The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
மேட்டூர் அணை காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு அணையாகும். இது சேலம் மாவட்டத்தின் மேட்டூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான மேட்டூர் என்னும் ஊரில் கட்டப்பட்டுள்ளதால் அவ்வாறு அழைக்கப்படுகிறது. இது அணையைக்கட்டிய ஸ்டேன்லி என்பவரின் பெயரால் ஸ்டேன்லி நீர்த்தேக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.இந்த அணை 1934-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது மற்றும் கட்டிமுடிக்க 9 ஆண்டுகள் ஆனது.
அன்னை தெரேசா (Mother Teresa, ஆகத்து 26, 1910 - செப்டம்பர் 5, 1997), அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவரும் இந்தியக் குடியுரிமை பெற்ற உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியும் ஆவார். இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும். 1950 ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார்.
திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்
திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்,சுந்தரர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 52ஆவது சிவத்தலமாகும்.இத்தலத்தில் சனீசுவரன் இறைவன் வணங்கி பேறு பெற்றார். அதனால் இத்தலத்தில் உள்ள சனீசுவரன் புகழ்பெற்று விளங்குகிறார்.
சாம் ஹார்முஸ்ஜி பிரேம்ஜி ஜாம்ஷெட்ஜி மானெக்சா (Sam Hormusji Framji "Sam Bahadur" Jamshedji Manekshaw, ஏப்ரல் 3, 1914 – சூன் 27, 2008) என்னும் முழுப் பெயர் கொண்ட சாம் மானேக்சா நான்கு தலைமுறைகளாக இராணுவத்தில் பணிபுரிந்தவர். 40 ஆண்டுகால ராணுவ சேவையில் 5 போர்களைச் சந்தித்தவர். இந்திய இராணுவத்தின் எட்டாவது தலைமைத் தளபதியாக இருந்து இந்தியா வழிநடத்திய ஏனைய போர்களில் கலந்து கொண்டவர்.
ஒரு குறிப்பிட்ட புவிசார்ந்த இடத்தையோ அல்லது தோற்றத்தையோ ( எ.கா. நகரம், வட்டாரம், நாடு ) குறிக்கும்படி ஒரு பொருளின் மீது பயன்படுத்தப்படும் பெயர் அல்லது சின்னம் புவிசார் குறியீடு (Geographical indication) எனப்படும். இந்த குறியீடு, அந்த பொருள் புவிசார்ந்து பெறும் தரத்தையோ, நன்மைதிப்பையோ சாற்றும் சான்றாக விளங்கும்.
கௌதம புத்தரை அடிப்படையாகக்கொண்டு பௌத்த சமயம் உருவாக்கப்பட்டது. இவர் கி.மு 563க்கும் கி.மு 483க்கும் இடையில் வாழ்ந்தவர். கௌதமபுத்தர் கிறித்து பிறப்பதற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பே வாழ்ந்திருக்கலாம் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்தக்கூடிய, ஒரு பழமையான பௌத்த வழிபாட்டுத் தலத்தை தாம் கண்டறிந்துள்ளதாக நேபாளத்தில் உள்ள அகழ்வாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
போபால் பேரழிவு அல்லது போபால் துன்பம் டிசம்பர் 3, 1984 ல் இந்தியாவில் உள்ள போபாலில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட நச்சு வளிமக் கசிவினால் (வாயுக் கசிவினால்) ஏற்பட்ட பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகளை நினைவுகூறும் ஒரு துன்ப நிகழ்வாகும். யூனியன் கார்பைடு எனும் பூச்சிகொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் மீத்தைல் ஐசோ சயனேட் எனும் நச்சு வளிமம் கசிந்ததினால் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். உடனடி உயிரிழப்பாக ஏறத்தாழ 2,259 பேர் நச்சு வளிமம் தாக்கி இறந்தனர்.
தகடூர் வரலாறும் பண்பாடும் (நூல்)
தகடூர் வரலாறும் பண்பாடும் என்னும் தலைப்புடன் கூடிய நூல் இன்றைய தருமபுரி, கிருட்டிணகிரி மாவட்டங்களின் வரலாற்றைக் கூறும் நூலாகும். இதன் ஆசிரியர் முனைவர் இரா. இராமகிருட்டிணன்.
