The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
மனு தர்ம சாத்திரம் (சமசுகிருதம்:मनुस्मृति, மனுஸ்மிருதி) இந்துக்கள் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கையில் பின்பற்றவேண்டிய சடங்குகள், சம்பிரதாயங்கள், அற ஒழுக்க விதிமுறைகளை ஒழுங்குபடுத்திக் கூறும் நூல் ஆகும். இதனை சுவாயம்பு (மனு) எனும் பண்டைய வேத கால முனிவர் தொகுத்தார். இது 2685 செய்யுட்களாகவும், 3 பகுதிகளாகவும், 12 அத்தியாயங்களாகவும் அமைந்துள்ளது.
விஜயதசமி (Vijayadashami, வங்காளம்: বিজয়াদশমী, கன்னடம்: ವಿಜಯದಶಮಿ, மலையாளம்: വിജയദശമി, மராத்தி: विजयादशमी, நேபாளி :विजया दशमी, ஒரியா :ବିଜୟାଦଶମୀ, தெலுங்கு: విజయదశమి) இந்தியா, நேபாளம் மற்றும் வங்காள தேசத்தில் பல்வேறு வடிவங்களில் கொண்டாடப்படும் ஓர் மழைக்கால இந்து சமய விழாவாகும். இது தசரா (Dasara/ Dasara/ Dussehra) என்றும் அழைக்கப்படுகிறது. தென்னகப் பகுதிகளில் நவராத்திரியின் ஓர் அங்கமாகவும், வங்காளத்தில் துர்கோத்சவத்தின் அங்கமாகவும் கொண்டாடப்படுகின்றது.
மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்கள்.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
தமிழக ஊராட்சி மன்றங்கள் தமிழ்நாட்டில் 500 நபர்களும் அதற்கும் அதிகமான மக்கள் தொகையுடைய ஊர்களை ஊராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த கிராம ஊராட்சிகளுக்கு அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. இந்த வார்டுகளில் வாக்காளர்களாக உள்ள மக்களால் ஊராட்சி மன்றத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி மே 8, 2006 அன்று தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தல், 2006 நடைபெற்றது. இத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி மொத்த இடங்களான 234 தொகுதிகளில் 163 இடங்களில் வெற்றி பெற்றது. கூட்டணி கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவளிக்க தொடர்ந்து திமுக அரசு மே 13-ம் தேதி மு.
அரசு சார்பற்ற அமைப்பு அல்லது அரசு சாரா தொண்டு நிறுவனம் (Non-governmental organization NGO) என்பது தனியாரால் அல்லது அரச பங்களிப்பு அல்லது சார்பற்று சட்டப்படி உருவாக்கப்படுகின்ற அமைப்புக்களாகும். அரசினால் முழுமையாக அல்லது பகுதியாக நிதியளிக்கப்படும் அமைப்புக்கள் தங்கள் அரசு சார்பின்மையைக் காத்துக் கொள்வதற்காக அரசுக்குத் தமது அமைப்பில் எவ்வித உறுப்புரிமையும் அளிப்பதில்லை. பல்வேறு நாடுகளில் தேசிய அளவிலும், உலக அளவிலும் பல அரசு சார்பற்ற அமைப்புக்கள் இயங்கி வருகின்றன.
முகம்மது நபி அல்லது முகம்மது (Muḥammad, அரபு மொழி: محمد, பிறப்பு கிபி 570, இறப்பு 8 சூன் கிபி 632 கணிப்பு), அராபியப் பெயர்: அபூ அல்-காசிம் முகம்மது இப்னு அப்தல்லா இப்னு அப்தல்-முத்தலிப் இப்னு ஹாசிம் (Abū al-Qāsim Muḥammad ibn ʿAbd Allāh ibn ʿAbd al-Muṭṭalib ibn Hāshim, ابو القاسم محمد ابن عبد الله ابن عبد المطلب ابن هاشم) என்பவர் மக்கா நகரைச் சேர்ந்தவர். அராபியத் தீபகற்பம் முழுமையையும் இசுலாம் என்ற ஒரே கொள்கைச் சமயத்தின் கீழ் கொண்டு வந்தவர். இவர் முஸ்லிம்களால் மட்டுமல்லாமல் பாபிஸ்துகள் மற்றும் பகாய் சமயத்தவர்களாலும் கடவுளின் திருத்தூதர் என்று போற்றப்படுகிறார்.
