம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராக இன்றைய ஆய்வாளர்களால் கருதப்படும் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர் ஆவார்.
தைப்பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழர்களால் தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921), ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
மதுரை (ஆங்கிலம்: Madurai) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு தொன்மையான நகரம் ஆகும். மதுரை மாவட்டத்தின் தலைநகராக இருக்கும் மதுரை, மக்கள் தொகை அடிப்படையிலும், நகர்ப்புற பரவல் அடிப்படையிலும்,மற்றும் தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய நகரமாகும் பத்து இலட்சத்துக்கு மேல் மக்கட்டொகை கொண்ட இந்திய மாநகரங்களின் பட்டியல்|31 ஆவதுமான பெரிய நகரம்]] ஆகும். வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள மதுரை நகரம் இங்கு அமைந்துள்ள மீனாட்சியம்மன் கோவிலுக்காக அதிகம் அறியப்படுகிறது.
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்
இந்தியாவில் 29 மாநிலங்களும், டெல்லி தேசிய தலைநகரப் பகுதி உள்ளிட்ட 7 நடுவண் அரசின் ஆட்சிப்பகுதிகளும் உள்ளன. அனைத்து மாநிலங்களிலும் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் பாண்டிச்சேரி, டெல்லி தலைநகரப் பகுதி ஆகியவற்றிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் உள்ளன. ஏனைய ஒன்றியப் பகுதிகள் நடுவண் அரசினால் நியமிக்கப்படும் ஆளுனர்களைக் கொண்ட, குடியரசுத்தலைவரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளாகும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு (environmental protection) என்பது சுற்றசூழலை தனிமனிதனோ, அமைப்போ, அல்லது அரசாங்கமோ இயற்கை சூழலுக்காகவும், மனிதனின் நன்மைக்காகவும் பாதுகாக்கும் ஒரு பழக்கமாகும். மக்கள்தொகையினாலும் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் சுற்று சூழல் சில நேரங்களில் நிரந்தரமாக பாதிக்கப்படுகிறது. இதை உணர்ந்த அரசாங்கங்கள் சுற்றுச்சூழல் சீரழிவிற்கு காரணமான செயல்களைக் கட்டுப்படுத்தி நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளன.
சுற்றுச்சூழல் மாசுபாடு (சூழல் மாசடைதல்) என்பது மனித செயல்கள் மூலம் உருவாகும் மாசுகளால், சூழலின் ஆதாரங்களாகிய காற்று, நீர், மண் வளங்களும், அங்கு வாழும் உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாகி, அதனால் சூழல் சமநிலை சீரற்றுப் போகும் நிலையைக் குறிக்கும். சூழலுக்கும் அங்கே வாழுகின்ற உயிரினங்களுக்கும் கேடு விளைவிக்கக்கூடியவையின் சேர்க்கையினால் சூழற் சமநிலை பாதிக்கப்படும். சூழல் மாசினால் அச்சூழ்மண்டலத்தில் வாழும் தாவரங்களும், விலங்குகளும் பல்வேறு வகையான பாதிப்புகளுக்கு உண்டாகிறது.
சூரியக் குடும்பம் (Solar System) அல்லது சூரியத் தொகுதி என்பது சூரியனையும் சூரியனின் ஈர்ப்புவிசையின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து பருப்பொருட்களையும் உள்ளடக்கிய ஒரு தொகுதி ஆகும். இச் சூரியத்தொகுதி கதிரவனைச் சுற்றி வரும் எட்டு கோள்களையும், இக்கோள்களின் 162 (இதுவரை தெரிந்த கணக்கெடுப்பின்படி) துணைக்கோள்களையும், சிந்து குறுங்கோள்களையும், அக்குறுங்கோள்களின் துணைக்கோள்களையும் மற்றும் ஆயிரக்கணக்கான பிற வான்பொருட்களையும் உள்ளடக்கியது. வால்வெள்ளி, எரிகற்கள், விண்கற்கள் மற்றும் நாள்மீன்களுக்கு இடையே உள்ள விண்துகள்கள் போன்றவையும் சூரியத் தொகுதியில் காணப்படுகின்றன.
இந்தி (Hindi, இந்தி: हिन्दी, நவீன தரநிலை இந்தி: मानक हिन्दी) அல்லது ஹிந்தி இந்தியாவின் வட மாநிலங்களில் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழியாகும். வடமொழியை அடிப்படையாகக் கொண்ட இம்மொழியில், உருது, பாரசீக, மற்றும் அரேபிய மொழிகளின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்தி இந்தியாவின் அரசு ஏற்புப் பெற்ற 22 மொழிகளுள் ஒன்று.
டிரைகிளிசரைடு (triglyceride) [TG; டிரையசைல்கிளிசரால்; TAG; டிரையசைல்கிளிசரைடு) எனப்படும் மணமியம் கிளிசரால் மற்றும் மூன்று கொழுப்பு அமிலங்களிலிருந்து வருவிக்கப்பட்டதாகும். பல்வேறு டிரைகிளிசரைடுகள் எண்ணெய் மூலத்தைப் பொருத்து நிறைவுறாக் கொழுப்பாகவோ அல்லது நிறைவுற்ற கொழுப்பாகவோ உள்ளன. நிறைவுறாக் கொழுப்புகள் குறைந்த உருகுநிலையைக் கொண்டவை.
