The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
அகத்தியர் அருவி (Agasthiyar Falls) என்பது திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள அருவி ஆகும். இந்த அருவிக்குக் காரையார் மற்றும் சேர்வலாறு நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் வந்து கொண்டிருக்கிறது. சுமார் 25 அடி உயரத்தில் இருந்து விழும் இந்த அருவி, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இருக்கிறது.
ஒட்டன்சத்திரம் (ஆங்கிலம்:ODDANCHATRAM), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில், ஒட்டன்சத்திரம் வட்டம் மற்றும் ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். இது திண்டுக்கல் - பழநி இடையே உள்ளது. இங்கு தமிழகத்திலேயே கோயம்பேடுக்கு அடுத்தபடியாக இரண்டாவது மிகப் பெரிய காய்கறி சந்தை அமைந்துள்ளது.
சிவாசி ராவ் கைக்வாடு (பிறப்பு: திசம்பர் 12, 1950; Shivaji Rao Gaekwad; மராட்டி: रजनीकांत/शिवाजीराव गायकवाड, சிவாஜிராவ் காயகவாடு) என்பவர் இரசினிகாந்து (RajiniKanth) என்ற திரையரங்கப் பெயர் கொண்ட ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பெரும்பான்மையாக தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பவர். பெங்களூர் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது நாடகத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
இந்து தொன்மவியலின் அடிப்படையில் அகலிகை (சமஸ்கிருதம்: अहल्या, அகல்யா) என்பவர் கௌதம மகரிஷியின் ரிஷிபத்தினி ஆவார். தேவர்களின் தலைவனான இந்திரன் இவர் மேல் ஆசை கொண்டு, வன்புணர்வு செய்திட, அதனை அறிந்த கௌதமர் அகலிகையை கல்லாக மாற சாபமிட்டார். இவ்வாறு கல்லாக மாறிய அகலியை ராமனின் கால்பட்டதால் மீண்டும் மனிதவுருவம் பெற்றதாக இந்து சமய நூல்கள் பல சொல்லுகின்றன.
புகழ் பெற்ற பல்லவ மன்னனான மகேந்திர வர்மனுக்குப் பின்னர் அவன் மகன் நரசிம்மவர்மன் (கி.பி 630 - 668) என்னும் பெயருடன் ஆட்சிக்கு வந்தான். காஞ்சிப் பல்லவ மன்னர்களுள் பல வழிகளிலும் சிறப்புப் பெற்றவனாகப் போற்றப்படுபவன் இவனாவான். இவரது காலத்திலேயே பல்லவர் குலம் மிகவும் சிறப்புற்று விளங்கியது.இவரது ஆட்சி காலத்தில் பல்லவ இராட்சியம் வடக்கில் கிருஷ்ணா ஆறு முதல் தெற்கில் மதுரை வரை பரந்து காணப்பட்டது.
திவ்ய தேசங்கள் என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும்.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
அன்னையர் நாள் (Mother's day) விடுமுறை தினம் அன்னையர் மற்றும் தாய்மையைப் போற்றும் நாளாக அன்னா ஜார்விஸ் அவர்களால் மேற்கு விர்ஜினியாவின் கிராப்டன் நகரில் உருவாக்கப்பட்டது; இது குறிப்பாக குடும்பங்கள் மற்றும் குடும்பங்களின் உறவுச் சூழல்களை மையமாகக் கொண்டது. இது, இப்போது உலகின் பெரும்பாலான பகுதிகளில் வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படுகின்றது. அவற்றில் பல, நவீன விடுமுறை தினத்தை விட மிகவும் பழமையானது (எ.கா.
தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, ரீயூனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
வாதாபிப் போர் (Battle of Vatapi) கிபி 642 ஆம் ஆண்டில் சாளுக்கியத் தலைநகரான வாதாபியில் பல்லவருக்கும் சாளுக்கியருக்கும் இடையே நடந்த ஒரு தீர்க்கமான சமர் ஆகும். இப்போரின் முடிவில் சாளுக்கிய மன்னர் இரண்டாம் புலிகேசி தோற்கடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். தொடர்ந்து 654 ஆம் ஆண்டு வரை வாதாபி பல்லவரின் வசம் இருந்தது.
பாரதிதாசன் (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார்.பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர்.