இரவீந்தரநாத் தாகூர் (Rabindranath Tagore) வங்காள மொழி: রবীন্দ্রনাথ ঠাকুর, மே 7, 1861- ஆகஸ்ட் 7, 1941) புகழ் பெற்ற வங்காள பல்துறையறிஞர் ஆவார். 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் இவர் வங்காள இலக்கியம் மற்றும் இசை வடிவத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். மேலும் இந்தியக் கலைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தார்.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
பீல்டு மார்ஷல் கே.எம்.கரியப்பா (கன்னடம்: ಫೀಲ್ಡ್ ಮಾರ್ಷಲ್ ಕೊಡಂದೆರ ಮಾದಪ್ಪ ಕಾರಿಯಪ್ಪ (ಕಾರ್ಯಪ್ಪ), ஆங்கிலம்:Kodandera Madappa Cariappa (28 ஜனவரி 1899 – 15 மே 1993) இந்தியத் தரைப்படையின் முதல் முதற் பெரும் படைத்தலைவர் (commander-in-chief). இவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் 1947 ஆம் ஆண்டு ஏற்பட்ட இந்திய பாகிஸ்தான் போரில் இந்தியப் படைகளை வழிநடத்தினார்.
இபின் சீனா அல்லது அவிசென்னா எனச் சுருக்கமாக அழைக்கப்படும், அபு அலி அல்-ஹுசெய்ன் இபின் அல்லா இபின் சீனா (கிபி 980 - கிபி 1037) பாரசீகத்தைச் சேர்ந்த, பல்துறை அறிவு கொண்டவரும், புகழ்பெற்ற மருத்துவரும், மெய்யியலாளரும் ஆவார். இவர் வானியல், வேதியியல், நிலவியல், ஏரணவியல், தொல்லுயிரியல், கணிதம், இயற்பியல், கவிதை, உளவியல், அறிவியல் போன்ற பல துறைகளிலும் வல்லுனராக இருந்ததுடன், ஒரு போர்வீரராகவும், அரசியலாளராகவும், ஆசிரியராகவும் இருந்தார். இபின் சீனா, ஏறத்தாழ 450 நூல்களை எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் மதுவிலக்கு என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் மதுவிலக்கு குறித்த மாநில அரசின் கொள்கையைக் குறிப்பதாகும். தமிழ்நாட்டில் மதுவிலக்குக் கொள்கையானது வருவாயைக் கருத்திற் கொண்டு வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு விதமாக அரசுகளால் கையாளப்பட்டு வருகின்றது. இந்தியா விடுதலை பெற்று முதல் 23 ஆண்டுகாலம் தமிழகத்தில் மதுவிலக்கு நடப்பில் இருந்தது.
தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, ரீயூனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
நோபெல் பரிசு (Nobel Prize) அல்லது நோபல் பரிசு (பழைய வழக்கு) என்பது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும் உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசு ஆகும். அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் சில நிறுவனங்களுக்கும் வழங்கப்படுவது உண்டு. மார்ச் 2005 வரை 770 நோபெல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.
முகம்மது நபி அல்லது முகம்மது (Muḥammad, அரபு மொழி: محمد, பிறப்பு கிபி 570, இறப்பு 8 ஜூன் கிபி 632 கணிப்பு), அராபியப் பெயர்: அபூ அல்-காசிம் முகம்மது இப்னு அப்தல்லா இப்னு அப்தல்-முத்தலிப் இப்னு ஹாசிம் (Abū al-Qāsim Muḥammad ibn ʿAbd Allāh ibn ʿAbd al-Muṭṭalib ibn Hāshim, ابو القاسم محمد ابن عبد الله ابن عبد المطلب ابن هاشم) என்பவர் மக்கா நகரைச் சேர்ந்தவர். அராபியத் தீபகற்பம் முழுமையையும் இசுலாம் என்ற ஒரே கொள்கைச் சமயத்தின் கீழ் கொண்டு வந்தவர். இவர் முஸ்லிம்களால் மட்டுமல்லாமல் பாபிஸ்துகள் மற்றும் பகாய் சமயத்தவர்களாலும் கடவுளின் திருத்தூதர் என்று போற்றப்படுகிறார்.