வட்டார வளர்ச்சி அலுவலகம் (Block Development Office) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள முன்னூற்று எண்பத்தைந்து ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் உள்ள 12,524 ஊராட்சி மன்றங்களில் உள்ள கிராம மக்களின் கல்வி, மருத்துவம், சுகாதாரம், போக்குவரத்து வசதிகள், வேலைவாய்ப்பு மற்றும் மகளிர், தலித் மற்றும் பழங்குடி மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் பொருட்டு, இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுகளின் சமூக நலத் திட்டங்களை திட்டங்களை கிராமங்களில் நடைமுறைப் படுத்தவும். அரசுகள் வழங்கும் நிதிகள் மற்றும் மானியங்களை கையாள்வதற்கும், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியவர்களின் வழிகாட்டுதல்களின் படியும் வட்டார அளவில் செயல்படுகிறது. மத்திய, மாநில அரசுகளின் ஊரக வளர்ச்சி திட்டங்களை மாவட்ட அளவிலான மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் கண்காணிப்பார்.
தம்பிதுரை என்பவர் தமிழக அரசியல்வாதி ஆவார்.16வது நாடாளுமன்ற மக்களவையில் துணை சபாநாயகர் பதவிக்கு நடத்தப்பட்ட தேர்தலில் போட்டியிட்ட இவரை அனைத்து கட்சிகளும் ஆதரித்தன . அதைத் தொடர்ந்து அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் . இவர் 1985 முதல் 1989 வரை பாராளுமன்ற துணைத்தலைவராகவும், பல்வேறு சமயங்களில் தமிழக அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
கனிம வேதியியல் (Inorganic chemistry) என்பது கரிமம் அல்லாத சேர்மங்கள் மற்றும் கரிமவுலோகச் சேர்மங்கள் முதலானவற்றின் நடத்தைகளையும் அவற்றின் தயாரிப்பு முறைகளையும் விவரிக்கின்ற ஓர் வேதியியல் பிரிவு ஆகும். அசேதன இரசாயணம் என்ற பெயராலும் அழைக்கப்படும் இப்பிரிவு மிகவிரிவாக வளர்ச்சியடைந்துள்ள கரிமச் சேர்மங்கள் (பெரும்பாலும் C-H பிணைப்புக் கொண்ட சேர்மங்கள்) தவிர்த்து, அனைத்து வகையான வேதிச் சேர்மங்களையும் ஆராய்கின்றது. C-H பிணைப்புக் கொண்ட சேர்மங்கள் கரிம வேதியியல் என்ற வேதியியல் பிரிவில் ஆராயப்படுகின்றன.
தேவநேயப் பாவாணர் ( Devaneya Pavanar ) (பெப்ரவரி 7, 1902- சனவரி 15, 1981) மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் இருந்து சிறப்பாக உழைத்தார்.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
இராணி இலட்சுமிபாய் அல்லது சான்சி இராணி (Rani Lakshmibai, மராத்தி-झाशीची राणी, நவம்பர் 19, 1835–சூன் 17, 1858) வடமத்திய இந்தியாவின் சான்சி நாட்டின் இராணி. 1857 இந்தியக் கிளர்ச்சியில் பெரும்பங்காற்றி இந்தியாவில் பிரித்தானியரின் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தோர்களின் முன்னோடியாகக் கணிக்கப்படுகின்றவர்.
பாபா சாகேப் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கிலம்:Bhimrao Ramji Ambedkar, பிறப்பு:14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.
இலங்கையின் பிரதேசச் செயலகங்கள்
இலங்கையில் பிரதேசச் செயலகங்கள் (Divisional Secretariat) என்பது ஒரு நிர்வாக அலகு ஆகும். முழு இலங்கையும் 25 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மாவட்டமும் பல பிரதேசச் செயலாளர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இப் பிரிவுகளும் மேலும் சிறு அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
ஜான்சி ராணி... ஒரு வீரப்பெண்ணின் கதை
ஜான்சி ராணி... ஒரு வீரப்பெண்ணின் கதை (Jhansi Rani, இந்தி: एक वीर स्त्री की कहानी... झाँसी की रानी, மராத்தி: झाशीची राणी, தெலுங்கு: ఝాన్సీ లక్ష్మీబాయి) என்பது ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட இந்தி மொழியிலமைந்த சான்சி கி இராணி தொலைக்காட்சி நாடகத் தொடரின் தமிழாக்கம் ஆகும்.
