The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
கிரேக்க மொழி அல்லது கிரேக்கு அல்லது எல்லினிக்கா (Greek) என்பது கிரீசு நாட்டுக்கும் கிழக்கு மத்தியதரைக் கடலின் மற்ற பகுதிகளுக்கும் சொந்தமான இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்திலுள்ள தற்சார்புடைய ஒரு கிளை மொழியாகும்.உலகில் தோன்றிய உலகின் முதல் மூத்த மொழிகளில் கிரேக்கமும் ஒன்று ஆகும். உலகில் மனிதன் தோன்றிய ஆப்பிரிக்க கண்டத்தில் மாந்தன் பேசிய மொழி கிரேக்கம். ஏறத்தாழ 6,746 ஆண்டுகள் வரலாறு கொண்ட தொன்மையான மொழி கிரேக்க மொழியாகும்.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழகத்தில் மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
பாரதிதாசன் (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் 'கனகசுப்புரத்தினம்' ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
நோபல் பரிசுகள் ஆண்டுதோறும் சுவீடிய அரசுக் கல்விக்கழகத்தாலும், சுவீடியக் கல்விக்கழகத்தாலும், கரோலின்ஸ்கா நிறுவனத்தாலும், நோர்வே நோபல் குழுமத்தாலும், தனியொருவருக்கோ அல்லது நிறுவனங்களுக்கோ வேதியியல், இயற்பியல், இலக்கியம், அமைதி, மருத்துவமும், உடலியங்கியலும், பொருளியல் ஆகிய அறிவியல்புலங்களில் பெரும் பங்களிப்பு ஆற்றிய தனியொருவருக்கோ அல்லது நிறுவனங்களுக்கோ வழங்கப்பட்டு வருகிறது. இவை ஆல்பிரட் நோபலின் 1895ஆம் ஆண்டு உயிலின் படி நிறுவப்பட்டுத் தரப்படுகின்றன. இது நோபல் அறக்கட்டளையால் ஆளப்படுமெனக் கூறுகிறது.
லாசா மாவட்டம் அல்லது செங்க்குவான் மாவட்டம் (Lhasa or Chengguan) சீனாவின் மேற்கில், இந்தியாவின் வடகிழக்கில், சீனாவின் தன்னாட்சிப் பிரதேசங்களில் ஒன்றான திபெத் தன்னாட்சிப் பகுதியின் மக்கள் தொகை மிக்க மாவட்டம் ஆகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் லாசா நகரம் ஆகும்.லாசா நகரம், கடவுளர்களின் இருப்பிடமாக திபெத்தியர்கள் கருதுகின்றனர். லாசா மாவட்டம் கிழக்கு இமயமலையில் 3,650 மீட்டர்கள் (11,980 ft) உயரத்தில், 525 சதுர கிலோமீட்டர்கள் (203 sq mi) பரப்பளவில் அமைந்துள்ளது.
செம்மொழி (Classical language) என்பது ஒரு மொழியின் இலக்கியப்பழமை அடிப்படையிலும் பிற பண்புத்தகுதிகளின் அடிப்படையிலும் செய்யப்படும் வகைப்பாடு ஆகும். செம்மொழியாக ஒரு மொழியைத்தெரிவு செய்ய அதன் இலக்கியப் படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும், அதன் தோன்றல் ஏனைய மொழிகளில் சாராதிருத்தலும் வேண்டும்1 (ஜோர்ஜ் எல்.ஹார்ட்). உலகில் எத்தனையோ மொழிகள் பேசப்பட்டு வருகின்றன.
பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவும் உண்டு. அறம், பொருள், இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்களில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன. உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற பிரிவின் கீழ் வருவன.