சொல் (ஒருசொல், ஒன்று அல்லது பல பொருள், நிகண்டு வழி)
ஒரு சொல்லானது இன்னின்ன பொருளைத் தரும் என முதன்முதலில் தோன்றிய திவாகர நிகண்டு சொற்பொருள் இங்குத் தொகுக்கப்பட்டு அகர வரிசையில் தரப்படுகின்றன. இத்தொகுப்பில் 343 சொற்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நூலுக்குச் சேந்தன் திவாகம் என்னும் பெயரும் உண்டு.
திருக்குறள் எனக் குறிப்பிடப்படுவது புகழ்பெற்ற தமிழ் மொழி இலக்கியமாகும். உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது. இதனை இயற்றியவரான திருவள்ளுவர் கி.மு மூன்றாம் நூற்றாண்டுக்கும் கி.மு ஒன்றாம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராக இன்றைய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
முகம்மது நபி அல்லது முகம்மது (Muḥammad, அரபு மொழி: محمد, பிறப்பு கிபி 570, இறப்பு 8 ஜூன் கிபி 632 கணிப்பு), அராபியப் பெயர்: அபூ அல்-காசிம் முகம்மது இப்னு அப்தல்லா இப்னு அப்தல்-முத்தலிப் இப்னு ஹாசிம் (Abū al-Qāsim Muḥammad ibn ʿAbd Allāh ibn ʿAbd al-Muṭṭalib ibn Hāshim, ابو القاسم محمد ابن عبد الله ابن عبد المطلب ابن هاشم) என்பவர் மக்கா நகரைச் சேர்ந்தவர். அராபியத் தீபகற்பம் முழுமையையும் இசுலாம் என்ற ஒரே கொள்கைச் சமயத்தின் கீழ் கொண்டு வந்தவர். இவர் முஸ்லிம்களால் மட்டுமல்லாமல் பாபிஸ்துகள் மற்றும் பகாய் சமயத்தவர்களாலும் கடவுளின் திருத்தூதர் என்று போற்றப்படுகிறார்.
முதலாம் நரசிம்மவர்மன் (630-668)
முதலாம் நரசிம்மவர்மன் (630-668) புகழ் பெற்ற பல்லவ மன்னன் ஆவர். மகேந்திர வர்மனுக்குப் பின்னர் அவன் மகன் நரசிம்மவர்மன் கி.பி 630 ல் என்னும் பெயருடன் ஆட்சிக்கு வந்தான். இவரது காலத்திலேயே பல்லவர் குலம் மிகவும் சிறப்புற்று விளங்கியது.
நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் அல்லது நிக்கோலசு கோப்பர்னிக்கசு (; Niklas Koppernigk; போலிய: Mikołaj Kopernik; இடாய்ச்சு மொழி: Nikolaus Kopernikus; பிப்ரவரி 19, 1473 - மே 24, 1543) ஒரு வானியலாளரும், கணிதவியலாளரும், பொருளியலாளருமாவார். கதிரவனை மையமாகக் கொண்ட புரட்சிகரமான கொள்கையை வகுத்துத் தந்து வானியலில் புதிய ஒரு வளர்ச்சிக்கு வித்திட்டவர். 15ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நிலவியிருந்த பூமியை மையமாகக் கொண்டே பிற கோள்கள் இயங்குகின்றன என்ற கொள்கையை மாற்றிக் கதிரவனை மையமாகக் கொண்டே கோள்கள் இயங்குகின்றன என உலகிற்குக் காட்டியவர்.
அல்ஃபாத்திஹா (Sūrat al-Fātiḥah, அரபு மொழி: سورة الفاتحة), என்பது திருக்குர்ஆனின் முதலாவது அத்தியாயம் ஆகும். இவ்வத்தியாயம் தொழுகையின் மிக முக்கிய பங்கை வகிக்கிறது.திருமறையின் சில அத்தியாயங்கள் நபிகளாரின் மக்கா வாழ்க்கையின் போதும், சில அத்தியாயங்கள் மதீனா வாழ்க்கையின் போதும் அருளப்பட்டன. மக்கா வாழ்க்கையின் போது அருளப்பட்டவை ‘மக்கிய்யா’ (மக்காவுடன் தொடர்புடயவை) எனவும், ’மதனிய்யா’ (மதீனாவுடன் தொடர்புடைவை) எனவும் குறிப்பிடப்படும்.
