The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
சீனிவாச இராமானுஜன் (Srinivasa Ramanujan, டிசம்பர் 22, 1887 – ஏப்ரல் 26, 1920) இந்தியாவில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் கோட்டை பகுதியில் பிறந்த கணித அறிஞர். இராமானுசர் 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார்.
கணிப்பொறி மென்பொருள் அல்லது மென்பொருள் என்பது கணிப்பொறி நிரல்கள் மற்றும் கணிப்பொறிகளால் படிக்கவும் எழுதப்படவும் முடிகின்ற மற்றும் பிற வகைப்பட்ட தகவல் போன்ற எண்ணிம முறையில் சேமிக்கப்படும் தரவு என்று முதன்மையாகப் பயன்படுத்தப்படுகின்ற பொதுவான ஒரு சொல்லாகும். இன்று இந்தச் சொல் திரைப்படச் சுருள், நாடாக்கள் மற்றும் பதிவுப்பொருட்கள் போன்று வழக்கமாக கணிப்பொறியோடு தொடர்புகொண்டிராத தரவையும் உள்ளடக்கியிருக்கிறது.. இந்த சொற்பதம் வன்பொருள் (அதாவது உடலியல் சாதனங்கள்) என்ற பழைய சொல்லுக்கு முரணாக இருக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது; வன்பொருள் என்பதற்கு முரணாக மென்பொருள் என்பது கண்ணுக்குப் புலப்படாதது, அதாவது "தொட இயலாதது" என்பதைக் குறிக்கிறது..
மின்னஞ்சல் (Email) என்பது மின்னணுத் தொடர்புச் சாதனங்கள் மூலம் செய்திகளை எழுதுதல், அனுப்புதல், மற்றும் பெறுதல் போன்றவற்றைச் செய்யும் முறையாகும். சாதாரணமாக அஞ்சல்கள் அனுப்பும் போது யாரிடமிருந்து, யாருக்கு அனுப்புவதைப் போன்று இங்கு உங்கள் மின்னஞ்சலும் பெறுபவரின் மின்னஞ்சல் முகவரியும் தேவைப்படுகின்றது. ஆரம்பத்தில் அமெரிக்கத் தகவல் இடைமாற்றத் தரக் குறிமுறையில் அமைந்திருந்த மின்னஞ்சல்கள், பின்னர் காலப்போக்கில் உலகின் பெரும்பாலான மொழிகளை ஆதரிக்கும் யுனிக்கோட் முறையை ஆதரிக்க மின்னஞ்சல் இரு பாகங்களை உள்ளடக்கியுள்ளது.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
கல்வி (Education) என்பது குழந்தைகளை, உடல் மற்றும் மன வளர்ச்சியில் அறிவு, நல்லொழுக்கம் ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும். கல்வியாளர்கள் கூற்றின்படி, இளை முறையாக வழி நடத்துவதிலும், சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்வி என்பது ஒரு சமூக நிறுவனம்.
பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவும் உண்டு. அறம், பொருள், இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்களில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன. உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற பிரிவின் கீழ் வருவன.
பாரதிதாசன் (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் 'கனகசுப்புரத்தினம்' ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
சேக்கிழார் என்பவர் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவ அடியார் ஆவார். இவர் இரண்டாம் குலோத்துங்க சோழனின் அரசவையில் முதன்மை மந்திரியாக இருந்தவர். சோழன் சீவகசிந்தாமணி எனும் காமரசம் அதிகமுள்ள சமண நூலை படிப்பதனால், சோழனையும், மக்களையும் நல்வழிப்படுத்த சிவபெருமானின் அடியார்களான அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றை விளக்கும் திருத்தொண்டர் புராணத்தினை இயற்றியவர் ஆவார்.
தமிழக அமைச்சரவை தமிழ் நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும் செயலாட்சியர்கள். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார்.
மணிமேகலை ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்று. இக்காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார்.மணிமேகலை காப்பியத்தில் அடி இணையும், அதன் வழிபாடும், வேறு கடவுள்களின் வழிபாடும் இருக்கும் நிலையில், அது ஒரு மஹாயாண காப்பியமாகவே இருக்கமுடியும். மேலும், மஹாயாண பௌத்தமானது இல்லறத்தையும், துறவறத்தையும் வலியுறுத்தும் நிலையிலும், சிலப்பதிகாரமானது இல்லறத்தையும், மணிமேகலை காப்பியம் துறவறத்தையும் வலியுறுத்துவதாலும், இவைகள் இரட்டைக் காப்பியங்கள் ஆகும்.
