The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021
தமிழ்நாட்டின் பதினாறாவது சட்டமன்றத் தேர்தல், 2021 ஏப்ரல் 06 இல் கேரளா, மேற்கு வங்காளம், அசாம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படுகிறது. இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் சட்டமன்றத்துக்கான 234 தொகுதிகளுக்கு தேர்தல்கள் நடைபெறும். 15-வது சட்டமன்றத்துக்கான பதவிக்காலம் 2021 மே 24 இல் முடிவடைகிறது.
மம்தா பானர்ஜி (வங்காள: মমতা বন্দ্যোপাধ্যায়) (பிறப்பு 5 சனவரி 1955) இந்திய மாநிலம் மேற்கு வங்காளத்தின் தற்போதைய முதலமைச்சரும் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு என்ற அரசியல் கட்சியின் நிறுவனரும் முதன்மை நிர்வாகியும் ஆவார். இவர் தீதி (வங்காளத்தில் அக்கா என பொருள்படும்) என்று மக்களால் விளிக்கப்படுகிறார். விவசாயிகள் மற்றும் தொழிலாளிகளின் நலன் கருதி சி.பொ.மண்டலத்திற்கும் மேற்கு வங்கத்தின் தொழில்முனைப்படுத்தலுக்குமான இவரது எதிர்ப்பு நன்கு அறியப்பட்டது.
கொடைக்கானல் ஏரி (Kodaikanal Lake), தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலையில், கொடைக்கானல் நகரத்தின் மையத்தில் 24 ஹெக்டரில் அமைந்த செயற்கை ஏரியாகும். 1863இல் மதுரை மாவட்ட ஆட்சியாளராக இருந்த ஆங்கிலேயேர் சர் ஹென்றி லெவிங்கெ என்பவர் கொடைக்கானல் ஏரி நிறுவ காரணமானவர்.கொடைக்கானல் ஏரி படகு சவாரி செல்ல விரும்பும் சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடிய இடமாகும். மிதிவண்டிப் பயிற்சியாளர்கள் மற்றும் குதிரை ஏற்றப் பயிற்சியாளர்களுக்கு கொடைக்கானல் ஏரியின் சுற்றுச்சாலைகள் சிறப்பிடமாக உள்ளது.
சேஷ்நாக் ஏரி (Sheshnag Lake) (சமசுகிருதம்: शेषनाग झील) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக் மாவட்டத்தில் இமயமலையில் அமைந்த நன்னீர் ஏரியாகும். இந்த ஏரி இமயமலையின் அடிவார நகரமான பகல்காமிலிருந்து 23 கிலோ மீட்டர் தொலைவில் அமர்நாத் செல்லும் வழியில் இமயமலையில் 3,590 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. சேஷ்நாக் ஏரி 1.1 கிலோ மீட்டர் நீளம், 0.07 கிலோ மீட்டர் அகலம் கொண்டது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016
பதினைந்தாவது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் (Legislative Assembly election) 2016 மே 16 இல் இடம்பெற்றது. 234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாடு, சட்டமன்றத்திற்கு இடம்பெற்ற இத்தேர்தலில் ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடர் வெற்றி பெற்றது.
தமிழ்நாடு சட்டப் பேரவை (Tamil Nadu Legislative Assembly) என்பது இந்தியாவின் 28 மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் அரசியல் திட்டம் சார்ந்த சட்டங்களை இயற்றும் அவையாகும். இது தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ளது. இதன் தோற்றம் மற்றும் வரலாற்றைப் பார்க்கும் பொழுது இது 18ம் நூற்றாண்டில் தமிழ்நாடு சென்னை மாகாணமாக இருந்த பொழுதிலிருந்தே இப்பேரவை செயல்பட்டுக் கொண்டிருந்தது.
