The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
அப்பூதி அடிகள் என்பவர் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார்.சைவ சமயத்தில் சிவபெருமானும், அடியாரும் ஒருவரே என்பதை விளக்க அப்பூதி அடிகள் வரலாறு கூறப்படுகிறது. அப்பூதி அடிகள் திருநாவுக்கரசர் எனும் சைவரை வணங்கியே வீடுபேரு அடைந்தார் என்று எடுத்துரைக்கப்படுகிறது. திருநாவுக்கரசரின் சிவத்தொண்டினை அறிந்த அப்பூதியடிகள் திருநாவுக்கரசர் பெயரால் மக்களுக்கு அன்னம் படைத்தல், சத்திரம் அமைத்தல், நீர் கொடுத்தல் போன்ற பணிகளைச் செய்துவந்தார்.
பி. கக்கன் (P. Kakkan, சூன் 18, 1908– டிசம்பர் 23, 1981), விடுதலைப் போராட்ட வீரர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் (கமிட்டித்) தலைவர், இன்னும் இதரப் பல பொறுப்புக்களை 1957 முதல் 1967 வரை நடைபெற்ற காங்கிரசு அரசாங்கத்தில் வகித்தவரும், அரசியல்வாதியும் ஆவார். கக்கன் தமையனார் விஸ்வநாதன் ஒரு வழக்கறிஞர் ஆவர்.
மணிமேகலை ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்று. இக்காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார்.மணிமேகலை காப்பியத்தில் அடி இணையும், அதன் வழிபாடும், வேறு கடவுள்களின் வழிபாடும் இருக்கும் நிலையில், அது ஒரு மஹாயாண காப்பியமாகவே இருக்கமுடியும். மேலும், மஹாயாண பௌத்தமானது இல்லறத்தையும், துறவறத்தையும் வலியுறுத்தும் நிலையிலும், சிலப்பதிகாரமானது இல்லறத்தையும், மணிமேகலை காப்பியம் துறவறத்தையும் வலியுறுத்துவதாலும், இவைகள் இரட்டைக் காப்பியங்கள் ஆகும்.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
புதினம் அல்லது நாவல் என்பது மக்களால் பரவலாக விரும்பப்படும் ஒரு இலக்கிய வடிவம் ஆகும். இதில் வாழ்க்கையும், நிகழ்வுகளும் கற்பனையாக உரைநடையில் எழுதப்படுகின்றன. தற்காலப் பயன்பாட்டில் புதினம், நீளமாக இருத்தல், புனைகதையாக அமைதல், உரைநடையில் எழுதப்படல் போன்ற இயல்புகளால் ஏனைய இலக்கிய வடிவங்களிலிருந்து வேறுபடுத்தப்படுகின்றது.
பாரதிதாசன் (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் 'கனகசுப்புரத்தினம்' ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவும் உண்டு. அறம், பொருள், இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்களில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன. உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற பிரிவின் கீழ் வருவன.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
பிள்ளைத்தமிழ் என்பது தமிழ் இலக்கியத்தில் வழங்கும் பிரபந்த நூல் வகைகளுள் ஒன்று. புலவர்கள் தாம் விரும்பிய தெய்வங்கள், சமயா சாரியர்கள், புலவர் பெருமக்கள், ஆதீனகர்த்தர், அரசர், உபகாரிகள், அவர் அவர்கட்கு உகந்தவர்கள், ஆகியோரைக் குழந்தையாக உருவகித்து, கற்பனை பல அமையப் பாடப்படுவது பிள்ளைத்தமிழாகும். குழந்தையாகக் கொண்டது பாவனையே ஆகும்.
தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
கல்வி (Education) என்பது குழந்தைகளை, உடல் மற்றும் மன வளர்ச்சியில் அறிவு, நல்லொழுக்கம் ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும். கல்வியாளர்கள் கூற்றின்படி, இளை முறையாக வழி நடத்துவதிலும், சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்வி என்பது ஒரு சமூக நிறுவனம்.