மனித உரிமை என்பது, ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கப்பெறவேண்டிய மற்றும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும். மனிதன் என்றாலே அவன் இவைகளால் வாழ முடியாது என கருதப்படும் அடிப்படையான தேவைகளை உள்ளடக்கிய உரிமைகள் இதில் சாரும். இந்த உரிமைகளை "மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளாக" கருதப்படுகின்றன.
பிள்ளைத்தமிழ் என்பது தமிழ் இலக்கியத்தில் வழங்கும் பிரபந்த நூல் வகைகளுள் ஒன்று. புலவர்கள் தாம் விரும்பிய தெய்வங்கள், சமயா சாரியர்கள், புலவர் பெருமக்கள், ஆதீனகர்த்தர், அரசர், உபகாரிகள், அவர் அவர்கட்கு உகந்தவர்கள், ஆகியோரைக் குழந்தையாக உருவகித்து, கற்பனை பல அமையப் பாடப்படுவது பிள்ளைத்தமிழாகும். குழந்தையாகக் கொண்டது பாவனையே ஆகும்.
மொழியாக்கம் அல்லது மொழிபெயர்ப்பு (translation) என்பது மூல மொழியில் (Source Language) உள்ள சொல் அல்லது சொற்றொடர்களை (விடயத்தை எந்தவொரு மேலதிகமான உட்சேர்த்தலுமின்றி), பொருள் மாறாமல் மற்றொரு மொழிச் சொற்களை கொண்டு இலக்கு மொழியில் (Target Language) அறியத் தருதல் ஆகும். இங்கு மேலதிகமான உட்சேர்த்தல் என்பதாவது, மூல மொழியில் குறிப்பிடப்பட்ட விடயத்திற்கு மேலதிகமாக இலக்கு மொழியில் இணைத்தல் என்பதாகவே பொருள்படும். மாறாக தெளிவாக்கல் என்பது எழுத்துக்கு முந்தையதாக, பேச்சை வேறுமொழியில் தருவதாகும்.
கண்ணதாசன் (ஒலிப்பு ) (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழகத்தில் மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (சூலை 27, 1876 – செப்டம்பர் 26, 1954) 20ம் நூற்றாண்டில் குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர். பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுகள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுகள், தேசியப் பாட்டுகள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள் என விரிந்த தளத்தில் செயல்பட்டவர்.
திருவெம்பாவை என்பது மாணிக்கவாசகரால் சைவ சமயத்தின் முழுமுதற்கடவுளான சிவபெருமானைக் குறித்து எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும். இந்த திருவெம்பாவை பாடல்களுடன், திருப்பள்ளியெழுச்சி பதிகத்தின் பாடல்களையும் இணைத்து மார்கழி மாதத்தில் பாடுவதை சைவர்கள் மரபாக கொண்டுள்ளார்கள். கன்னிப் பெண்கள் மார்கழி மாதத்தில் இருக்கும் பாவை நோன்பின் ஒரு பகுதியாக இந்த பாடல்களைப் பாடுவது உள்ளது.
இந்திய சோதிடத்தில் பிரீதி என்பது, பஞ்சாங்க உறுப்புக்களுள் ஒன்றான "யோகம்" என்பதனுள் அடங்கும் 27 யோகங்களுள் முதலாவது ஆகும். இராசிச் சக்கரத்தின் தொடக்கப் புள்ளியில் இருந்து 13° 20' தொடக்கம் 26° 40' பிரீதி யோகத்துக்கு உரியது. சூரியன், சந்திரன் ஆகிய கோள்களின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை இந்தக் கோணத்தினூடாக அதிகரிப்பதற்கு எடுக்கும் நேரத்துக்குரிய யோகம் "பிரீதி" ஆகும்.
