The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
2020 இந்தியன் பிரீமியர் லீக் என்பது 2007ஆம் ஆண்டு பிசிசிஐயால் தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் என்ற தொழில்முறை இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரின் 13ஆம் பதிப்பாகும். மார்ச் 29இல் தொடங்கவிருந்த இத்தொடர், உலகளாவிய கொரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக ஏப்ரல் 15க்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்ததை தொடர்ந்து ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
பாரதிதாசன் (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் 'கனகசுப்புரத்தினம்' ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
டான்ஸ்ரீ அந்தோனி பிரான்சிஸ் பெர்னாண்டஸ் CBE அல்லது டோனி பெர்னாண்டஸ் (மலாய்: Tony Fernandes; பிறப்பு: 30 ஏப்ரல்1964) என்பவர் மலேசியத் தொழில்முனைவர். ஏர் ஏசியா எனும் மலிவு விலை விமானச் சேவையை உருவாக்கியவர். இப்போது எல்லோரும் பறக்கலாம் (Now everyone can fly) எனும் வாசகத்தை உலகத்திற்கு அறிமுகம் செய்தவர்.
அருள்மொழிவர்மன் என்கின்ற பேரரசர் இராசகேசரி வர்மன் முதலாம் இராசராச சோழன் சோழ பேரரசின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவார். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1014 வரையாகும். இவர் மகன் முதலாம் இராசேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவிய பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே.
மணிமேகலை ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்று. இக்காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார்.மணிமேகலை காப்பியத்தில் அடி இணையும், அதன் வழிபாடும், வேறு கடவுள்களின் வழிபாடும் இருக்கும் நிலையில், அது ஒரு மஹாயாண காப்பியமாகவே இருக்கமுடியும். மேலும், மஹாயாண பௌத்தமானது இல்லறத்தையும், துறவறத்தையும் வலியுறுத்தும் நிலையிலும், சிலப்பதிகாரமானது இல்லறத்தையும், மணிமேகலை காப்பியம் துறவறத்தையும் வலியுறுத்துவதாலும், இவைகள் இரட்டைக் காப்பியங்கள் ஆகும்.
தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
சுரதா (நவம்பர் 23, 1921 - சூன் 20, 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக்கவிதைத் தொகுப்புகள் தந்தவர்.
கருணாகரன் (1963 செப்ரெம்பர் 05 ) ஈழத்தின் முக்கியமான தமிழ்க்கவிஞர். எழுத்தாளர், சுயாதீன ஊடகவியலாளர், இதழாளர், பதிப்பாளர், விமர்சகர், ஈழப்போராட்டத்தில் பங்கேற்ற போராளி எனப் பல தளங்களில் தொடர்ச்சியாகவும் தீவிரமாகவும் இயங்கி வரும் இவருடைய கட்டுரைகளும் கவிதைகளும் மிகப் பரவலான அறிமுகத்தையும் விமர்சனத்தையும் கண்டவை.
சூதாட்டம் (Gambling) என்பது, பணம் அல்லது வேறு பெறுமதியான பொருட்களைப் பணயமாக வைத்து ஆடுகின்ற, நிச்சயமற்ற விளைவைக் கொடுக்கக்கூடிய ஒரு விளையாட்டு வகை ஆகும். இதன் அடிப்படை நோக்கம் பணயமாக வைக்கப்பட்ட பணம் அல்லது பொருளிலும் கூடிய பெறுமதியான பணத்தையோ, பொருளையோ அடைவதாகும். பொதுவாக இதன் பெறுபேற்றைக் குறுகிய காலத்துக்குள் அறியக்கூடியதாக இருக்கும்.
தெற்காசிய இனக்குழுக்களின் மரபியல், தொல்மரபியல் துறைகள் அவ்வினக்குழு மக்களின் மரபியல் வரலாற்றை இனங்காண முயல்கின்றன. ஐரோப்பாசிய கண்ட மக்களின் மரபியல் பரவலை அறிய, இந்தியாவின் புவியியல் இருப்பிட அமைவால் இந்திய மக்களின் மரபியல் பரவலாய்வு இன்றியமையாததாகிறது. ஊன்குருத்து மரபன் வேறுபாட்டாய்வுகள் இந்தியத் துணைக்கண்ட மக்கள்தொகையின் மரபியல் ஒற்றுமையைக் காட்டுகின்றன.
