The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
2020 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
2020 கோடை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் (2020 Summer Olympics, 2020年夏季オリンピック), அலுவல் முறையில் 32வது ஒலிம்பியாட் விளையாட்டுகள் (Games of the XXXII Olympiad), தோக்கியோ 2020 (Tokyo 2020)|東京2020}}, என்பது சப்பான், தோக்கியோவில் 2021 சூலை 23 முதல் ஆகத்து 8 வரை நடைபெறவிருக்கும் பன்னாட்டு பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும். இப்போட்டிகள் முதலில் 2020 சூலையில் நடத்தப்படவிருந்தது, கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இது தள்ளிப்போடப்பட்டு, பெரும்பாலும் பார்வையாளர்கள் இன்றி நடைபெறுகின்றன. 2021 இல் இப்போட்டிகள் நடைபெற்றாலும், இந்நிகழ்வு சந்தைப்படுத்தல், மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக தோக்கியோ 2020 என்றே அழைக்கப்படுகிறது.
பொருளியல் (economics) என்பது மக்கள் பயன்படுத்தும் அல்லது ஆக்கும் பொருட்கள் மற்றும் சேவைகள் பற்றிய உற்பத்தி, பகிர்வு, நுகர்வு, என்பன பற்றி ஆராயும் சமூக அறிவியல் ஆகும்.உற்பத்தி, பகிர்வு என்பன பற்றிய கருத்துருவாக்கங்கள் வரலாற்றில் நீண்ட காலத்திற்கு முன்பாக உருவாக்கப்பட்டபோதினும் 1776 ல் வெளிவந்த ஆடம் இசுமித் என்பாரின் வெல்த் ஆஃப் நேஷன்ஸ் (The Wealth of Nations, நாடுகளின் செல்வம்) எனும் நூலில் இசுமித் அனைத்து பொருளியல் கருத்தாக்கங்களையும் ஒருங்கிணைத்து பொருளியல் என முறைபடுத்தப்பட்ட அறிவியல் துறையாக புத்தாக்கம் பெற்றது. இவர் அரசியல் பொருளியலின் தந்தை என அறியப்படுகிறார். பொருளியல் பல துணைப் பகுப்புக்களாக பலவித அடிப்படையிலும் பிரிக்கப்படுள்ளது.
காட்டு நிலங்களை, வேளாண்மை, நகராக்கம் போன்ற காடல்லாத நிலப் பயன்பாடுகளுக்கோ அல்லது அதன் வளங்களுக்காகக் காட்டை வெட்டி நிலத்தைத் தரிசாகவோ மாற்றுவதே காடழிப்பு என்பதன் முழுமையான பொருளாகும். முற்காலத்தில் காடழிப்பு, மேய்ச்சல் நிலங்களை உருவாக்குவதற்கு அல்லது வேளாண்மை நிலங்களை உருவாக்கும் நோக்கத்துடனேயே நடைபெற்றது. தொழிற் புரட்சிக்குப் பின்னர் நகராக்கமும், காட்டு வளங்களின் சுரண்டலும், இத்துடன் சேர்ந்து கொண்டன.
அவசரநிலை நிர்வகித்தல் (அல்லது பேரழிவு நிர்வகித்தல்) என்பது அபாயநிலைகளைத் தவிர்ப்பதற்கு எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கை ஆகும். பேரழிவு ஏற்படுவதற்கு முன்பு அதை எதிர்கொள்வதற்கு எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கையே இப்பணியாகும். பேரழிவுக்கு எதிரான நடவடிக்கை (எ.கா., அழிவு ஏற்பட இருக்கும் பகுதியை அவசரமாகக் காலி செய்தல், தொற்றுநோய் பரவாமல் தடுத்தல், தூய்மை செய்தல் மற்றும் பல), இயற்கையாலோ அல்லது மனிதர்களாலோ உருவாக்கப்பட்ட பேரழிவுகளுக்குப் பின்னர் சமுதாயத்தை மறுசீரமைத்தல் போன்றவையும் இப்பணியில் மேற்கொள்ளப்படுகிறது.
திராவிட மொழிக் குடும்பம் (Dravidian language family) என்பது மரபு வழியாக இணைந்து கிட்டத்தட்ட 85 மொழிகளை உள்ளடக்கியதாகும். கிட்டத்தட்ட 217 மில்லியன் மக்கள் இம்மொழிகளைப் பேசுகின்றனர். தென்னிந்தியாவைச் சேர்ந்த முக்கிய மொழிகளான, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்பன ஒன்றுடனொன்று நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பதும், ஏனைய இந்திய மொழிகளிலிருந்து வேறுபட்டு இருப்பதும் அறியப்பட்டுள்ளது.