இந்தியக் கணிதவியல் வரலாற்றில் இரண்டு ஆரியபட்டாக்கள் புகழ் பெற்றுள்ளார்கள். இவர்களுள் ஐந்தாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும், ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்த ஆரியபட்டாவைப் பற்றியது இக் கட்டுரை. பிற்காலத்தில் வாழ்ந்த இரண்டாம் ஆரியபட்டா என்பவரிடம் இருந்து வேறுபடுத்துவதற்காக இவரை முதலாம் ஆரியபட்டா அல்லது மூத்த ஆரியபட்டா எனவும் அழைப்பது உண்டு.
கண்ணதாசன் (ஒலிப்பு ) (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
பஸ் ஆல்ட்ரின் (Buzz Aldrin (இயற்பெயர் எட்வின் யூஜின் ஆல்ட்ரின், Edwin Eugene Aldrin, Jr., பிறப்பு: ஜனவரி 20, 1930) என்பவர் அமெரிக்க விண்வெளி வீரரும் விமானியும் ஆவார். இவர் முதன் முதலாக மனிதரை சந்திரனில் ஏற்றிச் சென்ற அப்பல்லோ 11 விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ரோங் உடன் பயணம் செய்து சந்திரனில் இறங்கிய இரண்டாவது மனிதர் என்ற பெருமையைப் பெற்றார்.
மணிமேகலை ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்று. இக்காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார்.மணிமேகலை காப்பியத்தில் அடி இணையும், அதன் வழிபாடும், வேறு கடவுள்களின் வழிபாடும் இருக்கும் நிலையில், அது ஒரு மஹாயாண காப்பியமாகவே இருக்கமுடியும். மேலும், மஹாயாண பௌத்தமானது இல்லறத்தையும், துறவறத்தையும் வலியுறுத்தும் நிலையிலும், சிலப்பதிகாரமானது இல்லறத்தையும், மணிமேகலை காப்பியம் துறவறத்தையும் வலியுறுத்துவதாலும், இவைகள் இரட்டைக் காப்பியங்கள் ஆகும்.
சூறையாடல் என்பது பொருட்களைக் கண்மூடித்தனமாக கும்பலாக கொள்ளையடிப்பதாகும். இது இராணுவ அல்லது அரசியல் வெற்றியின் ஒரு பகுதியாகவோ, அல்லது பேரழிவு காலங்களிலோ, உதாரணமாக போர், இயற்கைப் பேரழிவு (சட்டம் ஒழுங்கு தற்காலிகமாக பயனற்றுப் போகும் நேரத்தில்), அல்லது கலகம் ஆகிய காலங்களிலோ ஏற்படுகிறது. பெரும் அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளாக ஏற்படும் திருட்டு மற்றும் மோசடியை விவரிப்பதற்கும் இந்த வார்த்தை பரந்த அளவில் பயன்படுத்தப்படுகிறது.
ரைட் சகோதரர்கள் என்றழைக்கப்படும் (Wright brothers, ஓர்வில் ரைட் (ஆகஸ்ட் 19, 1871 – ஜனவரி 30, 1948), வில்பர் ரைட் (ஏப்ரல் 16, 1867 – மே 30 1912), என்ற இருவரும் அமெரிக்காவைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர்களும் விமானத்தைக் கண்டறிந்த முன்னோடிகளும் ஆவர். முதன்முதலில் டிசம்பர் 17, 1903 ஆம் ஆண்டில் பன்னிரெண்டு வினாடிகள் எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்து சாதனை படைத்தவர்கள். வட கரோலினாவின் கிட்டி ஹாக்கில் "ஓர்வில் ரைட்" 12 கு.வ.