திருக்குறள் எனக் குறிப்பிடப்படுவது புகழ்பெற்ற தமிழ் மொழி இலக்கியமாகும். உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது. இதனை இயற்றியவரான திருவள்ளுவர் கி.மு மூன்றாம் நூற்றாண்டுக்கும் கி.மு ஒன்றாம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராக இன்றைய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பாரதிதாசன் (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார்.பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர்.
புத்த பூர்ணிமா (இந்தியாவில்) அல்லது வைசாகம் அல்லது விசாகம் (இலங்கையில்) (Wesak) மே மாத பௌர்ணமி (முழு நிலா) நாளன்று உலகில் உள்ள அனைத்து பௌத்தர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். பலவித சமய நிகழ்வுகள் இந்நாளில் புத்தரின் வாழ்க்கை வரலாற்றை முன்னிறுத்தி இடம்பெறும். இக்காலப்பகுதியில் பந்தல்கள் தோரணங்கள் ஒளிக்கூடுகள் கட்டப்பட்டும் எங்கும் விழாக்கோலமாக இருக்கும்.
சித்திரகுப்தர் (சமஸ்கிருதம்: चित्रगुप्त, rich in secrets) இந்து சமயத்தில் உள்ள கடவுளாவார். பூலோகத்தில் மனிதர்கள் செய்யும் பாவ, தர்மங்களினைப் பற்றிய முழு விபரங்களினையும் பதிவு செய்துவைப்பது இவர் தொழிலாகும். மனிதர்கள் செய்யும் பாவங்கள் மற்றும் நல்ல செயல்களிற்கேற்றாற்போல பாவம் செய்யும் மானிடர்களை நரகத்திற்கும், நல்ல செயல்களைப் பின்பற்றுபவர்களினை சொர்க்கத்திற்கும் அனுப்பவல்ல சக்தியினை உடையவர் சித்ரகுப்தர்.
பாண்டவர் எனப்படுவர்கள் மகாபாரதத்தில் வரும் மன்னன் பாண்டுவின் ஐந்து மகன்கள் ஆவார்கள். இவர்களுள் முதல் மூவரான தர்மன், பீமன் மற்றும் அர்ஜூனன் ஆகியோர் குந்தி மூலமும் கடைசி இருவரான நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோர் மாத்ரி மூலமும் பிறந்தவர்கள் ஆவர். இவர்கள் ஐவர் என்பதால் பஞ்ச பாண்டவர் என்றும் அழைக்கப்படுவர்.
இக்டீரஸ் என்றும் அழைக்கப்படும் மஞ்சள் காமாலை நோய் (முன்பெயரடை: காமாலை ), அதி பைலிரூபிரத்தத்தினால் (ரத்தத்தில் பிலிரூபின் அளவு அதிகரித்தல்) சீதச்சவ்வு, விழிவெண்படலத்தின் மேல் உள்ள கண் சவ்வு (கண்களின் வெள்ளைப் பகுதி) மற்றும் தோல் பகுதிகள் மஞ்சள் தன்மை அடைவதை குறிக்கின்றது. அதிபைலிரூபி ரத்தம் செல்வெளிநீரில் பிலிரூபின் அளவு அதிகரிக்கும் நிலையையும் உருவாக்குகிறது. நிறம் மாறுதல் வெளிப்படையாகத் தெரிய வேண்டுமெனில் ஊநீரில் உள்ள பிலிரூபின் அளவு 1.5மிகி/டெசி.லிட்டருக்கும் அதிகமாக இருக்க வேண்டும்.
திரௌபதி (சமசுகிருதம்: कृष्णा द्रौपदी) (ஆங்கிலம்: Draupadi) மகாபாரதம் எனும் காவியத்தில் திரெளபதி, யாக அக்னியில் பிறந்தவள் என்பதால் யாகசேனி என்றும் கரிய நிறத்தவர் என்பதால் கிருஷ்ணை என்றும் பாஞ்சால நாட்டு இளவரசி என்பதால் பாஞ்சாலி என்றும் அழைக்கப்பட்டார். திரெளபதி, பாஞ்சால நாட்டு அரசர் துருபதன் செய்த யாக அக்னியில் தோன்றியவர். இவருடன் திருட்டத்துயும்னன் எனும் சகோதரனும் யாகத்தீயில் தோன்றினார்.
பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவும் உண்டு. அறம், பொருள், இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்களில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன. உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற பிரிவின் கீழ் வருவன.
சொல் (ஒருசொல், ஒன்று அல்லது பல பொருள், நிகண்டு வழி)
ஒரு சொல்லானது இன்னின்ன பொருளைத் தரும் என முதன்முதலில் தோன்றிய திவாகர நிகண்டு சொற்பொருள் இங்குத் தொகுக்கப்பட்டு அகர வரிசையில் தரப்படுகின்றன. இத்தொகுப்பில் 343 சொற்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நூலுக்குச் சேந்தன் திவாகம் என்னும் பெயரும் உண்டு.
வியாசர் மகா புராணங்கள் என்று அழைக்கப்பெறும் பதினெண் புராணங்களையும் எழுதியவராகவும், இதிகாசமான மகா பாரதத்தினை எழுதியவராகவும் அறியப்பெறுகிறார். இவர் வேதங்களை தொகுத்து வழங்கியதால் வேத வியாசர் என்றும் அழைக்கப்பெறுகிறார். பராசரர் - மச்சகந்தி இணையருக்கு கங்கை ஆற்றில் அமைந்த ஒரு தீவுத்திட்டில், கருத்தமேனியுடன் பிறந்ததால், கிருஷ்ண த்வைபாயனர் என்ற பெயராயிற்று.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
2019 உலகளவில் தமிழில் இதுவரை ஏறத்தாழ 6000க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளி வந்துள்ளன. இப்பட்டியல் உலகின் பல பகுதிகளிலிருந்தும் தமிழில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
ஸ்டான்லி நீர்த்தேக்கம் (இது மேட்டூர் அணை எனவும் அறியப்படுகிறது) இது தென்னிந்தியாவின் மிக பெரிய மீன்பிடி நீர்த்தேக்கங்களுள் ஒன்று .இதன் முக்கிய ஆதாரமான நதி காவேரி ஆகும். ஸ்டான்லி நீர்த்தேக்கம் முன்பாக மூன்று சிறிய கிளை நதிகளான பாலாறு,சின்னாறு,மற்றும் தோப்பாறு, ஆகியவை இனைந்து நீர் தேக்கத்தை அடைகின்றன. மேட்டூர் அணை, யின் மொத்த கொள்ளளவு 93,470,000,000 கன அடிக்கு மேல் ஆகும்.
கீத கோவிந்தம் (Geetha Govindam) என்பது ஒரு இந்திய தெலுங்கு திரைப்படமாகும். இதை ஜிஏ2 பிக்சர்ஸ் என்ற பதாகையில் பன்னி வாஸ் தயாரிக்க, பரசுராம் இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தண்ணா ஆகியோர் முதன்மைப் பாத்திரத்திலும், சுப்பாராஜூ, ராகுல் ராமகிருஷ்ணா, வெண்ணிலா கிஷோர், நாகு பாபு, மௌரியாணி ஆகியோர் இதர பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பழந்தமிழ் இசை (Ancient Tamil music) என்பது தமிழரின் மரபு வழியான மிகப் பழைமையான இசைச் செல்வமாகும். பழந்தமிழிசையெனக் குறிப்பிடும் போது ஐரோப்பியர் ஆட்சிக்கு முற்பட்ட காலத் தமிழ் மொழியின் இசை நடை, சிறப்புகள், பெற்ற மாற்றங்கள் ஆகியவை இங்கு குறிப்பிடப்படுகிறது. சங்கத்தமிழானது இயல், இசை, நாடகமென மூன்று வகையாகும்.