தமிழ்நாட்டில் மதுவிலக்கு என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் மதுவிலக்கு குறித்த மாநில அரசின் கொள்கையைக் குறிப்பதாகும். தமிழ்நாட்டில் மதுவிலக்குக் கொள்கையானது வருவாயைக் கருத்திற் கொண்டு வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு விதமாக அரசுகளால் கையாளப்பட்டு வருகின்றது. இந்தியா விடுதலை பெற்று முதல் 23 ஆண்டுகாலம் தமிழகத்தில் மதுவிலக்கு நடப்பில் இருந்தது.
பாண்டவர் எனப்படுவர்கள் மகாபாரதத்தில் வரும் மன்னன் பாண்டுவின் ஐந்து மகன்கள் ஆவார்கள். இவர்களுள் முதல் மூவரான தர்மன், பீமன் மற்றும் அர்ஜூனன் ஆகியோர் குந்தி மூலமும் கடைசி இருவரான நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோர் மாத்ரி மூலமும் பிறந்தவர்கள் ஆவர். இவர்கள் ஐவர் என்பதால் பஞ்ச பாண்டவர் என்றும் அழைக்கப்படுவர்.
திரௌபதி (சமசுகிருதம்: कृष्णा द्रौपदी) (ஆங்கிலம்: Draupadi) மகாபாரதம் எனும் காவியத்தில் திரெளபதி, யாக அக்னியில் பிறந்தவள் என்பதால் யாகசேனி என்றும் கரிய நிறத்தவர் என்பதால் கிருஷ்ணை என்றும் பாஞ்சால நாட்டு இளவரசி என்பதால் பாஞ்சாலி என்றும் அழைக்கப்பட்டார். திரெளபதி, பாஞ்சால நாட்டு அரசர் துருபதன் செய்த யாக அக்னியில் தோன்றியவர். இவருடன் திருட்டத்துயும்னன் எனும் சகோதரனும் யாகத்தீயில் தோன்றினார்.
போபால் பேரழிவு அல்லது போபால் துன்பம் டிசம்பர் 3, 1984 ல் இந்தியாவில் உள்ள போபாலில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட நச்சு வளிமக் கசிவினால் (வாயுக் கசிவினால்) ஏற்பட்ட பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகளை நினைவுகூறும் ஒரு துன்ப நிகழ்வாகும். யூனியன் கார்பைடு எனும் பூச்சிகொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் மீத்தைல் ஐசோ சயனேட் எனும் நச்சு வளிமம் கசிந்ததினால் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். உடனடி உயிரிழப்பாக ஏறத்தாழ 2,259 பேர் நச்சு வளிமம் தாக்கி இறந்தனர்.
விஜய் தேவரகொண்டா தெலுங்கு சினிமா வில் பெயர் பெற்ற ஒரு இந்திய திரைப்பட நடிகர். விஜய் தேவரகொண்டா 2011 ஆம் ஆண்டில் ரவி பாபு வின் காதல் நகைச்சுவை திரைப்படமான நுவ்விலா (2011) மூலம் அறிமுகமானார் , ஆனால் அவர் யெவடே சுப்பிரமணியம் (2015) படத்தில் துணை வேடத்தில் நடித்ததன் மூலம் அங்கீகாரம் பெற்றார் . விஜய் 2016 பிளாக்பஸ்டர் காதல் நகைச்சுவை படமான பெல்லி சூப்புலுவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தெலுங்கில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது மற்றும் சிறந்த படத்திற்கான ஃபிலிம்ஃபேர் விருது - தெலுங்கு என விருது பெற்றார் .
ஹதீஸ் (அகதீசு; அரபு: : حديث, play /ˈhædɪθ/[1] or /hɑːˈdiːθ/[2]; ஆங்கிலம்: ḥadīth) என்பது நபிகள் நாயகம் முகமது நபியின் (ஸல்) அவர்களின் சொல், செயல், தீர்ப்புகள், முன்னெடுத்துக்காட்டுகள், நடைமுறைகள், விமர்சனப் பதிவுகளைக் கொண்ட தொகுதி ஆகும். மரபுவழி இசுலாமியச் சட்டவியலுக்கும் இறையியலுக்கும் குர்ஆனுடன் சேர்ந்து ஆதாரமாகக் கொள்ளப்படுகிறது. ஹதீசுகள் 8ம் 9ம் நூற்றாண்டுகளில் சேர்க்கப்பட்டு தொகுக்கப்பட்டன.