புலனுணர்வு ஏற்பி ( Sensory receptor) என்பது ஓர் உயிரினத்தின் உட்புற அல்லது வெளிப்புற சூழலின் தூண்டலுக்கு, புலனுணர்ச்சி அமைப்பில் உள்ள ஒர் உணர்ச்சி நரம்பு துலங்கலை வெளிப்படுத்தும் செயலாகும். தூண்டலுக்கு ஏற்ற துலங்கலை வெளிப்படுத்தும் விதமாக, தூண்டல் ஏற்பட்ட அதே செல்லில் அல்லது அதற்கடுத்துள்ள ஒரு செல்லில் தரமான வினைநுட்பத்தை அல்லது செயல்திறலை உருவாக்க புலனுணர்வு ஏற்பி புலனுணர்வு நுண்ணிடைமாற்றம் மூலமாக ஒரு தொடக்கத்தை வழங்குகிறது.
திருவள்ளுவர் (Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர் என்றும் அழைக்கப்படுகிறார்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான கி.மு.400க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறை என்பது இந்தியாவின் பெரிய சேவைத் துறையாகும். இது நாட்டின் தேசிய மொத்த உற்பத்தியில் 6.23 சதவீதம் பங்களிக்கிறது மேலும் இந்தியாவின் மொத்த வேலைவாய்ப்பில் 8.78% சதவீதத்தைக் கொண்டுள்ளது. இந்தியா ஆண்டுக்கு 5 மில்லியனுக்கும் மேலான அந்நிய சுற்றுலாப் பயணிகளின் வருகையையும் 562 மில்லியன் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையையும் கொண்டுள்ளது.
இந்தியாவில் பாலினப் பாகுபாடு (Gender inequality in India) என்பது இந்தியாவில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நலவாழ்வு, கல்வி, பொருளியல், அரசியல் சார்ந்த சமனின்மையைக் குறிக்கிறது. இந்தக் காரணிகளின் அடிப்படையிலும் ஒட்டுமொத்த நிலைமையைப் பொறுத்தும் பல்வேறு பன்னாட்டுப் பாலினச் சுட்டிகள் இந்தியாவை பல்வேறு தரவரிசைகளில் பாகுபடுத்துகின்றன. மேலும் இந்தச் சுட்டிகள் ஏற்கப்படாமல் கருத்துமோதலில் உள்ளன.பாலினச் சமனின்மைகளும் அவை உருவாக்கும் சமூகக் காரணிகளும் இந்தியாவில் பாலின விகிதத்தை மாற்றுவதோடு மகளிரின் வாணாள் நலவாழ்வின் தரத்தையும் கல்வி வளர்ச்சியையும் பொருளியல் மேம்பாட்டையும் குறைக்கின்றன.
(சுற்றுச்சூழல் பாதுகாப்பு) (environmental protection) என்பது சுற்றசூழலை தனிமனிதனோ, அமைப்போ, அல்லது அரசாங்கமோ இயற்கை சூழலுக்காகவும், மனிதனின் நன்மைக்காகவும் பாதுகாக்கும் ஒரு பழக்கமாகும். மக்கள்தொகையினாலும் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் சுற்று சூழல் சில நேரங்களில் நிரந்தரமாக பாதிக்கப்படுகிறது. இதை உணர்ந்த அரசாங்கங்கள் சுற்றுச்சூழல் சீரழிவிற்கு காரணமான செயல்களைக் கட்டுப்படுத்தி நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளன.
தமிழர் நாடகக்கலையின் தோற்றத்தினை விவரிக்கும் நூற்களில் பழமை வாய்ந்ததாகக் கருதப்படுவது அகத்தியம் என்னும் தலைச்சங்க காலத்து நூலாகும். நாடகம் என்பது பாட்டும், உரையும், நடிப்பும் என்பது தமிழ் மரபுவழி கூறும் இலக்கணமாக விளங்குகின்றது. சங்க காலத்தில் குணநூல், கூத்தநூல், சயந்தம் நூல், மதிவாணர் நாடகத் தமிழர், முறுவல் போன்ற நாடக நூல்கள் இருக்கப்பெற்றன என்பதனை சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகின்றது குறிப்பிடத்தக்கது.
உழவு அல்லது வேளாண்மை அல்லது விவசாயம் அல்லது கமம் என்பது உணவுக்காகவும் ஏனைய பயன்பாடுகளுக்காகவும் சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும், கால்நடை வளர்ப்பையும் குறிக்கும். வேளாண்மை ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் ஆகும். இத்தொழிலில் மனிதன் இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருள்களைச் சேகரித்துப் பயன்படுத்திக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவ்வியற்கையோடு ஒன்றிணைந்து பணியாற்றி உணவுப் பொருட்களை உற்பத்தி செய்துகொள்கிறான்.