தமிழக அமைச்சரவை தமிழ் நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும் செயலாட்சியர்கள். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார்.
திருவள்ளுவர் (Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர் என்றும் அழைக்கப்படுகிறார்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான கி.மு.400க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனிவாச இராமானுஜன் (Srinivasa Ramanujan, டிசம்பர் 22, 1887 – ஏப்ரல் 26, 1920) இந்தியாவில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் கோட்டை பகுதியில் பிறந்த கணித அறிஞர். இராமானுசர் 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார்.
உழவு அல்லது வேளாண்மை அல்லது விவசாயம் அல்லது கமம் என்பது உணவுக்காகவும் ஏனைய பயன்பாடுகளுக்காகவும் சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும், கால்நடை வளர்ப்பையும் குறிக்கும். வேளாண்மை ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் ஆகும். இத்தொழிலில் மனிதன் இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருள்களைச் சேகரித்துப் பயன்படுத்திக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவ்வியற்கையோடு ஒன்றிணைந்து பணியாற்றி உணவுப் பொருட்களை உற்பத்தி செய்துகொள்கிறான்.
பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாக கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளை காப்பிய தலைவராக கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் விவரிக்கிறார்.
அருள்மொழிவர்மன் என்கின்ற பேரரசர் இராசகேசரி வர்மன் முதலாம் இராசராச சோழன் சோழ பேரரசின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவார். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1014 வரையாகும். இவர் மகன் முதலாம் இராசேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவிய பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே.
திருவெம்பாவை என்பது மாணிக்கவாசகரால் சைவ சமயத்தின் முழுமுதற்கடவுளான சிவபெருமானைக் குறித்து எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும். இந்த திருவெம்பாவை பாடல்களுடன், திருப்பள்ளியெழுச்சி பதிகத்தின் பாடல்களையும் இணைத்து மார்கழி மாதத்தில் பாடுவதை சைவர்கள் மரபாக கொண்டுள்ளார்கள். கன்னிப் பெண்கள் மார்கழி மாதத்தில் இருக்கும் பாவை நோன்பின் ஒரு பகுதியாக இந்த பாடல்களைப் பாடுவது உள்ளது.
செம்மொழி (Classical language) என்பது ஒரு மொழியின் இலக்கியப்பழமை அடிப்படையிலும் பிற பண்புத்தகுதிகளின் அடிப்படையிலும் செய்யப்படும் வகைப்பாடு ஆகும். செம்மொழியாக ஒரு மொழியைத்தெரிவு செய்ய அதன் இலக்கியப் படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும், அதன் தோன்றல் ஏனைய மொழிகளில் சாராதிருத்தலும் வேண்டும்1 (ஜோர்ஜ் எல்.ஹார்ட்). உலகில் எத்தனையோ மொழிகள் பேசப்பட்டு வருகின்றன.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழகத்தில் மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
தமிழ் கலாச்சாரம், தமிழ் மக்களின் பண்பாடு ஆகும். தமிழ் கலாச்சாரம் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் உலகம் முழுவதும் தமிழர்கள் வாழ்க்கை வழிகளில் வேரூன்றி உள்ளது. தமிழ் கலாச்சாரம் மொழி, இலக்கியம், இசை, நடனம், நாட்டுப்புற கலை, தற்காப்பு கலை, ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை, விளையாட்டு, ஊடகங்கள், நகைச்சுவை, உணவு, ஆடைகள், கொண்டாட்டங்கள், தத்துவம், மதங்கள், மரபுகள், சடங்குகள், நிறுவனங்கள், அறிவியலை வெளிப்படுத்தப்படுகிறது மற்றும் தொழில்நுட்பம்.