இந்தக் கட்டுரை இரண்டாம் உலகப் போரின்போது சிங்கப்பூரில் அமைந்த அமைப்பு குறித்தானது. முதல் உலகப்போரின் போது இராசா மகேந்திரப் பிரதாப்பால் அமைக்கப்பட்ட இடைக்கால அரசு குறித்து அறிய இந்திய இடைக்கால அரசு பார்க்கவும்.விடுபட்ட இந்தியாவின் இடைக்கால அரசு (இந்தி: आर्ज़ी हुक़ूमत-ए-आज़ाद हिन्द, உருது: عارضی حکومتِ آزاد ہند, அல்லது ஆசாத் இந்த் அரசு), சுருங்க விடுதலையான இந்தியா அல்லது ஆசாத் இந்த், 1943ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் நிறுவப்பட்ட தற்காலிக நாடு கடந்த அரசாங்கம் ஆகும். இரண்டாம் உலகப் போரில் பிரித்தானியப் படைக்கு எதிரான நாடுகளை குறிப்பாக ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளின் ஆதரவுடன் இந்தியச் சுதந்திரத்தை அடைய விரும்பிய சுபாஷ் சந்திர போஸ் அந்நாடுகளிடம் உதவி கேட்டார்.
கோவில்பட்டி (ஆங்கிலம்:Kovilpatti), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு தொழில் நகரமாகும். இது கோவில்பட்டி வட்டம் மற்றும் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், சிறப்புநிலை நகராட்சியும் ஆகும். இந்நகரம் தூத்துக்குடி மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும்.
குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி
குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி இந்தியாவின் தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் இயங்கிவரும் தமிழக அரசுக்கு சொந்தமான கலை அறிவியல் கல்லூரியாகும். திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் அனுமதியுடன் தன்னாட்சி கல்லூரியாக செயற்பட்டு வருகிறது.
மூன்றாம் தூத்மோஸ் (Thutmose III) (variously also spelt Tuthmosis or Thothmes) புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட 18-ஆம் வம்சத்தின் ஆறாவது பார்வோன் ஆவார். இவர் புது எகிப்திய இராச்சியத்தை கிமு 1479 முதல் கிமு 1425 முடிய 54 ஆண்டுகள் ஆண்டார். இருப்பினும் தனது 22-வயது வரை, தன் சார்பாக இவரது அத்தை ஆட்செப்சுட்டு என்பர் அரசப் பிரதிநிதியாக எகிப்தை ஆண்டார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996
தமிழ்நாட்டின் பதினோறாவது சட்டமன்றத் தேர்தல் 1996 ஆம் ஆண்டு மே மாதம் நடை பெற்றது. திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று, மு. கருணாநிதி நான்காம் முறையாக தமிழகத்தின் முதல்வரானார்.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
முகம்மது நபி அல்லது முகம்மது (Muḥammad, அரபு மொழி: محمد, பிறப்பு கிபி 570, இறப்பு 8 சூன் கிபி 632 கணிப்பு), அராபியப் பெயர்: அபூ அல்-காசிம் முகம்மது இப்னு அப்தல்லா இப்னு அப்தல்-முத்தலிப் இப்னு ஹாசிம் (Abū al-Qāsim Muḥammad ibn ʿAbd Allāh ibn ʿAbd al-Muṭṭalib ibn Hāshim, ابو القاسم محمد ابن عبد الله ابن عبد المطلب ابن هاشم) என்பவர் மக்கா நகரைச் சேர்ந்தவர். அராபியத் தீபகற்பம் முழுமையையும் இசுலாம் என்ற ஒரே கொள்கைச் சமயத்தின் கீழ் கொண்டு வந்தவர். இவர் முஸ்லிம்களால் மட்டுமல்லாமல் பாபிஸ்துகள் மற்றும் பகாய் சமயத்தவர்களாலும் கடவுளின் திருத்தூதர் என்று போற்றப்படுகிறார்.