இந்துக்களின் வழிபாட்டுக்குரியதாயமைந்த ஒன்பது கிரகங்கள் நவக்கிரங்கள் எனப்படும்.கிரகம் எனும் சமசுகிருத சொல்( ग्रह ) ஆளுகைப்படுத்தல்—(seizing, laying hold of, holding) எனும் பொருளுடையது. நவக்கிரகம்(சமசுகிருதம்: नवग्रह ), ஒன்பது ஆளுகைக்காரர்கள் எனப் பொருள்படும். புவியிலுள்ள உயிர்க்கூறுகளை ஆளுகைக்குட்படுத்துகின்ற அண்டவெளிக்கூறுகளாக இவை கருதப்படுகின்றன.
அல்பேனியா (Albania, (கேட்க) a(w)l-BAY-nee-ə; அல்பேனிய: Shqipëri/Shqipëria அதிகாரபூர்வமாக அல்பேனியக் குடியரசு (Republic of Albania) என்பது ஐரோப்பாவின் தென்க்ழக்கேயுள்ள ஒரு நாடாகும். 28,748 சதுரகிமீ பரப்பளவுள்ள இந்நாட்டின் மக்கள்தொகை 3 மில்லியன்கள் as of 2016 ஆகும். இந்நாடு ஓர் ஒற்றை நாடாளுமன்றக் குடியரசு ஆகும்.
நோபல் பரிசு பெற்றவர்கள் பட்டியல்
நோபெல் பரிசுகள் (சுவீடிய: Nobelpriset, நோர்வே: Nobelprisen) ஆண்டுதோறும் சுவீடிய அரசுக் கல்விக்கழகத்தாலும் சுவீடியக் கல்விக்கழகத்தாலும் கரோலின்சுகா நிறுவனத்தாலும் நார்வே நோபெல் குழுவாலும் தனியொருவருக்கோ நிறுவனங்களுக்கோ வேதியியல், இயற்பியல், இலக்கியம், அமைதி, மற்றும் மருத்துவம் ஆகிய அறிவியல்புலங்களில் பெரும்பங்களிப்பு ஆற்றுபவர்களுக்குத் தரப்படுகின்றன. இவை ஆல்ஃபிரெட் நோபெலின் 1895அம் ஆண்டு உயிலின்படி நிறுவப்பட்டுத் தரப்படுகின்றன.இது நோபெல் அறக்கட்டளையால் ஆளப்படுமெனக் கூறுகிறது. பொருளியலுக்கான நோபெல் நினைவுப் பரிசு 1968இல் சுவீடன்னைச் சார்ந்த Sveriges Riksbank எனும் வங்கியால் பொருளியலில் பெரும்பங்களிப்பவர்களுக்காக நிறுவப்பட்டது.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
இலங்கை (ஒலிப்பு ) (Sri Lanka, சிங்களம்: ශ්රී ලංකා, சிறீலங்கா) இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் வாழும் ஒரு தீவு நாடு ஆகும். இதன் தற்போதைய அதிகாரபூர்வ பெயர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு ஆகும். 1972 க்கு முன் உலகம் முழுவதும் சிலோன் (Ceylon) என்ற பெயரால் அறியப்பட்டு வந்தது.
சிவன் (Śiva) இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர். சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர்.இவர் தனது ஒரு பகுதியிலிருந்து அன்னை பராசக்தியை உருவாக்கினாரெனவும், பின்னர் இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்டசராசரங்களை உருவாக்கினார்களென்றும், தனது உடுக்கையிலிருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார் எனவும் கருதப்படுகிறது. பின்னர் அன்னை பராசக்தி படைப்பிற்காக பிரம்மதேவரையும், அதன்பிறகு காப்பதற்காக காக்கும் கடவுளான விஷ்ணுவையும் உருவாக்கினார் என்றும் கருதப்படுகிறது.
விஜய் தேவரகொண்டா தெலுங்கு சினிமா வில் பெயர் பெற்ற ஒரு இந்திய திரைப்பட நடிகர். விஜய் தேவரகொண்டா 2011 ஆம் ஆண்டில் ரவி பாபு வின் காதல் நகைச்சுவை திரைப்படமான நுவ்விலா (2011) மூலம் அறிமுகமானார் , ஆனால் அவர் யெவடே சுப்பிரமணியம் (2015) படத்தில் துணை வேடத்தில் நடித்ததன் மூலம் அங்கீகாரம் பெற்றார் . விஜய் 2016 பிளாக்பஸ்டர் காதல் நகைச்சுவை படமான பெல்லி சூப்புலுவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தெலுங்கில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது மற்றும் சிறந்த படத்திற்கான ஃபிலிம்ஃபேர் விருது - தெலுங்கு என விருது பெற்றார் .
