The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
இந்திய வரலாறு (History of India) என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் வரலாற்றுக் காலம் முன்பு வாழ்ந்த மக்கள், அவர்தம் சமுதாயம், சிந்து சமவெளி நாகரிகம் இந்தோ-ஆரியப் பண்பாடு உள்ளடக்கிய வேதகால நாகரிகம் தொடங்கி இன்றுவரை உள்ளிட்டகாலம் அடங்கும். மேலும் பல கலாச்சாரங்களின் சாரமாகவும் பண்பாடுகளை உள்வாங்கியும் பிறந்த இந்து சமயம், அதன் வளர்ச்சி குறித்தும் சிரமணா இயக்கத்தின் வளர்ச்சி, சிரவுத்தா பலிகளின் வீழ்ச்சி, சைனம், பௌத்தம், சைவம், வைணவம் மற்றும் சக்தி வழிபாடு இவைகளின் வளர்ச்சி, தாக்கம், மேலும் இப்பகுதியில் இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த அரச பரம்பரை, பேரரசுகளின் தோற்றம், தாக்கம், இடைகாலத்தில் தோன்றிய இந்து மற்றும் முகலாய அரச பரம்பரைகள் குறித்த தகவல்கள், பிற்காலத்தில் வந்த ஐரோப்பிய வணிகர்கள், அதன் தொடர்ச்சியாக அமைந்த ஆங்கிலேய அரசு, அதன் தொடர்ச்சியாக எழுந்த விடுதலை இயக்கம், அதன் பின் நாடு பிரிவினை அடைந்து இந்தியக் குடியரசு பிறந்த வரை தகவல்கள் உள்ளிட்டவை அடங்கும்.சுமார் 75,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியத் துணைக்கண்டத்தில் இன்றைய மனிதர்களின் உடற்கூறியல் வடிவத்தை ஒத்த மனிதர்களோ அல்லது 5,00,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தற்கால மனிதனின் முன்னோடிகளோ வாழ்ந்து வந்ததற்கான சான்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கிமு 3200 முதல் கிமு 1300 வரை இந்தியாவில் செழிப்பாக விளங்கிய சிந்துவெளி நாகரிகம்தான் தெற்கு ஆசியாவில் தோன்றிய முதல் நாகரிகம் ஆகும்.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
விஜயநகரப் பேரரசு (1336 - 1646), தென் இந்தியாவின் தற்கால கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கேரளாவின் பெரும்பாலான பகுதிகளைக் கொண்ட ஒரு பேரரசு ஆகும். தென்னிந்தியாவில் தில்லி சுல்தான்களின் ஆட்சி விரிவாக்கத்தை தடுக்கவேவித்யாரண்யர் வழிகாட்டுதலின் படி, விஜயநகரப் பேரரசு 1336 ஆம் ஆண்டில் முதலாம் ஹரிஹரர் மற்றும் முதலாம் புக்கராயர் ஆகியோரால் நிறுவப்பட்டது. இப்பேரரசின் புகழ் பெற்றவர் கிருஷ்ணதேவராயர் ஆவார்.
இந்தித் திரைப்படத்துறை அல்லது பாலிவுட் என்பது இந்தியாவில் மும்பை மாநகரில் மூலதனமாக கொண்டுள்ள இந்தி மொழியில் தயாரிக்கும் திரைப்படத் தொழிலைக் குறிப்பது ஆகும். இத்துறை இந்தியாவில் மிக அதிக அளவில் படம் தயாரிப்பு மற்றும் உலக அளவில் மிக அதிகமான அளவில் படம் தயாரிக்கும் மையங்களில் ஒன்றாகவும் இது விளங்குகிறது. இதை பாலிவுட் என்றும் அழைக்கும் வழக்கம் உண்டும்.
பாரதிதாசன் (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் 'கனகசுப்புரத்தினம்' ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
முத்தையா முரளிதரன் (Muttiah Muralitharan, பிறப்பு: ஏப்ரல் 17, 1972, கண்டி) பொதுவாக முரளி என்றும் அழைக்கப்படுகிறார். இலங்கையின் மலையகத் தமிழரான இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஆவார். 2002 ஆம் ஆண்டில் விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பானது இவரை தேர்வுத் துடுப்பாட்ட வரலாற்றில் மிகச்சிறந்த பந்து வீச்சாளர் எனக் குறிப்பிடுகிறது.