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், அதன் முழுமையான நிலையில், தமிழ் நாட்டின் 1920 முதலான வரலாற்றில் இருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.தமிழக முதல்வர் அல்லது தமிழ்நாடு முதலமைச்சர், இந்தியாவின் தமிழ்நாடு மாநில அமைச்சரவையின் தலைமை அமைச்சர் ஆவார். இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பெறும் ஒவ்வொரு பொது தேர்தலுக்கு பின்போ அல்லது சட்டமன்றத்தில் பெரும்பான்மை கைமாறும்போதோ பதவியிலிருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மை ஆதரவை கொண்ட சட்டமன்ற உறுப்பினர், அல்லது சட்டமன்ற உறுப்பினராகும் தகுதி கொண்ட ஒருவர் தமிழத்தின் ஆளுநரால் தமிழகத்தின் முதல்வராக நியமிக்கப்படுவார். முதல்வரானவர் சட்டமன்றத்தின் நம்பிக்கையை இழக்கும் போது அல்லது அவரின் சட்டமன்றம் கலைக்கப்படும் போது பதவி இழப்பார்.
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல்
தமிழ்நாட்டின் பதினாறாவது சட்டமன்றத் தேர்தல், 2021 ஏப்ரல் 06 இல் கேரளா மேற்கு வங்காளம், அசாம், புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படுகிறது. இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் சட்டமன்றத்துக்கான 234 தொகுதிகளுக்கு தேர்தல்கள் நடைபெறும். அதில் முக்கியமான கட்சிகளின் வேட்பாளர் பெயர்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 2021
புதுச்சேரி ஒன்றியத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் 2021 ஏப்ரல் 6 ஆம் நாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி ஒன்றிய பகுதியின் சட்டப்பேரவைக்கு நான்கு மாநிலங்களுடன் இணைந்து தேர்தல் நடைபெறுமென தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனுடன் கேரளா மேற்கு வங்காளம் தமிழ்நாடு அசாம் ஆகிய சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்
தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம், பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெறும் வகையில், இந்திய அரசு, பட்டியல் சமூகத்தினருக்கு 44 சட்டமன்ற தொகுதிகளையும்; பட்டியல் பழங்குடி மக்களுக்கு 2 சட்டமன்ற தொகுதிகளையும் தனித்தொகுதிகளாக அறிவித்துள்ளது.
கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி
கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி (Coimbatore Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 20வது தொகுதி ஆகும்.
வரலாறு (History) (கிரேக்கம்: ἱστορία, historia பொருள்: "ஆய்வு மூலம் பெறப்பட்ட அறிவு") என்பது இறந்த காலத்தைப் பற்றி படிக்கின்ற ஒரு பாடப்பிரிவு என எழுதப்பட்ட ஆவணங்களில் விவரிக்கப்பட்டுள்ளது . எழுதப்பட்ட பதிவுகளுக்கு முன்பாக நிகழ்ந்தவை அமைத்தும் வரலாற்றுக்கு முந்தைய நிகழ்வுகள் எனக் கருதப்படுகின்றன. இத்தலைப்பின்கீழ் கடந்த கால நிகழ்வுகள், நினைவுகள், கண்டுபிடிப்புகள், சேகரிப்புகள், அமைப்புகள், அன்பளிப்புகள், நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் ஆகியவை அனைத்தும் இடம்பெறுகின்றன.
பூம்புகார் (சட்டமன்றத் தொகுதி)
பூம்புகார், மயிலாடுதுறை மாவட்டத்தின் மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.
தமிழர் அழகியலில் அணிகலங்களுக்கு அல்லது நகைகளுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. பண்டைய காலம்தொட்டு நகைகளை ஆக்குவதும் அணிவதும் தமிழர் பண்பாட்டில் ஒரு முக்கிய அம்சம். பொன்னாலும் நவமணிகளாலும் (வைரம், மரகதம், மாணிக்கம், புட்பராகம், வைடூரியம், நீலம், கோமெதகம், முத்து, பவளம்) ஆன அணிகலன்களே தமிழருள் மதிப்பு பெற்றவை.
கொடைக்கானல்,(ஆங்கில மொழி: Kodaikanal), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் வட்டம் மற்றும் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். இது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. இதனால் இங்கு குளுமையான தட்ப வெட்பம் நிலவுகிறது.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
எல். முருகன் (L. Murugan, பிறப்பு: 29 மே, 1977) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவரும் ஆவார். இவர் தமிழக பாஜக தலைவராக, தேசியத் தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டாவால் 11 மார்ச், 2020 அன்று நியமிக்கப்பட்டார்.இவருக்கு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளும் நன்றாகத் தெரியும்.
