The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
முத்தையா முரளிதரன் (Muttiah Muralitharan, பிறப்பு: ஏப்ரல் 17, 1972, கண்டி) பொதுவாக முரளி என்றும் அழைக்கப்படுகிறார். இலங்கையின் மலையகத் தமிழரான இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஆவார். 2002 ஆம் ஆண்டில் விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பானது இவரை தேர்வுத் துடுப்பாட்ட வரலாற்றில் மிகச்சிறந்த பந்து வீச்சாளர் எனக் குறிப்பிடுகிறது.
தன்ராஜ் மாஸ்டர் அல்லது மாஸ்டர் தன்ராஜ் (Master Dhanraj (also credited as Dhanraj Master) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத் தலைநகரான சென்னையில் உள்ள மைலாப்பூரைச் சேர்ந்த இசை ஆசிரியர், இசைக் கலைஞர் மற்றும் பல்வேறு இசைக் கருவிகளை வாசிக்கும் திறன் கொண்ட பன்முக இசைக் கலைஞர் ஆவார். இவர் மேற்கத்திய இசைக் கருவிகளை கையாளுவதிலும், வாசிப்பதிலும் வல்லவர்.. 1948-இல் வெளியிடப்பட்ட தமிழ் திரைப்படமான சந்திரலேகா திரைப்படத்தில், முரசு நடனக் காட்சியில், இவர் முதன் முதலில் மேற்கத்திய இசையை அறிமுகப்படுத்தினார்.இவரிடம் இசை பயின்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் இளையராஜா, ஏ.
ராவ் சாகேப் ஆபிரகாம் பண்டிதர் ஆகஸ்ட் 2, 1859 - 1919 ) புகழ்பெற்ற தமிழிசை கலைஞர், சித்த மருத்துவர் மற்றும் தமிழ் கிறித்தவ கவிஞர். ஆரம்ப காலத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய ஆபிரகாம் பண்டிதர், பின் தமிழ் இலக்கியத்திலும், தமிழ் மருத்துவத்திலும் கொண்ட ஆர்வத்தினால், முழுநேர மருத்துவராகப் பயிற்சி பெற்று பணியாற்றலானார். ஆபிரகாம் பண்டிதர் தமிழிசைக்கு ஆற்றிய பணி சிறப்பானது.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
ஜமாலிய்யா செய்யித் யாஸீன் மெளலானா (1307-1386 AH/1889-1966 AD) , (ஆங்கிலம் : Jamaliyya Seyyid Yaseen Mowlana , அரபு: جمالية أسسيد ياسين مولانا ), இருபதாம் நுாற்றாண்டில் இலங்கையில் வாழந்த மார்க்க அறிஞரும்,சூபி மகானும்,எழுத்தாளரும்,கவிஞரும் ஆவார். இவர் இலங்கை மற்றும் தமிழ்நாட்டு முஸ்லிம்களின் கல்வி மற்றும் சமூக மறுலமர்ச்சிக்குப் பங்காற்றிய ஒருவராகக் கருதப்படுகின்றார்.
பாரதிதாசன் (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் 'கனகசுப்புரத்தினம்' ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
கள்ளர் (Kallar) எனப்படுவோர் தமிழகத்தில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் முக்குலத்தோர்களில் ஒரு பிரிவினர் ஆவர். பொதுவாக கள்ளர், மறவர், அகமுடையர் ஆகிய மூன்று பிரிவினரையும் சேர்ந்து முக்குலத்தோர் எனப்படுவர்.இக்குழுவினரில் புதுக்கோட்டை சமஸ்தானம் தொண்டைமான் மன்னரும், பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர்.
2020 இந்தியன் பிரீமியர் லீக் என்பது 2007ஆம் ஆண்டு பிசிசிஐயால் தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் என்ற தொழில்முறை இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரின் 13ஆம் பதிப்பாகும். மார்ச் 29இல் தொடங்கவிருந்த இத்தொடர், உலகளாவிய கொரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக ஏப்ரல் 15க்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்ததை தொடர்ந்து ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது.
டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் விருது
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது (Dr APJ Abdul Kalam Award) என்பது, முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவாக தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட விருதாகும். இவ்விருது அமைக்கப்பட்ட செய்தியினை அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெ.
இளையராஜா (Ilaiyaraaja, பிறப்பு: சூன் 2, 1943) இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர் ஆவார். இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 1000 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இந்தியாவில் அதிகவசூல் செய்த திரைப்படங்களின் பட்டியல்
இந்த பட்டியல் இந்தியாவில் அதிக வசூல் செய்த திரைப்படங்களை பற்றிய புள்ளி விபரங்களை பற்றியதாகும். மொத்த உள்நாட்டு வசூலில் பெரும்பாலும் இந்தி திரைப்படங்களும், அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களும் உள்ளன.
வீரபாண்டிய கட்டபொம்மன், தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்கார மன்னர் ஆவார். இவர் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர் இனத்தில் பிறந்தவர். இவருடைய முன்னோர்கள் முகமதியர்களின் படையெடுப்புக்குப்பின்பு கம்பிளி ராஜ்ஜியம் இழந்து விஜயநகரம் உருவாக்கினர்.
இந்திய விடுதலைப் போராட்ட அருங்காட்சியகம்
இந்திய விடுதலைப் போராட்ட அருங்காட்சியகம் (Swatantrata Sangram Sanghralaya), இந்தியாவின் தலைநகமான தில்லி செங்கோட்டையில் அமைந்துள்ளது. இதனை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பராமரிக்கிறது.தமிழ்நாட்டின் முதல் இந்த இந்தியாவை வென்று கொடுத்த தலைவன் மாவீரன் மருதநாயகம் பிள்ளை.
விளக்கு விருது அமெரிக்கா வாழ் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பினரால் புதுமைப்பித்தன் நினைவாக கலை - இலக்கியத்தில் சிறப்பாகப் பங்காற்றுபவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. தமிழ்ச் சூழலில் தகுதிவாய்ந்த படைப்பாளிகள் உரிய அங்கீகாரமும், கவனமும் பெறவேண்டும் என்பதுதான் இந்த விருதின் நோக்கம். விருதுடன் ஒரு லட்ச ரூபாய் பரிசுத்தொகையும் பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படுகிறது.
புதுக்கவிதை என்பதற்கான வரைவிலக்கணம் என்பது இன்றைய சூழலில் பல்வேறுபட்டதாகக் காணப்படுகின்றது. எனினும் இலகுவாக புதுக்கவிதை என்பது கவிதைக்குரிய மரபு, இலக்கணம் அற்ற ஒரு கவிதை முறையாக நோக்கப்படுகின்றது. மரபுக்கவிதையானது சீர், தளை, அடி, தொடை என்னும் கட்டுப்பாடுகளைக் கொண்டு காணப்பட புதுக்கவிதை அவற்றை புறந்தள்ளியதாக புதுக்தோற்றத்துடன் காணப்படுகின்றது.
ஜீயோ டாமின் மா (Geo Damin M பிறப்பு 24 சூன் 1983) நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டம். இவர் சென்னையில் கட்டிட வடிவமைப்பாளராக பணி செய்கிறார். இவர் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் பூவுலகின் நண்பர்கள் இயக்கத்துடன் இணைந்து பல சுற்றுச்சூழல் சார்ந்த கட்டுரைகள், ஆய்வுகள் மேற்க்கொண்டு வருகிறார், மேலும் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம், விலங்குகள் மற்றும் பறவைகள் போன்ற சூழலியல் சார்ந்த பிரச்சனைகளை ஆராய்ந்து எழுதுபவர்களில் ஒருவர்.
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் (தமிழில் அறிவுசேரர் என்று பொருள் தரும்.), அல்லது சம்பந்தர் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் முதல் வைத்து எண்ணப்படும் நால்வருள் ஒருவராவார்.
