The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
இறையன்பு (இந்திய ஆட்சிப் பணியாளர்)
வெங்கடாசலம் இறையன்பு (V. Irai Anbu) என்பது இவருக்கு வீட்டில் வைத்த இயற்பெயராகும். இவர் இந்திய ஆட்சி பணி அதிகாரியாக பணி புரிகிறார். இவர் தமிழக அரசின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அமைச்சரவை தமிழ் நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும் செயலாட்சியர்கள். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார்.
அன்பில் மகேஷ் பொய்யாமொழி (Anbil Mahesh Poyyamozhi) ஒரு இந்திய அரசியல்வாதியும் மற்றும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 2016 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் மறைந்த முன்னாள் அமைச்சருமான அன்பில் பி. தர்மலிங்கத்தின் பேரனும், அன்பில் பொய்யாமொழியின் மகன் ஆவார்.
தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் என்பவர் தமிழகத்தில் தமிழக அரசின் கீழ் பணிபுரியும் ஒரு மூத்த 'இந்திய ஆட்சிப் பணி' அலுவலர் ஆவார். இவர் தமிழக அரசின் அனைத்துப் பணிகளுக்கும் பொறுப்பு ஆவார். தலைமைச்செயலாளர் என்னும் பதவி பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் சென்னை மாகாணத்தில் 1940 நவம்பர் 27ஆம் நாள் உருவாக்கப்பட்டது.
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்
தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், அதன் முழுமையான நிலையில், தமிழ் நாட்டின் 1920 முதலான வரலாற்றில் இருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.தமிழக முதல்வர் அல்லது தமிழ்நாடு முதலமைச்சர், இந்தியாவின் தமிழ்நாடு மாநில அமைச்சரவையின் தலைமை அமைச்சர் ஆவார். இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பெறும் ஒவ்வொரு பொது தேர்தலுக்கு பின்போ அல்லது சட்டமன்றத்தில் பெரும்பான்மை கைமாறும்போதோ பதவியிலிருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மை ஆதரவை கொண்ட சட்டமன்ற உறுப்பினர், அல்லது சட்டமன்ற உறுப்பினராகும் தகுதி கொண்ட ஒருவர் தமிழத்தின் ஆளுநரால் தமிழகத்தின் முதல்வராக நியமிக்கப்படுவார். முதல்வரானவர் சட்டமன்றத்தின் நம்பிக்கையை இழக்கும் போது அல்லது அவரின் சட்டமன்றம் கலைக்கப்படும் போது பதவி இழப்பார்.
உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin) என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளரும், அரசியல்வாதியும் மற்றும் திமுக இளைஞர் அணி செயலாளரும் ஆவர். இவர் இரெட் செயன்டு மூவிசு திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ளார்.உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான மு. கருணாநிதியின் பேரனும் மு.
காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை (C. N. Annadurai, 15 செப்டம்பர், 1909 – 3 பெப்ரவரி, 1969) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் ஆறாவது முதலமைச்சருமாவார். பரவலாக இவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவரும், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார்.
திருநீலகண்ட நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். இவரைப் பற்றிய குறிப்புகள், 8 ஆம் நூறாண்டில் வாழ்ந்ததாகக் கருதப்படும் சுந்தரமூர்த்தி நாயனார் எழுதிய திருத்தொண்டத் தொகை என்னும் நூலிலும், பின்னர் 12 ஆவது நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார் எழுதிய பெரியபுராணத்திலும் உள்ளன. இவர் சிதம்பரத்தில் குயவர் குலத்தில் பிறந்தவர் என்பது மேலுள்ள நூல்களில் உள்ள செய்தி.
தமிழ் இலக்கியங்களில் யானைகளை ஆண், பெண், குட்டி, அறுபது வயதிற்கு மேலான யானை, போர் யானைகள் என்ற அடிப்படையில் மட்டும் அல்லாது இன்னும் பல்வேறுப் பிரிவுகளாக அவற்றைப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான பெயரிட்டு அழைத்து வந்துள்ளனர்.இதன் மூலம் பழந்தமிழர்களின் வாழ்வினில் யானைகள் எவ்வளவு பயன் ஆற்றின என்பதையும், தமிழர்கள் அந்த யானைகளை எவ்வளவு ஆழமாக உணர்ந்து அவற்றின் பிரிவுகளை வரையறுத்து வைத்து இருந்தார்கள் என்பதையும் அறியலாம்.
