The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
அன்பில் மகேஷ் பொய்யாமொழி (Anbil Mahesh Poyyamozhi) ஒரு இந்திய அரசியல்வாதியும் மற்றும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 2016 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் மறைந்த முன்னாள் அமைச்சருமான அன்பில் பி. தர்மலிங்கத்தின் பேரனும், அன்பில் பொய்யாமொழியின் மகன் ஆவார்.
தமிழ்நாடு அமைச்சரவை தமிழ் நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும் செயலாட்சியர்கள். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார்.
செம்மொழி (Classical language) என்பது ஒரு மொழியின் இலக்கியப்பழமை அடிப்படையிலும் பிற பண்புத்தகுதிகளின் அடிப்படையிலும் செய்யப்படும் வகைப்பாடு ஆகும். செம்மொழியாக ஒரு மொழியைத்தெரிவு செய்ய அதன் இலக்கியப் படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும், அதன் தோன்றல் ஏனைய மொழிகளில் சாராதிருத்தலும் வேண்டும்1 (ஜோர்ஜ் எல்.ஹார்ட்). உலகில் எத்தனையோ மொழிகள் பேசப்பட்டு வருகின்றன.
மா. சுப்பிரமணியம் (அரசியல்வாதி)
மா. சுப்ரமணியம் (M. Subramaniam) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாணர். திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கட்சி உறுப்பினரான இவர் 2006-2011 காலகட்டத்தில் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் மாநகர மேயராக இருந்தார்.
வைணவ சமயத்தின் முதன்மைத் தெய்வமாகிய திருமாலைப் போற்றித் தமிழ்ச் செய்யுட்களால் பாடியவர்கள் ஆழ்வார்கள் ஆவர். தென்மொழியாம் தமிழ் மொழியில் வைணவ இலக்கியங்களை வளர்த்தவர்கள் பரம்பரையில், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (அல்லது) ஆழ்வார் அருளிச்செயல் என்னும் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள பாடல்களைப் பாடிய ஆழ்வார்கள் 12 பேர். அவர்களுள், இறைவனை இறைவனாகக் காணாது, இறைவனோடு உறவுமுறையில் வாழ்ந்ததால் ஆண்டாளையும், இறைவனைப் பாடாது ஆசானைப் பாடினார் என்பதால் மதுரகவியாழ்வாரையும் வேறு வரிசையில் தொகுத்து, ஆழ்வார்கள் பதின்மர் 10 பேர் மட்டுமே எனக் காட்டுவாரும் உண்டு.
எ .வ .வேலு (E. V. Velu, பிறப்பு: மார்ச் 15, 1951) ஓர் தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழக உணவுத் துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். திராவிடக் கொள்கையில் பற்றுக் கொண்ட இவர், திருவண்ணாமலையில் அருணை பொறியியல் மற்றும் கலைக் கல்லூரியை நடத்தி வருகிறார். இவர் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள, குடலூர் கிராமத்தில் பிறந்தார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021
தமிழ்நாட்டின் பதினாறாவது சட்டமன்றத் தேர்தல் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்ய 2021 ஏப்ரல் 6 இல் நடைபெற்றது. இத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) அறுதிப் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைவர் மு.
மதுரகவி ஆழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். பாண்டிய நாட்டில் திருக்குருகூர் என்னும் ஆழ்வார்திருநகரிக் கருகிலுள்ள திருக்கோளூரில் ஈச்வர வருசம் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தார். நம்மாழ்வார் பிறந்த கி.பி 798க்குச் சற்று முன் பிறந்தவர்.
திராவிட மொழிக் குடும்பம் (dravidian language family) என்பது மரபு வழியாக இணைந்து கிட்டத்தட்ட 85 மொழிகளை உள்ளடக்கியதாகும். கிட்டத்தட்ட 217 மில்லியன் மக்கள் இம்மொழிகளைப் பேசுகின்றனர். தென்னிந்தியாவைச் சேர்ந்த முக்கிய மொழிகளான, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்பன ஒன்றுடனொன்று நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பதும், ஏனைய இந்திய மொழிகளிலிருந்து வேறுபட்டு இருப்பதும் அறியப்பட்டுள்ளது.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
அன்னை தெரேசா (Mother Teresa, ஆகத்து 26, 1910 - செப்டம்பர் 5, 1997), அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவரும் இந்தியக் குடியுரிமை பெற்ற உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியும் ஆவார். இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும். 1950 ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார்.