மருதநாயகம் பிள்ளை என்றழைக்கப்பட்ட முகமது யூசுப் கான் ஆர்க்காட்டு படைகளில் போர் வீரராகவும், பிற்காலத்தில் கிழக்கிந்திய படைகளுக்கு படைத்தலைவராகவும் விளங்கினார். 1725 ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம் பனையூரில் பிறந்தார். ஆங்கிலேயரும், ஆர்க்காட்டு நவாப்புகளும் தமது எதிரிகளான தமிழகத்தினைச்சேர்ந்த பாளையக்காரர்களுக்கு எதிராக மருதநாயகத்தினை போரில் ஈடுபடச்செய்தனர்.
மங்கடா கோயிலகம் அல்லது மங்ஙடா கோயிலகம் (Mankada Kovilakam) என்பது இந்தியாவின், கேரளத்தின், மலப்புறம் மாவட்டம், மங்கடாவில், மஞ்சேரி சாலையில் உள்ள ஒரு அரண்மனையானயாகும். இந்த அரண்மனையானது அந்தக் கால கதவுகள், படிப்புறா என்னும் கேரள பாரம்பரிய வீட்டு வாயில்களில் உள்ள பொதுவான தங்கும் அறை ஆகியவற்றை கடந்துவந்து இந்த கோயிலகத்தைக் காணலாம். இந்த அரண்மனையில் வரலாற்றுக் கால பாதாள பூட்டு, திறவுகோள் போன்றவை உள்ளன.
வீராணம் ஏரி தமிழ்நாட்டின், கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோயில் அருகே லால்பேட்டை தொடங்கி சேத்தியாதோப்பு அருகில் உள்ள பூதங்குடி கிராமத்தில் முடிவடைந்து இதனுடைய உதிரி நீரானது சேத்தியாதோப்பில் செல்லும் வெள்ளாற்றில் கலக்கின்றது. இதன் அருகில் உள்ள நகரம் சேத்தியாத்தோப்பு 2 கி.மீ. வீராணம் ஏரி சிதம்பரத்திலிருந்து 14 கி.மீ தொலைவில் உள்ளது.
இந்திய சோதிடத்தில் பிரீதி என்பது, பஞ்சாங்க உறுப்புக்களுள் ஒன்றான "யோகம்" என்பதனுள் அடங்கும் 27 யோகங்களுள் முதலாவது ஆகும். இராசிச் சக்கரத்தின் தொடக்கப் புள்ளியில் இருந்து 13° 20' தொடக்கம் 26° 40' பிரீதி யோகத்துக்கு உரியது. சூரியன், சந்திரன் ஆகிய கோள்களின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை இந்தக் கோணத்தினூடாக அதிகரிப்பதற்கு எடுக்கும் நேரத்துக்குரிய யோகம் "பிரீதி" ஆகும்.
தமிழ் இலக்கணத்தில் கருப்பொருள் என்பது சொற்களினால் உணரப்படும் மூன்று பொருள் வகைகளுள் ஒன்றாகும். முதற்பொருள், உரிப்பொருள் என்பன ஏனைய இரண்டு வகைகள். கருப்பொருள்கள் எத்தனை என்பது குறித்துத் தெளிவாகக் குறிப்பிடாத தொல்காப்பியம் தெய்வம், உணா, மா, மரம், புள், பறை, செய்தி, யாழின் பகுதி என்று எட்டு வகைளின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளதுடன், அவ்வகை பிறவும் கருப்பொருள் ஆகும் என்கிறது.
அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படங்களின் பட்டியல்
அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படங்களின் பட்டியல் என்பது இந்தியத் திரைப்படத்துறையில் அதிக வருவாய் பெற்ற திரைப்படங்களின் பட்டியல் ஆகும். இப்பட்டியல் அதிகாரப்பூர்வமானத் தகவல்களைக் கொண்டு மட்டுமே உருவாக்கப்பட்டது. அதிக வசூல் பெரும் படங்கள் பிரதானமாக பாலிவுட் திரைப்படங்களாகவே உள்ளன.