நர்த்தகி நடராஜ் (Nartagi Natraj), தமிழ்நாட்டின் மதுரை மாநகரில், வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் அருகே அமைந்த அனுப்பானடி பகுதியில், பெருமாள் பிள்ளை - சந்திராம்மாள் இணையரின் பத்து குழந்தைகளில், ஐந்தாம் குழந்தையாக நடராஜ் எனும் பெயரில் பிறந்தவர். சிறு வயதில் தன்னில் பெண்மை இருப்பதை உணர்ந்த நடராஜ், பெண்களின் உடைகளை அணியத்துவங்கினார். இதனால் நடராஜ் தன்னை ஒத்த திருநங்கைத் தோழியான சக்தியுடன் இணைந்து, பத்மினி, வைஜெயந்திமாலா போன்றோரின் திரைப்படங்களை பார்த்து, தாங்களே நடனப் பயிற்சிகளை மேற்கொண்டனர்.
ஊராட்சி மன்றம் (பஞ்சாயத்து ராஜ், Panchayath Raj) தெற்காசிய அரசு அல்லது அரசியல் முறை குறிப்பாக இந்தியா, பாக்கிஸ்தான் மற்றும் நேபாளம் போன்ற நாடுகளில் பின்பற்றப்பட்டு வருகின்றது. பஞ்சாயத்து என்பதின் பஞ்ச் என்பது ஐந்தையும் யாத் என்பது மன்றம் பேரவை அ கூட்டம் இவைகளைக் குறிக்கும் கிராம வழக்கு சொல். கிராமங்களில் கிராம வாழ் மக்களிடையே ஏற்படும் சிக்கல்கள் மற்றும் சர்ச்சைகள் இவைகளை இவர்களின் குழுக்கள் மூலம் தீர்வு காண்பது வழிவழியாகப் பின்பற்றி வந்த செயலாகும்.
பாரதிதாசன் (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் 'கனகசுப்புரத்தினம்' ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
மாவட்டத் திட்டக்குழு (District Planning Committee (DPC) இந்தியாவில் பஞ்சாயத்து ராஜ் அமைப்பை வலுப்படுத்த, இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 243 ZD-இன் கீழ் இந்தியாவில் உள்ள மாவட்டம் தோறும் அமைக்கப்பட வேண்டிய குழுவாகும். மாவட்டத் திட்டக் குழுவின் தலைவராக மாவட்ட ஆட்சித் தலைவர் இருப்பர். இவருக்கு உதவிட உதவி திட்ட இயக்குநர்களும் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்களும் இருப்பர்.மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் குடிநீர், வடிகால் வசதிகள் போன்ற உட்கட்டமைப்பு வளர்ச்சிகளுக்கு, இம்மாவட்டத் திட்டக் குழு திட்டங்களை வகுத்து மாநில அரசிற்கு வழங்கும்.
தரைவழிப் போக்குவரத்தில் தரைப் போக்குவரத்துக்காக அமைக்கப்பட்ட சாலைகளில் நடக்கக் கூடிய விபத்து சாலை விபத்து எனப்படுகிறது. சாலையில் செல்லும் வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதியோ அல்லது சாலையின் ஓரங்களிலுள்ள மரம் அல்லது கட்டிடங்களில் மோதியோ பெரும்பான்மையான சாலை விபத்துக்கள் நடக்கின்றன. விபத்தின் காரணங்களாக வாகனத்தின் வடிவமைப்பு, வாகனம் செலுத்தப்பட்ட வேகம், சாலையின் தரம், சாலையின் வடிவமைப்பு, சுற்றுப்புறச் சூழ்நிலை, வாகன ஓட்டியின் ஓட்டுதல் திறன் மற்றும் வாகன ஓட்டியின் நடவடிக்கை ஆகியவற்றைக் கூறலாம்.