நோபல் பரிசு பெற்றவர்கள் பட்டியல்
நோபெல் பரிசுகள் (சுவீடிய: Nobelpriset, நோர்வே: Nobelprisen) ஆண்டுதோறும் சுவீடிய அரசுக் கல்விக்கழகத்தாலும் (The Royal Swedish Academy of Sciences), சுவீடியக் கல்விக்கழகத்தாலும் (The Swedish Academy), கரோலின்சுகா நிறுவனத்தாலும் (The Karolenska Institute) மற்றும் நார்வே நோபெல் குழுவாலும் (The Norwegian Nobel Committee) தனியொருவருக்கோ நிறுவனங்களுக்கோ வேதியியல், இயற்பியல், இலக்கியம், அமைதி, மற்றும் மருத்துவம் ஆகிய அறிவியல்புலங்களில் பெரும்பங்களிப்பு ஆற்றுபவர்களுக்குத் தரப்படுகின்றன. இவை ஆல்ஃபிரெட் நோபெலின் 1895அம் ஆண்டு உயிலின்படி நிறுவப்பட்டுத் தரப்படுகின்றன.இது நோபெல் அறக்கட்டளையால் ஆளப்படுமெனக் கூறுகிறது. பொருளியலுக்கான நோபெல் நினைவுப் பரிசு 1968இல் சுவீடன்னைச் சார்ந்த Sveriges Riksbank எனும் வங்கியால் பொருளியலில் பெரும்பங்களிப்பவர்களுக்காக நிறுவப்பட்டது.
பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாக கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளை காப்பிய தலைவராக கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் விவரிக்கிறார்.
முத்துராமலிங்கத் தேவர் (Muthuramalingam Thevar, அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 30, 1963) ஆன்மிகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்கு, தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலைசிறந்த பேச்சாளராகவும், ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாளை அரசு விழாவாக, தமிழக அரசு பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றது.
திருவள்ளுவர் (Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர் என்றும் அழைக்கப்படுகிறார்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான கி.மு.400க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (சூலை 27, 1876 – செப்டம்பர் 26, 1954) 20ம் நூற்றாண்டில் குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர். பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுகள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுகள், தேசியப் பாட்டுகள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள் என விரிந்த தளத்தில் செயல்பட்டவர்.
சுரதா (நவம்பர் 23, 1921 - சூன் 20, 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக்கவிதைத் தொகுப்புகள் தந்தவர்.
கள்ளர் (Kallar) எனப்படுவோர் தமிழகத்தில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் முக்குலத்தோர்களில் ஒரு பிரிவினர் ஆவர். பொதுவாக கள்ளர், மறவர், அகமுடையர் ஆகிய மூன்று பிரிவினரையும் சேர்ந்து முக்குலத்தோர் எனப்படுவர்.இக்குழுவினரில் புதுக்கோட்டை சமஸ்தானம் தொண்டைமான் மன்னரும், பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர்.
ஆப்பிள் (இலங்கை வழக்கு: அப்பிள்) அல்லது குமளி என்பது வருடத்திற்கொரு முறை இலையுதிரும், ரோசாசிடே குடும்பத் தாவரமாகும். சுவைமிக்க இதன் பழம் குமளிப்பழம், ஆப்பழம், சீமையிலந்தம்பழம், ஆர்த்திப்பழம், ஆப்பிள் அல்லது அப்பிள் என அழைக்கப்படுகின்றது. பழுத்த ஆப்பிள் வெளிப்புறம் பெரும்பாலும் சிவப்பாகவும், சில இரகங்களில் இளம்பச்சை அல்லது மஞ்சளாகவும் காணப்படும்.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபா சாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.
மதுக்கரை (ஆங்கிலம்:Madukkarai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் மதுக்கரை வட்டம் மற்றும் மதுக்கரை ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் தலைமையிட நகரமும், சிறப்புநிலை பேரூராட்சியும் ஆகும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள இப்பேரூராட்சியில் உள்ள மக்கள் ஏசிசி சிமெண்ட் ஆலை மற்றும் இதர தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் சிலர் விவசாயம் செய்பவர்கள் ஆவார்.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமஸ்கிருதம்:பிரகதீஸ்வரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும் , தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
தமிழ்நாட்டில் சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், காஞ்சீபுரம், திண்டுக்கல், திருவள்ளூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, திருநெல்வேலி, கரூர், பெரம்பலூர், தூத்துக்குடி, சேலம், நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை, கோயம்புத்தூர், ஈரோடு தேனி, மதுரை, ஆகிய மாவட்டங்களில் தொட்டிய நாயக்கர் வசித்து வருகின்றனர். தெலுங்கு மொழி பேசும் இவர்கள் தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் பிரிவில் இடம் பெற்றுள்ளனர். இந்த சாதியினர் ராஜகம்பளம், கொல்லவார், சில்லவர், தோக்களவார் மற்றும் தொழுவ நாயக்கர் என்னும் உட்பிரிவுகளின் பெயரிலும் அழைக்கப்படுகின்றனர்.