புள்ளலூர்ப் போர் (Battle of Pullalur) 618-19 ஆண்டுகளில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனுக்கும் சாளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசிக்கும் இடையில் காஞ்சிபுரத்தில் இருந்து பத்துக்கல் (15 கி.மீ.) தொலைவில், அரக்கோணம் சாலையில் திருமால்பூரில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிலுள்ள புள்ளலூர் அல்லது பொள்ளிலூர் என்னும் இடத்தில் நடந்த போராகும். மகேந்திரவர்மன் ஆட்சியில் இரண்டாம் புலிகேசி பல்லவ நாட்டின் மேல் படை எடுத்து வந்து அதன் வடபகுதியாகிய ஆந்திர பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டான்.
ஒசூர் பத்தலப்பள்ளி காய்கறி சந்தை
ஒசூர் பத்தலப்பள்ளி காய்கறி சந்தை என்பது தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டம் ஒசூரின் பத்தளப்பள்ளி பகுதியில் அமைந்துள்ள ஒரு காய்கறி சந்தையாகும்.
குரான் அல்லது திருக்குரான் (குர்-ஆன் அரபி: القرآن அல்-குர்-ஆன்) இசுலாமியர்களின் புனித நூல் ஆகும். இது முகம்மது நபிக்கு, ஜிப்ரயீல் என்ற வானவர் மூலமாக இறைவனால் சிறுகச் சிறுக சொல்லப்பட்ட அறிவுரைகள், சட்ட திட்டங்கள், தொன்மங்கள், செய்திகளின் தொகுப்பு என்பது இசுலாமியர்களின் நம்பிக்கை. இசுலாமிய சட்ட முறைமையான சரியத் சட்டத்தின் அடிப்படையாகவும் குரான் விளங்குகின்றது.
குற்றியலுகரம் என்பது ஒரு தமிழ்ச் சொல்லில் உள்ள உகரம் ஏறிய வல்லின எழுத்து (எ.கா: கு, சு, டு, து, பு, று) சொல்லின் கடைசி எழுத்தாக வரும் பொழுது, மற்ற குறில் உயிர்மெய் எழுத்துகள் (எ.கா: ற, கி, பெ) போல் ஒரு மாத்திரை அல்லாமல் அரை மாத்திரை அளவேயாகக் குறைந்து ஒலிக்கும் வரையறை கொண்டது. இதனையே வேறு விதமாகச் சொல்வதென்றால், தனி நெடிலுடனோ, பல எழுத்துகளைத் தொடர்ந்தோ சொல்லுக்கு இறுதியில் வல்லின மெய்யோடு சேர்ந்து வரும் உகரம், தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து அரை மாத்திரையளவே ஒலிக்கும். குற்றியலுகரம் என்பது அவ்வாறு குறைந்தொலிக்கும் உகரமாகும்.
கர்ணன் (ஒலிப்பு ) மகாபாரத காப்பியத்தில் இடம் பெறும் மைய கதாப்பாத்திரங்களுள் ஒருவர். அவர் அங்கா நாட்டின் (தற்போதைய பாகல்பூர் மற்றும் முங்கர்) அரசராக இருந்தார். அர்சுனனை போரில் வீழ்த்தக்கூடிய வல்லமை பெற்ற ஒரே வீரராக நம்பப்படும் கர்ணன், ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் பீஷ்மரினால் மகாபாரதத்தின் மிகச்சிறந்த போர்வீரராகக் கருதப்பட்டார்.
