The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
மனு தர்ம சாத்திரம் (சமசுகிருதம்:मनुस्मृति, மனுஸ்மிருதி) இந்துக்கள் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கையில் பின்பற்றவேண்டிய சடங்குகள், சம்பிரதாயங்கள், அற ஒழுக்க விதிமுறைகளை ஒழுங்குபடுத்திக் கூறும் நூல் ஆகும். இதனை சுவாயம்பு (மனு) எனும் பண்டைய வேத கால முனிவர் தொகுத்தார். இது 2685 செய்யுட்களாகவும், 3 பகுதிகளாகவும், 12 அத்தியாயங்களாகவும் அமைந்துள்ளது.
அருள்மொழிவர்மன் என்கின்ற பேரரசர் இராசகேசரி வர்மன் முதலாம் இராசராச சோழன் சோழ பேரரசின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவார். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1014 வரையாகும். இவர் மகன் முதலாம் இராசேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவிய பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே.
விஜயதசமி (Vijayadashami, வங்காளம்: বিজয়াদশমী, கன்னடம்: ವಿಜಯದಶಮಿ, மலையாளம்: വിജയദശമി, மராத்தி: विजयादशमी, நேபாளி :विजया दशमी, ஒரியா :ବିଜୟାଦଶମୀ, தெலுங்கு: విజయదశమి) இந்தியா, நேபாளம் மற்றும் வங்காள தேசத்தில் பல்வேறு வடிவங்களில் கொண்டாடப்படும் ஓர் மழைக்கால இந்து சமய விழாவாகும். இது தசரா (Dasara/ Dasara/ Dussehra) என்றும் அழைக்கப்படுகிறது. தென்னகப் பகுதிகளில் நவராத்திரியின் ஓர் அங்கமாகவும், வங்காளத்தில் துர்கோத்சவத்தின் அங்கமாகவும் கொண்டாடப்படுகின்றது.
ஆரணி (ஆங்கிலம்: AARANI) தென் இந்தியா மாநிலமான தமிழ்நாட்டை சேர்ந்த நகராட்சியும் மற்றும் தொண்டை மண்டலம் என்று அழைக்கப்பட்ட வட மாவட்டத்தின் ஒரு பகுதியான திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 33 நகராட்சி மன்ற உறுப்பினர்களுடன் கூடிய தேர்வு நிலை நகராட்சி ஆகும். இவ்வூர் பட்டுப்புடவைகளுக்கும், பொன்னி ரக அரிசி வகைகளுக்கும் பெயர்பெற்றது. இந்த நகரம் கமண்டல நாகநதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்கள்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011
தமிழ்நாட்டின் பதினான்காவது சட்டமன்றத் தேர்தல் 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று நடைபெற்றது. ஐந்தாண்டுகளாக ஆட்சியில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி தோல்வியடைந்தது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஜெ.
சே குவேரா (Che Guevara) என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) (சூன் 14, 1928 – அக்டோபர் 9, 1967) அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபெற்ற போராளி எனப்பல முகங்களைக் கொண்டவர்.
மணக்குப்பம் ஊராட்சி (Manakkuppam Gram Panchayat), தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, திருக்கோயிலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.
பிள்ளையார் அல்லது விநாயகர் (சமசுகிருதம்: गणेश; சர்வதேச சமசுகிருத ரோமனாக்க அரிச்சுவடி: கணேஷா; கேட்க ), இந்து சமயக் கடவுள்களில் பெரும்பாலானோரால் வழிபடப்படும் முதன்மைக் கடவுள். விநாயகர் வழிபாடு இந்தியாவிலும், நேபாளத்திலும் முழுவதாக காணப்படுகிறது. இவர் கணபதி, ஆனைமுகன் என வேறு பல பெயர்களாலும் அறியப் பெறுகிறார்.
விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம், 2020
விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம், 2020 விவசாய உற்பத்தி சந்தைக் குழு (ஏபிஎம்சி) சந்தைகள் மற்றும் மாநில ஏபிஎம்சி சட்டங்களின் கீழ் அறிவிக்கப்பட்ட பிற சந்தைகளின் வளாகங்களுக்கு அப்பாலும் விவசாயிகள் தங்களின் உற்பத்திப் பொருட்களை மாநிலங்களுக்கு உள்ளும் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான வர்த்தகத்தை அனுமதிக்கிறது . பண்ணை வாயில்கள், தொழிற்சாலை வளாகங்கள், கிடங்குகள், களஞ்சியம் மற்றும் குளிர் களஞ்சியங்கள் போன்ற "வெளிப்புற வர்த்தக பகுதிகளில்" வர்த்தகம் செய்ய இந்தச் சடம் அனுமதிக்கிறது. முன்னதாக, விவசாய வர்த்தகத்தை ஏபிஎம்சி யார்டுகள் / மண்டிகளில் மட்டுமே வணிகத்தினை நடத்த முடியும்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி மே 8, 2006 அன்று தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தல், 2006 நடைபெற்றது. இத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி மொத்த இடங்களான 234 தொகுதிகளில் 163 இடங்களில் வெற்றி பெற்றது. கூட்டணி கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவளிக்க தொடர்ந்து திமுக அரசு மே 13-ம் தேதி மு.
பாரதிதாசன் (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் 'கனகசுப்புரத்தினம்' ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
இந்தியாவில் ஊழல் ஒரு பெரும் பிரச்சினை. அது இந்தியாவின் பொருளாதாரத்தை மோசமாக பாதிக்கின்றது. இந்தியாவில் திரான்சிபரன்சி இன்டர்நேஷனல் (Transparency International) நடத்திய 2005ஆம் ஆண்டின் ஆய்வின் படி 62 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு இலஞ்சம் கொடுப்பது, அல்லது செல்வாக்கு பயன்படுத்தி பொது அலுவலகங்களில் வெற்றிகரமாக வேலைகளை முடித்துக் கொள்வதில் முதல் கை அனுபவம் இருந்ததாக தெரியவந்துள்ளது.
சேத் (Set) பண்டைய எகிப்தின் பாலைவனம், புயல், ஒழுங்கின்மை, கொடூரம் மற்றும் எகிப்திய சமயத்தில் வெளிநாட்டவர்கள் பங்கு ஆகியவற்றுக்கு அதிபதியான பண்டைய எகிப்தியக் கடவுள் ஆவார்.சூரியக் கடவுளான இரா கடவுளருடன் சேத் கடவுள் ஒருகிணைந்து செயல்படுகையில் நேர்மறை செயல்களில் ஈடுபடுகிறது. கரிய வண்டல் மண்னுக்கு அதிபதியான ஓரசு கடவுள் போன்று, சேத் கடவுள் சிவப்பு மண் கொண்ட பாலைவனத்திற்கு அதிபதி ஆவார்.பண்டைய எகிப்தின் நக்காடா பண்பாடு காலத்தில் சேத் கடவுள் பிரபலமானவர். இவரின் கூடப் பிறந்தவர்கள் ஒசிரிசு, இசிசு, நெப்திஸ், மூத்த ஓரசு ஆவார்.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமஸ்கிருதம்:பிரகதீஸ்வரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும் , தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
இந்திய மொழிகளில் உள்ள தமிழ்ச் சொற்கள்
ஒரு இனத்தின் மொழியில் உள்ள ஒவ்வொரு சொல்லிற்குப் பின்னும் அவ்வினத்தின் நீண்டகால வரலாறு அடங்கியிருக்கும். அப்படி தமிழரின் வரலாற்றைத் தன்னுள்ளே பொதிந்து வைத்திருக்கும் தமிழ் மொழியில் உள்ள பல சொற்களை, சமற்கிருதச் சொற்கள் என தற்காலத்தில் பலர் பயன்படுத்துவதில்லை. தமிழ் மொழியில் உள்ள சொற்கள் காரணப்பெயர்கள் என்பதால், ஒன்றைக் குறிக்கப் பல சொற்களை உருவாக்க முடியும்.
செம்பை வைத்தியநாத பாகவதர் (மலையாளம்: ചെമ്പൈ വൈദ്യനാഥ ഭാഗവതര്, செப்டம்பர் 1, 1895 - அக்டோபர் 16, 1974) பாலக்காட்டில் செம்பை என்ற கிராமத்தில் தோன்றிய பிரபலமான ஒரு கருநாடக இசைக்கலைஞர் ஆவார். இவர் தம் கிராமப் பெயராலேயே இசையுலகில் பொதுவாக அழைக்கப்பட்டார். அனந்த பாகவதர் மற்றும் பார்வதி அம்மாள் என்ற தம்பதி இவரின் பெற்றோராவர்.