காதோலை கருகமணி அந்தக் காலத்தில் சுவாசினிகள் இன்றுபோல திருமாங்கல்யம் அணியும் முறை கிடையாது. சுமங்கலிப் பெண்கள் அணிவது கருகமணியும், பனை ஓலையால் ஆன காதணியும் தான். இன்றும் இல்லங்களில் வர-மகாலட்சுமி அம்மனை அலங்காரம் செய்கையில், இந்தக் காதோலை-கருகமணி (வெளிர்சிவப்பு நிறத்தில் சுருட்டப்பட்ட பனை ஓலை ஒரு கருப்பு நிற சிறு வளையத்துள் நுழைத்தது) சார்த்தப்படுகிறது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (All India Anna Dravida Munnetra Kazhagam, அ.இ.அ.தி.மு.க. அல்லது அனைத்து இந்திய அண்ணா தி.மு.க.) என்பது தென்னிந்தியாவின், தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் செயல்படும் ஒரு முக்கிய அரசியல் கட்சியாகும். இது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முக்கிய அரசியல் கட்சியாகவும் இந்தியப் பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாகவும் விளங்குகிறது.
கன்னியாகுமரி (சட்டமன்றத் தொகுதி)
கன்னியாகுமரி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.
உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin) என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளரும், அரசியல்வாதியும் மற்றும் திமுக இளைஞர் அணி செயலாளரும் ஆவர். இவர் இரெட் செயன்டு மூவிசு திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ளார்.உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான மு. கருணாநிதியின் பேரனும் மு.
2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், முடிவுகள்
2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் குறித்தான விரிவான தகவல்கள், இக்கட்டுரையில் பட்டியலிடப்பட்டுள்ளன.
அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு (வங்காள: সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். தொடக்கத்தில் இது மேற்கு வங்காள திரிணாமுல் காங்கிரசு என அழைக்கப்பட்டது. 1997 ல் தொடங்கப்பட்ட இதன் தலைவராக மம்தா பானர்ஜி உள்ளார்.
தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2021
2021 மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல்கள் (2021 Legislative Assembly elections), 27 மார்ச் 2021 முதல் 29 ஏப்ரல் 2021 முடிய எட்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை 2 மே 2021 அன்று நடைபெறுகிறது. கேரளா அசாம் தமிழ்நாடு புதுச்சேரி ஆகிய சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
பாட்டாளி மக்கள் கட்சி (Pattali Makkal Katchi, பா.ம.க) தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். இக்கட்சியை 1989களில், மருத்துவர் ராமதாஸ் தொடங்கினார். வன்னியர் சமூக மக்களின் முன்னேற்றத்திற்காக தொடங்கப்பட்ட வன்னியர் சங்கமானது, பின்னாளில் பாட்டாளி மக்கள் கட்சி என்னும் அரசியல் கட்சியாக மாறியது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011
தமிழ்நாட்டின் பதினான்காவது சட்டமன்றத் தேர்தல் 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று நடைபெற்றது. ஐந்தாண்டுகளாக ஆட்சியில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி தோல்வியடைந்தது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஜெ.
மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2016
மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2016 ஆறு கட்டமாக நடந்தது. மொத்தம் உள்ள 295 தொகுதிகளில் 294 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. ..
திருவொற்றியூர் (சட்டமன்றத் தொகுதி)
திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 10. இது வட சென்னை மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது.
2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்
2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் பெயர்கள், அவர்களது கட்சி, சின்னம் மற்றும் பெற்ற வாக்குகள் பற்றிய விரிவான தகவல்கள்:
மொடக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)
மொடக்குறிச்சி ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இத்தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 13 ஆயிரத்து 952 மற்றும் பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 23 ஆயிரத்து 493 பேர் உள்ளனர். இதர வாக்காளர்கள் 12 பேர் என மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 457 வாக்காளர்கள் உள்ளனர்.
