The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021
தமிழ்நாட்டின் பதினாறாவது சட்டமன்றத் தேர்தல், 2021 ஏப்ரல் 06 இல் கேரளா, மேற்கு வங்காளம், அசாம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுடன் சேர்த்து நடத்தப்பட்டது. இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் சட்டமன்றத்துக்கான 234 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 15-வது சட்டமன்றத்துக்கான பதவிக்காலம் 2021 மே 24 இல் முடிவடைந்தது.
மம்தா பானர்ஜி (வங்காள: মমতা বন্দ্যোপাধ্যায়) (பிறப்பு 5 சனவரி 1955) இந்திய மாநிலம் மேற்கு வங்காளத்தின் தற்போதைய முதலமைச்சரும் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு என்ற அரசியல் கட்சியின் நிறுவனரும் முதன்மை நிர்வாகியும் ஆவார். இவர் தீதி (வங்காளத்தில் அக்கா என பொருள்படும்) என்று மக்களால் விளிக்கப்படுகிறார். விவசாயிகள் மற்றும் தொழிலாளிகளின் நலன் கருதி சி.பொ.மண்டலத்திற்கும் மேற்கு வங்கத்தின் தொழில்முனைப்படுத்தலுக்குமான இவரது எதிர்ப்பு நன்கு அறியப்பட்டது.
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு அமைச்சரவை தமிழ் நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும் செயலாட்சியர்கள். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார்.
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், அதன் முழுமையான நிலையில், தமிழ் நாட்டின் 1920 முதலான வரலாற்றில் இருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.தமிழக முதல்வர் அல்லது தமிழ்நாடு முதலமைச்சர், இந்தியாவின் தமிழ்நாடு மாநில அமைச்சரவையின் தலைமை அமைச்சர் ஆவார். இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பெறும் ஒவ்வொரு பொது தேர்தலுக்கு பின்போ அல்லது சட்டமன்றத்தில் பெரும்பான்மை கைமாறும்போதோ பதவியிலிருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மை ஆதரவை கொண்ட சட்டமன்ற உறுப்பினர், அல்லது சட்டமன்ற உறுப்பினராகும் தகுதி கொண்ட ஒருவர் தமிழத்தின் ஆளுநரால் தமிழகத்தின் முதல்வராக நியமிக்கப்படுவார். முதல்வரானவர் சட்டமன்றத்தின் நம்பிக்கையை இழக்கும் போது அல்லது அவரின் சட்டமன்றம் கலைக்கப்படும் போது பதவி இழப்பார்.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016
பதினைந்தாவது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் (Legislative Assembly election) 2016 மே 16 இல் இடம்பெற்றது. 234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாடு, சட்டமன்றத்திற்கு இடம்பெற்ற இத்தேர்தலில் ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடர் வெற்றி பெற்றது.
கலித்தொகை சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது நூலாகும். பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூலான கலித்தொகையில் ஓசை இனிமையும், தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் சிறப்பான அமைப்புகளால் அமைந்த கலிப்பாவினால் பாடப்பட்ட 150 பாடல்கள் உள்ளன. அகப்பொருள் துறை பாட ஏற்ற யாப்பு வடிவங்களாக கலிப்பாவையும் பரிபாடலையும் தொல்காப்பியர் கூறுகிறார்.
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல்
தமிழ்நாட்டின் பதினாறாவது சட்டமன்றத் தேர்தல், 2021 ஏப்ரல் 06 இல் கேரளா மேற்கு வங்காளம், அசாம், புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படுகிறது. இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் சட்டமன்றத்துக்கான 234 தொகுதிகளுக்கு தேர்தல்கள் நடைபெறும். அதில் முக்கியமான கட்சிகளின் வேட்பாளர் பெயர்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்
தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம், பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெறும் வகையில், இந்திய அரசு, பட்டியல் சமூகத்தினருக்கு 44 சட்டமன்ற தொகுதிகளையும்; பட்டியல் பழங்குடி மக்களுக்கு 2 சட்டமன்ற தொகுதிகளையும் தனித்தொகுதிகளாக அறிவித்துள்ளது.
உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin) என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளரும், அரசியல்வாதியும் மற்றும் திமுக இளைஞர் அணி செயலாளரும் ஆவர். இவர் இரெட் செயன்டு மூவிசு திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ளார்.உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான மு. கருணாநிதியின் பேரனும் மு.
கும்பகோணம் (Kumbakonam) தமிழ் நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் வட்டம் மற்றும் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், சிறப்பு நிலை நகராட்சி ஆகும்.இந்த சிறப்பு நிலை நகராட்சியில் 45 வார்டுகள் அமைந்துள்ளது. தமிழக சிறப்பு நிலை நகராட்சிகளிலேயே மிகப்பெரிய நகராட்சியும் அதிக வார்டுகளை கொண்ட நகராட்சியும் இதுவே ஆகும். இந்த கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு மதுரையைச் சேர்ந்த நக்கீரர் என்னும் புலவரால் இயற்றப்பட்டதே நெடுநல்வாடை என்னும் நூல். இது சங்கத் தமிழ் இலக்கியத் தொகுப்பான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகும். நூலுள் எடுத்தாளப்பட்டுள்ள நிகழ்வுகள் வாடைக்காலத்தில் நிகழ்வதாலும், தலைவனைப் பிரிந்து வாடும் தலைவிக்கு இது நீண்ட (நெடு) வாடையாகவும், போர் வெற்றியைப் பெற்ற தலைவனுக்கு இது ஒரு நல்ல வாடையாகவும் அமைந்தது குறித்தே இது நீண்ட நல்ல வாடை என்னும் பொருளில் நெடுநல்வாடை எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர்.
தமிழ்நாடு சட்டப் பேரவை (Tamil Nadu Legislative Assembly) என்பது இந்தியாவின் 28 மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் அரசியல் திட்டம் சார்ந்த சட்டங்களை இயற்றும் அவையாகும். இது தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ளது. இதன் தோற்றம் மற்றும் வரலாற்றைப் பார்க்கும் பொழுது இது 18ம் நூற்றாண்டில் தமிழ்நாடு சென்னை மாகாணமாக இருந்த பொழுதிலிருந்தே இப்பேரவை செயல்பட்டுக் கொண்டிருந்தது.
தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
செம்மொழி (Classical language) என்பது ஒரு மொழியின் இலக்கியப்பழமை அடிப்படையிலும் பிற பண்புத்தகுதிகளின் அடிப்படையிலும் செய்யப்படும் வகைப்பாடு ஆகும். செம்மொழியாக ஒரு மொழியைத்தெரிவு செய்ய அதன் இலக்கியப் படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும், அதன் தோன்றல் ஏனைய மொழிகளில் சாராதிருத்தலும் வேண்டும்1 (ஜோர்ஜ் எல்.ஹார்ட்). உலகில் எத்தனையோ மொழிகள் பேசப்பட்டு வருகின்றன.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
பட்டினப்பாலை என்பது சங்ககாலத்துத் தமிழ் நூல் தொகுப்பான பத்துப்பாட்டில் அடங்கிய ஒரு நூல் . பெரும்பாணாற்றுப்படை என்னும் நூலைப் பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் புலவரே இதனையும் இயற்றியுள்ளார். பண்டைய சோழ நாட்டின் சிறப்பு, சோழ நாட்டின் தலைநகரான காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பு,அதன் செல்வ வளம், கரிகாலனுடைய வீரச்செயல்கள், மக்கள் வாழ்க்கை முறை ஆகியவற்றை எடுத்து இயம்பும் இப் பாடல் 301 அடிகளால் அமைந்துள்ளது.