தமிழ்நாட்டில் சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், காஞ்சீபுரம், திண்டுக்கல், திருவள்ளூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, திருநெல்வேலி, கரூர், பெரம்பலூர், தூத்துக்குடி, சேலம், நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை, கோயம்புத்தூர், ஈரோடு தேனி, மதுரை, ஆகிய மாவட்டங்களில் தொட்டிய நாயக்கர் வசித்து வருகின்றனர். தெலுங்கு மொழி பேசும் இவர்கள் தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் பிரிவில் இடம் பெற்றுள்ளனர். இந்த சாதியினர் ராஜகம்பளம், கொல்லவார், சில்லவர், தோக்களவார் மற்றும் தொழுவ நாயக்கர் என்னும் உட்பிரிவுகளின் பெயரிலும் அழைக்கப்படுகின்றனர்.
சின்னம்மை (chickenpox), அல்லது பயற்றம்மை என்பது நீர்க்கோளவான் சின்னம்மை என்றும் அழைக்கப்படுகிறது. இது நீர்க்கோளவான் சின்னம்மை குழல் அமைப்பு வைரஸின் (VZV) மூல தொற்றின் காரணத்தினால் ஏற்படும் அதிகமான தொற்றும் பண்புடைய உடல்நலக் குறைவாகும். இது பொதுவாக தோல் கொப்புள விசிற்பாக இரண்டு அல்லது மூன்று முறைகளில் தென்பட ஆரம்பிக்கும்.
பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாக கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளை காப்பிய தலைவராக கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் விவரிக்கிறார்.
உலக இளையோர் நாள் 2019 (World Youth Day 2019) 16வது உலக இளையோர் நாள் என்பது இளைஞரை மையமாகக் கொண்டு கத்தோலிக்க திருச்சபையால் பனாமா நகரில் 2019ஆம் ஆண்டு சனவர் மாதாம் 22ஆம் நாள் முதல் 27ஆம் நாள் வரை ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச நிகழ்ச்சி ஆகும். இது முதல் முறையாக மத்திய அமெரிக்காவில் கொண்டாடப்பட்டது.திருத்தந்தை பிரான்சிசு உலக இளைஞர் தினம் 2016 கிராக்கொவ், போலந்து கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றி அடுத்த உலக இளையோர் நாள் பனாமாவில் நடைபெறும் என்று அறிவித்தார்.
இந்திய எண் முறைமை (Indian numbering system) என்பது இரண்டு பதின்ம நிலைகளாக எண்களைக் குழுக்களாக்கும் மறை எண் முறைமையை அடிப்படையாகக் கொண்ட இந்தியத் துணைக்கண்டத்தில் (இந்தியா, பாக்கித்தான், வங்காளதேசம், நேப்பாளம் ஆகிய நாடுகள் உள்ளடங்கலாக) பயன்படுத்தப்படும் எண் முறைமை ஆகும். உலகின் ஏனைய பெரும்பாலான இடங்களில் மூன்று பதின்ம நிலைகளாக எண்களைக் குழுக்களாக்கும் முறை பெருமளவிற் பயன்படுத்தப்படுகின்றது. ஆனாலும் தென்னாசிய எண் முறைமையில் பயன்படுத்தப்படும் Lakh, Crore முதலிய சொற்கள் இந்திய ஆங்கிலத்திலும் பாக்கித்தானிய ஆங்கிலத்திலும் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.
ஓர் அமிலம் அல்லது காடி அல்லது புளிமம் (Acid)என்பது ஒரு புரோட்டானைக் கொடையாக வழங்கக்கூடிய மூலக்கூறு அல்லது அயனியைக் குறிப்பிடுகிறது. புரோட்டான் என்பது ஐதரான் அல்லது ஐதரச மின்மவணு H+ ஆகும் மாறாக, எலக்ட்ரான் இணையுடன் சேர்ந்து (இலூயிக் அமிலம்) சக பிணைப்பாக உருவாகும் திறன் கொண்டவற்றையும் காடி அல்லது அமிலம் எனலாம். புரோட்டான் வழங்கிகள் அல்லது புரோன்சிட்டெடு அமிலங்கள் முதலாவது வகை அமிலங்கள் எனப்படுகின்றன.