சாக்லேட் (தொலைக்காட்சித் தொடர்)
சாக்லேட் என்பது சன் தொலைக்காட்சியில் 16 திசம்பர் 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பான சமையல் மற்றும் காதல் காட்சிகள் நிறைந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடர் இதே பெயரில் சூர்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மலையாள மொழித் தொடரின் மறு ஆக்கம் ஆகும்.இந்த தொடரில் கதாநாயகனாக நந்தினி தொடர் புகழ் ராகுல் ரவி என்பவர் அர்ஜுன் என்ற கதாபாத்திரத்திலும் இவருக்கு ஜோடியாக இனியா என்ற கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை ஷாமிலி நடித்துள்ளார்கள். இந்த தொடர் கொரோனாவைரசு காரணத்தால் 31 மார்ச்சு 2020 முதல் 84 அத்தியாயங்களுடன் நிறுத்தப்பட்டுள்ளது.
அப்துல் கலாம் மணிமண்டபம் என்பது தமிழ்நாட்டின், இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம் தீவில் பேக்ரும்பு என்ற இடத்தில் அமைந்துள்ள அப்துல் கலாம் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு நினைவு மண்டபமாகும். இது சுமார் மூன்றரை ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது இதன் தோற்றம், டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையை பிரதிபலிப்பது போன்று அமைந்துள்ளது.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபா சாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.
தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (சூலை 27, 1876 – செப்டம்பர் 26, 1954) 20ம் நூற்றாண்டில் குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர். பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுகள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுகள், தேசியப் பாட்டுகள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள் என விரிந்த தளத்தில் செயல்பட்டவர்.
ஆள்வீத வருமான அடிப்படையில் நாடுகள் பட்டியல்
2019 ஆம் ஆண்டின் மொத்த தேசிய உற்பத்தியில் ஆள்வீத வருமானத்தின் அடிப்படையில் நிலைபடுத்தப்பட்ட நாடுகளின் பட்டியலாகும். இங்கு 2019 ஆம் ஆண்டுக்கான ஆள்வீத வருமான அமெரிக்க டாலரில் தரப்பட்டுள்ளது. மேலும் அனைத்துலக நாணய நிதியம் (International Monetary Fund) இல் அங்கத்துவம் பெற்றுள்ள 185 நாடுகள் மற்றும் சிறப்பு பிராந்தியங்களுக்கான பட்டியல் தரப்பட்டுள்ளது.
கோலிவுட் என்று அழைக்கப்படும் தமிழ்த் திரைப்படத்துறை எனப்படுவது தமிழ் நாட்டில் இருந்து இயங்கும் தமிழ் மொழித் திரைப்படத்துறை ஆகும். இந்தியாவில் இந்தி திரைத்துறைக்கு அடுத்து பரவலாக அறியப்படும் திரைத்துறை ஆகும். 1980கள் வரை சென்னையில் கோடம்பாக்கத்தில் இருந்த திரைப்படத் தயாரிப்பு வசதிகளை முன்னிட்டு பெரும்பாலான மலையாளம், தெலுங்கு மொழித் திரைப்படங்களும் இங்கிருந்தே தயாரிக்கப்பட்டன.
பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவும் உண்டு. அறம், பொருள், இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்களில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன. உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற பிரிவின் கீழ் வருவன.
