The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
பழமொழி நானூறு அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்ட நீதிநூலாகும். சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான இது முன்றுறையர் அல்லது முன்றுறை அரையனார் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்டது. இதன் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் ஒரு பழமொழி சார்ந்த நீதி கூறப்படுவதால் பழமொழி நானூறு என்ற பெயர் பெற்றுள்ளது.
2020 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
2020 கோடை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் (2020 Summer Olympics, 2020年夏季オリンピック), அலுவல் முறையில் 32வது ஒலிம்பியாட் விளையாட்டுகள் (Games of the XXXII Olympiad), தோக்கியோ 2020 (Tokyo 2020)|東京2020}}, என்பது சப்பான், தோக்கியோவில் 2021 சூலை 23 முதல் ஆகத்து 8 வரை நடைபெறவிருக்கும் பன்னாட்டு பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும். இப்போட்டிகள் முதலில் 2020 சூலையில் நடத்தப்படவிருந்தது, கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இது தள்ளிப்போடப்பட்டு, பெரும்பாலும் பார்வையாளர்கள் இன்றி நடைபெறுகின்றன. 2021 இல் இப்போட்டிகள் நடைபெற்றாலும், இந்நிகழ்வு சந்தைப்படுத்தல், மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக தோக்கியோ 2020 என்றே அழைக்கப்படுகிறது.
இடைச்சொல் என்பது தனித்து நின்று பொருள் தராது பெயர்ச்சொல்லுக்கும் வினைச்சொல்லுக்கும் இடையில் நின்று பொருளை விளக்கும் சொல் இடைச்சொல் ஆகும். இவை நுணுக்கமான பொருள் வேறுபாடுகளை உணர்த்துவதற்கும், உணர்ச்சிகளையும் கருத்துக்களையும் மிகத்தெளிவாகவும் சுருக்கமான முறையிலும் வெளிப்படுத்தவும் பயன்படும். இடைச்சொற்களின் வகைகள் சில வருமாறு: 1.வேற்றுமை உருபுகள்- முதலாம் எட்டாம் வேற்றுமை தவிர்ந்த ஆறு வேற்றுமை உருபுகள்.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
குற்றியலுகரம் என்பது ஒரு தமிழ்ச் சொல்லில் உள்ள உகரம் ஏறிய வல்லின எழுத்து (எ.கா: கு, சு, டு, து, பு, று) சொல்லின் கடைசி எழுத்தாக வரும் பொழுது, மற்ற குறில் உயிர்மெய் எழுத்துக்கள் (எ.கா: ற, கி, பெ) போல் ஒரு மாத்திரை அல்லாமல் அரை மாத்திரை அளவேயாகக் குறைந்து ஒலிக்கும் வரையறை கொண்டது. இதனையே வேறு விதமாகச் சொல்வதென்றால், தனி நெடிலுடனோ, பல எழுத்துகளைத் தொடர்ந்தோ சொல்லுக்கு இறுதியில் வல்லின மெய்யோடு சேர்ந்து வரும் உகரம், தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து அரை மாத்திரையளவே ஒலிக்கும். குற்றியலுகரம் என்பது அவ்வாறு குறைந்தொலிக்கும் உகரமாகும்.
கவிதை (Poiesis) என்பது அழகியல் உணர்ச்சியுடைய, ஓசை சந்தத்துடன் கூடிய அல்லது ஒத்திசை பண்புச் சொற்களால் கோர்க்கப்பட்ட ஓர் எழுத்து இலக்கியக் கலை வடிவம் ஆகும். மேலும், மொழியில் உள்ள ஒலியன் அழகியல், ஒலிக் குறியீடுகள், மற்றும் சந்தம் (Metre) ஆகியவற்றுடன் இடம், இயல்பான பொருள் ஆகியவற்றை வெளிப்படையாகக் காட்டுவதாகக் கவிதை உள்ளது. உணர்ச்சி, கற்பனை, கருத்துக்களை வெளிப்படுத்தவும் தூண்டவும் கவிதை உதவுகின்றது.
உருவக அணி என்பது உவமையாக உள்ள பொருளுக்கும் உவமிக்கப்படும் பொருளுக்கும் வேறுபாடு தோன்றாமல் (அதுதான் இஃது என உறுதிப்படுத்திக் கூறுவது) இரண்டும் ஒன்று என்ற உணர்வு தோன்ற இரண்டையும் ஒற்றுமைப் படுத்துவதாகும். விதி: "உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அஃது உருவகமாகும்". எடுத்துக்காட்டு இதுதான் அது.