கோவில்பட்டி (ஆங்கிலம்:Kovilpatti), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு தொழில் நகரமாகும். இது கோவில்பட்டி வட்டம் மற்றும் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், சிறப்புநிலை நகராட்சியும் ஆகும். இந்நகரம் தூத்துக்குடி மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும்.
முத்தையா முரளிதரன் (Muttiah Muralitharan, பிறப்பு: ஏப்ரல் 17, 1972, கண்டி) பொதுவாக முரளி என்றும் அழைக்கப்படுகிறார். இலங்கையின் மலையகத் தமிழரான இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஆவார். 2002 ஆம் ஆண்டில் விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பானது இவரை தேர்வுத் துடுப்பாட்ட வரலாற்றில் மிகச்சிறந்த பந்து வீச்சாளர் எனக் குறிப்பிடுகிறது.
பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவும் உண்டு. அறம், பொருள், இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்களில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன. உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற பிரிவின் கீழ் வருவன.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (சூலை 27, 1876 – செப்டம்பர் 26, 1954) 20ம் நூற்றாண்டில் குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர். பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுகள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுகள், தேசியப் பாட்டுகள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள் என விரிந்த தளத்தில் செயல்பட்டவர்.
கணினி (ஒலிப்பு ) என்பது எண் முதலான தரவுகளை உட்கொண்டு, முறைப்படி கோத்த ஆணைக் கோவைகளைச் செயற்படுத்தும் ஒரு கருவி. ஒரு பணியைச் செய்ய, அதனைப் பல கூறாகப் பகுத்து, எதன் பின் எதனைச் செய்ய வேண்டும் என்று எண்ணி, கணினியுள் இடுவதற்காகத் lp தொகுக்கப்பட்ட ஆணைக் கோவை அல்லது கட்டளைக் கோவையானது, செய்நிரல் எனப்படும். கணினியில் இப்படி செய்நிரல்களைச் சேமித்து வைத்து பணி செய்ய இயக்குவது தனிச் சிறப்பாகும்.
தமிழில் உள்ள உயிரெழுத்து 12, மெய்யெழுத்து 18, ஆக மொத்தம் 30 எழுத்துகளைத் தமிழ் இலக்கணம் என்னும் மொழியியல் முதலெழுத்து எனக் குறிப்பிடுகிறது. வித்துமுதலைப் போட்டு விளைச்சல் காண்பது போலவும், முதலை வைத்துத் தொழில் செய்து பொருள் ஈட்டுவது போலவும் இந்த 30 முதல் எழுத்துகளை வைத்துதான் தமிழ் இயங்குகிறது. எழுத்துகள் சொல்லாகும்போது சில எழுத்துகள் மொழியோடு தோன்றி எழுத்தின் ஒலியைக் கூட்டியும் குறைத்தும் தருவது உண்டு.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977
தமிழ்நாட்டின் ஆறாவது சட்டமன்றத் தேர்தல் 1977 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடை பெற்றது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று, எம். ஜி.
அயோடின் அல்லது ஐயோடின் (இலங்கை வழக்கு: அயடீன்) (Iodine, (IPA: [ˈaɪəˌdaɪn], /ˈaɪəˌdɪn/, அல்லது /ˈaɪəˌdiːn/; கிரேக்க மொழி |iodes "கருசெந்நீலம்") ஒரு வேதியியல் தனிமம். இதன் குறியீடு I. இதன் அணுவெண் 53 மற்றும் இதன் அணுக்கருவில் 76 நொதுமிகள் உள்ளன. அயோடின் ஹாலஜன் குழுவைச் சேர்ந்த ஒரு தனிமம், ஆனால் ஹாலஜன்களிலேயே குறைந்த வேதியியல் வினையுறும் தன்மை கொண்டது (குறைந்த இயைபுத்தன்மை கொண்டது).
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971
தமிழ்நாட்டின் ஐந்தாவது சட்டமன்றத் தேர்தல் 1971 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடை பெற்றது. ஆட்சியில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் வெற்றி பெற்று, மு. கருணாநிதி இரண்டாவது முறை தமிழகத்தின் முதல்வரானார்.