இடிச்சப்புளி செல்வராசு அல்லது இடிச்சப்புளி செல்வராஜ் (இறப்பு: சனவரி 30, 2012, அகவை: 72) தமிழ் திரைப்பட உலகில் நகைச்சுவை நடிகராக நூற்றுக்கும் கூடுதலான திரைப்படங்களில் நடித்தவர். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், கமலஹாசன், ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். சின்ன வாத்தியார் என்ற திரைப்படத்தில் கவுண்டமணி, செந்திலுடன் நடித்துள்ளார்.
அனித்தா ராதாகிருஷ்ணன் தமிழக அரசியல்வாதி ஆவார். தமிழக அமைச்சரவையில் கால்நடை வளம் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். திராவிட கொள்கையில் பற்று கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளராக முக்கியப் பங்கு வகிக்கின்றார்.அனித்தா ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள தண்டுப்பத்து கிராமத்தில் 1952ஆம் ஆண்டு செப்டம்பர் 19ல் பிறந்தார்.
சுந்தரமூர்த்தி நாயனார் என்பவர் சைவசமயத்தில் போற்றப்படும் சமயக்குரவர் நால்வரில் ஒருவரும், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் ஆவார்.இவர் புத்தூரில் சடங்கவி சிவாச்சாரியாரின் மகளைத் திருமணம் செய்துகொள்ள இருந்தபோது, சிவபெருமான் கிழவனாகச் சென்று தடுத்தார். பின்பு, சுந்தரரின் பிறவி நோக்கம், 'சிவபெருமானைப் புகழ்ந்து பாடுவது' எனப் புரிய வைத்தார். இதனைத் தடுத்தாட்கொள்ளுதல் என சைவர்கள் கூறுகிறார்கள்.
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது.
இறையன்பு (இந்திய ஆட்சிப் பணியாளர்)
வெங்கடாசலம் இறையன்பு (V. Irai Anbu) என்பது இவருக்கு வீட்டில் வைத்த இயற்பெயராகும். இவர் இந்திய ஆட்சி பணி அதிகாரியாக பணி புரிகிறார். மேலும் எழுத்தாளராகவும், பத்திரிக்கையாளராகவும், கல்வியாளராகவும், நம்பிக்கை அளிக்கக் கூடிய பேச்சாளராகவும் உள்ளார்.
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், அதன் முழுமையான நிலையில், தமிழ் நாட்டின் 1920 முதலான வரலாற்றில் இருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.தமிழக முதல்வர் அல்லது தமிழ்நாடு முதலமைச்சர், இந்தியாவின் தமிழ்நாடு மாநில அமைச்சரவையின் தலைமை அமைச்சர் ஆவார். இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பெறும் ஒவ்வொரு பொது தேர்தலுக்கு பின்போ அல்லது சட்டமன்றத்தில் பெரும்பான்மை கைமாறும்போதோ பதவியிலிருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மை ஆதரவை கொண்ட சட்டமன்ற உறுப்பினர், அல்லது சட்டமன்ற உறுப்பினராகும் தகுதி கொண்ட ஒருவர் தமிழத்தின் ஆளுநரால் தமிழகத்தின் முதல்வராக நியமிக்கப்படுவார். முதல்வரானவர் சட்டமன்றத்தின் நம்பிக்கையை இழக்கும் போது அல்லது அவரின் சட்டமன்றம் கலைக்கப்படும் போது பதவி இழப்பார்.
காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை (C. N. Annadurai, 15 செப்டம்பர், 1909 – 3 பெப்ரவரி, 1969) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் ஆறாவது முதலமைச்சருமாவார். பரவலாக இவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவரும், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார்.
அப்பர் திருநாவுக்கரசு நாயனார் கி.பி. ஏழாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவரும், சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் ஆவார். இவரை, தேவார மூவருள் இரண்டாமவர் என்றும், இறைவனிடம் பக்தி செலுத்துதலில், தொண்டை அடிப்படையாகக் கொண்டவர் என்றும் புகழ்கின்றனர்.இவரை, திருஞானசம்பந்தர், 'அப்பர்' (தந்தை) என்று அழைத்தமையால்,.
பிச்சாவரம் தமிழ்நாட்டில் சிதம்பரத்துக்கு அருகே வங்கக் கடலை ஒட்டிய ஒரு பகுதி. இப்பகுதி கடலூர் மாவட்டத்தில் உள்ளது.பித்தர்புரம் என்ற பெயரே, பிச்சாவரம் என்று மருவியது.இவ்வூரில் அலையாத்திக் காடுகள் (சதுப்புநிலக்காடுகள், மாங்குரோவ் காடுகள்) மிகுந்துள்ளன. இங்குள்ள அலையாத்திக் காடே உலகின் இரண்டாவது பெரிய அலையாத்திக் காடு ஆகும்.