திருக்குறள், சுருக்கமாக குறள், ஒரு தொல் தமிழ் மொழி இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், இன்பம் (அல்லது காமம்) ஆகிய மூன்று புத்தகங்ளை அல்லது தொகுப்புக்களைக் கொண்டது.
தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
பால கங்காதர திலகர் (Bal Gangadhar Tilak, மராத்தி: बाळ गंगाधर टिळक, பாள கங்காதர டிளக்) சூலை 23, 1856(1856-07-23) –1 ஆகத்து 1920(1920-08-01) (அகவை 64), ஒரு இந்தியத் "தேசியவாதியும்", "சமூக சீர்திருத்தவாதியும்", விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் மக்கள் ஆதரவு பெற்ற தலைவரும் இவரே. இவரது பெயருடன் கௌரவப் பட்டமான "லோகமான்ய" என்பதையும் சேர்த்து அழைப்பதுண்டு.
பாரதிதாசன் (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் 'கனகசுப்புரத்தினம்' ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
பௌத்தம் அல்லது பௌத்த சமயம் (Buddhism, பாளி/சமசுகிருதம்: बौद्ध धर्म புத்த தருமம்) என்பது கௌதம புத்தரின் போதனைகளின் அடிப்படையிலான ஒரு சமயமும், தத்துவமுமாகும். பௌத்த மரபின் படி, புத்தர் கிமு 4-ஆம், கிமு 6-ஆம் நூற்றாண்டுகளுக்கிடையே இந்தியத் துணைக்கண்டத்தின் கிழக்குப் பகுதியில் வாழ்ந்தவர் ஆவார்.பௌத்த சமயத்தில் முக்கியமான இரண்டு பிரிவுகள் பொதுவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன: தேரவாத பௌத்தம் ("முதியோர் பள்ளி"), மற்றும் மகாயான பௌத்தம் ("பெரும் வாகனம்"). தேரவாதம் இலங்கை, மற்றும் தென்கிழக்காசியாவில் (கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து, பர்மா போன்ற நாடுகளில் பின்பற்றப்படுகின்றது.
சிந்துவெளி நாகரிகம் (Indus Valley Civilisation) மெசொப்பொத்தேமியா, சீனா போன்ற இடங்களில் தழைத்தோங்கியிருந்த, உலகின் மிகப் பழைய நாகரிகங்களையொத்த தொன்மையான ஒரு நாகரிகமாகும். இன்றைய பாகிஸ்தானிலுள்ள சிந்து நதியை அண்டித் தழைத்தோங்கியிருந்த இந்த நாகரிகம் மிகப் பரந்ததொரு பிரதேசத்தில் செல்வாக்குச் செலுத்திவந்தது. கி.மு 3000 க்கும் கி.மு 2500 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் உச்ச நிலையிலிருந்த இந்த நாகரிகம், இன்னும் தெளிவாக அறியப்படாத ஏதோவொரு காரணத்தினால் சடுதியாக அழிந்து போய்விட்டது.
கலை (ஒலிப்பு ) எனப்படுவது "நுட்பமானத் தன்மை மற்றும் திறமையை உள்ளடக்கியது". மனித நடத்தையினாலும் தம் கற்பனை வளத்தினாலும், கலைநுட்பத் திறமையுடன் கூடிய பொருட்கள் (அ) நிகழ்வுகளைப் புணைந்து காட்சிப்படுத்தல் (அ) அரங்கேற்றல் (அ) கைவினை கலைநயம் படைத்தல் ஆகும். இதன் மூலம் பண்பாடு, வரலாறு, அழகியல், போன்றவை பாரட்டுதலுக்காகவும், ரசிக்கும் படியாகவும் காட்சிப்படுத்தப்பட்டு உளவெழுச்சியில் விளைவுகளை ஏற்படுத்தும் நோக்கமுடையதாகும்.