வர்ணங்கள் ) சமசுகிருத சொல்லான வர்ணா என்ற சொல்லிற்கு அடைத்து வை என்று பொருள். வரலாற்றையொற்றி வழிவழியாய் வந்த கூற்றின்படி வர்ணமும், சாதியும் வெவ்வேறானவை அல்ல அவை ஒன்றொக்கொன்று தொடர்புடையவை என்று கூறப்பட்டுள்ளது. இந்து மக்களை அதன் இறையியல் கூற்றுப்படி மனிதனை குறிக்கும் புருஷா எனும் சொல் (ரிக் வேதக் 10.90 கூற்றுப்படி) மனிதர்களை நான்கு வர்ணங்களாக பிரிக்கின்றது.
அருள்மொழிவர்மன் என்கின்ற பேரரசர் இராசகேசரி வர்மன் முதலாம் இராசராச சோழன் சோழ பேரரசின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவார். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1014 வரையாகும். இவர் மகன் முதலாம் இராசேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவிய பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபா சாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, (District Rural Development Agency (DRDA), மாவட்ட அளவில், கிராமபுறங்களில் வறுமைக்கு எதிரான திட்டப்பணிகளை மேற்கொள்வதே இதன் முக்கிய அடிப்படை நோக்காகும். இம்மாவட்ட வளர்ச்சி முகமைகள், இந்திய அரசின் சங்கங்கள் பதிவுச் சட்டம், 1860ன் படி, பதிவு செய்யப்பட்டு, 1 ஏப்ரல் 1999 முதல் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் இயங்குகிறது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001
தமிழ்நாட்டின் பன்னிரெண்டாவது சட்டமன்றத் தேர்தல் 2001 ஆம் ஆண்டு மே மாதம் நடை பெற்றது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று, ஜெ. ஜெயலலிதா இரண்டாம் முறையாக தமிழகத்தின் முதல்வரானார்.
திருப்பெரும்புதூர் ஊராட்சி ஒன்றியம்
திருப்பெரும்புதூர் ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சிஒன்றியங்களில் ஒன்றாகும். திருப்பெரும்புதூர் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தில் 58 கிராம ஊராட்சிகள் உள்ளது.
தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
இந்தியாவில் ஊழல் ஒரு பெரும் பிரச்சினை. அது இந்தியாவின் பொருளாதாரத்தை மோசமாக பாதிக்கின்றது. இந்தியாவில் திரான்சிபரன்சி இன்டர்நேஷனல் (Transparency International) நடத்திய 2005ஆம் ஆண்டின் ஆய்வின் படி 62 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு இலஞ்சம் கொடுப்பது, அல்லது செல்வாக்கு பயன்படுத்தி பொது அலுவலகங்களில் வெற்றிகரமாக வேலைகளை முடித்துக் கொள்வதில் முதல் கை அனுபவம் இருந்ததாக தெரியவந்துள்ளது.
முத்துராமலிங்கத் தேவர் (Muthuramalingam Thevar, அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 30, 1963) ஆன்மிகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்கு, தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலைசிறந்த பேச்சாளராகவும், ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாளை அரசு விழாவாக, தமிழக அரசு பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றது.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழகத்தில் மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
மாவட்ட ஊராட்சி, சென்னை மாவட்டம் தவிர்த்த ஓவ்வொரு மாவட்டத்திற்கும் மாவட்ட ஊராட்சிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 50,000 மக்கள்தொகைக்கு ஒருவர் என்ற அடிப்படையில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் வாக்காளர்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். மாவட்ட ஊராட்சியின் தலைவர் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
செங்கல்பட்டு மாவட்டம் (Chengalpattu District) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். காஞ்சிபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு செங்கல்பட்டு மாவட்டம் நிறுவுவதற்கான அரசாணை 12 நவம்பர் 2019 அன்று தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்டது. தமிழகத்தின் 37-வது மாவட்டமாக செங்கல்பட்டு மாவட்டம் அறிவிக்கப்பட்டது.செங்கல்பட்டு மாவட்டத்தின் துவக்க விழா 29 நவம்பர் 2019 அன்று செங்கல்பட்டில் நடைபெற்றது.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
மகா புராணங்கள் என்பவை வியாசரால் தொகுக்கப்பெற்ற பதினெட்டு புராணங்களாகும். இவை மகாபுராணங்களின் தகுதியான பேரண்டப் படைப்பு, பிரளயம் மூலம் உலக அழிவும், மறுபடி தோற்றமும், வெவ்வேறு மன்வந்தரங்கள், சூரிய வம்ச, சந்திர வம்ச வரலாறு, அரச பரம்பரைகள் சரிதம் ஆகிய ஐந்தினையும் கொண்டதாக உள்ளது. இவைகளில் ஒன்றோ, இரண்டோ தகுதி குறைவாக இருப்பவை உப புராணங்கள் என்று அழைக்கப்பெறுகின்றன.