சால் ஆறு (Sal River) என்பது இந்தியாவின் கோவாவின் சால்செட்டேயில் உள்ள ஒரு சிறிய நதியாகும். இந்த ஆறு வெர்னா அருகே துவங்கி, நூவம், மோன்கல், செராலிம், கோல்வா, மார்கோவா, பெனாலிம், நாவாலிம், வர்கா, ஓர்லிம், கர்மோனா, டிராமாபூர், சின்சினிம், அசோல்னா,கேவோலோசிம், மோபோர் கிராமங்கள் வழியே பாய்ந்து அரபிக்கடலில் பெடுல் என்ற இடத்தில் கலக்கின்றது . 2008 முதல் பெனாலிம்வாசிகள் இந்த ஆறு மாசுபடுவதாக அரசாங்கத்திடம் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழகத்தில் மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
கிரேக்க மொழி அல்லது கிரேக்கு அல்லது எல்லினிக்கா (Greek) என்பது கிரீசு நாட்டுக்கும் கிழக்கு மத்தியதரைக் கடலின் மற்ற பகுதிகளுக்கும் சொந்தமான இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்திலுள்ள தற்சார்புடைய ஒரு கிளை மொழியாகும்.உலகில் தோன்றிய உலகின் முதல் மூத்த மொழி என்றால் அது கிரேக்க மொழி ஆகும். உலகிலேயே ஒரு மொழிக்கு எழுத்து வடிவம் தந்த முதல் மொழி கிரேக்கம் ஆகும். உலகில் தோன்றிய முதல் மாந்தன் தன் நாவை அசைத்து பேசிய முதல் மொழி கிரேக்க மொழி ஆகும்.
கண்ணதாசன் (ஒலிப்பு ) (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
திருவள்ளுவர் (Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர் என்றும் அழைக்கப்படுகிறார்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான கி.மு.400க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திராவிட மொழிக் குடும்பம் (dravidian language family) என்பது மரபு வழியாக இணைந்த கிட்டத்தட்ட 85 மொழிகளை உள்ளடக்கியதாகும். கிட்டத்தட்ட 217 மில்லியன் மக்கள் இம்மொழிகளைப் பேசுகின்றனர். தென்னிந்தியாவைச் சேர்ந்த முக்கிய மொழிகளான, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்பன ஒன்றுடனொன்று நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பதும், ஏனைய இந்திய மொழிகளிலிருந்து வேறுபட்டு இருப்பதும் அறியப்பட்டுள்ளது.
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது.
கலித்தொகை சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது நூலாகும். பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூலான கலித்தொகையில் ஓசை இனிமையும், தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் சிறப்பான அமைப்புகளால் அமைந்த கலிப்பாவினால் பாடப்பட்ட 150 பாடல்கள் உள்ளன. அகப்பொருள் துறை பாட ஏற்ற யாப்பு வடிவங்களாக கலிப்பாவையும் பரிபாடலையும் தொல்காப்பியர் கூறுகிறார்.
2015 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
இது 2015 ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல் இந்த புள்ளிவிவரங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா) "2015 ஆண்டு புள்ளிவிவரங்களுக்கான" மதிப்பீடுகளாகும், இது நாடு மற்றும் பிரதேசத்தின் அடிப்படையில் 100,000 க்கும் அதிகமான மக்களை பட்டியலிடுகிறது.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
மணிமேகலை ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்று. இக்காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார்.மணிமேகலை காப்பியத்தில் அடி இணையும், அதன் வழிபாடும், வேறு கடவுள்களின் வழிபாடும் இருக்கும் நிலையில், அது ஒரு மஹாயாண காப்பியமாகவே இருக்கமுடியும். மேலும், மஹாயாண பௌத்தமானது இல்லறத்தையும், துறவறத்தையும் வலியுறுத்தும் நிலையிலும், சிலப்பதிகாரமானது இல்லறத்தையும், மணிமேகலை காப்பியம் துறவறத்தையும் வலியுறுத்துவதாலும், இவைகள் இரட்டைக் காப்பியங்கள் ஆகும்.
விஜய் சேதுபதி (16 சனவரி 1978) என்பவர் தமிழ்நாட்டை சேர்ந்த திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவர் தென்மேற்கு பருவக்காற்று (2010), பீட்சா (2012), நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் (2012), நானும் ரௌடி தான் (2015), சேதுபதி (2016 திரைப்படம்) (2016), 96 (2018) போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படும் நடிகர் ஆவார். இவர் இரண்டு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் மற்றும் மூன்று விஜய் விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.
பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாக கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளை காப்பிய தலைவராக கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் விவரிக்கிறார்.