முகம்மது நபி அல்லது முகம்மது (Muḥammad, அரபு மொழி: محمد, பிறப்பு கிபி 570, இறப்பு 8 சூன் கிபி 632 கணிப்பு), அராபியப் பெயர்: அபூ அல்-காசிம் முகம்மது இப்னு அப்தல்லா இப்னு அப்தல்-முத்தலிப் இப்னு ஹாசிம் (Abū al-Qāsim Muḥammad ibn ʿAbd Allāh ibn ʿAbd al-Muṭṭalib ibn Hāshim, ابو القاسم محمد ابن عبد الله ابن عبد المطلب ابن هاشم) என்பவர் மக்கா நகரைச் சேர்ந்தவர். அராபியத் தீபகற்பம் முழுமையையும் இசுலாம் என்ற ஒரே கொள்கைச் சமயத்தின் கீழ் கொண்டு வந்தவர். இவர் முஸ்லிம்களால் மட்டுமல்லாமல் பாபிஸ்துகள் மற்றும் பகாய் சமயத்தவர்களாலும் கடவுளின் திருத்தூதர் என்று போற்றப்படுகிறார்.
ஆலிவர் சைமன் ஹார்ட் (Oliver Simon Hart, பிறப்பு: அக்டோபர் 9, 1948) இங்கிலாந்தில் பிறந்து அமெரிக்காவில் வாழும் பொருளாதார நிபுணர் ஆவார். இவர் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் பொருளியலில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். இவருக்கு 2016 ஆம் ஆண்டிற்கான பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு பென் ஓம்சுடொரொமுடன் இணைந்து வழங்கப்பட்டது.
முத்துராமலிங்கத் தேவர் (Muthuramalingam Thevar, அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 30, 1963) ஆன்மிகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்கு, தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலைசிறந்த பேச்சாளராகவும், ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாளை அரசு விழாவாக, தமிழக அரசு பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றது.
சேரன் (பிறப்பு: திசம்பர் 12, 1965) என்பவர் தமிழ்நாட்டை திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் ஆவார். இவர் இயக்கிய வெற்றிக் கொடி கட்டு (2000), ஆட்டோகிராப் (2004) மற்றும் தவமாய் தவமிருந்து (2005) போன்ற திரைப்படங்கள் தேசிய திரைப்பட விருதுகள் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சொல்ல மறந்த கதை (2000), தவமாய் தவமிருந்து (2005), பொக்கிசம் (2009), முரண் (2011) போன்ற பல திரைப்பட ங்களிலும் கதாநாகனாக நடித்துள்ளார்.
தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
நக்காடா பண்பாடு (Naqada culture) வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய பண்டைய எகிப்தின் வெண்கலக் காலத்தில் ஏறத்தாழ கிமு 4400 முதல் கிமு 3000 முடிய இத்தொல்லியல் பண்பாடு விளங்கியது. தெற்கு எகிப்தில் அமைந்த நக்காடா எனும் பண்டைய நகரத்தின் பெயரால் இப்பண்பாட்டின் பெயர் அமைந்தது. 2013- ஆம் ஆண்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கரிம கதிரியக்க ஆய்வில், நக்காடா பண்பாடு கிமு 3,800-3,700 காலத்தியது என முடிவு செய்துள்ளனர்.
ஆர். துரைகண்ணு (R. Doraikkannu)(பிறப்பு: மார்ச் 28, 1948) ஒரு இந்திய அரசியல்வாதியும், பாபநாசம் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்சியின் சார்பில் 2006, 2011 மற்றும் 2016 தேர்தல்களில் பாபநாசத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.ஜெயலலிதா அவர்களால் 2016 ஆம் ஆண்டு வேளாண் மற்றும் விலங்குகளின் அமைச்சர் பதவிக்கு துரைகண்ணு நியமிக்கப்பட்டார்.
குற்றால அருவிகள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்ட குற்றாலம் பேரூராட்சியில், மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளவை. இது தென்னகத்தின் "ஸ்பா" (ஆரோக்கிய நீருற்று) என்றழைக்கப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலை சிற்றாறு, மணிமுத்தாறு, பச்சையாறு மற்றும் தாமிரபரணி ஆறுகளின் பிறப்பிடமாகும்.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழகத்தில் மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
2020 இந்தியாவில் கொரோனாவைரசுத் தொற்று
இந்தியாவில் கொரோனாவைரசு தொற்று, 30 சனவரி 2020 அன்று முதல் பரவத் தொடங்கியது. 27 செப்டம்பர், 2020 நிலவரப்படி 59,03,932 இதற்கு அதிகமானோர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 48,49,584 பேர் உடல்நலம் தேறி வீடு திரும்பியுள்ளதாகவும் மற்றும் 93,379 பேர் இறந்துள்ளதாகவும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. 14 மார்ச் 2020, அன்று கொரோனா வைரஸ் தொற்றை இந்திய அரசு, தேசிய பேரிடராக அறிவித்தது.