கோலிவுட் என்று அழைக்கப்படும் தமிழ்த் திரைப்படத்துறை எனப்படுவது தமிழ் நாட்டில் இருந்து இயங்கும் தமிழ் மொழித் திரைப்படத்துறை ஆகும். இந்தியாவில் இந்தி திரைத்துறைக்கு அடுத்து பரவலாக அறியப்படும் திரைத்துறை ஆகும். 1980கள் வரை சென்னையில் கோடம்பாக்கத்தில் இருந்த திரைப்படத் தயாரிப்பு வசதிகளை முன்னிட்டு பெரும்பாலான மலையாளம், தெலுங்கு மொழித் திரைப்படங்களும் இங்கிருந்தே தயாரிக்கப்பட்டன.
பரு (pimple) என்பது தோலிற்கு கீழே காணப்படும் எண்ணெய்ச் சுரப்பிகளில், சீபம் (Sebum) எனும் எண்ணெய் அதிகப்படியாக சுரப்பதாலும், இறந்த செல்கள் தோலின் துளைகளில் சிக்கிக் கொள்வதாலும் ஏற்படும் கொப்புளம் போன்ற சீழ்கட்டி ஆகும். பருக்களுக்கு முகப்பரு மருந்துகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் மருந்துகளினால் சிகிச்சை அளிக்கலாம்.
சுஷாந்த் சிங் ராஜ்புத் (21 ஜனவரி 1986 - 14 ஜூன் 2020 ) இந்தி சினிமாவில் பங்களித்தமைக்காக மிகவும் பிரபலமான ஒரு இந்திய நடிகர் ஆவார். ராஜ்புத் தொலைக்காட்சித் தொடர்களில் நடிப்பதன் மூலம் தனது நடிப்புத் தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். அவரது முதல் நிகழ்ச்சி ஸ்டார் பிளஸின் காதல் நாடகம் கிஸ் தேஷ் மே ஹை மெரா தில் (2008) ஆகும்.
காப்ரா (Khafra) பண்டைய எகிப்தின் பழைய எகிப்து இராச்சியத்தை ஆண்ட நான்காம் வம்சத்தின் நான்காம் பார்வோன் ஆவார். இவர் பழைய எகிப்து இராச்சியத்தை கிமு 2558 முதல் கிமு 2532 முடிய 26 ஆண்டுகள் ஆண்டார். இவர் மன்னர்களின் சமவெளியில் உள்ள கீசா நகரத்தில் கிமு 2500-இல் நிறுவிய இரண்டாவது பெரிய பிரமிடு காப்ரா பிரமிடு ஆகும்.
இளம் விஞ்ஞானி திட்டம் அல்லது யுவிகா (Young Scientist Programme) ("யுவ விக்யானி கரியக்ரம்" என்பதன் சுருக்கம்) என்பது இந்திய விண்வெளித் துறையின் நிதியுதவியுடன் இஸ்ரோவின் வருடாந்திர விண்வெளி கல்வி மற்றும் பயிற்சித் திட்டமாகும். இந்தியாவில் "இளைஞர்களிடையே இளம்வயதிலே விண்வெளி தொழில்நுட்பங்களில் ஆர்வத்தை உருவாக்க" இந்திய அரசு இத்திட்டத்தினை உருவாக்கியுள்ளது. அதிகாரப்பூர்வமாக ஜனவரி 18, 2019 அன்று அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தினை இஸ்ரோ தலைவர் கே சிவன் 2019ஆம் ஆண்டு மே 17ம் நாளன்று துவக்கி வைத்தார்.
பகவத் கீதை (pronunciation ) (சமக்கிருதம்: श्रीमद्भगवद्गीता, Bhagavad Gita) என்பது இதிகாசத்தில் ஒன்றான மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். பகவத் கீதை என்பதற்கு கடவுளின் பாடல்கள் என்று பொருள்படும். மகாபாரதத்தில் நடைபெறும் குருச்சேத்திரப் போர் தொடங்கும் முன் எதிரணியை ஒருமுறை பார்வையிட்ட அருச்சுனன் அங்கே அவன் உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் போன்றோர் இருப்பதால் போரிட மறுத்தார்.