பிள்ளைத்தமிழ் என்பது தமிழ் இலக்கியத்தில் வழங்கும் பிரபந்த நூல் வகைகளுள் ஒன்று. புலவர்கள் தாம் விரும்பிய தெய்வங்கள், சமயா சாரியர்கள், புலவர் பெருமக்கள், ஆதீனகர்த்தர், அரசர், உபகாரிகள், அவர் அவர்கட்கு உகந்தவர்கள், ஆகியோரைக் குழந்தையாக உருவகித்து, கற்பனை பல அமையப் பாடப்படுவது பிள்ளைத்தமிழாகும். குழந்தையாகக் கொண்டது பாவனையே ஆகும்.
ராவுத்த குமாரசாமி கொங்கு நாட்டில் வாழும் கொங்கு வேளாளர் கவுண்டர் இனத்தின் கண்ணன் கூட்டத்தாரின் குல தெய்வங்களில் ஒன்று. இவருக்கான கோயில் தமிழ்நாட்டின் கொங்கு நாட்டின், சிவகிரியை அருகில் காகம் என்னும் கிராமத்தில் உள்ளது. ராவுத்த குமாரசாமியை கொங்கு வேளாளரில் "கண்ணன்" கூட்டத்தினர் குலதெய்வமாக வழிபட்டுவருகின்றனர்.
திரைப்பட இயக்குநர், அல்லது இயக்குநர் என்பவர் ஓர் திரைப்படம் உருவாக்கப்படுவதைச் செயல்படுத்துபவர் மற்றும் திரைப்படத் தயாரிப்பை வழிகாட்டுபவர். ஓர் இயக்குநர் திரைக்கதையை மன ஓவியமாக தீட்டி, திரைப்படத்தின் கலை மற்றும் நாடகத்தன்மையின் அங்கங்களை கட்டுப்படுத்தித் தொழில்நுட்பக் கலைஞர்களையும் நடிகர்களையும் வழிகாட்டி தனது மன ஓவியத்தினை வெளிக்கொணரும் கலைஞராவார். சில நேரங்களில் திரைப்பட இயக்குநர்களுக்கு முழு சுதந்திரம் இருக்காது.
வேடுவர் (Veddas, Veddahs, சிங்களம்: වැද්දා, வெத்தா), எனப்படுவோர் இலங்கை காடுகளில் வேட்டையாடி வாழும் வாழ்க்கையை பழக்கமாகக் கொண்டு வாழும் மனிதர்களாவர். இவர்கள் இலங்கைக்கு வேறு எந்த நாட்டில் இருந்தும் வந்து குடியேறாதவர்கள் என்பதால் இவர்கள் இலங்கையின் பழங்குடி மக்களும் ஆவர். இவர்கள் இலங்கைக்கு ஆரியரின் வருகைக்கு முன்னரே, இலங்கையின் வரலாற்றுக் காலம் முதல் வசிப்பவர்கள் என்றும், இவர்கள் தென்னிந்திய பழங்குடி மரபினருடன் ஒத்த தன்மைக்கொண்டவர்கள் என்றும் வில்ஹெய்ம் கெய்கர் தெரிவித்துள்ளார்.இலங்கை காடுகளில் வசிக்கும் இவர்கள் சாதாரண மனிதர்களின் வாழ்க்கைக்கு பண்படாதவர்களாக, காடுகளில் வேட்டையாடி வாழப் பழக்கப்பட்டவர்கள் என்பதால் வேடுவர் என அழைக்கப்பட்டாலும், அன்மையக் காலங்களாக சாதாரண மனித வாழ்க்கை முறைக்கு தம்மை மாற்றிக்கொண்டு இலங்கையில் வாழும் ஏனைய சமுதாயத்தினரைப் போன்று வாழும் நிலைக்கு மாறி வருகின்றனர்.