தமிழ்நாடு சட்டப் பேரவை (Tamil Nadu Legislative Assembly) என்பது இந்தியாவின் 28 மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் அரசியல் திட்டம் சார்ந்த சட்டங்களை இயற்றும் அவையாகும். இது தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ளது. இதன் தோற்றம் மற்றும் வரலாற்றைப் பார்க்கும் பொழுது இது 18ம் நூற்றாண்டில் தமிழ்நாடு சென்னை மாகாணமாக இருந்த பொழுதிலிருந்தே இப்பேரவை செயல்பட்டுக் கொண்டிருந்தது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021
தமிழ்நாட்டின் பதினாறாவது சட்டமன்றத் தேர்தல், தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின், 234 தொகுதிகளுக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்ய 2021 ஏப்ரல் 6 இல் நடைபெற்றது. இத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) அறுதிப் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைவர் மு.
எ .வ .வேலு (E. V. Velu, பிறப்பு: மார்ச் 15, 1951) ஓர் தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழக உணவுத் துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். திராவிடக் கொள்கையில் பற்றுக் கொண்ட இவர், திருவண்ணாமலையில் அருணை பொறியியல் மற்றும் கலைக் கல்லூரியை நடத்தி வருகிறார். இவர் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள, குடலூர் கிராமத்தில் பிறந்தார்.
மா. சுப்பிரமணியம் (அரசியல்வாதி)
மா. சுப்ரமணியம் (M. Subramaniam) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதியும், அமைச்சரும் ஆவார். திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கட்சி உறுப்பினரான இவர் 2006-2011 காலகட்டத்தில் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் மாநகர மேயராக இருந்தார்.
திராவிடர் என்னும் சொல், திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழியொன்றைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களைக் குறிக்கும். தற்காலத்தில் திராவிடர்கள் செறிந்து வாழும் பகுதி, தென்னிந்தியாவில் விந்திய மலைக்குத் தெற்கேயுள்ள பகுதியாகும். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளும் திராவிடர்களின் தாயகங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
மொழியாக்கம் அல்லது மொழிபெயர்ப்பு (translation) என்பது மூல மொழியில் (Source Language) உள்ள சொல் அல்லது சொற்றொடர்களை (விடயத்தை எந்தவொரு மேலதிகமான உட்சேர்த்தலுமின்றி), பொருள் மாறாமல் மற்றொரு மொழிச் சொற்களை கொண்டு இலக்கு மொழியில் (Target Language) அறியத் தருதல் ஆகும். இங்கு மேலதிகமான உட்சேர்த்தல் என்பதாவது, மூல மொழியில் குறிப்பிடப்பட்ட விடயத்திற்கு மேலதிகமாக இலக்கு மொழியில் இணைத்தல் என்பதாகவே பொருள்படும். மாறாக தெளிவாக்கல் என்பது எழுத்துக்கு முந்தையதாக, பேச்சை வேறுமொழியில் தருவதாகும்.
திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில் திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.
தமிழக ஆளுநர் -தமிழக ஆளுநர்களின் பட்டியல் தென்னிந்தியாவின் மாநிலமான, தமிழ்நாடு மாநிலத்தில், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பெற்ற ஆளுநர் தமிழகத்தின் அரசயலமைப்புத் தலைவராக அவரின் பிரதிநிதியாக செயல்படுபவர். இவரே மாநிலத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பவர். தமிழகத்தைப் பொறுத்தவரை ஆளுநர்கள் 1946ல் இருந்தே நியமனம் செய்யப்பட்டவர்களாகவும், தற்காலிகப் பொறுப்புகளுடனும் பதவி வகித்து வந்துள்ளனர்.
துரைமுருகன் (Durai Murugan, பிறப்பு: சூலை 1, 1938) ஒரு தமிழக அரசியல்வாதியும், அமைச்சரும், வழக்குரைஞரும் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும் ஆவார். இவர் திமுகவின் மேடைப்பேச்சாளர், இலக்கியவாதியுமாவார். தமிழகத்தின், வேலூர் மாவட்டத்திலுள்ள, காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று சட்டத்துறை அமைச்சராகத் தமிழக அமைச்சரவையில் பணியாற்றியுள்ளார்.