{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Tirumala|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} திருமலா லிம்னியேசு (Tirumala limniace), நீல புலி, நீல வரியன் என அழைக்கப்படும் பட்டாம்பூச்சி தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் பட்டாம்பூச்சி இனங்களில் ஒன்றாகும். இது தூரிகை-கால் பட்டாம்பூச்சி குடும்பத்தின்(டானைட்) குழுவில் உள்ள ஓர் சிற்றினமாகும். தென் இந்தியாவில் காணப்படும் இந்த பட்டாம்பூச்சி வலசைப்போதல் நிகழ்வினை மேற்கொள்கின்றது.
அதிக வருமானம் பெறும் இந்தியர்களின் வரிசைப் பட்டியல்
இது தற்போதைய இந்திய பில்லியனர்கள் பற்றிய ஃபோர்ப்ஸ் பட்டியல். இது ஒவ்வொரு ஆண்டும் செல்வம் மற்றும் சொத்துக்களின் கணக்கிட்டு அறிவிக்கப்படுகிறது. இதனை ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை சூலை 2019 இல் அறிவித்தது.
தென்னிந்தியத் திரைப்படத்துறை (Cinema of south India) என்பது ஐந்து வெவ்வேறு திரைப்படத்துறைகள் ஒன்று சேர்ந்த கூட்டமைப்பாகும். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் துளு ஆகிய திரைப்படத் தொழில் நிறுவனங்களை ஒன்றிணைத்தது. சென்னை, பெங்களூரு, கொச்சி, ஐதராபாத்து மற்றும் மங்களூர் போன்ற நகரங்களை போன்ற நகரங்களை தலைமை இடங்களாக கொண்டு இயக்குகின்றன.
ரோஜா என்பது சன் தொலைக்காட்சியில் ஏப்ரல் 9, 2018 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரில் சிபு சூர்யன், பிரியங்கா நல்கார், வெங்கட் ரங்கநாதன், ஷாமிலி சுகுமார், காயத்ரி சாஸ்திரி,வடிவுக்கரசி, சிவா, ராஜேஷ் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.2019 ஆம் ஆண்டு சன் குடும்பம் விருதுகளில் சிறந்த நாயகி கதாபாத்திரம், சிறந்த புகழ்பெற்ற தொடர், பிரபலமான ஜோடி போன்ற பல விருதுகளை வென்றுள்ளது.
தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபா சாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.
உத்தரங்குடி ஊராட்சி (Uthirangudi Gram Panchayat), தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள செம்பனார் கோயில் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, பூம்புகார் சட்டமன்றத் தொகுதிக்கும் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.
அரசி தௌசரத்து (Twosret) (Tawosret, Tausret,) (இறப்பு:கிமு 1189) பண்டைய எகிப்தின் புது இராச்சியத்தை ஆண்ட 19-ஆம் வம்சத்தின் இறுதி ஆட்சியாளரும், அரசியும் ஆவார். இவர் தனது கணவரும், பார்வோனுமான சிப்டா இறந்ததற்குப் பின் எகிப்தின் ஆட்சியாளரானார். இவர் தன கணவர் சிப்டாவுன் இணைந்து 6 ஆண்டுகளும், கணவர் இறந்த பிறகு இரண்டு ஆண்டுகளும் எகிப்தை ஆண்டார்.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (சூலை 27, 1876 – செப்டம்பர் 26, 1954) 20ம் நூற்றாண்டில் குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர். பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுகள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுகள், தேசியப் பாட்டுகள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள் என விரிந்த தளத்தில் செயல்பட்டவர்.
நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் குழு உறுபினர்(Nilakottai Pachanyat Uninon), இந்தியாவின் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். இந்த இவ்வூராட்சி ஒன்றியத்தில் இருபத்தி மூன்று ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் நிலக்கோட்டையில் இயங்குகிறது.