தமிழில் உள்ள உயிரெழுத்து 12, மெய்யெழுத்து 18, ஆக மொத்தம் 30 எழுத்துகளைத் தமிழ் இலக்கணம் என்னும் மொழியியல் முதலெழுத்து எனக் குறிப்பிடுகிறது. வித்துமுதலைப் போட்டு விளைச்சல் காண்பது போலவும், முதலை வைத்துத் தொழில் செய்து பொருள் ஈட்டுவது போலவும் இந்த 30 முதல் எழுத்துகளை வைத்துதான் தமிழ் இயங்குகிறது. எழுத்துகள் சொல்லாகும்போது சில எழுத்துகள் மொழியோடு தோன்றி எழுத்தின் ஒலியைக் கூட்டியும் குறைத்தும் தருவது உண்டு.
உழவு அல்லது விவசாயம் அல்லது கமம் என்பது உணவுக்காகவும் ஏனைய பயன்பாடுகளுக்காகவும் சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும், கால்நடை வளர்ப்பையும் குறிக்கும். வேளாண்மை ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் ஆகும். இத்தொழிலில் மனிதன் இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருள்களைச் சேகரித்துப் பயன்படுத்திக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவ்வியற்கையோடு ஒன்றிணைந்து பணியாற்றி உணவுப் பொருட்களை உற்பத்தி செய்துகொள்கிறான்.
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது.
தமிழக அமைச்சரவை தமிழ் நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும் செயலாட்சியர்கள். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார்.
பிரதிநிதித்துவமற்ற நாடுகள் மற்றும் மக்கள் அமைப்பு
பிரதிநிதித்துவம் அற்ற அரசுகள் மற்றும் மக்கள் அமைப்பு (Unrepresented Nations and Peoples Organization (UNPO) பிரதிநிதித்துவம் அற்ற, ஒடுக்கப்பட்ட நாடற்ற தேசிய இன மக்கள் மற்றும் நாடு கடந்த அரசுகளின் குரலை உலகளவில் ஒலிப்பதற்காக, நெதர்லாந்து நாட்டின் தலைநகரமான த ஹேக்கில் 11 பிப்ரவரி 1991 அன்று நிறுவப்பட்ட ஒரு பன்னாட்டு அமைப்பாகும்.நாடாற்ற தேசிய இன மக்கள் சிறுபான்மை குழுவினர், நாடு கடந்த அரசுகள், இராணுவப் புரட்சியால் கைப்பற்றப்பட்ட பகுதியின் மக்கள் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர். பிரதிநிதித்துவம் அற்ற அரசுகள் மற்றும் மக்கள் அமைப்பு, சுயநிர்ணய உரிமை பற்றிய புரிதலையும், மரியாதையையும் வளர்ப்பதற்கு செயல்படுகிறது, சர்வதேச அங்கீகாரம் மற்றும் அரசியல் தன்னாட்சி தொடர்பான ஆலோசனைகளையும், ஆதரவையும் வழங்குகிறது. மேலும் பிரதிநிதித்துவம் அற்ற அரசுகள் மற்றும் மக்கள் குழுக்களுக்கு பன்னாட்டு அளவில் எவ்வாறு வாதிடுவது என்பது குறித்து பயிற்சி அளிக்கிறது.