சனாதன தர்மம் (Sanatan Dharma) அல்லது "நிலையான தத்துவஞானம்/இசைவு/நம்பிக்கை" என்பதே பல ஆயிரம் ஆண்டுகளாக இந்து சமயத்தைக் குறித்துவந்த பெயராகும்இந்துக்களைப் பொறுத்தவரை, இது, மனிதனால் உருவாக்கப்பட்டவற்றைக் கடந்து, தனிமனித விருப்பு வெறுப்புக்களைக் குறியாது, தூய உணர்வுபூர்வமான அறிவியலைக் குறிக்கும் சில ஆன்மீகக் கொள்கைகள் என்றும் நிலையானவையாக இருக்கின்றன என்ற எண்ணத்தைப் பற்றிப் பேசுகின்றது.
ஆர். துரைகண்ணு (R. Doraikkannu)(பிறப்பு: மார்ச் 28, 1948) ஒரு இந்திய அரசியல்வாதியும், பாபநாசம் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்சியின் சார்பில் 2006, 2011 மற்றும் 2016 தேர்தல்களில் பாபநாசத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.ஜெயலலிதா அவர்களால் 2016 ஆம் ஆண்டு வேளாண் மற்றும் விலங்குகளின் அமைச்சர் பதவிக்கு துரைகண்ணு நியமிக்கப்பட்டார்.
கிராம சபை அல்லது கிராம ஊராட்சியின் பொதுக்குழு, தமிழ்நாடு அரசு 1994-ஆம் ஆண்டில் இயற்றிய பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் படி கிராம ஊராட்சி மன்றம் அமைக்கப்பட்டது. ஒரு மாநிலத்தின் சட்டமன்றம், கிராம சபைக்கு அதிகாரங்களைப் பயன்படுத்த அனுமதி வழங்கலாம் என இந்திய அரசியலமைப்பு சடடப் பிரிவு 243 ஜி குறிப்பிடுகிறது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் செயல்படும் கிராம ஊராட்சியின் வாக்காளர் பட்டியல் உள்ளவர்கள் அனைவரும் கிராம சபையின் உறுப்பினர்கள் ஆவார்.
பஞ்சாயத்து ஒன்றியம் அல்லது ஊராட்சி ஒன்றியம் (Panchayat Union or Block Development Office), இந்தியாவின், தமிழ்நாட்டில், 1994ம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி சட்டத்தின்படி வட்டார அளவில் ஊராட்சி ஒன்றியங்கள் அமைக்கப்பட்டது.ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் கிராம ஊராட்சிகள் இயங்குகிறது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் 385 ஊராட்சி ஒன்றியங்களும், 12524 கிராம ஊராட்சிகளும் உள்ளது. அவற்றுள் நீலகிரி மாவட்டம் குறைந்த பட்சமாக நான்கு பஞ்சாயத்து ஒன்றியங்களும், விழுப்புரம் மாவட்டம் அதிக பட்சமாக 22 பஞ்சாயத்து ஒன்றியங்களையும் கொண்டுள்ளது.ஊராட்சி ஒன்றியங்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி விரிவாக்க அலுவலர்கள், மேலாளர், கணக்காளர் மற்றும் உதவியாளர்கள் ஊராட்சி ஒன்றியக் குழுவின் தீர்மானங்களை நிறைவேற்றுவார்.