இந்திய சோதிடத்தில் பிரீதி என்பது, பஞ்சாங்க உறுப்புக்களுள் ஒன்றான "யோகம்" என்பதனுள் அடங்கும் 27 யோகங்களுள் முதலாவது ஆகும். இராசிச் சக்கரத்தின் தொடக்கப் புள்ளியில் இருந்து 13° 20' தொடக்கம் 26° 40' பிரீதி யோகத்துக்கு உரியது. சூரியன், சந்திரன் ஆகிய கோள்களின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை இந்தக் கோணத்தினூடாக அதிகரிப்பதற்கு எடுக்கும் நேரத்துக்குரிய யோகம் "பிரீதி" ஆகும்.
என்றி-லூயி பெர்குசன் (பிரெஞ்சு:Henri-Louis Bergson) 18 அக்டோபர் 1859 - 4 ஜனவரி 1941), 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் செல்வாக்கு மிக்க பிரெஞ்சு தத்துவவியளாலர் ஆவர். அவரது செழிப்பான, ஜீவாதாரமான கருத்துகளுக்காகவும் அவற்றை சிறந்த திறமையுடன் வழங்கியதற்காகவும், 1927 இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார். 1930ல், ஃபிரான்ஸ் அவருக்கு மிகுந்த உயரிய மரியதையான தி கிராண்ட்-க்ராய் டெ லா லிஜியன் டி'ஹான்னியர் எனும் விருதை வழங்கியது.
ஸ்ரீ நாராயண குரு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்
ஸ்ரீ நாராயண குரு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் கேரளா அரசால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு திறந்த நிலைப் பல்கலைக்கழகம் ஆகும். இது கேரள மாநிலத்தின் பதினான்காவது மாநில பல்கலைக் கழகமும் இந்தியாவின் பதினைந்தாவது திறந்தநிலைப் பல்கலைக் கழகமும் ஆகும். இந்த பல்கலைக்கழகம் பிராந்திய மையங்களையும் மற்றும் படன மையங்களையும் உள்ளடக்கி இதன் ஆட்சி நிலவரை வரம்பு கேரள மாநிலம் முழுவதும் கொண்டிருப்பதாகும்.
ரிச்சர்டு சவுத்வெல் பௌர்க்கி மாயோ பிரபு (Richard Southwell Bourke, 6th Earl of Mayo), (21 பிப்ரவரி 1822 – 8 பிப்ரவரி 1872), ஐக்கிய இராச்சியத்தின் கன்சர்வேட்டிவ் கட்சி அரசியல்வாதியும், பிரித்தானிய இந்தியாவின் 20-வது தலைமை ஆளுநரும் ஆவார். இவர் பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுநராக 12 சனவரி 1869 முதல் 8 பிப்ரவரி 1872 முடிய பணியாற்றியவர்.
திருவரங்கம் சிறீமத் ஆண்டவன் ஆசிரமம்
திருவரங்கம் சிறீமத் ஆண்டவன் ஆசிரமம் (Srirangam Srimadh Andavan Ashramam ) என்பது இராமானுசரும்,வேதாந்த தேசிகரும் உருவாக்கிய விசிட்டாத்துவைதக் கோட்பாட்டை வளர்ப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் ஓர் நிறுவனமாகும். இந்த நிறுவனம் அதன் வேர்களை வேதாந்த தேசிகர் மூலமாகவும், இராமானுசருக்கு கிடாம்பி ஆச்சன் மற்றும் கூரத்தாழ்வான் மூலமாகவும் காணலாம். இந்த நிறுவனத்தின் தலைவர் "ஆண்டவன்" அல்லது "ஆண்டவன் சுவாமிகள்" என்று அழைக்கப்படுகிறார்.
நீள் சிறகு கடற்பறவை (gull) யானது ஆலா (Tern) என்ற பறவையின் குடும்ப வகைப்பாட்டினைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இதேபோல் ரன் (Lari), தாசுமேனியாக்கடல் பகுதில் வாழும் பறவை, குட்டையான இறகுளையுடைய கடல்பறவை (auk), நீரில் நடக்கும் பறவை (wader), நீர் மேல் தவழ்ந்து செல்லும் பறவை (Skimmer), போன்றவை இந்த இனத்தைச் சேர்ந்தவையாகும்.நீள் சிறகு கடற்பறவை இருபத்தியோராம் நூற்றாண்டுவரை (Larus) என்ற குடும்பத்தில் தான் சேர்க்கப்பட்டு வந்தது. தற்போது வெளிநாட்டுப் பேரினங்கள் பல காரணங்களால் மாற்றம் கண்டுள்ளன.