ஐந்திணைகளும் உரிப்பொருளும் திணை ‘திணை என்பது திட் அல்லது திண் என்னும் அடியாகப் பிறந்தது, நிலப்பரப்பு என்பது இதன் பொருள்’ என்று திணை என்னும் சொல்லுக்கு விளக்கம் தருகிறார் ந.சி.கந்தையா பிள்ளை. திணை என்ற சொல் சங்கப் பாடல்களில் குடி, குடியிருப்பு, கணம் ஆகிய பொருள்களில் கையாளப்பட்டுள்ளது. இப்பொழுது ‘ஒழுக்கம்’ என்ற பொருளில் வழங்கப்பட்டு வருகிறது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (All India Anna Dravida Munnetra Kazhagam, அ.இ.அ.தி.மு.க. அல்லது அனைத்து இந்திய அண்ணா தி.மு.க.) என்பது தென்னிந்தியாவின், தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் செயல்படும் ஒரு முக்கிய அரசியல் கட்சியாகும். இது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முக்கிய அரசியல் கட்சியாகவும் இந்தியப் பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாகவும் விளங்குகிறது.
தமிழக ஆளுநர் -தமிழக ஆளுநர்களின் பட்டியல் தென்னிந்தியாவின் மாநிலமான, தமிழ்நாடு மாநிலத்தில், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பெற்ற ஆளுநர் தமிழகத்தின் அரசயலமைப்புத் தலைவராக அவரின் பிரதிநிதியாக செயல்படுபவர். இவரே மாநிலத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பவர். தமிழகத்தைப் பொறுத்தவரை ஆளுநர்கள் 1946ல் இருந்தே நியமனம் செய்யப்பட்டவர்களாகவும், தற்காலிகப் பொறுப்புகளுடனும் பதவி வகித்து வந்துள்ளனர்.
திராவிட மொழிக் குடும்பம் (dravidian language family) என்பது மரபு வழியாக இணைந்து கிட்டத்தட்ட 85 மொழிகளை உள்ளடக்கியதாகும். கிட்டத்தட்ட 217 மில்லியன் மக்கள் இம்மொழிகளைப் பேசுகின்றனர். தென்னிந்தியாவைச் சேர்ந்த முக்கிய மொழிகளான, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்பன ஒன்றுடனொன்று நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பதும், ஏனைய இந்திய மொழிகளிலிருந்து வேறுபட்டு இருப்பதும் அறியப்பட்டுள்ளது.
பாரதிதாசன் (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் 'கனகசுப்புரத்தினம்' ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்
2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் பெயர்கள், அவர்களது கட்சி, சின்னம் மற்றும் பெற்ற வாக்குகள் பற்றிய விரிவான தகவல்கள்:
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011
தமிழ்நாட்டின் பதினான்காவது சட்டமன்றத் தேர்தல் 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று நடைபெற்றது. ஐந்தாண்டுகளாக ஆட்சியில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி தோல்வியடைந்தது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஜெ.
பாட்டாளி மக்கள் கட்சி (Pattali Makkal Katchi, பா.ம.க) தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். இக்கட்சியை 1989களில், மருத்துவர் ராமதாஸ் தொடங்கினார். வன்னியர் சமூக மக்களின் முன்னேற்றத்திற்காக தொடங்கப்பட்ட வன்னியர் சங்கமானது, பின்னாளில் பாட்டாளி மக்கள் கட்சி என்னும் அரசியல் கட்சியாக மாறியது.
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 2021
புதுச்சேரி ஒன்றியத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் 2021 ஏப்ரல் 6 ஆம் நாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி ஒன்றிய பகுதியின் சட்டப்பேரவைக்கு நான்கு மாநிலங்களுடன் இணைந்து தேர்தல் நடைபெறுமென தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனுடன் கேரளா மேற்கு வங்காளம் தமிழ்நாடு அசாம் ஆகிய சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
துரைமுருகன் (Durai Murugan, பிறப்பு: சூலை 1, 1938) ஒரு தமிழக அரசியல்வாதியும், வழக்குரைஞரும் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும் ஆவார். இவர் திமுகவின் மேடைப்பேச்சாளர், இலக்கியவாதியுமாவார். தமிழகத்தின், வேலூர் மாவட்டத்திலுள்ள, காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று சட்டத்துறை அமைச்சராகத் தமிழக அமைச்சரவையில் பணியாற்றியுள்ளார்.