இந்திய ஆட்சிப் பணி (அ) இ.ஆ.ப, (ஐ.ஏ.எஸ்) (இந்தி: भारतीय प्रशासनिक सेवा, பாரதீய பிரஷாசனிக் சேவா) அனைத்து இந்திய பணிகளின் (குடியுரிமைப் பணியியல்) மூன்று பணிகளுள் ஒன்றாக, இந்திய அரசின் ஆட்சியல் பணியினை மேற்கொள்ளும் சிறப்பு அமைப்பாக இந்திய அரசாங்கத்தால் கட்டமைக்கப்பட்டதாகும். ஏனைய இரண்டு பணிகள் இந்தியக் காவல் பணி (அ) இ. கா.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (Tamilnadu State Transport Corporation – TNSTC) தமிழக அரசின் போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்கும் முக்கியமான பொதுமக்கள் போக்குவரத்துக்கான பேருந்துகளை இயக்கும் துறையாகும். இத்துறை 1972ல் தமிழக அரசால் தொடங்கப்பட்டது. இது தமிழ்நாட்டிற்குள்ளேயும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளுக்குத் தமிழ்நாட்டிலிருந்தும் பேருந்துகளை இயக்குகிறது.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
சிவன் (Śiva) இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர். சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர்.இவர் தனது ஒரு பகுதியிலிருந்து அன்னை பராசக்தியை உருவாக்கினாரெனவும், பின்னர் இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்டசராசரங்களை உருவாக்கினார்களென்றும், தனது உடுக்கையிலிருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார் எனவும் கருதப்படுகிறது. பின்னர் அன்னை பராசக்தி படைப்பிற்காக பிரம்மதேவரையும், அதன்பிறகு காப்பதற்காக காக்கும் கடவுளான விஷ்ணுவையும் உருவாக்கினார் என்றும் கருதப்படுகிறது.
இரவீந்தரநாத் தாகூர் (Rabindranath Tagore) வங்காள மொழி: রবীন্দ্রনাথ ঠাকুর, மே 7, 1861- ஆகஸ்ட் 7, 1941) புகழ் பெற்ற வங்காள பல்துறையறிஞர் ஆவார். 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் இவர் வங்காள இலக்கியம் மற்றும் இசை வடிவத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். மேலும் இந்தியக் கலைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தார்.
கலைஞர் காப்பீடு திட்டம் என்பது தமிழ்நாட்டில் ஏழை மக்கள், உயிருக்கு ஆபத்தான 51 நோய்களுக்கு, ₹ 1,00,000 (ஒரு இலட்சம்) வரையிலான உயர் மருத்துவ சிகிச்சைகளை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாகப் பெற வகை செய்யும் ஒரு காப்பீட்டுத் திட்டமாகும். ஜூலை 2009ல் மு. கருணாநிதியின் தலைமையிலான திமுக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம் ஜூன் 2011ல் ஜெ.
தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
அப்பர் திருநாவுக்கரசு நாயனார் கி.பி. ஏழாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவரும், சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் ஆவார். இவரை, தேவார மூவருள் இரண்டாமவர் என்றும், இறைவனிடம் பக்தி செலுத்துதலில், தொண்டை அடிப்படையாகக் கொண்டவர் என்றும் புகழ்கின்றனர்.இவரை, திருஞானசம்பந்தர், 'அப்பர்' (தந்தை) என்று அழைத்தமையால்,.
கல்வித் துறை அமைச்சர் (இந்தியா)
கல்வித் துறை அமைச்சர், இந்த அமைச்சகம் முன்னர் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் என்ற பெயரில் இயங்கியது (1985-2020) தற்போதைய அமைச்சராக ரமேசு போக்கிரியால் செயல்படுகிறார்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், (Tiruchendur Murugan Temple) முருகனின் ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடாகத் திகழ்கின்றது. இது தமிழ்நாடு மாநிலத்தில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ளது. இக்கோயில் பழந்தமிழ் இலக்கியங்களிலே சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்றது.
தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர்
இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மாநில அரசின் சட்டமன்றத்திற்கும் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட சட்டமன்றத் தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களில் இருந்து சட்டப்பேரவைத் தலைவர் (சபாநாயகர்) ஒருவர் தேர்வு செய்யப்படுகிறார். இவர் சட்டமன்றக் கூட்டத்திற்குத் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பதுடன் கூட்டங்களின் போது உறுப்பினர்களின் கருத்துக்களை பதிவேடுகளில் சேர்க்கவும் தேவையற்ற கருத்துக்களை நீக்கவும் அதிகாரம் பெற்றவராக இருக்கிறார். இதுபோல் உறுப்பினர்கள் மீது கொண்டு வரப்படும் முறையீடுகளின் அடிப்படையில் உறுப்பினர்களை தற்காலிகமாகவோ கூட்டத் தொடர் முழுமைக்குமோ கலந்து கொள்ளத் தடைவிதிக்கும் அதிகாரமுடையவராகவும் இருக்கிறார்.
அன்னையர் நாள் (Mother's day) விடுமுறை தினம் அன்னையர் மற்றும் தாய்மையைப் போற்றும் நாளாக அன்னா ஜார்விஸ் அவர்களால் மேற்கு விர்ஜினியாவின் கிராப்டன் நகரில் உருவாக்கப்பட்டது; இது குறிப்பாக குடும்பங்கள் மற்றும் குடும்பங்களின் உறவுச் சூழல்களை மையமாகக் கொண்டது. இது, இப்போது உலகின் பெரும்பாலான பகுதிகளில் வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படுகின்றது. அவற்றில் பல, நவீன விடுமுறை தினத்தை விட மிகவும் பழமையானது (எ.கா.
தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்
தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சாதிகளையும் பட்டியலிட்டுள்ளது. இவை முறையே; பட்டியல் பழங்குடியினர் (36) பட்டியல் சாதிகள் (76) பிற்படுத்தப்பட்ட சாதிகள் (136) பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் (இஸ்லாமியர்)(7) மிகவும் பிற்பட்ட சாதிகள் (41) சீர்மரபினர் (68) முற்பட்ட சாதிகள் (79)என்று 7 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் இருக்கும் முற்பட்ட வகுப்பினர், அனைத்து வகுப்பினரும் பங்கேற்கும் பொதுப்பிரிவுகளின் மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மட்டுமே இடம் பெற இயலும்.
கே. சண்முகம் (தலைமைச் செயலாளர்)
கே. சண்முகம், கிரிஜா வைத்தியநாதனின் பணி ஓய்வுக்குப் பின்னர் தமிழகத்தின் 46-வது தலைமைச் செயலாளராக 29 சூன் 2019 (சனிக் கிழமை) அன்று தமிழக அரசால் நியமிக்கப்பட்டார். 1 சூலை 2019 அன்று தலைமைச் செயலராகப் பணியில் சேர்கிறார்.
சைவ சமயம், சிவநெறி என்றெல்லாம் அழைக்கப்படும் நெறி, சிவபெருமானை முழுமுதற்கடவுளாக வணங்கும் சமயமாகும். இன்றைய இந்து சமயத்தின் கிளைநெறிகளில் ஒன்றாக அமைந்துவிளங்கும் சைவம், வைணவத்தைை பின்னால் தள்ளி இந்து சமயத்தின் பெரும்பான்மையான பின்பற்றுநர்களைக் கொண்ட சமயமாகக் காணப்படுகின்றது. இன்றைய உலகில் சுமார் 452.2 மில்லியன் சைவர்கள் காணப்படுவதாக, மேற்கொள்ளப்பட்ட குடித்தொகை மதிப்பீடு ஒன்று சொல்கின்றது.திருக்கயிலையில் நந்தி தேவர் பணிவிடை செய்ய, பிள்ளையாரும் முருகனும் அருகிருக்க பார்வதி துணையிருக்க வீற்றிருக்கும் சிவபிரானே சைவர்களின் பரம்பொருளாக விளங்குகின்றார்.
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டு துணை முதலமைச்சர்களின் பட்டியல்
தமிழக துணை முதலமைச்சர் ஒரு கட்டாயமற்ற மற்றும் தமிழக முதலமைச்சர் பதவிக்கு அடுத்த நிலையில் உள்ள பதவியாக மே 29, 2009 அன்று அறிவிக்கப்பட்டது. தமிழக துணை முதலமைச்சர் பதவியை வகித்த முதல் நபர் மு. க.
சுந்தரமூர்த்தி நாயனார் என்பவர் சைவசமயத்தில் போற்றப்படும் சமயக்குரவர் நால்வரில் ஒருவரும், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் ஆவார்.இவர் புத்தூரில் சடங்கவி சிவாச்சாரியாரின் மகளைத் திருமணம் செய்துகொள்ள இருந்தபோது, சிவபெருமான் கிழவனாகச் சென்று தடுத்தார். பின்பு, சுந்தரரின் பிறவி நோக்கம், 'சிவபெருமானைப் புகழ்ந்து பாடுவது' எனப் புரிய வைத்தார். இதனைத் தடுத்தாட்கொள்ளுதல் என சைவர்கள் கூறுகிறார்கள்.
பாரதிதாசன் (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் 'கனகசுப்புரத்தினம்' ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
செம்மொழி (Classical language) என்பது ஒரு மொழியின் இலக்கியப்பழமை அடிப்படையிலும் பிற பண்புத்தகுதிகளின் அடிப்படையிலும் செய்யப்படும் வகைப்பாடு ஆகும். செம்மொழியாக ஒரு மொழியைத்தெரிவு செய்ய அதன் இலக்கியப் படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும், அதன் தோன்றல் ஏனைய மொழிகளில் சாராதிருத்தலும் வேண்டும்1 (ஜோர்ஜ் எல்.ஹார்ட்). உலகில் எத்தனையோ மொழிகள் பேசப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர்
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் ஆளுங்கட்சிக்கு அடுத்த நிலையில் அதிகத் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சி பிரதான எதிர்க்கட்சி என்கிற தகுதியைப் பெறுகிறது. இத்தகுதியைப் பெற அந்தக் கட்சி குறைந்தது 24 தொகுதிகளிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். பிரதான எதிர்க்கட்சியின் பேரவைக்குழுத் தலைவர் தமிழ்நாடு சட்டப்பேரவையினால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் என்று அழைக்கப்படுகிறார்.