இந்திய வரலாறு (History of India) என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் வரலாற்றுக் காலம் முன்பு வாழ்ந்த மக்கள், அவர்தம் சமுதாயம், சிந்து சமவெளி நாகரிகம் இந்தோ-ஆரியப் பண்பாடு உள்ளடக்கிய வேதகால நாகரிகம் தொடங்கி இன்றுவரை உள்ளிட்டகாலம் அடங்கும். மேலும் பல கலாச்சாரங்களின் சாரமாகவும் பண்பாடுகளை உள்வாங்கியும் பிறந்த இந்து சமயம், அதன் வளர்ச்சி குறித்தும் சிரமணா இயக்கத்தின் வளர்ச்சி, சிரவுத்தா பலிகளின் வீழ்ச்சி, சைனம், பௌத்தம், சைவம், வைணவம் மற்றும் சக்தி வழிபாடு இவைகளின் வளர்ச்சி, தாக்கம், மேலும் இப்பகுதியில் இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த அரச பரம்பரை, பேரரசுகளின் தோற்றம், தாக்கம், இடைகாலத்தில் தோன்றிய இந்து மற்றும் முகலாய அரச பரம்பரைகள் குறித்த தகவல்கள், பிற்காலத்தில் வந்த ஐரோப்பிய வணிகர்கள், அதன் தொடர்ச்சியாக அமைந்த ஆங்கிலேய அரசு, அதன் தொடர்ச்சியாக எழுந்த விடுதலை இயக்கம், அதன் பின் நாடு பிரிவினை அடைந்து இந்தியக் குடியரசு பிறந்த வரை தகவல்கள் உள்ளிட்டவை அடங்கும்.சுமார் 75,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியத் துணைக்கண்டத்தில் இன்றைய மனிதர்களின் உடற்கூறியல் வடிவத்தை ஒத்த மனிதர்களோ அல்லது 5,00,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தற்கால மனிதனின் முன்னோடிகளோ வாழ்ந்து வந்ததற்கான சான்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கிமு 3200 முதல் கிமு 1300 வரை இந்தியாவில் செழிப்பாக விளங்கிய சிந்துவெளி நாகரிகம்தான் தெற்கு ஆசியாவில் தோன்றிய முதல் நாகரிகம் ஆகும்.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமஸ்கிருதம்:பிரகதீஸ்வரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும் , தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
மேலும் தகவல்களுக்கு: இராவணன் (பக்கவழி நெறிப்படுத்தல்)இராவணன் வால்மீகி முனிவர் எழுதிய இராமாயணம் எனும் காவியம் கூறும் இலங்கையை ஆண்ட அசுர குல மன்னர் ஆவார். இராவணனுக்கு தசக்கிரீவன், இலங்கேஸ்வரன், இராவணேஸ்வரன், திரிலோக அதிபதி என்று பல பெயர்கள் உண்டு. பத்து முகங்களை உடையமையினால் தசமுகன் என்றும் அறியப்படுகிறார்.பத்து பிரஜாபதிகளில் ஒருவரான புலஸ்திய முனிவரின் மகனான விஸ்ரவ முனிவருக்கும், அரக்கர் குல தலைவர் சுமாலியின் மகள் கைகேசிக்கும் பிறந்தவர்களே இராவணன், கும்பகர்ணன், வீடணன் மற்றும் சூர்ப்பனகை ஆவார்.
அகத்தா மறவர்(மணியக்காரர்) என்பது தமிழ்நாட்டிலுள்ள, முக்குலத்தோரின் ஒரு பிரிவான மறவர் இனக்குழுவின் உட்பிரிவுகளில் ஒன்றாகும்.பழமையான யான வரலாற்று பதிவுகளைக் கொண்ட பிரிவு. சங்ககால அகுதை மன்னனின் வழிவந்தவர்கள் அகத்தா மறவர்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.அகுதை குலத்தவர்கள் அகுதை என்ற பெயரை வி ரும்பி வைத்துக் கொண்டதாக. சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.
திருநகரி கல்யாண ரெங்கநாதர் கோயில்
திருநகரி கல்யாண ரெங்கநாதர் கோயில் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருநகரி எனும் கிராமத்தில் அமைந்த இரட்டைத் தலங்களில் ஒன்றாகும். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட வைணவக் கோயிலாகும். இக்கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.