2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், முடிவுகள்
2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் குறித்தான விரிவான தகவல்கள், இக்கட்டுரையில் பட்டியலிடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001
தமிழ்நாட்டின் பன்னிரெண்டாவது சட்டமன்றத் தேர்தல் 2001 ஆம் ஆண்டு மே மாதம் நடை பெற்றது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று, ஜெ. ஜெயலலிதா இரண்டாம் முறையாக தமிழகத்தின் முதல்வரானார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (Dalit Panthers or Viduthalai Siruthikal katchi) தமிழ்நாட்டு மாநில அரசியல் கட்சி ஆகும். இது 1970களில் மகாராட்டிர மாநிலத்தில் ஆரம்பிக்கப்பட்ட தலித்து சிறுத்தைகள் கட்சி தமிழ்நாட்டிலும் தலித்து சிறுத்தைகள் இயக்கம் என்ற பெயரிலேயே மலைச்சாமி என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. மலைச்சாமி செப்டம்பர் 1989 தான் இறக்கும் வரை இதன் மாநிலத்தலைவராக இருந்தார்.
இந்திய தேசிய காங்கிரஸ் (ஆங்கில மொழி: Indian National Congress) ('காங்கிரஸ் கட்சி அல்லது காங்கிரஸ் (I) என்றும் அழைக்கப்படுகிறது, சுருக்கமாக ') இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். 1885ல் தொடங்கப்பட்ட இக்கட்சி, இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றது. இக்கட்சியின் அமைப்புகளில் 15 மில்லியன் இந்திய மக்களும், ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து நாடு முழுவதும் நடந்த போராட்டங்களில் 70 மில்லியன் மக்களும் பங்கெடுத்தனர்.
பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவும் உண்டு. அறம், பொருள், இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்களில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன. உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற பிரிவின் கீழ் வருவன.
சேஷ்நாக் ஏரி (Sheshnag Lake) (சமசுகிருதம்: शेषनाग झील) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக் மாவட்டத்தில் இமயமலையில் அமைந்த நன்னீர் ஏரியாகும். இந்த ஏரி இமயமலையின் அடிவார நகரமான பகல்காமிலிருந்து 23 கிலோ மீட்டர் தொலைவில் அமர்நாத் செல்லும் வழியில் இமயமலையில் 3,590 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. சேஷ்நாக் ஏரி 1.1 கிலோ மீட்டர் நீளம், 0.07 கிலோ மீட்டர் அகலம் கொண்டது.
மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2021
2021 மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல்கள் (2021 Legislative Assembly elections), 27 மார்ச் 2021 முதல் 29 ஏப்ரல் 2021 முடிய எட்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை 2 மே 2021 அன்று நடைபெறுகிறது. கேரளா அசாம் தமிழ்நாடு புதுச்சேரி ஆகிய சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
கல்வி (Education) என்பதுக் குழந்தைகளை, உடல் மற்றும் மன வளர்ச்சியில் அறிவு, நல்லொழுக்கம் ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும். கல்வியாளர்கள் கூற்றின்படி, இளை முறையாக வழி நடத்துவதிலும், சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்வி என்பது ஒரு சமூக நிறுவனம்.
திருவள்ளுவர் (Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர் என்றும் அழைக்கப்படுகிறார்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான கி.மு.400க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பழமொழி நானூறு அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்ட நீதிநூலாகும். சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான இது முன்றுறையர் அல்லது முன்றுறை அரையனார் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்டது. இதன் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் ஒரு பழமொழி சார்ந்த நீதி கூறப்படுவதால் பழமொழி நானூறு என்ற பெயர் பெற்றுள்ளது.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபாசாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி மே 8, 2006 அன்று தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தல், 2006 நடைபெற்றது. இத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி மொத்த இடங்களான 234 தொகுதிகளில் 163 இடங்களில் வெற்றி பெற்றது. திமுகவிற்கு தனிப்பெரும்பான்மையை கிடைக்காததால் அதன் கூட்டணி கட்சிகள் கூட்டணியில் இருந்து ஆதரவளிக்க தொடர்ந்து திமுக அரசு மே 13-ம் தேதி மு.