தமிழ் ராக்கர்ஸ், தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களை சட்டத்திற்குப் புறம்பாக இணையத்தில் பகிரும், ஒரு இணையத்தளம் ஆகும். இது பிட்டொரென்ட் வகையை சேர்ந்ததாகும். இது தனக்கென ஒரு வழங்கி ஒன்றை வைத்துகொள்ளாமல், பயனர்களின் கணணிகளை வழங்கி (Peer to Peer) ஆக மாற்றி பயன்படுத்தும்.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமஸ்கிருதம்:பிரகதீஸ்வரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும் , தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
காப்பியம் என்பது இலக்கிய வடிவங்களில் ஒன்று. இதனைப் பெருங்காப்பியம் என்றும், காப்பியம் அதாவது சிறுகாப்பியம் என்றும் பகுத்துக் காட்டினர் அறம்,பொருள், இன்பம், வீடு என்பனவற்றோடு ஒரு ஒப்பிலாத் தலைவனையும் தலைவியையும் கொண்டு இயற்றப்படுவது பெருங்காப்பியமாகும். வாய்மொழி இலக்கியம், தன்னுணர்ச்சிப் பாடல்கள், கதைபொதி பாடல்கள் என்று இது விரிந்து வளர்கிறது.
சம்மு காசுமீர் (Jammu and Kashmir, ஜம்மு காஷ்மீர், டோக்ரி: جموں او کشمیر, உருது: ) இந்தியாவின் வடக்கு பகுதியில் உள்ள மாநிலங்களில் ஒன்றாகும். லடாக் தவிர்த்த இதன் பெரும்பகுதிகள் இமயமலையின் பிர் பாஞ்சல் மலைத்தொடரில் அமைந்துள்ளது. சம்மு காசுமீர் மாநிலம் லடாக்கையும் சம்முவையும் காசுமீர் பகுதியையும் உள்ளடக்கிய மாநிலமாக அக்டோபர், 2019 ஆண்டு முடிய விளங்கியது.
பொருளாதாரம் (economy) என்பது நாட்டின் அறியப்பட்ட பொருளாதார அமைப்பையோ அல்லது இதர நிலப்பகுதியையோ கொண்டுள்ளது. அப்பகுதியின் சமூக ரீதியாக உற்பத்தியில், பரிமாற்றத்தில், விநியோகத்தில் மற்றும் பொருட்கள் மற்றும் சேவைகளின் நுகர்வில் பங்கேற்கும் பொருளாதாரக் காரணிகளையும் கொண்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட பொருளாதாரம் என்பது அதன் தொழில் நுட்ப பரிணாமம், வரலாறு மற்றும் சமூக நிறுவனம் ஆகியன அடங்கியுள்ள ஒரு வழிமுறையின் இறுதி விளைவுகளையும்; அதேபோல அதன் புவியியல், இயற்கை வளக் கொடை மற்றும் சூழல் ஆகியவற்றை முக்கியக் காரணிகளாக உள்ளடக்கியுள்ளது.
தைப்பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழர்களால் தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.
மனித உரிமை என்பது, ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கப்பெறவேண்டிய மற்றும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும். மனிதன் என்றாலே அவன் இவைகளால் வாழ முடியாது என கருதப்படும் அடிப்படையான தேவைகளை உள்ளடக்கிய உரிமைகள் இதில் சாரும். இந்த உரிமைகளை "மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளாக" கருதப்படுகின்றன.
குற்றியலுகரம் என்பது ஒரு தமிழ்ச் சொல்லில் உள்ள உகரம் ஏறிய வல்லின எழுத்து (எ.கா: கு, சு, டு, து, பு, று) சொல்லின் கடைசி எழுத்தாக வரும் பொழுது, மற்ற குறில் உயிர்மெய் எழுத்துகள் (எ.கா: ற, கி, பெ) போல் ஒரு மாத்திரை அல்லாமல் அரை மாத்திரை அளவேயாகக் குறைந்து ஒலிக்கும் வரையறை கொண்டது. இதனையே வேறு விதமாகச் சொல்வதென்றால், தனி நெடிலுடனோ, பல எழுத்துகளைத் தொடர்ந்தோ சொல்லுக்கு இறுதியில் வல்லின மெய்யோடு சேர்ந்து வரும் உகரம், தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து அரை மாத்திரையளவே ஒலிக்கும். குற்றியலுகரம் என்பது அவ்வாறு குறைந்தொலிக்கும் உகரமாகும்.