ருதுராஜ் கெய்க்வாட் (பிறப்பு 31 ஜனவரி 1997) என்பவர் இந்திய உள்ளூர் துடுப்பாட்டக்காரர் ஆவார். 6 அக்டோபர் 2016 அன்று 2016–17 ரஞ்சி டிராபியில் மகாராஷ்டிரா அணிக்காக முதல் தரப் போட்டிகளில் அறிமுகமானார். பிப்ரவரி 2, 2017 அன்று 2016–17 இன்டர் ஸ்டேட் இருபது-20 போட்டியில் மகாராஷ்டிரா அணிக்காக இருபது20 போட்டிகளில் அறிமுகமானார்.
கொலு என்றால் அழகு என்று பொருள்.கொலு என்பது நவராத்திரியை முன்னிட்டு பொம்மைகளை வைத்து செய்யப்படும் ஒரு வழிபாட்டு முறையாகும். பெரும்பாலும் இந்தியாவின் தென்பகுதிகளான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகம் பகுதிகளில் இவ்வழிபாட்டு முறை நடைபெறுகிறது. இப் பண்டிகை பொதுவாக தமிழ் மாதமான புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசையை அடுத்து வரும் பிரதமை திதியிலிருந்து பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது.
சிவன் (Śiva) இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர். சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர்.இவர் தனது ஒரு பகுதியிலிருந்து அன்னை பராசக்தியை உருவாக்கினாரெனவும், பின்னர் இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்டசராசரங்களை உருவாக்கினார்களென்றும், தனது உடுக்கையிலிருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார் எனவும் கருதப்படுகிறது. பின்னர் அன்னை பராசக்தி படைப்பிற்காக பிரம்மதேவரையும், அதன்பிறகு காப்பதற்காக காக்கும் கடவுளான விஷ்ணுவையும் உருவாக்கினார் என்றும் கருதப்படுகிறது.
கண்ணதாசன் (ஒலிப்பு ) (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
மணப்பாறை (ஆங்கிலம்:Manapparai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மணப்பாறை வட்டத்தில் இருக்கும் ஒரு முதல்நிலை நகராட்சி ஆகும். மணப்பாறை முறுக்கு மற்றும் மாட்டுச்சந்தைக்கும் மிகவும் புகழ்பெற்றது. மண என்பதற்கு தமிழில், கடினம் (HARD) என்று பொருள்; மணப்பாறை - கடின பாறைகள் கொண்ட நிலம்.
வன்னியர் (Vanniyar) அல்லது வன்னிய குல சத்திரியர் (Vanniya Kula Kshatriya's) எனப்படுவோர் தமிழகத்தில் குறிப்பாக வடதமிழகத்தில் (காவேரி ஆற்றின் வடக்கு பகுதிகளில்) அடர்த்தியாகவும், மற்ற பகுதிகளில் குறிப்பிட்ட அளவிலும் வாழுகின்ற ஒரு மிகப்பெரிய தமிழ் சாதியினர் ஆவர். இவர்கள் புதுச்சேரி, தெற்கு கருநாடகம் மற்றும் தெற்கு ஆந்திரா போன்ற பகுதிகளிலும் வாழ்கின்றனர். இவர்கள் தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு பட்டியலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ளனர்.
சகலகலாவல்லி மாலை குமரகுருபர சுவாமிகள் கலைமகளை வேண்டிய தமிழில் பாடிய பாமாலை ஆகும். குமரகுருபர சுவாமிகள் தனது ஞான தேசிகரான தருமபுர ஆதீன நான்காவது குருமுதல்வராக விளங்கிய ஸ்ரீமாசிலாமணி தேசிகரிடத்து விடைபெற்று காசிக்குச் சென்றார். அப்பொழுது தில்லி பாதுஷாவாக விளங்கிய முகம்மதிய மன்னனை வாதிலே வெல்லக் கருதி அம்மன்னனது மொழியாகிய இந்துஸ்தானியை அறிந்து கொள்வதற்காக சகலகலாவல்லி மாலை என்னும் பாமாலையைப் பாடினார்.
நிசார் பாசுமி (Nisar Bazmi) (1924 திசம்பர் 1 - 2007 மார்ச் 22) இவர் இந்தியாவிலும், பாக்கித்தானிலும் திரைப்படத் துறையின் இசையமைப்பாளராகவும், இசை இயக்குநராகவும் இருந்தார். இவர், தெற்காசியாவின் மிகவும் பிரபலமான இசைக்கலைஞர்களில் ஒருவராக அறியப்பட்டார். ஆலம்கீர் போன்ற புதிய பாடகர்களையும் அறிமுகப்படுத்தினார்.