இலட்சுமிகாந்த்-பியாரேலால் (Laxmikant–Pyarelal) இவர்கள் ஓர் பிரபலமான மற்றும் வெற்றிகரமான இந்திய இரட்டை இசையமைப்பாளர்கள் ஆவர். இதில் இலட்சுமிகாந்த் சாந்தாராம் குதல்கர் (1937-1998) மற்றும் பியாரேலால் 'ராம்பிரசாத் சர்மா (பிறப்பு 1940) ஆகிய இருவரும், இந்தியத் திரைப்படத்துறை வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான இசையமைப்பாளராக கருதப்படுகின்றனர். மேலும், 1963 முதல் 1998 வரை சுமார் 750 இந்தித் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளனர்.
அனூபீசு அல்லது இன்பு அல்லது அன்பு (Anubis or Inpu, Anpu) பண்டைய எகிப்தியர்களின் இறப்பு, சடலத்தை மம்மிப்படுத்தல், சடலத்தை பதப்படுத்தல், இறப்பிற்கு பிந்தைய வாழ்க்கையை முடிவு செய்தல், இறந்தவர்களின் கல்லறைகள் மற்றும் நினைவுச் சின்னங்களை காத்தல் மற்றும் பாதள உலகத்திற்கான கடவுள் ஆவார். இக்கடவுள் கருப்பு நிற குள்ள நரியின் முகமும், மனித உடலும் கொண்டது. எகிப்திய மன்னர்களின் கல்லறைச் சுவர்களில் இக்கடவுளின் உருவம் ஓவியமாக வரையப்பட்டிருக்கும்.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபா சாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.
பஞ்சாப் (பஞ்சாபி: ਪੰਜਾਬ, panj-āb, "ஐந்து ஆறுகள்") பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் மற்றும் இந்தியாவின் பஞ்சாப், இமாச்சல் பிரதேசம், சண்டிகர், தில்லி ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கிய ஒரு புவியியல் பகுதி. சிந்து ஆற்றின் கிளை ஆறுகளான ஜீலம், செனாப், ராவி, சத்லஜ், மற்றும் பியாஸ் ஆகிய “ஐந்து நதிகள்” பாய்வதால் இப்பகுதி பஞ்சாப் என்று அழைக்கப்படுகிறது. ஜீலம் தான் இவற்றில் மிகப் பெரியது.
சொல் (ஒருசொல், ஒன்று அல்லது பல பொருள், நிகண்டு வழி)
ஒரு சொல்லானது இன்னின்ன பொருளைத் தரும் என முதன்முதலில் தோன்றிய திவாகர நிகண்டு சொற்பொருள் இங்குத் தொகுக்கப்பட்டு அகர வரிசையில் தரப்படுகின்றன. இத்தொகுப்பில் 343 சொற்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நூலுக்குச் சேந்தன் திவாகம் என்னும் பெயரும் உண்டு.
திருவள்ளுவர் (Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர் என்றும் அழைக்கப்படுகிறார்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான கி.மு.400க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (Other Backward Class (OBC)) என்போர் சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கியுள்ளதாக இந்திய அரசு இனங்கண்டுள்ள பல்வேறு சாதியினரைக் குறிக்கும். பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் என்பது போன்று இந்திய மக்கள் தொகையைப் பல்வேறு வகைகளாகப் பகுக்கும் முறைகளில் இதுவும் ஒன்று. இந்திய நாட்டில் வர்க்க வேறுபாடுகளைப் பொருளாதாரக் காரணங்கள் மட்டும் தீர்மானிப்பதில்லை.
பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவும் உண்டு. அறம், பொருள், இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்களில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன. உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற பிரிவின் கீழ் வருவன.