தாக்க காரணி (Impact factor) என்பது அறிவியல் மற்றும் சமூக அறிவியல் சார்ந்த ஆய்வுக் கட்டுரை இதழ்களில் வெளியாகும் பதிப்புகளை சார்ந்த மதிப்பீடாகும். இது பல்வேறு துறை சார்ந்த ஆய்விதழ்களின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ளவும் அதை மதிப்பிடவும் பயன்படுகிறது. யூச்சீன் கார்ஃபீல்டூ( Eugene Garfield) என்பவர் இதை உருவாக்கினார்.
யூதர்களின் வரலாறு எனப்படுவது யூதம் எனும் மதத்தையும், அதனைப் பின்தொடரும் மனிதர்களின் கலாச்சாரத்தையும் பற்றியது ஆகும். யூதம் என்னும் மதம் முதன்முதலாக ஹெலனிய காலத்து கிரேக்கப் பதிவுகளில் காணப்படுகிறது. இதற்கு முன்பு இஸ்ரேலைப் பற்றிய குறிப்புகள் கிமு 1213–1203 ஐச் சேர்ந்த மெனப்தா கல்வெட்டுகளில் காணப்படுகிறது.
திருவள்ளுவர் (Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர் என்றும் அழைக்கப்படுகிறார்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான கி.மு.400க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கண்ணதாசன் (ஒலிப்பு ) (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
மணிமேகலை ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்று. இக்காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார்.மணிமேகலை காப்பியத்தில் அடி இணையும், அதன் வழிபாடும், வேறு கடவுள்களின் வழிபாடும் இருக்கும் நிலையில், அது ஒரு மஹாயாண காப்பியமாகவே இருக்கமுடியும். மேலும், மஹாயாண பௌத்தமானது இல்லறத்தையும், துறவறத்தையும் வலியுறுத்தும் நிலையிலும், சிலப்பதிகாரமானது இல்லறத்தையும், மணிமேகலை காப்பியம் துறவறத்தையும் வலியுறுத்துவதாலும், இவைகள் இரட்டைக் காப்பியங்கள் ஆகும்.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
மோகன்தாசு கரம்சந்த் காந்தி (ஆங்கில மொழி: Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 - ஜனவரி 30, 1948), மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (Tamil Nadu Open University அல்லது TNOU)இந்தியாவில் தமிழ்நாடு மாநில அரசினால் நிறுவப்பட்டுள்ள ஒரு பல்கலைக்கழகமாகும். தமிழகச் சட்டப்பேரவை இயற்றிய (2002ஆம் ஆண்டின் எண் 27) சட்டத்தின் கீழ் உயர்கல்வித் தொடரவியலா ஆதரவற்றோருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ள ஆண்/பெண்களுக்காகவும் இன்னும் பிற காரணங்களுக்காக பள்ளிக்கல்வியை தொடராதவர்களுக்கும் பயன்தருமாறு இப்பல்கலைகழகம் நிறுவப்பட்டுள்ளது. பல பாடத்திட்டங்களில் பட்டய, சான்றிதழ், பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பாடதிட்டங்களை வழங்குகிறது.
டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் விருது
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது (Dr APJ Abdul Kalam Award) என்பது, முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவாக தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட விருதாகும். இவ்விருது அமைக்கப்பட்ட செய்தியினை அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெ.