மௌரியப் பேரரசு (கிமு 322 – கிமு 185), இந்தியாவில் மௌரிய அரச வம்சத்தினர் ஆண்ட பேரரசு ஆகும். பழங்கால இந்தியாவில் பரப்பளவில் விரிவானதும், அரசியல், படைத்துறை தொடர்பில் மிகவும் வலுவானதுமாக இப்பேரரசு விளங்கியது. இந்தியத் துணைக் கண்டத்தின் கிழக்குப் பகுதியில், கங்கைச் சமவெளியில், இன்றைய பீகார், வங்காளம் ஆகிய மாநிலங்களின் பகுதிகளை உள்ளடக்கியிருந்த மகத நாட்டை அடிப்படையாகக் கொண்டே இப் பேரரசு உருவானது.
திராவிட மொழிக் குடும்பம் (Dravidian language family) என்பது மரபு வழியாக இணைந்து கிட்டத்தட்ட 85 மொழிகளை உள்ளடக்கியதாகும். கிட்டத்தட்ட 217 மில்லியன் மக்கள் இம்மொழிகளைப் பேசுகின்றனர். தென்னிந்தியாவைச் சேர்ந்த முக்கிய மொழிகளான, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்பன ஒன்றுடனொன்று நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பதும், ஏனைய இந்திய மொழிகளிலிருந்து வேறுபட்டு இருப்பதும் அறியப்பட்டுள்ளது.
நுண்கலை (fine art) பயன்பாட்டைக் குறித்துக் கவனம் கொள்ளாத ஓர் அறிவார்ந்த தூண்டலாகவும் அழகின் வெளிப்பாடாகவும் அமைந்த கலை வடிவமாகும். இன்று நுண்கலைகளின் வகைகளில் காட்சிப்படுத்தப்படும் கலை வடிவங்களான ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை,ஒளிப்படக்கலை ,பதிப்புக்கலை மற்றும் நிகழ்த்து கலை வடிவங்களான இசை, நடனம், நாடகம் போன்றன முன்னணியில் உள்ளன. ஆயினும் பெரும்பாலான நேரங்களில், குறிப்பாக அருங்காட்சியகங்களில், நுண்கலைகள் என்று குறிப்பிடப்படுவன கலை வடிவங்களான ஓவியம்,சிற்பம் போன்றவற்றையே ஆகும்.
தமிழ்நாடு அமைச்சரவை (Tamil Nadu Council of Ministers), தமிழ் நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும் செயலாட்சியர்கள். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார்.
தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்
தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சாதிகளையும் பட்டியலிட்டுள்ளது. இவை முறையே; பட்டியல் பழங்குடியினர் (36) பட்டியல் சாதிகள் (76) பிற்படுத்தப்பட்ட சாதிகள் (136) பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் (இஸ்லாமியர்)(7) மிகவும் பிற்பட்ட சாதிகள் (41) சீர்மரபினர் (68) முற்பட்ட சாதிகள் (79)என்று 7 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் இருக்கும் முற்பட்ட வகுப்பினர், அனைத்து வகுப்பினரும் பங்கேற்கும் பொதுப்பிரிவுகளின் மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மட்டுமே இடம் பெற இயலும்.
பிறப்பொலியியலில் (articulatory phonetics), மெய்யொலி (Consonant) என்பது, பேச்சு மொழியின் ஒரு ஒலிவகை ஆகும். நெஞ்சிலிருந்து வரும் காற்று வாய்ப்பகுதியில் தற்காலிகமாகத் தடைப்பட்டு வெளியேறும்போது மெய்யொலிகள் உருவாகின்றன. மெய்யொலிகள், அடைப்பொலி, மூக்கொலி, உரசொலி, மருங்கொலி, ஆடொலி, வருடொலி, தொடரொலிஎனப் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
