The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
மாரத்தான் என்பது சாலையில் தொடர்ந்து நெடுந்தொலைவு ஓடும் போட்டியாகும். இப்போட்டியில் கடக்க வேண்டிய தொலைவு 42.195 கிலோமீட்டர் ஆகும்.இப்போட்டி 1896ஆம் ஆண்டிலிருந்தே ஒலிம்பிக் விளையாட்டாக இருந்தபோதும் 1921ஆம் ஆண்டில் தான் விதிமுறைகள் சீர்தரப்படுத்தப்பட்டன. தடகள விளையாட்டுப் போட்டிகள் தவிர உலகின் பல நகரங்களில் 800க்கும் கூடுதலான, தீவிர விளையாட்டாளர்கள் அல்லாது உடல்நலம் பேணும் பொதுமக்களும் பங்கெடுக்கும், மாரத்தான் போட்டிகள் நடைபெறுகின்றன.பெரிய போட்டிகளில் ஆயிரக்கணக்கானவர் பங்கேற்பதும் உண்டு.
நோபல் பரிசுகள் ஆண்டுதோறும் சுவீடிய அரசுக் கல்விக்கழகத்தாலும், சுவீடியக் கல்விக்கழகத்தாலும், கரோலின்ஸ்கா நிறுவனத்தாலும், நோர்வே நோபல் குழுமத்தாலும், தனியொருவருக்கோ அல்லது நிறுவனங்களுக்கோ வேதியியல், இயற்பியல், இலக்கியம், அமைதி, மருத்துவமும், உடலியங்கியலும், பொருளியல் ஆகிய அறிவியல்புலங்களில் பெரும் பங்களிப்பு ஆற்றிய தனியொருவருக்கோ அல்லது நிறுவனங்களுக்கோ வழங்கப்பட்டு வருகிறது. இவை ஆல்பிரட் நோபலின் 1895ஆம் ஆண்டு உயிலின் படி நிறுவப்பட்டுத் தரப்படுகின்றன. இது நோபல் அறக்கட்டளையால் ஆளப்படுமெனக் கூறுகிறது.
பதினாறாம் நூற்றாண்டு முதல் இன்று வரை கிரிக்கெட் விளையாட்டு எல்லாரும் அறிந்த வரலாற்றுப் பாதையைக் கொண்டுள்ளது. 1844 ஆம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தாலும், கிரிக்கெட்டின் அங்கீகரிக்கப்பட்டுள்ள வரலாறு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்ட ஆண்டிலிருந்து தான் அதாவது 1877 ஆம் ஆண்டில் தான் துவங்கியது. இந்த காலகட்டங்களில் இங்கிலாந்தில் மட்டும் விளையாடப்பட்டு வந்த ஆட்டம் தற்போது, தொழில்ரீதியில் காமன்வெல்த் நாடுகள்]] எங்கும் விளையாடப்பட்டு வருகின்றது.
தமிழக ஆளுநர் -தமிழக ஆளுநர்களின் பட்டியல் தென்னிந்தியாவின் மாநிலமான, தமிழ்நாடு மாநிலத்தில், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பெற்ற ஆளுநர் தமிழகத்தின் அரசயலமைப்புத் தலைவராக அவரின் பிரதிநிதியாக செயல்படுபவர். இவரே மாநிலத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பவர். தமிழகத்தைப் பொறுத்தவரை ஆளுநர்கள் 1946ல் இருந்தே நியமனம் செய்யப்பட்டவர்களாகவும், தற்காலிகப் பொறுப்புகளுடனும் பதவி வகித்து வந்துள்ளனர்.
அன்னையர் நாள் (Mother's day) விடுமுறை தினம் அன்னையர் மற்றும் தாய்மையைப் போற்றும் நாளாக அன்னா ஜார்விஸ் அவர்களால் மேற்கு விர்ஜினியாவின் கிராப்டன் நகரில் உருவாக்கப்பட்டது; இது குறிப்பாக குடும்பங்கள் மற்றும் குடும்பங்களின் உறவுச் சூழல்களை மையமாகக் கொண்டது. இது, இப்போது உலகின் பெரும்பாலான பகுதிகளில் வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படுகின்றது. அவற்றில் பல, நவீன விடுமுறை தினத்தை விட மிகவும் பழமையானது (எ.கா.