வைரமுத்து (Vairamuthu, சூலை 13, 1953), புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் மற்றும் கவிஞர் ஆவார். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார். நிழல்கள் (1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலைப் பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் சனவரி 2009 வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார்.
பிரதிநிதித்துவமற்ற நாடுகள் மற்றும் மக்கள் அமைப்பு
பிரதிநிதித்துவம் அற்ற அரசுகள் மற்றும் மக்கள் அமைப்பு (Unrepresented Nations and Peoples Organization (UNPO) பிரதிநிதித்துவம் அற்ற, ஒடுக்கப்பட்ட நாடற்ற தேசிய இன மக்கள் மற்றும் நாடு கடந்த அரசுகளின் குரலை உலகளவில் ஒலிப்பதற்காக, நெதர்லாந்து நாட்டின் தலைநகரமான த ஹேக்கில் 11 பிப்ரவரி 1991 அன்று நிறுவப்பட்ட ஒரு பன்னாட்டு அமைப்பாகும்.நாடாற்ற தேசிய இன மக்கள் சிறுபான்மை குழுவினர், நாடு கடந்த அரசுகள், இராணுவப் புரட்சியால் கைப்பற்றப்பட்ட பகுதியின் மக்கள் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர். பிரதிநிதித்துவம் அற்ற அரசுகள் மற்றும் மக்கள் அமைப்பு, சுயநிர்ணய உரிமை பற்றிய புரிதலையும், மரியாதையையும் வளர்ப்பதற்கு செயல்படுகிறது, சர்வதேச அங்கீகாரம் மற்றும் அரசியல் தன்னாட்சி தொடர்பான ஆலோசனைகளையும், ஆதரவையும் வழங்குகிறது. மேலும் பிரதிநிதித்துவம் அற்ற அரசுகள் மற்றும் மக்கள் குழுக்களுக்கு பன்னாட்டு அளவில் எவ்வாறு வாதிடுவது என்பது குறித்து பயிற்சி அளிக்கிறது.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
முகம்மது நபி அல்லது முகம்மது (Muḥammad, அரபு மொழி: محمد, பிறப்பு கிபி 570, இறப்பு 8 சூன் கிபி 632 கணிப்பு), அராபியப் பெயர்: அபூ அல்-காசிம் முகம்மது இப்னு அப்தல்லா இப்னு அப்தல்-முத்தலிப் இப்னு ஹாசிம் (Abū al-Qāsim Muḥammad ibn ʿAbd Allāh ibn ʿAbd al-Muṭṭalib ibn Hāshim, ابو القاسم محمد ابن عبد الله ابن عبد المطلب ابن هاشم) என்பவர் மக்கா நகரைச் சேர்ந்தவர். அராபியத் தீபகற்பம் முழுமையையும் இசுலாம் என்ற ஒரே கொள்கைச் சமயத்தின் கீழ் கொண்டு வந்தவர். இவர் முஸ்லிம்களால் மட்டுமல்லாமல் பாபிஸ்துகள் மற்றும் பகாய் சமயத்தவர்களாலும் கடவுளின் திருத்தூதர் என்று போற்றப்படுகிறார்.
கண்ணதாசன் (ஒலிப்பு ) (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
விஜய் சேதுபதி (16 சனவரி 1978) என்பவர் தமிழ்நாட்டை சேர்ந்த திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவர் தென்மேற்கு பருவக்காற்று (2010), பீட்சா (2012), நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் (2012), நானும் ரௌடி தான் (2015), சேதுபதி (2016 திரைப்படம்) (2016), 96 (2018) போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படும் நடிகர் ஆவார். இவர் இரண்டு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் மற்றும் மூன்று விஜய் விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழகத்தில் மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
ஆயிரம் விளக்கு (சட்டமன்றத் தொகுதி)
ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 20. இது மத்திய சென்னை மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது.
இளங்கோ, அல்லது இளங்கோ அடிகள் தமிழ்க் காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தை எழுதியவர். இவர் சேர அரசன் செங்குட்டுவனுடைய தம்பியெனவும், இளவரசுப் பட்டத்தைத் துறந்து துறவறம் மேற்கொண்டவர் எனவும் சொல்லப்படுகின்றது. இவர் சமண சமயத்தைத் தழுவியவராக இருந்தும், தாம் இயற்றிய நூலில் வைணவத் திருமாலையும்,சைவக் கொற்றவையையும் போற்றும் பகுதிகள் அந்தந்த சமயத்தவரால் பெரிதும் போற்றப்படுகின்றன.