பொதுவாக சத்திரபதி சிவாஜி மகாராஜ் என்று அறியப்படும் சிவாஜி ராஜே போன்சலே (பிப்ரவரி 19, 1627 - ஏப்ரல் 3, 1680), மராட்டியப் பேரரசுக்கு அடித்தளம் அமைத்தவராவார். போன்சலே மராத்திய குலத்தவரான சாகாஜிபோன்ஸ்லே மற்றும் ஜிஜாபாய் ஆகியோருக்குப் பிறந்த இரண்டு புதல்வர்களில், சிவாஜி இளைய மகனாவார். தக்காண சுல்தான்கள் மற்றும் தில்லி மொகலாயர்களுக்கு எதிராக பல்வேறு காலங்களில் இராணுவ சேவைகளை அளித்த அவர் தந்தை சாகாஜி, ஒரு மராட்டிய தளபதியாக விளங்கியவர்.இந்து சுயராஜ்ஜியத்தின் (இந்துக்களின் சுயாட்சி) சித்தாந்தத்திற்கு ஆதரவளித்த சிவாஜி ராஜே போன்சலே, பிஜாப்பூர் சுல்தானியத்திற்கும், இறுதியாக வலிமைமிக்க மொகலாய சாம்ராஜ்ஜியத்தின் அன்னிய ஆட்சிக்கும் நேரடியாக சவால் விட அவர்தம் தோழர்களுடனும், வீரர்களுடனும் ஓர் இந்து கோவிலில் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
பொருளாதாரம் (economy) என்பது நாட்டின் அறியப்பட்ட பொருளாதார அமைப்பையோ இதர நிலப்பகுதியையோ கொண்டுள்ளது. அப்பகுதியின் சமூக ரீதியாக உற்பத்தியில், பரிமாற்றத்தில், விநியோகத்தில் மற்றும் பொருட்கள் மற்றும் சேவைகளின் நுகர்வில் பங்கேற்கும் பொருளாதாரக் காரணிகளையும் கொண்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட பொருளாதாரம் என்பது அதன் தொழில் நுட்ப பரிணாமம், வரலாறு மற்றும் சமூக நிறுவனம் ஆகியன அடங்கியுள்ள ஒரு வழிமுறையின் இறுதி விளைவுகளையும்; அதேபோல அதன் புவியியல், இயற்கை வளக் கொடை மற்றும் சூழல் ஆகியவற்றை முக்கியக் காரணிகளாக உள்ளடக்கியுள்ளது.
தனுஷ் (Dhanush, பிறப்பு: 28 சூலை 1983) என்பவர் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்படப் பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2002 ஆம் ஆண்டு முதல் திருடா திருடி (2003), சுள்ளான் (2004), புதுப்பேட்டை (2006), பொல்லாதவன் (2007), ஆடுகளம் (2011), 3 (2012), வேலையில்லா பட்டதாரி (2014), மாரி (2015), அசுரன் (2019) போன்ற பல தமிழ் மொழி திரைப்படங்களிலும் மற்றும் ராஞ்சனா (2013) போன்ற இந்தி திரைப்படங்களிலும் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார்.இவர் 40 மேலான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் 13 தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள், 9 விஜய் விருதுகள், 7 தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், 5 விகடன் விருதுகள், 5 எடிசன் விருதுகள், 4 தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் பிலிம்பேர் விருதுகள் போன்றவை வென்றுள்ளார். இந்திய பிரபலங்களின் வருவாயை அடிப்படையாகக் கொண்ட ஃபோர்ப்ஸ் இந்தியா பிரபலங்கள் 100 பட்டியலில் தனுஷ் ஆறு முறை சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலமாக படம் தயாரிக்கிறார்.
இயற்கை வளங்கள் (natural resources), அல்லது பொருளாதார ரீதியில் நிலம் மற்றும் மூலப்பொருள் அல்லது கச்சா பொருட்கள் எனப்படுபவை ஒப்பிட்டளவில் மனிதத் தலையீடுகளின்றித் தன் இயல்பு நிலையில் சூழல் தொகுதிகளில் காணப்படும் பொருட்கள் ஆகும். இயற்கை வளங்கள் சுற்றுச்சூழலிலிருந்து தருவிக்கப்படுபவை. இவற்றில் பெரும்பான்மையானவை நம் வாழ்க்கைக்கு அத்தியாவசியமானவையாகவும் தேவைகளுக்குப் பயன்படக்கூடியவைகளாகவும் அமைகின்றன.
நாணயம் (Currency) என்பது பொருட்களையும் சேவைகளையும் பரிமாறிக் கொள்வதற்கான ஒரு "பரிமாற்ற அலகு" ஆகும். பணம் என்பது ஒரு பரிமாற்ற ஊடகமும், பெறுமானத்தைத் தன்னுள் அடக்கியுள்ள ஒன்றும் ஆகையால், நாணயமும் பணத்தின் ஒரு வடிவம் ஆகும். நாணயம் என்பது நாணயத்தாள், உலோக நாணயம் (நாணயக் குற்றி) என்னும் இரண்டு வடிவங்களில் உள்ளன.