உத்தவகீதை பதினெண் புராணங்களில் ஸ்ரீமத் பாகவத புராணத்தில் பதினோராவது ஸ்கந்தமாக அமைந்துள்ளது. இந்தப் பதினோராவது ஸ்கந்தத்தில் ஸ்ரீகிருஷ்ண பக்தரும், அமைச்சரும், சிற்றப்பா மகனுமாகிய உத்தவருக்கு, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அருளிய உபதேசம்தான் உத்தவ கீதை என அறியப்படுகிறது. உத்தவ கீதை, 1367 சுலோகங்களுடன், முப்பத்தி ஒன்று அத்தியாயங்கள் கொண்டுள்ளது.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழகத்தில் மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
பிரம்மதந்திர சுதந்திர பரகலா மடம் (Bramhatantra Swatantra Parakala Matha) என்பது கர்நாடகாவில் நிறுவப்பட்ட ஒரு வைணவ மடமாகும். இந்து சமுதாயத்தின் வைணவ மத மரபுக்குள் வடகலை இந்து சமுதாயத்தின் வைணவ வகுப்பினரின் முதல் இடைக்கால மடமாகும். இந்த மடம் முதன்முதலில் வேதாந்த தேசிகரின் சீடரான பிரம்மதந்திர சுதந்திர ஜீயர் என்பவரால் நிறுவப்பட்டது.
பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவும் உண்டு. அறம், பொருள், இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்களில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன. உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற பிரிவின் கீழ் வருவன.
ஈரமான ரோஜாவே (தொலைக்காட்சித் தொடர்)
ஈரமான ரோஜாவே விஜய் டிவியில் ஜுலை 9 2018 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர். இந்த தொடரில் மலராக பவித்ரா நடிக்கிறார். புதுமுக நடிகர் திரவியம் வெற்றியாக அறிமுகமாகிறார்.
இளங்கோ, அல்லது இளங்கோ அடிகள் தமிழ்க் காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தை எழுதியவர். இவர் சேர அரசன் செங்குட்டுவனுடைய தம்பியெனவும், இளவரசுப் பட்டத்தைத் துறந்து துறவறம் மேற்கொண்டவர் எனவும் சொல்லப்படுகின்றது. இவர் சமண சமயத்தைத் தழுவியவராக இருந்தும், தாம் இயற்றிய நூலில் வைணவத் திருமாலையும்,சைவக் கொற்றவையையும் போற்றும் பகுதிகள் அந்தந்த சமயத்தவரால் பெரிதும் போற்றப்படுகின்றன.
கமல்ஹாசன் (Kamal Haasan, பிறப்பு:07 நவம்பர் 1954) ஒரு புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகரும் மற்றும் அரசியல்வாதியும் ஆவார். இவர் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். இவரின் மாறுபட்ட வேடங்களைக் கொண்ட நடிப்பிற்காக பரவலாக அறியப்படுகிறார்.கமல்ஹாசன் சிறந்த குழந்தை நட்சத்திரம் மற்றும் சிறந்த நடிகர் என்ற முறையில் 4 தேசிய விருதுகளும், சிறந்த படம் என்ற முறையில் தயாரிப்பாளராக 1 தேசிய விருதும், 10 தமிழக அரசு திரைப்பட விருதுகள்கள், 4 ஆந்திர அரசின் நந்தி விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள் உள்ளடங்கலாக பல இந்திய விருதுகளை வென்றுள்ளார், இவர் சிறந்த பிறமொழிப்படத்திற்கான, அகாதமி விருதிற்கு இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களில் அதிகமானவற்றிலும் நடித்திருந்தார்.
சிந்து பைரவி (தொலைக்காட்சித் தொடர்)
உத்தரன் அல்லது சிந்து பைரவி என்பது ஒரு இந்தி மொழி தொலைகாட்சித் தொடர் ஆகும். இந்த தொடர் திசம்பர் 1, 2008 முதல் சனவரி 16, 2015 வரை திங்கள் முதல் வெள்ளி வரை கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி 1,549 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது. இந்த தொடர் சூன் 14, 2010 முதல் ராஜ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பானது.
பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாக கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளை காப்பிய தலைவராக கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் விவரிக்கிறார்.
விஜய் சேதுபதி (16 சனவரி 1978) என்பவர் தமிழ்நாட்டை சேர்ந்த திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவர் தென்மேற்கு பருவக்காற்று (2010), பீட்சா (2012), நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் (2012), நானும் ரௌடி தான் (2015), சேதுபதி (2016 திரைப்படம்) (2016), 96 (2018) போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படும் நடிகர் ஆவார். இவர் இரண்டு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் மற்றும் மூன்று விஜய் விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.