எஸ். ரகுபதி (பிறப்பு: 30 சூலை 1950) தமிழக அரசியல்வாதியும், முன்னாள் மத்திய மற்றும் மாநில அமைச்சரும், தற்போதைய திருமயம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் ஆவார். இவர்த 2004 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டில் தொகுதி மறுசீரமைப்பிற்கு முன்னர் இருந்த புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சிவன் (Śiva) இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர். சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர்.இவர் தனது ஒரு பகுதியிலிருந்து அன்னை பராசக்தியை உருவாக்கினாரெனவும், பின்னர் இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்டசராசரங்களை உருவாக்கினார்களென்றும், தனது உடுக்கையிலிருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார் எனவும் கருதப்படுகிறது. பின்னர் அன்னை பராசக்தி படைப்பிற்காக பிரம்மதேவரையும், அதன்பிறகு காப்பதற்காக காக்கும் கடவுளான விஷ்ணுவையும் உருவாக்கினார் என்றும் கருதப்படுகிறது.
கலித்தொகை சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது நூலாகும். பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூலான கலித்தொகையில் ஓசை இனிமையும், தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் சிறப்பான அமைப்புகளால் அமைந்த கலிப்பாவினால் பாடப்பட்ட 150 பாடல்கள் உள்ளன. அகப்பொருள் துறை பாட ஏற்ற யாப்பு வடிவங்களாக கலிப்பாவையும் பரிபாடலையும் தொல்காப்பியர் கூறுகிறார்.
பிள்ளைத்தமிழ் என்பது தமிழ் இலக்கியத்தில் வழங்கும் பிரபந்த நூல் வகைகளுள் ஒன்று. புலவர்கள் தாம் விரும்பிய தெய்வங்கள், சமயா சாரியர்கள், புலவர் பெருமக்கள், ஆதீனகர்த்தர், அரசர், உபகாரிகள், அவர் அவர்கட்கு உகந்தவர்கள், ஆகியோரைக் குழந்தையாக உருவகித்து, கற்பனை பல அமையப் பாடப்படுவது பிள்ளைத்தமிழாகும். குழந்தையாகக் கொண்டது பாவனையே ஆகும்.
பட்டினப்பாலை என்பது சங்ககாலத்துத் தமிழ் நூல் தொகுப்பான பத்துப்பாட்டில் அடங்கிய ஒரு நூல் . பெரும்பாணாற்றுப்படை என்னும் நூலைப் பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் புலவரே இதனையும் இயற்றியுள்ளார். பண்டைய சோழ நாட்டின் சிறப்பு, சோழ நாட்டின் தலைநகரான காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பு,அதன் செல்வ வளம், கரிகாலனுடைய வீரச்செயல்கள், மக்கள் வாழ்க்கை முறை ஆகியவற்றை எடுத்து இயம்பும் இப் பாடல் 301 அடிகளால் அமைந்துள்ளது.
தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
தமிழ்நாடு சட்டப் பேரவை (Tamil Nadu Legislative Assembly) என்பது இந்தியாவின் 28 மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் அரசியல் திட்டம் சார்ந்த சட்டங்களை இயற்றும் அவையாகும். இது தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ளது. இதன் தோற்றம் மற்றும் வரலாற்றைப் பார்க்கும் பொழுது இது 18ம் நூற்றாண்டில் தமிழ்நாடு சென்னை மாகாணமாக இருந்த பொழுதிலிருந்தே இப்பேரவை செயல்பட்டுக் கொண்டிருந்தது.
பழங்காலத்தில் பனையோலைகளில் எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்ட பொருள் எழுத்தாணி எனப்படுகிறது. கூருளியும் ஊசியும் எழுத்தாணி போல் பயன்படுத்தப்பட்ட செய்தியை சங்க இலக்கியங்களும் சிந்தாமணியும் குறிப்பிடுகின்றன. பழங்காலந் தொட்டே எழுதுவதற்கு எழுத்தாணி பயன்படுத்தப்பட்டாலும் எழுத்தாணி என்கிற சொல்லாட்சியை முதன் முதலாக ஏலாதி தான் குறிப்பிடுகிறது.