மியன்மார் அல்லது மியான்மர் அல்லது மியான்மார் அல்லது பர்மா (Myanmar) (myan-MAR-' (கேட்க) mee-ahn-MAR-', mee-EN-mar or my-AN-mar (also with the stress on first syllable); Burmese pronunciation: [mjəmà]), என்பது ஆசியாவில் தென்கிழக்கு பகுதியில் அமைந்த இறைமையுள்ள நாடாகும். இது இன்றைய இரும்புத் திரை நாடு ஆகும். 1989ம் ஆண்டு பர்மா என்ற நாட்டின் பெயரை மியான்மர் நைங்கண்டௌ என்று மாற்றினர்.
ஊட்டச்சத்து (Nutrition) என்பது வாழ்க்கைக்கு ஆதாரமான அத்தியாவசிய மூலப்பொருள்களை உயிரணுக்களுக்கும், அதன்மூலம் உயிரினங்களுக்கும் வழங்குகின்ற உணவு ஆகும். இது பல ஊட்டக்கூறுகளைக் (Nutrients) கொண்டிருக்கும். பல பொதுவான சுகாதார பிரச்சினைகளையும் ஆரோக்கியமான உணவைக் கொண்டு தடுக்கவோ தவிர்த்துவிடவோ செய்ய முடியும்.
நோபல் பரிசு பெற்றவர்கள் பட்டியல்
நோபெல் பரிசுகள் (சுவீடிய: Nobelpriset, நோர்வே: Nobelprisen) ஆண்டுதோறும் சுவீடிய அரசுக் கல்விக்கழகத்தாலும் சுவீடியக் கல்விக்கழகத்தாலும் கரோலின்சுகா நிறுவனத்தாலும் நார்வே நோபெல் குழுவாலும் தனியொருவருக்கோ நிறுவனங்களுக்கோ வேதியியல், இயற்பியல், இலக்கியம், அமைதி, மற்றும் மருத்துவம் ஆகிய அறிவியல்புலங்களில் பெரும்பங்களிப்பு ஆற்றுபவர்களுக்குத் தரப்படுகின்றன. இவை ஆல்ஃபிரெட் நோபெலின் 1895அம் ஆண்டு உயிலின்படி நிறுவப்பட்டுத் தரப்படுகின்றன.இது நோபெல் அறக்கட்டளையால் ஆளப்படுமெனக் கூறுகிறது. பொருளியலுக்கான நோபெல் நினைவுப் பரிசு 1968இல் சுவீடன்னைச் சார்ந்த Sveriges Riksbank எனும் வங்கியால் பொருளியலில் பெரும்பங்களிப்பவர்களுக்காக நிறுவப்பட்டது.
விஜய் தேவரகொண்டா தெலுங்கு சினிமா வில் பெயர் பெற்ற ஒரு இந்திய திரைப்பட நடிகர். விஜய் தேவரகொண்டா 2011 ஆம் ஆண்டில் ரவி பாபு வின் காதல் நகைச்சுவை திரைப்படமான நுவ்விலா (2011) மூலம் அறிமுகமானார் , ஆனால் அவர் யெவடே சுப்பிரமணியம் (2015) படத்தில் துணை வேடத்தில் நடித்ததன் மூலம் அங்கீகாரம் பெற்றார் . விஜய் 2016 பிளாக்பஸ்டர் காதல் நகைச்சுவை படமான பெல்லி சூப்புலுவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தெலுங்கில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது மற்றும் சிறந்த படத்திற்கான ஃபிலிம்ஃபேர் விருது - தெலுங்கு என விருது பெற்றார் .
அல்ஃபாத்திஹா (Sūrat al-Fātiḥah, அரபு மொழி: سورة الفاتحة), என்பது திருக்குர்ஆனின் முதலாவது அத்தியாயம் ஆகும். இவ்வத்தியாயம் தொழுகையின் மிக முக்கிய பங்கை வகிக்கிறது.திருமறையின் சில அத்தியாயங்கள் நபிகளாரின் மக்கா வாழ்க்கையின் போதும், சில அத்தியாயங்கள் மதீனா வாழ்க்கையின் போதும் அருளப்பட்டன. மக்கா வாழ்க்கையின் போது அருளப்பட்டவை ‘மக்கிய்யா’ (மக்காவுடன் தொடர்புடயவை) எனவும், ’மதனிய்யா’ (மதீனாவுடன் தொடர்புடைவை) எனவும் குறிப்பிடப்படும்.