கமலமுனி எனும் சித்தர், பதினெண் சித்தர்களுள் ஒருவராவார். இவர் இவர் குறவர் குடியில் வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தார்.இவர் வாழ்ந்த காலம் 4000 ஆண்டுகள் 48 நாள் ஆகும் சிலர் இவரை நான்முகனே கமல முனியாக அவதரித்தார் எனக்கூறுவர். இவர் போகரிடம் சீடனாய் சேர்ந்து யோகம் பயின்று, சித்தர் கூட்டத்துள் ஒருவராய்ப் புகழ்ப் பெற்றவர்.
ஆரியன்காவு தர்மசாஸ்தா கோயில் உலகம் உய்வதற்காகவும், தர்மம் தழைத்தோங்கவும் மலையும் ஆழமான பள்ளத்தாக்குகளும் நிறைந்த மலையாள தேசத்தில் ஸ்ரீ பரசுராமரால் கிழக்கு மலை தொடர்ச்சியில் நான்கு இடங்களில் நான்கு தர்மசாஸ்தா கோவில்களை ஸ்தாபிதம் செய்கிறார். அவை ஹிந்து (வர்ணா)ஆசிரம தர்மபடி குளத்துபுழையில் பாலகனாக "பிரமச்சார்ய நிலை"யிலும், ஆரியன்காவில் திருமண கோலத்தில் "கிரகஸ்தாஸ்ரம" நிலையிலும், அச்சன்கோவிலில் "வானப்பிரஸ்த" நிலையிலும் சபரிமலையில் "சந்நியாசி" கோலத்திலும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. முருகனுக்கு ஆறுபடை வீடு.
சிற்றறைச் சிறை (Cellular Jail) (காலா பாணி- கருப்புத் தண்ணீர்) ஆழ்கடல் நாடு கடத்தப்பட்டவர்கள்) என்றழைக்கப்படும் இச்சிறை அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகரமான போர்ட் பிளேர் நகரத்தில், 1896-இல் இதன் கட்டுமானப் பணி துவக்கப்பட்டு, 1906-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட சிறையாகும். இந்தியாவின் விடுதலைக்காக போராடியவர்கள் பலர் இச்சிறையில் அடைக்கப்பட்டனர். இது ஆறு வரிசைகளில், மூன்று தளங்களுடன் கொண்டது.
பெண்என்னும் சொல் பல பொருள்களில் பயன்படுகின்றது. பால் பகுப்பில் பெண் பால் எல்லா உயிரினங்களினதும் பெண்." பாலாரை வயது வேறுபாடின்றிக் குறிக்கப் பயன்படுகின்றது. ஆங்கிலத்தில் "பெண்" என்ற உச்சரிப்பு கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் விம்பானா, 'wīfmann என்றும் பின்னர் வும்மான (wīmmann to wumman) என்றும் சொல்லிருந்து மருவி விம்மனுக்கும், இறுதியாக உச்சரிப்புடைய விம்மன் என்ற மாறியது (பெண்ணுக்கும்) அது பழைய ஆங்கிலத்தில், விபெய்ன் "பெண் மனிதனை" குறிக்கிறது,என்றும் கருத்து உண்டு.
மம்மி (Mummy) என்பது தற்செயலாகவோ, திட்டமிட்டோ காலத்தால் பாதுகாக்கப்பட்ட உயிரினத்தின் சடலத்தை குறிக்கும். இயற்கையாகவே சில வேதிப்பொருள்களாலும், கடும் குளிராலும் இறந்த உயிரினத்தின் சடலம் பாதுகாக்கப்படுவது உண்டு. இவ்வாறு காலத்தால் அழியாத மனித மம்மிகளையும், மற்ற விலங்குகளின் மம்மிகளையும் உலகமெங்கும் அகழ்வாராட்சியாளர்கள் கண்டுடெடுத்துள்ளனர்.
கல்வி (Education) என்பது குழந்தைகளை, உடல் மற்றும் மன வளர்ச்சியில் அறிவு, நல்லொழுக்கம் ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும். கல்வியாளர்கள் கூற்றின்படி, இளைய தலைமுறையினரை முறையாக வழி நடத்துவதிலும், சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்வி என்பது ஒரு சமூக நிறுவனம்.