திருவள்ளுவர் (Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர் என்றும் அழைக்கப்படுகிறார்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான கி.மு.400க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தரங்கம்பாடி (ஆங்கிலம்:Tranquebar), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மயிலாடுதுறை மாவட்டத்தின் 8 பேரூராட்சிகளில் ஒன்றாகும். தரங்கம்பாடி வட்டத்தின் தலைமையிடமும், பேரூராட்சியுமான தரங்கம்பாடியின் கடற்கரையில் தரங்கம்பாடி மாசிலாமணிநாதர் கோயில் உள்ளது. தரங்கம்பாடியில்தான் இந்தியாவின் முதல் அச்சு இயந்திரத்தின் மூலம் பைபிள் அச்சிடப்பட்டது.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (அ) செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் (Central Institute of Classical Tamil) என்பது தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக இந்திய அரசின் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் கீழ் அமைக்கப்பட்ட மையமாகும். இந்திய அரசால் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட பின்பு, 2006 மார்ச்சு முதல் 2008 மே 18 வரை மைசூரிலுள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் என்னும் பெயரில் செயற்பட்டுவந்தது. இந்நிறுவனம் 2008 மே 19 முதல் சென்னையில் இயங்கிவருகிறது..
முகம்மது நபி அல்லது முகம்மது (Muḥammad, அரபு மொழி: محمد, பிறப்பு கிபி 570, இறப்பு 8 சூன் கிபி 632 கணிப்பு), அராபியப் பெயர்: அபூ அல்-காசிம் முகம்மது இப்னு அப்தல்லா இப்னு அப்தல்-முத்தலிப் இப்னு ஹாசிம் (Abū al-Qāsim Muḥammad ibn ʿAbd Allāh ibn ʿAbd al-Muṭṭalib ibn Hāshim, ابو القاسم محمد ابن عبد الله ابن عبد المطلب ابن هاشم) என்பவர் மக்கா நகரைச் சேர்ந்தவர். அராபியத் தீபகற்பம் முழுமையையும் இசுலாம் என்ற ஒரே கொள்கைச் சமயத்தின் கீழ் கொண்டு வந்தவர். இவர் முஸ்லிம்களால் மட்டுமல்லாமல் பாபிஸ்துகள் மற்றும் பகாய் சமயத்தவர்களாலும் கடவுளின் திருத்தூதர் என்று போற்றப்படுகிறார்.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
பாரதிதாசன் (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் 'கனகசுப்புரத்தினம்' ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin) என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளரும், அரசியல்வாதியும் மற்றும் திமுக இளைஞர் அணி செயலாளரும் ஆவர். இவர் இரெட் செயன்டு மூவிசு திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ளார்.உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான மு. கருணாநிதியின் பேரனும் மு.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (All India Anna Dravida Munnetra Kazhagam, அ.இ.அ.தி.மு.க. அல்லது அனைத்து இந்திய அண்ணா தி.மு.க.) என்பது தென்னிந்தியாவின், தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் செயல்படும் ஒரு முக்கிய அரசியல் கட்சியாகும். இது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முக்கிய அரசியல் கட்சியாகவும் இந்தியப் பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாகவும் விளங்குகிறது.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (TamilNadu Rural Development and Panchayat Raj Department) தமிழ்நாடு அரசு 1994-இல் இயற்றிய பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் படி, தமிழக அரசின் கீழ் இயங்கும் ஒரு அரசுத் துறையாகும். இத்துறை மக்களுக்கான அடிப்படை வசதிகள், சேவைகளைத் தவிர வறுமை நிவாரணத் திட்டங்கள், வேலைவாய்ப்புத் திட்டங்கள், சுகாதாரம், அரசு ஊழியர்களின் திறன் மேம்படுத்தல், பெண்களின் சமூக, பொருளாதார மேம்பாடு, சுனாமியினால் பாதிப்படைந்தவர்களுக்குப் புனர்வாழ்வு போன்ற பல சமூக நலத்திட்டங்களில் மைய அரசு மற்றும் மாநில அரசின் நிதி மற்றும் பிற வெளிநாட்டு நிறுவனங்களின் (ஆசிய வளர்ச்சி வங்கி, உலக வங்கி, ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்) ஆதரவு பெற்ற உதவித் திட்டங்களைச் செயற்படுத்தும் பொறுப்பிலுள்ளத் துறையாகும். இவை தவிரப் பல்வேறு ஊராட்சி நிறுவனங்கள் தன்னாட்சி அரசுப் பிரிவுகளாகத் திறனுடன் செயற்படுவதற்காக இத்துறையிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.