பன்வாரிலால் புரோகித் (Banwarilal Purohit, மராத்தி: बनवारीलाल पुरोहित, பிறப்பு: ஏப்ரல் 16, 1940) என்பவர் மகாராட்டிரம் மாநிலத்தின் விதர்பா பிராந்தியத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். அவர் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி இந்திய ஜனாதிபதியால் தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டு அக்டோபர் 6 ம் தேதி முறைப்படி பதவியேற்றுக்கொண்டார். இவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
சௌமியா சுவாமிநாதன் ஒரு இந்திய குழந்தைநல மற்றும் காச நோய் ஆராய்ச்சி மருத்துவர் ஆவார். இவர் அக்டோபர் 3, 2017 அன்று உலக சுகாதார அமைப்பின் திட்டங்களுக்கான துணை இயக்குனராக நியமிக்கப்பட்டார். இதற்கு முன்பு இவர் இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் செயலாளராகவும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையின் இயக்குனராகவும் பணியாற்றினார்.
தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, ரீயூனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
முகம்மது நபி அல்லது முகம்மது (Muḥammad, அரபு மொழி: محمد, பிறப்பு கிபி 570, இறப்பு 8 ஜூன் கிபி 632 கணிப்பு), அராபியப் பெயர்: அபூ அல்-காசிம் முகம்மது இப்னு அப்தல்லா இப்னு அப்தல்-முத்தலிப் இப்னு ஹாசிம் (Abū al-Qāsim Muḥammad ibn ʿAbd Allāh ibn ʿAbd al-Muṭṭalib ibn Hāshim, ابو القاسم محمد ابن عبد الله ابن عبد المطلب ابن هاشم) என்பவர் மக்கா நகரைச் சேர்ந்தவர். அராபியத் தீபகற்பம் முழுமையையும் இசுலாம் என்ற ஒரே கொள்கைச் சமயத்தின் கீழ் கொண்டு வந்தவர். இவர் முஸ்லிம்களால் மட்டுமல்லாமல் பாபிஸ்துகள் மற்றும் பகாய் சமயத்தவர்களாலும் கடவுளின் திருத்தூதர் என்று போற்றப்படுகிறார்.
திருக்குறள் எனக் குறிப்பிடப்படுவது புகழ்பெற்ற தமிழ் மொழி இலக்கியமாகும். உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது. இதனை இயற்றியவரான திருவள்ளுவர் கி.மு மூன்றாம் நூற்றாண்டுக்கும் கி.மு ஒன்றாம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராக இன்றைய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
நகரத் தந்தை (மேயர்; mayor, "பெரிய" எனப் பொருள்படும் இலத்தீன் மொழியின் மேயோரிலிருந்து (maior) பெறப்பட்டது) பல நாடுகளிலும் மாநகரம் அல்லது நகரம் போன்ற உள்ளாட்சி அரசின் மிக உயரிய அலுவலர் ஆவார். நகரக் கிழார், நகர பிதா, மாநகர முதல்வர் எனவும் அறியப்படுகின்றார். உலகளவில் மேயரின் அதிகாரங்கள், பொறுப்புகள் குறித்த உள்ளகச் சட்டங்கள் மற்றும் வழமைகளில் பெருத்த வேறுபாடுகள் காணப்படுகின்றன.
மேற்குத் தொடர்ச்சி மலை (Western Ghats) இந்திய துணைக்கண்டத்தின் மேற்புறத்தில் அரபிக்கடலுக்கு இணையாக அமைந்துள்ள தொடர்மலையாகும். மேற்குத் தொடர்ச்சி மலை அரபிக்கடலில் இருந்து வரும் குளிர்ந்த காற்றைத் தடுத்து அதன் மேற்பகுதியில் அமைந்துள்ள கேரளா மற்றும் மேற்கு கடற்ரையில் நல்ல மழையைத் தருகின்றது. இதனால் இம்மலைத்தொடரின் கிழக்குப்பகுதியிலுள்ள தக்காணப் பீடபூமி குறைந்தளவு மழைப்பொழிவையே பெறுகிறது.