தைப்பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழர்களால் தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005
தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 (Right to Information Act, 2005) இந்திய நாடாளுமன்றத்தால் அரசிடம் அல்லது அரசு உதவிபெறும் நிறுவனங்களிடமிருந்து மக்கள் உரிமையுடன் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக்க உருவாக்கப்பட்ட சட்டம் ஆகும். இச்சட்டம் 2004 திசம்பர் மாதம் , நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டு 2005 மே 11, அன்று, மக்களவையிலும், 2005 மே 12, அன்று [[மாநிலங்களவை}மாநிலங்களவையிலும்]] நிறைவேற்றப்பட்டது. 2005 சூன், 15 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது.
தேசிய கணித தினம் (National Mathematics Day) இந்தியாவில், டிசம்பர் 22 ஆம் நாள் தேசிய கணித தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கணித தினம் 26 பிப்ரவரி 2012 அன்று சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழாக் கலையரங்கத்தில் நடைபெற்ற சீனிவாச ராமானுசனின் 125 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் தொடக்க விழாவில் இந்தியப் பிரதம மந்திரி டாக்டர் மன்மோகன் சிங் அவர்களால் பிரகடனம் செய்யப்பட்டது.இந்தியக் கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் 1887 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி பிறந்தார். 1920 ஏப்ரல் 26 இல் இறந்தார்.
சுற்றுலா (tourism) என்பது தமது வழமையான இருப்பிடங்களை விட்டு வேற்று இடங்களைக் கண்டு களிக்க பயணித்தலே ஆகும். உலக சுற்றுலா அமைப்பின் சொற்பொருள் விளக்கத்தின்படி ஒரு பயணத்தை சுற்றுலா என வகைப்படுத்த ஒருவர் தமது "வழமையான சுற்றுச்சூழலைவிட்டு வேற்று இடத்திற்கு ஒய்வு, அலுவல் மற்ற ஏனைய நோக்குடன் மேற்கொள்ளும் பயணம் ஒரு வருட காலகட்டத்திற்குள் அமைய வேண்டும். மேலும், அப்பயணத்தின் மூலம் பயணி பயணிக்கப்பட்ட இடத்திலிருந்து ஊதியம் பெற கூடாது".
மயங்கொலிச் சொற்கள் என்பன தமிழில் கிட்டத்தட்ட ஒரே போன்ற ஒலிப்பினைக் கொண்டவைகளாகவும், முற்றிலும் வேறுபட்ட பொருள் கொண்டவைகளாகவும் காணப்படும். இவ்வகையான சொற்கள் ஒலிப்பின் போது நுண்ணிய வேறுபாடுகளை மட்டுமே கொண்டிருப்பதால் எது சரி, எது தவறு என மயங்க வைப்பவைகளாக இருக்கும். அதனாலேயே இவை மயங்கொலிச் சொற்கள் என்றழைக்கப்படுகின்றன.
பல்லவர்களின் கலை மற்றும் கட்டிடக்கலை
பல்லவர்களின் கலை மற்றும் கட்டிடக்கலை (Pallava art and architecture) என்பது ஆரம்ப காலத்திய திராவிட கலை மற்றும் கட்டிடக் கலையைச் சேர்ந்தது, இது சோழப் பேரரசின் காலத்தில் அதன் முழு உச்சத்தை எட்டியது. தென்னிந்தியாவின் முதல் கல் மற்றும் குடைவுக் கோயில்கள் பல்லவர் ஆட்சியின் போது கட்டப்பட்டன. அவை அதற்குமுன் கட்டப்பட்டிருந்த செங்கல் மற்றும் மரத்தால் கட்டப்பட்ட கட்டடங்களை முன்மாதிரிகளாகக் கொண்டு அமைக்கப்பட்டன.
தமிழ் ராக்கர்ஸ், தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களை சட்டத்திற்குப் புறம்பாக இணையத்தில் பகிரும், ஒரு இணையத்தளம் ஆகும். இது பிட்டொரென்ட் வகையை சேர்ந்ததாகும். இது தனக்கென ஒரு வழங்கி ஒன்றை வைத்துகொள்ளாமல், பயனர்களின் கணணிகளை வழங்கி (Peer to Peer) ஆக மாற்றி பயன்படுத்தும்.