குரான் அல்லது திருக்குரான் (குர்-ஆன் அரபி: القرآن அல்-குர்-ஆன்) இசுலாமியர்களின் புனித நூல் ஆகும். இது முகம்மது நபிக்கு, ஜிப்ரயீல் என்ற வானவர் மூலமாக இறைவனால் சிறுகச் சிறுக சொல்லப்பட்ட அறிவுரைகள், சட்ட திட்டங்கள், தொன்மங்கள், செய்திகளின் தொகுப்பு என்பது இசுலாமியர்களின் நம்பிக்கை. இசுலாமிய சட்ட முறைமையான சரியத் சட்டத்தின் அடிப்படையாகவும் குரான் விளங்குகின்றது.
ஐரோப்பா இடைக்காலத்தில் அறியாமை எனும் இருளை விட்டு வெளிவரக் காரணமாக இருந்ததற்கு முஸ்லிம்களின் கலை, முஸ்லிம்களின் விஞ்ஞானம், முஸ்லிம்களின் இலக்கியம் ஆகியவற்றிற்கு அது (ஐரோப்பா) பெருமளவில் நன்றிக் கடன் பட்டிருக்கிறது. ஏனென்றால், 8-12ம் நூற்றாண்டு காலப்பகுதியானது 'ஐரோப்பா அறியாமை எனும் இருட்டில் தத்தளித்துக் கொண்டிருந்த காலப்பகுதியாகும்' என இன்றும் வரலாறு கூறுகின்றது. இக்காலப்பகுதியில் முஸ்லீம்களின் கண்டுபிடிப்புக்கள் அசாத்தியமானவைகளாகும்.
வன்னியர் (Vanniyar) அல்லது வன்னிய குல சத்திரியர் (Vanniya Kula Kshatriya's) எனப்படுவோர் தமிழகத்தில் குறிப்பாக வடதமிழகத்தில் (காவேரி ஆற்றின் வடக்கு பகுதிகளில்) அடர்த்தியாகவும், மற்ற பகுதிகளில் குறிப்பிட்ட அளவிலும் வாழுகின்ற ஒரு மிகப்பெரிய தமிழ் சாதியினர் ஆவர். இவர்கள் புதுச்சேரி, தெற்கு கருநாடகம் மற்றும் தெற்கு ஆந்திரா போன்ற பகுதிகளிலும் வாழ்கின்றனர். இவர்கள் தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு பட்டியலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ளனர்.
கர்ணன் (ஒலிப்பு ) மகாபாரத காப்பியத்தில் இடம் பெறும் மைய கதாப்பாத்திரங்களுள் ஒருவர். அவர் அங்கா நாட்டின் (தற்போதைய பாகல்பூர் மற்றும் முங்கர்) அரசராக இருந்தார். அர்சுனனை போரில் வீழ்த்தக்கூடிய வல்லமை பெற்ற ஒரே வீரராக நம்பப்படும் கர்ணன், ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் பீஷ்மரினால் மகாபாரதத்தின் மிகச்சிறந்த போர்வீரராகக் கருதப்பட்டார்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என்பது வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள கோயில் நகரமான மதுரையின் மத்தியில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன். இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர்.
இந்தியத் தேசிய இராணுவம் (Indian National Army – INA) என்பது இரண்டம் உலகப் போரின் போது பிரித்தானிய இந்திய அரசினை எதிர்த்துப் போரிட தென்கிழக்காசியாவில் உருவாக்கப்பட்ட ஒரு படை. இது சப்பானியப் பேரரசின் உதவியுடன் இந்தியாவின் காலனிய அரசை எதிர்த்துப் போரிட்டது. ஆரம்ப காலத்தில் சப்பானியர்களால் கைது செய்யப்பட்ட பிரித்தானிய இந்திய இராணுவத்தின் இந்திய போர்க்கைதிகள் இதில் இடம் பெற்றிருந்தனர்.