சங்க இலக்கியம் (Sangam literature) எனப்படுவது தமிழில் கிறிஸ்துக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியம் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வரை 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது. இப்புலவர்களுள் பல தரப்பட்ட தொழில் நிலையுள்ளோரும் பெண்களும், நாடாளும் மன்னரும் உண்டு.
பதுருப் போர் (Battle of Badr, பத்ர் போர், அரபு மொழி: غزوة بدر, மார்ச் 17, கிபி 624) இசுலாமிய வரலாற்றில் முசுலிம்கள் இசுலாத்தின் பகைவர்களைப் படைமோதல் வழியாக எதிர்த்துப் போராடிய முதலாவது போர் ஆகும். இந்தப் போர் தென் அரேபியாவின் (இன்றைய சவூதி அரேபியா) ஹிஜாஸ் (Hijaz) பகுதியில் இசுலாமிய நாட்காட்டியில் (ஹிஜ்ரி) 2-ஆம் ஆண்டு ரமழான் பிறை 17-ல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மக்காவில் இசுலாத்தை எதிர்த்த குறைசியர்களுடன் இடம்பெற்ற இப்போர் முகம்மது நபிக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
கீத கோவிந்தம் (Geetha Govindam) என்பது ஒரு இந்திய தெலுங்கு திரைப்படமாகும். இதை ஜிஏ2 பிக்சர்ஸ் என்ற பதாகையில் பன்னி வாஸ் தயாரிக்க, பரசுராம் இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தண்ணா ஆகியோர் முதன்மைப் பாத்திரத்திலும், சுப்பாராஜூ, ராகுல் ராமகிருஷ்ணா, வெண்ணிலா கிஷோர், நாகு பாபு, மௌரியாணி ஆகியோர் இதர பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சொல் (ஒருசொல், ஒன்று அல்லது பல பொருள், நிகண்டு வழி)
ஒரு சொல்லானது இன்னின்ன பொருளைத் தரும் என முதன்முதலில் தோன்றிய திவாகர நிகண்டு சொற்பொருள் இங்குத் தொகுக்கப்பட்டு அகர வரிசையில் தரப்படுகின்றன. இத்தொகுப்பில் 343 சொற்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நூலுக்குச் சேந்தன் திவாகம் என்னும் பெயரும் உண்டு.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
2019 உலகளவில் தமிழில் இதுவரை ஏறத்தாழ 6000க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளி வந்துள்ளன. இப்பட்டியல் உலகின் பல பகுதிகளிலிருந்தும் தமிழில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
கேவியட் மனு அல்லது முன்னெச்சரிக்கை மனு (Caveat Petition) என்பது தாக்கல் செய்யும் வாதிக்கு எதிராக, முன் அறிவிப்பு இன்றி, ஒரு குறிப்பிட்ட காரியத்தில், பிரதிவாதிக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு அளிப்பதை தடுக்க, வாதி சார்பில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுவானது கேவியட் மனு எனப்படும்.கேவியட் எனும் இலத்தீன் மொழிச் சொல்லிற்கு முன் எச்சரிக்கை என்று பொருள். முன்னெச்சரிக்கையாக கேவியட் மனு தாக்கல் செய்தவரின் கருத்தை அறிந்த பின்பே, வழக்கின் தீர்ப்பை நீதிமன்றம் வழங்கும். நீதிமன்றத்தில் ஒருவர் அல்லது ஒரு நிறுவனம் ஒரு விடயம் குறித்து வழக்கு தாக்கல் செய்யும் போது, அவ்வழக்கு தம்மை பாதிக்கும் எனக் கருதும் ஒருவர் அல்லது ஒரு நிறுவனம், தன்னை அல்லது நிறுவனத்தை கலந்து ஆலோசிக்காமல் வழக்கின் தீர்ப்பு கூறக்கூடாது என்பதற்காக, முன்னெச்சரிக்கையாக நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்வர்.