துணை நடிகர் என்பது ஒரு நடிகர் தொலைக்காட்சியில் அல்லது திரைப்படத்தில் முன்னணி நடிகர்களுக்கு கீழே ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பவர்கள். இவர்களின் கதாபாத்திரம் வெற்றி பெற்று அங்கீகரிக்கும் வகையில், தொடர்கள் மற்றும் திரைப்படத் தொழில்கள் சிறந்த துணை நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு தனி விருதுககள் வழங்குகின்றன. இவர்களின் கதாபாத்திரம் சிறிய கதாபாத்திரம் முதல் பெரிய கதாபாத்திரம் வரை இருக்கும்.
திருவள்ளுவர் (Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர் என்றும் அழைக்கப்படுகிறார்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான கி.மு.400க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறை முன்னுரை: பெண்களுக்கு எதிரான வன்முறை(Violence against women, சுருங்க VAW) என்பது பெண்களுக்கு எதிராக முதன்மையாக அல்லது தனிப்பட்ட முறையில் நிகழ்த்தப்படும் வன்முறைச் செயல்களை மொத்தமாகக் குறிப்பிடுகின்றது. சிலநேரங் சட்டகளில் வெறுப்புக் குற்றமாகக் கருதப்படும் . பாதிக்கப்படுபவரின் பாலினத்தை முதன்மைக் காரணமாகக் கொண்டு, இத்தகைய வன்முறை குறிப்பிட்ட குழுவினரைக் குறி வைக்கிறது.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபா சாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.
முத்துராமலிங்கத் தேவர் (Muthuramalingam Thevar, அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 30, 1963) ஆன்மிகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்கு, தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலைசிறந்த பேச்சாளராகவும், ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாளை அரசு விழாவாக, தமிழக அரசு பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றது.
பிள்ளைத்தமிழ் என்பது தமிழ் இலக்கியத்தில் வழங்கும் பிரபந்த நூல் வகைகளுள் ஒன்று. புலவர்கள் தாம் விரும்பிய தெய்வங்கள், சமயா சாரியர்கள், புலவர் பெருமக்கள், ஆதீனகர்த்தர், அரசர், உபகாரிகள், அவர் அவர்கட்கு உகந்தவர்கள், ஆகியோரைக் குழந்தையாக உருவகித்து, கற்பனை பல அமையப் பாடப்படுவது பிள்ளைத்தமிழாகும். குழந்தையாகக் கொண்டது பாவனையே ஆகும்.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமஸ்கிருதம்:பிரகதீஸ்வரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும் , தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
ஒப்பெத் திருவிழா, (Opet Festival) சிறந்த விருந்துத் திருவிழா என்றும் அழைப்பர்புது எகிப்திய இராச்சிய காலத்தில் பண்டைய எகிப்தியர்கள் ஆண்டுக்கு ஒரு முறை, நைல் நதியில் வெள்ளம் ஏற்படும் பருவகாலத்தின் போது தீபை (அல்-உக்சுர்) நகரத்தில் 24 நாட்களுக்கு கொண்டாடப்படும் திருவிழா ஆகும். அமூன்-மூத் கடவுளினரின் குழந்தைகளாகக் கருதப்படும் எகிப்திய மன்னர்கள் மற்றும் அவர்களது ஆன்மீக வாரிசுகளின் வளர்ச்சிக்காக ஒப்பெத் திருவிழா கொண்டாடப்பட்டது. எகிப்தின் பதினெட்டாம் வம்ச மன்னர் மூன்றாம் தூத்மோஸ் (கிமு 1479 - கிமு 1425) ஆட்சிக் காலத்தில் ஒப்பெத் திருவிழா கொண்டாடத் துவக்கப்பட்டது.