கீத கோவிந்தம் (Geetha Govindam) என்பது ஒரு இந்திய தெலுங்கு திரைப்படமாகும். இதை ஜிஏ2 பிக்சர்ஸ் என்ற பதாகையில் பன்னி வாஸ் தயாரிக்க, பரசுராம் இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தண்ணா ஆகியோர் முதன்மைப் பாத்திரத்திலும், சுப்பாராஜூ, ராகுல் ராமகிருஷ்ணா, வெண்ணிலா கிஷோர், நாகு பாபு, மௌரியாணி ஆகியோர் இதர பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்திய வரலாறு (History of India) என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் வரலாற்றுக் காலம் முன்பு வாழ்ந்த மக்கள், அவர்தம் சமுதாயம், சிந்து சமவெளி நாகரிகம் இந்தோ-ஆரியப் பண்பாடு உள்ளடக்கிய வேதகால நாகரிகம் தொடங்கி இன்றுவரை உள்ளிட்டகாலம் அடங்கும். மேலும் பல கலாச்சாரங்களின் சாரமாகவும் பண்பாடுகளை உள்வாங்கியும் பிறந்த இந்து சமயம், அதன் வளர்ச்சி குறித்தும் சிரமணா இயக்கத்தின் வளர்ச்சி, சிரவுத்தா பலிகளின் வீழ்ச்சி, சைனம், பௌத்தம், சைவம், வைணவம் மற்றும் சக்தி வழிபாடு இவைகளின் வளர்ச்சி, தாக்கம், மேலும் இப்பகுதியில் இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த அரச பரம்பரை, பேரரசுகளின் தோற்றம், தாக்கம், இடைகாலத்தில் தோன்றிய இந்து மற்றும் முகலாய அரச பரம்பரைகள் குறித்த தகவல்கள், பிற்காலத்தில் வந்த ஐரோப்பிய வணிகர்கள், அதன் தொடர்ச்சியாக அமைந்த ஆங்கிலேய அரசு, அதன் தொடர்ச்சியாக எழுந்த விடுதலை இயக்கம், அதன் பின் நாடு பிரிவினை அடைந்து இந்தியக் குடியரசு பிறந்த வரை தகவல்கள் உள்ளிட்டவை அடங்கும்.சுமார் 75,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியத் துணைக்கண்டத்தில் இன்றைய மனிதர்களின் உடற்கூறியல் வடிவத்தை ஒத்த மனிதர்களோ அல்லது 5,00,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தற்கால மனிதனின் முன்னனோடிகளோ வாழ்ந்து வந்தததற்கான் சான்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கிமு 3200 முதல் கிமு 1300 வரை இந்தியாவில் செழிப்பாக விளங்கிய சிந்துவெளி நாகரிகம்தான் தெற்கு ஆசியாவில் தோன்றிய முதல் நாகரிகம் ஆகும்.
இலங்கை (ஒலிப்பு ) (Sri Lanka, சிங்களம்: ශ්රී ලංකා, சிறீலங்கா) இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் வாழும் ஒரு தீவு நாடு ஆகும். இதன் தற்போதைய அதிகாரபூர்வ பெயர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு ஆகும். 1972 க்கு முன் உலகம் முழுவதும் சிலோன் (Ceylon) என்ற பெயரால் அறியப்பட்டு வந்தது.
தமிழில் உள்ள உயிரெழுத்து 12, மெய்யெழுத்து 18, ஆக மொத்தம் 30 எழுத்துகளைத் தமிழ் இலக்கணம் என்னும் மொழியியல் முதலெழுத்து எனக் குறிப்பிடுகிறது. வித்துமுதலைப் போட்டு விளைச்சல் காண்பது போலவும், முதலை வைத்துத் தொழில் செய்து பொருள் ஈட்டுவது போலவும் இந்த 30 முதல் எழுத்துகளை வைத்துதான் தமிழ் இயங்குகிறது. எழுத்துகள் சொல்லாகும்போது சில எழுத்துகள் மொழியோடு தோன்றி எழுத்தின் ஒலியைக் கூட்டியும் குறைத்தும் தருவது உண்டு.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
2019 உலகளவில் தமிழில் இதுவரை ஏறத்தாழ 6000க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளி வந்துள்ளன. இப்பட்டியல் உலகின் பல பகுதிகளிலிருந்தும் தமிழில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
ஈரோடு (Erode) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தின் தலைநகரமாக இருக்கும் மாநகராட்சி ஆகும். இது மாநில தலைநகரான சென்னையிலிருந்து தென்மேற்கு திசையில் 400 கிலோமீட்டர் (249 மைல்) தொலைவிலும், காவிரி மற்றும் பவானி ஆறுகளின் நதிக்கரையில் அமைந்துள்ளது. இதன் இரட்டை நகரமான பள்ளிபாளையமானது, காவிரி நதியின் கிழக்கு கரையில் நாமக்கல் மாவட்ட அதிகாரத்தின் கீழ் அமைந்துள்ளது.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
கௌதம புத்தரை அடிப்படையாகக்கொண்டு பௌத்த சமயம் உருவாக்கப்பட்டது. இவர் கி.மு 563க்கும் கி.மு 483க்கும் இடையில் வாழ்ந்தவர். கௌதமபுத்தர் கிறித்து பிறப்பதற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பே வாழ்ந்திருக்கலாம் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்தக்கூடிய, ஒரு பழமையான பௌத்த வழிபாட்டுத் தலத்தை தாம் கண்டறிந்துள்ளதாக நேபாளத்தில் உள்ள அகழ்வாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அன்னை தெரேசா (Mother Teresa, ஆகத்து 26, 1910 - செப்டம்பர் 5, 1997), அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவரும் இந்தியக் குடியுரிமை பெற்ற உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியும் ஆவார். இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும். 1950 ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார்.