திருவள்ளுவர் (Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர் என்றும் அழைக்கப்படுகிறார்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான கி.மு.400க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
பொருளியலில் நிறைவுப் போட்டி (Perfect Competition) நிலவும் பொழுது அங்காடியும், நிறுவனங்களும் குறுகியகாலத்திலும் நீண்ட காலத்திலும் ஒருசில நிபந்தனைகளுக்குட்பட்டு சமநிலை (Equilibrium) அடைகின்றன ஒரு பொருளின் விலை அதன் தேவையையும் (Demand), அளிப்பையும் (Supply) சார்ந்துள்ளது. இவைகளே விலையை நிர்ணயிக்கின்றன. பொருள்கள் உற்பத்தியாளர்களால் உற்பத்தி செய்யப்பட்டு அங்காடிக்கு (market) வருபவைகளின் தொகுதி “அளிப்பு” ஆகும்.
கேலிச் சித்திரங்கள் (cartoons) அல்லது கேலிப் படங்கள் எனப்படுபவை நகைச்சுவையைத் தூண்டும் வண்ணம் வரையப்படும் சித்திரங்கள் ஆகும். பல சொற்களில் தலையங்கம் எழுதி உணர்த்த முடியாத கருத்துக்களைக் கூடக் கேலிச் சித்திரங்களும் கருத்துப் படங்களும் எளிதாக உணர்த்துகின்றன. சமுதாயம், சமயம், அரசியல், பொருளாதாரத் துறைகளில் உள்ள குறைகளை நகைச்சுவையுடன் உணர்த்தும்படி கேலிப்படங்கள் அமைகின்றன.தமிழில் ஆனந்த விகடன், குமுதம், தினமணி போன்ற இதழ்களில் கேலிச் சித்திரங்கள் வெளி வருகின்றன.
சங்க காலம் (Sangam period) என்பது பண்டைய தென்னிந்திய வரலாற்றில் நிலவிய தமிழகம் தொடர்பான ஒரு காலப்பகுதியாகும். இக்காலப்பகுதி கிமு ஆறாம் நூற்றாண்டில் இருந்து கிபி இரண்டாம் நூற்றாண்டு வரை நீடித்திருந்தது. மதுரையை மையமாகக் கொண்டு தமிழ்ப்புலவர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தனர் என்ற காரணத்தால் இக்காலப்பகுதிக்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.
முதலாம் பானிபட் போர் (Battle of Panipat) என்பது பாபரின் படையெடுப்பு படைகளுக்கும், தில்லியை ஆண்ட இப்ராகிம் லோடியின் படைகளுக்கும் இடையே, பானிபத்த்தில் 21 ஏப்ரல் 1526 ஆம் ஆண்டில் நடைபெற்றது. இப்போரின் முடிவில் தில்லியில் முகலாயப் பேரரசு நிறுவப்பட்டது. இந்த போர் வெடிமருந்து சுடுகலன்கள் மற்றும் புலம் பீரங்கி தொடர்புடைய முந்தைய போர்களில் ஒன்று.
வணிகம் அல்லது வர்த்தகம் (trade, commerce) என்பது மனிதனது தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றும் இலாப நோக்குடைய அல்லது இலாப நோக்கற்ற ஒரு பொருளாதார செயற்பாடு ஆகும். வணிகமானது பிரதானமான நான்கு வளர்ச்சி கட்டங்களின் கீழ் வளர்ச்சியுற்றது. பண்டமாற்று முறை பணமுறை கைத்தொழில் புரட்சி தகவல் தொழில்நுட்ப புரட்சிவணிகவியல் வர்த்தக நடவடிகைகளை வணிகம் தொழிற்சாலை என இரு பிரிவுகல்ளாக பிரிகளாம்.
இலக்கியம் (ஒலிப்பு ) என்பது விரிந்த பொருளில் எழுதிய அனைத்தையும் குறிக்கும். இந்த வரையறையின் கீழ் இலக்கியத்தை இரு வகைகளாகப் பிரிக்கலாம்: இன்பியல் இலக்கியம் அறிவியல் இலக்கியம்'இன்பியல்' இலக்கியம் "கற்போர் உள்ளத்துக்கு இன்பம் தரும் நூல்கள்". அறிவியல் இலக்கியம் கற்போருக்கு அறிவை முதன்மையாகத் தரும் இலக்கியம்.