பெண்ணியம் என்பது பெண்களை தாழ்வுபடுத்தும் சமூக, அரசியல், பொருளாதார நடைமுறைகள், கட்டமைப்புக்கள் மற்றும் சமத்துவமின்மையைக் எதிர்க்கும் கவனப்படுத்தும் சமூக, கலாசார, அரசியல் இயக்கங்கள், செயற்பாடுகள், கோட்பாடுகளின் தொகுப்பாகும். ஆண் பெண் சமத்துவத்தில் கவனம் செலுத்தும் கோட்பாடாகவும் இது வரையறுக்கப்படுவதுண்டு. பெண்ணியத்தை வரையறுப்பதென்பதே கூட சிக்கலானதாக இருப்பதுண்டு.
சேர தாண்டவம் என்பது புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுதிய நாடகங்களுள் ஒன்று ஆகும். இந் நூல் ஆட்டனத்தி, ஆதிமந்தி இடையிலான காதல் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டுள்ளது. பரணர், வெள்ளிவீதியார் முதலானோர் பாடிய அகநானூற்றுப் பாடல்கள், ஆதிமந்தியே பாடியுள்ள குறுந்தொகைப் பாடல், இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் தரும் குறிப்பு முதலானவற்றைக் கொண்டு இந்நாடகம் படைக்கப்பட்டிருக்கிறது.
ஏறு தழுவல், மஞ்சு விரட்டு அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு.புதுக்கோட்டை மாவட்டம் ஐல்லிக்கட்டின் "சொர்க்க பூமியாக " இன்னும் திகழ்ந்து வருகிறது.
புவியியல் என்பது புவி, அங்குள்ள நிலம், பல்வேறு அம்சங்கள், அதிலுள்ள உயிர் வகைகள் மற்றும் தோற்றப்பாடுகள் என்பவற்றை விளக்கும் ஒரு துறையாகும். இச்சொல்லை நேரடியாக மொழி பெயர்க்கும்போது அது புவியைப்பற்றி விளக்குவது அல்லது எழுதுவது என்பதைக் குறிக்கும். புவியியல் ஆய்வில் வரலாற்று ரீதியாக நான்கு மரபுகள் காணப்படுகின்றன.
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது.
தில்லையாடி வள்ளியம்மை (பெப்ரவரி 22, 1898 - பெப்ரவரி 22, 1914) தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களின் உரிமைக்கான போராட்டத்தில் ஈடுபட்டு தன் பதினாறாவது வயதில் உயிர்நீத்த ஒரு தமிழ்ப் பெண் போராளி ஆவார். இவர் ஆரம்ப காலத்தில் மகாத்மா காந்தியுடன் இணைந்து அறப் போராட்டங்களில் கலந்து கொண்டு பின்னர் அந்நாட்டின் இனவொதுக்கல் அரசுக்கு எதிராகப் போராடினார்.
திராவிட மொழிக் குடும்பம் (dravidian language family) என்பது மரபு வழியாக இணைந்து கிட்டத்தட்ட 85 மொழிகளை உள்ளடக்கியதாகும். கிட்டத்தட்ட 217 மில்லியன் மக்கள் இம்மொழிகளைப் பேசுகின்றனர். தென்னிந்தியாவைச் சேர்ந்த முக்கிய மொழிகளான, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்பன ஒன்றுடனொன்று நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பதும், ஏனைய இந்திய மொழிகளிலிருந்து வேறுபட்டு இருப்பதும் அறியப்பட்டுள்ளது.
இயற்கை வளங்கள் (natural resources), அல்லது பொருளாதார ரீதியில் நிலம் மற்றும் மூலப்பொருள் அல்லது கச்சா பொருட்கள் எனப்படுபவை ஒப்பிட்டளவில் மனிதத் தலையீடுகளின்றித் தன் இயல்பு நிலையில் சூழல் தொகுதிகளில் காணப்படும் பொருட்கள் ஆகும். இயற்கை வளங்கள் சுற்றுச்சூழலிலிருந்து தருவிக்கப்படுபவை. இவற்றில் பெரும்பான்மையானவை நம் வாழ்க்கைக்கு அத்தியாவசியமானவையாகவும் தேவைகளுக்குப் பயன்படக்கூடியவைகளாகவும் அமைகின்றன.