புதிய சனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சி
புதிய சனநாயக மார்க்சிச-லெனினிசக் கட்சி (New-Democratic Marxist-Leninist Party, NDMLP) என்பது இலங்கையில் நீண்டகாலமாக இயங்கி வரும் ஒர் இடதுசாரி சமூக, அரசியல் கட்சி ஆகும். மாக்சியம், லெனினியம், மற்றும் மாவோயிசம் ஆகிய சிந்தனைகளைத் தனது வழிகாட்டியாகக் கொண்டுள்ளது. 1960களில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு எதிர்ப்புப் போராட்டம், மலையகத்தில் மேல் கொத்மலை நீர்த்தேக்க எதிர்ப்புப் போராட்டம் போன்றவற்றில் இந்தக் கட்சியின் பங்கு கணிசமானது.
கமலமுனி எனும் சித்தர், பதினெண் சித்தர்களுள் ஒருவராவார். இவர் இவர் குறவர் குடியில் வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தார்.இவர் வாழ்ந்த காலம் 4000 ஆண்டுகள் 48 நாள் ஆகும் சிலர் இவரை நான்முகனே கமல முனியாக அவதரித்தார் எனக்கூறுவர். இவர் போகரிடம் சீடனாய் சேர்ந்து யோகம் பயின்று, சித்தர் கூட்டத்துள் ஒருவராய்ப் புகழ்ப் பெற்றவர்.
உழவு அல்லது விவசாயம் அல்லது கமம் என்பது உணவுக்காகவும் ஏனைய பயன்பாடுகளுக்காகவும் சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும், கால்நடை வளர்ப்பையும் குறிக்கும். வேளாண்மை ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் ஆகும். இத்தொழிலில் மனிதன் இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருள்களைச் சேகரித்துப் பயன்படுத்திக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவ்வியற்கையோடு ஒன்றிணைந்து பணியாற்றி உணவுப் பொருட்களை உற்பத்தி செய்துகொள்கிறான்.
மோகன்தாசு கரம்சந்த் காந்தி (ஆங்கில மொழி: Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 - ஜனவரி 30, 1948), மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.
இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்
இந்தியக் குடியரசுத் தலைவர் என்பவர், இந்திய தேசத்தின் தலைவர் மற்றும் இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதியும் ஆவார். இந்திய ஜனாதிபதி நாட்டின் முதல் குடிமகன் என குறிப்பிடப்படுகிறார். இந்திய அரசியலமைப்பின் மூலம் இந்த அதிகாரங்கள் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்ட போதிலும், இந்த நிலை பெரும்பாலும் சம்பிரதாயம் போன்ற ஒன்றாகும்.
சீரடி சாய்பாபா (Shirdi Sai Baba, செப்டம்பர் 28, 1838. – அக்டோபர் 15, 1918), (மராத்தி: शिर्डीचे श्री साईबाबा,உருது: شردی سائیں بابا), மகாராட்டிரத்தில் அகமது நகர் மாவட்டத்தில் சீரடியில் வசித்திருந்த ஓர் இந்திய குரு, யோகி மற்றும் சுஃபி துறவி. இவரை இந்துக்களும் இசுலாமியரும் புனித சாமியாராக போற்றுகின்றனர்.
தமிழ்நாட்டில் காணப்படும் பட்டாம்பூச்சிகளின் பட்டியல்
தமிழ்நாட்டில் காணப்படும் பட்டாம்பூச்சிகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. தமிழகத்தில் 319 வண்ணத்துப்பூச்சியினங்கள் பதிவாகியுள்ளன.
கல்வி (Education) என்பது குழந்தைகளை, உடல் மற்றும் மன வளர்ச்சியில் அறிவு, நல்லொழுக்கம் ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும். கல்வியாளர்கள் கூற்றின்படி, இளைய தலைமுறையினரை முறையாக வழி நடத்துவதிலும், சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்வி என்பது ஒரு சமூக நிறுவனம்.
முத்துராமலிங்கத் தேவர் (Muthuramalingam Thevar, அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 30, 1963) ஆன்மிகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்கு, தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலைசிறந்த பேச்சாளராகவும், ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாளை அரசு விழாவாக, தமிழக அரசு பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றது.