பொருளியல் (economics) என்பது மக்கள் பயன்படுத்தும் அல்லது ஆக்கும் பொருட்கள் மற்றும் சேவைகள் பற்றிய உற்பத்தி, பகிர்வு, நுகர்வு, என்பன பற்றி ஆராயும் சமூக அறிவியல் ஆகும்.உற்பத்தி, பகிர்வு என்பன பற்றிய கருத்துருவாக்கங்கள் வரலாற்றில் நீண்ட காலத்திற்கு முன்பாக உருவாக்கப்பட்டபோதினும் 1776 ல் வெளிவந்த ஆடம் இசுமித் என்பாரின் வெல்த் ஆஃப் நேஷன்ஸ் (The Wealth of Nations, நாடுகளின் செல்வம்) எனும் நூலில் இசுமித் அனைத்து பொருளியல் கருத்தாக்கங்களையும் ஒருங்கிணைத்து பொருளியல் என முறைபடுத்தப்பட்ட அறிவியல் துறையாக புத்தாக்கம் பெற்றது. இவர் அரசியல் பொருளியலின் தந்தை என அறியப்படுகிறார். பொருளியல் பல துணைப் பகுப்புக்களாக பலவித அடிப்படையிலும் பிரிக்கப்படுள்ளது.
உப்புச் சத்தியாகிரகம் அல்லது தண்டி நடைப்பயணம் அல்லது தண்டி யாத்திரை (Salt March) என்பது காலனிய இந்தியாவில் ஆங்கிலேயர் இந்தியர்கள் மீது விதித்த உப்பு வரியை அறவழியில் எதிர்க்கும் திட்டமிட்ட போராட்டமாகும். மார்ச்சு 12, 1930 இல் குஜராத் மாநிலத்திலுள்ள தண்டியில் தடையை மீறி உப்பெடுக்கும் நடைப்பயணமாகத் துவங்கியது. 1930 ஜனவரி 30 ஆம் நாள் இந்திய தேசிய காங்கிரசு அறிவித்த முழு விடுதலை என்ற விடுதலைப் பிரகடனத்திற்குப் பிறகு ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து அமைப்பு ரீதியாகச் செய்யப்பட்ட முதல் நடவடிக்கையாகும்.
பொது நிர்வாகம் என்பதை அரசாங்கக் கொள்கைப் பிரிவுகளின் உருவாக்கம், செயல்படுத்தல் மற்றும் ஆய்வு செய்தல் என பரந்துபட்ட அம்சமாக விவரிக்கலாம். குடிமைச் சமூகத்தை மேம்படுத்துவதன் மூலம் பொது மக்கள் நலனை அடைதல், சிறந்து இயங்கும் சந்தைக்கு உத்தரவாதமளித்தல் மற்றும் விளைவுத்திறனுள்ள குடிமைப் பணிச் சேவைகள் ஆகியன இந்தத் துறையின் சில குறிக்கோள்களாகும். பொது நிர்வாகமானது பொதுப் பணித்துறை மற்றும் முகமைகளில் பணி புரியும் பொதுப் பணியாளர்களால் மேற்கொள்ளப்படுகிறது, இது அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் செயல்படுகிறது, மேலும் இவர்கள் பல்வேறுபட்ட பணிகளைச் செய்கின்றனர்.
சமணம் என்பது பண்டைய இந்தியாவில் நிலவிய சில சமயக்கோட்பாடுகளைக் குறிக்கும். சமணம் என்ற சொல் ச்ரமண (śramaṇa) என்ற வடமொழிச்சொல்லின் சிதைவு; ச்ரமண என்றால் தன்னை வருத்துகை என்று பொருள் கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட சிலக்குழப்பங்களால் சமணம் என்ற சொல்லே ஜைனத்தை மட்டும் குறிக்க தமிழ் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டது.
இந்திய சோதிடத்தில் பிரீதி என்பது, பஞ்சாங்க உறுப்புக்களுள் ஒன்றான "யோகம்" என்பதனுள் அடங்கும் 27 யோகங்களுள் முதலாவது ஆகும். இராசிச் சக்கரத்தின் தொடக்கப் புள்ளியில் இருந்து 13° 20' தொடக்கம் 26° 40' பிரீதி யோகத்துக்கு உரியது. சூரியன், சந்திரன் ஆகிய கோள்களின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை இந்தக் கோணத்தினூடாக அதிகரிப்பதற்கு எடுக்கும் நேரத்துக்குரிய யோகம் "பிரீதி" ஆகும்.