இந்திய சோதிடத்தில் பிரீதி என்பது, பஞ்சாங்க உறுப்புக்களுள் ஒன்றான "யோகம்" என்பதனுள் அடங்கும் 27 யோகங்களுள் முதலாவது ஆகும். இராசிச் சக்கரத்தின் தொடக்கப் புள்ளியில் இருந்து 13° 20' தொடக்கம் 26° 40' பிரீதி யோகத்துக்கு உரியது. சூரியன், சந்திரன் ஆகிய கோள்களின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை இந்தக் கோணத்தினூடாக அதிகரிப்பதற்கு எடுக்கும் நேரத்துக்குரிய யோகம் "பிரீதி" ஆகும்.
இணையம் (ஒலிப்பு ) (Internet) என்பது உலக அளவில் பல கணினி வலையமைப்புகளின் கூட்டிணைப்பான பெரும் வலையமைப்பைக் குறிக்கும். இணைய நெறிமுறைகளைப் பின்பற்றி தரவுப் பரிமாற்றம் (பாக்கெட் சுவிட்சிங்) மடைமாற்றி மற்றும் திசைவியின் வழி நடைபெறும். இணையம் என்னும் சொல்லானது செப்புக்கம்பிகளினாலும், ஒளிநார் இழைகளினாலும் இணைக்கப்பட்டுள்ள கணினி வலைகளின் பேரிணைப்பைக் குறிக்கும்.
மயங்கொலிச் சொற்கள் என்பன தமிழில் கிட்டத்தட்ட ஒரே போன்ற ஒலிப்பினைக் கொண்டவைகளாகவும், முற்றிலும் வேறுபட்ட பொருள் கொண்டவைகளாகவும் காணப்படும். இவ்வகையான சொற்கள் ஒலிப்பின் போது நுண்ணிய வேறுபாடுகளை மட்டுமே கொண்டிருப்பதால் எது சரி, எது தவறு என மயங்க வைப்பவைகளாக இருக்கும். அதனாலேயே இவை மயங்கொலிச் சொற்கள் என்றழைக்கப்படுகின்றன.
இந்திய வரலாறு (History of India) என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் வரலாற்றுக் காலம் முன்பு வாழ்ந்த மக்கள், அவர்தம் சமுதாயம், சிந்து சமவெளி நாகரிகம் இந்தோ-ஆரியப் பண்பாடு உள்ளடக்கிய வேதகால நாகரிகம் தொடங்கி இன்றுவரை உள்ளிட்டகாலம் அடங்கும். மேலும் பல கலாச்சாரங்களின் சாரமாகவும் பண்பாடுகளை உள்வாங்கியும் பிறந்த இந்து சமயம், அதன் வளர்ச்சி குறித்தும் சிரமணா இயக்கத்தின் வளர்ச்சி, சிரவுத்தா பலிகளின் வீழ்ச்சி, சைனம், பௌத்தம், சைவம், வைணவம் மற்றும் சக்தி வழிபாடு இவைகளின் வளர்ச்சி, தாக்கம், மேலும் இப்பகுதியில் இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த அரச பரம்பரை, பேரரசுகளின் தோற்றம், தாக்கம், இடைகாலத்தில் தோன்றிய இந்து மற்றும் முகலாய அரச பரம்பரைகள் குறித்த தகவல்கள், பிற்காலத்தில் வந்த ஐரோப்பிய வணிகர்கள், அதன் தொடர்ச்சியாக அமைந்த ஆங்கிலேய அரசு, அதன் தொடர்ச்சியாக எழுந்த விடுதலை இயக்கம், அதன் பின் நாடு பிரிவினை அடைந்து இந்தியக் குடியரசு பிறந்த வரை தகவல்கள் உள்ளிட்டவை அடங்கும்.சுமார் 75,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியத் துணைக்கண்டத்தில் இன்றைய மனிதர்களின் உடற்கூறியல் வடிவத்தை ஒத்த மனிதர்களோ அல்லது 5,00,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தற்கால மனிதனின் முன்னோடிகளோ வாழ்ந்து வந்ததற்கான சான்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கிமு 3200 முதல் கிமு 1300 வரை இந்தியாவில் செழிப்பாக விளங்கிய சிந்துவெளி நாகரிகம்தான் தெற்கு ஆசியாவில் தோன்றிய முதல் நாகரிகம் ஆகும்.