கமல்ஹாசன் (Kamal Haasan, பிறப்பு:07 நவம்பர் 1954) ஒரு புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகரும் மற்றும் அரசியல்வாதியும் ஆவார். இவர் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். இவரின் மாறுபட்ட வேடங்களைக் கொண்ட நடிப்பிற்காக பரவலாக அறியப்படுகிறார்.கமல்ஹாசன் சிறந்த குழந்தை நட்சத்திரம் மற்றும் சிறந்த நடிகர் என்ற முறையில் 4 தேசிய விருதுகளும், சிறந்த படம் என்ற முறையில் தயாரிப்பாளராக 1 தேசிய விருதும், 10 தமிழக அரசு திரைப்பட விருதுகள்கள், 4 ஆந்திர அரசின் நந்தி விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள் உள்ளடங்கலாக பல இந்திய விருதுகளை வென்றுள்ளார், இவர் சிறந்த பிறமொழிப்படத்திற்கான, அகாதமி விருதிற்கு இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களில் அதிகமானவற்றிலும் நடித்திருந்தார்.
கோவில்பட்டி (சட்டமன்றத் தொகுதி)
கோவில்பட்டி, தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.
திருப்பத்தூர், சிவகங்கை (சட்டமன்றத் தொகுதி)
திருப்பத்தூர், சிவகங்கை மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இத்தொகுதியில் முத்தரையர்,முக்குலத்தோர், யாதவர், பிள்ளைமார் மற்றும் பட்டியல் சமூக மக்கள் பரவலாக உள்ளனர்.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
கோயம்புத்தூர் தெற்கு (சட்டமன்றத் தொகுதி)
கோயம்புத்தூர் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தொகுதியாகும். இந்த சட்டமன்றத் தொகுதியானது கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியிலும் அடங்குகிறது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (Dalit Panthers or Viduthalai Siruthikal katchi) தமிழ்நாட்டு மாநில அரசியல் கட்சி ஆகும். இது 1970களில் மகாராட்டிர மாநிலத்தில் ஆரம்பிக்கப்பட்ட தலித்து சிறுத்தைகள் கட்சி தமிழ்நாட்டிலும் தலித்து சிறுத்தைகள் இயக்கம் என்ற பெயரிலேயே மலைச்சாமி என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. மலைச்சாமி செப்டம்பர் 1989 தான் இறக்கும் வரை இதன் மாநிலத்தலைவராக இருந்தார்.
1900களில் இருந்தே முக்கிய சமூக நிகழ்வுகள் தமிழகத்தில் நடந்தாலும் தமிழக அரசியல் களம் 1940களில் சூடு பிடித்தது. இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள், திராவிடக் கொள்கைகள், பகுத்தறிவுக் கொள்கைகள், வாரிசு அரசியல், வன்முறை அரசியல் போன்ற கூறுகளுக்குத் தமிழக அரசியல் பிரசித்தி பெற்றது. பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் திராவிட, பொதுவுடமை, சோசலிசக் கொள்கைகள் கொண்டவையாக விளங்குகின்றன.
துரைமுருகன் (Durai Murugan, பிறப்பு: சூலை 1, 1938) ஒரு தமிழக அரசியல்வாதியும், வழக்குரைஞரும் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும் ஆவார். இவர் திமுகவின் மேடைப்பேச்சாளர், இலக்கியவாதியுமாவார். தமிழகத்தின், வேலூர் மாவட்டத்திலுள்ள, காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று சட்டத்துறை அமைச்சராகத் தமிழக அமைச்சரவையில் பணியாற்றியுள்ளார்.
நன்னிலம், திருவாரூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 71 ஆயிரத்து 466 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 35 ஆயிரத்து 283 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 36 ஆயிரத்து 159 பேரும், இதர வாக்காளர்கள் 24 பேரும் உள்ளனர் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் அமைச்சர் காமராஜ் மற்றும் திமுக சார்பில் ஜோதிராமன் நிறுத்தப்பட்டுள்ளனர்.
போடிநாயக்கனூர் (சட்டமன்றத் தொகுதி)
போடிநாயக்கனூர், தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.
திருநெல்வேலி (சட்டமன்றத் தொகுதி)
திருநெல்வேலி, திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.