எல். முருகன் (L. Murugan, பிறப்பு: 29 மே, 1977) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவரும் ஆவார். இவர் தமிழக பாஜக தலைவராக, தேசியத் தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டாவால் 11 மார்ச், 2020 அன்று நியமிக்கப்பட்டார்.இவருக்கு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளும் நன்றாகத் தெரியும்.
உள் நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம், 1973
மிசா (MISA) என்று பரவலாக அறியப்பட்ட உள் நாட்டுப் பாதுகாப்பு பராமரிப்புச் சட்டம் (Maintainence of Internal Security Act) இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்காக பலத்த சர்ச்சைக்கிடையே ஏற்படுத்தப்பட்ட இச்சட்டம் 1971 ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தியின் ஆளுமையின் பொழுது கொண்டு வரப்பட்டச் சட்டமாகும்.இந்தியச் சட்ட செயலாக்கப் பிரிவினருக்கு அதிக அதிகாரங்களை கொடுக்கும் விதமாக, அதன்மூலம் நிச்சயமற்ற குற்றக்காரணங்கள் ஏதுமின்றி எந்தவொரு தனிநபரையும் கைது செய்யமுடியும், அவரின் செயல்பாடுகளை முடக்க முடியும், அவரின் உடைமைகளை பிடிஆணை இல்லாமல் பறிமுதல் செய்யவும் இச்சட்டம் வழிவகை செய்கின்றது. இச்சட்டம் மனித உரிமைகளை நசுக்குவதற்காகவும், அரசியல் பழி வாங்கும் செயலுக்காகவுமே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது. இதனால் ஆளுமையில் உள்ளவர்கள் அரசியல் களத்தில் தங்களது அணிக்கு எதிரணியால் ஏற்படும் போட்டியினை சமாளிக்கவேப் பயன்படுத்தினர்.
கொடைக்கானல் ஏரி (Kodaikanal Lake), தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலையில், கொடைக்கானல் நகரத்தின் மையத்தில் 24 ஹெக்டரில் அமைந்த செயற்கை ஏரியாகும். 1863இல் மதுரை மாவட்ட ஆட்சியாளராக இருந்த ஆங்கிலேயேர் சர் ஹென்றி லெவிங்கெ என்பவர் கொடைக்கானல் ஏரி நிறுவ காரணமானவர்.கொடைக்கானல் ஏரி படகு சவாரி செல்ல விரும்பும் சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடிய இடமாகும். மிதிவண்டிப் பயிற்சியாளர்கள் மற்றும் குதிரை ஏற்றப் பயிற்சியாளர்களுக்கு கொடைக்கானல் ஏரியின் சுற்றுச்சாலைகள் சிறப்பிடமாக உள்ளது.
அப்பர் திருநாவுக்கரசு நாயனார் கி.பி. ஏழாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், தமிழ் நாட்டில் [[பக்தி இயக்கம்|பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவரும், சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் ஆவார். இவரை, தேவார மூவருள் இரண்டாமவர் என்றும், இறைவனிடம் பக்தி செலுத்துதலில், தொண்டை அடிப்படையாகக் கொண்டவர் என்றும் புகழ்கின்றனர்.இவரை, திருஞானசம்பந்தர், 'அப்பர்' (தந்தை) என்று அழைத்தமையால்,.
எ .வ .வேலு (E. V. Velu, பிறப்பு: மார்ச் 15, 1951) ஓர் தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழக உணவுத் துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். திராவிடக் கொள்கையில் பற்றுக் கொண்ட இவர், திருவண்ணாமலையில் அருணை பொறியியல் மற்றும் கலைக் கல்லூரியை நடத்தி வருகிறார். இவர் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள, குடலூர் கிராமத்தில் பிறந்தார்.
கண்ணதாசன் (ஒலிப்பு ) (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.