பெறப்பட்ட நோய்த்தடுப்பாற்றல் குறைபாடுகளின் நோய்க்கூட்டறிகுறி அல்லது பெறப்பட்ட மனித நோய் எதிர்ப்புத் திறன் குறைபாட்டு நோய்க்கூட்டறிகுறி (Acquired immune deficiency syndrome) என்பது எச்.ஐ.வி எனப்படும் மனிதனின் நோய் எதிர்ப்பாற்றல் குறைப்பு செய்யும் திறன் கொண்ட தீ நுண்மத்தால் (வைரசால்) ஏற்படுகிற ஒரு நோயாகும்,. இந்த நோயானது மனிதர்களின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையின் செயற்படுதிறன் வலுவற்றதாகும் நிலையை படிப்படியாகத் தீவிரமடையச் செய்து, வாய்ப்பை எதிர் நோக்கியிருக்கும் தொற்றுநோய்களாலும், கட்டிகளாலும் மனிதர்களை இலகுவில் பாதிப்படையக் கூடியவர்களாகச் செய்கிறது. எச்.ஐ.வி தொற்றுக்குட்பட்ட இரத்தம், விந்து, யோனித் திரவம், முன்விந்துத் திரவம், தாய்ப்பால் போன்ற உடல் திரவங்களைக் கொண்ட உடலில் உள்ள சீதச்சவ்வு அல்லது இரத்த ஓட்டத்துடன் ஏற்படும் நேரடித் தொடர்பினால் இந்த வைரசானது ஒருவரிலிருந்து வேறொருவருக்குத் தொற்றுகின்றது.
அன்புமணி ராமதாஸ் (Anbumani Ramadoss, பிறப்பு: அக்டோபர் 9, 1968) ஒரு தமிழக அரசியல்வாதியும், மருத்துவரும் ஆவார். இவரின் தந்தையார் மருத்துவர் ராமதாஸ் தொடங்கிய பாட்டாளி மக்கள் கட்சியில் உறுப்பினர். 2004-இல் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய நடுவண் அரசில் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சராகப் பணியாற்றினார்.
தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் என்றும் தஞ்சைப் பெரிய கோயில் ("Big temple") அல்லது தஞ்சைப் பெருவுடையார் கோயில் ("Peruvudayar Temple") என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியக் கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
திரைப்படம் (Film) அல்லது நகரும் படம் (Motion Picture) என்பது படிமங்களின் வரிசைகள் திரையில் நகரும் போது ஃபை தோற்றப்பாட்டின் படி ஒரு உண்மையான நாடகக் காட்சி நடைபெறுவது போன்ற ஒரு தோற்றம் செய்யக்கூடிய திரைப்படலம் ஆகும். திரைப்படத்தை நகரும் ஒளிப்படக் கருவி மூலம் ஒளிப்படத்தின் காட்சியை பதிவு செய்வதன் மூலமோ, இயக்கமூட்டல் தொழினுட்பத்தினால் வரைபடங்கள் அல்லது உருவ மாதிரிகளை ஒளிப்பதிவு செய்வதன் மூலமோ, சிஜிஐ மற்றும் கணினி இயக்கமூட்டல் மூலமோ, இவைகளில் பலவற்றை ஒன்றாக பயன்படுத்துவதன் மூலமோ, விசுவல் எவக்ட்ஸ் மூலமோ உருவாக்குகின்றனர். திரைப்படத்தின் ஒரு திடமான பொருள் என்னவென்றால் அது எண்ணங்கள், கதைகள், உணர்வுகள், அழகு அல்லது வெளி ஆகியவற்றை ஒரு உணர்ச்சி பெருக்குடன் பதிவு செய்யப்பட்ட காட்சிப்படமாக தரும் ஒரு கலை ஆகும்.
மோகன்தாசு கரம்சந்த் காந்தி (ஆங்கிலம்:Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 - ஜனவரி 30, 1948), மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.
சொல் (ஒருசொல், ஒன்று அல்லது பல பொருள், நிகண்டு வழி)
ஒரு சொல்லானது இன்னின்ன பொருளைத் தரும் என முதன்முதலில் தோன்றிய திவாகர நிகண்டு சொற்பொருள் இங்குத் தொகுக்கப்பட்டு அகர வரிசையில் தரப்படுகின்றன. இத்தொகுப்பில் 343 சொற்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நூலுக்குச் சேந்தன் திவாகம் என்னும் பெயரும் உண்டு.
அன்னை தெரேசா (Mother Teresa, ஆகத்து 26, 1910 - செப்டம்பர் 5, 1997), அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவரும் இந்தியக் குடியுரிமை பெற்ற உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியும் ஆவார். இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும். 1950 ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார்.
இந்திய அரசு (Government of India, இந்தி: भारत सरकार, பாரத் சர்க்கார்), இந்திய நாட்டின் ஒன்றிய அரசு. இது இந்திய அரசியல் சட்டப்படி அமைக்கப்பெற்றது. அதுமட்டுமில்லாமல் கூட்டாட்சித் தத்துவத்தின்படி, குடியரசு இந்தியாவில் அடங்கிய 29 மாநிலங்களையும் மற்றும் 7 ஆட்சிநிலப் பகுதிகளையும் தன் ஆளுமையில் ஒன்றிணைக்கின்றது.