முன்னணி நடிகர் அல்லது முன்னணி நடிகை (Leading actor) என்பது திரைப்படங்கள், மேடை நாடகங்கள் மற்றும் தொலைக்காட்சி போன்றவற்றில் கதாநாயகன் வேடத்தில் நடிப்பவர்களை குறிக்கும். முன்னணி என்ற சொல் நபர் ஒருவர் தொடரில் மிகப்பெரிய பாத்திரத்தில் நடிப்பவரை குறிக்கலாம் அல்லது முன்னணி நடிகரையும் பொதுவாக குறிக்கலாம். இவர்களின் கதாபாத்திரம் துணை அல்லது குணசித்திர பாத்திரங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
தமிழக அமைச்சரவை தமிழ் நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும் செயலாட்சியர்கள். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார்.
வைணவ சமயத்தின் முதன்மைத் தெய்வமாகிய திருமாலைப் போற்றித் தமிழ்ச் செய்யுட்களால் பாடியவர்கள் ஆழ்வார்கள் ஆவர். தென்மொழியாம் தமிழ் மொழியில் வைணவ இலக்கியங்களை வளர்த்தவர்கள் பரம்பரையில், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (அல்லது) ஆழ்வார் அருளிச்செயல் என்னும் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள பாடல்களைப் பாடிய ஆழ்வார்கள் 12 பேர். அவர்களுள், இறைவனை இறைவனாகக் காணாது, இறைவனோடு உறவுமுறையில் வாழ்ந்ததால் ஆண்டாளையும், இறைவனைப் பாடாது ஆசானைப் பாடினார் என்பதால் மதுரகவியாழ்வாரையும் வேறு வரிசையில் தொகுத்து, ஆழ்வார்கள் பதின்மர் 10 பேர் மட்டுமே எனக் காட்டுவாரும் உண்டு.
திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்
திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரம் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். மூலவர் அர்த்தநாரீஸ்வரர், தாயார் பாகம்பிரியாள். செங்கோட்டு வேலவர் என முருகனுக்கு தனி சந்நிதி அமைந்துள்ளது.
திரைப்பட நட்சத்திரம் (Movie star) என்பது ஒரு நடிகர் அல்லது நடிகை என்பவர்கள் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அல்லது முன்னணி பாத்திரங்களுக்கு பிரபலமானது மூலம் 'திரைப்பட நட்சத்திரம்' என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களின் பெயர்கள் ஒரு திரைப்படத்தை சந்தைப்படுத்த அல்லது விளம்பரப்படுத்த பெரும்பாலும் உபயோகிக்கப் படுகின்றது. உதாரணமாக திரைப்பட சுவரொட்டிகள் மற்றும் திரைப்பட முன்னோட்டக்காட்சிககளில்.
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது.
உழவு அல்லது விவசாயம் அல்லது கமம் என்பது உணவுக்காகவும் ஏனைய பயன்பாடுகளுக்காகவும் சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும், கால்நடை வளர்ப்பையும் குறிக்கும். வேளாண்மை ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் ஆகும். இத்தொழிலில் மனிதன் இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருள்களைச் சேகரித்துப் பயன்படுத்திக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவ்வியற்கையோடு ஒன்றிணைந்து பணியாற்றி உணவுப் பொருட்களை உற்பத்தி செய்துகொள்கிறான்.
மெக்திபட்டணம் (Mehdipatnam) என்பது இந்தியாவின் ஐதராபாத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கிய இடமாகும். நிசாமின் ஆட்சிக் காலத்தில் ஐதராபாத் இராச்சியத்தில் வாழ்ந்த அரசியல்வாதியும், அதிகாரத்துவமும் மற்றும் சிறந்த ஆளுமையுமாக இருந்த மெக்தி நவாஸ் ஜங் என்பவரின் பெயரிடப்பட்டது. இது பஞ்சாரா ஹில்ஸ், அமீர்பேட்டை, பேகம்பேட்டை, குக்கட்பள்ளி, நம்பள்ளி, முசீராபாத் போன்ற முக்கிய புறநகர்ப் பகுதிகளிலிருந்து பி.வி.
கல்வி (Education) என்பது குழந்தைகளை, உடல் மற்றும் மன வளர்ச்சியில் அறிவு, நல்லொழுக்கம் ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும். கல்வியாளர்கள் கூற்றின்படி, இளைய தலைமுறையினரை முறையாக வழி நடத்துவதிலும், சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்வி என்பது ஒரு சமூக நிறுவனம்.