குரான் அல்லது திருக்குரான் (குர்-ஆன் அரபி: القرآن அல்-குர்-ஆன்) இசுலாமியர்களின் புனித நூல் ஆகும். இது முகம்மது நபிக்கு, ஜிப்ரயீல் என்ற வானவர் மூலமாக இறைவனால் சிறுகச் சிறுக சொல்லப்பட்ட அறிவுரைகள், சட்ட திட்டங்கள், தொன்மங்கள், செய்திகளின் தொகுப்பு என்பது இசுலாமியர்களின் நம்பிக்கை. இசுலாமிய சட்ட முறைமையான சரியத் சட்டத்தின் அடிப்படையாகவும் குரான் விளங்குகின்றது.
இலங்கை (ஒலிப்பு ) (Sri Lanka, சிங்களம்: ශ්රී ලංකා, சிறீலங்கா) இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் வாழும் ஒரு தீவு நாடு ஆகும். இதன் தற்போதைய அதிகாரபூர்வ பெயர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு ஆகும். 1972 க்கு முன் உலகம் முழுவதும் சிலோன் (Ceylon) என்ற பெயரால் அறியப்பட்டு வந்தது.
சிவன் (Śiva) இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர். சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர்.இவர் தனது ஒரு பகுதியிலிருந்து அன்னை பராசக்தியை உருவாக்கினாரெனவும், பின்னர் இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்டசராசரங்களை உருவாக்கினார்களென்றும், தனது உடுக்கையிலிருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார் எனவும் கருதப்படுகிறது. பின்னர் அன்னை பராசக்தி படைப்பிற்காக பிரம்மதேவரையும், அதன்பிறகு காப்பதற்காக காக்கும் கடவுளான விஷ்ணுவையும் உருவாக்கினார் என்றும் கருதப்படுகிறது.
53°28′N 2°14′W மன்செஸ்டர் (Manchester) என்பது இங்கிலாந்து, பாரிய மன்செஸ்டரின் ஒரு நகரமும் பரோ நகராட்சியும் (நகராட்சி மாவட்டம்) ஆகும். மன்செஸ்டர் நகரத்தில் 452,000 பேர் வசிக்கின்றனர். இங்கிலாந்தின் முக்கிய நகராங்களில் ஒன்றாக விளங்கும் மன்செஸ்டர் வாடக்கு இங்கிலாந்தின் தலைநகர் எனப் பொதுவாக வர்ணிக்கப்படுகிறது.
மகாராணா பிரதாப் அல்லது மேவார் பிரதாப் சிங் (Maharana Pratap, மே 9, 1540 - ஜனவரி 29, 1597) வட மேற்கு இந்தியாவில் அமைந்திருந்த மேவார் இராச்ச்சியம் எனப்படும் உதய்பூர் இராச்சியத்தின் இந்து அரசராவார். அவர் ராஜபுத்திரர்களின் சூர்யவன்ஷி குலமரபில் சிசோதியா என்கின்ற பிரிவை சார்ந்தவர். ராஜபுத்திரர்கள் தொன்று தொட்டு போற்றிவரும் வீரம், நாட்டுப்பற்று மற்றும் சுய மரியாதை ஆகிய அருங்குணங்களுக்கு ஒரு மிகவும் சிறந்த எடுத்துக் காட்டாக மகாராணா பிரதாப் சிங் விளங்கினார்.
பாரதிதாசன் (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார்.பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர்.
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்
இந்தியாவில் 28 மாநிலங்களும், டெல்லி தேசிய தலைநகரப் பகுதி உள்ளிட்ட 9 நடுவண் அரசின் ஆட்சிப்பகுதிகளும் உள்ளன. அனைத்து மாநிலங்களிலும் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் பாண்டிச்சேரி, ஜம்மு காஷ்மீர், டெல்லி தலைநகரப் பகுதி ஆகியவற்றிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் உள்ளன. ஏனைய ஒன்றியப் பகுதிகள் இந்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுனர்களைக் கொண்ட, குடியரசுத் தலைவரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளாகும்.