நயன்தாரா (Nayanthara, பிறப்பு: நவம்பர் 18, 1984; இயற்பெயர் - டயானா மரியா குரியன்), தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். 2003-ம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். இவர் பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார், இதனால் இவர் தமிழ் சினிமாவில் 2010களில் தொடங்கி இன்று வரை பெண் சூப்பர் ஸ்டார் என்று கருதப்படுகிறார்.
பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவும் உண்டு. அறம், பொருள், இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்களில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன. உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற பிரிவின் கீழ் வருவன.
கருத்தரிப்பு என்பது, பாலூட்டிகளில், கருக்கட்டல் நிகழ்வின்போது உருவாகும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அடுத்த சந்ததிக்கான உயிரி, முளைய விருத்தி மூலம் முளையமாக விருத்தியடைந்து, பின்னர் முதிர்கரு நிலையில் குழந்தை பிறப்புவரை, பெண்களின் இனப்பெருக்க உறுப்பான கருப்பையில் பதிந்து, தாங்கிக் கொள்ளப்படும் நிலையாகும். இந்தக் கட்டுரையில் மனிதரில் நிகழும் கருத்தரிப்பே விரிவாக ஆராயப்படுகின்றது. மனிதரில், பருவமடைந்த ஆரோக்கியமான பெண்களுக்கு தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் சினை முட்டைகள் உற்பத்தியாகும்.
ஆத்திசூடி என்பது 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல் ஆகும். சிறுவர்கள் இளம் பருவத்திலேயே பாடம் செய்து மனதில் இருத்திக்கொள்ளும் வகையில் சிறுசிறு சொற்றொடர்களால் எளிமையாக அமைந்தது ஆத்திச்சூடி. தமிழ்ச் சமுதாயம் நல்லொழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்ததை உணர்த்தும் விதமாகவும் அன்று வழக்கத்திலிருந்த திண்ணைப் பள்ளிகள் குருகுலங்கள் முதல், இன்று பின்பற்றப் படுகிற மெக்காலே கல்வி முறை வரை, தமிழ் கற்கும் போது தமிழின் உயிரெழுத்துக்களைச் சொல்லித் தருகின்ற பொருட்டு ஔவையின் ஆத்தி சூடியைக் கொண்டு கற்பிப்பதை ஆசிரியர்கள் கடைப்பிடித்து வருகின்றார்கள்.
பகவத் கீதை (pronunciation ) (சமக்கிருதம்: श्रीमद्भगवद्गीता, Bhagavad Gita) என்பது இதிகாசத்தில் ஒன்றான மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். பகவத் கீதை என்பதற்கு கடவுளின் பாடல்கள் என்று பொருள்படும். மகாபாரதத்தில் நடைபெறும் குருச்சேத்திரப் போர் தொடங்கும் முன் எதிரணியை ஒருமுறை பார்வையிட்ட அருச்சுனன் அங்கே அவன் உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் போன்றோர் இருப்பதால் போரிட மறுத்தார்.
சிவன் (Śiva) இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர். சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர்.இவர் தனது ஒரு பகுதியிலிருந்து அன்னை பராசக்தியை உருவாக்கினாரெனவும், பின்னர் இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்டசராசரங்களை உருவாக்கினார்களென்றும், தனது உடுக்கையிலிருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார் எனவும் கருதப்படுகிறது. பின்னர் அன்னை பராசக்தி படைப்பிற்காக பிரம்மதேவரையும், அதன்பிறகு காப்பதற்காக காக்கும் கடவுளான விஷ்ணுவையும் உருவாக்கினார் என்றும் கருதப்படுகிறது.
திருவள்ளுவர் (Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர் என்றும் அழைக்கப்படுகிறார்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான கி.மு.400க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் மாவட்டம் (district, அல்லது Zilā, ஜில்லா) என்பது இந்திய மாநிலத்தின் அல்லது பிரதேசத்தின் பகுதியை நிர்வகிக்கும் ஒரு நிர்வாக பிரிவு ஆகும். இந்தியாவில் 28 மாநிலங்களையும் 8 ஆட்சிப்பகுதிகளையும் கொண்டது. ஒவ்வொரு மாநிலமும், ஆட்சிப் பகுதியும் எளிதான நிர்வாகத்திற்காக மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.