தணிக்கை (audit) என்ற சொல்லுக்கான பொதுவான வரையறையாக, ஒரு நபர், நிறுவனம், அமைப்பு, செயல்முறை, பெறுநிறுவனம், செயல்திட்டம் அல்லது தயாரிப்பின் மதிப்பாய்வு என்பதைக் குறிப்பிடலாம். ஆனால் இதே சொல்லிற்கு திட்ட மேலாண்மை, தர மேலாண்மை மற்றும் ஆற்றல் சேமிப்பு போன்றவற்றிலும் இதே போன்ற ஒரு கருத்தாக்கம் காணப்படுகிறது.
ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Olympic Games அல்லது Olympics) என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் மாற்றி மாற்றி பல்வேறு விளையாட்டுக்களுக்கு நடத்தப்படும் அனைத்துலகப் போட்டி ஆகும். இதில் ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கு பெறுகின்றனர். உலகின் முதன்மையான விளையாட்டுப் போட்டியாகக் கருதப்படும் ஒலிம்பிக்கில் 200 நாடுகளுக்கு மேல் கலந்து கொள்கின்றன.
ஜேம்ஸ் ஆண்ட்ரூ பி ரௌன்-ராம்சே என்ற இயற்பெயர் கொண்ட டல்ஹவுசி பிரபு (James Andrew Broun-Ramsay, 1st Marquess of Dalhousie: 22 ஏப்ரல் 1812–19 டிசம்பர் 1860), ராம்சே பிரபு எனவும் ஏர்ல் ஆப் டல்ஹவுசி எனவும் அழைக்கப்பட்ட ஒரு இசுக்காட்லாந்தியர் ஆவார். இவர் பிரித்தானிய இந்தியாவின் காலனித்துவ நிர்வாகியாவார். டல்ஹவுசி 1848 இலிருந்து 1856 வரை இந்தியாவின் இந்தியத் தலைமை ஆளுநராகப் பணியாற்றினார்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்
இந்திய விடுதலைப்போராட்டத்தில் தமிழர்கள் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தனர். 1857-ல் நடந்த சிப்பாய் கலகம் முதல் இந்திய விடுதலைப் போர் எனக் குறிப்பிடப்படுகிறது. எனினும் தென்னிந்தியாவில் அதற்கு முன்னரே பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்துக்கு எதிராகப் பல போர்களும் கிளர்ச்சிகளும் நடைபெற்றன.
மூன்றாம் பானிபட் போர் 14 ஜனவரி 1761ல் டில்லிக்கு வடக்கே 60மைல் (97கி.மீ) தொலைவில் பானிபட் என்ற இடத்தில் மராட்டிய பேரரசின் வடக்கு படைக்கும், ஆப்கானிஸ்தான் மன்னர் அகமது சா அப்தாலிக்கும் இடையில் நடந்தது. அகமது சா துரானியை, ரோகில்லாக்கள் மற்றும் அவத் நவாபு சுஜா-உத்-தௌ ஆதரித்தனர். ஆப்கானியர்களுக்கு எதிரான இப்போரில் இராசபுத்திரப் படைகளும், சீக்கியப் படைகளும் மராட்டியப் படைகளுக்கு உதவ முன் வரவில்லை.
முகாமைத்துவம் அல்லது மேலாண்மை என்பது ஊழியர்களைக் கொண்டு அமைப்பொன்றினது (குறிப்பாக வணிகத்துறை) சகல வளங்களையும் பயனுறுதிமிக்க வண்ணம் முறைப்படுத்தி வழிநடத்திச்செல்ல எடுக்கப்படும் நடவடிக்கைகளை விபரிக்கும் இயலாகும். அமைப்பொன்றில் இந்தகைய நடவடிக்கையினை மேற்கொள்ளுபவர் முகாமையாளர் (அ) மேலாளர் (manager) எனப்படுவார். இங்கு வளங்கள் எனப்படுவது அமைப்பொன்றில் காணப்படும் மனிதவளம், நிதி வளம், பொருண்மை வளம், புலமைசார் வளம், கட்புலனாகா வளம் ஆகிய வகைகளைக்குறிக்கும்.
விஜயநகரப் பேரரசு (1336 - 1646), தென் இந்தியாவின் தற்கால கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கேரளாவின் பெரும்பாலான பகுதிகளைக் கொண்ட ஒரு பேரரசு ஆகும். தென்னிந்தியாவில் தில்லி சுல்தான்களின் ஆட்சி விரிவாக்கத்தை தடுக்கவேவித்யாரண்யர் வழிகாட்டுதலின் படி, விஜயநகரப் பேரரசு 1336 ஆம் ஆண்டில் முதலாம் ஹரிஹரர் மற்றும் முதலாம் புக்கராயர் ஆகியோரால் நிறுவப்பட்டது. இப்பேரரசின் புகழ் பெற்றவர் கிருஷ்ணதேவராயர் ஆவார்.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
வாகைத் திணை என்பது தொல்காப்பியக் கருத்துப்படி வாழ்க்கையின் மேம்பட்ட வெற்றிநிலையைக் குறிக்கும். இது வெற்றி பெற்ற அரசனும் அவனது வீரர்களும் வெற்றியின் அடையாளமான வாகைப்பூவைச் சூடி வெற்றியைக் கொண்டாடுதலைக் குறிக்கும் என்று புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடுகிறது. எனினும் இதன் துறைகளில் தொல்காப்பியம் காட்டும் பொதுமக்களோடு தொடர்புடைய துறைகளும் இடம் பெற்றுள்ளன.
பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாக கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளை காப்பிய தலைவராக கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் விவரிக்கிறார்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டினர்
இந்திய விடுதலை இயக்கங்களில் பங்கு பெற்ற தமிழ்நாட்டினர் குறித்த பட்டியல் இது. பூலித்தேவன் (1715-1767) மருதநாயகம் (1725-1764) வீரபாண்டிய கட்டபொம்மன் (1790-1799) தீரன் சின்னமலை சாமி நாகப்பன் படையாட்சி வீரன் சுந்தரலிங்கம் அர்த்தநாரீசுவர வர்மா அஞ்சலை அம்மாள் எஸ். எஸ்.
இடம் சுட்டிப் பொருள் விளக்குதல்
இடஞ்சுட்டிப் பொருள் விளக்குதல் (Explaining with reference to Context) என்பது இலக்கியம் பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் திறனைச் சோதிக்கும் தேர்வு வினா வகைகளுள் ஒன்றாகும். இது எழுத்துத் தேர்விலேயே பெரும்பாலும் வினவப்படும். ஒரு இலக்கிய படைப்பில் (கவிதை, உரைநடை அல்லது நாடகம்) இருந்து சில வரிகள் கொடுக்கப்படும்.
இந்தியாவில் தன்னாட்சி இயக்கம் (Indian Home Rule movement), பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களையும், ஆட்சிப் பகுதிகளையும் ஆங்கிலேயர்களுக்கு பதிலாக இந்தியர்களின் தன்னாட்சியுடன் கூடிய அரசுகள் நிர்வகிப்பதை வலியுறுத்தும் இயக்கமாகும்.பம்பாய் மாகாணத்தின் பெல்கமில் நடைபெற்ற மாநாட்டின் போது ஏப்ரல், 1916 அன்று இந்திய விடுதலை இயக்கத் தலைவர்களான பால கங்காதர திலகர், எஸ். சுப்பிரமணிய அய்யர், சத்தியேந்திர நாத் போசு, அன்னி பெசண்ட், முகமது அலி ஜின்னா ஆகியோரால் இவ்வியக்கம் நிறுவப்பட்டது.துவக்கத்தில் இந்திய தேசிய காங்கிரசு மற்றும் அகில இந்திய முசுலிம் லீக் கட்சிகளின் உறுப்பினர்களால் ஈர்க்கப்பட்ட இவ்வியக்கம் ஈர்க்கப்பட்டது. இவ்வியக்கம் மேற்கொண்ட 1916-ஆம் ஆண்டு லக்னோ உடன்படிக்கையின் படி, இந்தியத் தீவிரவாத தேசிய மற்றும் மிதவாத தேசியவாதத் தலைவர்களை ஒன்றிணைத்தது.