குரான் அல்லது திருக்குரான் (குர்-ஆன் அரபி: القرآن அல்-குர்-ஆன்) இசுலாமியர்களின் புனித நூல் ஆகும். இது முகம்மது நபிக்கு, ஜிப்ரயீல் என்ற வானவர் மூலமாக இறைவனால் சிறுகச் சிறுக சொல்லப்பட்ட அறிவுரைகள், சட்ட திட்டங்கள், தொன்மங்கள், செய்திகளின் தொகுப்பு என்பது இசுலாமியர்களின் நம்பிக்கை. இசுலாமிய சட்ட முறைமையான சரியத் சட்டத்தின் அடிப்படையாகவும் குரான் விளங்குகின்றது.
2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், கட்சிகள் பெற்ற வாக்குகள்
2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளன: மொத்தம் --- அதிமுக கூட்டணி = 1,76,21,896 , திமுக கூட்டணி = 1,71,75,374 , தேமுதிக கூட்டணி = 26,88,728 , பாசக கூட்டணி = 12,63,200 , பாமக = 23,00,309 , நாம் தமிழர்= 4,58,104 தேர்தல் ஆணைய பக்கத்தின் படி --- அதிமுக கூட்டணி = 1,76,17,060 ; தேமுதிக கூட்டணி = 26,18,250 ; பாமக = 23,00,309. திமுக கூட்டணி & நாம் தமிழர் கூட்டல் தேர்தல் ஆணையத்துடன் சரியாக உள்ளது.
இடதுசாரி அரசியல் (left-wing politics) என்பது கருத்தியல் நோக்கில் சமூக சமத்துவத்தை ஆதரிக்கின்ற அல்லது அதை ஏற்றுக்கொள்ளுகின்ற ஒரு அரசியல் நோக்கு அல்லது நிலைப்பாடு ஆகும். பொதுவாக இது சமூக ஏற்றத்தாழ்வுக்கும், சமூக சமத்துவமின்மைக்கும் எதிரானது. இது சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுடைய நலன்கள் கவனிக்கப்பட வேண்டும் என்றும், சமூகத்தில் காணப்படும் நியாயமல்லாத சமத்துவமின்மைகள் முற்றாக ஒழிக்கப்படவேண்டும் அல்லது குறைக்கப்பட வேண்டும் என்றும் கருதுகிறது.அரசியலில், இடது, வலது என்னும் பயன்பாடுகள் பிரெஞ்சுப் புரட்சியின்போது (1789-1799) உருவாயின.
முகம்மது நபி அல்லது முகம்மது (Muḥammad, அரபு மொழி: محمد, பிறப்பு கிபி 570, இறப்பு 8 சூன் கிபி 632 கணிப்பு), அராபியப் பெயர்: அபூ அல்-காசிம் முகம்மது இப்னு அப்தல்லா இப்னு அப்தல்-முத்தலிப் இப்னு ஹாசிம் (Abū al-Qāsim Muḥammad ibn ʿAbd Allāh ibn ʿAbd al-Muṭṭalib ibn Hāshim, ابو القاسم محمد ابن عبد الله ابن عبد المطلب ابن هاشم) என்பவர் மக்கா நகரைச் சேர்ந்தவர். அராபியத் தீபகற்பம் முழுமையையும் இசுலாம் என்ற ஒரே கொள்கைச் சமயத்தின் கீழ் கொண்டு வந்தவர். இவர் முஸ்லிம்களால் மட்டுமல்லாமல் பாபிஸ்துகள் மற்றும் பகாய் சமயத்தவர்களாலும் கடவுளின் திருத்தூதர் என்று போற்றப்படுகிறார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி மே 8, 2006 அன்று தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தல், 2006 நடைபெற்றது. இத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி மொத்த இடங்களான 234 தொகுதிகளில் 163 இடங்களில் வெற்றி பெற்றது. திமுகவிற்கு தனிப்பெரும்பான்மையை கிடைக்காததால் அதன் கூட்டணி கட்சிகள் கூட்டணியில் இருந்து ஆதரவளிக்க தொடர்ந்து திமுக அரசு மே 13-ம் தேதி மு.
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) (English : Communist Party of India (Marxist)) இந்தியாவிலுள்ள ஒரு இடதுசாரி பொதுவுடமைக் கட்சி ஆகும். இக்கட்சி கேரளம், மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் பலமான ஆதரவை பெற்றுள்ளது. இது இடது பொதுவுடைமைக் கட்சி என்றும் சி.பி.எம் என்றும் அழைக்கப்படுகிறது.