செயற்கை நுண்ணறிவு (AI ) என்பது இயந்திரங்களின் நுண்ணறிவு மற்றும் இதனை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட கணினி அறிவியலின் ஒரு பிரிவாகும். பெரும்பாலான AI உரைநூல்கள் இத்துறையினை "நுண்ணறிவுக் கருவிகளைப் பற்றிப் படித்தல் மற்றும் வடிவமைத்தல்" என வரையறுக்கின்றன, இதில் நுண்ணறிவுக் கருவி என்பது, தன் சூழ்நிலையை உணர்ந்து அதிக வெற்றி வாய்ப்புகளுக்குத் தக்கவாறு செயலில் ஈடுபடும் ஒரு அமைப்பாகும். ஜான் மேக்கர்த்தி என்பவர் 1956 இல் இந்தச் சொல்லை அறிமுகப்படுத்தி, [10] இதனை "நுண்ணறிவு இயந்திரங்களை உருவாக்கும் அறிவியல் மற்றும் பொறியியல்" என வரையறுத்தார்.இந்தத் துறையானது மனிதர்களின் ஒரு பொதுவான குணத்தைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது, அதாவது நுண்ணறிவு - ஹோமோ செப்பியன்களின் பகுத்தறிவு - இத்தகைய குணத்தை ஓர் இயந்திரத்திலும் வடிவமைக்க முடியும் என துல்லியமாக விவரிக்க முடியும்.
அருள்மொழிவர்மன் என்கின்ற பேரரசர் இராசகேசரி வர்மன் முதலாம் இராசராச சோழன் சோழ பேரரசின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவார். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1014 வரையாகும். இவர் மகன் முதலாம் இராசேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவிய பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே.
கல்வி (Education) என்பது குழந்தைகளை, உடல் மற்றும் மன வளர்ச்சியில் அறிவு, நல்லொழுக்கம் ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும். கல்வியாளர்கள் கூற்றின்படி, இளைய தலைமுறையினரை முறையாக வழி நடத்துவதிலும், சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்வி என்பது ஒரு சமூக நிறுவனம்.
விஜயதசமி (Vijayadashami, வங்காளம்: বিজয়াদশমী, கன்னடம்: ವಿಜಯದಶಮಿ, மலையாளம்: വിജയദശമി, மராத்தி: विजयादशमी, நேபாளி :विजया दशमी, ஒரியா :ବିଜୟାଦଶମୀ, தெலுங்கு: విజయదశమి) இந்தியா, நேபாளம் மற்றும் வங்காள தேசத்தில் பல்வேறு வடிவங்களில் கொண்டாடப்படும் ஓர் மழைக்கால இந்து சமய விழாவாகும். இது தசரா (Dasara/ Dasara/ Dussehra) என்றும் அழைக்கப்படுகிறது. தென்னகப் பகுதிகளில் நவராத்திரியின் ஓர் அங்கமாகவும், வங்காளத்தில் துர்கோத்சவத்தின் அங்கமாகவும் கொண்டாடப்படுகின்றது.
தேனி மாவட்டம் (Theni district) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் தேனி ஆகும். தேனி மாவட்டம் தமிழக அரசின் வருவாய்த்துறை அரசு ஆணை எண் 679, நாள் சூலை 25, 1996 இன் மூலம் மதுரை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு தேனியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது.
அகில் (ஒலிப்பு ) அல்லது காழ்வை (Aquilaria malaccensis) என்பது முதன்மையாக அதன் கட்டைகளுக்காகப் பெரு மதிப்பு மிக்கதாகக் கருதப்படும் தாவர இனம் ஒன்றாகும். இது வங்காளதேசம், பூட்டான், இந்தியா, இந்தோனேசியா, ஈரான், லாவோசு, மலேசியா, மியான்மர், பிலிப்பீன்சு, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளிற் காணப்படுகிறது. இது வளரும் இடங்களின் இழப்புக் காரணமாக இது அழிவாய்ப்பு இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
மோகன்தாசு கரம்சந்த் காந்தி (ஆங்கில மொழி: Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 - ஜனவரி 30, 1948), மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.