ஜன் தன் திட்டம் அல்லது பிரதமர் மக்கள் நிதி திட்டம் (Pradhan Mantri Jan Dhan Yojana) வீட்டுக்கு ஒரு வங்கிக் கணக்கு இருக்கும் வகையில் புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோதி 28 ஆகஸ்டு 2014 வியாழக்கிழமை அன்று புதுதில்லியில் தொடங்கி வைத்தார். பிரதமர் நரேந்திர மோடி 15 ஆகஸ்டு 2014 சுதந்திர தின உரையில், ‘பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா’ (பிரதமர் மக்கள் நிதி திட்டம்) என்ற திட்டத்தை பற்றி அறிவித்தார். . இந்தத் திட்டத்தின் கீழ், வங்கியில் கணக்கு இல்லாத 7½ கோடி குடும்பத்தினருக்குக் காப்பீடு வசதியுடன் வங்கிக் கணக்கு தொடங்கப்படுகிறது.
சித்திரா பௌர்ணமி எனப்படுவது சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தன்று சைவ மக்களால் அநுட்டிக்கப்படும் ஒரு விரத நாளாகும். இந்நாளில் சைவர்கள் விரதமிருந்து கோயில்களிலும் ஏனைய புனித இடங்களிலும் கஞ்சி காய்ச்சி சித்திர புத்திரனார் கதை படித்து எல்லோருக்கும் கஞ்சி வார்ப்பர். இந்நாளில் முன்னோர் பொங்கல் வைத்துப் பூச்சொரிந்து குரவைக் கூத்தாடி வசந்த விழாவைக் கொண்டாடினர்.
அருள்மொழிவர்மன் என்கின்ற பேரரசர் இராசகேசரி வர்மன் முதலாம் இராசராச சோழன் சோழ பேரரசின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவார். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1014 வரையாகும். இவர் மகன் முதலாம் இராசேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவிய பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே.
உலகின் புதிய ஏழு அதிசயங்கள் (New 7 Wonders of the World, 2000-2007) என்பது உலகின் பழைய ஏழு அதிசயங்களின் யோசனையை புதிய அதிசயங்களின் ஒரு பட்டியலைக் கொண்டு புதுப்பிப்பதாகும். நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை என்னும் தனியார் நிறுவனம் பிரபலமுற்றவைக்கான கருத்துக்கணிப்பு ஒன்றினை ஏற்பாடு செய்தது, வெற்றி பெற்றவை 2007 சூலை 7 அன்று போர்த்துக்கல் நாட்டின் லிஸ்பன் நகரில் அறிவிக்கப்பட்டன100 மில்லியன் பேருக்கும் அதிகமானோர் தங்கள் வாக்குகளை இணையம் வழியாக அல்லது தொலைபேசி வழியாக பதிவு செய்ததாக சுவிட்சர்லாந்து நாட்டை மையமாகக் கொண்டு செயல்படும் நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை தெரிவிக்கிறது. ஒருவரே பலவாக்குகளை பதிவு செய்வதை தடுக்க வழியில்லாததால், இந்த கருத்துக்கணிப்பு "தீர்மானமாக அறிவியல்பூர்வமற்ற" ஒன்றாகக் கருதப்படுகிறது.
மயங்கொலிச் சொற்கள் என்பன தமிழில் கிட்டத்தட்ட ஒரே வடிவிலான எழுத்துருக்களை கொண்டவைகளாகவும், முற்றிலும் வேறுபட்ட பொருள் கொண்டவைகளாகவும் காணப்படும். இவ்வகையான சொற்கள் ஒலிப்பின் போது நுண்ணிய வேறுபாடுகளை மட்டுமே கொண்டிருப்பதால் எது சரி, எது தவறு என மயங்க வைப்பவைகளாக இருக்கும். அதனாலேயே இவற்றை மயங்கொலிச் சொற்கள் என்றழைக்கப்படுகின்றன.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபா சாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.