புதுக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)
புதுக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
கிணத்துக்கடவு (சட்டமன்றத் தொகுதி)
கிணத்துக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். கிணத்துக்கடவு தொகுதி கிணத்துக்கடவு நகரத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது. இது மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும் கேரள எல்லைப் பகுதியில் அமைந்திருப்பதால் பாலக்காடு கணவாய் வழியே வீசும் குளிர்ந்த காற்றுடன் கூடிய காலநிலையை கொண்ட தொகுதியாகும்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001
தமிழ்நாட்டின் பன்னிரெண்டாவது சட்டமன்றத் தேர்தல் 2001 ஆம் ஆண்டு மே மாதம் நடை பெற்றது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று, ஜெ. ஜெயலலிதா இரண்டாம் முறையாக தமிழகத்தின் முதல்வரானார்.
தமிழ்நாடு அமைச்சரவை தமிழ் நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும் செயலாட்சியர்கள். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார்.
பட்டுக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)
பட்டுக்கோட்டை தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.
அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)
அரவக்குறிச்சி கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். தமிழக சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியலில் இத்தொகுதி 151ஆம் வரிசை எண்ணுக்குரிய தொகுதி ஆகும். இத்தொகுதி அரவக்குறிச்சி வட்டம் மற்றும் கரூர் வட்டத்தின் கிராம ஊராட்சிகள் மற்றும் அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டி என 2 பேரூராட்சிகள் கொண்டது.
நாகர்கோவில் (சட்டமன்றத் தொகுதி)
நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியானது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 229 இது நாகர்கோவில் மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது.
கடையநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)
கடையநல்லூர், என்பது தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.
சட்ட மன்ற உறுப்பினர் (இந்தியா)
சட்ட மன்ற உறுப்பினர் (ச.ம.உ) (Member of Legislative Assembly = MLA) என்பவர் இந்தியாவில் ஒரு தொகுதியின் வாக்காளர்களால் சட்ட மன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட ஒரு பிரதிநிதியாவார். இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அரசியலமைப்பால் உருவாக்கப்பட்ட சட்ட மன்றங்கள் செயல்படுகின்றன. ஒவ்வொறு மாநிலத்தின் எதிர்காலம் மற்றும் மாநில நிர்வாகத்திற்கு அம்மாநிலத்தின் சட்டமன்றமே முதன்மைக் காரணியாக உள்ளன.
பூவை ஜெகன்மூர்த்தி என்றறியப்படும் ஜெகன்மூர்த்தி ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் அரக்கோணம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 2006 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜெகன்மூர்த்தி தமிழ் நாட்டில் தோன்றிய தலித் அமைப்புகளுள் ஒன்றாகவும் அரசியல் அமைப்பாகவும் திகழும் புரட்சி பாரதம் கட்சியின் தேசியத் தலைவராக உள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996
தமிழ்நாட்டின் பதினோறாவது சட்டமன்றத் தேர்தல் 1996 ஆம் ஆண்டு மே மாதம் நடை பெற்றது. திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று, மு. கருணாநிதி நான்காம் முறையாக தமிழகத்தின் முதல்வரானார்.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
பெருந்துறை (சட்டமன்றத் தொகுதி)
பெருந்துறை, ஈரோடு மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். பெருந்துறை (சட்டமன்றத் தொகுதி) சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு தி.மு.க.வை, இந்நாள்வரை தேர்வு செய்யாத, தமிழகத்தின் 4 சட்டமன்ற தொகுதிகளுள் இதுவும் ஒன்று. தி.மு.க.வை தேர்ந்தெடுக்காத தொகுதிகள்: கிள்ளியூர் (சட்டமன்றத் தொகுதி),கோவில்பட்டி (சட்டமன்றத் தொகுதி),பெருந்துறை (சட்டமன்றத் தொகுதி), விளவங்கோடு (சட்டமன்றத் தொகுதி).1951ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்டு, அதிக (14) சட்டமன்ற தேர்தல்களை சந்தித்த தொகுதிகளில் , தி.மு.க.