நிலம் (Land) என்பது நிரந்தரமாக நீரில் மூழ்கியிராத புவியின் திண்ம மேற்பரப்பு ஆகும். வரலாறு முழுவதும் பெரும்பாலான மனிதச் செயற்பாடுகள், வேளாண்மை, வாழிடம், பல்வேறு இயற்கை வளங்கள் ஆகியவை அடிப்படையான நிலத்திலேயே நடந்துள்ளன. நிலம், பெரிய நீர்ப் பரப்புககளைச் சந்திக்கும் பகுதிகள் கரையோரப் பகுதிகள் என அழைக்கப்படுகின்றன.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
திருக்குறள், சுருக்கமாக குறள், ஒரு தொல் தமிழ் மொழி இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுட்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், இன்பம் (அல்லது காமம்) ஆகிய மூன்று புத்தகங்ளை அல்லது தொகுப்புக்களைக் கொண்டது.
உயிரியல் பல்வகைமை அல்லது பல்லுயிரியம் அல்லது உயிரினப் பன்மயம் (Biodiversity, இலங்கை வழக்கு: உயிர்ப் பல்வகைமை) என்பது பூமியில் உள்ள நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய கணக்கிலடங்காத உயிரினங்களில் காணப்படும் வேறுபாடு ஆகும். மரபுவழிப் பண்பில் பல்வகை, சிற்றினங்களில் பல்வகை, சூழல் அமைப்பில் பல்வகை, ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு உரித்தான பல்வகை, அறிமுகப்படுத்தப்பட்ட உயிரினங்களில் பல்வகை ஆகியவற்றை உயிரியல் பல்வகைமை என்பது குறிக்கும். உயிரியல் பல்வகைமை என்பது புவியின் எல்லாப் பகுதிகளிலும் பல்வேறு சூழல்களில் வாழும் பலவகையான உயிரினங்களைப் பற்றி விவரிக்கப் பயன்படுத்தும் ஒரு சொல்லாகும்.
வன உயிர் பாதுகாப்புச் சட்டம், 1972
வன உயிர் பாதுகாப்புச் சட்டம், 1972 (Wildlife Protection Act, 1972 ) 1972 இந்தியப் பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட ஒரு சட்டமாகும். இச்சட்டம் வன உயிர்களான விலங்குகள், பறவைகள், பூச்சிகள், தாவரங்கள் முதலியவற்றை பாதுகாக்கின்றது. 1972 ஆம் ஆண்டிற்கு முன்னால் இந்தியாவில் ஐந்து தேசியப் பூங்காக்கள் மட்டுமே இருந்தன.
பொருளியலில், முதல் அல்லது மூலதனம் என்பது ஒரு தொழிலைத் தொடங்க அல்லது ஒரு பொருளியல் ஆக்கத்தை உருவாக்கப் பயன் படும் அடிப்படையான நிலம், பொருள், இயந்திரம், பணம், முதலியவற்றைக் குறிக்கும். இது பொருளியல் ஆக்கத்திற்கு நீண்ட பயன்பாட்டுக்குரிய ஒரு உற்பத்திக் காரணியாகக் கருதப்படுகின்றது. மெய் மூலதனத்தை, பணம், அல்லது நிதி மூலதனத்தின் மூலம் வாங்கிக்கொள்ள முடியும்.
பாரதிதாசன் (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் 'கனகசுப்புரத்தினம்' ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
தமிழ்நாடு அமைச்சரவை (Tamil Nadu Council of Ministers), தமிழ் நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும் செயலாட்சியர்கள். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986
சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986 (Environment Protection Act, 1986) என்பது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக இந்திய பாராளுமன்றம் இயற்றிய ஒரு சட்டமாகும். போப்பால் நச்சுவாயு நிகழ்வுக்குப் பிறகு இச்சட்டம் இயற்றப்பட்டது. இந்திய அரசியலமைப்பு 253 ஆவது பிரிவின் கீழ் இச்சட்டம் மார்ச்சு 1986 இல் இயற்றப்பட்டு 19 நவம்பர் 1986 இல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
பிள்ளைத்தமிழ் என்பது தமிழ் இலக்கியத்தில் வழங்கும் பிரபந்த நூல் வகைகளுள் ஒன்று. புலவர்கள் தாம் விரும்பிய தெய்வங்கள், சமயா சாரியர்கள், புலவர் பெருமக்கள், ஆதீனகர்த்தர், அரசர், உபகாரிகள், அவர் அவர்கட்கு உகந்தவர்கள், ஆகியோரைக் குழந்தையாக உருவகித்து, கற்பனை பல அமையப் பாடப்படுவது பிள்ளைத்தமிழாகும். குழந்தையாகக் கொண்டது பாவனையே ஆகும்.