சவுதாரி சரண் சிங் (Chaudhary Charan Singh, 23 டிசம்பர் 1902–29 மே 1987). இந்திய குடியரசின் ஏழாவது பிரதமராக ஜூலை 1979 28 முதல் ஜனவரி 1980 14 வரை பணியாற்றினார்.குறுகிய காலம் மட்டுமே பிரதமராக இருந்துள்ள இவர் ஒரு நாள் கூட பாராளுமன்ற தளத்தை எதிர்கொள்ளவில்லை என்ற சாதனையையும் புரிந்துள்ளார். இவர் தன்னுடைய பதவிக் காலத்தில் நாடாளுமன்றம் சென்று உரை ஆற்றியது இல்லை.
கதிரவ அமைப்பு (Solar System) அல்லது சூரிய மண்டலம் அல்லது சூரியக் குடும்பம் என்பது கதிரவனுக்கும் அதைச் சுற்றி வரும் பொருட்ளுக்கும் இடையே உள்ள ஈர்ப்புவிசைப் பிணைப்பால் உருவான ஒரு அமைப்பாகும். இது கதிரவனைச் சுற்றி வரும் எட்டுக் கோள்களையும், ஐந்து குறுங்கோள்களையும் உள்ளடக்கியது ஆகும் என்று உலகளாவிய வானியல் ஒன்றியம் வரையறுத்துள்ளது. இந்த அமைப்பில் கதிரவனை நேரடியாகச் சுற்றி வரும் பெரிய அளவு கொண்ட கோள்களும் சிறிய அளவு கொண்ட குறுங்கோள் மற்றும் சிறு கதிரவ அமைப்புப் பொருட்கள் போன்றவையும், கதிரவனை மறைமுகமாகச் சுற்றி வரும் துணைக்கோள்களும் அடங்கும்.
வல்லினம் மிகும் இடங்கள் என்பது தமிழ் மொழியில் அடுத்தடுத்து இரண்டு சொற்கள் வரும்போது முதல் சொல்லின் இறுதியில் ஒரு வல்லின எழுத்து சேர்வதைக் குறிக்கும். ஒரு நிலைமொழியோடு வருமொழி க, ச, த, ப வருக்க எழுத்துகளில் தொடங்குஞ் சொல்லாக அமையும்பொழுது அவ்வல்லொற்று சிலவிடங்களில் மிகுந்தும் சிலவிடங்களில் மிகாமலும் வரும். இவற்றையறிந்து பயன்படுத்தாமையைச் சந்திப்பிழையெனக் கூறுவர்.
(சுற்றுச்சூழல் பாதுகாப்பு) (environmental protection) என்பது சுற்றசூழலை தனிமனிதனோ, அமைப்போ, அல்லது அரசாங்கமோ இயற்கை சூழலுக்காகவும், மனிதனின் நன்மைக்காகவும் பாதுகாக்கும் ஒரு பழக்கமாகும். மக்கள்தொகையினாலும் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் சுற்று சூழல் சில நேரங்களில் நிரந்தரமாக பாதிக்கப்படுகிறது. இதை உணர்ந்த அரசாங்கங்கள் சுற்றுச்சூழல் சீரழிவிற்கு காரணமான செயல்களைக் கட்டுப்படுத்தி நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளன.