சம்மு காசுமீர் (Jammu and Kashmir, ஜம்மு காஷ்மீர், டோக்ரி: جموں او کشمیر, உருது: ) இந்தியாவின் வடக்கு பகுதியில் உள்ள மாநிலங்களில் ஒன்றாகும். லடாக் தவிர்த்த இதன் பெரும்பகுதிகள் இமயமலையின் பிர் பாஞ்சல் மலைத்தொடரில் அமைந்துள்ளது. சம்மு காசுமீர் மாநிலம் லடாக்கையும் சம்முவையும் காசுமீர் பகுதியையும் உள்ளடக்கிய மாநிலமாக அக்டோபர், 2019 ஆண்டு முடிய விளங்கியது.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபா சாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.
மென்பொருள் பொறியியலில், செயல்திறன் சோதனை என்று நிகழ்த்தப்படும் சோதனையானது ஒரு கண்ணோட்டத்திலிருந்து மேற்கொள்ளப்படும் சோதனையாகும். அதாவது குறிப்பிட்ட பணி பளுவின் போது கணினியானது எந்தெந்த காரணங்களால் வேகமாக பணிபுரிகிறது என்பது குறித்த கூறுகளைப் பற்றி அறிந்துகொள்வதே இந்த சோதனையின் நோக்கம். அளவீட்டுத் தன்மை, நம்பகத்தன்மை மற்றும் ஆதாரப் பயன்பாடு போன்ற, அமைப்பின் பிற தர பண்புக்கூறுகளை மதிப்பாய்வு செய்வதற்கு இது பயன்படும்.
குற்றியலுகரம் என்பது ஒரு தமிழ்ச் சொல்லில் உள்ள உகரம் ஏறிய வல்லின எழுத்து (எ.கா: கு, சு, டு, து, பு, று) சொல்லின் கடைசி எழுத்தாக வரும் பொழுது, மற்ற குறில் உயிர்மெய் எழுத்துகள் (எ.கா: ற, கி, பெ) போல் ஒரு மாத்திரை அல்லாமல் அரை மாத்திரை அளவேயாகக் குறைந்து ஒலிக்கும் வரையறை கொண்டது. இதனையே வேறு விதமாகச் சொல்வதென்றால், தனி நெடிலுடனோ, பல எழுத்துகளைத் தொடர்ந்தோ சொல்லுக்கு இறுதியில் வல்லின மெய்யோடு சேர்ந்து வரும் உகரம், தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து அரை மாத்திரையளவே ஒலிக்கும். குற்றியலுகரம் என்பது அவ்வாறு குறைந்தொலிக்கும் உகரமாகும்.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமஸ்கிருதம்:பிரகதீஸ்வரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும் , தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாக கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளை காப்பிய தலைவராக கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் விவரிக்கிறார்.
விஜயநகரப் பேரரசு (1336 - 1646), தென் இந்தியாவின் தற்கால கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கேரளாவின் பெரும்பாலான பகுதிகளைக் கொண்ட ஒரு பேரரசு ஆகும். தென்னிந்தியாவில் தில்லி சுல்தான்களின் ஆட்சி விரிவாக்கத்தை தடுக்கவேவித்யாரண்யர் வழிகாட்டுதலின் படி, விஜயநகரப் பேரரசு 1336 ஆம் ஆண்டில் முதலாம் ஹரிஹரர் மற்றும் முதலாம் புக்கராயர் ஆகியோரால் நிறுவப்பட்டது. இப்பேரரசின் புகழ் பெற்றவர் கிருஷ்ணதேவராயர் ஆவார்.
இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்
இந்தியாவின் அடிப்படை உரிமைகள் என்பது இந்திய அரசியல் சாசனம் தனது மூன்றாவது பகுதியில் வழங்கியுள்ள உரிமைகளுக்கான சாசனம்' ஆகும். இந்தப் பகுதி இந்திய நாட்டின் குடிமக்கள் என்ற முறையில் அமைதியான முறையிலும் இணக்கத்துடனும் வாழ்வை மேற்கொள்ள தேவையான குடிமையியல் சுதந்திரங்களை இந்தியர்களுக்கு வழங்குகிறது. அமெரிக்காவின் உரிமைகள் சட்டவரைவை (Bill of Rights) மூலமாக கொண்டது.