வர்ணங்கள் ) சமசுகிருத சொல்லான வர்ணா என்ற சொல்லிற்கு அடைத்து வை என்று பொருள். வரலாற்றையொற்றி வழிவழியாய் வந்த கூற்றின்படி வர்ணமும், சாதியும் வெவ்வேறானவை அல்ல அவை ஒன்றொக்கொன்று தொடர்புடையவை என்று கூறப்பட்டுள்ளது. இந்து மக்களை அதன் இறையியல் கூற்றுப்படி மனிதனை குறிக்கும் புருஷா எனும் சொல் (ரிக் வேதக் 10.90 கூற்றுப்படி) மனிதர்களை நான்கு வர்ணங்களாக பிரிக்கின்றது.
இந்திய வரலாறு (History of India) என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் வரலாற்றுக் காலம் முன்பு வாழ்ந்த மக்கள், அவர்தம் சமுதாயம், சிந்து சமவெளி நாகரிகம் இந்தோ-ஆரியப் பண்பாடு உள்ளடக்கிய வேதகால நாகரிகம் தொடங்கி இன்றுவரை உள்ளிட்டகாலம் அடங்கும். மேலும் பல கலாச்சாரங்களின் சாரமாகவும் பண்பாடுகளை உள்வாங்கியும் பிறந்த இந்து சமயம், அதன் வளர்ச்சி குறித்தும் சிரமணா இயக்கத்தின் வளர்ச்சி, சிரவுத்தா பலிகளின் வீழ்ச்சி, சைனம், பௌத்தம், சைவம், வைணவம் மற்றும் சக்தி வழிபாடு இவைகளின் வளர்ச்சி, தாக்கம், மேலும் இப்பகுதியில் இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த அரச பரம்பரை, பேரரசுகளின் தோற்றம், தாக்கம், இடைகாலத்தில் தோன்றிய இந்து மற்றும் முகலாய அரச பரம்பரைகள் குறித்த தகவல்கள், பிற்காலத்தில் வந்த ஐரோப்பிய வணிகர்கள், அதன் தொடர்ச்சியாக அமைந்த ஆங்கிலேய அரசு, அதன் தொடர்ச்சியாக எழுந்த விடுதலை இயக்கம், அதன் பின் நாடு பிரிவினை அடைந்து இந்தியக் குடியரசு பிறந்த வரை தகவல்கள் உள்ளிட்டவை அடங்கும்.சுமார் 75,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியத் துணைக்கண்டத்தில் இன்றைய மனிதர்களின் உடற்கூறியல் வடிவத்தை ஒத்த மனிதர்களோ அல்லது 5,00,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தற்கால மனிதனின் முன்னோடிகளோ வாழ்ந்து வந்ததற்கான சான்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கிமு 3200 முதல் கிமு 1300 வரை இந்தியாவில் செழிப்பாக விளங்கிய சிந்துவெளி நாகரிகம்தான் தெற்கு ஆசியாவில் தோன்றிய முதல் நாகரிகம் ஆகும்.
வைரமுத்து (Vairamuthu, சூலை 13, 1953), புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் மற்றும் கவிஞர் ஆவார். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார். நிழல்கள் (1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலைப் பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் சனவரி 2009 வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் உள் கட்டமைப்பு
தொடக்கத்தில் சிறிய கரந்தடி இராணுவக் குழுவாக செய்ற்பட்டு வந்த விடுதலைப் புலிகள் பின்னர் வளர்ச்சியடைந்து தரைப்படை, வான்படை, கடற்படை, காவல் துறை என பல்வகைப் பிரிவுகளை கொண்ட படைத்துறையாக மாறினர். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அங்கமாக இருந்த படையணிகள் பின்வருமாறு; கடற்புலிகள் வான்புலிகள் லெப். கேணல் இராதா விமான எதிர்ப்புப் படையணி மாலதி படையணி (பெண்புலிகள்) சோதியா படையணி (பெண்புலிகள்) - மகளிர் படையணியில் முதன் முதல் உருவாகிய படையணி அன்பரசி படையணி (பெண்புலிகள்) சிறுத்தைகள் கரும்புலிகள் கடற்கரும்புலிகள் கேணல் கிட்டுப் பீரங்கிப் படையணி லெப்.
தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்
தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சாதிகளையும் பட்டியலிட்டுள்ளது. இவை முறையே; பட்டியல் பழங்குடியினர் (36) பட்டியல் சாதிகள் (76) பிற்படுத்தப்பட்ட சாதிகள் (136) பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் (இஸ்லாமியர்)(7) மிகவும் பிற்பட்ட சாதிகள் (41) சீர்மரபினர் (68) முற்பட்ட சாதிகள் (79)என்று 7 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் இருக்கும் முற்பட்ட வகுப்பினர், அனைத்து வகுப்பினரும் பங்கேற்கும் பொதுப்பிரிவுகளின் மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மட்டுமே இடம் பெற இயலும்.
வித்யாரம்பம் (Vidyarambham ( சமசுகிருதம் : विद्यारम्भम्) என்பது ஒரு இந்து சமய சடங்காகும். இது பாரம்பரியமாக விஜயதசமி நாளில் கேரளம், தமிழ்நாடு, கடலோர கருநாடகம் போன்ற பகுதிகளில் செய்யப்படுகிறது. இந்த நாளில் குழந்தைகளுக்கு முறையாக இசை, நடனம், மொழிகள், நாட்டுப்புற கலை போன்றவை கற்ப்பிப்பது துவக்கப்படுகிறது.
பண்டைய எகிப்தியத் தெய்வங்கள் (Ancient Egyptian deities) என்பது எகிப்தில் பண்டைய காலத்தில் வழிபடப்பட்ட ஆண், பெண் கடவுளர்கள் ஆவர். எகிப்தியக் கடவுளர்களில் முக்கியமானவர் இரா எனும் சூரியக் கடவுள் ஆவர். பிற கடவுளர்கள் அமூன், ஒசைரிஸ், ஓரசு, அதின், மூத், ஆத்தோர், கோன்சு, சகுமித்து, தாவ் மற்றும் வத்செட் ஆவார்.
மணிமேகலை ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்று. இக்காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார்.மணிமேகலை காப்பியத்தில் அடி இணையும், அதன் வழிபாடும், வேறு கடவுள்களின் வழிபாடும் இருக்கும் நிலையில், அது ஒரு மஹாயாண காப்பியமாகவே இருக்கமுடியும். மேலும், மஹாயாண பௌத்தமானது இல்லறத்தையும், துறவறத்தையும் வலியுறுத்தும் நிலையிலும், சிலப்பதிகாரமானது இல்லறத்தையும், மணிமேகலை காப்பியம் துறவறத்தையும் வலியுறுத்துவதாலும், இவைகள் இரட்டைக் காப்பியங்கள் ஆகும்.
கண்ணதாசன் (ஒலிப்பு ) (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
மைக்ரோசாப்ட் ஆபிஸ் வேர்டு (Microsoft office word) மைக்ரோசாப்டின் உரையாவணைத்தைத் தயாரிக்கும் மென்பொருள் ஆகும். இது முதலில் aktoopar 25,1983 இல் எக்ஸிக்ஸிற்கான மல்டி ரூல் வேட் என்றவாறு அறிமுகமானது.. பின்னர் இந்த மென்பொருளானது ஐபின் இசைவான கணினிகளில் மைக்ரோசாட் டாஸ் இயங்குதளம் (1983), ஆப்பிள் மாக்கிண்டோஷ், SCO யுனிக்ஸ், ஓஸ்/2 மற்றும் மைக்ரோசாட் விண்டோஸ் (1989) இல் அறிமுகமானது.
சல்லகல்ல நரசிம்மம் (Challagalla Narasimham) ஓர் எழுத்தாளராகவும் இந்திய அரசு குடிமைப் பணியாளராகவும் இருந்தவராவார். இந்தியாவின் மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில் இருக்கும் ஐதராபாத்தில் இயூப்ளி இல்சு பகுதியை நவீனமயமாக்கியதற்காக இவர் நன்கு அறியப்படுகிறார். முன்னதாக இவர் இந்திய நிர்வாக சேவை அதிகாரியாகவும் 1947 ஆம் ஆண்டு முதல் 1953 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாநகராட்சியின் ஆணையாளராகவும் இருந்தார்.
கால்சியம் பெரோசயனைடு (Calcium ferrocyanide) என்பது C6Ca2FeN6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அறியப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சாதாரண உப்புக்கு மாற்றாக பயன்படும் இச்சேர்மத்தை ஓர் உணவு மேம்படுத்தும் முகவராக 2012 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் பட்டியலிட்டது. திட்ட வெப்ப அழுத்தத்தில் கால்சியம் பெரோசயனைடு மஞ்சள் நிற படிகங்களாக அல்லது மஞ்சள் நிறத்தூளாகக் காணப்படுகிறது.