பொருளாதாரம் (economy) என்பது நாட்டின் அறியப்பட்ட பொருளாதார அமைப்பையோ இதர நிலப்பகுதியையோ கொண்டுள்ளது. அப்பகுதியின் சமூக ரீதியாக உற்பத்தியில், பரிமாற்றத்தில், விநியோகத்தில் மற்றும் பொருட்கள் மற்றும் சேவைகளின் நுகர்வில் பங்கேற்கும் பொருளாதாரக் காரணிகளையும் கொண்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட பொருளாதாரம் என்பது அதன் தொழில் நுட்ப பரிணாமம், வரலாறு மற்றும் சமூக நிறுவனம் ஆகியன அடங்கியுள்ள ஒரு வழிமுறையின் இறுதி விளைவுகளையும்; அதேபோல அதன் புவியியல், இயற்கை வளக் கொடை மற்றும் சூழல் ஆகியவற்றை முக்கியக் காரணிகளாக உள்ளடக்கியுள்ளது.
மேகக் கணிமை அல்லது கொளுவுக் கணிமை(cloud computing) என்பது கணிமைத் திறனை இணையம் ஊடாகப் பெறத்தக்கதான ஒரு ஏற்பாடு ஆகும். கணிமைத் திறனை வழங்கும் நிறுவனங்களில் இருந்து தேவைக்கேற்ற அளவு கணிமைத் திறங்களைப் பெற்றுப் பயன்படுத்தலாம். ஒரு நிறுவனம் கணினிகளிலும் மென்பொருட்களிலும் கட்டமைப்பொன்றை அமைக்காமல் பயன்பாட்டுக் கட்டண முறையில் தனது கணிமைத் தேவைகளை பலவேறு இடங்களிலிருந்தும் கணிமை நிறுவனங்களிலிருந்தும் பெற இந்த தொழில்நுட்பம் உதவுகிறது.
கலீலியோ கலிலி (Galileo Galilei; இத்தாலிய ஒலிப்பில்: கலிலேயோ கலிலே; 15, பிப்ரவரி 1564 – 8, சனவரி 1642), ஓர் இத்தாலிய இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியல் வல்லுநர், பொறியாளர், மற்றும் மெய்யியலாளர் ஆவார். இவர் பதினேழாம் நூற்றாண்டின் அறிவியல் புரட்சியில் மிக முதன்மையான பங்கை ஆற்றியுள்ளார். கலீலியோ "நோக்கு வானியலின் தந்தை", "நவீன இயற்பியலின் தந்தை", "நவீன அறிவியலின் தந்தை" என்று பலவாறாகப் பெருமையுடன் அழைக்கப்படுகிறார்.
கண்டுபிடிப்புக் காலம் (Age of Discovery) என்பது 15ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து 17ஆம் நூற்றாண்டுத் தொடக்கம் வரை ஐரோப்பியர்கள் உலகம் முழுவதையும் தீவிர ஆய்வுச் செயல்பாடுகளுக்கு உட்படுத்தி, ஆப்பிரிக்கா, அமெரிக்காக்கள், ஆசியா, ஓசியானியா ஆகிய பெருநிலப் பகுதிகளோடு நேரடி தொடர்புகள் ஏற்படுத்தி, பூகோளத்தின் வரைபடத்தை உருவாக்கிய வரலாற்று முதன்மை வாய்ந்த காலத்தைக் குறிக்கும்.
தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
பெர்டினண்ட் மகலன் அல்லது பெர்டினண்டு மகாலன் (போர்த்துகீசு: Fernão de Magalhães, IPA: [fɨɾˈnɐ̃ũ dɨ mɐgɐˈʎɐ̃ĩʃ]; எசுப்பானியம் Fernando de Magallanes) (1480 - ஏப்ரல் 27, 1521) போர்த்துக்கேய மாலுமி. உலகைச் சுற்றிவந்த முதல் மனிதராக அறியப்படுகிறார். 1519 இல் உலகைக் கப்பல் மூலம் சுற்றிவந்து நிறைவு செய்தார்.
விற்பனை என்ற செயலானது, வணிகத்தில் ஒரு உற்பத்திப் பொருளைப் பணத்திற்காகவோ, அப்பொருளுக்கு ஈடான மற்றொன்றிற்காகவோ, ஒரு உற்பத்தியாளர் அல்லது ஒரு விற்பனையாளர், வாங்கும் வாடிக்கையாளருக்குக் கொடுத்தலைக் குறிக்கிறது.உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு பொருளும், இறுதியாக பயனீட்டாளரை சென்றடையும் வரை, ஒவ்வொரு கட்டத்திலும், அரசுகளின் விற்பனை வரி விதிப்புகளுக்கு உள்ளாகின்றன.
பொது விநியோக முறை (Public Distribution System) என்பது நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் (இந்தியா) மூலம் நிர்வகிக்கப்படும் ஒரு இந்திய உணவுப் பொருள் பாதுகாப்பு முறையாகும். மத்திய மற்றும் மாநில அரசின் மானியங்களால் நியாய விலைக் கடைகளின் மூலமாக நாடு முழுவதும் மக்களின் அத்தியாவசியத் தேவையான அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் பலசரக்குப் பொருள் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. இந்திய உணவுக் கழகம், ஒரு மத்திய அரசு நிறுவனத்தின் மூலமாக உணவுப்பொருட்கள் வாங்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.
முப்பதாண்டுப் போர் (1618–1648) என்பது ஒரு மதப்பின்னணி கொண்ட போர் ஆகத் தொடங்கியது. இது முக்கியமாக ஜெர்மனியிலேயே இடம்பெற்றாலும் பெரும்பாலான ஐரோப்பிய அரசுகள் இதில் ஈடுபட்டிருந்தன. புனித ரோமானிய பேரரசர் பெர்டினாண்ட் இரண்டாம் போமியா குடிமக்களின் மதம் சார்ந்த உரிமைகளை குறைக்க முயன்ற போது, புராட்டஸ்டன்ட் மக்களிடையே ஏற்பட்ட கிளர்ச்சியின் மூலம் முப்பது ஆண்டுகள் போர் (1618-48) தொடங்கியது.
ஏழாண்டுப் போர் (Seven Years' War) என்பது 1756க்கும் 1763க்கும் இடையில் நடந்த உலகளாவிய இராணுவப் போராகும். வடக்கு அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, ஐரோப்பா, மேற்கு ஆப்பிரிக்கா, பிரித்தானிய இந்தியா, பிலிப்பின்ஸ் இந்த போரில் பங்கு பெற்றன. வரலாற்றில் இந்தப் போர் பிரெஞ்சு இந்திய போர் (1754–1763), போமேரனியன் போர் (1757–1762), மூன்றாவது ஆங்கில மைசூர் போர் (1757–1763), மூன்றாவது சிலேசியன் போர் (1756–1763) என்றெல்லாம் அறியப்படுகிறது.
திருக்குறளுக்குப் பத்து பேர் உரை உள்ளது எனப் பழம்பாடல் ஒன்று கூறுகிறது. தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர் பரிதி பரிமே லழகர்-திருமலையர் மல்லர் பரிப்பெருமாள் காலிங்கர் வள்ளுவர்நூற்கு எல்லையுரை செய்தார் இவர் இவர்களில் பரிமேலழகர், மணக்குடவர், காலிங்கர், பரிதி, பரிப்பெருமாள் ஆகிய ஐவர் உரைகள் வெளிவந்துள்ளன. தருமர், தாமத்தர், நச்சர் ஆகிய மூவரின் உரைகள் சில குறட்பாக்களுக்கு மட்டும் கிடைத்துள்ளன.
தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்
தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சாதிகளையும் பட்டியலிட்டுள்ளது. இவை முறையே; பட்டியல் பழங்குடியினர் (36) பட்டியல் சாதிகள் (76) பிற்படுத்தப்பட்ட சாதிகள் (136) பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் (இஸ்லாமியர்)(7) மிகவும் பிற்பட்ட சாதிகள் (41) சீர்மரபினர் (68) முற்பட்ட சாதிகள் (79)என்று 7 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் இருக்கும் முற்பட்ட வகுப்பினர், அனைத்து வகுப்பினரும் பங்கேற்கும் பொதுப்பிரிவுகளின் மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மட்டுமே இடம் பெற இயலும்.
குற்றியலுகரம் என்பது ஒரு தமிழ்ச் சொல்லில் உள்ள உகரம் ஏறிய வல்லின எழுத்து (எ.கா: கு, சு, டு, து, பு, று) சொல்லின் கடைசி எழுத்தாக வரும் பொழுது, மற்ற குறில் உயிர்மெய் எழுத்துக்கள் (எ.கா: ற, கி, பெ) போல் ஒரு மாத்திரை அல்லாமல் அரை மாத்திரை அளவேயாகக் குறைந்து ஒலிக்கும் வரையறை கொண்டது. இதனையே வேறு விதமாகச் சொல்வதென்றால், தனி நெடிலுடனோ, பல எழுத்துகளைத் தொடர்ந்தோ சொல்லுக்கு இறுதியில் வல்லின மெய்யோடு சேர்ந்து வரும் உகரம், தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து அரை மாத்திரையளவே ஒலிக்கும். குற்றியலுகரம் என்பது அவ்வாறு குறைந்தொலிக்கும் உகரமாகும்.
சுற்றுச்சூழல் மாசுபாடு (சூழல் மாசடைதல்) என்பது மனித செயல்கள் மூலம் உருவாகும் மாசுகளால், சூழலின் ஆதாரங்களாகிய காற்று, நீர், மண் வளங்களும், அங்கு வாழும் உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாகி, அதனால் சூழல் சமநிலை சீரற்றுப் போகும் நிலையைக் குறிக்கும். சூழலுக்கும் அங்கே வாழுகின்ற உயிரினங்களுக்கும் கேடு விளைவிக்கக்கூடியவையின் சேர்க்கையினால் சூழற் சமநிலை பாதிக்கப்படும். சூழல் மாசினால் அச்சூழ்மண்டலத்தில் வாழும் தாவரங்களும், விலங்குகளும் பல்வேறு வகையான பாதிப்புகளுக்கு உண்டாகிறது.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (Other Backward Class (OBC)) என்போர் சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கியுள்ளதாக இந்திய அரசு இனங்கண்டுள்ள பல்வேறு சாதியினரைக் குறிக்கும். பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் என்பது போன்று இந்திய மக்கள் தொகையைப் பல்வேறு வகைகளாகப் பகுக்கும் முறைகளில் இதுவும் ஒன்று. இந்திய நாட்டில் வர்க்க வேறுபாடுகளைப் பொருளாதாரக் காரணங்கள் மட்டும் தீர்மானிப்பதில்லை.
திருவள்ளுவர் (Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர் என்றும் அழைக்கப்படுகிறார்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான கி.மு.400க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொருளியலில் நிறைவுப் போட்டி (Perfect Competition) நிலவும் பொழுது அங்காடியும், நிறுவனங்களும் குறுகியகாலத்திலும் நீண்ட காலத்திலும் ஒருசில நிபந்தனைகளுக்குட்பட்டு சமநிலை (Equilibrium) அடைகின்றன ஒரு பொருளின் விலை அதன் தேவையையும் (Demand), அளிப்பையும் (Supply) சார்ந்துள்ளது. இவைகளே விலையை நிர்ணயிக்கின்றன. பொருள்கள் உற்பத்தியாளர்களால் உற்பத்தி செய்யப்பட்டு அங்காடிக்கு (market) வருபவைகளின் தொகுதி “அளிப்பு” ஆகும்.
கணக்குப் பதிவியல் (Accounting என்பது பங்குதாரர்கள் மற்றும் மேலாளர்கள் போன்ற பயனர்களுக்கு ஒரு வர்த்தக உருவின் நிதியாதாரத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு கலை. இந்தக் கருத்துப்பரிமாற்றம் என்பது பொதுவாக நிதியாதார வடிவிலான அறிக்கைகளாக இருக்கும், இதில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் பொருளாதார மூலங்கள் வடிவில் பணம் காட்டப்படுகிறது; பயனருக்கு தொடர்புடையதாகவும் நம்பகத்தன்மையுடையதாகவும் இருக்கும் தகவலை தேர்ந்தெடுப்பதில்தான் அந்த கலை அடங்கியிருக்கிறது.கணக்குப் பதிவியல் என்பது கணித அறிவியல்|கணித அறிவியலின் ஒரு கிளை, இது வணிகத்தில் ஏற்படும் வெற்றி தோல்விகளின் காரணங்களைக் கண்டறிவதில் பயனுடையதாக இருக்கிறது. கணக்குப் பதிவியலின் கொள்கைகள், வர்த்தக உருவுக்கு நடைமுறைத் தொழிலின் மூன்று பிரிவுகளில் பொருந்துகிறது, அவை கணக்கு வைப்பு, வரவு செலவு கணக்கு முறை மற்றும் தணிக்கை.கணக்கு வைப்பு , அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஆஃப் செர்டிஃபைட் பப்ளிக் அகௌண்டன்ட்ஸ் (AICPA) ஆல் இவ்வாறு வரையறுக்கப்படுகிறது, அது "ஒரு குறிப்பிடத்தக்க வழிமுறையில் மற்றும் பணம், பரிவர்த்தனைகளில் மற்றும் பகுதியாக அல்லது குறைந்தது நிதியாதாரப் பண்புக்கூறினைக் கொண்டிருக்கும் பொருளில் பதிவுசெய்தல், வகைபிரித்தல் மற்றும் தொகுத்துரைத்தல் மேலும் அதன்மீதான முடிவுகளை இடையீடு செய்தல் போன்றதான ஒரு கலையாகும்."கணக்கு வைப்பு முறை ஆயிரமாயிரம் ஆண்டுகள் தொன்மையானது; ஆரம்பகால கணக்கு வைப்பு செய்யப்பட்டதற்கான பதிவுகள், 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது, மத்திய கிழக்கில் காணப்பட்டது.
இயற்பியலில், ஒரு பொருளின் மீது செய்யப்படும் வேலை (Work) என்பது அப்பொருளின் மீது விசை செயல்பட்டு, அப்பொருள் விசையின் திசையிலே இடப்பெயர்ச்சி அடைவதால் கிடைப்பதாகும். எடுத்துகாட்டாக, தரையில் இருந்து உயர்த்தப்பட்ட ஒரு பந்து, தானாக விழும் போது, பந்து செய்த வேலை என்பது பந்தின் எடை மற்றும் தரையிலிருந்து அதன் உயரம் ஆகியவற்றின் பெருக்கலுக்குச் சமமானது. வேலை என்பது ஆற்றலை ஓரிடத்திலிருந்து வேறிடத்திற்கு மாற்றவோ அல்லது ஒரு வகை ஆற்றலை வேறு வகையாக மாற்றவோ பயன்படுகிறது.பிரான்சு இயற்பியலாளர் காசுபார்டு காசடவ் கைரோலிசு (Gaspard-Gustave Coriolis) 1826 ல் வேலை என்ற சொல் அறிமுகப்படுத்தப்பட்டது.ஒரு பொருளின் மீது விசை ஒன்று செயற்பட்டு, அதனால் விசை செயற்படும் புள்ளி அதே திசையில் நகர்ந்தால், விசையினால் வேலை செய்யப்பட்டது என்கிறோம்.
சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்
சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல் இந்தியாவின் மாநிலமானத் தமிழத்தின் உயர் நீதிமன்றமான சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகளாக பதவி வகித்தவர்கள் மற்றும் தற்பொழுதயத் தலைமை நீதிபதிகளின் பட்டியல். சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியால் நியமிக்கப்படுபவர் ஆவர். இவரே தமிழக அரசின் தலைமை நீதிபதி ஆவார்.
இந்திய உச்ச நீதிமன்றம் (ஆங்கிலம்-Supreme Court of India') இந்திய அரசியல் சட்டப்பிரிவு அத்தியாயம் 4, பிரிவு 5 இன் கீழ் இந்தியாவின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட நீதிமன்றமாகவும், கீழ்நீதிமன்றங்களின், உயர்நீதிமன்றங்களின் தீர்ப்புக்கு மேல் முறையீடு செய்யும் நீதிமன்றமாகவும் செயல்படுகின்றது. இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதி விசாரணைக்கு உட்பட்ட அதிகாரங்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதிகள் 124 முதல் 147 ன் கீழ் எழுதப்பட்டுள்ளன. இது ஒரு மேல்முறையீட்டு நீதிமன்றமாகையால், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
முதலாம் பேதுரு அல்லது பியோத்தர் அலெக்சியேவிச் ரொமானோவ் அல்லது முதலாம் பியோத்தர் (ரஷ்ய மொழியில்: Пётр Алексе́евич Рома́нов, Пётр I, அல்லது Пётр Вели́кий, அல்லது பியோட்டர் வெலிகிய்; (9 ஜூன் [யூ.நா. 30 மே ] 1672 முதல் பெப்ரவரி 8 [யூ.நா. ஜனவரி 28] 1725) இறக்கும்வரை ரஷ்யாவையும் பின்னர் ரஷ்யப் பேரரசையும் ஆண்டவர்.
அணு (ஒலிப்பு ) (atom) என்பது தனிமத்தின் இயல்புகளைக் கொண்ட இயல்பான பொருள் ஒன்றின் மிகச் சிறிய அலகுப் பொருட்கூறு ஆகும். ஒவ்வொரு திண்மம், நீர்மம், வளிமம், பிளாசுமாவும் நொதுமல்நிலை அல்லது மின்னூட்டமுடைய அணுக்களைக் கொண்டுள்ளது. அணுக்கள் மிகவும் சிறியவை; கட்டாக அவை அளவில் மீட்டரின் 10 பில்லியனில் ஒரு பங்காகும்.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
மணிமேகலை ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்று. இக்காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார்.மணிமேகலை காப்பியத்தில் அடி இணையும், அதன் வழிபாடும், வேறு கடவுள்களின் வழிபாடும் இருக்கும் நிலையில், அது ஒரு மஹாயாண காப்பியமாகவே இருக்கமுடியும். மேலும், மஹாயாண பௌத்தமானது இல்லறத்தையும், துறவறத்தையும் வலியுறுத்தும் நிலையிலும், சிலப்பதிகாரமானது இல்லறத்தையும், மணிமேகலை காப்பியம் துறவறத்தையும் வலியுறுத்துவதாலும், இவைகள் இரட்டைக் காப்பியங்கள் ஆகும்.
ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Olympic Games அல்லது Olympics) என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் மாற்றி மாற்றி பல்வேறு விளையாட்டுக்களுக்கு நடத்தப்படும் அனைத்துலகப் போட்டி ஆகும். இதில் ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கு பெறுகின்றனர். உலகின் முதன்மையான விளையாட்டுப் போட்டியாகக் கருதப்படும் ஒலிம்பிக்கில் 200 நாடுகளுக்கு மேல் கலந்து கொள்கின்றன.
புள்ளியியல் அல்லது புள்ளிவிபரவியல் என்பது, தரவுகளைச் சேகரிப்பு, ஒழுங்கமைப்பு, பகுப்பாய்வு, விளக்கம் என்பன குறித்த பாடத்துறை ஆகும். கள ஆய்வுகள், சோதனைகள் என்பவற்றின் வடிவமைப்புத் தொடர்பிலான தரவுச் சேகரிப்புத் திட்டமிடல் உட்பட மேற்குறித்தவற்றில் எல்லா சிறப்புகளையும் இத்துறை கையாள்கிறது. புள்ளியியலில் உரிய பயிற்சி பெற்று அத்துறைசார் பணிகளில் ஈடுபடுபவர் புள்ளியியலாளர் எனப்படுவார்.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
பொருளியல் சிந்தனையின் வரலாறு (History of Economic Thought) என்பது பொருளியல் எண்ணங்கள் பழங்காலத்திலிருந்து இன்று வரை தோன்றி வளர்ந்த விதம் குறித்து விளக்குவது ஆகும். பொருளாதார வளர்ச்சிக்கும் பொருளியல் சிந்தனைகளின் வளர்ச்சிக்கும் வேறுபாடு உண்டு. பொருளாதார வளர்ச்சி ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் குறிப்பதாகும் ஆனால் பொருளியல் சிந்தனை வளர்ச்சி என்பது பொருளியல் குறித்த எண்ணங்கள் எவ்வாறு உருவெடுத்து பின்பு இது ஒரு தனி இயலாக வளா்ந்தது என்பது குறித்தது ஆகும்.
பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவும் உண்டு. அறம், பொருள், இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்களில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன. உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற பிரிவின் கீழ் வருவன.
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (நூல்)
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்பது ராபர்ட் கால்டுவெல் என்பாரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு நூல். இது தென்னிந்தியாவில் பரந்துள்ள பல்வேறு மொழிகள் தொடர்பான ஒரு ஒப்பீட்டு ஆய்வு நூல் ஆகும். இந் நூல் 1856 ஆம் ஆண்டில் முதன்முதலாக வெளியிடப்பட்டது.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பெண்களின் பங்கு இந்திய சுதந்திர போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பினை பற்றியது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு (environmental protection) என்பது சுற்றுச்சூழலை தனிமனிதனோ, அமைப்போ, அல்லது அரசாங்கமோ இயற்கை சூழலுக்காகவும், மனிதனின் நன்மைக்காகவும் பாதுகாக்கும் ஒரு பழக்கமாகும். மக்கள்தொகை பெருக்கத்தினாலும் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் சுற்றுச்சூழல் சில நேரங்களில் நிரந்தரமாக பாதிக்கப்படுகிறது. இதை உணர்ந்த அரசாங்கங்கள் சுற்றுச்சூழல் சீரழிவிற்கு காரணமான செயல்களைக் கட்டுப்படுத்தி நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளன.
கடன் (ஒலிப்பு ) என்பது திருப்பிக்கொடுக்கவேண்டியது; இது பொதுவாக திரும்பக்கொடுக்கவேண்டிய சொத்திருப்புகளைக் குறிக்கும், ஆனால் அந்தக் குறிப்புச் சொல் நன்னெறி சார்ந்த கடமைப்பொறுப்பு மற்றும் பணம் குறிப்பிடாத இதர செயலெதிர்ச்செயல் ஆகியவற்றையும் உள்ளடக்கும். சொத்திருப்புகளைப் பொறுத்தவரையில் கடன் என்பது எதிர்கால வாங்கும் ஆற்றலை, ஒரு கூட்டுத் தொகை ஈட்டப்படுவதற்கு முன்னர் இப்போதே பயன்படுத்திக்கொள்ளும் ஒரு வழிமுறை. சில நிறுவனங்கள் மற்றும் கூட்டாண்மைகள் கடனைத் தங்கள் ஒட்டுமொத்த கூட்டாண்மை நிதிஆதார உத்தியாகப் பயன்படுத்துகிறார்கள்.கடனாளர், கடனாளிக்கு ஒரு சொத்திருப்புத் தொகையைக் கடனாக அளிக்க ஒப்புக்கொண்டால் கடன் உருவாகிறது.
சுற்றுலாத்துறை என்பது இந்தியாவின் பெரிய சேவைத் துறையாகும். இது நாட்டின் தேசிய மொத்த உற்பத்தியில் 6.23 சதவீதம் பங்களிக்கிறது மேலும் இந்தியாவின் மொத்த வேலைவாய்ப்பில் 8.78% சதவீதத்தைக் கொண்டுள்ளது. இந்தியா ஆண்டுக்கு 5 மில்லியனுக்கும் மேலான அந்நிய சுற்றுலாப் பயணிகளின் வருகையையும் 562 மில்லியன் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையையும் கொண்டுள்ளது.
இந்தியத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்
இந்தியத் தலைமை நீதிபதிகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. இந்தியாவின் உச்சநீதிமன்றம் 1950இல் நிறுவப்பட்டதிலிருந்து மொத்தம் 48 தலைமை நீதிபதிகள் பணியாற்றியுள்ளனர். தற்போதைய தலைமை நீதிபதியாக என்.
கஸ்டாவ் இரண்டாம் அடால்ஃப் (9 டிசம்பர் 1594 – 6 நவம்பர் 1632); கஸ்டாவஸ் அடால்பஸ், அல்லது கஸ்டாவஸ் அடால்பஸ் தி கிரேட் (சுவீடிய: Gustav Adolf den store, இலத்தீன்: Gustavus Adolphus Magnus), 1611 முதல் 1632 வரை சுவீடனின் மன்னராக பதவி வகித்தவராவார். சுவீடனை ஒரு சக்தி வாய்ந்த நாடாக (சுவீடிய: Stormaktstiden) உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்தார். இவர் முப்பதாண்டுப் போரில் சுவீடனை இராணுவ மேலாதிக்கத்திற்கு இட்டுச் சென்றார்.
திறமூல மென்பொருள் (open-source software) என்பது மூல நிரற்றொடருடன் (Source code) வெளியிடப்படும் மென்பொருள் ஆகும். இதனை வெளியிடுவோர் குறிப்பிட்ட மென்பொருள் அனுமதியின் (Software License) கீழ் இந்த மூல நிரற்றொடரை வெளியிடுவார்கள், அந்த அனுமதியின் (Software License) படி எவரும் அந்த ஆதார நிரற்றொடரைப் படிக்கவோ, மாறுதல்கள் செய்யவோ, மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவோ முடியும். இதன் பயன்பாட்டை மென்பொருளின் ஆரம்பகர்த்தவாகிய நபரால் அது எல்லாவாற்றிற்கும் அடிப்படை மென்பொருளா அல்லது அதற்கு அனுமதிப் பத்திரம் தேவையா என்பது தீர்மானிக்கப்படும்.
சுற்றுலா (tourism) என்பது தமது வழமையான இருப்பிடங்களை விட்டு வேற்று இடங்களைக் கண்டு களிக்க பயணித்தலே ஆகும். உலக சுற்றுலா அமைப்பின் சொற்பொருள் விளக்கத்தின்படி ஒரு பயணத்தை சுற்றுலா என வகைப்படுத்த ஒருவர் தமது "வழமையான சுற்றுச்சூழலைவிட்டு வேற்று இடத்திற்கு ஒய்வு, அலுவல் மற்ற ஏனைய நோக்குடன் மேற்கொள்ளும் பயணம் ஒரு வருட காலகட்டத்திற்குள் அமைய வேண்டும். மேலும், அப்பயணத்தின் மூலம் பயணி பயணிக்கப்பட்ட இடத்திலிருந்து ஊதியம் பெற கூடாது".
கிரேக்கம் (கிரேக்க மொழி:Ελλάδα, அல்லது Ελλάς, முறைப்படி கிரேக்கக் குடியரசு, கிரேக்க மொழியில்: எல்லிநீக்கி டீமொக்ராத்தியா; ஆங்கிலம்: Hellenic Republic (Ελληνική Δημοκρατία, என்னும் நாடு பால்க்கன் மூவலந்தீவுக்குத் தென்புறத்தில் அமைந்துள்ளது. இந்நாட்டுக்கு வடக்கே அல்பேனியாவும், மாசிடோனியாவும், பல்கேரியாவும், கிழக்கே துருக்கியும் அமைந்துள்ளது. ஏஜியன் கடல் கிழக்கிலும் தெற்கிலும் அமைந்துள்ளது.
மண் மாசடைதல் (Soil contamination, soil pollution) மனிதனால் உருவாக்கப்பட்ட வேதிப்பொருள்கள் கலப்பதாலும், இயற்கை மண் சூழலில் ஏற்படும் வேறு மாற்றங்களாலும் உருவாகிறது. பொதுவாக இவ்வாறான மாசடைதல், நிலக்கீழ் சேமிப்புத் தொட்டிகள் உடைதல், பூச்சிகொல்லிப் பயன்பாடு, மாசடைந்த மேற்பரப்பு நீர் நிலக்கீழ் மட்டங்களுக்குச் செல்லல், எண்ணெய் மற்றும் எரிபொருட் கழிவுகளைக் கொட்டுதல், தொழிற்சாலைக் கழிவுகளை நேரடியாக நிலத்தில் வெளியேற்றுதல் போன்றவற்றால் ஏற்படுகின்றது. மிகப் பொதுவான வேதிப்பொருள் மாசுகள், பெட்ரோலிய ஐதரோகாபன்கள், கரையங்கள், பூச்சிகொல்லிகள், ஈயம், பார உலோகங்கள் போன்றனவாகும்.