கருத்தரிப்பு என்பது, பாலூட்டிகளில், கருக்கட்டல் நிகழ்வின்போது உருவாகும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அடுத்த சந்ததிக்கான உயிரி, முளைய விருத்தி மூலம் முளையமாக விருத்தியடைந்து, பின்னர் முதிர்கரு நிலையில் குழந்தை பிறப்புவரை, பெண்களின் இனப்பெருக்க உறுப்பான கருப்பையில் பதிந்து, தாங்கிக் கொள்ளப்படும் நிலையாகும். இந்தக் கட்டுரையில் மனிதரில் நிகழும் கருத்தரிப்பே விரிவாக ஆராயப்படுகின்றது. மனிதரில், பருவமடைந்த ஆரோக்கியமான பெண்களுக்கு தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் சினை முட்டைகள் உற்பத்தியாகும்.
இந்திய வரலாறு (History of India) என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் வரலாற்றுக் காலம் முன்பு வாழ்ந்த மக்கள், அவர்தம் சமுதாயம், சிந்து சமவெளி நாகரிகம் இந்தோ-ஆரியப் பண்பாடு உள்ளடக்கிய வேதகால நாகரிகம் தொடங்கி இன்றுவரை உள்ளிட்டகாலம் அடங்கும். மேலும் பல கலாச்சாரங்களின் சாரமாகவும் பண்பாடுகளை உள்வாங்கியும் பிறந்த இந்து சமயம், அதன் வளர்ச்சி குறித்தும் சிரமணா இயக்கத்தின் வளர்ச்சி, சிரவுத்தா பலிகளின் வீழ்ச்சி, சைனம், பௌத்தம், சைவம், வைணவம் மற்றும் சக்தி வழிபாடு இவைகளின் வளர்ச்சி, தாக்கம், மேலும் இப்பகுதியில் இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த அரச பரம்பரை, பேரரசுகளின் தோற்றம், தாக்கம், இடைகாலத்தில் தோன்றிய இந்து மற்றும் முகலாய அரச பரம்பரைகள் குறித்த தகவல்கள், பிற்காலத்தில் வந்த ஐரோப்பிய வணிகர்கள், அதன் தொடர்ச்சியாக அமைந்த ஆங்கிலேய அரசு, அதன் தொடர்ச்சியாக எழுந்த விடுதலை இயக்கம், அதன் பின் நாடு பிரிவினை அடைந்து இந்தியக் குடியரசு பிறந்த வரை தகவல்கள் உள்ளிட்டவை அடங்கும்.சுமார் 75,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியத் துணைக்கண்டத்தில் இன்றைய மனிதர்களின் உடற்கூறியல் வடிவத்தை ஒத்த மனிதர்களோ அல்லது 5,00,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தற்கால மனிதனின் முன்னனோடிகளோ வாழ்ந்து வந்தததற்கான் சான்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கிமு 3200 முதல் கிமு 1300 வரை இந்தியாவில் செழிப்பாக விளங்கிய சிந்துவெளி நாகரிகம்தான் தெற்கு ஆசியாவில் தோன்றிய முதல் நாகரிகம் ஆகும்.
தமிழ்நாட்டில் மதுவிலக்கு என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் மதுவிலக்கு குறித்த மாநில அரசின் கொள்கையைக் குறிப்பதாகும். தமிழ்நாட்டில் மதுவிலக்குக் கொள்கையானது வருவாயைக் கருத்திற் கொண்டு வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு விதமாக அரசுகளால் கையாளப்பட்டு வருகின்றது. இந்தியா விடுதலை பெற்று முதல் 23 ஆண்டுகாலம் தமிழகத்தில் மதுவிலக்கு நடப்பில் இருந்தது.
. 24-மணி நேர ஒட்டம் (A 24-hour run) என்பது மாரத்தான் ஓட்டப்பந்தய தொலைவுக்கும் அதிகமான தொலைவைக் கடந்து ஓடும் ஓட்டமாகும். இப்போட்டியில் 24 மணி நேரத்திற்கு ஓட்டக்காரர்களால் எவ்வளவு தூரம் ஓடமுடியுமோ அவ்வளவு தூரம் ஒட முயற்சிக்கிறார்கள். குறிப்பாக இப்பந்தயம் 1 முதல் 2 மைல் நீளமுள்ள (1.6 கிலோமீட்டர் முதல் 3.2 கிலோமீட்டர்) வளையத் தடங்களில் நடத்தப்படுகிறது.
முகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்
வார்ப்புரு:முகம்மது நபி (ஸல்) அவர்கள் முகம்மது நபி (ஸல்) அவர்கள் நிகழ்த்திய அற்புதங்கள் என்பது இஸ்லாமிய நம்பிக்கையின்படி தனது வாழ்நாளில் முகம்மது நபியால் நிகழ்த்தப்பட்ட இயற்கைக்கு மீறிய நிகழ்வுகளாகும். இவற்றில் பெரும்பாலான அற்புதங்கள் குர்ஆனில் அல்லது ஹதீஸ்கள் மூலம் எடுத்து காட்டப்படுகின்றன. முகம்மது நபியின் அற்புதங்கள், உணவை அதிகரிக்க வைத்தல், மறைந்திருக்கும் நீரை வெளிப்படுத்தல், மறைவானவை குறித்த அறிவு, தீர்க்கதரிசனங்கள், மருத்துவ சிகிச்சைமுறைகள், இயற்கை நிகழ்வுகள் மீதான ஆற்றல் எனப் பரந்த அளவில் அமைந்திருந்தன.வரலாற்றாசிரியர் டெனிஸ் கிரில் கூற்று படி, அல் குர்ஆன் மூலம் மட்டுமே தெளிவாக முகம்மது நபியின் அற்புதங்களை விவரிக்க முடியாது.
திருவள்ளுவர் (Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர் என்றும் அழைக்கப்படுகிறார்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான கி.மு.400க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்
வேதியியலுக்கான நோபல் பரிசு (சுவீடியம்: Nobelpriset i kemi) ரோயல் சுவீடிய அறிவியல் கழகத்தால், வேதியியலின் பல்வேறு துறைகளில் உள்ள விஞ்ஞானிகளுக்கு வருடாவருடம் வழங்கப்படுகிறது. இது 1896ல் இறந்த அல்பிரட் நோபலின் 1895 உயிலின் மூலம் உருவாக்கப்பட்ட ஐந்து நோபல் பரிசுகளில் ஒன்றாகும். இப்பரிசுகள் வேதியியல், இயற்பியல், இலக்கியம், சமாதானம் மற்றும் மருத்துவத் துறைகளில் வழங்கப்படுகின்றன.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என்பது வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள கோயில் நகரமான மதுரையின் மத்தியில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன். இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர்.
பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவும் உண்டு. அறம், பொருள், இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்களில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன. உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற பிரிவின் கீழ் வருவன.
திரௌபதி (சமசுகிருதம்: कृष्णा द्रौपदी) (ஆங்கிலம்: Draupadi) மகாபாரதம் எனும் காவியத்தில் திரெளபதி, யாக அக்னியில் பிறந்தவள் என்பதால் யாகசேனி என்றும் கரிய நிறத்தவர் என்பதால் கிருஷ்ணை என்றும் பாஞ்சால நாட்டு இளவரசி என்பதால் பாஞ்சாலி என்றும் அழைக்கப்பட்டார். திரெளபதி, பாஞ்சால நாட்டு அரசர் துருபதன் செய்த யாக அக்னியில் தோன்றியவர். இவருடன் திருட்டத்துயும்னன் எனும் சகோதரனும் யாகத்தீயில் தோன்றினார்.
பாண்டவர் எனப்படுவர்கள் மகாபாரதத்தில் வரும் மன்னன் பாண்டுவின் ஐந்து மகன்கள் ஆவார்கள். இவர்களுள் முதல் மூவரான தர்மன், பீமன் மற்றும் அர்ஜூனன் ஆகியோர் குந்தி மூலமும் கடைசி இருவரான நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோர் மாத்ரி மூலமும் பிறந்தவர்கள் ஆவர். இவர்கள் ஐவர் என்பதால் பஞ்ச பாண்டவர் என்றும் அழைக்கப்படுவர்.