மெத்திலிடைன் குழு (Methylidyne group) என்பது ஒரு மூலக்கூறில் ≡CH என்ற பிணைப்பைக் கொண்டு பதிலீடு அல்லது வேதி வினைக்குழு இரண்டில் ஒன்று நடுநிலை பகுதியாகக் காணப்படும் சேர்மத்தைக் குறிக்கிறது. மெத்திலிடைன் என்ற ஒற்றறைச் சொல்லாலும் இக்குழுவைக் குறிப்பிடுவர். இதன் மூலக்கூற்று வாய்ப்பாட்டில் ஒரு கார்பன் அணு ஐதரசன் அணுவுடன் ஓர் ஒற்றைப்பிணைப்பாலும் எஞ்சியுள்ள மூலக்கூறு முப்பிணைப்பாலும் பிணைக்கப்பட்டிருக்கும்.
வித்யாரம்பம் (Vidyarambham ( சமசுகிருதம் : विद्यारम्भम्) என்பது ஒரு இந்து சமய சடங்காகும். இது பாரம்பரியமாக விஜயதசமி நாளில் கேரளம், தமிழ்நாடு, கடலோர கருநாடகம் போன்ற பகுதிகளில் செய்யப்படுகிறது. இந்த நாளில் குழந்தைகளுக்கு முறையாக இசை, நடனம், மொழிகள், நாட்டுப்புற கலை போன்றவை கற்ப்பிப்பது துவக்கப்படுகிறது.
திருவள்ளுவர் (Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர் என்றும் அழைக்கப்படுகிறார்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான கி.மு.400க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
3வது ஜீ தமிழ் குடும்பம் விருதுகள்
3வது ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் என்பது 2020 ஆம் ஆண்டு அன்று ஜீ தமிழ் தொலைக்காட்சில் பல்வேறு பிரிவுகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் திறமையானவர்களை பாராட்டி அங்கீகரித்து கௌரவிக்கும் ஒரு விருது நிகழ்ச்சி ஆகும்.இந்த ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் 2020 மூன்றாவது பருவத்தின் புதுமை அதன் ‘சிறந்த விருதுகள்' பிரிவுக்கான வித்தியாசமான முன்னோட்ட நிகழ்ச்சியாகும். இதன் முன்னோட்ட நிகழ்ச்சி ஒட்டுமொத்த ஜீ தமிழ் குடும்ப உறுப்பினர்களும் மூன்று நாள் ஒரு பெரிய பங்களா வீட்டில் தங்கி இருந்து குதூகலிக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும், சுவாரஸ்யமான விளையாட்டுகளை ஆடிக் கொண்டும், இறுதிச் சுற்றுக்கு பரிந்துரை பட்டியலில் இடம் பிடிக்க ஒருவருடன் ஒருவர் போட்டி போடுவார்கள். இந்த பருவத்தின் வாக்களிப்புகள் ஜீ5, ஜீ தமிழ் முகநூல் மற்றும் கைபேசி மூலமாக நடைபெற்றது.
இலங்கை (ஒலிப்பு ) (Sri Lanka, சிங்களம்: ශ්රී ලංකා, சிறீலங்கா) இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் வாழும் ஒரு தீவு நாடு ஆகும். இதன் தற்போதைய அதிகாரபூர்வ பெயர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு ஆகும். 1972 க்கு முன் உலகம் முழுவதும் சிலோன் (Ceylon) என்ற பெயரால் அறியப்பட்டு வந்தது.
சித்தாமூர் தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த ஒரு சிற்றூர் ஆகும். இதன் அருகில் மகாபலிபுரம், பாண்டிச்சேரி போன்ற சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன சித்தாமூர் மாவட்டத் தலைநகரான செங்கல்பட்டிலிருந்து 38 கிமீ தூரத்திலும், மாநிலத்தலைநகரான சென்னையிலிருந்து 93 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது. இதன் அருகில் பல கல்லூரிகளும், பள்ளிகளும் அமைந்துள்ளன.