வணிகம் அல்லது வர்த்தகம் (trade, commerce) என்பது மனிதனது தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றும் இலாப நோக்குடைய அல்லது இலாப நோக்கற்ற ஒரு பொருளாதார செயற்பாடு ஆகும். வணிகமானது பிரதானமான நான்கு வளர்ச்சி கட்டங்களின் கீழ் வளர்ச்சியுற்றது. பண்டமாற்று முறை பணமுறை கைத்தொழில் புரட்சி தகவல் தொழில்நுட்ப புரட்சிவணிகவியல் வர்த்தக நடவடிகைகளை வணிகம் தொழிற்சாலை என இரு பிரிவுகல்ளாக பிரிகளாம்.
ஜார்ஜ் வாஷிங்டன் (கண்டுபிடிப்பாளர்)
ஜார்ஜ் கான்ஸ்டன்ட் லூயிஸ் வாஷிங்டன் (1871 மே - மார்ச் 29, 1946) ஒரு அமெரிக்க கண்டுபிடிப்பாளர் மற்றும் ஆங்கிலோ-பெல்ஜிய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர். இவருடைய கண்டுபிடிப்பான ஆரம்ப உடனடி காபி மற்றும் அதை பெரியளவில் உற்பத்தி செய்வதற்கு அவர் நிறுவிய ஜி.வாஷிங்டன் காபி நிறுவனத்திற்காக பெரிதும் அறியப்படுகிறார். தனது சொந்த இருப்பிடமான பெல்ஜியத்திலிருந்து குடிபெயர்ந்த இவர் 1987 ஆம் ஆண்டு நியூ யோர்க்கை அடைந்தார்.
திராவிட மொழிக் குடும்பம் (dravidian language family) என்பது மரபு வழியாக இணைந்து கிட்டத்தட்ட 85 மொழிகளை உள்ளடக்கியதாகும். கிட்டத்தட்ட 217 மில்லியன் மக்கள் இம்மொழிகளைப் பேசுகின்றனர். தென்னிந்தியாவைச் சேர்ந்த முக்கிய மொழிகளான, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்பன ஒன்றுடனொன்று நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பதும், ஏனைய இந்திய மொழிகளிலிருந்து வேறுபட்டு இருப்பதும் அறியப்பட்டுள்ளது.
மோகன்தாசு கரம்சந்த் காந்தி (ஆங்கில மொழி: Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 - ஜனவரி 30, 1948), மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.
தமிழில் வாக்கியங்கள் அமையும் பாங்கைக் கூறுவது சொல்லதிகாரம். தொல்காப்பியச் சொல்லதிகாரத்தில் முதல் 7 இயல்களில் வழக்குத்தமிழில் வரும் வாக்கிய அமைதி பற்றியும், 8 & 9ஆம் இயல்களில் செய்யுள்-தமிழில் வரும் வாக்கிய அமைதி பற்றியும் இலக்கணம் என்னும் புலச் செய்திகள் தொகுத்துச் சொல்லப்பட்டுள்ளன. செய்யுளில் அமைந்துகிடக்கும் வாக்கிய அமைதியை அண்வயப்படுத்தி வழக்குத்தமிழ் வாக்கியமாக்கிக்கொள்ளும் பாங்குக்குப் பொருள்கோள் என்று பெயர்.
சுற்றுச்சூழல் மாசுபாடு (சூழல் மாசடைதல்) என்பது மனித செயல்கள் மூலம் உருவாகும் மாசுகளால், சூழலின் ஆதாரங்களாகிய காற்று, நீர், மண் வளங்களும், அங்கு வாழும் உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாகி, அதனால் சூழல் சமநிலை சீரற்றுப் போகும் நிலையைக் குறிக்கும். சூழலுக்கும் அங்கே வாழுகின்ற உயிரினங்களுக்கும் கேடு விளைவிக்கக்கூடியவையின் சேர்க்கையினால் சூழற் சமநிலை பாதிக்கப்படும். சூழல் மாசினால் அச்சூழ்மண்டலத்தில் வாழும் தாவரங்களும், விலங்குகளும் பல்வேறு வகையான பாதிப்புகளுக்கு உண்டாகிறது.