கர்ணன் (ஒலிப்பு ) மகாபாரத காப்பியத்தில் இடம் பெறும் மைய கதாப்பாத்திரங்களுள் ஒருவர். அவர் அங்கா நாட்டின் (தற்போதைய பாகல்பூர் மற்றும் முங்கர்) அரசராக இருந்தார். அர்சுனனை போரில் வீழ்த்தக்கூடிய வல்லமை பெற்ற ஒரே வீரராக நம்பப்படும் கர்ணன், ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் பீஷ்மரினால் மகாபாரதத்தின் மிகச்சிறந்த போர்வீரராகக் கருதப்பட்டார்.
வன்னியர் (Vanniyar) அல்லது வன்னிய குல சத்திரியர் (Vanniya Kula Kshatriya's) எனப்படுவோர் தமிழகத்தில் குறிப்பாக வடதமிழகத்தில் (காவேரி ஆற்றின் வடக்கு பகுதிகளில்) அடர்த்தியாகவும், மற்ற பகுதிகளில் குறிப்பிட்ட அளவிலும் வாழுகின்ற ஒரு மிகப்பெரிய தமிழ் சாதியினர் ஆவர். இவர்கள் புதுச்சேரி, தெற்கு கருநாடகம் மற்றும் தெற்கு ஆந்திரா போன்ற பகுதிகளிலும் வாழ்கின்றனர். இவர்கள் தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு பட்டியலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ளனர்.
முகம்மது இப்னு மூசா அல்-குவாரிஸ்மி
முகம்மது இப்னு மூசா அல்-குவாரிஸ்மி (Muhammad ibn Mūsā al-Khwārizmī,அரபு:عَبْدَالله مُحَمَّد بِن مُوسَى اَلْخْوَارِزْمِي) ஒரு பாரசீகக் கணிதவியலாளரும், வானியலாளரும், புவியியலாளரும் ஆவார். அப்பாசிய கலீபக காலப்பகுதியில், பக்தாத் நகரில் அமைந்திருந்த அறிவு வீட்டின் (Arabic: بيت الحكمة; Bayt al-Hikma) அங்கத்தவர் ஒருவராகவும் இருந்தார்.இவர் கி.பி. 780 ஆம் ஆண்டளவில் உஸ்பெக்கிஸ்தானில் உள்ள, தற்காலத்தில் கீவா என அழைக்கப்படுவதும், அக்காலத்தில் குவாரிசும்(Khwārizm) என்று அழைக்கப்பட்ட இடத்தில் பிறந்தார்..
தமிழ் ராக்கர்ஸ், தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களை சட்டத்திற்குப் புறம்பாக இணையத்தில் பகிரும், ஒரு இணையத்தளம் ஆகும். இது பிட்டொரென்ட் வகையை சேர்ந்ததாகும். இது தனக்கென ஒரு சேவர் ஒன்றை வைத்துகொள்ளாமல், பயனர்களின் கணணிகளை சேவர் (Peer to Peer) ஆக மாற்றி பயன்படுத்தும்.
சதுரங்க விதிமுறைகள் ( Rules of chess ) என்பது சதுரங்கத்தின் சட்டங்கள் (Laws of chess ) ஆக அறியப்படுகின்றன. இவ்விதிமுறைகள் அல்லது சட்டங்கள் சதுரங்க (செஸ்) விளையாட்டினை விளையாடுவதற்காக வகுக்கப்பட்ட விதிமுறைகள் ஆகும். இவ்விதிமுறைகளின் மூலங்கள் துல்லியமாகத் தெரியாவிடினும், நவீன விதிமுறைகள் 16 ஆம் நூற்றாண்டில் முற்பகுதியில் இத்தாலியில் அமைக்கப்பட்டன.
கௌதம புத்தரை அடிப்படையாகக்கொண்டு பௌத்த சமயம் உருவாக்கப்பட்டது. இவர் கி.மு 563க்கும் கி.மு 483க்கும் இடையில் வாழ்ந்தவர். கௌதமபுத்தர் கிறித்து பிறப்பதற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பே வாழ்ந்திருக்கலாம் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்தக்கூடிய, ஒரு பழமையான பௌத்த வழிபாட்டுத் தலத்தை தாம் கண்டறிந்துள்ளதாக நேபாளத்தில் உள்ள அகழ்வாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது.