The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) ஓர் கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். கவிதையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு "பாரதி" என்ற பட்டம் வழங்கப்பட்டது. நவீன தமிழ் கவிஞர்களின் முன்னோடியாகத் திகழ்ந்த இவர், தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
தேம்பாவணி (Thembavani) என்னும் நூல் இயேசு கிறிஸ்துவின் வளர்ப்பு தந்தையான புனித யோசேப்பு மீது இயற்றப்பட்ட முதற் பெரும் செய்யுள் வகை நூலாகும். இந்நூல் இத்தாலிய நாட்டவரான வீரமாமுனிவர் அவர்கள் தமிழில் திறம்பட ஆக்கிய நூல் எனப் புகழப்படுகிறது. கிறிஸ்தவ சமயத்தின் சுருக்கமென்றே இந்நூலை அறிஞர்கள் மதிப்பிடுகின்றனர்.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
பாரதிதாசன் (Bharathidasan, 29 ஏப்ரல் 1891 – 21 ஏப்ரல் 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
தமிழ் (Tamil language) தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
வரலாறு (history, கிரேக்கம்: ἱστορία, historia பொருள்: "ஆய்வு மூலம் பெறப்பட்ட அறிவு") என்பது இறந்த காலத்தைப் பற்றி படிக்கின்ற ஒரு பாடப்பிரிவு என எழுதப்பட்ட ஆவணங்களில் விவரிக்கப்பட்டுள்ளது . எழுதப்பட்ட பதிவுகளுக்கு முன்பாக நிகழ்ந்தவை அனைத்தும் வரலாற்றுக்கு முந்தைய நிகழ்வுகள் எனக் கருதப்படுகின்றன. இத்தலைப்பின்கீழ் கடந்த கால நிகழ்வுகள், நினைவுகள், கண்டுபிடிப்புகள், சேகரிப்புகள், அமைப்புகள், அன்பளிப்புகள், நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் ஆகியவை அனைத்தும் இடம் பெறுகின்றன.
திருக்குறள், சுருக்கமாகக் குறள் (ஆங்கிலம்: Tirukkuṟaḷ), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், காமம் (அல்லது இன்பம்) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது.
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது.
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்
இந்தியாவில் 28 மாநிலங்களும், தில்லி தேசிய தலைநகரப் பகுதி உள்ளிட்ட 8 நடுவண் அரசின் ஆட்சிப்பகுதிகளும் உள்ளன. அனைத்து மாநிலங்களிலும் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் பாண்டிச்சேரி, சம்மு காசுமீர், தில்லி தலைநகரப் பகுதி ஆகியவற்றிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் உள்ளன. ஏனைய ஒன்றியப் பகுதிகள் இந்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர்களைக் கொண்ட, குடியரசுத் தலைவரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளாகும்.
பாவேந்தர் பாரதிதாசன் விருது என்பது தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலம் தமிழ்க் கவிஞர் ஒருவருக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் ஒரு விருதாகும். தமிழ்நாடு அரசின் அரசாணை (பலவகை) எண். 1609, பொதுத் (செய்தி, மக்கள் தொடர்பு - விளம்பரம் -2) துறை, நாள்: 28-08-1978 மூலம் 1978 ஆம் ஆண்டிலிருந்து இந்த விருது வழங்கப்படுகிறது.
பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்
இத் தனிமங்களின் பட்டியல் பெயர்வாரியாக அமைத்த பட்டியல். தனிமத்தின் வகையைப் பொருத்து நிறம் காட்டப்பட்டுள்ளது. தனிமங்களின் குறியெழுத்து, அணுவெண் அணுப் பொருண்மை, நிலையான மாற்றுரு, நெடுங்குழு எண், கிடைவரிசை எண் முதலிய குறிக்கபட்டுள்ளன.
தமிழகத்தில் சங்ககாலத்தில் பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையில் நிலவிய கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்ட நூல்களை பதினெண் மேற்கணக்கு நூல்கள் எனவும் பதினெண் கீழ்கணக்கு நூல்கள் எனவும் மொழி ஆய்வாளர்கள் பிற்காலத்தில் வகைப்படுத்தினர். குறைந்த அடிகளுடைய நூல்கள் கீழ்க்கணக்கு நூல்கள் என்றும் நிறைந்த அடிகளைக் கொண்டவை மேற்கணக்கு நூல்கள் எனவும் வகைபடுத்தப்பட்டன. மேற்கணக்குப் பகுப்பில் 18 நூல்களும், கீழ்க்கணக்குப் பகுப்பில் 18 நூல்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு அல்லது மங்கள வார்த்தை அறிவிப்பு என்பது லூக்கா நற்செய்தி 1:26-3இல் உள்ள படி கபிரியேல் தேவதூதர், கன்னி மரியாவுக்கு தோன்றி, அவர் தூய ஆவியினால் கருவுற்று ஒரு மகனைப் பெற்று இயேசுவின் தாயாவார் என்பதை அறிவித்த நிகழ்வாகும். இந்த நிகழ்வின் போதே மரியாவிடம் கபிரியேல் தூதர் பிறக்கவிருக்கும் குழந்தைக்கு, இயேசு என பெயரிடச்சொன்னார். மேலும் திருமுழுக்கு யோவானின் பிறப்பையும் மரியாவிடம் எடுத்தியம்பினார்.
12ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு உருவானபோது, விஜயநகரப் பேரரசர்கள் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளுக்கு தளபதிகளை அரசப் பிரதிநிதிகளாய் அமர்த்தி ஆட்சி செய்தனர். தொடக்க காலத்தில் இப்பகுதிகள் விஜயநகரப் பேரரசுக்கு அடங்கியிருந்தன விஜயநகரப் பேரரசு பலமிழந்தபோது, தங்கள் ஆட்சிப்பகுதிகளில் தங்களைப் பலப்படுத்திக்கொண்டு பேரரசிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டனர். செஞ்சி, காளஹஸ்தி, தஞ்சாவூர், மதுரைஆகிய நகரங்களை தலைநகராக் கொன்டு நாயக்கர் ஆட்சி ஏற்பட்டது.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
உலகளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6000 இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது.
பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவும் உண்டு. அறம், பொருள், இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்களில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன. உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற பிரிவின் கீழ் வருவன.
ஒப்பிலக்கியம் (Comparative literature) என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளைச் சேர்ந்த படைப்புகளையும் படைப்பாளிகளையும், படைப்புப் போக்குகளையும் ஒப்பிட்டு ஆராயும் இலக்கியத்துறை. பன்மொழி படைப்புகள் மட்டுமல்லாது, ஒரே மொழியில் வெவ்வேறு துறைகள், இனக்குழுக்களின் இலக்கியத்தை ஒப்பிட்டு ஆய்வதும் ஒப்பிலக்கியமே.
ஒரு மெய் எழுத்துடன் ஓர் உயிர் எழுத்து சேர்ந்து பிறக்கக்கூடிய எழுத்து உயிர்மெய் எழுத்து ஆகும். எடுத்துக்காட்டு: 'க்' என்னும் மெய்யும் 'அ' என்னும் உயிரும் சேர்வதால் 'க' என்னும் உயிர்மெய் பிறக்கின்றது. இவ்வாறு பன்னிரண்டு உயிர் எழுத்துக்களும் பதினெட்டு மெய் எழுத்துக்களுடன் சேர்வதால் (18 X 12) 216 உயிர் மெய் எழுத்துக்கள் பிறக்கின்றன.
இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்
இந்தியா இருபத்தி எட்டு மாநிலங்கள் மற்றும் எட்டு யூனியன் பிரதேசங்களாக (UTs) பிரிக்கப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசங்கள் மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் மேலும் அவர்களின் சொந்த அரசாங்கத்தையும் கொண்டிருக்கின்றன. மூன்று யூனியன் பிரதேசங்கள்,சம்மு காசுமீர் , தில்லி தேசிய தலைநகரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரிக்கு தங்கள் சொந்த சட்டமன்றங்கள் இருக்கின்றன.
மரபுச்சொற்கள் மரபு ரீதியாக வழங்கிவரும் சொற்களைக் குறிக்கும். மரபு என்பது நம் முன்னோர் ஒரு பொருளை எச்சொல்லால் வழங்கினரோ அவ்வாறே வழங்குவது ஆகும். உதாரணமாக, பறவைகள், விலங்குகள் முதலான உயிரினங்களின் ஒலிகளையும் அவை ஒலிக்கும் முறைகளையும் இவ்வாறு கூற வேண்டுமென, முன்னோர் கூறிய மரபினைத் தொன்றுதொட்டுப் பின்பற்றி வருகின்றனர்.
2024 இந்தியாவின் பொதுத் தேர்தல் 18-ஆவது மக்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக இந்தியாவில் 2024 ஏப்ரல் 19 முதல் 2024 சூன் 1 வரை நடைபெற்றது. ஏழு கட்டங்களாக நடைபெற்ற இத்தேர்தலின் முடிவுகள் 2024 சூன் 4 அன்று அறிவிக்கப்பட்டது. 1.4 பில்லியன் மக்கள் தொகையில் 968 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றனர், இது மொத்த மக்கள் தொகையில் 70% க்கு சமம்.
தனிமங்களின் எண் பட்டியல் என்பது தனிமங்களின் அணு எண் அடிப்படையில் வரிசைப் படுத்தப்பட்ட ஒரு வேதியியல் பொருட் பட்டியல். தனிமத்தைன் வகைக்கு ஏற்றார்போல நிறவேறுபாடு காட்டப்பட்டுள்ளது. இப்பட்டியலில் தனிமத்தின் அணு எண், தனிமத்தின் குறியெழுத்து, தனிமம் சேர்ந்த நெடுங்குழு, கிடைவரிசை, அணுப் பொருண்மை, நிலையான் மாறுரு, அடர்த்தி, உருகுநிலை, கொதிநிலை, கண்டுபிடித்தோர் பெயர் அகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அமைச்சரவை (Tamil Nadu Council of Ministers), தமிழ் நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும் செயலாட்சியர்கள். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார்.
இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்
இந்தியக் குடியரசுத் தலைவர் என்பவர், இந்திய தேசத்தின் தலைவர் மற்றும் இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதியும் ஆவார். இந்திய ஜனாதிபதி நாட்டின் முதல் குடிமகன் எனக் குறிப்பிடப்படுகிறார். இந்திய அரசியலமைப்பின் வாயிலாக இந்த அதிகாரங்கள் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்ட போதிலும், இந்த நிலை பெரும்பாலும் மரபுசார்ந்த ஒன்றாகும்.
விக்கிரவாண்டி (சட்டமன்றத் தொகுதி)
விக்கிரவாண்டி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இந்தத் தொகுதி விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. விக்கிரவாண்டத்ி தொகுதியில் விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்தின் 51 கிராம ஊராட்சிகள், காணை ஊராட்சி ஒன்றியத்தின் 45 ஊராட்சிகள், கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்தின் 7 ஊராட்சிகள், கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் 1 ஊராட்சி மற்றும் விக்கிரவாண்டி பேரூராட்சியை உள்ளடக்கியது.
இந்திய மாநில விலங்குகளின் பட்டியல்
இந்திய மாநில விலங்குகளின் பட்டியல்: இந்தியாவில் சில விலங்குகள் அழியும் நிலையில் உள்ளன. அவற்றில் சில பட்டியலில் உள்ளன.
தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின் தென் முனையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படும் இம்மாநிலமானது, பரப்பளவில் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாக மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது. உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பேசும் தமிழர் வாழும் பகுதியே தமிழ்நாடு என வழங்கப்படுகிறது.
தனிம அட்டவணை என்பது வேதியியற் தனிமங்களின் அணு எண், எதிர்மின்னி அமைப்பு, மற்றும் மீண்டும் மீண்டும் வரும் வேதியற் பண்புகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தனிமங்களின் அட்டவணை மூலமான காட்சிப்படுத்தலாகும். தனிமங்கள் அணு எண்ணுக்கமைய (நேர்மின்னிகளின் எண்ணிக்கை) ஏறுவரிசையில் அடுக்கப்பட்டிருக்கும். 1869 இல் திமீத்ரி மெண்டெலீவ் என்ற ரஷ்ய நாட்டு அறிஞர் இந்த அட்டவணையைக் கண்டுபிடித்தார்.
பிரேம் கங்கை அமரன் அல்லது பிரேம்ஜி அமரன் (பிறப்பு: பிப்ரவரி 25, 1979), என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகர் ஆவார். இவர் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகனும், வெங்கட் பிரபுவின் சகோதரரும் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவையாளர் பாத்திரங்களில் நடித்துவருகிறார்.அவரது மேடைப் பெயர், பிரேம்ஜி உண்மையில் ஒரு எழுத்துப் பிழையாகும், ஏனெனில் இது "பிரேம் ஜி.", (ஜி தனது தந்தையின் பெயரைக் குறிக்கிறது).
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்:பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
இந்தியாவின் நிதி அமைச்சர் (Minister of Finance of India) இந்திய அரசின் நிதி அமைச்சின் தலைவர் ஆவார். அமைச்சரவையின் மூத்த அலுவலகம் ஒன்றின் தலைவரான நிதி அமைச்சர் அரசின் நிதிக்கொள்கைக்குப் பொறுப்பானவர் ஆவார். அத்துடன் இந்தியாவின் வரவு செலவுத் திட்டம் மற்றும் பொது வரவு செலவுத் திட்டங்களின் வரைவாளரும் ஆவார்.
"பாவலரேறு" பெருஞ்சித்திரனார் (10 மார்ச் 1933 – 11 சூன் 1995) தமிழ்நாட்டைச் சேர்ந்த தனித்தமிழ் அறிஞர், புலவர், இதழாளர் மற்றும் பெரியாரிய, பொதுவுடைமை, தமிழ்த் தேசியச் செயல்பாட்டாளர் ஆவார். தன் ஐம்பதாண்டு கால எழுத்துப்பணியில் கொய்யாக்கனி (1956), கனிச்சாறு உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட படைப்புகளை இயற்றினார். "மொழிஞாயிறு" என அறியப்படும் ஞா.தேவநேயப் பாவாணருடன் இணைந்து தென்மொழி இதழைத் தொடங்கி நடத்தினார்.
கொள்கை என்பது ஓர் இலக்கை அடைவதற்குப் பின்பற்றப்படும் வழிமுறையையும் ஒழுக்க விதிகளையும் குறிக்கும். இந்தச் சொல் அரசு, நிறுவனங்கள், குழுக்கள், தனியாள்கள் என வெவ்வேறு நிலைகளில் பயன்படுகிறது. தமிழ்நாடு அரசின் உயிர்த்தொழினுட்பக் கொள்கை, தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கைகள், காந்தியின் அகிம்சைக் கொள்கை ஆகியவை கொள்கைகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
தாதாசாகெப் பால்கே விருது (Dadasaheb Phalke Award) இந்தியத் திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது, இந்திய திரைப்படத்துறையின் தந்தை எனக்கருதப்படும் தாதாசாகெப் பால்கே அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டான 1969ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. குறிப்பிட்ட ஆண்டுக்கான விருது, அதற்கு அடுத்த ஆண்டு இறுதியில் தேசியத் திரைப்பட விருதுகளுடன் சேர்த்து வழங்கப்படுகிறது.
சுப்பிரமணியம் ஜெய்சங்கர் (Subrahmanyam Jaishankar, 9 சனவரி 1955) இவர் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரியாக பணியில் சேர்ந்தவர். இறுதியாக இந்தியாவின் வெளியுறவுச் செயலராக பணியாற்றியவர். இந்திய வெளியுறவுப் பணிச்சேவை பேராளரான செயசங்கர் முன்னதாக செக் குடியரசிலும் (2001–04) சீனாவிலும் (2009–13) ஐக்கிய அமெரிக்காவிலும் (2014–15) இந்தியத் தூதராகவும் சிங்கப்பூரில் (2007–09) இந்திய உயர் ஆணையராகவும் பணியாற்றி உள்ளார்.
பேரரசர் அக்பர் (Akbar the Great, பாரசீக மொழி: اکبر اعظم, பாரசீக உச்சரிப்பு: அக்பர்-இ-ஆசம், பொருள்: மகா அக்பர்) என அழைக்கப்படும் அபூல் பாத் சலாலுத்தீன் முகம்மது அக்பர் (Abu'l-Fath Jalal-ud-din Muhammad Akbar, 25 அக்டோபர் 1542 – 27 அக்டோபர் 1605), என்பவர் மூன்றாவது முகலாயப் பேரரசர் ஆவார். இவர் 1556 முதல் 1605 வரை ஆட்சி புரிந்தார். இவர் தன் தந்தை உமாயூனுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தார்.
பள்ளிக்கூடம், பள்ளி அல்லது பாடசாலை (school) என்பது ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் கீழ் மாணவர்களுக்கு கல்வி வழங்குவதனை நோக்கமாகக் கொண்டு, போதுமான கற்றல் இடம், கற்பித்தல் சூழலுடன் கூடிய கல்வி நிறுவனம் மற்றும் கட்டிடங்களைக் குறிப்பதாகும். பெரும்பான்மையான நாடுகளில் முறையான கல்வி முறைகள் உள்ளன, இது சில இடங்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியாரின் கல்விக் கூடங்களின் மூலம் மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.
சதுப்புநில மான் (barasingha) என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் வடக்கு, மத்திய இந்தியாவிலும், நேபாளம், வங்கதேசம், பாக்கித்தான் போன்ற இடங்களிலும் காணப்படுகின்ற மான் ஆகும். இவை இந்தியாவில் உத்தரப்பிரதேசம், அசாம், மத்தியப்பிரதேசம், ஆகிய மாநிலங்களில் உள்ள சதுப்பு நிலப்பகுதிகள் அல்லது வறண்ட புல்வெளிகள் நிறைந்த பகுதியில் காணப்படுகின்றன. இம்மான் மத்தியப் பிரதேசத்தின் மாநில விலங்காகும்.
சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம்
சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் (Swadeshi Steam Navigation Company (SSNC) பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் இந்திய விடுதலை இயக்கத்தின் போது, பிரித்தானியர் அல்லாத இந்தியர்களால் நிறுவப்பட்ட முதல் கப்பல் நிறுவனம் ஆகும். கப்பல் போக்குவரத்தில் பிரித்தானியர்களின் ஏகபோக உரிமையை மறுத்து, இந்தியர்களால் மட்டுமே நடத்தப்பட்ட சுதேசி கப்பல் நிறுவனம் வ. உ.
காமராசர் (ஆங்கில மொழி: Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975) ஓர் இந்திய விடுதலை போராட்ட ஆர்வலர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் 13 ஏப்ரல் 1954 முதல் 2 அக்டோபர் 1963 வரை ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். இவர் 1964 முதல் 1967 வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார்.
தந்தை பெரியார் திராவிடர் கழகம்
தந்தை பெரியார் திராவிடர் கழகம் (த.பெ.தி.க.) பெரியார் திராவிடர் கழகத்திலிருந்து ஆகஸ்டு 2012-ஆம் ஆண்டில் பிரிந்தது.இதன் தலைவர் பி. ஜி. ஆனூர் ஜெகதீசன் ஆவார்.
பிறப்பொலியியலில் (articulatory phonetics), மெய்யொலி (Consonant) என்பது, பேச்சு மொழியின் ஒரு ஒலிவகை ஆகும். நெஞ்சிலிருந்து வரும் காற்று வாய்ப்பகுதியில் தற்காலிகமாகத் தடைப்பட்டு வெளியேறும்போது மெய்யொலிகள் உருவாகின்றன. மெய்யொலிகள், அடைப்பொலி, மூக்கொலி, உரசொலி, மருங்கொலி, ஆடொலி, வருடொலி, தொடரொலி எனப் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்
குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப் பெயர் குறிக்கிறது.
கிறிஸ்துவின் இரண்டாம் வருகை என்பது இயேசு கிறிஸ்து, மீண்டும் விண்ணுலகிலிருந்து மண்ணுலகிற்குத் திரும்பி வருவார் என எதிர்பார்க்கப்படும் நம்பிக்கையைக் குறிக்கும். இது மனிதர் எதிர்பாரா காலத்தில் நடக்கும் என நம்பப்படுவதால் இதனை இரகசிய வருகை என்றும் அழைப்பர். இந்த நிகழ்வினைப் பற்றிய முன் அறிவிப்பு நற்செய்தி நூல்களில் உள்ளது.
கார்லசு புச்திமோன் (Carles Puigdemont i Casamajó; பிறப்பு: 29 திசம்பர் 1962) எசுப்பானியாவின் காத்தலோனியா தன்னாட்சிப் பகுதியின் தலைவர் ஆவார். 2017-ஆம் ஆண்டில் காத்தலோனியா தன்னாட்சிப் பிரதேசத்திற்கு நடைபெற்ற தேர்தலில் கார்லசு புச்திமோனின் அரசியல் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இவர் காத்தலோனியா தன்னாட்சிப் பிரதேசத்தை தனி நாடாகக் கோரும் போராட்ட இயக்கத்தின் தலைவரும் ஆவார்.
சத்திய சோதனை (The Story of my Experiments with Truth) என்பது மோகன்தாசு கரம்சந்த் காந்தி எழுதிய அவருடைய வாழ்க்கை வரலாற்று நூல் ஆகும். தன்னுடைய வாழ்வு முழுவதும் ஓர் ஆய்வாளனின் ஆய்வுப் பயணம் போல எனக் குறிப்பிட்டிருக்கும் காந்தி தன் வாழ்க்கையை ஒரு திறந்த புத்தகம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். தம் வாழ்வின் மறக்க இயலாத பகுதிகளைச் சமூகத்திற்கு ஞாபகப்படுத்த வேண்டிய பாடங்களாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024
இந்தியாவின் 18 ஆவது மக்களவைக்கான தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 அன்று நடந்தது. இத்தேர்தல் முடிவுகள் இந்தியாவின் பிற பகுதிகளிலும் தேர்தல் முடிவுற்ற பின்னர் சூன் 4 அன்று வாக்கு எண்ணிக்கைக்குப் பின்னர் வெளியிடப்படும்.
மோகன்தாசு கரம்சந்த் காந்தி (ஆங்கிலம்: Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948) என்பவர் ஒரு இந்திய வழக்குறைஞரும், அன்னிய ஆட்சியை எதிர்த்த தேசியவாதியும், அரசியல் அறனாளரும் ஆவார். இவர் மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார்.
கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்
இது இந்தியப் பிரதம மந்திரிகளின் முழுப் பட்டியலாகும். இதில் 1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இந்தியப் பிரதமராக பதவி ஏற்றவரும் இதில் அடங்கும். இந்திய பிரதம மந்திரி என்ற பதவியானது இந்திய அரசாங்கத்தின் தலைமையாகவும், தலைமைச் செயலதிகாரம் கொண்டதாகவும் உள்ள பதவியாகும்.
தமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள்
ஓரெழுத்தொருமொழி என்றால் 'ஒற்றை எழுத்துச் சொற்கள்' என்று பொருள். அதாவது ஒற்றை எழுத்தாக நின்று பிற பொருளைச் சுட்டும் சொற்கள். எடுத்துக்காட்டாகத் 'தீ' என்பது வெறும் எழுத்தாக மட்டுமில்லாமல் 'நெருப்பு' என்னும் பொருளைத் தரும் சொல்லாகவும் பயன்படுகிறது.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) ஓர் இந்திய சட்ட வல்லுநர், பொருளாதார நிபுணர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் அரசியல் தலைவர் ஆவார். இவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகப் பதவியேற்று பின்னர் இந்திய அரசியலமைப்பு வரைவு குழுவிற்குத் தலைமை தாங்கினார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கி தீண்டாமை ஒழியப் போராடினார்.